உன் கண்ணில் என்னை கண்டேன் epi 14

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
14

அடுத்த நாள் உணவு இடைவேளையின் போதும் சித்தார்த் அங்கு இல்லாததால் சிறிது நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு நிலாவுடன் கேன்டீன் சென்றுவிட்டாள் வர்ணா. வர்ணாவும் நிலாவும் தங்களுக்கு தேவையான உணவை பெற்றுகொண்டு வந்து ஒரு தனி டேபிளில் அமர்ந்தனர். தங்களின் பள்ளி தோழிகளை பற்றி பேசியவாறே உணவுண்டு கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் ராஜேஷ் உணவுடன் வந்து இவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்தான். ராஜேஷ் வந்து அமர்ந்ததும் வர்ணாவை பார்த்த நிலா நமட்டு சிரிப்புடன், “நான் வேறு டேபிளில் சென்று அமர்ந்துக்கொள்கிறேன்.” என்று கூறி சென்றுவிட்டாள்.

இதை பார்த்த வர்ணா, “சீனியர் நீங்க உங்க பிரண்ட்ஸ் கூட சாப்பிட வேண்டியது தான? பாருங்க என் பிரண்ட் என்னை தப்பா நினைச்சுட்டு போய்ட்டா.” என்று மனத்தாங்களோடு கேட்டாள்.

ராஜேஷ், “அவ போனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அவ தப்பா நினைக்கறதுல எந்த தப்பும் இருக்கற மாதிரி எனக்கு தெரியல.” என்று தெனாவட்டாக கூறிவிட்டு உண்ண ஆரம்பித்தான்.

வர்ணா ராஜேஷை திறந்த வை மூடாமல் பார்க்கிறாள். சிறிது நேரத்தில் தெளிந்து, “சாரி சீனியர் எனக்கு ஆள் இருக்கு.” என்று கூறுகிறாள்.

ராஜேஷ், “என்ன ராஜா ராணி நஸ்ரியா மாதிரி ட்ரை பன்றியா? ஸோ சாட் உனக்கு அது சூட் அகல” என்று கலாய்த்தான்.

வர்ணா, “இல்ல சீனியர் நான் உண்மையா தான் சொல்றேன். எனக்கு ஆள் இருக்கு வீணா ஏதும் ட்ரை பண்ணாதீங்க” என்று திட்டவர்த்தனமாக கூறுகிறாள்.

ராஜேஷ், “ஓகே அப்போ அது யார்னு சொல்லு. “ என்று கேட்கிறான்.

வர்ணா, “அது சீக்ரெட். உங்க கிட்ட சொல்றதுல எனக்கு விருப்பம் இல்ல.” என்று கூறுகிறாள்.

ராஜேஷ், “இதை நம்ப வேற ஆள பாரு” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு சாப்பிடும் வேலையை கவனிக்கிறான்.

வர்ணாவும் வேறு எதுவும் பேச தோன்றாமல் தன் தட்டில் உள்ள உணவை கிளறிக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு உணவுடன் வந்தனர் சித்தார்த் மற்றும் ரம்யா. ராஜேஷ் வர்ணாவின் அருகில் அமர்ந்திருப்பதை கவனித்துவிட்டு வர்ணாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களுக்கு எதிரில் இருந்த டேபிளில் அமர்ந்தான் சித்தார்த்.

ரம்யா, “நான் தண்ணீர் வாங்க மறந்துட்டேன் இதோ வரேன்” என்று கூறி நகர்ந்தாள். சித்தார்த் ரம்யமாவிடம் “சரி” என்று தலையசைத்துவிட்டு உணவில் கைவைப்பதற்குள் அவனை பார்த்த ராஜேஷ்,
“அதான் நாங்க இங்க சாப்டுட்டு இருக்கோம் இல்ல நீ போய் வேற டேபிள்ல உட்கார்” என்று சீனியர் என்னும் அதிகாரத்தோடு கூறுகிறான்.

இதை கேட்ட சித்தார்த் வர்ணாவை முறைத்துவிட்டு வேறு டேபிள் சென்று அமர்கிறான்.

அதற்குள் அங்கு வந்த ரம்யா சித்தார்த்துடன் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே சாப்பிடுகிறாள். இவனும் தன் கோபத்தை ஒதுக்கிவிட்டு ரம்யாவின் பேச்சில் கலந்துகொள்கிறான்.

வர்ணா கோபமாக ராஜேஷ் புறம் திரும்பி, “ஏன் சீனியர் இப்படி எல்லாம் பண்றீங்க? சித்து என்னோட பெஸ்ட் பிரண்ட். அவனை எதுக்கு வேற டேபிள் போக சொன்னிங்க? நான் எப்போவும் அவனோட தான் சாப்பிடுவேன் நகருங்க” என்று அவனை நகர்த்தி விட்டு வர முயல்கிறாள்.

அதை சுலபமாக தடுத்த ராஜேஷ், “பெஸ்ட் பிரண்டா இல்ல பாய் பிரண்டா?” என்று கோபமாக கேட்கிறான்.

வர்ணா இவனிடம் பதில் கூற விருப்பம் இல்லாததால் அமைதியாக அமர்ந்து கொள்கிறாள். ராஜேஷும் அமைதியாக வர்ணாவை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறான். இது எதையும் உணராத வர்ணா சித்தார்த்தை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து கொண்டே உண்டுகொண்டிருக்கிறாள்.

வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது வர்ணா சித்தார்த்துடன் பேச முயல்கிறாள். ஆனால் அவளை தவிர்த்துவிட்டு ரம்யாவுடன் பேசியவாறே அங்கிருந்து நகர்கிறான் சித்தார்த்.

வர்ணா, “இது வேலைக்காவது. அதிரடியா பேசிடவேண்டியதுதான்.” என்று புலம்பியவாறே ரம்யாவிடம் சென்று, “நான் சித்து கூட கொஞ்சம் பேசணும் நீ கொஞ்சம் முன்னாடி போய்ட்டிருக்கியா ப்ளீஸ்” என்று கேட்கிறாள்.

இவள் சித்தார்த்தை திரும்பி பார்க்க அவன் வர்ணாவை முறைத்துக்கொண்டு இருந்தான். அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துகொண்ட ரம்யா, “ஓகே சித்தார்த் நான் நாளைக்கு உன்னை பார்க்கிறேன் இப்போ நீ பேசிவிட்டு வா” என்று அவன் பதில் கூறுவதற்குள் சென்றுவிடுகிறாள்.

வர்ணா, “சித்து என்னிடம் ஏதுவாக இருந்தாலும் பேசு, இப்படி அமைதியா என்னை தவிர்க்காத” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறுகிறாள்.

சித்தார்த் நான் கோவத்தை விட்டுவிட்டு, “உன் கூட நான் பேச கூட செய்றேன் ஆனால் இப்படி பாவமா முகத்தை வைக்காத உனக்கு சுத்தமா சூட் ஆகல.” என்று கேலியாக அவளிடம் கூற

வர்ணா, “வேணாம் சித்து நானே எப்பவாவது தான் நல்லதனமா வந்து பேசுவேன் அதை நீயே கெடுத்துகாத. அப்புறம் கைகலப்புல தான் முடியும்” என்று கோவம் கொள்வது போல் பேசுகிறாள்.

சித்தார்த், “ சரி சரி இப்போ எதுக்கு என்னை வீட்டுக்கு போக விடாம மொக்க போட்டுட்டு இருக்க” என்று கோபமாக கேட்கிறான்.

வர்ணா, “ஏன் டா என்னை தவிர்க்கற? நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்கிறாள்
சித்தார்த் அவளை முறைக்கிறான்.

வர்ணா, “ஏன்டா முறைக்கிற?”


சித்தார்த், “நான் சாப்பிட வந்து உன் முன்னால் உட்கார்ந்தால் அந்த சீனியர் என்னன்னா கோவமா என்னை வேற டேபிள் போக சொல்றான் நீ என்னடான்னா எதுவும் கேக்காம அமைதியா உட்கார்ந்திருக்க. என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல?” என்று கோபமாக கேட்கிறான்.

வர்ணா, “நீ ஏன் டா எழுந்து போன அவன் சீனியரா இருந்தா அவன் சொல்றத நீ கேட்கணுமா? நான் இங்க தான் என் பிரண்ட் கூட தான் உட்காருவேன் உனக்கு பிடிக்கலைன்னா நீ எழுந்து போ அப்படினு சொல்ல வேண்டியது தான டா. நான் அவனை கேள்வி கேக்கறதுக்கு கூட டைம் கொடுக்காம கோவமா முறைச்சிட்டு நீ எழுந்து போய்ட்டு என்கிட்ட கோவ படுற” என்று மூச்சு விடாமல் பேசினால் வர்ணா.

சிறிது நேரம் அமைதியாக யோசித்த சித்தார்த் அவள் கூறுவதில் இருந்த உண்மை புரிய, “சாரி. அவன் கூட நீ ஏற்கனவே பஸ்ல சகஜமா பேசுவதை நான் பார்த்தேன் அதான் அவன் என்னை விட உனக்கு முக்கியம் ஆகிட்டானோன்னு நினைத்து கோவமா எழுந்து போய்ட்டேன்” என்று உள்ளே போன குரலில் மெதுவாக கூறுகிறான்.

வர்ணா அவனின் கோபம் புரிந்து, “சாரி டா உன்னை நான் போக விடாமல் உடனே தடுத்திருக்கணும் சாரி டா இனிமேல் இப்படி நடக்காமல் நான் பாத்துக்கிறேன்” என்று கூறி அவனை சமாதானம் செய்கிறாள். பின் இருவரும் சமாதானமாகி வீட்டிற்கு செல்கின்றனர்.


அடுத்த நாள் காலை வகுப்பறைக்குள் நுழைந்த வர்ணா தன் டேபிளில் ஒரு பொக்கேவும் பெரிய சாக்லேட் பார் ஒன்றும் இருப்பதை பார்த்து யாருக்கு வந்திருக்கும் என்று யோசிக்கிறாள்.

அதற்குள் அங்கு ரம்யா வர அவளுக்கு வந்ததாக இருக்கும் என்று முடிவெடுத்து அவளிடம் நீட்டி, “நம்ம டேபிள் மேல இருந்தது உன்னுடையதா” என்று கேட்டாள்.

அந்த பொக்கேவை வாங்கி பார்த்தவள் அதன் அடியில் வர்ணா என்ற பெயரை பார்த்துவிட்டு, “உனக்கு தான் வந்திருக்கு” என்று அவளிடமே திரும்ப தந்துவிட்டு அவளை சுவாரஸ்யமாக பார்க்கிறாள்.

யாரா இருக்கும் என்று யோசித்து சுற்றும் முற்றும் தேடும் போது ஆசிரியர் உள்ளே வருவதை பார்த்து வேகமாக அந்த பரிசு பொருட்களை தன் பையில் எடுத்து வைத்துவிட்டு பாடத்தில் தன் கவனத்தை திருப்புகிறாள்.

வகுப்பு இடைவேளையின் போது வர்ணா தனக்கு தேவையான புத்தகம் எடுக்க வேண்டும் என்று நிலாவுடன் நூலகம் சென்றாள். அவள் எப்போதும் புத்தகம் எடுத்ததும் சரிபார்க்க அமரும் இடத்தில் ஒரு கிரீட்டிங் கார்டு இருப்பதை பார்த்து நிலா அதை பிரித்து படித்துவிட்டு, “இதுவும் உனக்கு வந்தது தான்” என்று கூறி நமட்டு சிரிப்புடன் தருகிறாள். யாரும் பார்ப்பதற்குள் வேகமாக அதை வாங்கி தன் புத்தகத்தில் வைத்துக்கொண்டு அங்கிருந்து தன் வகுப்பிற்குள் வந்து அமர்ந்தாள்.

வகுப்பு முடிந்து அனைவரும் லேப் சென்றார்கள். அங்கும் வர்ணா அமரும் இடத்தில் ஒரு ரோஸ் போக்கே இருப்பதை பார்த்து கோபமாக, “யார்டா அது காலைல இருந்து இப்படி வெறுப்பேத்தறது” என்று புலம்பிக்கொண்டே சுற்றி பார்க்கிறாள்.

இதை பார்த்தவாறே வந்த சித்தார்த், “யாரடி இதெல்லாம் பண்றது” என்று கோபமாக கேட்டு அதை பிடுங்கி திருப்பி திருப்பி பார்க்கிறான்.

யார் என்று புரியாமல் அவளை பார்க்க, சித்தார்த் தான் ஒருவேளை கொடுத்திருப்பானோ என்று இருந்த சந்தோஷமான சந்தேகமும் தீர்ந்த கோபத்தில் அதை தூக்கி கோபமாக குப்பை தொட்டியில் வீசினாள்.

அப்போது அந்த போக்கேவில் இருந்து ஒரு சிறிய கார்டு நிலாவின் காலின் கீழே விழுந்தது. அதை எடுத்த நிலா சத்தமாக, “வித் லவ் ராஜேஷ்” என்ற வாக்கியத்தை படித்தாள்.
இதை கேட்ட அனைவரும் “ஓ” என்று கூச்சலிட, சித்தார்த் கோபமாக வர்ணாவை முறைத்து பார்த்து ஏதோ திட்ட வாய்யெடுக்க சரியாக அதேநேரம் ஆசிரியர் உள்ளே வர அனைவரும் அமைதியாகி வகுப்பை கவனிக்க தொடங்கினர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top