உன் கண்ணில் என்னை கண்டேன் epi 13

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
13

கிளாஸ் முடிந்ததும் மதிய உணவு இடைவேளை என்பதால் கேன்டீன் செல்ல சித்தார்த்திற்காக வர்ணா காத்திருக்கிறாள். அவளை அழைக்க வந்த நிலாவிடம், “நான் சித்தார்த்துடன் தான் எப்போதும் லஞ்ச் சாப்பிடுவேன் அதனால நீ போய் சாப்பிடு” என்று கூறி சித்தார்த்தை தேடுகிறாள்.
நிலா, “சித்தார்த் ஏற்கனவே ரம்யாவுடன் கேன்டீன் போய்ட்டானே நீ பாக்கலையா?” என்று கூறி தன்னுடன் உணவருந்த வருமாறு அழைக்கிறாள்.
வர்ணா, “இல்ல பா பசிக்கல நீ போய் சாப்பிடு சாரி” என்று கூறி அவளை போக சொல்லுகிறாள். நிலாவும் சிறிதுநேரம் அழைத்துவிட்டு வர்ணா வரவில்லை என்றதும் சென்று விடுகிறாள்.
சிறிது நேரம் கழித்து வகுப்பிற்கு வந்தனர் சித்தார்த் மற்றும் ரம்யா. வர்ணா மட்டும் வகுப்பில் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து, “அதுக்குள்ள சாப்பிட்டு வந்துட்டயா” என்று ஆச்சிரியமாக கேட்கிறான் சித்தார்த். வர்ணாவும் “ஹ்ம்ம் சாப்பிட்டேன் சித்து. நீ சாப்டியா?” என்று மென் சிரிப்புடன் கேட்கிறாள்.
“இப்போ தான் சாப்பிட்டு வரேன். சொல்ல மறந்துட்டானே இவ பெயர் ரம்யா என்னோட கசின் நேத்து காலேஜ் வரல அதான் சொல்ல முடியல. மேடம் பிரஸ்ட் டே காலேஜ் கட் அடிச்சிட்டு இன்னைக்கு தான் வரா.” என்று அறிமுக படுத்துகிறான்.
வர்ணா ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டு பின் சீராக மூச்சை இழுத்து விடுகிறாள், “ஓ அதனால தான் ஈஸியா பேசினானா? நான் கூட ஒரு நிமிடம் அழகான பொண்ண பாத்ததும் இளிக்கிறானோன்னு தப்பா நினச்சுடனே. சாரி டா.” என்று மானசீகமாக தலையில் அடித்துவிட்டு ராம்யாவின் புறம் திரும்பி, “ஹாய் நான் வர்ணா. சித்துவோட பள்ளி தோழி. எதிர் எதிர் வீட்ல தான் இருக்கோம்” என்று தன்னை அறிமுக படுத்திக்கொள்கிறாள்.
ரம்யா, “ஹே! நிறுத்து நிறுத்து. எனக்கு உன் சரித்திரம் பூலோகம் எல்லாமே தெரியும். பாட்டி வீட்டுக்கு வந்ததுல இருந்து உன்ன தவற வேற யாரை பத்தியும் இவன் தான் பேசவே இல்லையே. அதனால அங்க இருக்க எல்லாருக்கும் உன்னை பத்தி இன்ச் பை இன்ச் தெரியும்.” என்று சிரித்துக்கொண்டே சலித்துக்கொள்கிறாள். அதில் விளையாட்டு மட்டுமே இருந்ததே தவிர கோபம் இல்லை என்பதை பார்த்ததும் வர்ணாவும் சிரித்துவிடுகிறாள். இப்படியே சிறிது நேரம் பேசியவர்கள் நண்பர்கள் ஆனார்கள். இவை அனைத்தையும் அமைதியாக பார்த்திருந்த சித்து தன் பாகில் இருந்து பார்சல் ஒன்றை எடுத்து வர்ணாவிடம் கொடுத்து உண்ண சொன்னான். கேள்வியாக பார்த்த வர்ணாவை முறைத்துவிட்டு, “எனக்கு தெரியும் நான் வராம சாப்பிட்டிருக்க மாட்டன்னு. ஆனா இவ கூப்பிட்டதால தவிர்க்க முடியாம இவ கூட போக வேண்டியதாகிடுச்சு. அதான் வரும்போது உனக்கு பார்சல் வாங்கிட்டு வந்தேன்.”
வர்ணா, “அதான் நான் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு உனக்கே தெரியுதில்ல, அத வந்ததும் தர்றதுக்கு என்ன?” என்று கூறியவாறு அவன் கையில் இருந்த உணவு பொட்டலத்தை பிடுங்காத குறையாக வாங்கி கொள்கிறாள்.
சித்தார்த், “இல்லை டி ரம்யாவ உனக்கு அறிமுக படுத்திட்டு தரலாம்னு தான் கொஞ்சம் பொறுத்து தந்தேன்.” என்று சமாதானம் கூறுகிறான்.
இவன் கூறுவதை ஒரு காதில் வாங்கியவாறே உண்ண ஆரம்பித்துவிட்டாள் வர்ணா.
இவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே ரம்யா, “நான் கூட நீ சாப்பிட்டு இருப்ப இவன் ஓவரா சீன் போட்டு மொக்க வாங்க போறான்னு நினைச்சேன். ஆனா நீ என்னடான்னா இவனுக்காக உண்மையாவே சாப்பிடாம தான் இருக்க. போத் ஆர் ஸோ அண்டர்ஸ்டாண்டிங்” என்று சிலாகித்து கூறுகிறாள். அதற்குள் வர்ணாவும் உணவருந்திவிட்டு சித்தார்த்தை பார்த்து சிரிக்கிறாள்.
சித்தார்த், “இனி இப்படிலாம் எனக்காக வெயிட் பண்ணாத டா. இது ஸ்கூல் இல்லை மத்த பிரண்ட்ஸ்லாம் சின்ன பசங்க மாதிரி நடந்துக்கறதா நினைப்பாங்க. அதனால டைம்க்கு போய் சாப்பிடு ஓகேவா? ” என்று கேட்கிறான்.
வர்ணாவும் சித்தார்த் கூறுவதில் இருக்கும் உண்மை புரிய சரி என்று தலையசைக்கிறாள். எப்போதும் போல் உள்ள அவளின் குழந்தைத்தனமான தலையாட்டல் இப்போது மிகவும் அழகாக தெரிய தன் தடுமாற்றத்தை மறைத்து, வேகமாக தன் இடத்தில் போய் அமர்ந்துகொள்கிறான் சித்தார்த். ரம்யா தன் பொருட்களுடன் வந்து வர்ணாவின் அருகில் அமர்ந்துகொள்கிறாள். இருவரும் பேசி பேசி நல்ல நண்பர்களாக ஆகிறார்கள்.
அடுத்த நாள் பிரெஷர்ஸ் டே என்பதால் அனைத்து பெண்களும் சேலையிலும் ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையிலும் வருகை தந்தனர். காலை முதலே சீனியர்கள் விழாவிற்கான ஹாலை அலங்கரிப்பதில் முனைப்பாக இருக்க ஜூனியர்கள் தாங்கள் பங்கு கொள்ள போகும் போட்டிக்காக தயாராவதில் கவனத்தை செலுத்தினர். சரியாக பகல் இரண்டு மணி அடிக்கும்போது ஒருவர் பின் ஒருவராக விழா நடக்கும் அறைக்கு வந்து தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தனர். அரைமணி நேர சலசலப்பிற்கு பின் vice-principal மற்றும் principal வருகை தர அறை அமைதியை தத்தெடுத்தது. ஆசிரியர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கல்லூரி பற்றியும் அதில் படித்து வந்த மாணவமணிகளை பற்றியும் பெருமை பேசி புதிதாக வந்திருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் எடுத்திருக்கும் பிரிவின் முக்கியத்துவத்தையும் விலக்கிவிட்டு சீனியர் மாணவர்களை பேசுமாறு அழைத்தனர்
ராஜேஷ் சீனியர் ரெப்ரசென்டேடிவ் என்ற முறையில் மைக்கை வாங்கி,
“ஹாய் பிரண்ட்ஸ், உங்க எல்லோரையும் நம்ம காலேஜ்க்கு வரவேற்கிறோம். நீங்க எல்லோரும் இந்த காலேஜ்ல தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன் அதற்கு நீங்கள் மிகவும் பெருமை பட வேண்டும். நம் காலேஜில் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும் முழுவதுமாகவும் உங்களால் கற்றுக்கொள்ள முடியும். நம் ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் நட்பாக நம்மிடம் பழகுவார்கள் அதனால் நீங்க எப்போது எது புரியவில்லை என்றாலும் அவர்கள் உங்களுக்கு ஹெல்ப் பண்ண தயங்கவே மாட்டார்கள். எங்க எல்லோருக்கும் இது வரை எந்த ஆட்சேபனையும் இல்லாமல் எப்போது என்ன கேட்டாலும் அது எந்த நேரமாக இருந்தாலும் தயங்காமல் உதவி செய்திருக்கிறார்கள். உங்களுக்கு நாங்களும் இருக்கோம். அவர்களை போலவே நாங்களும் உங்களுக்கு எந்த தேவை இருந்தாலும் பூர்த்தி செய்வோம் அதனால் யாரும் எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம்.
இப்போது உங்கள் திறமையை காட்டும் நேரம் வந்துவிட்டது எல்லோரும் ஒவ்வொருவராக வந்து உங்கள் திறமையை காட்ட வேண்டும் என்று கூறி முதல் பெயரை படிக்க ஆரம்பித்தான்.
முதல் பெண் வந்து அழகான பரதநாட்டியதுடன் நிகழ்ச்சியை இனிதே துவங்கி வைத்தாள். ஒருவர் பின் ஒருவராக வந்து பாட்டு, நகைச்சுவை, நடனம் என்று அந்த இடத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தனர்.
அடுத்ததாக ரம்யாவின் பெயரை அழைக்க அவள் அழகான லெஹெங்கா சோளி அணிந்து

Screenshot_20201103-094916_01.png
இந்த பாடலுக்கு அழகான ஒரு நடனம் ஆடினாள்.

கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண
அலைகள் றெக்கை விாிக்கும்
ரெண்டு விழிகள் கூடுபாயும்
குறும்புக்காரன் அவனே

கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

வான்கோழி கொள்ளும்
ஆசை ஆடி தோற்பது தைமாசம்
கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது
தோ் கால்கள்
கொள்ளும் ஆசை வீதி
சோ்வது ஓா் ஈசல் கொள்ளும்
ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது

ஆசையை தோழனே வந்து
உளறு வீதியை கோடிக் கோடி
ஆசை தீரும் மாலை

கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

பூவாசம் தென்றலோடு
சேர வேணுமே ஆண்வாசம்
தொட்டிடாத தேகம் மெளனமே
தாய்ப்பாசம் பத்து
மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம்
காதல் ஏந்துமே

நீண்டநாள் கண்ட
கனவு தீரவே தீண்டுவேன்
உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத்
தொலைவே

கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண
அலைகள் றெக்கை விாிக்கும்
ரெண்டு விழிகள் கூடுபாயும்
குறும்புக்காரன் அவனே

கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்.​

என்ற பாடலுக்கு உண்மையான கண்ணன் அருகில் இருப்பது போல் பாவித்து அவள் ஆடிய நடனத்தை பார்த்து மாணவ மாணவிகள் அனைவரும் லயித்து அமர்ந்திருந்தனர். அவள் நடனம் முடிந்தும் ஒருவரும் அசையவில்லை. சில நிமிடங்கள் கழித்தே இதிலிருந்த மீண்ட ராஜேஷ் மைக் பிடித்து அடுத்த மாணவியை பேச அழைத்தான்.
கடைசியாக நம் வர்ணா மேடை ஏறினாள்,


காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா
என்ற பாடலை தன் தேன் குரலில் பாடி முடித்துவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்தாள். இனிதே விழா முடிவடைந்தது. மாணவர்கள் தங்களுக்கு பரிமாறப்பட்ட நொறுக்கு தீனிகளை ஒரு கை பார்த்துவிட்டு தங்கள் வீடு நோக்கி நகர்ந்தனர்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திக்பிரியா டியர்

என்னம்மா பிரியாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
போடுறதே சின்ன அப்டேட்
இதிலே இரண்டு பாடல்களை முழுசா போட்டு இடத்தை நிரப்பிட்டீங்களே
இரண்டு லைன் இல்லாட்டி நாலு வரி போட்டு பாட்டை அவாய்டு பண்ணியிருக்கலாமே
 
Last edited:

Karthikpriya

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திக்பிரியா டியர்

என்னம்மா பிரியாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
போடுறதே சின்ன அப்டேட்
இதிலே இரண்டு பாடல்களை முழுசா போட்டு இடத்தை நிரப்பிட்டீங்களே
இரண்டு லைன் இல்லாட்டி நாலு வரி போட்டு பாட்டை அவாய்டு பண்ணியிருக்கலாமே
Naduvil 1 day dhanga gap koduthen
Again 2 days la next epi kuduthudaren ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top