உன் கண்ணில் என்னை கண்டேன் epi 12

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
12

வகுப்பு முடிந்தவுடன், இடைவேளையின் போது புயூன் ஒருவர் வந்து, வர்ணாவை vice-principal அழைப்பதாக அறிவித்துவிட்டு சென்றார். வர்ணாவும் அவரை பின் தொடர்ந்து சென்றாள்.
Vice-principal, “உனக்கு பிளட் போபியா இருக்குனு ஏன் முன்னாடியே இன்போர்ம் பண்ணல? பிளட் போபியா இருக்கும் போது ஏன் மெடிசின் சூஸ் பண்ண? வேற ஏதாவது கோர்ஸ் ட்ரை பண்ணிருக்கலாமே?”
வர்ணா, “இல்ல சார் MBBS என்னோட சின்ன வயசு கனவு சார். பிளட் போபியா இருக்கின்ற ஒரே காரணத்துக்காக என்னோட கனவை நான் மாத்திக்கணுமா சார். சார் ப்ளீஸ் சார் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் எப்படியும் இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்துடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு சார். ப்ளீஸ் சார்.”
சிறிது நேரம் யோசித்த vice principal, “இது பேசறதுக்கு சுலபம் ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் வருவது கஷ்டம். போக போக நீயே புரிந்து கொள்வாய். அது உன் விருப்பம். உனக்கு 6 மாதம் அவகாசம் தருகிறேன் அதற்குள் உன் பிரச்சனையில் இருந்து நீ வெளியில் வந்தாகனும் இல்லனா நீ வேற கோர்ஸ் ட்ரை பண்ணு. இந்த வாய்ப்பு வேற கோர்ஸ் மாறணும்னு ஆசைப்படற எல்லா மாணவர்களுக்கும் இருக்கும் விதிமுறை தான். நீ இப்போது இங்கிருந்து கிளம்பலாம்.”
வெளியில் வந்த வர்ணாவை பார்த்து என்ன என்று கேட்ட சித்துவை ஒன்றும் இல்ல என்று கூறி சமாளித்துவிட்டு வந்து தன் இடத்தில் அமர்ந்தாள். அவள் அருகில் இருந்த நிலா என்ற மாணவி இவள் சோகமாக இருப்பதை பார்த்து, “ஏதாவது பிரச்சனையா?”என்று கேட்டாள். வர்ணா எதுவும் பதில் கூறாமல் தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
நிலா, “இன்னைல இருந்து நீ என்னோட பிரண்ட். என்னை உன்னோட பிரண்ட்டா ஏத்துகுவயா?”என்று கூறி கை நீட்டினாள். வர்ணா ஒரு நிமிடம் தயங்கிவிட்டு அவளிடம் “பிரண்ட்ஸ்” என்று கூறி கைகுலுக்கினாள்.
நிலா, “தேங்க்ஸ் என்னை பிரண்ட்டா ஏத்துக்கிட்டதுக்கு. உனக்கு எப்போ உன் பிரச்சனையை என்கிட்ட சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு. கண்டிப்பா உனக்கு என்னால முடிந்த உதவிய நான் செய்றேன்” என்று கூறி அவள் கையை அழுத்துகிறாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த வர்ணா தயங்கி தயங்கி தன் பிரச்சனையை நிலாவிடம் கூறுகிறாள். இதை கேட்டு ஒரு நிமிடம் அமைதியாக யோசித்த நிலா, “நீ இந்த கோர்ஸ் தான் படிக்கணும்னு உறுதியாக இருந்தால் நீ இந்த பிரச்சனைல இருந்து கண்டிப்பா வெளிய வந்தே ஆகணும்.அதனால் உனக்கு இதில் இருந்து வெளிய வர நானும் ஹெல்ப் பண்றேன்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சார் உள்ளே வர இருவரும் அமைதி ஆகிறார்கள்.

அடுத்த நாள் காலை வெங்கட் சீக்கிரம் பேங்க் செல்லவேண்டி இருப்பதால் வர்ணாவை பேருந்தில் பத்திரமாக செல்ல வேண்டும் என்று பல முறை அறிவுரை கூறிவிட்டே கிளம்பினார். வர்ணாவும் இன்று பேருந்தில் செல்லவேண்டும் என்று வேகமாக தயாராகி தன் காலேஜ் பஸ் நிற்கும் இடத்தில் வந்து நிற்கிறாள். சிறிது நேரத்தில் பஸ் வந்ததும் ஏறிக்கொள்கிறாள். எங்கு உட்காருவது என்று யோசித்துக்கொண்டே சுற்றி பார்க்கிறாள். அவளின் காலேஜ் சீனியர் ஒருவன் இவளை பார்த்து கை அசைகிறான். அவன் அருகில் சென்றதும் அவன், “ஹாய். ஐயம் ராஜேஷ். யூவர் சீனியர்.” என்று கூறி கை நீட்டுகிறான்.
வர்ணா, “ஹாய் சீனியர். ஐயம் வர்ணா.” என்று கூறி இவளும் கைகுலுக்குகிறாள். சீனியர் தன் அருகில் இருந்த காலி இருக்கையை காண்பித்து அமர சொல்கிறான்.
வர்ணா, “எனக்கு ஜன்னல் சீட் தான் வேண்டும்”
ராஜேஷ், “ஓகே. உட்கார்ந்துக்கோ” என்று கூறி வழிவிடுகிறான். வர்ணா அமர்ந்ததும் அவனும் அவளின் அருகில் அமர்ந்து பொதுவான விஷயங்களை பேசி சிரித்துக்கொண்டே பயணித்தனர். சரியாக அதே நேரம் பைக்கில் வந்த சித்தார்த் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து யார் இவன் என்று யோசிக்கிறான். அவர்களுக்கு முன் காலேஜ் சென்ற சித்தார்த், ராஜேஷை பற்றி விசாரித்து பார்க்கிறான். விசாரித்தவரை அவன் ஒரு மேல்தட்டு வர்கத்தை சேர்ந்தவன் என்றும் மிகவும் சாதுவான குணம் படைத்தவன் என்றும் பெண்களிடம் அதிகம் பழகாதவன் என்றும் தெரிந்துகொள்கிறான். மனதிற்குள் நிம்மதி பரவுகிறது அதே நேரத்தில் வர்ணா அவனுடன் சிரித்து பேசுவதை நினைத்து சிறிது பொறாமையும் கொள்கிறான்.
காலை முதல் வகுப்பு ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள் ஒரு மனைவி வகுப்பறை வாசலில், “ excuse me madam” என்று அழைத்தவாறு வந்து நிற்கிறாள். அவளை திரும்பி பார்த்த அனைவரும் ஆண் பெண் பேதமின்றி என்ன ஒரு அழகு என்று அதிசயித்தனர். வகுப்பெடுத்துக்கொண்டிருந்த மேடம் அவளை பார்த்து, “ஏன் லேட்? சரி உள்ளே வா இனி லேட்டா வராதே.” என்று கூறி உள்ளே அனுமதிக்கிறார்.
உள்ளே வந்த பெண் நேராக சித்தார்த் அருகில் சென்று அமர்கிறாள். சித்தார்த் அவளை பார்த்து அழகாக புன்னகைக்கிறான். இதை பார்த்த வர்ணா, “யார் இந்த புது ட்ராக்?” என்று யோசித்துவிட்டு, நம்ம சித்து தான பார்த்துக்கலாம் என்று நினைத்து வகுப்பை கவனிக்கிறாள்.
வகுப்பு முடிந்து மேடம் வெளியில் சென்றதும், அதற்காகவே காத்திருந்தார் போல் சீனியர்ஸ் இருவரும் உள் நுழைந்தனர். அதில் ஒருவன் ராஜேஷ். மாணவர்களை பார்த்து பொதுவாக, “பிரெஷர்ஸ் டே(fresher’s day) பங்கஷன் வருது அதுல யார் கலந்துக்க விருப்பப்பட்டாலும் பெயர் கொடுக்கலாம். பாட்டு, நடனம், பேச்சு திறமை, இப்படி எந்த திறமை இருந்தாலும் காட்டலாம்.” என்று கூறி பெயர் எழுத பேப்பர் பேனா சகிதம் அவர்கள் முன் நின்றனர். ஒவ்வொருவராக சென்று பெயர் கொடுக்க தொடங்கினர். புதிதாக வந்த மாணவியும் சென்று, “பெயர் ரம்யா, டான்ஸ்” என்று கூறிவிட்டு வந்து அமர்கிறாள். ரம்யா சித்தார்த்திடம் நீ பெயர் கொடுக்கலயா என்று கேட்க, சித்தார்த் இன்ட்ரஸ்ட் இல்லை என்று தோலை குலுக்குகிறான். விருப்பப்பட்டவர்கள் அனைவரும் பெயர் கொடுத்து முடித்ததும்,
ராஜேஷ் வர்ணாவின் அருகில் வந்து, “நீ பெயர் கொடுக்கவில்லையா” என்று கேட்கிறான்.
வர்ணா, “இல்ல, எதுவும் தோணல” என்று கூறி புன்னகைக்கிறாள்.
ராஜேஷ், “உனக்கு தெரிந்ததை ப்ரூவ் பண்ணு” என்று கூறி அவளை கட்டாய படுத்துகிறான்.
வர்ணாவும் சமாளிக்க முடியாமல் சரி என்று கூறி பாட்டுக்கு பெயர் கொடுக்கிறாள். ராஜேஷ் இதை கேட்டு மென்மையாக சிரித்துவிட்டு நகர்கிறான்.
 

umamanoj64

Well-Known Member
மாணவிக்கு மனைவினு ஸ்பெல்லிங் மிஸ்டேக்...செக் செய்து போடுங்க பா..
அப்டேட் நல்லா இருக்கு..
 

Karthikpriya

Active Member
மாணவிக்கு மனைவினு ஸ்பெல்லிங் மிஸ்டேக்...செக் செய்து போடுங்க பா..
அப்டேட் நல்லா இருக்கு..
♀️♀️♀️ check pannittu kudukiren inimel
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top