உன் கண்ணில் என்னை கண்டேன் epi 11

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
11

காலேஜ் சேர இரு தினங்களே இருந்த நிலையில் ஊர் திரும்புகிறான் சித்தார்த். வீடு வந்ததும் அவன் முதலில் விசாரித்தது வர்ணாவின் காலேஜ் பற்றி தான், எங்கே அவளை வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பிவிட்டால் தன்னால் அவளை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று தவித்ததின் பயனால் திரும்ப திரும்ப அதை பற்றியே விசாரித்தான். தன் அம்மா அமுதா மூலம் தான் படிக்கும் அதே காலேஜில் தான் வர்ணாவும் படிக்கப்போகிறாள் என்பதை அறிந்ததும் அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. பின் தான் அவளின் போபியா பிரச்னை நியாபகத்திற்கு வர வெங்கட்டை தனிமையில் சந்திக்க சென்றான்.
சித்தார்த், “ஏன் அங்கிள் அவ ப்ரோப்லேம் தெரிஞ்சும் அவளை மெடிக்கல்ல சேர்த்தீங்க. உங்களுக்கு டாக்டர்க்கு படிக்க வைக்கணும்னு ஆசை இருந்தால் பிரேம படிக்க வைக்கிறது தான அங்கிள். வர்ணாக்கு ஏதாவது இன்ஜினியரிங் சீட்டோ இல்ல வேற ஏதாவது கோர்ஸ்ஸோ சேர்க்கிறது தான. உங்க பிரெஸ்டிஜ்காக அவ வாழ்க்கையோட ஏன் விளையாடுறீங்க.” என்று அவருக்கு பதிலளிக்க அவகாசமே கொடுக்காமல் படபடக்க ஆரம்பித்தான்.
இவன் பேசும் அனைத்தையும் பொறுமையாக புன்சிரிப்போடு பார்த்த வெங்கட், “உனக்காக தான் டா சித்து அவ மெடிக்கல் சேருறா. அவளால உன்ன விட்டு இருக்க முடியாதாம். அது ஏன்னு எனக்கு தெரியல நீயே யோசி. எப்போவும் பொறுமையா இருக்கும் நீ ஏன் இப்படி படபடக்கிறனும் தெரியல. நான் அவளை அப்படி என் பிரெஸ்டிஜ்காக விட்டுவிடுவேனா? நீயே சொல்லு. அவளே கான்பிடென்ட்டா இருக்கா, ஏதாவது ப்ரோப்லேம் வந்தா நீயும் பக்கத்துல தான இருப்ப. அவளும் அவளோட போபியால இருந்து வெளிய வரணும். அது தான் அவளோட பியூச்சர்க்கு நல்லது.எத்தனை நாள் யாரவது ஒருத்தர் அவ கூடவே அவளுக்கு துணையாக இருக்க முடியும்.அவளும் தன்னம்பிக்கையோடு இருக்கணும்னு தான் அவளை மெடிக்கல்ல சேர ஒத்துக்கிட்டேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
இதை அனைத்தும் கேட்ட சித்தார்த் எனக்காக தான் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கிறாளா என்று ஒரு நிமிடம் உறைந்து நின்றான். இவ்வளவு நேரம் தான் தவித்ததும் வெங்கட் மாமாவிடம் தான் கோவபட்டதும் வர்ணாவின் மேல் தான் கொண்ட காதலால் என்பதை மெது மெதுவாக உணர்ந்த சித்து, இறகு போல் மனம் இலேசாக வானில் பார்ப்பதை போல் உணர்ந்தான். வர்ணாவும் தன் மேல் கொண்ட காதலால் தான் தன்னுடனே இருக்க விரும்பிகிறாளா இல்லை அவள் தன் மேல் வைத்துள்ள தூய நட்பை தன் ஆசை கொண்ட மனம் தான் தவறாக கற்பனை செய்கிறதா? என்று புரியாமல் குழம்பினான்.
சிறிது நேரம் யோசித்தவன் வர்ணா மெடிக்கல் எடுத்ததால் வரப்போகும் பிரச்னைகளை நினைத்து தவிக்க ஆரம்பித்தான். இப்படியே இரு நாட்கள் செல்ல காலேஜ் திறக்கும் நாளும் புலர்கிறது.

சூரியன் தன் வழக்கத்தை போல் கிழக்கில் தன் ஆட்சியை கைப்பற்ற நம் வர்ணா துயில் களைந்து மெதுவாக எழுகிறாள். “காலேஜ் பிரஸ்ட் டே என்று நினைக்கும் போதே ஒரே புத்துணர்ச்சியாக இருக்கு” என்று பரவசமாக கூறிக்கொண்டே தயாராக செல்கிறாள். அவள் தயாராகி வந்து தலைபின்னும் போது உள்ளே வந்த வெங்கட் எப்போதும் போல் அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள் என நினைத்து, “பிரஸ்ட் டேவே காலேஜ் லேட்டா போக போறியா? சீக்கிரம் எழுந்து ரெடி ஆகு” என்று கூறி பெட்ஷீட்டை நகர்த்தி பார்த்தவர் திகைத்து போய் சுற்றுமுற்றும் பார்க்கிறார். அவள் தயாராகி நிற்பதை பார்த்து, “என்ன பாப்பா அதுக்குள்ள ரெடி ஆகிட்டீங்க. காலேஜ் பிரஸ்ட் டேனு பயமா இருக்க?” என்று பாவமாக கேட்கிறார்.
வர்ணா, “பயமா? எனக்கா? என்ன பா காமெடி பண்றீங்க. அங்க என்ன பேய் பிசாசா இருக்கு. எனக்கு நியூ பிரண்ட்ஸ் கிடைக்க போறாங்கன்னு எஸ்சைட்மென்ட்டா இருக்கு பா”
வெங்கட், “ பயம் இல்லாம இருந்தா சரி தான் டாமா. சரி வா சாப்பிடலாம்”
வர்ணா சாப்பிட்டு ரெடி ஆகி வெளியில் வரும்போது வெங்கட் கார் எடுத்து ரெடியாக இருந்தார்.
வெங்கட், “டெய்லி அப்பா ட்ரோப் பண்றேன் டா. வரும் போது காலேஜ் பஸ்ல வந்துடு ஓகே வா?”
வர்ணா, “ஹ்ம்ம் ஓகே பா”
வெங்கட் காலேஜ் வாசலில் வர்ணாவை இறக்கிவிட்டு கிளம்பிவிடுகிறார். காலேஜில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி, “சித்து இந்த நேரத்துக்கு வந்திருக்கனுமே எங்க இருப்பான்?” என தேடிக்கொண்டே காலேஜை சுற்றி வருகிறாள். திடீரென்று அவள் பின்னால் டொம் என்ற சத்தம் கேட்டு பயத்துடன் திரும்பி பார்க்கிறாள். அதற்குள் மாணவர்கள் அனைவரும் கூடிவிட்டனர். அங்கு வர்ணாவிற்கு இரண்டு அடி இடைவெளியில் ஒரு மாணவன் முதல் மாடியில் இருந்து விழுந்து தலை சிமெண்ட் தரையில் பட்டதால் ரத்தம் வழிய மயங்கி இருந்தான். அதே நேரம் வர்ணாவை தேடிக்கொண்டிருந்த சித்து வேகமாக இவளின் அருகில் வந்து நிற்கவும் வர்ணா மயங்கி அவன் மேல் விழவும் சரியாக இருந்தது. உடனே அவளையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் செல்கிறான். கிழே விழுந்த மாணவனை ஐசியூவில் கொண்டு சென்றார்கள். வேறு ஒரு டாக்டர் வந்து வர்ணாவிற்கு என்ன என்று விசாரிக்க,
சித்தார்த், “ அவளுக்கு பிளட் போபியா இருக்கு டாக்டர் அதான் அந்த ஸ்டுடென்ட்டோட பிளட் பாத்ததும் மயங்கிட்டா” என்று கூறி சிகிச்சையளிக்க வேண்டினான்.
டாக்டர், “ஓகே ஓகே கவலை படாதீங்க நான் பாத்துக்கிறேன்” என்று கூறி வர்ணாவை உள்ளே அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் வர்ணா கண் முழித்ததும் சித்து உள்ளே சென்று பார்க்கிறான்.

சித்தார்த், “உனக்கு தான் பிளட் என்றாலே ஒதுக்காதே எதுக்கு MBBS எடுத்த? நான் எத்தனை தடவை கேட்டும் சொல்லல இல்ல. அதுவும் மெரிட்ல கூட கிடைக்கல டொனேஷன் கொடுத்து சேர்ந்திருக்க.” என்று கோவம் கொள்கிறான்.
வர்ணா, “எல்லாம் உனக்காக தான் டா. ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாதே.” என்று மனதிற்குள்ளே புலம்பினாலே தவிர வெளியில் எதுவும் கூறாமல் தலை கவிழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சித்தார்த், “இப்போ வாய் திறந்து சொல்லபோறியா இல்ல அடி கொடுக்கவா? சொல்லு”என்று குரலை உயர்த்துகிறான்.
வர்ணா, “என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே. ப்ராக்டிஸ் பண்ணதெல்லாம் மறந்துடுச்சே இப்போ என்ன பண்றது? சரி சமாளிப்போம். இருக்கவே இருக்கார் நம்ம வெங்கட், அவர கோர்த்துவிட்ருவோம். வர்றத பின்னால பாத்துக்கலாம்.”என்று மனதிற்குள்ளே ஒரு முடிவுக்கு வந்து சித்தார்த்தை நிமிர்ந்து பார்க்கிறாள். “ நான் எவ்வளவோ சொன்னேன் சித்து, அப்பா தான் கேட்கவே இல்ல. நீ எப்படியாவது பிளட் போபியால இருந்து வெளிய வந்து தான் ஆகணும். நீ மெடிசின் படிக்கணும்னு நாங்க சின்ன வயசுலயே முடிவு பண்ணியாச்சுன்னு சொல்லி போர்ஸ் பண்ணி செத்துட்டாரு டா. நீ வேற அந்த டைம்ல கூட இல்லையா அதான் எனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்ல. கவலை படாத சித்து நான் எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்துடுவேன்.” என்று இடைவிடாமல் பேசி கடைசியில் நம்பிக்கையோடு முடிக்கிறாள்.
சித்தார்த், “அடிப்பாவி. அங்கிள போர்ஸ் பண்ணி இவ சேர்த்துட்டு இப்போ என்னமா கதை விடுறா. சின்ன வயசுல இருந்து ஏன் கூட தான வளர்ந்தா எங்க போய் இப்படிலாம் பேச காத்துக்கிட்டா”என்று மனதிற்குள்ளே புலம்பிவிட்டு, “சரி நான் அங்கிள் கிட்ட பேசி பார்க்கிறேன், இப்போ கிளாஸ் போலாமா? பரவலயா? இல்ல வீட்டுக்கே போய்டலாமா?”
எங்கே இப்போது வீட்டுக்கு சென்றால் அப்பாவிடம் கூறி வேறு காலேஜ் மாற்றிவிடுவானோ என்று பயந்து, “இல்ல சித்து எனக்கு இப்போ ஒன்னும் இல்ல கிளாஸ் போலாம் என்று கூறி வேகமாக கிளம்புகிறாள். கிளாஸ் செல்லும் வழியில் “கிழே விழுந்த மாணவன் எப்படி இருக்கான்?” என்று கேட்கிறாள் வர்ணா.
சித்தார்த், “ஹ்ம்ம் இப்போ பரவால்ல. பிளட் தான் அதிகமா போயிருக்கு. பிளட் கொடுத்துட்டாங்க. இப்போ நார்மல் ஆகிட்டான்.”
வர்ணா, “எப்படி விழுந்தான்? என்ன பிரச்னை?”
சித்தார்த், “சரியா தெரியல வர்ணா. சிலர் சொல்றாங்க தற்கொலைனு. சிலர் சொல்றாங்க தற்கொலைனா மொட்டைமாடில இருந்து தான விழுவான் அதெல்லாம் இல்லனு. சிலர் தன் லவர பயப்படுத்தறதுக்காகன்னு இப்படி செய்தான்னு சொல்றாங்க. அதெல்லாம் எதுவுமே இல்ல அங்க தண்ணி இருந்ததை கவனிக்காம வழுக்கி விழுந்துட்டான்னு காலேஜ் நிர்வாகம் சொல்லுது இதில் எதை மூடி மறைக்கனு தெரியல. இதில் எதுவும் எனக்கு புரியல.”
வர்ணா, “எப்படிடா இவ்ளோ பேர் சொல்றது உனக்கு தெரியும்? என்ன ஹோச்பிடல்ல தனியா விட்டுட்டு நீ போய் விசாரிச்சியா?”
சித்தார்த், “இல்ல இல்ல அங்க அந்த பையனுக்கு டிரீட்மென்ட் கொடுக்கும்போது வெளியில் வெயிட் பண்ணிட்டுருந்த அவனோட பிரண்ட்ஸ் பேசிக்கிட்டாங்க. உன்ன நான் எப்படி தனியா விட்டுட்டு போவேன் லூசு” என்று பேசிக்கொண்டே வந்தவர்கள் கிளாஸ் ரூம் வந்ததும் அமைதியாகி ப்ரொபசரிடம் அனுமதி வாங்கி உள்ளே வந்து அமர்ந்தனர்.
 

Deephi

Active Member
Epi nallarukku. But ezhuthu pizhai konjam varuthu. Athai konjam sari pannitingana innum superah irukkum. சேர்த்துட்டாரு என்று டைப் செய்யாம செத்துட்டாரு என்று பதிவாகியுள்ளது.
 

Karthikpriya

Active Member
Epi nallarukku. But ezhuthu pizhai konjam varuthu. Athai konjam sari pannitingana innum superah irukkum. சேர்த்துட்டாரு என்று டைப் செய்யாம செத்துட்டாரு என்று பதிவாகியுள்ளது.
Thank you. Kandippa indha madhiri pizhai varama parthukolgiren.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top