உன் கண்ணில் என்னை கண்டேன் epi 10

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
10

ரிவிஸன் கிளாஸ் எல்லாம் முடிந்து எக்ஸாம் ஸ்டார்ட் ஆக இரு தினங்களே உள்ள நிலையில் படிக்கலாம் என்று அமர்ந்தாள் வர்ணா.
வர்ணா, “ஒரு கதை புக் படிக்க ஆரம்பிச்சா ஒரே நாள்ல முழு புத்தகத்தையும் படிக்கக்கூடிய திறமை இருக்கும் என்னால சப்ஜெக்ட்ல ஒரு சாப்டர் கூட படிக்க முடியலையே வெட்கம். நான் மட்டும் ஏன் சிட்டி ரோபோவா பொறக்கல. அப்படி மட்டும் பிறந்திருந்தால் புக் எடுத்து சொய்ங்க் சொய்ங்க் அப்டின்றதுக்குள்ள எல்லா புக்கும் படிச்சு முடிச்சிட்டு இப்போ ரெஸ்ட் எடுத்திருப்பேன்” என்று கிறுக்கு பிடித்தவள் போல் ஏதேதோ புலம்பிக்கொண்டே படிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் படித்தவள், “இதுக்குமேல தாங்காது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான், எவ்ளோ நேரம் படிச்சோம்?” என்று பார்ப்பதற்காக வாட்ச் எடுத்து பார்த்தால் அரைமணி நேரம் என்று காட்ட,“அதுக்குல்லவா டயர்ட் ஆகிடுச்சு. சரி நம்ம சித்து வீட்ல ஒரே வாசமாயிருப்பதைப் போல் இருக்கே அப்டியே அவனும் என்ன பண்றான்னு ஒரு விசிட் பாத்துட்டு வருவோம்” என்று சித்தார்த் வீட்டுக்கு சென்றாள்.
அங்கு சித்தார்த் கருமமே கண்ணாக யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதெல்லாம் பார்க்காது படித்துக் கொண்டிருந்தான். “ம்ஹும் இது திருந்தாத கேஸ். நம்ம போய் அமுதா அம்மா கையாள நல்ல டிபன் சாப்பிட்டு வருவோம். எப்படியும் வீட்ல கேட்டா அதுக்குள்ள படிச்சிட்டியா. எக்ஸாம் பக்கத்தில இருக்கும் போது எப்படி பசிக்கும்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க” என்று புலம்பியவாறே சமையலறை முன் வந்து நின்றாள்.
வர்ணாவை பார்த்த அமுதா, “என்ன டா மா எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் ஆகிடியா?”
வர்ணா, “நீங்களும் இதே கேள்வி கேக்கறதா இருந்தா நான் இப்போவே வீட்டுக்கு போறேன் அமுதா மா” என்று முறுக்கிக்கொள்ள
அமுதா, “ஓ சரி சரி வாங்க ஆண்ட்டி உங்களுக்கு பிடிச்ச பூரியும் கிழங்கும் செய்திருக்கேன்.”
வர்ணா, “ஹ்ம்ம் தெரியுமே அங்க வீட்ல இருக்கும்போதே வாசனை வந்தது அதான் சித்துவ கூட டிஸ்டர்ப் பண்ணாம இங்க வந்தேன்.” என்று கூறியவாறே சமையல் மேடையிலே சம்மணமிட்டு அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டாள். பேச்சு சத்தம் கேட்டு சித்துவும் வர. இவள் பூரி உண்பதை பார்த்து தன் அம்மாவின் புறம் திரும்பி, “என்ன மா இது பூரி சாப்டா தூக்கம் தான் வரும் எப்படி படிக்கறது” என்று புலம்பியவாறே அமர்ந்து உண்ண ஆரம்பித்தான். இருவரும் உண்டு முடித்தவுடன் சித்தார்த் வர்ணாவின் புறம் வந்து ஒரு நோட்புக்கை நீட்டுகிறான்.
வர்ணா, “என்ன டா இது?”
சித்தார்த், “இம்போர்ட்டண்ட் நோட்ஸ் டி ஈஸியா மார்க் ஸ்கோர் பண்றதுக்கு சிம்பிள் முறையை யூஸ் பண்ணி எழுதி வெச்சிருக்கேன். போய் ஒழுங்கா படி நைட் எவ்ளோ படிச்சன்னு வந்து பார்ப்பேன்” என்று மிரட்டி அனுப்பி வைத்தான். அவன் கூறியதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் இரு நாளும் பொறுப்பாக அமர்ந்து படித்தாள் வர்ணா.

ஒருவழியாக எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து ரிசல்ட்காக காத்திருக்க ஆரம்பித்தனர். லீவ் நாளில் எப்படி பொழுதை கழிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள் வர்ணா. “சரி சமைக்கவாவது கத்துப்போம் அப்ப தான் இந்த வெங்கட் சமையல் கொடுமையில் இருந்து ஒரு விடிவுகாலம் கிடைக்கும்” என்று நக்கலடித்தவாறே வெங்கட்டிடம் சென்று சமைக்க காத்துக்கொள்கிறாள்.
இப்படியே சில நாட்கள் சென்ற நிலையில் எக்ஸாம் ரிசல்ட் வெளியானது. எப்போதும் போல் சித்தார்த் 95% மார்க் எடுத்து ஸ்கூல் பிரஸ்ட் வந்தான். வர்ணா 80% மார்க் எடுத்துவிட்டு நம்ப முடியாமல் ஒரு வித மோன நிலையில் சுத்துகிறாள்.
காலேஜ் சேர நினைக்கும் போது எப்படியாவது சித்தார்த் சேரும் அதே காலேஜில் தானும் சேர்ந்துவிடவேண்டும் என்று எந்த காலேஜ் அவன் தேர்ந்தெடுக்கிறான் என்று தெரிந்துகொள்வதற்காக அவன் பின்னே சுற்றிக்கொண்டு இருந்தாள்.

சித்தார்த் தன் சிறு வயதில் வர்ணாவால் உருவான லட்சியபடி டாக்டர் சீட்டுக்கு முயற்சிக்கிறான். இதை கேள்வி பட்ட வர்ணா முதலில் தயங்குகிறாள் பின் என்ன நடந்தாலும் சித்தார்த்துடன் தான் படிப்பது என்று காதல் கொண்ட மனம் முடிவு செய்ய யாருக்கும் தெரியாமல் அவன் முயற்சி செய்த அதே மெடிக்கல் காலேஜில் தானும் முயல்கிறாள்.
ஒரு கட்டத்தில் இதை அறிந்த வெங்கட் மிகவும் கோவம் கொள்கிறார். வர்ணா தன்னால் முடிந்தவரை போராடி வெங்கட்டை சம்மதிக்க வைக்கிறாள். வெங்கட் தான் “வர்ணாவால் முடியும்” என்று பேசி பேசி விஜயாவையும் சம்மதிக்க வைக்கிறார்.டொனேஷன் செலுத்தி சித்தார்த் பயில விரும்பும் அதே காலேஜில் அவளும் அட்மிஷன் செய்கிறாள்.
இது எதையும் அறியாத சித்தார்த், மெடிக்கல் காலேஜில் அட்மிஷன் செய்து விட்டு வந்து அதை வெங்கட் மற்றும் விஜயாவிடம் தெரிவித்துவிட்டு வர்ணாவை பற்றி விசாரிக்கிறான். உடனே வர்ணா, “இனி தான் யோசிக்கணும்” என்று கூறி அவனிடம் தான் மருத்துவம் படிக்கப்போவதை தற்காலிகமாக மறைக்கிறாள், எங்கே தெரிந்தால் அவனை வேறு சமாளிக்க வேண்டி வருமோ என்று.
லீவில் நேரம் போகாமல் இருந்த போது தன் தாத்தா பாட்டி அழைத்ததால் அவர்களின் வீட்டிற்கு சென்று விடுகிறான் சித்தார்த். தன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்தபோதும் பல முறை அழைத்து வர்ணாவின் காலேஜ் பற்றி விசாரிக்கிறான். வர்ணா ஏதேதோ சம்பந்தம் இல்லாததெல்லாம் பேசி அவனை திசை திருப்பி விடுகிறாள்.
காலேஜ் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருந்தது. வர்ணா, “ சித்து இல்லாம ஆண்ட்டியும் அங்கிளும் போர் அடித்து போய் இருப்பாங்க நாம போய் கொஞ்சம் மொக்க போட்டுட்டு வருவோம்” என்று சித்தார்த் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு தன் அப்பா இருப்பதை பார்த்து “நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?”
வெங்கட், “ஆமாம் டா செல்லம் நானும் சேகரும் வெளிய போக வேண்டி இருக்கு அதான் கிளம்பிட்டு இருக்கோம்.”
வர்ணா, “ஓ சரி பா. சித்து எப்போ வரான் அங்கிள்?”
சேகர், “இன்னும் மூணு இல்லை நாலு நாள்ல வந்துடுவான் டா மா ஏன் போர் அடிக்குதா?” வர்ணா, “ஹ்ம்ம் ஆமாம் அங்கிள்”
இதை கேட்டவாறே காபியுடன் வந்த அமுதா, “அவங்க பாட்டி தாத்தாக்கு போர் அடிக்குதான் அதான் இத்தனை நாள் அங்கேயே இருக்கான். ஆனால் நீ மட்டும் அவனோட காலேஜ் தான் சேர்த்திருக்கனு தெரிந்தால் ஓடிவந்துடுவான். நீ தான் சொல்ல விடல.”
வர்ணா, “வருவான் வருவான் என்ன திட்டி தீர்க்கறதுக்காகவே ஓடிவருவான்.”
வெங்கட், “சமத்து பையன் அவன். அவனை குறை சொல்லாத. அவன் உன் நல்லதுக்காக தான் கோவப்படுவான்.” இதை கேட்ட வர்ணா அப்பா கூறுவதும் சரி தானே என்று நினைத்து அமைதி ஆகிவிட்டால்
சேகர், “வர்ணாவும் காலேஜ் போக போறா அப்படியே மாப்ள பார்க்க ஆரம்பிக்கறது தான அப்ப தான் அவ காலேஜ் முடிக்கவும் நல்ல இடம் செட் ஆகும்.”
வெங்கட், “ஹ்ம்ம் சித்தார்த் மாதிரி நல்ல பையனா கிடைத்தால் பண்ணிட வேண்டியது தான்.” என கூறி சிரிக்கிறார்.
வர்ணா, “சித்து மாதிரி ஏன் பா அவனையே பாருங்களேன். அவன் தான் எனக்கு கரெக்ட்டா இருப்பான்.” என எங்கேயோ பார்த்துக்கொண்டு கூறுகிறாள்.
வெங்கட், “வாலு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு உனக்கு” என கூறி தலையில் தட்டுகிறார்.
அமுதா, “எனக்கு மட்டும் இந்த பட்டுக்குட்டி மருமகளா வந்தா கசக்கவா போகுது.” என்று பாசமாக அவள் தலையை தடவுகிறார்.
இதை பார்த்த வெங்கட், “இவளையும் நாங்க பிரிய தேவை இருக்காது” என்று கூறுகிறார்.
வர்ணா, “பாத்தீங்களா எவ்ளோ நல்ல விஷயம் சேர்த்து கிடைக்குது என் ஐடியாவால?” என்று தன் சுடிதார் காலரை தூக்கிவிடுகிறாள். பின் சேகரின் புறம் திரும்பி அவர் காதருகே சென்று ரகசியம் கூறுவது போல், “உங்க டியூப்லைட் பையன் கிட்ட சொல்லிடாதீங்க அவனே முதல்ல சொல்லட்டும்” என்று சத்தமாக கூறியவாறே அங்கிருந்து ஓடிவிடுகிறாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top