உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்….

இதோ, அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். தலைப்பு, “உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே” கதையைப் பற்றி என்ன சொல்ல? வழக்கமான காதல் கதை தான். எப்பொழுதுமே ஒரு ஆணின் காதலில் இருந்து பெண்ணின் காதல் மாறுபட்டது. அவ்வாறு ஒரு பெண்ணின் காதலைத் தான் நாம் இப்பொழுது காணப்போகிறேம்.

நாயகன் : புகழேந்தி தமிழ்வேந்தன்

நாயகி : அகமகிழ்தினி

டீசர்

பதைபதைத்தவாறு அந்த ஸ்டெரக்சரின் பின்னால் ஓடி வந்தாள் அந்தப் பெண். அவள் கண்களில் அப்படி ஒரு பயம். தன் முன்னால் காயம்பட்டு படுத்திருந்த அந்த உருவத்திற்கு எதுவும் ஆகக்கூடாது என்று அவள் மனம் இடைவிடாது பிரார்த்தித்தவாறு இருந்தது.

அவன் இல்லாவிடில் தன் வாழ்வில் என்ன? என்று யோசிக்கையிலேயே தான் ஏதோ திக்கு தெரியா காட்டில் நிற்பதைப் போல உணர்ந்தாள். உடனேயே, “Be positive” என்று அவன் எப்பொழுதும் சொல்வதை தனக்கும் சொல்லிக்கொண்டு தலையை லேசாக உதறியவாறு அவனைத் தொடர்ந்தாள்.

அவனை சிகிச்சைக்காக உள்ளே அழைத்துச் செல்ல, வெளியே நின்று தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே இருந்தவளுக்கு அவனன்றி வேறு எந்த நினைவும் இல்லை. அவன் பெயரையே அவள் உதடுகள் உச்சரித்தன. என்றோ அவள் தனக்குள் எடுத்த அனைத்து சத்தியங்களும் அந்த ஒற்றை காட்சியில் தவிடு பொடியாகிவிட்டன.

அறையில் இருந்து வெளியில் வந்த ஒரு நர்ஸ் அவளிடம் அவனது உடமைகளை அளிக்க, அவற்றை தன் கைகளில் வாங்கியவளுக்கு அத்தனை நடுக்கம். இதனைத் தொடும் உரிமை உனக்கு இருக்கா? என்று அவளது ஒரு மனம் கேள்வி கேட்க, நீ தான் அவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததென்று மட்டும் அவன் அறிந்தால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியும் தானே? என்று எள்ளி நகையாடியது.

அப்போது, அங்கு வந்த ஒரு நர்ஸ், “பேஷண்ட் பெயர் சொல்லுங்க?” என்று அவள் கவனத்தை திருப்ப, அவருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் தந்தாள். அவற்றை எழுதிய நர்ஸ், “ஓகே மிஸஸ். புகழேந்தி, இங்கே ஒரு சைன் பண்ணுங்க” என்க, அன்றைய நாளில் இரண்டாவது முறை அவள் அதிர்ச்சியடைந்தாள். அவள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தவர்கள் அவளை அவன் மனைவி என்றே நினைத்திருந்தனர். அவர்கள் அறிவார்களா அவர்கள் இருவருக்கும் நடுவில் நடந்ததெல்லாம்?

‘நான் அவன் மனைவி இல்லை!’ என்று துக்கத்துடன் அவள் நினைத்து வெதும்ப, கைகளோ தானாக அந்த ஃபார்ம்களை வாங்கி கையெழுத்திட்டன. இருக்கும் சூழ்நிலையையும் மீறி ஒரு மூச்சு சந்தோசமாக அழ வேண்டும் போன்று தோன்றியது அவளுக்கு. அவர் கூறிய அந்த வார்த்தை அவளது எட்டாண்டு கால தவம் அல்லவா? ஆனால், அவளுக்கு அந்த சிறிய சந்தோசம் கூட இல்லை என்பது அவள் விதி போலும்.

“கவுண்ட்டர்ல பில் பே பண்ணிடுங்க. உங்க ஹஸ்பெண்டுக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமாக இருங்க. உங்களை பார்த்தால் ரொம்ப பயந்து போயிருக்கீங்க. துணைக்கு வீட்டுல இருந்து யாரையாவது அழைச்சுக்கோங்க” என்று இலவசமாக அவளது நிலையைக் கண்டு அந்த நர்ஸ் பரிதாபத்துடன் சொல்லிவிட்டு சென்றாள்.

மெய்யான பயம் என்றால் என்னவென்று அப்பொழுதுதான் உணர்ந்தாள் பெண். இருந்தாலும், நடப்பை புரிந்தவள், ரிஷப்ஷனில் பணத்தைக் கட்டிவிட்டு அங்கே இருந்து அவன் வீட்டிற்கு அழைத்துக் கூறினாள். அரைமணி நேரத்தில் வருவதாக அவர்கள் கூற, தன் பழைய இடத்திற்கு வந்தவள், சிகிச்சை முடிந்திருக்கவும், உள்ளே சென்று அவனை ஒரு முறை கண்களில் நிரப்பிக் கொண்டாள். அவன் நெற்றியில் முத்தமிட ஒரு ஆசை எழ, அதனை செயல்படுத்த சென்றவளுக்கு நிதர்சனம் உரைக்க, வழிந்த கண்ணீரை துடைத்து வெளியே வந்து அமர்ந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பின், தூரத்தில் அவன் வீட்டினர் வருவது தெரிய, அங்கே இருந்து அவர்கள் கண்ணில் படாமல் வெளியேறினாள். அவளது மனம் ஓவென அழுதது, அவன் வீட்டினருடன் வந்த அந்த பெண்ணைக் கண்டு. அப்பெண், அவள் காதலனின் காதலி!

சோ, டீசர் போட்டாச்சு ஃப்ரெண்ட்ஸ்… கதையை வாரம் ஒரு அப்டேட் தந்துருவேன். அது குறிப்பாக ஞாயிறு மாலையில் இருந்து திங்கள் மாலைக்குள்ளாகத் தான் இருக்கும். இந்த ஞாயிறன்று முதல் பகுதி அப்டேட் செய்கிறேன். டீசர் எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா!

rana-and-sai-pallavi.jpg
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன்னோடு
வாழ என் ஜீவன் ஏங்குதே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லேகா_1 டியர்
 
Last edited:

eanandhi

View attachment 4896
semaiya iruku sis waiting for ud
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top