உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 04

Advertisement

ChitraPurushoth

New Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கதையின் அடுத்த பதிவு இதோ! படிச்சுட்டு யாரும் கட்டையை தூக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். லாஸ்ட் எபிக்கு கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி...


View attachment 5103

ஹாஸ்டல் வரை அடக்கி வைத்த அழுகை தன்னறையை அடைந்ததும் கரையை உடைத்து வெளிவந்தது மகிழுக்கு. பல வருடமாக பார்க்காமல் இருந்தவனை இப்படி ஒரு நிலைமையிலா பார்க்கவேண்டும்? அவள் மட்டும் அங்கு வராமல் இருந்திருந்தால் அவனை மருத்துவமனைக்கு கூட யாரும் சரியான நேரத்தில் சேர்த்திருப்பார்களா? அவனை வெளியில் எடுக்க நினைத்தவர்களையும் ஆக்சிடெண்ட், கோர்ட், கேஸ் என்று பயப்படுத்தி தடுத்துவிட்டார்களே அருகில் இருந்தவர்கள். ஒரு கசந்த முறுவல் தோன்றியது அவளுக்கு.
அவனை அங்கு பார்த்ததில் இருந்து அவள் மறக்க நினைத்த அனைத்தும் வலிக்க வலிக்க நியாபகம் வந்தது அவளுக்கு. அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது, அதன்பின் அவள் வாழ்வில் நடந்தது, அதனால் அவள் பெற்றோர் இப்போது தவிப்பது, என்று அவள் கடந்த காலம் அவள் கண்முன் மீண்டும் ஒரு முறை விரிந்தது.
நம் உடலில் உள்ள ஹார்மோன்கள் இருக்கின்றனவே, ஒருவர் சோகத்தில் இருக்கும்போதுதான் அவர் கொண்ட அனைத்து துன்பங்களையும் அவருக்கு நியாபகப்படுத்திவிடும். அதனை நினைத்துப் பார்ப்பவருக்கு தான் மட்டும்தான் உலகத்திலேயே மிகுந்த கஷ்டத்தில் உள்ளவர் என்ற எண்ணம் தோன்றிவிடும்.
அத்தகைய ஒரு எண்ணம் மகிழுக்கும் வெகு நாட்களுக்குப் பின்னர் தோன்றிவிட்டிருந்தது.
அனைத்தையும் எண்ணிப்பார்த்தவள், ‘பேசாமல் ஒரு முறை அவனிடம் பேசிப்பார்ப்போமா?’ என்று தோன்ற, அந்த எண்ணத்தை உடனே அழித்தாள், தன் மனதில் தோன்றிய அந்த பெண்ணின் முகத்தாலும், அவளுள் எழுந்த குற்றஉணர்வாலும்.
‘அவங்கிட்ட போய் என்னன்னு சொல்லுவேன்?’ என்று அவள் நினைக்க நினைக்க, ‘நான் ஏன்டா உன்னை இவ்வளவு லவ் பண்ணேன்? உன்ன மறந்து வாழவும் முடியாம, உன்கூட வாழவும் முடியாம! இதுக்கு பேசாம செத்துறலாம் போல! அதுக்கு கூட நான் தகுதியில்லாதவ போல!’ என்று தனக்குள்ளேயே மருகியவள் அன்றைய இரவை கண்ணீரோடு கழித்தாள்.
******
ஹாஸ்பிடல்
மறுநாள் காலை கண்விழித்த புகழை அவன் மொத்த குடும்பமும் சூழ்ந்திருந்தது. ஒவ்வொருவரும் அவன் நலத்தை விசாரிக்க, அனைவருக்கும் பதில் சொன்னவன், அவன் அம்மா, தங்கை மற்றும் ப்ரார்த்தனாவை சமாளிப்பதற்குள் ‘இன்னொரு மயக்க ஊசி கொடுத்து என்னை தூங்க வைத்துவிடுங்களடா!’ என்று கேட்கும் அளவுக்கு விழி பிதுங்கிவிட்டான். ஒரு வழியாக அம்மாவையும் கீர்த்தியையும் சமாதானப்படுத்தியவன், ப்ரார்த்தனாவின் புறம் திரும்பினான். ப்ரார்த்தனாவை கண்ட ராதை, புகழுக்கு கண்காட்டிவிட்டு கீர்த்தியுடன் வெளியேறினார்.
ப்ரார்த்தனா, கலையான முகம், பொன்னிறம், ஐந்தரை அடி உயரம். நான் இந்திய உடையிலும் நன்றாக இருப்பேன், ஆனால் மேற்கத்திய உடையில் அசத்தலாக இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லும் உடலமைப்பு, அதற்கு தகுந்தாற்போல் அவள் அணிந்திருந்த உடைகளும் இருந்தன. அமெரிக்க சீதோஷன நிலை அவளை ஆப்பிள் போன்று மாற்றியிருந்தாலும், விடாமல் அழுததால் அவள் மூக்கு அந்த ஆப்பிளின் மீது செர்ரி வைத்ததைப்போல் சிவந்திருந்தன.
“ஹேய்… சின்னு… என்னடா?” என்று அவள் அழுகையை சிலநேரம் பார்த்து பொறுமை இழந்த புகழ் கேட்டான்.
“ஒழுங்கா பார்த்து ட்ரைவ் பண்ண மாட்டியா? உனக்கு ஆக்சிடெண்ட்னு கேள்விபட்டதும் நாங்க எவ்வளவு பதறிட்டோம் தெரியுமா?”
“ஒரு குழந்தை குறுக்க வந்திருச்சு. அதான் ஒன்னும் ஆகலை இல்ல?”
“குழந்தைக்கு எதுவும் ஆகலை தான?” என்று பயத்தோடு கேட்டவளுக்கு ‘இல்லை’ என்று அவன் பதிலளிக்க, ஆசுவாசமடைந்தாள். பின், ஏதேதோ செய்து அவளை சிரிக்க வைத்து அனுப்பினான் புகழ்.
இதுதான் ப்ரார்த்தனா. குழந்தை போல் குணமுடையவள், யாருக்கும் தீங்கு இழைக்க நினைக்காதவள். அவளுக்கு வாழ்வின் ஒரே பற்றுகோள் புகழ் மட்டுமே! புகழ், நான் எந்த க்ரூப் எடுக்க? என்பதில் இருந்து, புகழ், எந்த நெயில்பாலிஷ் எனக்கு நல்லா இருக்கும்? என்பது வரைக்கும் அனைத்திற்கும் அவளுக்கு புகழ் வேண்டும். விரைவில் அவனை கரம் பிடிக்க காத்திருக்கும் பைங்கிளி.
*******
“இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க யங்மேன்?” என்று கேட்டவாறு நுழைந்தார் அந்த மருத்துவர்.
“ஃபீலிங் பெட்டர் நவ் டாக்டர்” என்று புன்னகைத்தான் புகழ்.
“ஹ்ம்ம்ம்… குட்…” என்றபடி அவனை பரிசோதித்த டாக்டர், “ப்ளட் லாஸ் மட்டும் கொஞ்சம் அதிகம். நல்லவேளை, ஃப்ரேக்சர் எதுவும் ஆகலை. உங்க மனைவிகிட்ட சொல்லிடுங்க, பயப்பட எதுவுமில்லை என்று. எங்கே அவங்க? வீட்டுக்கு போயிருக்காங்களோ?” என்று கேட்டார் அந்த மருத்துவர்.
குழப்பத்தோடு அவரைப் பார்த்தவன், “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை டாக்டர்” என்க, “ஆர் யூ ஸ்யூர்? உங்களுக்கு மறதி எதுவும் இல்லையே?” என்று கேட்டார்.
“ஐ ஆம் செண் பர்செண்ட் ஷ்யூர் டாக்டர். திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம் ஐ அம் பியிங் ஹாஸ்பிடலைஸ்ட்”
“ஓ…. வாட்டெவர்! சோ, ஐ திங்க் ஒரு சீக்ரெட் அட்மைரர். இஃப் யூ ஃபைண்ட் ஹேர், கெட் ஹோல்ட் ஓஃப் தட் ஏஞ்சல் யங்க் மேன், அந்த பொண்ணுக்கு அவ்வளவு லவ் உங்க மேல” என்று அவன் தோளில் மெலிதாக தட்டிவிட்டு சென்றார் அவர்.
இதனை கேட்டவனோ பெருத்த யோசனையிக்கு சென்றிருந்தான். உடனே தன் வீட்டினரிடம் தன்னை அட்மிட் செய்தது யார் என்று விசாரிக்க, யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அவனுக்கு ஒரு பெண் பணம் கட்டி கையெழுத்திட்டிருப்பது தெரியவர, அதனை வாங்கிப்பார்த்தவனுக்கு அந்த கிறுக்கலில் இருந்து அது யாருடையது என்று தெரியவில்லை.
அனைத்து வழியும் அடைபட, தனக்கு கிடைத்த ஒரே துருப்புச் சீட்டை வைத்து எவ்வாறு கண்டுபிடிப்பது என்று திட்டமிடலானான் புகழ்.
******
இரண்டு மாதங்களுக்குப் பிறகு,
அன்று ரெனைசன்ஸிற்கு புதிய எம்.டி. பொறுப்பேற்கப்போகிறார். சென்ற மாதமே அவர் வந்திருக்க வேண்டியது. சில தனிப்பட்ட காரணங்களால் அவர் பொறுப்பேற்பது தள்ளிப்போயிருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது அலுவலகத்தினருக்கு.
இன்று அவர் வந்து பொறுப்பேற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்க, அவரை வரவேற்க அனைவரும் வாயிலில் கூடியிருந்தனர், அவர்களுடன் மகிழும். வருபவர் எப்படி இருப்பாரோ? அவரால் கம்பெனியில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ? இதுவரை இருந்த இலகுவான வெர்க்கிங் சிட்டுவேஷன் இனியும் நீடிக்குமா? என்று பல குழப்பத்தை சுமந்து நின்றனர்.
அவர்களின் எண்ணத்திற்கு தடை போடுமாறு வந்து நின்றது அந்த கார். அதிலிருந்து இறங்கியவனைக் கண்டு உச்சபட்சமாக அதிர்ந்து நின்றாள் மகிழ்.
அவன் உடல்நிலை முதன்மையாகப் பட, அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தவள், பின் தன் சூழ்நிலை உரைக்க, ‘ஆண்டவா! உன் சோதனைக்கு எல்லையே இல்லையா? என்னை ஏன் எப்போதும் திரிசங்கு நிலைமையிலேயே நிற்க வைக்கிறாய்?’ என்று கடவுளிடம் கண்ணீர்விட்டாள்.
“வெல்கம் மிஸ்டர். தமிழ்வேந்தன். ஹோப் யூ ஆர் டூயிங் குட்” என்று தன் முன்பு கைநீட்டிய விஷ்வநாதனிடம் தானும் கைகுலுக்கியவன், அவருக்கு விடையளித்துவிட்டு தனக்காக பணியாளர்கள் நீட்டிய பூச்செண்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டான். இதற்குள் சிறிது தன்னை நிலைபடுத்திய மகிழ், அவனிடம் தனது வாழ்த்தையும் கூறிக்கொண்டு தன்னிடத்தை நோக்கி நடந்தாள். தனிமை சிறிது தேவைப்பட்டது அவளுக்கு.
அதுவும் அவளுக்கு வாய்க்காது என்று ஒரு அனவுண்ஸ்மெண்ட் வந்தது, இன்னும் அரை மணி நேரத்தில் புதிய எம்.டி.யுடன் அனைவருக்கும் மீட்டிங் என்று. அதன்படி, அவன் சொன்ன அரை மணி நேரத்திற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னதாகவே வந்தமர்ந்தாள் அவள் மீட்டிங் ஹாலினுள். அவனுக்குத்தான் தாமதம் பிடிக்காதே!
அதேபோல், தன் ப்ரோசீஜர்ஸ் எல்லாம் முடித்தவன் சரியான நேரத்திற்கு மீட்டிங் ஹாலினுள் நுழைய, அங்கே மகிழ் மற்றும் இன்னும் ஓரிருவர் மட்டுமே இருக்க, அவன் முகம் பிடித்தமின்மையைக் காட்டியது. அவன் நுழைந்த சில நிமிடங்களில் அனைவரும் அங்கே கூட, தான் கூற வேண்டியவற்றை ஆரம்பித்தான். அந்த சாராம்சத்தின் முதல் வரியே நேரம் தவறாமையாக இருக்க, ‘உன்னை நானறிவேன்’ என்று அவள் உள்ளம் வருத்தத்துடன் நினைத்தது.
மீட்டிங்கின் முடிவில் இவனுக்கு கீழ் வேலை பார்ப்பது அவ்வளவு கடினமாக இருக்காது என்று அனைவருக்கும் ஒரு நம்பிக்கை எழ, மகிழ்வுடனே கலைந்து சென்றனர். நம் மகிழ் மட்டும், புகழின் ஒவ்வொரு செய்கையையும் ரசிக்கத் துடித்த மனதை அடக்கும் வழி தெரியாமல் அதனை அதட்டி, உருட்டியதில் அவன் பேசிய ஒரு வார்த்தையும் காதில் விழாமல் எழுந்து சென்றாள்.
அவன் வந்த இரண்டு மணி நேரத்திலேயே இப்படி இருக்கிறதே! எவ்வாறு நாம் இங்கே வேலை பார்ப்பது? பேசாமல் ராஜினாமா செய்துவிடலாமா? என்று அவள் யோசித்து, அங்கிளிடம் இதைப் பற்றி பேசும் முடிவோடு எம்.டி.யின் அறைக்குள் நுழைந்தாள்.
அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவள் அங்கே புகழையும் எதிர்பார்த்திருக்க வேண்டுமோ? விஷ்வநாதனுடன் அவனும் அமர்ந்திருக்க, என்ன செய்வதென்று விழித்தவாறு நின்றிருந்தாள் மகிழ்.
அதுவும் சில நொடிகளே!
அவளைக் கண்ட விஷ்வநாதன், “அடடே! வாம்மா மகிழ். நானே உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன். இந்த பொண்ணு என் பால்ய நண்பனோட பொண்ணு சார். நான் அமெரிக்கா போனதுக்கு அப்புறம் கம்பெனியோட என்னை காண்டேக்ட் செய்ய முடியலைன்னா நீங்க இவங்க கிட்ட கேட்கலாம். எ வெரி குட் இன்டீரியர் டிசைனர். எனக்கு மகள் போல. பெயர் அகமகிழ்தினி” என்று அறிமுகப்படுத்தினார்.
அவர் கூறுவதைக் கேட்ட புகழ், மகிழின் புறம் திரும்பி புன்னகையுடன் “ஹலோ! என்றுரைக்க, மகிழும் பதிலுக்கு சிறிது நடுக்கத்துடன் “ஹலோ!” என்றுரைத்தாள்.
அந்த ஒற்றை “ஹலோ”வில் என்ன உணர்ந்தானோ, புகழின் கண்கள் கூர்மையுடன் மகிழை அளவிட்டது.
ஆனால், அதற்குள் மகிழ் அவ்விடத்தை காலி செய்திருந்தாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் விஷ்வநாதனும் விடை பெற்றிட, அதுவரை காட்டாத தன் மனவலியை அப்போது முகத்திற்கு கொண்டுவந்தான் புகழ்.
அவன் காதுக்குள் அந்த ஒரே குரல் தான் ஒலித்துக்கொண்டிருந்தது.
“ஐ லவ் யூ, தமிழ்!”
அந்த வார்த்தைகளின் கணம் தாங்காமல் தன்னிரு கைகளாலும் தலையை தாங்கிக்கொண்டான் காளையவன்.

Nenacchen
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top