உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 8

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: வேலைப் பளுக்கிடையே ஒரு வழியா இந்த எபியை டைப் பண்ணிட்டேன்...:giggle::giggle::giggle:வழக்கம் போல இந்த யூடிக்கும் உங்க கமெண்ட்ட போடுங்க:love::love::love:

IMG_20191114_005201.jpg

ஈர்ப்பு 8


வீட்டிற்கு வந்ததும் ஒரே பரபரப்பு என்னுள்ளே. ஷீலா அந்த மாப்பிள்ளைக்கு சம்மதம் கூறிவிட்டாளா என்று இப்பொழுதே அவளைப் பிடித்து கேட்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்காக அவளின் வருங்காலம் குறித்த கவலையெல்லாம் எனக்கு இல்லை. அவளின் அந்த முடிவு ‘இருவரின்’ வருங்காலத்தை காப்பாற்றக்கூடியது என்பதனால் மட்டுமே அதில் எனக்கு ஆர்வம் இருந்தது.

அவளிடம் மெதுவாக காலையில் நடந்ததைக் பற்றி கேட்டேன்.
அதைக் கேட்டதும் அவள் வெட்கப்பட்டாள் (!!!)


‘ யம்மா தாயே இனிமே இப்படி வெட்கப்படுறதா இருந்தா சொல்லிட்டு பண்ணுமா… அந்த கருமத்தையெல்லாம் பாக்க முடியல’ – இப்போதைக்கு மனதிற்குள் மட்டுமே என்னால் நினைக்க முடியும். ஒருவாறு அவளின் ‘வெட்கத்தையெல்லாம்’ சகித்துக்கொண்டு அவள் கூறவருவதைக் கேட்க தயாரானேன்.

“எனக்கு ‘அவர’ ரொம்ப பிடிச்சிருக்கு…” (2 நிமிட மௌன அஞ்சலி அந்த தியாகிக்கு)

என்னால் நம்ப இயலவில்லை. “யவர பிடிச்சுருக்கு?” - மறுபடியும் உறுதிபடுத்திக்கொள்ள கேட்டேன்.

“அதான்… அந்த ஆனந்த பிடிச்சுருக்கு…”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது… ‘இவ எப்படி இப்படி மாறுனா… இவ அவங்கள (அபி & Mr.Perfect) பாத்த பார்வையெல்லாம் வச்சு பாக்கும்போது அவ்ளோ சீக்கிரம் சம்மதிக்க மாட்டானு நினைச்சா இவ என்னடானா உடனே ஒத்துகிட்டா… என்னவா இருக்கும்… ஒரு வேல அந்த ஆனந்த் அவ்ளோ அழகா இருப்பானோ…’ – இவையெல்லாம் அவள் ஆனந்தை பிடித்திருக்கிறது என்று கூறிய அரை வினாடியில் என் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

‘நீயே உனக்குள்ள குழம்பிக்காம அவ ஏதோ சொல்றா அத கவனி’ – என்று என் மனசாட்சியை மண்டையில் தட்டி அவள் சொல்வதைக் கேட்டேன்.

“அவங்க ரொம்ப பணக்காரங்க…”

‘அட இதனால தான் நீ சம்மதிச்சியா… இந்த ‘காட்ஸில்லா’ எப்பவும் இல்லாத திருநாளா அப்பா சொன்னதுக்கு மண்டைய மண்டைய ஆட்டும்போதே நெனச்சேன்… இந்த மாதிரி ஏதாவது இருக்கும்னு…’ என்று அவளை உள்ளுக்குள் கழுவி ஊற்றிக்கொண்டிருந்தேன்.

“அவருக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்லையாம். அவரு தான் அந்த சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசாம். கல்யாணம் முடிஞ்சவோடனே எப்படியாவது அதயெல்லாம் என் பேருக்கு மாத்திடனும்…” என்று அவள் அவளுடைய ‘பிளான்’னையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

‘அட இந்த ‘காட்ஸில்லா’ இப்போவே இப்படி பிளான் போடுது… கல்யாணம் ஆனா அவ்ளோ தான்.. அந்த குடும்பம் உறுப்பட்டுடும். எப்பா ஆனந்த் இந்நேரம் எங்க இருக்கியோ… உனக்கு 1000 டைம்ஸ் தேங்க்ஸ்… உன்னால என்னோட அபியும் Mr.Perfectஉம் சேஃப்… ஆனா இவங்களையெல்லாம் காப்பாத்திட்டு நீயே அந்த ‘புதைக்குழி’ல விழப்போறத நெனச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு… :cautious::cautious::cautious:’ என்று அந்த முகம் தெரியாத நபருக்காக பாவப்பட்டேன்.

இரவு க்ரிஷிடம் நடந்ததையெல்லாம் சொன்னேன். அவனிற்கு Mr.Perfect பற்றி தெரியும். ஆம் அவனிற்கு மட்டுமே நான் ‘Mr.Perfect’ஐ சைட்டடிப்பது தெரியும். :giggle::giggle::giggle:

ஆனந்திற்கு நான் இரங்கல் தெரிவித்ததைக் கேட்டு க்ரிஷ் நான்றாக சிரித்தான். பின் சில நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு இருவரும் முகநூலிலிருந்து விடைப்பெற்றோம். நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.

அந்த வாரம் முழுவதுமே நான் சந்தோஷமாக இருந்தேன். ஒரு வழியாக அந்த ‘காட்ஸில்லா’விற்கு திருமணம் நடக்க போகிறது. மேலும் இந்த வீட்டை விட்டு கூடிய விரைவில் சென்றுவிடுவாள். இனிமேல் என் வாழ்நாளில் அவளைப் பார்க்கவே போவதில்லை என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
என்ன தான் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு ஓரத்தில் நேஹாவின் காதல் (!!!) என்னைக் குடைந்துக்கொண்டே இருந்தது. ஆனால் சொல்வதை கேட்கமாட்டேன் என்றிருப்பவளை என்ன தான் செய்வது. கடவுள் விட்ட வழி என்று அந்த சிந்தனைக்கு ஓய்வளித்தேன்.


ஒரு நாள் மாலை எந்த வேலையும் இல்லாமல் ஓய்வாக இருந்ததால் மொட்டைமாடிக்குச் சென்றேன். மாலை வேளையின் குளிர்ந்த காற்று என் உடலில் பட்டபோது சிலிர்ப்பாக இருந்தது. அந்த காற்று என் முடியைக் கலைத்து விளையாடுவதை அமைதியாக கண்ணை மூடி ரசித்துக்கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவர்களுடன் இங்கு விளையாடிய ஞாபகம் வந்தது. கூடவே அவர்களின் ‘ராகுல் அண்ணன்’னின் நினைவும் தான். இன்று அவன் வருவானோ என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் இன்றும் என்னை ஏமாற்றினான். அந்த சிறுவர்களும் தேர்வின் காரணமாக வரவில்லை.

சிறிது நேரத்திலேயே போர் அடித்ததால் நான் என் காதில் ‘இயர் போன்’னை வைத்து அதில் ஓடிக்கொண்டிருந்த பாடலில் மூழ்கிப்போனேன். மண்வாசனையிலும் ஈரக்காற்றிலும் கூடவே காதில் ஒலித்துக்கொண்டிருந்த அந்த பாடலிலும் நான் என்னையே மறந்தேன்.

அவ்வப்போது கன்னத்தில் விழும் கூந்தலை ஒதுக்கிவிடும் போது லேசாக கண்ணைத் திறந்து பார்த்தேன். அப்போது பக்கத்தில் யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவனைப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்காமல் முழுதாக கண்ணைத் திறந்து பார்த்தேன். அவனே தான் (Mr.Perfect:love::love::love:)… அவனின் கைப்பேசியில் ‘பிஸி’யாக இருந்தான்.

எனக்கு பக்கவாட்டில் அவன் நின்றிருந்ததால் அவனின் வலுவான புஜங்கள் தான் என் பார்வையில் முதலில் விழுந்தன. இறுக்கி பிடித்த டீ-ஷர்ட்டின் உபயத்தால் தெரிந்த அவனின் திண்ணிய மார்பும் திரண்ட தோள்களும் என்னை மயக்கியதென்னவோ உண்மை தான்.

2 நிமிடமானாலும் அவனைத் தான் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுடன் இருக்கும் இந்த தனிமை எனக்கு புதிது. அந்த சமயம் என் ‘இயர் ஃபோன்’னிலிருந்து கசிந்த பாடலும் என் மனநிலையை ஒத்து இருந்தது.

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா


நான் ஓயாத வாயாடி பேசாம

பொட்டுச் செடி நான் முட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே
உன்னோட பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு

கண்ணாடி பாத்திடவும் என்னோட தேகம்
மாறியே போச்சு போச்சு

ம் நீ லேசாக பார்த்தாலும் லூசாகிப் போறேன்
பச்ச நெருப்பா பத்திகிடுறேன்

விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும்
போட்டிப் போட்டுக் கொல்ல

போகாத கோயிலுக்கும் நான் போவேன்
பூச பண்ண தான் என்ன சொல்ல

என்னடா ஹோ என்னடா

என்னடா என்னடா என்னடா என்னடா

ஹோ என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும்

வால் பையன் நீதானடா

இந்த பாட்டை கேட்கும்போது என்னால் வெட்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘நானா வெக்கப்படுறேன்…:giggle::giggle::giggle: இதெல்லாம் வரலாற்றுல பொறிக்கப்பட வேண்டிய விஷயம்…:p:p:p’ என்று என்னை நானே கலாய்த்துக்கொண்டேன்.

இவ்வளவு நடந்தும் அவன் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.
‘கொஞ்சமாச்சும் என்ன கண்டுக்கறானானு பாரு… அந்த மொபைல்ல அப்படி என்ன தான் இருக்குமோ…அதுகூடவே குடும்பம் நடத்திட்டு இருக்கான். இவனெல்லாம் என்ன பாக்க வச்சு லவ் பண்ண வைக்குறதுக்குள்ள நான் கிழவியாகிடுவேன் போல…’


அவனின் கவனத்தை கலைப்பதற்காக அவனின் முன்பு நடந்தேன். அப்படியும் அவன் கவனிக்காததால் வேண்டுமென்றே சத்தமாக போனில் பேசுவது போல பேசி அவநின் கவனத்தை ஈர்க்க முயன்றேன். ஆனால் இவற்றிக்கெல்லாம் அசைவேணா என்பது போல தொடர்ந்து கைப்பேசியிலேயே பேசிக் கொண்டிருந்தான்

நானும் இன்னும் பல வழிகளில் அவனை ஈர்க்க நினைத்தும் அவன் என் பக்கம் கூட திரும்பவே இல்லை. கோபத்தில் அங்கிருந்து வேகமாக வீட்டிற்கு வந்து விட்டேன்.

அன்று இரவு என்னால் சரியாக உறங்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை கண்ணை மூடும்போதும் அவனே தெரிந்தான். அவன் மட்டும் வந்தால் பரவாயில்லை… கூடவே அந்த ‘காட்ஸில்லா’வும் வந்தாள்.

‘ச்சே கருமம் தூங்கும்போதும் இந்த மூஞ்சிலயா முழிக்கனும்…’ என்று தலையில் அடித்துக்கொண்டு எழுந்தேன்.

பின்பு தூக்கம் வராததால் முகநூலைத் திறந்தேன். அதிலிருந்த செய்தி ஊட்டல்களுக்கெல்லாம் ‘லைக்’ தட்டிக்கொண்டே வந்தேன். அப்போது நம் தலைவரின் மீம்ஸ்களுக்கிடையே அழகாய் இருந்தது அந்த ஹைக்கூ…

ஒப்பனை கலைத்த
அழகு பெண்….
சருகு….


‘அட அட அட என்ன ஒரு ரசனை… ரசிகன் டா க்ரிஷ் நீ…. ஆனா இத எங்க இருந்து சுட்டனு தான் தெரியல‘ என்று மனதிற்குள் அவனை மெச்சிக்கொண்டேன்.

அவனின் பெயருக்கு அருகிலிருந்த பச்சை நிறக் குறியீடு அவன் ஆன்லைனில் இருப்பதைக் காட்டியது. உடனே அவனின் உள்பெட்டியைத் தட்டிவிட்டேன்.

நான் : ஹாய்:):):)

க்ரிஷ் : இன்னும் தூங்கலயா நீ?

‘இவன் ஒருத்தன் இதுக்கும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவான்…’

நான் : ஹான்… தூக்கம் வரல.. நீ என்ன பண்ற?

க்ரிஷ் : ஆபீஸ் ஒர்க் இப்போ தான் முடிச்சேன்…

நான் : ஓ… இப்போலாம் fbல போஸ்ட் போடுறது கூட ஆபீஸ் வேலையோ…:p:p:p

க்ரிஷ் : அது சும்மா… அப்பறம் இன்னிக்கு என்ன நடந்துச்சுது… உன் Mr.Perfectஅ பாக்கலியா நீ…

நான் : அதெல்லாம் நான் நல்ல தான் பாத்தேன். அவன் தான் என்ன கண்டுக்கவே இல்ல…:cautious::cautious::cautious:

க்ரிஷ் : அவன் தான் உன்ன பாக்க மாட்டிங்குறான்ல.. அப்போ எதுக்கு திரும்ப திரும்ப அவன பாக்குற நீ…

நான் : அதெல்லாம் உனக்கு புரியாது… என்ன இருந்தாலும் என்னோட ஃபர்ஸ்ட்ர் கிரஷ்:love::love::love: அவன்… ஹே உனக்கு தெரியுமா இன்னிக்கு என் ஆளு வைட் டீ-ஷர்ட்ல சூப்பரா இருந்தான். அவனோட ஆர்ம்ஸும் ஃபிட்டான பாடியும்…

க்ரிஷ் : யம்மா தாயே போதும் நீ ஜொள்ளு விட்டது… உன் ஆள நெனச்சுட்டே போய் தூங்கு…. குட் நைட்…

நான் : உனக்கு பொறாமை:p:p:p


க்ரிஷ் : :sneaky::sneaky::sneaky:

அவனின் ஸ்மைலியைத் கண்டு சிரித்துவிட்டு படுக்கச் சென்றேன்.அதன் பிறகு நன்கு தூங்கினேன்.இந்த நிம்மதியான உறக்கத்திற்கு காரணம் தூக்கத்திற்கு முன்பு பேசிய க்ரிஷா இல்லை கனவில் தோன்றும் அவனா????

ஈர்ப்பான்(ள்)….

 
Advertisement

New Episodes