உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 43

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்:love::love::love: எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்:love::p;) அடுத்த எபி இதோ:giggle::giggle::giggle: காதலர் தின ஸ்பெஷல்... பெரிய எபி:):):) படிச்சுட்டு பெருசா கமெண்ட் பண்ணுங்க:giggle::giggle::giggle:

IMG_20200214_142933.jpg

ஈர்ப்பு 43

அன்று இரவு மகிழ்ச்சியான மனநிலையில், ராகுலுக்கு அழைத்தேன். இரண்டு முறை முயற்சித்தும் அவன் எடுக்கவில்லை. வீட்டிலிருந்து சென்ற போதே அவன் யோசைனையுடனே சென்றது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

பகலிலும் இரு முறை அவனிடம் பேச முயற்சித்து, என் முயற்சி தோல்வியடைந்ததும், வேறு ஏதோ வேலையாக இருப்பான் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். ஆனால் இப்போதும் அவன் எடுக்காதது எனக்குள் உறுத்தியது.

‘என்னவா இருக்கும்…:rolleyes::rolleyes::rolleyes: அப்பா ஏதாவது கண்டிஷன் போட்டுட்டாரா… :unsure::unsure::unsure: அப்படி ஏதாவதுனா என்கிட்ட சொல்லிருக்கலாமே ..’ என்று யோசித்துக் கொண்டே அவனிற்கு மீண்டும் அழைத்தேன். மறுபடியும் எடுக்கவில்லை அவன்.

‘ம்ப்ச்… இப்போ எதுக்கு போன எடுக்காம ஓவரா சீன் போடுறான்:sneaky::sneaky::sneaky:

இவ்வாறாக நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து செய்தி வந்தது. அவசர அவசரமாக எடுத்துப் பார்த்தேன்.

“சாரி பப்ளி… இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்… நாளைக்கு பேசுறேன்…” என்று அனுப்பியிருந்தான்.

‘இவ்ளோ நேரம் என்ன வேலையா இருக்கும்…:unsure::unsure::unsure:

மனது கேளாமல் மறுபடியும் முயற்சித்தேன். முதல் ‘ரிங்’கிலேயே எடுத்த அவன், “ப்ச்… ஒரு தடவ சொன்னா கேட்கமாட்டியா… நான் தான் பிஸியா இருக்கேன்… அப்பறம் பேசுறேன்னு சொன்னேன்ல…” என்று பொங்கினான்.

எனக்கோ ஒரு நொடி அவனின் திட்டில் அவனிற்கு எதற்காக அழைத்தேன் என்பதையே மறந்து அலைப்பேசியைக் காதிலிருந்து கூட எடுக்க தோன்றாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நீண்ட பெருமூச்சு அந்த பக்கத்திலிருந்து கேட்டது.

“சாரி நதி… நான் கொஞ்சம் ஒர்க் டென்ஷன்ல இருக்கே … நாளைக்கு கண்டிப்பா பேசுறேன்…” என்றவாறு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

முழுதாக ஐந்து நிமிடங்கள் ஆனது, அந்த அதிர்ச்சிலிருந்து வெளிவர….

‘ச்ச… இப்படி கத்துறான்… நானும் எதுவும் பேசாம அமைதியா இருந்துருக்கேன்…:sneaky::sneaky::sneaky:” என்று என்னையே நொந்துக் கொண்டேன்.

‘பப்ளி கூட ‘நதி’யா மாறிடுச்சு…:(:(:(’ என்று புலம்பியபடி உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் காலை, வேகமாக எழுந்தேன். ‘இன்னைக்கு வாக்கிங் போறப்போ அவன்கிட்ட பேசவே கூடாது… என்னாச்சோன்னு கவலையா கால் பண்ணா… ஒரு பச்ச பிள்ளைன்னு பார்க்காம திட்டவா செய்யுற... இனி நீயா என்கிட்ட பேசி என்ன சமாதானப்படுத்துற வரைக்கும், உன்கிட்ட பேச மாட்டேன்… :sneaky::sneaky::sneaky: போடா ராகு…’

எப்போதையும் விட இன்று சுறுசுறுப்பாக இருந்தேன். (யாராயாவது திட்டனும்னா மட்டும் பிரிஸ்கா கிளம்பிட வேண்டியது…:D:D:D)

நான் நடக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே அவனும் வந்து சேர்ந்தான்.

“ஹாய் பப்ளி…” என்று எதுவுமே நடக்காத மாதிரி பேசினான்.

நான் எதுவும் கூறாது நடப்பதிலேயே கவனத்தை செலுத்தினேன்.

“என்ன பப்ளி செம ஹாட் போல;););)…” என்றான் குறும்பு நிறைந்த குரலில்.

‘அடப்பாவி பார்க்க ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மாதிரி இருந்துட்டு, இப்படி டபுள் மீனிங்ல பேசுறியா…:eek::eek::eek:’ உள்ளுக்குள் நினைத்தாலும் வெளியே கூறவில்லை.

“சாரி டா பப்ளி… நேத்து திடீர்னு ஒரு கேஸ் வந்ததால, அந்த டென்ஷன்ல கத்திட்டேன்…” என்றான் சட்டென்று இரங்கிய குரலில்.

அதற்கும் ஒன்றும் கூறவில்லை நான்.

“ஓகே பப்ளி… நான் சரண்டர்… உன்ன மலையிறக்க…” நான் முறைத்ததும், “:giggle::giggle::giggle: உன்ன சமாதப்படுத்தன்னு சொல்ல வந்தேன்… டங்க் ஸ்லிப்பாகிடுச்சு…:giggle::giggle::giggle: சரி சொல்லு உன்ன சமாதானப்படுத்த என்ன செய்யனும்…”

இப்படி விதவிதமாக அவன் கேட்டும் ஒன்றும் கூறாமல் அவனை அலையவிட்டுக் கொண்டிருந்தேன். வெளியில் விறைப்பாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவனின் செய்கைகளை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

இதோ நடைப்பயிற்சி கூட முடியப்போகிறது. அப்போது திடீரென்று என் கைப்பிடித்த அவன், என்னை ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான். புருவம் சுருக்கி பார்த்தேனே ஒழிய பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உள்ளுக்குள், அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆர்வம் எழுந்தது.

“ம்ப்ச் பப்ளி இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி என்ன அலைய விடப்போற…” என்றான் சலிப்பாய்…

“நான் உங்கள ஒன்னும் செய்ய சொல்லலையே…” என்று அந்நாளில் முதல் முறையாக வாயைத் திறந்து பேசினேன் அவனிடம்.

“ஸ்ஸ்ஸ் அதான் உன் கோபம் போக நான் என்ன செய்யனும்னு கேட்டேனே… ப்ளீஸ் பப்ளி என் சிஷுவேஷனையும் புரிஞ்சுக்கோ…” என்று கெஞ்ச…

‘ம்ம்ம் பாவம் ரொம்பத் தான் கெஞ்சுறான்…:LOL::LOL::LOL:’ என்று சற்று மனமிரங்கிய நான், அவனைப் பார்த்து, “அப்போ நேத்து என்ன கஷ்டப்படுத்துனதுக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்…” என்றேன் நக்கலாக…

“எனக்கு ரொம்ப கஷ்டமான பனிஷ்மெண்டா இல்லாம, ஹக்… கிஸ்ஸுனு ஈஸியான பனிஷ்மெண்டா கொடு பப்ளி…;);)

:mad::mad::mad: இங்கயே ஃபிஃப்டி டைம்ஸ் தோப்புக்கரணம் போடுங்க… அதான் உங்களுக்கான பனிஷ்மெண்ட்…:p:p:p” என்றேன்.

அவன் முதலில் அதிர்ந்தாலும் பின் சிரித்துக்கொண்டே தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான். சிபிஐ ஆபீஸராக பெரிய பதவியில் இருப்பவன், தான் செய்யும் செயலால் பிறர் தன்னை பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்திற்காக நடுரோட்டில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தது என்னைக் கர்வத்தில் ஆழ்த்தியது.

‘சோ ஸ்வீட்…:love::love::love:’ என்று கொஞ்சினேன் அவனை…. மனதிற்குள் தான்…

“ஃபார்ட்டி எயிட்… ஃபார்ட்டி நைன்… ஃபிஃப்டி…” என்று மூச்சு வாங்க எழுந்தான் அவன்.

சிரிப்புடன் அவனை நோக்கி செல்ல முயன்றபோது, திடிரென்று கீழே விழுந்தேன். வலியில் கண்களை மூடிய நான், மீண்டும் கண்களைத் திறந்தபோது என் அறையில் இருந்தேன்.

ஒரு நொடி எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க… அடுத்த நொடியில் நிகழ்ந்ததனைத்தும் தெளிவாகியது. அவனை நினைத்தபடியே உறங்கியதால், கனவிலும் வந்து என்னை தொல்லை (ஆனந்த தொல்லை:love::ROFLMAO:) செய்தான்.

‘ச்சே கனவா… ஹ்ம்ம் இது மாதிரியே நிஜத்துலயும் நடத்திக் காட்டுறேன்…:LOL::LOL::LOL:’ என்று எனக்குலேயே சவால் விட…

என் மனச்சாட்சியோ, ‘நீயா…:sneaky::sneaky::sneaky:’ என்று கேலிப் பார்வையில் என்னை அடக்கியது.

நேரமாகியதால் சீக்கிரமாக கிளம்பி என் அறையிலிருந்து வெளியேறியபோது, என்னைத் தடுத்தது என் அம்மாவின் குரல்…

“எங்க டி போற...”

“ம்மா… போகும் போதே எங்க போறன்னு கேக்குற… :sneaky::sneaky::sneaky:

“ப்ச் உன்கூட கதையடிக்க எனக்கு நேரமில்ல… உங்க அப்பா அஞ்சு மணியிலயிருந்து வாசலுக்கும் ரூமுக்குமா நடந்துட்டு இருக்காரு… அநேகமா உனக்காக தான் வெயிட் பண்றாருன்னு நினைக்கிறேன்… அதனால இன்னைக்கு வெளிய போகாம அடக்க ஒடுக்கமா இரு…”

‘அச்சோ… இப்போவும் அவனைப் பார்க்க முடியாதா:(:(:(…’ என்ற ஏக்கத்தில் என் அறைக்குத் திரும்பினேன்.

அன்று ‘பொடிக்’கிலும் வேலைகளில் கவனமில்லாது தடுமாறினேன். அதைக் கண்ட சாண்டி, “ஏன் டி ரெஸ்ட்லெஸா இருக்க… உடம்பு சரி இல்லையா…” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல டி…” என்றேன் என் ஏக்கத்தை மறைத்தவாறே…

அவளும் ஏதோ புரிந்துக் கொண்டாள் போல… “ நீ வேணா வீட்டுக்கு கிளம்பு டி… இங்க நான் மேனேஜ் பண்ணிக்குறேன்…” என்றாள்.

“ஹே ஐ’ம் ஓகே… நான் இல்லாம நீ மட்டும் எப்படி சமாளிப்ப…”

“ம்ப்ச் ஓவரா சீன் போடாத… ஒழுங்கா கிளம்பு டி…” என்று என்னைத் திட்டி அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்ததும், என் அம்மாவின் கேள்விகளுக்கு ஏதோ சமாளிப்பாய் பதில் கூறினேன். கிட்டத்தட்ட ஒரு வாரம், இரவு நேரங்களில் சரியான உறக்கம் இல்லாததால், அன்று மதியம் நன்கு உறங்கினேன்.

மாலையும் அவனின் அழைப்பிற்காக காத்திருந்து, நேரம் தான் கழிந்தது. மனமோ கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.

‘என்கிட்ட பேசாம முழுசா ஒரு நாள் ஆகப் போகுது…:sneaky::sneaky::sneaky: இன்னும் என்ன சமாதானப்படுத்தனும்னு தோணவே இல்லையா அவனுக்கு… ச்சே அவனுக்காக இன்னைக்கு ஃபுல்லா வெயிட் பண்ணேன்ல என்ன சொல்லனும்…:sneaky::sneaky::sneaky:

‘உன்ன யாரு வெயிட் பண்ண சொன்னது…:LOL::LOL::LOL:’ என் மனச்சாட்சி முதல் ஆளாய் கிண்டல் செய்ய…

‘அதான… நான் எதுக்கு அவனுக்காக வெயிட் பண்ணனும்… அவன் பேசலைனா எதுக்கு கவலப்படனும்… அவன் பேசலனு யாரும் இங்க சோர்ந்து போய் இருக்கல…:sneaky::sneaky::sneaky:’ என்று என் மனச்சாட்சி கேட்ட கேள்விக்கு வேகமாக ஒரு பதிலை அளித்துவிட்டு, மொட்டைமாடிக்குச் சென்றேன், என் மனநிலையை மாற்ற…

மாலை நேரத்து ஜில்லென்ற காற்று என் மேனியைத் தழுவ, சோர்ந்திருந்த மனதில் உற்சாகம் பிறந்தது தானாக… என் ‘இயர் ஃபோனை’ எடுத்து காதிற்குள் பொருத்தி அந்த ரம்மியமான பொழுதிற்கு மேலும் அழகு சேர்க்க, மனதை மயக்கும் பாடல்களை ஒலிக்க விட்டு என் மனதை சமன் செய்ய முயன்றேன்.

எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்


தேன் முத்தங்கள்
மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்


யாரோ யாரோ கனாக்களில் நாளும்
நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில்
வரும் ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்


பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே

நான்தான் இங்கே விசிறி

பாடலைக் கேட்க கேட்க என் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது…

புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின்
வந்தேன் பெரும் காசோலைகள்
பொன்மாலைகள் வேண்டாமே
நீ வேண்டுமென்றேன் உயிரே


நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்

ஒரு தூசாக மாறி போக கண்டேன்

இப்போது கோபம் முற்றிலும் குறைந்து போனது. மனமோ மீண்டும் அவனையே தேடியது… (மானம் கேட்ட மனம்…)

உன்னை பார்க்காத நான் பேசாத
நான் என் வாழ்வில் நீ நான் என்று
நான் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன்
நான் ஆனந்த பெண்தான் உயிரே
ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம் என்று
நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்


தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்


உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே
பிழை கண்டேன் உன்
அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும்
பேராண்மையை


நானும் கூட சேர்ந்து அனுபவித்து பாடியபடியே திரும்பினேன். அங்கு சிரிப்புடன் என்னையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

சற்று முன் கேட்ட பாடலும் அந்த ஏகாந்த சூழ்நிலையும் அவன் நின்றிருந்த விதமும் என்னிடம் சிறு தடுமாற்றத்தை தோற்றுவித்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவனை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றிருந்தேன். சில நொடிக்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், நான் தான் என் பார்வையை மற்றைய பக்கம் திருப்ப வேண்டியதாயிற்று…

மறுபக்கம் திரும்பிய நான், ‘நதி மா அவன் வந்து பேசுனதும் உடனே பேசிடக்கூடாது…’ என்று மனதிற்குள் எனக்கு நானே எச்சரிக்கை செய்து கொண்டேன்.

ஆனால் என் மனதோ நான் சொல்வதைக் கேட்டால் தானே… அவன் வந்ததும் தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்து, அவனிற்கு ஒன்றும் இல்லை என்ற செய்தியை முதலில் என் மூளைக்கு அனுப்பியது. இதோ இப்போது அவனிற்காய், அவன் என்னிடம் பேசப் போகும் வார்த்தைக்காய் காத்திருக்கத் துவங்கியது….

“ஹே பப்ளி என்ன ஒரே சந்தோஷமா இருக்க போல… என் மேல லவ்ஸ் அதிகமாகி பாட்டா பாடி தள்ளுற போல…;););)

நான் அவனை முறைத்ததும், “கூல் பப்ளி… ஏன் இவ்ளோ ‘ஹாட்’டா இருக்க…;););)” என்றான்.

‘ஹ்ம்ம் கனவுல வந்த மாதிரியே பேசுறானே… இப்படியே பேசிட்டு இருந்தானா இன்னும் டூ செகண்ட்ஸ் கூட என் கோபம் இருக்காதே…:rolleyes::rolleyes::rolleyes:

“இப்போ என்ன… நேத்துலயிருந்து உன்கிட்ட எதுக்காக பேசலனு உனக்கு தெரியனும் அதான…”

“ம்ம்ம் நேத்து ஏன் ரெஸ்ட்லெஸா இருந்தீங்கன்னும் தெரியனும்…” என்று சற்றுமுன் எடுத்த உறுதியை சத்தமே இல்லாமல் மனதிலிருந்து அழித்துவிட்டு அவனுடன் பேசினேன்.

அவன் சிறிது யோசிக்கவும், “எங்க அப்பா ஏதாவது சொன்னாரா… உ…உங்க வேலைய காரணமா சொல்லி மறுத்துட்டாங்களா…” என்றேன். இந்த எண்ணம் நேற்றிலிருந்தே எனக்குள் வியாபித்திருந்தது.

லேசாக சிரித்த அவன், “இருந்தாலும் என் மாமாவ இவ்ளோ டெரர் பீஸா நீ நெனச்சுருக்க கூடாது…:D:D:D” என்றான்.

அவன் ‘மாமா’ என்று அழுத்தமாக கூறியதிலிருந்தே அவன் யோசனைக்கான காரணம் அது அல்ல என்று புரிந்தது.

“வேற என்ன தான் ரீசன்…:unsure::unsure::unsure:

“ஹ்ம்ம் இது தான்…” என்று ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.

அதில் ஒரு சிறுவன் காலை மடித்து அதில் முகம் புதைத்திருக்க, அருகில் ஒரு சிறுமி அவனை சமாதானப்படுத்துவது போலிருந்தது. சற்று நேரம் உற்று பார்த்த நான், “ஹே இது நான் தான…” என்றேன்.

“ம்ம்ம்… இந்த இன்சிடெண்ட் உனக்கு நியாபகம் இருக்கா…”

“ம்ம்ம் இருக்கு… ஒரு நாள் பார்க்ல விளையாண்டுட்டு இருந்தப்போ, அங்க ஒரு பையன் ரொம்ப நேரமா குனிஞ்சே இருந்தான்…. அவன் அழுதுட்டு இருக்கான்னு நெனச்சு அவன்கிட்ட பேசினேன்… ஆனா என்ன பேசினேன்னு தான் தெரியல… அதுக்கப்பறம் எங்க அம்மாகிட்ட போய் ‘நானும் பெரிய பிள்ள ஆகிட்டேன்…. பார்க்ல இருந்த பையன சமாதானப்படுத்துனேன்…’ன்னு பெருமையா சொன்னேன்…:):):)"

‘ஹே நீ ஏன் சின்ன பையன் மாதிரி அழுதுட்டு இருக்க… உன்கூட யாரும் பேசலையா… நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத… படிச்சு பெரிய ஆளானா எல்லாரும் வந்து பேசுவாங்கன்னு ஒரு ஆண்ட்டி சொன்னாங்க… நீயும் படிச்சு பெரிய ஆளாகு… அப்போ எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க… ஓகேவா… அத விட்டுட்டு இப்படியெல்லாம் அழுதா எல்லாரும் உன்ன பேட் பாய் சொல்லுவாங்க… எங்க இப்போ சிரி பார்ப்போம்…’ – “இது தான நீ சொன்னது” என்றான்.

“ஹே இது எப்படி உங்களுக்கு தெரியும்…:oops::oops::oops:” என்றேன் ஆச்சரியத்துடன்.

அவனோ மற்றோரு புகைப்படத்தைக் காட்டினான். அதில் நான் அந்த சிறுவனின் மறுபக்கம் திரும்பியிருக்க, அவனோ நிமிர்ந்து என்னைப் பார்த்திருந்தான். அந்த சிறுவனின் முகத்தைப் பார்த்து இனிதாக அதிர்ந்திருந்தேன். அது அவனே ராகுல். ஆனால் அவன் கண்களில் ஏதோ வலி, சொல்லமுடியாத ஏக்கம் இருந்ததைப் போன்று எனக்கு தோன்றியது.

அவனைத் திரும்பிப் பார்த்த போது அதே வலி சுமந்த பார்வையைக் கண்டு என்னவென்றே தெரியாதபோதும் அவனிற்காக வருந்தினேன்.

அவனோ அருகிலிருந்த எதையும் உணராதது போல பேசினான். “எனக்கு சின்ன வயசுலயிருந்தே என் அப்பான்னா ரொம்ப பிடிக்கும்… பசங்க எல்லாரும் அம்மா பிள்ளையா இருக்குறப்போ நான் மட்டும் அப்பா பிள்ளையா தான் இருந்தேன். எனக்கு காலைல ஸ்கூல் கிளப்புறதுலயிருந்து நைட் தூங்க வைக்கிறது வரைக்கும் என் அப்பா வேணும்… அழகா போயிட்டிருந்த எங்க வாழ்க்கைல அந்த நாளும் வந்துச்சு… என் அப்பாவ எங்கிட்ட இருந்து பிரிச்ச நாள்… என்னோட பதினாலவது வயசுல எனக்கு ரொம்ப பிடிச்ச என் அப்பாவ இழந்தேன்… அதுக்கப்பறம் சுத்தி நடந்த எதுவும் என் மனசுல பதியல… என் அப்பா இனிமே என்கூட இருக்கமாட்டாருன்னு மட்டும் தான் என் மனசு சொல்லிட்டே இருந்துச்சு…”

அவனின் குரல் கரகரக்க, அவனின் கைகளை ஆதரவாக அழுத்தினேன். அவன் கஷ்டத்தை உணர்ந்த என் கண்களிலும் கண்ணீர் சுரந்தது.

அவன் தொடர்ந்தான். “அம்மாக்கு அந்த வீட்டுல இருந்தா அப்பா நியாபகமா இருக்குன்னு வீட்டை மாத்தி இந்த வீட்டுக்கு வந்தோம். அம்மா அவங்களையே ஒழுங்கா பார்த்துக்காதப்போ என்ன எப்படி பார்த்துப்பாங்க… என்ன அவங்களும் கண்டுக்கல… ரொம்ப ஒடுங்கியே இருந்தேன்…. யாருக்கிட்டயும் பேசாம, ஸ்கூல் கூட போகாம, அந்த வயசுலேயே தனிமையை கதின்னு இருந்தேன்…. அப்போ தான் ஏஞ்சல் மாதிரி வந்தா ஒரு குட்டி பொண்ணு… என் வாழ்க்கை இப்போ உருப்படியா இருக்குனா அதுக்கு காரணம் அவ தான்…”

இதைக் கூறிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தான். நானும் ஆறுதலாக சிரித்து அவன் தொடர்ந்து பேச ஊக்கினேன்.

“அவ அப்போ சொன்னது என் அப்பாவே வந்து சொன்ன மாதிரி இருந்தது. ஃபர்ஸ்ட் அவ என்கிட்ட தான் பேசுறான்னு நான் நெனைக்கல… அவ என்ன நெனச்சு சொன்னான்னு தெரியல… ஆனா நான் அவ சொன்னதை தான் என் லைஃபோட மோட்டோவ எடுத்துக்கிட்டு என் லைஃப புதுசா ஸ்டார்ட் பண்ணனும்னு டிசைட் பண்ணேன்… முடிவெடுத்ததுக்கு அப்பறம் அவளுக்கு தேங்க் பண்ண நிமிர்ந்து பார்த்தா, அவ அவங்க அம்மா கூப்பிட்டாங்கன்னு கிளம்பிட்டா… நானும் அவள பார்க்கல… அவளும் என்ன பார்க்கல…”

இதைக் கேட்டு எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருபுறம் அவன் கவலைகளை நினைத்து கண்கள் கண்ணீர் சிந்த.. மறுபுறமோ அன்றே என்னவனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன் என்ற உவகையும் இருந்தது. அது என் வாழ்வில் மிக அற்புதமான தருணம்….

என் கண்ணீரைக் கண்டு அவன் என்னை அணைக்க… அவனிற்கு ஆறுதலாக நானும் அந்த அணைப்பில் பொருந்தினேன்…. அந்த அணைப்பில் காமமோ, காதலோ இல்லை… சிறு வயதில் தவறவிட்ட பாசத்தை பெறத் தவிக்கும் சிறுவனின் உணர்வே அங்கு நிறைந்திருந்தது….

இப்படியே இருந்தால் அவன் மேலும் மறுகுவான் என்பதால் அவனை மாற்ற எண்ணி, “ஹ்ம்ம் பாரு டா அப்போ நான் உனக்கு அட்வைஸ் பண்ணிருக்கேன்… இப்போ பழிக்குப் பழி மாதிரி நீ எனக்கு அட்வைஸ் பண்ற…:D:D:D” என்றேன்.

அதைக் கேட்டதும் லேசாக சிரித்தான்.

“ஆமா இந்த போட்டோ யாரு எடுத்தது…:unsure::unsure::unsure:

“ஹ்ம்ம் நீயே கெஸ் பண்ணு:p:p:p

“நோ வே… இந்த ஒரு வாரமா என் மூளை ரொம்ப வேலை செஞ்சு டையர்டா இருக்கு… சோ இந்த கண்டுபிடிப்பெல்லாம் இப்போ வேணாம்…:sneaky::sneaky::sneaky:

:D:D:D என் மாமா தான் எடுத்துருக்காரு…”

“என்னாது அப்பாவா:oops::oops::oops:” அடுத்தக்கட்ட அதிர்ச்சி எனக்கு…

“ஏன் இவ்ளோ ஷாக்… நேத்து உங்க அப்பா ரூமுக்குள்ள போய் இதை தான் பேசிட்டு இருந்தோம்…”

நான் எதுவும் பேசாமல் சிலையாகி இருக்க, அவனோ என்னை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தான்.

“அப்பா கிட்ட என்ன பேசுனீங்க…”

“ஹ்ம்ம்… உங்க அப்பா உன் மேலயும் உன் அண்ணன் மேலயும் நிறைய பாசம் வச்சுருக்காரு… ஆனா எங்க பாசத்த வெளிய காட்டுனா நீங்க தவறான வழில போய்டுவீங்களோன்னு பயந்து தான் இவ்ளோ நாள் பாசத்த வெளிகாட்டிக்கலயாம்…. இந்த இன்ஸிடன்ட் நடந்தப்போ அவரும் அங்க தான் இருந்தாராம்… நீ பேசுனத பார்த்து அவருக்கு ஒரே சந்தோஷமாம்… அவரோட பொண்ணு அந்த வயசுலேயே எவ்ளோ தெளிவா யோசிக்கிறான்னு… அதான் அந்த மொமெண்ட்ட போட்டோ எடுத்தாராம்… அவருக்கும் அந்த பையன் யாருன்னு தெரியாதாம்… இப்போ தான் ரீசண்டா எடுத்துப் பார்த்தபோ என் முக ஜாடையோட ஒத்துப் போச்சாம்… இத தான் நேத்து கேட்டாரு…”

என் அப்பாவின் பாசத்தை முதலிலேயே உணர்ந்திருந்தாலும், அவர் வாய்மொழியாக கேட்டபோது எனக்குள்ளும் மகிழ்ச்சி உண்டானது.

“அப்பறம் எதுக்கு ‘நான் யோசிக்கனும்’னு பெருசா பில்ட்-அப்லாம் கொடுத்தீங்க மாமனாரும் மருமகனும்…:sneaky::sneaky::sneaky:

“அந்த போட்டோ பார்த்து எனக்கு செம ஷாக்… இது வரைக்கும் என் மனசுல மரியாதைக்குரிய இடத்தில வச்சுருந்த குட்டி பொண்ணும், நான் லவ் பண்ற பொண்ணும் ஒன்னுன்னு தெரிஞ்ச அந்த செகண்ட், என் உணர்ச்சிகளை சொல்றதுக்கு வார்த்தையே இல்ல… அதுலயிருந்து வெளிவரதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் தேவை பட்டுச்சு… அதான் என் மாமனார் அதுக்கு டைம் கொடுத்தாரு…”

“அது தானா இல்ல வேற ஏதாவது இருக்கா:unsure::unsure::unsure:

“வேற ஒன்னும் இல்லையே…” என்றான்.

“ம்ம்ம் ஓகே… நான் வந்து ரொம்ப நேரமாச்சு... சோ நான் கிளம்புறேன்…”

“ஹே என்ன கதை கேட்டதும் கிளம்புற…”

“ஹான் வேற என்ன பண்ணனும்…”

“ஹ்ம்ம் அந்த ஹக், கிஸ்…” என்று இழுக்க…

“’ஹல்க்’க்கு ரீசன் கண்டுபிடிச்சா தான தரேன்னு சொன்னேன்;););)” மெதுவாக அந்த இடத்தை விட்டு அகன்றவாறே கூறினேன்.

ஒரே இழுப்பில் அவன் அருகில் கொண்டு வந்தவன் என்னை மொத்தமாய் அவன் பிடியில் நிறுத்தினான்.

“எத்தன நாள் கேட்டுட்டு இருக்கேன்… எப்போவும் போல இன்னைக்கும் எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறியா…” என்று கேட்டுக்கொண்டே என்னை நோக்கி குனிய நான் அவனிடமிருந்து திமிர கன்னத்தில் பதிய வேண்டிய முத்தம் அழகாய் பதிந்தது என் உதட்டில்…

இருவரும் இதை எதிர்பார்க்காததால் திகைத்திருந்தோம். ஆனால் அதெல்லாம் ஒரு நொடி தான்… அடுத்த நொடியே அவன் விசிலடிக்க ஆரம்பிக்க, வெட்கத்தை மறைக்க அவனிடமே சரணடைந்தேன்.

“பப்ளி இன்னைக்கு செம கிஃப்ட் தந்துருக்க எனக்கு…;););)

“ஸ்ஸ்ஸ் சும்மா இருக்க மாட்டீங்களா…” என்று சிணுங்கினேன்.

“ஹே கொஞ்சம் முகத்த காட்டு… எப்பவும் போல ரெட்டிஷா இருக்கான்னு செக் பண்றேன்…:p:p:p

“ப்ச்… ரணு சும்மா இருங்க…”

“ஹான் இப்போ ‘ரணு’வா… எத்தன பேரு தான் வைப்ப எனக்கு…;););)

பெயர் என்றதும் அவனிடமிருந்து விலகி, “சரியான ஃப்ராட்… ரீசன் சொல்லாமையே…” என்று நான் இழுக்க…

“ஹ்ம்ம் சொல்லாமையே… என்ன பப்ளி ஃபுல்லா கம்ப்லீட் பண்ணு…”

நானோ அதை சொல்லத் தயங்கி, “போடா ராகு…” என்று வீட்டிற்கு செல்லத் திரும்பினேன்.

அவனோ மறுபடியும் என்னை இழுத்து, பின்பக்கத்திலிருந்து அணைத்து, “ராகுல் கிருஷ்ணால நடுல வரது தான் ‘ஹல்க்’ (RaHUL Krishna) என்ன கரெக்ட்டா மேடம்…;););)” என்றான்.

“எப்படி கண்டுபிடிச்சீங்க…”

“ம்ம்ம் சைன் போடும்போது கண்டுபிடிச்சேன்… நீயும் அந்த ஃபைல்ல பார்த்து தான் கண்டுபிடிச்சுருப்பன்னு தெரியும்…”

அவனைப் பார்த்து சிரித்தவாறே அவன் கைகளை விலக்கி வீட்டிற்கு ஓடினேன்…

ஈர்ப்பான்(ள்)….
 
Advertisement

Sponsored