உனக்காகவே நான் -7

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்-7
Heroin.jpg

உண்டு முடிக்கும் வரை மித்ராவை அடிக்கடி பார்த்த ரிஷி ,அவள் முகம் சோர்ந்திருப்பதையும்,அவள் மறந்தும் நிமிர்ந்து பார்க்காதையும் உணர்ந்தான். ‘இவளுக்கு அப்படி என்ன ப்ரட்ச்சனை இருக்கும்?.அப்பாவிடம் கேட்டிருக்கலாம்.ஆனால் அவரிடமும் கோவம் வரும்படி பேசிவிட்டோம்.நாமும் கொஞ்சம் யோசித்துப் பேசியிருக்கலாம்’ என எண்ணினான்.சிந்தனைகளின் நடுவே உண்டு முடித்தான்.


Officeபோக தயாராகியிருந்த ரிஷி shoeபோட்டுக் கொண்டிருந்த போது ஜீவானந்தம் மித்ராவை அழைத்தார்.


வெளியில் வந்த மித்ராவிடம் ,’நீயும் கிளம்பு மித்ராமா..நாமும் ஊட்டிக் கிளம்பலாம்” என்றார் ஜீவானந்தம்.


“அங்கிள்.நா...இங்க எனக்குக் கிடைத்த வேலையிலே சேர்ந்து கொள்கிறேன் அங்கிள். please... எதற்கு உங்களுக்கு வேறு என்னால் கஷ்டம்” என்று தன் வேதனையை மறைத்து சிறிது ரிஷிக்குக் கேட்கும்விதமாக சத்தமிட்டுச் சொன்னாள் மித்ரா.ரிஷிக்கு அவள் இங்க 'தானாக வர நினைக்கவில்லை’ என்பதை உணர்த்திவிடும் வேகத்தில் மித்ரா வழக்கத்திற்குமாறாக குரல் உயர்த்திப் பேசினாள்.அவளின் இந்தப் பேச்சும் அவள் எதிர்பார்த்தபடி ரிஷியின் காதில் விழுந்தது.சட்டென நிமிர்ந்து அவளை ஆராயும் பார்வைப் பார்த்தான்.


இதைக் கேட்ட ஜீவானந்தம் யோசனை முடிச்சு நெற்றியில் விழும் விதமாக அவளை நோக்கினார்.அவரது இந்தப் பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்து நின்றாள்.


“என்ன மித்ராமா.நீ தான் அந்த வேலைக்கு இன்று 8மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றாயே?இப்போதே8.30ஆகிறது.!!அதன்பிறகு எப்படி ?”என்ற ஜீவானந்ததின் குரலில் சிறிது கடுமை தெரிந்தது.


“இல்லை அங்கிள் நான் காலையில் ஃபோனில் பேசினேன்.என்னுடையresume –ம்,நான்interview –க்கு பதிலளித்தவிதமும் கொஞ்சம் சலுகையாக மதியம் 2மணி வரை நேரம் எனக்காக அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.அதனால்,அதற்குள் நான் டைடில் பார்க் போகமுடியுமில்லையா?அங்கிள்” என்று அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு ‘அங்கிள் சம்மதிக்க வேண்டுமே.அப்போதாவது இவனுக்குப் புரியட்டும் என்னைப் பற்றி’ என்று ரிஷியின் மீது எரிச்சல் பட்டாள் மித்ரா.


“ஏன் இந்த தீடிர் முடிவு..?”என்ற ஜீவானந்தம் கோபத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது.


“அ...அது...வந்து” என்ற மித்ராவின் முகம் வெளுத்தது.இதுவரை பொய் சொல்லி பழக்கமும் இல்லாததால் ,பொய் சொல்லவும் முடியாமல் ,உண்மையும் பேச முடியாமல் திணறினாள் மித்ரா.


அவளை அதிக நேரம் தவிக்கவிடாமல் அவளைப் புரிந்த ஜீவா அங்கிள் அவரே தொடர்ந்து பேசினார் “மித்ராமா.இப்போதுதான் ரிஷி கோபப் படுத்தினான்.நீயும் என்னைக் கோபப்படுத்தாதே.”என்றவர் மேல் மூச்சு வாங்கினார்.


“அங்கிள்...”என்று கதறிய வண்ணம் “அங்கிள் சாரி...அங்கிள்..நீங்க கோபப் படாதீங்க ...நீங்க எது சொன்னாலும் கேட்கிறேன்” என்றவள் உடனே உள்ளே ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து ஜீவானந்ததிடம் கொடுத்து “முதலில் தண்ணீரை குடிங்க” என்று அவள் அருகிலே ஷோஃபாவில் அமர்ந்தாள்.


ரிஷி தங்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதையும்,அவனது பார்வை அவளைவிட்டு விலகாமல் இருப்பதையும் மித்ராவிற்கு மறந்தே போனது.அவளது கவனம் முழுதும் ஜீவா அங்கிளை சுற்றியே இருந்தது.


தண்ணீரை வாங்கி அருந்திய ஜீவானந்தம் அவளது தலையை வருடி , “ இந்தப் பாசமும்,அன்பும் என் அம்மாவுக்கும் கிடைக்க வேண்டும் என்றுதானே மித்ராமா உன்னிடம் கேட்கிறேன்.நீயானால் இப்படியே பேசிக்கொண்டிருக்கிறாய்...!!தெரியுமா?குருவுக்கும் நீ பாட்டியுடன் இருப்பதில்தான் மிகவும் மகிழ்ச்சி” என்றார் ஜீவானந்தம்.


‘நாமும்தான் கொஞ்சம் சுயநலமாக யோசித்துவிட்டோமே.நான் அங்கே சென்றால் பாட்டி எவ்வளவு சந்தோஷப்படுவாங்க.ஏதோ ரிஷி ,என்னமோ சொன்னான் என்பதற்காக பயந்துப் போவது போல் என்னவெல்லாம் பேசிவிட்டோம்.இவனுக்குப் பிடிக்கவில்லையென்றால் இவனிடம் ஒதுங்கி இருந்து கொள்வதைவிடுத்து,என்ன ஓட நினைக்கிறோம்’ என்று தன் செய்கைக்குத் தன்னையே திட்டிக் கொண்டாள்.


ஜீவா அங்கிள் தன்னை பார்த்திருப்பதை உணர்ந்து, “எனக்கும்தான் பாட்டியுடன் இருக்க ஆசை.நாம் இப்போவே போகலாம் அங்கிள்..ஏதோ வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் இப்படிப் பேசிவிட்டேன் அங்கிள்” என்று சின்ன பிள்ளையாய் கொஞ்சினாள் மித்ரா.


உடனே ஜீவானந்தம் சிரித்துவிட்டார். “சரி கிளம்பு மித்ராமா...”என்றார் ஜீவானந்தம்.


“சரிங்க அங்கிள்..”என்றுவிட்டு எழுந்தவள் ரிஷி இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மூச்சு நின்று அவனை வெறித்தாள் மித்ரா.ஏளனமான புன்னகை அவன் உதடுகளில் நிலைத்திருப்பதைக் கண்ட மித்ரா சினம் கொண்டு அவனை முறைத்துவிட்டு அவள் அறைக்குச் சென்று தன் பெட்டியை தயார் செய்தாள்.


மித்ரா தன் பெட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் வருவதற்குள் ரிஷி officeக்கு சென்றுவிட்டிருந்தான்.வெளியில் வந்தவளின் கண்கள் அவனைத் தேடியது.அவன் கிளம்பிவிட்டதை எண்ணி மனதில் அமைதியுற்றாள்.நேராக அங்கிளிடம் சென்று "கிளம்பலாமா அங்கிள்.?நான் தயாராகிவிட்டேன்"என்றாள்.


ஹாலில் ஷோஃபாவின் மீது அமர்ந்து செய்தித்தாள் படித்திருந்தவர் மித்ராவின் குரலில் நிமிர்ந்து"ம்...இது என்னுடைய மித்ராமா"என்று பெருமிதத்துடன் பார்த்தார் ஜீவானந்தம்.தொடர்ந்து"என்னமா?நானும் ரிஷியும் மாடிப் படிகளின் அருகில் நின்று பேசியது ,உன் காதில் விழுந்ததா?"என்று மித்ராவை பரிவாக பார்த்துக் கேட்டார்.


மித்ரா எதுவும் பேசமுடியாமல் ஆமாம் என்பது போல் தலை குனிந்து நின்றாள்.அதைப் பார்த்து மனம் வருந்தி ஜீவானந்தம் தொடர்ந்து பேசினார்.


"ரிஷியைத் தப்பாக நினைக்காதே மித்ராமா.அவன் இயல்பில் இப்படி யாரையும் தவறாக நினைப்பவன் இல்லை.மூன்று வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் நடந்தவை,அவனை இப்படிப் பேச வைத்தது.அவனை நீயும் புரிந்து கொள்வாய்.அவனும் புரிந்து கொள்வான்.அதுவரை அவனிடம் ஒதுங்கியே இரு.அவனிடமும் இத்தையேதான் சொல்லியிருக்கிறேன்"என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார் ஜீவானந்தம்.


ஜீவா அங்கிள் வருந்துவது தாங்க முடியாமல் "இல்லை அங்கிள் .நான் எதுவும் நினைக்க மாட்டேன்.ஆனால் பெண்களையே வெறுக்கும் அளவு அப்படி என்னதான் நம் வீட்டில் நடந்தது ?"என்று உறுத்தியதை நேரே ஜீவனந்ததிடம் கேட்டாள் மித்ரா.


ஜீவானந்தம் எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு"அவசியம் சொல்கிறேன் மித்ராமா.ஆனால் இப்போது அல்ல.விரைவில்..இப்போது கிளம்பலாம் மித்ராமா.உன்னைவிட்டுவிட்டு நான் இன்றே சென்னை செல்ல வேண்டும்."என்று நிதானமாகவும் ,அவள் மேலும் கேள்விக் கேட்டுவிடாதபடியும் சொன்னார் ஜீவானந்தம்.


ஏதோ மிகவும் வேதனைப்பட வைக்கக் கூடிய விஷயமாகத்தான் இருக்கும்.இனி மேலும் கேட்டு அவரை வேதனை ஆக்க விரும்பாமல் "சாரி அங்கிள்.. " தன் காதை தன் பிஞ்சு போன்ற கைகளால் பிடித்து மன்னிப்புக் கேட்டாள் மித்ரா.தொடர்ந்து"நான் வேறு ஊட்டி வர மாட்டேன் என்று உங்களை வேதனைப் படுத்திவிட்டேன்"என வருந்தும் குரலில் சொன்னாள் மித்ரா.


"உன்னை எனக்குத் தெரியாத மித்ராமா,முடிவெடுத்த பிறகு அதனை மாற்றும் இயல்பு உனது இல்லை.அப்படி மாற்றுகிறாய் என்றால் அதற்குத் தகுந்த காரணம் இருக்கும் என்று யூகித்தேன்.அதுவும் சரிதான் என்று இப்போது தெரிகிறது.சரி விடு...முடிந்து போனதை ஏன் பேச வேண்டும்.முதலில் அந்த டைடில் பார்கில் இருக்கும்companyக்கு ஃபோன் செய்து நீ வேலைக்கு வரப் போவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிடு புரிகிறதா?"என்ற கண்டிப்பான குரலில் சொன்னார் ஜீவானந்தம்.


"அதெல்லாம் முன்பே சொல்லிவிட்டேன்.அந்தmanagerகொஞ்சம் நல்லாவே திட்டினார்.எல்லாம் உங்கள் பிள்ளையால் வந்தது.எல்லாம் வாங்கிக் கொண்டு மொட்டு மொட்டுனு விழிச்சிட்டு,மன்னிப்பு கேட்டேன்"என்று சிணுங்கிய விதமாகச் சொன்னாள் மித்ரா.


ஜீவானந்தம் வாய்விட்டுச் சிரித்துவிட்டு, "எப்படி விழித்தாய்?"என்று திரும்பவும் கேட்டகவும் , "அங்கிள்.."என்ற சிணுங்கலுடன் மித்ரா "போங்க அங்கிள்.எப்பவும் உங்களுக்குக் கேலிதான்"என்று விட்டு "நான் வள்ளியிடம் சொல்லிவிட்டு வருகிறேன்"என்று சமையல் அறை பக்கம் போனாள்.


அவள் போவதை பார்த்திருந்துவிட்டு முத்துவை அழைத்து அவளது லக்கெஜை எடுத்து காரில் வைக்குமாறு சொல்லிவிட்டு காரை எடுத்துவந்து போர்டிக்கோவில் நிறுத்தினார்.


அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் மித்ரா வள்ளியிடம் சொல்லிவிட்டு வீட்டு போர்டிக்கோவிற்கு வந்தாள்.உடன் வந்த வள்ளி "சின்னம்மா..என் அம்மாவும் அங்கதான் பாட்டியுடன் இருக்கிறாங்க.நான் கேட்டதாக சொல்லுங்க"என்றாள்.


"ஓ..வள்ளி உன்னுடைய அம்மாவும் அங்கதான் இருக்காங்களா?கண்டிப்பாகச் சொல்கிறேன்"என்றாள் மித்ரா.


மித்ராவின் கையையே பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்த வள்ளி ,சட்டென புன்னகைத்த போது உண்டான மித்ராவின் கன்னக் குழியில் விரல் வைத்து "இந்த கன்னக்குழி உங்களுக்கு ரொம்பவும் அழகாக இருக்கு சின்னம்மா"என்று தன் இருக்கைகளால் மித்ராவின் முகம் சுத்தி நெட்டி முறித்தாள் மித்ரா.


வள்ளியின் செய்கையால் எதுவும் சொல்லாமல் அமைதியாகி அம்மாவின் நினைவில் தலை குனிந்த மித்ரா ,மீண்டும் நிமிர்ந்து "நீயும் தான் அழகாய் இருக்கிறாய்.இந்தப் புடவைக்கு பதில் என்னைப் போல் சுடிதார் அணிந்து கொண்டாய் என்றால் இன்னும் அழகாய் இருப்பாய்"என்று விட்டு முத்துக் கொண்டு வந்த லக்கெஜில் ,ஒரு பெட்டியை வாங்கி,வள்ளியின் கலருக்கு எடுப்பாகவும் அளவு சரியாக இருக்குமாறும் இருக்கும் ஒரு சுடிதாரை எடுத்து வள்ளியிடம் கொடுத்தாள்.
"அடுத்த முறை நான் வெளியில் செல்லும் போது உனக்கென்று தேர்வு செய்து வாங்கி வருகிறேன்"என்று கண்களை சிமிட்டினாள் மித்ரா.


"எனக்கா?சின்னம்மா..."என வியப்பினூடே சுடிதாரை மித்ராவைப் பார்த்த வண்ணம் வாங்கினாள் வள்ளி.


"உனக்குத்தான் வள்ளி.நல்லா இருக்கா? " என்றாள் மித்ரா.வள்ளியின் மகிழ்ச்சி அவளின் கண்களில் தெரிந்தது.


"ம்ம்...நல்லா இருக்குது .ஆனா புதுசுப் போல இருக்கே சின்னம்மா."என்றாள் வள்ளி.


"ஆமாம் வள்ளி.புதுசுதான்.அதிக வேலைப்பாட்டோடு கனமாக இருந்ததால் நான் பயன்படுத்தவே இல்லை.இது உனக்குத்தான் என்னைவிட எடுப்பாக இருக்கும் என்று தோன்றியது.அதனால்தான் எடுத்துக் கொடுத்தேன்"என்றாள் மித்ரா.


கண்களில் நெகிழ்ச்சியுடன் "தாங்க்ஸ்ங்க..சின்னம்மா"என்று தனக்கு தெரிந்த english -ல் சொன்னாள் வள்ளி.


பதில் எதுவும் சொல்லாமல் ,புன்னகைத்தவிதமாக மித்ரா காரின் முன் கதவைத் திறந்து கொண்டு காரில் ஏறிக் கொண்டாள்.


முத்து பெட்டிகளை காரில் வைத்துவிட்டு வள்ளியுடன் வந்து நின்றார்.ஜீவானந்தம் முத்துவைப் பார்த்து "முத்து..நீ போய் ஓய்வெடுத்துக் கொள்.வள்ளி பாதுகாப்பாக இரு"என்றுவிட்டு இருவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு காரை வாயில்புரம் திருப்பினார் ஜீவானந்தம்.


“Byeவள்ளி.வருகிறோம் முத்தய்யா” என்று கை அசைத்தவிதமாக புன்னகைத்தாள்.


பிறகு அங்கிளிடம் திரும்பி “அங்கிள் ரொம்ப நேரமாகுமா?”என்றாள் மித்ரா.


“இல்லை மித்ராமா.ஓரிரு மணி நேரத்திற்குள் போய்விடலாம்.காரை மெதுவாகத்தான் செலுத்தப் போகிறேன்.உனக்கு மலைப் பாதையில் பயணித்து பழக்கமில்லை இல்லையா?அதனால் தலை சுற்றல் போலோ அல்லது வாந்தி வரும் போலோ இருந்தால் சொல்லு மித்ராமா.இன்னும் மெதுவாக ஓட்டுகிறேன்” எனப் பாசத்துடன் சொன்னார் ஜீவான்ந்தம்.


“சரிங்க அங்கிள்” என்றவள் ஜன்னல்புரம் திரும்பி வெளியில் வேடிக்கை பார்த்தாள்.


நேற்றிலிருந்து நடந்தவற்றை சில நிமிடங்கள் நினைவுகளாக அசைபோட்டாள். ‘என்ன எண்ணி கோவை வந்தோம்.என்ன நடந்து கொண்டிருக்கிறது!?’என்று ஆச்சரியப்பட்டாள்.அவள் எண்ணியது நடக்காவிட்டாலும் அவள் மனம் அமைதியுடன் இருப்பதை உணர்ந்தாள். ‘எப்படியும் யாருக்கும் தெரியாத இடத்தில்தானே இருக்கப்போகிறோம்.அதுவும் பார்வதி பாட்டியுடன்’ என்று உற்சாகம் கொண்ட மனம் ‘ஏன் தனக்கு இந்த நிலைவந்தது’ என்று எண்ணிக் கலங்கியது.


உடனே துணுக்குற்றவள் “சீ சீ இனி ஒருமுறை கூட தன்னிரக்கம் கொள்ளக் கூடாது.இந்த விஷயத்தில் மட்டுமல்லாமல் வேறெந்த விஷயத்திலும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் மித்ரா.


சிறிது நேரத்தில் மலைப் பாதையின் முதல் வளைவு ஆரம்பித்தது.மித்ராவிற்காகவென்றே வண்டியை வளைவுகளில் மிகவும் மெதுவாக செலுத்தினார் ஜீவான்ந்தம்.அதனால் அவளுக்கு மலைப்பாதையில் போகும் உணர்வே ஏற்படவில்லை.


பிறகு “அங்கிள் நம் வீடு ஊட்டியில் எந்த இடத்தில் இருக்கிறது.”என ஊட்டியில் எல்லா இடமும் தெரிந்தவள் போல் கேட்டாள் மித்ரா.


சிறு புன்னகையுடனே “நம் வீடு ஊட்டியில் என்று இல்லை மித்ராம்மா.நம் வீடு குன்னூரில் இருக்கிறது.அங்கே நமக்கென்று ஒரு தேயிலைத் தோட்டமும் இருக்கிறது.அதனை கவனித்துக் கொள்வது இப்போது இருக்கும் நிலையில் முடியாது என்பதால் குத்தகைக்கு விட்டிருக்கிறோம்.விளைச்சலின் லாபத்தில் பாதி நமக்குத்தான்.பாலய்யாவும் அவனுடை பையன் வேணுவும்தான் இன்னும் 5வருடங்களுக்கு குத்தகை எடுத்திருக்கிறார்கள்.மிகவும் நேர்மையானவர்கள்.பூர்வீக சொத்தல்லவா?விற்க மனமில்லை.விடவும் மனமில்லை.அதனோடு அதற்கென்று கவனித்துக்கொள்ள தனி ஆட்களும் இருக்கிறார்கள்.அவற்றின் கணக்கு வழக்குகளையும் ரிஷிதான் அறுவடைக்கு ஒருமுறைப் பார்ப்பான்..”என்று தன் பூர்வீகத்தைச் சொன்னார் ஜீவான்ந்தம்.


விழிகள் விரியக் கேட்ட மித்ரா “இந்தக் கணக்கு வழக்குகளைக் கூட ரிஷிப் பார்ப்பாரா?நான் வெறும் laptopமட்டும் தட்டும் மன்னன் என்றல்லவா?!!நினைத்தேன்.பெரிய ஆள்தான் அங்கிள் உங்க மகன்.வேறென்ன திறமைகளெல்லாம் அவருள் ஒழிந்திருக்கின்றனவோ!!”என வியப்பில் தொடங்கி ,கேலியில் முடித்தாள் மித்ரா.


“என்ன மித்ராம்மா.என் பையனைப் பற்றி பேசும் போது பேச்சின் ஸ்ருதியே மாறுகிறதே!என்ன விஷயம்” என்று நமட்டு சிரிப்புடன் கேட்டார் ஜீவான்ந்தம்.


“சே...சே..இல்லவே இல்ல அங்கிள்.உங்க பிள்ளையை நினைத்தாலே புலி சிங்கம் போல் பயமாக அல்லவா இருக்கு.நான் போய் அவரைக் கேலி செய்வேனா?!”என்று பயந்தவளைப் போல மிரட்சி இருப்பது போல நடித்து தன் இருக்கைகளை ஒன்றாக இணைத்து நடுங்கினாள் மித்ரா.


அவளின் இந்தச் செய்கையால் வாய்விட்டுச் சிரித்தார் ஜீவான்ந்தம்.”அவனை அடக்க நீதான் சரியான ஆள்.!”என்று மேலும் சிரித்துவிட்டு,சிறு கலக்கத்துடன் “அவனுக்கு இருக்கும் பெண்கள் மீதான வெறுப்பை நீதான் போக்க வேண்டும் மித்ராமா” என மித்ராவைப் பார்த்தார் ஜீவான்ந்தம்.


‘பெண்கள் மீதான வெறுப்பு என்றதும் அவன் காலையில் அவளைப்பற்றிப் பேசியதும்,வரும் போது ஏளனமாகப் பார்த்ததும் நினைவு வர முகம் வாடிக் குனிந்தாள் மித்ரா.


பதில் வராமலிருக்கவும் மித்ராவை திரும்பிப் பார்த்த ஜீவானந்தம்,அவளைப் பார்த்து திகைத்தார். ‘கைப்படாத ரோஜா போல் இருக்கும் இந்தப் பால் போன்ற முகத்தைப் பார்த்து என்னவெல்லாம் பேசிவிட்டானே!’என்று தன் மகன் மீதே கோபம் கொண்டார்.


‘நாமும்தான் இப்போது எதற்குக் காலையில் நடந்தவற்றை நினைவு படுத்தும்விதமாக பேசிவிட்டோம்’ என வருந்தினார் ஜீவான்ந்தம். ‘ஆனால் இவள் தன் மகனை மாற்றிவிடுவாள்.’என தனக்குள் உறுதியுடன் நம்பினார்.


மலைத் தொடரில் சிறிது உயரம் ஏறியிருந்ததால் ஜன்னல் வழியே தெரிந்த கீழ் ஊர்களைப் பார்க்க ரம்யமாக இருந்தது.


மித்ராவின் முகவாட்டத்தை கவனிக்காதது போல் “மித்ராமா அப்படியே.அந்தப் பக்க ஜன்னல் வழியே பார்” என்றார் ஜீவானந்தம்.


ஜீவா அங்கிள் சொன்னதும் ஜன்னல் புரம் திரும்பிய மித்ரா ,போன முக மலர்ச்சி திரும்பியவளாக, “அங்கிள்..இது என்ன அங்கிள் இங்கிருந்து பார்க்க ஒவ்வொரு வீடும் சின்ன சின்ன குட்டி பொம்மை வீடுகளைப் போல தெரியுது.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கு அங்கிள்.”என்று தன் புத்துணர்வை வெளிப்படுத்தினாள்


மென்னகையுடனே “இப்படிதான் ரிஷியும் சொல்வான்.அழகாக இருக்கு இல்ல.எனக்கு இதிலெல்லாம் அதிக ஆர்வமில்லை.நேற்று வரும் போது பார்த்தோமே அந்த ஓடையும் கூட பழக்கமானது அவனால்தான்.”என்று தன் மகன் ஆர்வத்தைப் பற்றி சொன்னார் ஜீவானந்தம்.


“ஓ...”என்றதோடு மித்ரா,தொடர்ந்து எதுவும் பேசாமல் இதுவரை அனுபவித்திராத அந்த இயற்கையின் எழிலில் தன் வசமிழந்து ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.


அவளின் ஆர்வத்தையுணர்ந்து ஜீவானந்தம் மேலும் பேசி அவள் ரசனையைக் கலைக்கும் எண்ணமின்றி அமைதியுடன் காரை செலுத்தினார்.


அடுத்த வளைவில் இயற்கை எழில் தெரியும் ஜன்னல் ஜீவா அங்கிள் பக்கமாக மாறியதும் , “அங்கிள்...கீழே இருக்கும் குட்டி குட்டி வீடுகெல்லாம் அந்தப் பக்கம் வந்துவிட்டது” என்று சிணுங்கினாள்.


“அது..சரி..”என்றுவிட்டு.காரை ஓரமாக நிறுத்தி “பின் சீட்டில் ஏறிக்கொள் மித்ராமா” என்றார்.


“ஐ...!!”என்று பின் சீட்டி ஏறிக் கொண்டு தன் ரசிக்கும் வேலையை மீண்டும் தொடர்ந்தாள் மித்ரா.மலைகளுக்கே உரிய அழகுடன் தோன்றிய பசிய காட்சியை சலிக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.திருப்தியுடன் மித்ராவைப் பார்த்துவிட்டு காரை மீண்டும் எடுத்தார் ஜீவானந்தம்.


வளைந்து வளைந்து மலை மீது ஏறிய பாதையிலிருந்து ,ஓர் இடத்தில் தனித்து பிரிந்த வழியே கார் திரும்பிச் சென்றது.சிறிது நேரத்தில் வீடும் வந்தது.


சிறு படப்பட்ப்புடன் வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா.கோவை வீட்டளவு பெரிய வீடாக இல்லாமலிருந்தாலும் ,இந்த வீடும் பெரிய வீடாகவே இருந்தது.உள்ளே வந்ததும் ,ஜீவானந்தம் மித்ராவை பாட்டி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.


"மித்ராமா...காலையிலே நான் அம்மாவிடம் எல்லாம் சொல்லிவிட்டேன்.இனி அம்மா உன்னை பார்த்துக் கொள்வார்கள்"என்றார் ஜீவானந்தம்.


புன்னகைத்துவிட்டு"சரிங்க அங்கிள்."என்றுவிட்டு, 'நான்தான் பாட்டியை பார்த்துக் கொள்ளும் வயதிலிருக்கிறேன்.ஆனால் இங்கு அங்கிள் ஏதோ சொல்கிறாரே'என்று வியப்புடன் உள்ளே நுழைந்தாள் மித்ரா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top