உனக்காகவே நான் - 6

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 6
Heroin.jpg


‘இவன் சிரிப்பு இவ்வளவு அழகாக இருக்க வேண்டுமா?!’என குறைபட்டாள் மித்ரா. ‘இருந்தும் சாதாரணம் போல அவனது முகத்தைப் பார்க்க முடியவில்லையே!?அவனுடன் இயல்பாகப் பழக முடியவில்லையே!’என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டாள்.










ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.அது நாணம் என்பதையும்,அது ஏன் அவளுக்குள் வந்தது என்பதையும் உணராமல் ஏதேதோ காரணங்களை கண்டுபிடித்து,அதுதான் காரணமாக இருக்கும் என்று வலுக்கட்டாயமாக அவளை சமாதானப் படுத்திக் கொண்டாள்.




அவனுடன் லிஃப்டில் ஏற மறுத்ததால் வந்த பயத்தால்தான் அவனுடன் இயல்பாகப் பேசமுடியவில்லை என பெரியதொரு காரணம் கண்டுப்பிடித்துவிட்டாள் மித்ரா.




‘ப்ச்..பாவம் நாமும் கொஞ்சம் வாய் துடுக்காகத்தான் பேசிவிட்டோம்.ஒருவேளை அவனுடன் லிஃப்டில் ஏறியிருந்தால்,இவன்தான் ரிஷியென்று அன்றே தெரிந்திருக்கும்’ என்று சென்னையில் நடந்த விஷயத்தை தன் நினைவலையில் ஓடவிட்டாள் மித்ரா.........“அச்சோ நேரம் ஆகிவிட்டதே?!இன்று பார்த்துத்தான் அந்தக் கோவை*ப்ரான்ச்MD , சென்னைக்கு வரவேண்டுமா?.வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போய்விட்டு வருவதற்குள் Traffic –ல் மாட்டி இப்படி நேரமாவிட்டதே!?”என்று முணுமுணுத்தபடி ,மூட இருந்த லிஃப்டில் ஏற அவசரமாக ஓடிவந்தாள்.




யாரோ ஓடி வரும் அரவம் கேட்டு லிஃப்டை இருத்திவிட்டு ,வந்தவளை நிமிர்ந்து பார்த்தான் லிஃப்ட்டில் இருந்த ரிஷி.மித்ராவும் மூச்சு வாங்க ஓடி வந்தவள் ,அவன் ஒருவன் மட்டும் லிஃப்டில் இருப்பதைப் பார்த்து தயங்கி அவனை நோக்கினாள்.




இருவரின் விழிகள் சந்தித்தது.இரு மேகங்கள் மென்மையாக மோதியதால் உண்டான மின்னல் போல அவர்களின் பார்வைகள் சங்கமித்து மின்னல் உண்டானது.இருவரின் பார்வையும் விலக்கமுடியாமல் ஒருவர் கண்ணின் மீது மற்றொன்றாக நிலைத்து நின்றது.சுகமான மின்னல் அது.மீளவிரும்பாத உணர்வு.அந்த மோன நிலை எவ்வளவு நேரம் நிலைத்ததோ!ரிஷிதான் முதலில் தன்னிலை அடைந்து அவள் முன் சொடுக்குப் போட்டு அவளை அழைத்தான்.




'உள்ளே வருகிறாயா இல்லையா'என்பது போல் அவனது பார்வை அவளைப் பார்த்து பேசியது.சட்டென அவள் முகம் சிவந்து பார்வையை வேறுபுறம் திருப்பினாள் மித்ரா.




‘என்ன புதியவன் என்றும் பாராமல் இப்படி பார்த்துக் கொண்டு நின்றுவிட்டோம்’ என்று தன் மீதே மித்ரா கோபம் கொண்டாள். 'அவனும்தான் பார்த்தான்.பார்த்தானா?இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றியதா?'என அவள் மனம் நியாயம் பேசியது.ஆனால் இது போல யாரையும் அவளது விழிகள் கெஞ்சி பார்க்கச் சொல்லியதில்லை என்பதை அவள் யோசியாமல்விட்ட உண்மையாக இருந்தது.




'அது என்ன கண்ணால் பேசுவது.வாய் திறந்து கேட்டால் முத்து கொட்டிவிடுமோ?ஏதோ அவன் கண்ணை நேராகப் பார்த்திருந்ததால் புரிந்தது.இல்லையென்றால் மங்குனி போல விழித்திருக்க நேர்ந்திருக்கும்'என்று காரணமில்லாமல் அவன் மீது கோபப்பட்டாள் மித்ரா.




அந்தக் கோப மன நிலையிலே , “இல்லை.நீங்கப் போங்க சார்.முன் பின் தெரியாதவர்களுடன் தனியே பேசும் சூழலோ அல்லது இருக்கும் சூழலோ எனக்குப் பழக்கமில்லை. . நான் படிகளிலே போய்க் கொள்வேன்” என்று மிடுக்காகவும் திமிராகவும் சொல்லிவிட்டுத் திரும்பி பார்த்தாள் மித்ரா.இது அவளுடைய இயல்பு இல்லை என்றாலும் இருந்த டென்சனில் அவள் கூறியதோடு அவள் இயல்புக்கு மாறானது என்பதையும் அவள் உணரவில்லை.




அதுவரையும் யாரும் வரவில்லையே என்று அவளது விழிகள் பின்புறம் திரும்பி யாரேனும் வருகிறார்களா என்று தேடியது. 'வந்தால் லிஃப்டிலே போய்விடலாம்.தனியே வரமுடியாது என்று மிடுக்காக இவனிடம் சொல்லிவிட்டோம்.இனி இவனுடனும் போக முடியாது.ஏழாவது மாடியிலா நம்ம officeஇருக்க வேண்டும் 'என்று மேலே பார்த்து சோர்ந்தாள் மித்ரா.




‘எப்படி வருவார்கள்?மணிதான்11-ஐ நெருங்கிக் கொண்டிருந்ததே!?.இன்றுதான் அந்த ரிஷியும் வருவதாகச் சொன்னார்கள்.பேசாமல் லீவு சொல்லிவிடலாமா?இந்த நேரத்திற்கு அவர் வந்திருக்கக் கூடும்.முதல் முறை பார்க்கும் போதே நல்ல அபிப்ராயம் அமைய வேண்டும் என்று ஓடோடி வந்தாள்.ஆனால் எல்லாம் வீண்.பேதாதற்கு இவன் வேறு 10நிமிடம் வீணக்கிவிட்டான்’ என்று உள்ளுக்குள் பொருமியபடி அவனை மீண்டும் முறைத்தாள் மித்ரா.




ரிஷி லிஃப்டில் ஏறிப் போகாமல்,அவளையே பார்த்திருந்த அவன் மித்ராவின் முக மாற்றங்களை ரசித்தவிதமாக புன்னகையுடன் வில் போல தன் இடது புருவத்தை உயர்த்தி"ஏனோ?"என்பது போல் பார்த்தான்.




முறைத்துக் கொண்டிருந்த மித்ரா அவனின் புருவ அசைவைப் பார்த்து விழிகள் விரிய அவனைப் பார்த்துவிட்டு 'என்ன இவன் முக அசைவுகளாலே தெளிவாக பேசுகிறானே.!!ஒருவேளை எனக்கு மட்டும்தான் அவன் பேசுவது புரிகிறதா?!எதாவது மாயமந்திரம் தெரியுமா என்ன?!!'என்று வெகுவாக வியப்படைந்தாலும் உடனே முகமாறி 'என்ன திமிர்?!இங்க ஒருத்தி டென்சனில் நின்று கொண்டிருக்கிறேன்.என்ன புன்னகையாலே பதில்.வாயைத்திறந்து பேசினால்தான் என்ன?வரும் கோபத்திற்கு இவனை இழுத்து வெளியே தள்ளிவிட்டு நாம் லிஃப்ட்டின் ஏறிக் கொள்ளலாம்'என்று பற்றிக் கொண்டு வந்தது.




"என்ன. ? என்னை இழுத்து வெளியில் தள்ளிவிடலாமா என்று யோசிக்கிறாயா?.எங்கேtryபண்ணு"என்று அவள் மனதைப் படித்தவன் போல தன் கையை அவள்புரம் நீட்டிக் கேட்கவும் மித்ராவிற்கு தூக்கிப் போட்டது.




"ஆ...!!!!!!"என்ற மித்ரா 'இவனுக்கு எப்படி தன் மனதில் நினைத்ததுத் தெரிந்தது'வியப்புடன் அவனை நோக்கினாள்.உடனே சமாளித்துக் கொண்டு "அதெல்லாம்.ஒன்றுமில்லை.நீங்களே போங்க.நான் வருகிறேன். " என்று அவனை நேரப் பார்ப்பதை தவிர்த்துத் திரும்பி நடந்தாள் மித்ரா.




'வந்திட்டானுங்க..ஒரு பெண் பேசினால் உடனே'என்று முணுமுணுத்தப் படி நடந்தவள்.




ஓடிச் சென்று அவளை வழிமறித்து “என்ன?!!என்ன சொன்னாய்...நான் என்ன சிங்கமா?இல்லை புலியா?என்னுடன் தனியே வந்தால் உன்னை என்ன தின்றுவிடுவேனோ!””என்று கோபமாக அதிர்ந்த குரலில் கேட்டான் ரிஷி.




அவன் குரலில் திடுக்கிட்டு திணறியவள் ‘இவன் ஏன் இப்படிக் கோபப்பட வேண்டும்’ என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.உண்மையில் அவள் மிரண்டு போனாள் என்றுதான் சொல்ல வேண்டும்.




மீண்டும் அவனே தொடர்ந்து அவளைப் பார்த்து “ஓ..என்னைப் பார்த்து மயங்கிவிட்டாயா?அதனால்தான் உன்னையே உன்னால் நம்ப முடியவில்லையோ.எதுவும் செய்திடுவேனோ!என்று தனியே வரப் பயமோ!இல்லை இது என்ன புது யுக்தியா? ” என்று ஏளனமாகப் புன்னகைத்த வண்ணம் அவள் பதில் ஏதும் சொல்லுமுன் அவன் லிஃப்டில் ஏறிக் கொண்டு லிஃப்ட் கதவை மூடுவதற்கானbuttonஐ அழுத்தி அவளையே பார்த்திருந்தான்.




‘என்ன திமிர்.?எப்படிப் பேசிவிட்டான்.என்ன புது யுக்தி.எதற்கு புது யுக்தி?'ஒன்றும் புரியாமல் விழித்தாள். ' தெரியாத ஆண்கள் அருகிலிருக்கும் இது போன்ற தருணங்களை முடிந்தவரைத் தவிர்த்துவிடு'என்று அம்மா சொன்னதை கேட்டுத்தானே நான் இப்படிச் செய்தது . , 'இவன் என்ன உளருகிறான்’ என்று பொருமிய போதும் திருப்பிக் கொடுக்காமல் விட அவளுக்கு மனது வரவில்லை.




அதற்குள் அவன் லிஃப்ட் கதவு மூடும்button – ஐ அழுத்துவதையுணர்ந்த மித்ரா போன தைரியமும் மிடுக்கும் மீண்டவளாய் அவனைப் பார்த்து “ஆமா இவங்க பெரிய மன்மதரு.இவரைப் பார்த்ததும் இவர் பின்னாடியே எல்லாப் பெண்களும் வால் பிடித்து கொண்டு வந்துவிடுவார்கள் பாரு.”மிடுக்காக அவனைப் பார்த்து முறைத்தாள் மித்ரா.




அதைக் கேட்டதும் அவுட்டு சிரிப்பு சிரித்தான் ரிஷி.




இதைக் கண்டதும் அவளுக்கு இன்னும் கோபம் வர விறுவிறு என வெளியே செல்ல எத்தனித்தவள் மீண்டும் முறைத்து நாக்கை நீட்டி “வவெவவெவவெ” என அழகு பழிப்பு காட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நடந்தாள் மித்ரா.ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்....




அதன் பிறகு office - க்கு விடுமுறையே சொல்லிவிட்டது நினைத்து தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டு புன்னகையுடனே'ஒழுங்காகவே பேசியிருக்கலாம்.அவன் மட்டும் என்ன ஒழுங்காகவா பேசினான்.போகட்டும் விடு'எனத் தன்னையே சமாதான படுத்திக் கொண்டு கையிலிருந்த புத்தகத்தை படிக்காமலே மேஜை மீது வைத்தாள்.




பிறகு இரவு விளக்கை ஒளிரவிட்டு ,தன் படுக்கையில் தன் அம்மா அப்பா புகைப்படத்தை அணைத்த வண்ணம் படுத்தாள் மித்ரா.வஞ்சனைச் செய்யாமல் நித்திராதேவி அவளை வருடி தூங்கச் செய்தாள்.




வஞ்சனைச் செய்யாமல் நித்திராதேவி அவளை வருடி தூங்கச் செய்தாள்.




காலையில் எழுந்தவள் பார்வதி பாட்டி வீட்டுக்குக் கிளம்புவதற்கு ஆயுத்தமாக உற்சாகத்தோடு தயாரானாள்.அவளையும் அறியாமல் அவளுள் ஒரு புதுவித புத்துணர்ச்சி பரவியிருந்தது.




தயாராகிவிட்டு அந்த அறையிலிருந்த ஜன்னல் அருகே சென்று வெளியில் பார்த்தாள்.அந்த வீட்டின் காம்பௌண்ட் சுவரின் இரும்பு கதவின் அருகே நிழலுக்காக மேற்கூரையாக ஓடுப் போடப் பட்ட சிறு நிழற்கூடம் இருந்தது.அதனோடு இருந்த நீண்ட கல் இருக்கையில் வள்ளியும் முத்துவும் அமர்ந்திருந்தனர்.காலை உணவினை கணவனுக்குக் கொடுத்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள் வள்ளி.




அப்போது ஜன்னலின் அருகே இருந்த மித்ராவை வள்ளி பார்த்துவிட்டாள்.வள்ளி புன்னகைத்தவிதமாக 'வெளில வாங்க சின்னம்மா'எனச் சைகையால் மித்ராவிடம் பேசியவிதமாக வீட்டினுள் நுழைய நடந்து வந்தாள் வள்ளி.




"இதோ வருகிறேன் வள்ளி"என்றவள் அப்போதுதான் வீட்டின் முன் அழகை பார்க்கலானாள்.




‘வீட்டுக் போர்டிக்கோவிற்கும் சுற்றுப்புறக் கதவிற்கும் இடையே குறைந்தது நூறு அடியேனும் இருக்கும்.கார் மற்றும் வேறு சில வாகனங்கள் வந்தால் வருவதற்கென்று வசதியாக சிமண்ட் பாதை அமைக்கப் பட்டிருந்தது.அதைத் தொடர்ந்து வாகனங்கள் வந்தால் வளைவதற்குச் சிரமம் இல்லாமல் இருக்க வீட்டு போர்டிக்கோ முன் வட்டமாக அமைக்கப்பட்ட சிமண்ட் பாதையின் தொடர்ச்சி.அந்த வட்டப் பாதையின் நடுவே*ஃபௌன்டைன்.போர்டிக்கோவின் முன் இருக்கும் பகுதியை மதிய கோடு போல பிரித்த அந்த சிமெண்ட் பாதையின் இருபுறமும் வரிசையாக நடப்பட்ட ஒரேமாதிரியான அழகுச்செடிகள்.அவை இஷ்டம் போல் வளர்ந்துவிடாமல் அளவாக வெட்டப் பட்டு பார்க்க ரம்யமாக இருந்தது.இதனோடு நன்கு திட்டமிட்டு அமைக்கப் பட்ட இருபுறமும் வரிசையாக நடப்பட்ட ரோஜாச் செடிகள்.பறிக்கப்படாமல் அவை செடிகளிலே இன்னும் வாடாமல் சிரித்துக்கொண்டிருந்தன.பாதையின் இருபுறமும் குறைந்தது இரண்டு வருடங்களேனும் இருக்கும் இரு கொய்யா ,இரு சப்போட்டா மரங்கள்.போர்டிக்கோவிற்கு அருகில் ஒரு வேப்ப மரமும் அதனடியில் ஒரு நீண்ட கல் இருக்கையும் இருந்தது.பராமரிக்கப் பட்ட புல்தரையென வீட்டின் முன் ஒரு சிறு பூங்காவே காட்சி அளித்தது.'




'நேற்று இரவு வெளிச்சத்தில் இவற்றைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனதே!.ரசித்து,ரசித்து அமைத்திருக்கிறார்கள்'என மனதினுள் வெகுவாக பாராட்டினாள் மித்ரா.வெளியில் சென்று இவற்றை நங்கு ரசித்துப் பார்க்க வேண்டும் என ஆர்வபட்டாள் மித்ரா.




அதே வேகத்தோடு வெளியில் செல்ல நினைத்து கதவைத் திறக்க கையை வைத்தபோது “அதெல்லாம் வேண்டாம் அப்பா ?இந்த பொண்ணுங்களையே நம்ப முடியாது பா” என்று தன் தந்தையிடம் ரிஷி முறையிட்டுக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.அனிச்சை செயலாக வெளியில் செல்லாமல் தயங்கி நின்றாள்.மாடிப் படிகளில் நின்று கொண்டு ஜீவா அங்கிளும் ,ரிஷியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.மாடிப்படிகள் அவளிருந்த அறைக்கு அருகிலிருந்ததால் அவர்களின் பேச்சுக்குரல் தெளிவாகக் கேட்டது.




‘தந்தையும் மகனும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அதிலும் ரிஷியின் குரல் சிறிது கடுமையாக இருக்கிறதே!இப்போது வெளியில் சென்றால் வேண்டாத விருந்தாளி போல் நிற்க நேரிடும்’ என்பதை உணர்ந்த மித்ரா ‘சிறிது நேரம் கழித்துப் போகலாம் என்று கதவைவிடுத்து ஜன்னல்புரம் திரும்பி நடக்க எத்தனித்தாள்.




“இல்லடா ரிஷி..மித்ரா மிகவும் நல்ல பெண் டா..நீ நினைக்கிற மாதிரியான பெண் இல்ல டா..நீயே போக போக புரிந்து கொள்வாய் பாரேன்” என ஜீவானந்தம் கூறியதில் ‘தன்னைப் பற்றிய பேச்சு ‘ என்பதை உணர்ந்து மித்ராவின் கால்கள் மேலும் நகராமல் அவளையும் அறியாமல் நிலைத்து அப்படியே நின்றது.




“இல்லப்பா..இப்படிதான் சுமித்தாவும் வரும் போது நல்ல பெண் போலத் தோன்றியது.கடைசியில் என்ன நடந்தது பாத்தீங்கதானே.எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான்.அதுவும் இளம்வயது பெண்களை என்னால் இந்த ஜென்மத்தில் நம்ப முடியாது"என்று முடிவான குரலில் சொன்னான் ரிஷி.




"என்ன பேச்சு இதெல்லாம் ரிஷி..ஏதோ அன்று நடந்ததையே நினைத்துக் கொண்டு எல்லாப் பெண்களும் அப்படிதான் என்றுவிட்டு ,பெண்களையே வீட்டுக்குள் வரவிடுவதில்லை என்றால் என்ன முட்டாள்தனம்.மித்ராவிற்க்கு அங்கே சென்னையில் கொஞ்சம் பிரட்ச்சனைடா..அதுவும் அவள் பாட்டிவீட்டில் தானே இருக்கப் போகிறாள்.உனக்கென்ன கஷ்டம்?.சொல்லு"என்று அவனை நேரே பார்த்துக் கேட்டார் ஜீவானந்தம்.




அவர் தன்னை கேள்வி கேட்டது எதற்கு என்பதையுமறந்து, "ஓ...அதுதானே பார்த்தேன்.அங்கே அவளுக்கு பிரட்ச்சனையா?...என்ன எவனையாவது காதலித்து ஏமாற்றியிருப்பாள்.அதனால் அவள் முன்னாள் காதலன் ஏதாவது தற்கொலை செய்திருப்பான் முட்டாள்தனமாக.அந்தப் பையன் வீட்டில் அவளை பழி தீர்க்க தேடிக்கொண்டிருப்பார்கள்.அதற்கு ஒழிந்து கொள்ள ஒரு இடம் வேண்டும் இல்லையா?.அதுதான் பாட்டி வீடு இருக்கே என்று ஓடி வந்துவிட்டாளுக்கும்.அவர்களின் பெற்றோர்களும் போ மகளே என்று அனுப்பி வைத்தார்களோ!?அப்படிதானே அப்பா"என்று வெறி கொண்ட வேங்கை போல ரிஷி உறுமினான்.




"ஏ...ரிஷி..முன் பின் தெரியாத பெண்ணைப் பற்றி என்ன பேச்செல்லாம் பேசுகிறாய்"என்று ஜீவானந்தம் கோபத்துடன் கூறியதும் அதனைத் தொடர்ந்து என்ன ஜீவனந்தம் அங்கிள் பேசியதும் மித்ராவின் காதில் விழவே இல்லை.




ரிஷியின் இந்தப் பேச்சை கேட்ட மித்ரா அதன் பிறகு அவர்களின் பேச்சு வார்த்தையைக் கேட்கும் சக்தியற்றவளாக "அம்மா…"என்று தன் இருக் கைகளால் தன் காதுகளைப் பொத்திக் கொண்டு திரும்பிச் சென்று இருந்த கட்டிலில் கவிழ்ந்த வண்ணம் விழுந்தாள் மித்ரா.வெளியில் வர துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை வரவிடாமல் போராடிய வண்ணம் அவளது இமைகள் மூடாமல் தேக்கியது.




"என்னை இப்படி ஒருவன் எண்ணும்படி நான் என்ன தவறாக நடந்து கொண்டேன்"என்று அந்தக் கடவுளிடம் மன்றாடும் தோணியில் தன் விதியை நொந்தப் படி அங்கே அறையில் தொங்கவிடப் பட்டிருந்த பெருமாள் படத்தை வெறித்தபடி இருந்தாள் மித்ரா.




'ஒட்டுக் கேட்பவர்கள்,ஒருநாளும் நல்லதைக் கேட்பதில்லை'எனும் பழமொழிக்கேற்ப அவள் அறியாமல் அவள் செய்த ஒட்டுக்கேட்டலும் நல்லதாய் அமையவில்லை.




வெளியில் ஜீவானந்தம் தொடர்ந்து ரிஷியிடம் பேசினார்.




கோபம் குறையாமல் “இது கொஞ்சமும் சரியில்லை ரிஷி.ஒரு பெண் தவறு செய்தால் என்பதற்காக இருக்கும் எல்லாப் பெண்களும் அப்படிப் பட்டவர்கள்தான் என்றால் அது என்ன ஒரு முட்டாள்தனம். “ என்றார் ஜீவானந்தம்.




“ஆனா அப்பா” என மறுபடியும் பேச வாயெடுத்த ரிஷியின் பேச்சு “ நான் இன்னும் முடிக்கவில்லை ரிஷி” என்ற ஜீவானந்தத்தின் கண்டிப்பான குரலில் நின்றது.




"சாரி பா"என்றான் ரிஷி.




‘என்ன சொன்னாலும் இவன் மனம் மாறப் போவதில்லை.இவனைப் பேசவிடுவதும் சரியில்லை.இவனாக புரிந்து கொள்ளும் காலம் வரும்.அதுவரை முடிந்தவரை இவனிடம் இது தொடர்பாக பேசுவது சரியில்லை.’என முடிவெடுத்தார் ஜீவானந்தம்.




தொடர்ந்து “ இங்க பாரு ரிஷி.நீ என்ன சொன்னாலும் சரி.நான் மித்ராவை ஊட்டிக்கு அழைத்துச் செல்வதாக முடிவெடுத்துவிட்டேன்.அவள் தங்க போவது பாட்டியுடன் ,அந்த வீட்டில் .இங்கு நீ இருக்கும் இந்த வீட்டில் இல்லை.பாட்டி வேண்டாம் என்றால் அதன் பிறகு யோசித்திருக்கலாம்.ஆனால் நான் அம்மாவிடம் காலையிலே ஃபோனில் பேசிவிட்டேன்.அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.அவர்களின் சந்தோஷத்தை என்னால் குழைக்க முடியாது.அதனால் இந்தப் பேச்சை இதோடு விடு.உனக்கு பிடிக்கவில்லை என்றால் அவளுடன் பேசாமல் விட்டுவிடு.அவளும் புரிந்து கொள்வாள்.இதுதான் என் முடிவு.இதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிடப் போகலாம் வா” என அவன் பதிலுக்கு எதுவும் பேசவிடாமல் சொல்லித் தீர்த்துவிட்டு நடக்கலானார் ஜீவானந்தம்.




ரிஷியும் இனி எதுவும் செய்வதற்கில்லை என்பதை உணர்ந்து அமைதியாகத் தந்தையுடன் நடக்கலானான்.




இதையெதுவும் அறியாமல் சிறிது நேரம் பிரமைப் பிடித்தவள் போல அப்படியே கட்டிலில் கிடந்தாள் மித்ரா.வள்ளி வந்து கதவை தட்டும் ஓசைக் கேட்டப் பிறகுதான் நினைவுக்கு வந்தாள்.




உடனே “அங்...இதோ10நிமிடத்தில் வருகிறேன் வள்ளி.”என்று தன் குரல் நடுக்கத்தை மறைத்துக் கூறினாள் மித்ரா.




கதவைத் தட்டிய விதமாக “வாங்க சின்னம்மா..மல்லிகபூ இட்லி ரெடியா இருக்கு” என்று பாசத்துடன் அழைத்தாள் வள்ளி.




“ஓ...அப்படியா...இதோ வந்துட்டே இருக்கேன் வள்ளி..நீ போய்ட்டே இரு” என்று ஒருவாறு சமாளித்து சொன்னாள் மித்ரா.




“இல்லை..நீங்க..வாங்க சின்னம்மா.கதவைத் திறங்க முதலில்” என்று கெஞ்சும் விதமாகச் சொல்லி நின்றாள் வள்ளி.




‘இவள் பாசத்தை என்னவென்று சொல்வது’ இருந்த வேதனையிலும் அவசரமாக சோர்ந்திருந்த தன் முகத்தைச் சரி செய்யும்விதமாக தண்ணீர்னால் அடித்துக் கழுவினாள் ,முகத்தைத் துடைத்தவிதமாக "வா...வள்ளி..."என்று கதவை திறந்துவிட்டுத் திரும்பி கட்டிலைப் பார்த்தவிதமாக நடந்தாள்.




உள்ளே வந்த வள்ளி “ என்ன சின்னம்மா.ஒரு மாதிரி சோர்ந்து தெரியிரீங்க.ஒடம்புக்கு எதுவும் செய்யுதா?”என்று சொல்லிவிட்டு மித்ராவின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள் வள்ளி.




வள்ளியின் பாசமான செய்கையால் நெகிழ்ந்த மித்ரா சட்டென வள்ளியின் மடியில் அப்படியே முகம் பதித்து கட்டிலில் படுத்தாள்.




“என்னாச்சு சின்னம்மா” பதறியவிதமாக கேட்டாள் வள்ளி.




மித்ரா பேசாமல் அமைதியாகவே இருக்கவும்,அதனோடு அடிப்பட்ட குழந்தை தாய் மடியைத் தேடுவது போல அவள் இன்னும் சலுகையாக வள்ளியின் மடியில் தலையை வைக்கவும் வள்ளி எதுவும் பேசாமல் அவள் தலையை வருடிவிட்டாள்.




சிறிது நேரத்தில் மித்ராவே சுயநினைவு வந்தவளாகத் தெளிவுடன் நிமிர்ந்து “அ..அது ஒன்றுமில்லை வள்ளி..அ..அம்மா நினைவு வந்துடுச்சு அதான்.வேறதுவுமில்லை.நா..ஒரு ஃபோன் பேசிட்டு வரட்டுமா…. ?நீ போகிறாயா?”என்று திக்கி திணறி சொன்னாள் மித்ரா.




“ஓ… சரிங்க சின்னம்மா” என்ற வள்ளி, ‘ஃபோனில் அம்மாவிடம் பேசிவிட்டு வரட்டும்’ என நினைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.




மிகவும் தாமதப் படுத்தாமல் மித்ராவும் டைனீங் டேபிளுக்கு வந்து சேர்ந்தாள் மித்ரா.




அவள் அமர்வதற்கு என வசதியாக ரிஷி,அவனருகே இருந்த நாற்காலியை இழுத்தான். ‘வெளியில் வரவேற்பு போலவும் உள்ளுக்குள் வெறுக்கவும் எப்படி இவனால் முடிகிறது’ என்று நினைத்து அந்த நாற்காலியை விடுத்து, ஜீவா அங்கிளின் அருகில் சென்று அமர்ந்தாள் மித்ரா.




“என்ன மித்ராமா..ஒழுங்காகத் தூங்கினாயா?”என்று பாசமாக மித்ராவை கேட்டார் ஜீவானந்தம்.




“ம்… அங்கிள்” என்ற ஒற்றைச் சொல்லை பதிலளித்துவிட்டு இரண்டு இட்லியை தன் தட்டிலிட்டுக் கொண்டாள் மித்ரா.




அப்போது ரிஷியின் இடப்புருவம் உயர்ந்து அவளை நோக்கியது.அதையுணர்ந்தும் மித்ரா அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அமைதியாக உண்டுவிட்டு அவள் அறை சென்றுவிட்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ இங்கு வரும் முன்பே சென்னையில் ஆல்ரெடி ஒரு மோதலா?
உன்னை லிப்டில் பார்த்ததை ரிஷி மறந்திருப்பான்னு நீ நினைத்தது
ரொம்ப தப்பு, மித்ரா
ஹா ஹா ஹா
ஆனால் பாட்டி வீட்டுக்குக் கூட மித்ராவை அனுப்பக் கூடாதுன்னு ஏன் ரிஷி சொல்லுறான்?
அந்த சுமித்தாங்கிற பெண் அப்படி என்னதான் செய்து தொலைத்தாள்,
யோகா டியர்?
அய்யய்ய
இந்த மித்ராப் பொண்ணு என்ன ஆன்னா ஊன்னா அளுவுது
இது சரியில்லையே
போல்டா தைரியமா கெத்தா இருக்க வேண்டாமோ, மித்துப் பெண்ணே
 
Last edited:

Ivna

Active Member
:eek::eek:Enna ipdi aagitu...
Ponga...nan unga kooda sandai Rudhra sis...iniyati mithrava alama parthukuveenga ninachaa ipdi paniteengalae!!!(n)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top