உனக்காகவே நான் - 4

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்-4

Heroin.jpg
இவரை எங்கோப் பார்த்தது போல் இருக்கிறதே. !’ என்று யோசித்த மித்ரா , சட்டென நினைவு வந்தவளாக ‘அச்சோ. இவரா?!!’ என்று அவசரமாக முன்புரம் திரும்பிவிட்டாள். ‘நல்லவேளை வர்மா இன்ஃபொ டெக்கில் வேலை செய்யப் போவதில்லை’ என்று பெருமூச்சுவிட்டாள் மித்ரா.



அவன் கண்கள் மித்ராவைப் பார்த்தது ஒரு வினாடிதான் என்றாலும், அதற்குள் அவனது கண்கள் மின்னி பழைய நிலைக்கு வந்தது.



தன் சின்னய்யாவைப் பார்த்ததில் மும்முரமாக முத்துவும் , தன் மகனைப் பார்க்க ஆர்வத்தில் ஜீவானந்தமும் இருந்ததில் மித்ராவை யாரும் கண்டு கொள்ளவில்லை.



அவள் இவ்வாறு சட்டென முகம் திருப்பியது பார்த்து நமட்டு சிரிப்புடன், ‘இவள்தான் அப்பாவின் நண்பரின் மகளோ. மித்ரா.. பெயர் நன்றாகத்தான் இருக்கிறது.’ என்று எண்ணமிட்டவிதமாக வேண்டுமென்றே மித்ராவிற்கும் முத்துவிற்கும் இடையில் வந்து நின்றான் ரிஷி.



அவன் அருகில் நின்றதும் அவளுக்குப் பயத்தில் மேல் மூச்சு எடுத்தது. ‘என்ன இது. இவனுக்கு ஏன் இப்படிப் பயப்படுகிறோம்.’ என்று புரியாமல் தரையை நோக்கி விழித்தாள் மித்ரா. ‘தன்னை கண்டுப்பிடித்துவிடுவானோ?!. கண்டுபிடித்தாலும் என்ன செய்துவிட முடியும்.? அதுதான் அங்கிள் இருக்கிறாரே! அதனோடு நான் எதுவும் தவறாக பேசிவிடவில்லையே ’ என்று நிமிர்வுடன் நின்றாள் மித்ரா.



“ஓ...சரிதான் அப்பா.. இவள்தான் அந்த மகாலட்சுமியா?” என்று அவளுக்கு வெகு அருகில் வந்து நின்று தன் இரு பேண்ட் பாக்கடிலும் கையைவிட்டு ஸ்டைலாக நின்று அவளைத் தலைமுதல் கால்வரைப் பார்த்தான் ரிஷி.

ரிஷி தன்னையேப் பார்த்தவிதத்தில் விரல்கள் நடுங்க ‘என்ன இவன் இப்படிப் பார்க்கிறான். அவன் கண்ணிலிருந்து மறைந்து ஓடிவிட வாய்ப்பிருக்காதோ’ என்று தோன்றிற்று மித்ராவிற்கு.



“ம்ம்... !!” என்று தன் முகவாயை தடவியவிதமாக மித்ராவை நோக்கி “உன் கணிப்பு சரிதான் முத்தய்யா. இவள் அழகாகத்தான் இருக்கிறாள்.” என்று புன்னகைத்தான் ரிஷி.



ஜீவானந்தனும் , முத்துவும் சத்தமிட்டு சிரித்தனர். “அது சரி” என்றார் ஜீவானந்தம்.



தன்னை ரிஷி அழகு சொல்லியவிதத்தில் மித்ராவின் கன்னம் சூடேறியது. ‘தன்னை அழகு என்று எத்தனையோபேர் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி என்று சொல்லிவிட்டு இயல்புப் போலத்தான் இருப்பாள் மித்ரா. குறைந்தபட்சம் புன்னகையாவது செய்வாள். ஆனால் இன்று ஏன் இவன் தன்னை பாராட்டியதில் எந்த வார்த்தையும் வராமல் உதடுகள் இரண்டும் இன்னும் ஒட்டிக்கொண்டன. ’ என்று புரியாமல், சூடேறிய கன்னத்தை தன் சில்லிட்ட கையால் தடவி விட்டாள் மித்ரா.



பேச வார்த்தைகள் எழாமல் அவளது உதடுகள் சண்டித்தனம் செய்தது. திரும்பவும் அவள் அறியாமல் அவள் கண்கள் தீவிரமாகக் கால் நகங்களைப் பார்த்தது.



இவள் முகமாற்றங்களை பார்த்து ரசித்த ரிஷி முத்துவிடம் திரும்பி “சரி.. முத்தய்யா நீங்க லக்கெஜை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வையுங்கள். நாங்க இதோ வருகிறோம்” என்றான் ரிஷி.



“சரிங்க.. சின்னய்யா..” என்று முத்து உள்ளே சென்றுவிட்டார்.



“மித்ரா மா. இவன்தான் ரிஷி.. என் மகன்.. வர்மா இன்ஃபொ டெக் , கோவை branch - ன் MD” என்று கண்களை சிமிட்டிச் சிரித்தார் ஜீவானந்தம்.



ஜீவா அங்கிளைப் பார்த்து “ஓ..” என்று இன்னும் விலகாத வெட்கத்தின் நடுவே வார்த்தைகள் வராமல் திணறினாள் மித்ரா.



அவளது மௌனத்தைக் கலைக்கும் விதமாக ரிஷியே பேச்சை ஆரம்பித்தான்.“ஹலோ. மிஸ் மித்ரா” என்று அவள்புரமாக கையை நீட்டினான் ரிஷி.



அவள் காரிலிருந்த அங்கிளை ஒருமுறை பார்த்துவிட்டு அவர் சிரிப்பு மறையாமல் தன் மகனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து , ‘இவன் தன்னை கண்டு பிடிக்கவில்லை. ஹப்பா..’ என்று பெருமூச்சுவிட்டு ‘இல்லை என்றால் இப்படி இலகுவாக பேசுவானா?.’ என்று எண்ணி “ஹ..ல்லோ..” என்று திக்கி திணறி கைகளை நீட்டினாள் மித்ரா. நீட்டிய வினாடிப் பொழுதில் கையை இழுத்துக் கொண்டாள்.



இதை எதிர் பார்த்தவனைப் போல் இலகுவாக தன் அப்பாவின்புரம் திரும்பினான் ரிஷி.



“அப்பா நீங்களும் வண்டியைவிட்டுவிட்டு வாங்கப்பா. நேரமாகிறது இல்லையா?” என்று கேள்வியும் பதிலுமாக ஜீவானந்ததை நோக்கிச் சொன்னான் ரிஷி.



“சரிடா ரிஷி. நான் காரை ஷெட்டில் விட்டுவிட்டு வருகிறேன். நீ மித்ராவை உள்ளே அழைத்துச் செல்” என்று கார் இஞ்சினுக்கு உயிர் கொடுத்தார் ஜீவானந்தம்.



“இல்லை.. அங்கிள் நீங்களும்..” என்று அவசரமாக அவள் சொல்லியது ஜீவானந்தின் காதில் விழுந்தது போல தெரியவில்லை. கார் ஷெட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.


“ஏன் என்னுடன் வரப் பயமா?”என்றுவிட்டு அவளைப் பார்த்தான் ரிஷி.பதில் எதுவும் அவளிடமிருந்து வராததும் இவள் இன்னமும் தரையில் ஏதோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பதை உணர்ந்து புன்னகைத்து தொடர்ந்து பேசினான்.




“நான் என்ன சிங்கமா?இல்லை புலியா?”என்று நயமாக ஏற்ற இறக்கத்துடன் கேட்டான் ரிஷி.




‘சிங்கமா?புலியா?’என்று அவன் வினவியதில் ரிஷியைச் சட்டென நிமிர்ந்து பார்த்து ‘அதே வார்த்தைகள்.என்ன அன்று திமிராகவும் நக்கலாகவும் ஒலித்த வார்த்தைகள்,இன்று நயமாகவும் அக்கறையுடனும் ஒலிக்கிறது.அப்போ இவன் அன்று நடந்ததை மறக்கவில்லையா?!.இல்லை ஒருவேளை இது இவனுடைய வழக்கமான டயலாக்கா!’என்று எண்ணியவிதமாக “அதெல்லாம் ஒன்றுமில்லை.நீங்கள் என்னை என்ன செய்துவிடமுடியும்” என்று மிடுக்காகப் பதில் அளித்தாள் மித்ரா.




“அப்பறம் என்ன? “ என்று தன் இருக் கைகளையும் நீட்டி பணியாளனைப் போல் “தேவியார் என்னுடன் உள்ளே வரலாமே” என்றான்.




“என்ன தேவியா?.என் பெயர் மித்ரா” என்று அவசரமாகச் சொன்னாள் மித்ரா.




“அது...சரி..அந்தகாலத்து ராஜகுமாரிப் போல எண்ணி தேவி என்று சொன்னால் ...நீ என்னமோ உளறுகிறாயே?”என்றான் ரிஷி.




“ஓ...அதுதான் இல்லையா?சாரி சார்.நான் எதோ குழப்பத்தில் உளறிவிட்டேன்” என்று கடினப் பட்டு புன்னகைத்து ‘என்ன இது.?தன்னை ஒருமையில் அழைக்கிறான்.!!!சிறிய பெண் என்றாலும்.,அறிமுகமில்லா பெண்ணிற்கு சிறிது மரியாதைக் கொடுத்திருக்கலாம்தான்.குரு அண்ணா கூட முதலில் பன்மையில்தான் பேசினார்.பிறகு தன்னுடைய வற்புரதலில் பெயரில்தான் வாங்க போங்க எல்லாம் இப்போது சொல்வதில்லை.ஏன் இவனே ஃபோனில் பேசியபோதும் மரியாதையுடன் தானே பேசியது.ஆனால் இன்று என்னமோ இவன் வீட்டுப் பெண் போலப் பார்த்த அன்றே இப்படிப் பேசுகிறான்‘ என்று ஒன்றுமில்லாத விஷயத்திற்கு குறைபட்டவளாக அவனுடன் இணைந்து நடந்தாள் மித்ரா.




“ம்ம்..”என்று பதிலுக்கு புன்னகைத்து , “பலமான யோசனையோ?”என்று வினவினான் ரிஷி.




“இ..ல்லை.அதெல்லாம் ஒன்றுமில்லை சார்.லேசாக தலைவலிக்கிறது” என்று திக்கி திணறி சொன்னாள் மித்ரா. ‘இவ்வளவு நேரம் இவன் தன்னையா?கவனித்துக் கொண்டிருந்தான்.இவனிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.’என்று தலையை சிலுப்பிக்கொண்டு நடந்தாள்.




“ஓ...சரி..நீண்ட தூர கார் பயணம் பழக்கமில்லையோ?.”என்று கேட்டான் ரிஷி.




“ஆமாம்..கார் மட்டுமில்லை.எந்த வாகனத்திலும் அதிக தூரம் பயணித்ததில்லை.”என்று ‘பயணிக்க வேண்டிய அவசியம்தான் இதுவரை ஏற்படவில்லையே ?’என நினைத்தாள் மித்ரா.




அவள் சொல்லியவிதத்தில் வியக்கும் பார்வையுடன் அவளை நோக்கிவிட்டு “ஓ..சரி உட்கார்.”என்று ஷோஃபாவை காட்டி மித்ராவை அமரச் சொன்னான்.பிறகு “சென்னைதான் பூரிவீகமோ?”என்று வினவினான் ரிஷி.




ஷோஃபாவில் அமர்ந்தவிதமாக “ஆமாம்.சென்னையைவிட்டு நான் எங்கும் போனதில்லை.எங்கும் போய்விட்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதுமில்லை” என்றாள் மித்ரா.




“ம்ம்..இனி இது பழக்கமாகி போகும்.குளித்துவிட்டுவந்து சாப்பிட்டு தூங்கினால் தலைவலியும் சரியாகிவிடும்” என்றான் ரிஷி.




“ம்ம்..”என்றுவிட்டு அங்கிள் வரவை நோக்கி வாசலைப் பார்த்தாள் மித்ரா ‘இன்னும் எவ்வளவு நேரம் இவனுடன் தனியே அமர்ந்திருப்பது.’என்று படபடக்கும் இதயத்துடன் அமர்ந்திருந்தாள்.




அப்போது “அம்மா..தண்ணீர் குடிங்க மா” என்று முத்துவின் மனைவி வள்ளி தண்ணீர் தம்ளரை மித்ராவிடம் நீட்டினாள்.




அவளைப் பார்த்துவிட்டு நேசமாகப் புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கிக் கொண்டாள் மித்ரா.




தண்ணீரைக் கொடுத்த பிறகு தன் இடக்கையை இடுப்பின் குறுக்காக வைத்து,வலக்கையை கன்னத்தில் தாங்கிப் போல வைத்து வியய்ப்புடன் மித்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் வள்ளி.




“சின்னய்யா.என் வூட்டுகாரர் சொன்னது போல இந்த அம்மா ரொம்பவும் அழகா இருக்குதுங்க” என்று தன் இருக்கைகளாலும் மித்ராவின் முகத்தின் அருகே சுற்றி நெட்டி முறித்தாள் வள்ளி.




வள்ளி நெட்டி முறித்ததை எதிர் பாராத மித்ரா கடினப்பட்டு புன்னகை செய்து தம்ளரை வள்ளிடம் நீட்டினாள்.




வள்ளியின் செய்கையில் ‘தன் அம்மாவின் நினைவில் முகம் வாடினாள் மித்ரா. ‘அம்மாவும் இப்படிதானே அடிக்கடி செய்வார்கள்.’என்று எண்ணியவளின் கண்கள் லேசாகக் கலங்கவும் செய்தது.உடனே நினைவு வந்தவளாக ‘அச்சோ என்ன இது.ரிஷியும் இந்த வேலைக்கார பெண்மணியும் தன்னை பார்க்கப் போகிறார்கள்’ என்று அவசரமாக அவர்களை நோக்கினாள் மித்ரா.


ரிஷி வள்ளியிடம் ஏதோ உணவு எடுத்துவைக்குமாறு சொல்லிக் கொண்டிருந்தான். ‘ஹப்பா நல்ல வேளை’ என்று இருந்தது மித்ராவிற்கு.




‘அதனோடு இவளுடைய கணவனுக்கு என்னை எப்படித் தெரியும்'என்று யோசித்தவிதமாக ரிஷியைப் பார்த்தாள் மித்ரா




“வள்ளி இவள் பெயர் மித்ரா.அப்பாவின் நண்பர் மகள்..மித்ரா இவள் வள்ளி.முத்தய்யாவுடைய மனைவி.இங்குச் சமைப்பதும் இவள்தான்.நல்லா சமைப்பாள்.ஒருமுறை சாப்பிட்டாய் என்றால் இந்த வீட்டைவிட்டுப் போகமாட்டாய்.”என்று வள்ளியின் பெருமை சொல்லிச் சிரித்தான் ரிஷி.




ரிஷி சொல்லியதையெல்லாம் வள்ளியைப் பார்த்த வண்ணம் சிறு மென்னகையுடன் அமர்ந்திருந்தாள் மித்ரா”ஓ இவள் முத்தைய்யாவின் மனைவியா?அதுதான் அவர் உள்ளே வந்ததும் தன் மனைவியை நாடிச் சொல்லியிருப்பார் போல.ஆனால் என்ன இது வந்ததிலிருந்து தன்னை சுற்றியே வார்த்தைகள் நகர்கின்றன’ என்று சங்கடத்திற்குள்ளானாள் மித்ரா.




“இங்க இருக்கிறவரைக்கும் சாப்பாட்டைப் பத்தி கவலையே படாதிங்க சின்னம்மா!நான் இருக்கிறேன் இல்ல” என்று தன் சமையல் பெருமையை சொல்லி புன்னகைத்தவிதமாக சென்றேவிட்டாள் வள்ளி.




‘சின்னம்மாவா!!.என்ன அதற்குள் இவ்வளவு உரிமையுடன் பேசுகிறாள்.மித்ராவென்றே கூப்பிடலாமே.இது என்ன தன்னை இந்த வீட்டுப் பெண் போலச் சின்னம்மா என்று அழைக்கிறாளே.இந்த ரிஷி தன்னை என்னவென்று நினைப்பான்.இல்லை இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தப் பழக்கமோ.வீட்டுக்கு வருவோரிடம் எல்லாம் இப்படிதான் உரிமையுடன் பழகுவார்களோ’ என்று வியப்புடன் விழிகள் விரிய வள்ளிச் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ரிஷியைப் பார்த்தாள் மித்ரா.




அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி அவள் யோசித்துக் கொண்டே இருப்பதை உணர்ந்து மித்ராவை நோக்கி “மித்ரா உனக்குத் தலைவலி அதிகம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.குளித்துவிட்டு வருகிறாயா..சாப்பிட்டுத் தூங்கினால் சரியாகிவிடும்.இல்லை முதலில் சாப்பிடுவது என்றாலும் சரிதான்” என்று வினவினான்.




“நா..ன் குளித்துவிட்டு வந்து,அதன் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்.” ‘எங்குச் சென்று குளிப்பது?எந்த அறையில் தன் லக்கெஜ் இருக்கிறது’ என்று கண்களால் ஆராய்ந்த படி பதில் அளித்தாள் மித்ரா.




அவள் கண்கள் எதையோ ஆராய்வதை உணர்ந்து “மேலே மாடியில்தான் guestரூம்.முத்தய்யா அங்குதான் உன் லக்கெஜை எடுத்துச் சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்.வா போகலாம்.”என்று மித்ராவை அழைத்தான் ரிஷி.




‘என்ன படியில் ஏற வேண்டுமா?தன் இடது முட்டிக்காலை ஒருமுறை தொட்டுப் பார்த்து எப்படி ஏறுவது.இப்போது அங்கிள் வந்தால் நல்ல இருக்குமே’ என்று வசலை ஒருமுறை பார்த்துவிட்டு ‘அவர் இன்னும் வரவில்லை.’என்பதை அறிந்து ,தயங்கி பின் ரிஷியுடன் நடக்க எழுந்தாள் மித்ரா.




அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஜீவானந்தம் “இல்லடா ரிஷி..மித்ரா கீழே ,என் அறையில் தங்கிக் கொள்ளட்டும்.நான் இன்று guestரூமில் தங்கிக் கொள்கிறேன்” என்றார்.




தன் அப்பாவையும் மித்ராவையும் யோசனையுடன் பார்த்துவிட்டு,ஜீவனந்ததின் கண்களில் எதையோ கண்டு “சரிப்பா..”என்று மித்ராவை ஜீவானந்ததின் அறைக்கு அழைத்துச் சென்று அறையில் விட்டுவிட்டு “ குளித்து விட்டு வா.இதோ..இங்க இருக்கிறது குளியல் அறை.இதில் சுடுநீர் வரும் .இதில் குளிர்ந்த நீர் வரும்” என்று சொல்லிவிட்டு ஹீட்டர் switch -ஐonசெய்துவிட்டு குழாய்களையும் சுட்டிக்காட்டிவிட்டு அவள்புரம் திரும்பினான் ரிஷி.




அவள் இன்னும் சங்கடம் மறையாதவளாக “ம்ம்.. “ என்று தன் துணிகளை எடுக்கவென்று தன் பை பக்கம் திரும்பினாள் மித்ரா.




அவளைத் திரும்பவும் யோசனையோடு பார்த்துவிட்டு "தண்ணீர் சூடாகட்டும்.இரண்டு நிமிடம் களித்து குளிக்கச் செல்"என்றான் ரிஷி.




"சரிங்க சார்"என்றாள் மித்ரா.




‘அவள் ஏன் தன்னைக் கண்டு இப்படிப் பயப்படுகிறாள்’ என்று எண்ணி அவளை இயல்பாகப் பேச வைக்கும் முயற்சியாகத் தொடர்ந்து பேசலானான் “அப்பறம் மித்ரா..நீ திக்கு வாயா என்ன?”என்றான் ரிஷி.




“இ..ல்லையே.ஏன் அப்படிக் கேட்கறீங்க?’என்று அவனை அன்னார்ந்து பார்த்து,புரியாமல் விழித்துக் கேட்டாள் மித்ரா.




“இ..ல்லை.நீதான் வந்ததிலிருந்து திக்..காமல் ஒரு வாக்கியமும் பேசவில்லையே.வீராப்பாகப் பேசும்போது மட்டும்தான் சரளமாக வார்த்தைகள் வருமோ என்று எண்ணிவிட்டேன்” என்று அவளைப் போலவே திக்கிப் பேசிக்காட்டி சிரித்தான் ரிஷி.




“அச்சோ..அதெல்லாம் ஒன்றுமில்லைங்க.புதுசா யாரிடமும் பேசும் போது எனக்கு இப்படித் திக்கும்.பேசப் பேச சரியாகிவிடும்” என்று தன் இயல்பை எடுத்துச் சொன்னாள் மித்ரா.




“அது...சரி.நீ குளிச்சிட்டு சீக்கிரம் வா” என்று அவளது பதிலுக்கு காத்திராமல் அறையைவிட்டு தன் தந்தையை நோக்கி “ அப்பா..”என்று அழைத்தவிதமாக சென்றுவிட்டான் ரிஷி.




ரிஷி சென்ற பிறகு , ‘ஹப்பா..இது என்ன?இவனுடன் பேச இவ்வளவு பயமா இருக்கு!எப்படியோ கிளம்பிவிட்டான்!’என்று பெருமூச்சுவிட்டவளாக அங்கிருந்த கட்டிலின் மேல் அமர்ந்தாள் மித்ரா.




சரியாக இரண்டு நிமிடம் ஆன பிறகு தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க எழுந்தாள் மித்ரா.




அப்போது “சின்னம்மா..ஒரு நிமிஷம் இருங்க அம்மா.”என்று வள்ளி காபியை ஆற்றிய வண்ணம் ரூமினுள் நுழைந்தாள் வள்ளி.




வள்ளியின் குரல் கேட்ட மித்ரா அவள்புரம் திரும்பி “வாங்க வள்ளி..ஏன் என்னாச்சு?”என்று புன்னகைத்தவிதமாக கேட்டாள் மித்ரா.




“ ஒன்னுமில்லைங்க.இந்தச் சுக்கு காபியை குடிச்சிட்டு போயிடுங்க.குளிருக்கு இதமா இருக்குமுங்க..கையெல்லாம் சில்லிட்டு இருந்ததாமே.சின்னய்யா சொன்னாரு..”என்று காபியை அவள் கையில் திணித்துவிட்டு.மித்ராவின் இடக்கையில் இருந்த துணியை உரிமையுடன் வாங்கி கட்டிலில் வைத்தாள் வள்ளி.




“இந்தா..உங்க கையைக் குடுங்க.”என்று அவளது இடக்கையைச் சூடு பரப்பத் தேய்த்துவிட்டாள் வள்ளி.




‘என்ன இந்தப் பெண் இவ்வளவு பாசமாக இருக்கிறாள்?!.நேற்றுவரை நான் யாரென்றும் தெரியாது.இன்று சின்னம்மா சின்னம்மா என்று உரிமை பாராட்டி.என் நலனில் என்ன ஒரு அக்கறை.!!அதனோடு என் கைகள் சில்லிட்டு இருந்தது ரிஷிக்கு எப்படித் தெரியும்?.’என்று வள்ளியின் செய்கையை பார்த்தவிதமாக யோசிக்கலானாள் மித்ரா.




‘ம்ம்...வெளியில் போர்ட்டிக்கோவில் கை கொடுத்தப் போது கண்டிருப்பாரோ...அப்படிதான் இருக்கும்’ என்று எண்ணி அமைதியுற்றாள் மித்ரா.




“ஏன் சின்னம்மா?அப்படி பார்க்கிறீங்க.குடிங்க..நல்ல இருக்கும்.”என்று மித்ராவை உந்தினாள் வள்ளி.




“ம்ம்...சரிங்க வள்ளி..”என்று அந்தச் சுக்கு காபியைக் குடித்தாள் மித்ரா.




“இங்க பாருங்க சின்னம்மா.வாங்கப் போங்க எல்லாம் வேண்டாம்.நீ வா போ என்று கூப்பிடுங்க.சின்னய்யாவைப் போல...எனக்கு அதுதான் பிடிக்கும்.”என்று செல்லமாக சிணுங்கினாள் வள்ளி.




‘தன்னைவிட நிச்சயம் வள்ளி பெரியவளாகத்தான் இருப்பாள்.ரிஷியைவிடச் சிறியவளாக இருக்கலாம்.ஆனால் இப்படிக் கெஞ்ச கேட்கும் வள்ளியிடம் வீம்புக் கொண்டு இல்லை இல்லை வாங்கப் போங்க என்றுதான் கூப்பிடுவேன் என்றால் வருத்தப்படுவாள்’ என்று யோசித்து பின் புன்னகைத்தவிதமாக “சரி வள்ளி.இனி அப்படியே கூப்பிடுகிறேன்.ஆனால் ஒரு நிபந்தனை."என்று கைகளைத் தேய்த்துக் கொண்டிருந்த வள்ளியைப் பார்த்து புதிராகச் சொன்னாள் மித்ரா.




“ஹைய்யா..”என்று கழுகென்று சிரித்த வள்ளி "ஆனா அது என்ன சின்னம்மா நிபந்தனை?"என்று சின்னப் பிள்ளையைப் போலக் கேட்டாள்.




"நீயும் என்னை மித்ராவென்றே கூப்பிட வேண்டும் சரியா.?வாங்க போங்க எல்லாம் கூடாது.”என்று கண்களை சிமிட்டிக் கேட்டாள் மித்ரா.




"அது வந்து..."என்று தலையை சொரிந்த வண்ணம் சிணுங்கலாய் மித்ராவைப் பார்த்தாள் வள்ளி.




"என்ன வள்ளி"அப்படிப் பார்க்கிற.முடியாத காரியம் எதாவது சொல்லிவிட்டேனா?!என்ன?"என்று கேள்வியும் பதிலுமாய் கேட்டாள் மித்ரா.




"இல்ல சின்னம்மா...எனக்கு இப்படி கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு.அதுதான்..."என்று இழுத்தாள் வள்ளி.




"அட இவ்வளவுதானா!இதுதான் உனக்கு புடிச்சது என்றால்,அப்படியே கூப்பிட்டுக்கோ! " என்று செல்லமாக வள்ளியின் கன்னத்தில் தட்டினாள் மித்ரா. 'வயது பெரியவளாக வள்ளி இருந்த போதும் இன்னமும் சின்னப் பிள்ளை போல இருக்கிறாள்'என நினைத்தாள் மித்ரா.




அனைத்து அரிசிப் பற்களும் தெரியுமாறு சிரித்து “ நீங்க எவ்வளவு அருமையா பேசுறீங்க .அந்த சுமித்தா பொண்ணு வந்துச்சுனா? “ என்று ஆரம்பித்த வள்ளியின் பேச்சு “வள்ளி” என்று அழைத்த ரிஷியின் குரலில் நின்றது.




‘இதோ..வந்துட்டேனுங்க சின்னய்யா” என்று அறை வாசலை நோக்கிச் சொல்லிவிட்டு அவசரமாக மித்ராவின் பக்கம் திரும்பி “சின்னம்மா..எல்லாத்தையும் குடிச்சிடுங்க.குடிச்சிட்டு இந்த டேபிளின் மேல வச்சிடுங்க.நா அப்பறமா வந்து எடுத்துக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே சென்றாள் வள்ளி.




“சரி வள்ளி.நீ பார்த்துப் போ..இடித்துக் கொள்ள போகிறாய்” என்று கதவில் இடித்துக் கொள்ள இருந்தவளை எச்சரிக்கை செய்தவிதமாக சொல்லிச் சிரித்தாள் மித்ரா.




“சரிங்க சின்னம்மா..”என்று தலையை சொரிந்து அசடு வழிந்தவளாக அறையைவிட்டு அகன்றாள் வள்ளி.




‘சின்னப் பிள்ளையைப் போல சிட்டென பறந்துவிட்டாளே!’என்று வள்ளியை எண்ணி வள்ளி கொடுத்த காபியை குடித்துவிட்டு தம்ளரை டேபிலில் வத்தாள் மித்ரா.




அப்போது ‘யாராக இருக்கும் அந்த சுமித்தா?என்று யோசித்தாள் மித்ரா.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மித்ரா தேவி ஒருவர்னு ரிஷிக்கு தெரியுதா இல்லையா???
மித்ராவும் ரிஷியை ஏற்கெனவே பார்த்திருக்கிறாள்........
சுமித்ரா ???

வீட்டுல சோபால உக்கார்ந்து தண்ணீர் குடிச்ச அப்புறம் போர்டிகோ ல இருந்து உள்ளே வராமல் பேசுற மாதிரி வருது.........
paragraphs கொஞ்சம் மாறியிருக்குதுன்னு தோணுது யோகி @Yogiwave ...... செக் பண்ணுங்க.......
 
Last edited:

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

மித்ரா தேவி ஒருவர்னு ரிஷிக்கு தெரியுதா இல்லையா???
மித்ராவும் ரிஷியை ஏற்கெனவே பார்த்திருக்கிறாள்........
சுமித்ரா ???

வீட்டுல சோபால உக்கார்ந்து தண்ணீர் குடிச்ச அப்புறம் போர்டிகோ ல இருந்து உள்ளே வராமல் பேசுற மாதிரி வருது.........
paragraphs கொஞ்சம் மாறியிருக்குதுன்னு தோணுது யோகி @Yogiwave ...... செக் பண்ணுங்க.......
Thanks yar.. some copy paste error .. correctef
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top