உனக்காகவே நான் - 29

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 29
Heroin.jpg

“ம்ம்..”என்றாள் மித்ரா.


அவர்கள் பேசிக் கொண்டே இருந்ததில் லேசாக இருட்டவும் ஆரம்பித்திருந்தது. “ சரி வா மது...மாடிக்குப் போகலாம்.அந்த பால்கனிக்கு.இன்றும் பௌர்ணமி. “ எனச் சொல்லி அவள் கையை விடாமலே அந்த பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.எந்த வார்த்தைகளும் வரவில்லை என்ற போதும் அவனுடன் இணைந்து நடந்தாள் மித்ரா.


அன்று போல் இன்றும் அதே சூழ்நிலை.மித்ராவினுள் உற்சாக பெருமூச்சு உண்டானது.லேசாக அப்போதுதான் சந்திரன் அவன் வெண்ணிற ஓளியை வீச ஆரம்பித்திருந்தான்.அந்த வெளிச்சத்தில் மித்ராவின் அழகு பல மடங்கு பெருகியது.அதனை வைத்த கண் எடுக்காமல் பார்த்த ரிஷி “அன்று ஓடியது போல் இன்று உன்னை ஓட விட மாட்டேன்” என்று அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் நிறுத்தினான்.


எதுவும் சொல்லவில்லையென்றாலும் அவள் முகம் செங்கொழுந்தானது.சில வினாடிகள் மௌனமாக அந்த நிலை நீடித்தது.ஆனால் ரிஷியே தன்னிலைக் கொண்டான்.காலை இதே போன்ற அணைப்பில் அடிப்பட்ட குழந்தையாய் கலங்கிய மித்ராவின் முகம் அவனுக்கு நினைவு வந்தது.


“ம்ம்கும்...முழு விளக்கமும் தந்ததால் தான் எனக்கு பாரம் குறையும் என அவளை விலக்கி அவளது ஒரு கையை மட்டும் பற்றி பால்க்கனியின் கைப்பிடிச் சுவரில் மறுக்கை ஊன்றி சாய்ந்த வண்ணம் பேச ஆரம்பித்தான் ரிஷி.


அவளும் அதற்காக தானே காத்திருக்கிறாள்.அவளும் அவனையே தொடர்ந்து அவன் போலவே நின்று “ம்ம்...ஆமாம் ரிஷி” என்றாள்.


“அன்று அதன் பிறகு உன்னை உன் அறையில் தூக்கி வந்து உறங்க வைத்தேன். உன் மனம் தெளிவாக உணர்ந்ததால் உன் நினைவிலே சுகமாக உறங்கியும் விட்டேன்.”என்றான் ரிஷி.


அவன் கூறியதும் “ம்ம் ...ஆனால் சுபலாவின் சந்திப்பு என்னை நானே கண்டு கொள்ளச் செய்தது உண்மையென்றாலும்.அதுவே என்னை வேறு சிலதும் சிந்திக்கச் செய்தது.அன்று இரவுதான் உங்கள் மீதான என் காதலை நான் உணர்ந்தேன்.ஆனால் அச்சம்.உங்களுக்குப் பெண்கள் என்றால் வெறுப்பு.ஏதோ என்னிடம் அதிசயமாக நன்றாக பேசிகீறீர்கள்.என் காதல் தெரிந்தால் என்னைத் தவறாக எண்ணுவீர்களோ!மீண்டும் பெண்களை வெறுத்து ஒதுக்கி விடுவீர்களோ!என்ற எண்ணம் தோன்றியது.அற்பாயுள் கொண்ட காதலே ஏன் வந்தாய் என்று அன்று இரவு முழுதும் அழுதேன்.அதனாலே காய்ச்சலும் வந்துவிட்டது.”என்றாள் மித்ரா.


“என்ன மித்ரா.இப்படியா உன்னை வருத்திக் கொள்வது.உனக்கு உடல் நிலை சரியில்லாததால் அன்று நான் எவ்வளவு தவித்துவிட்டேன் தெரியுமா?அப்பாவிடம் கேட்டால் அப்போதுதான் உன்னைப் பற்றிய முழு விவரம் தெரிகிறது.தேவியென்று.அன்று இரவு என் மார்பில் அழுதாய் பார்.என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அப்பா சொன்னது போல உன் பெற்றோரின் புகைப் படத்தைத் தேடினேன்.அது அங்கு இல்லை.உடனே குன்னூர் சென்று புகைப் படத்தை எடுத்து வந்தேன்.இரவோடு இரவாகத்தான்.துரை ஐயாவுக்கு மட்டும்தான் நான் அங்குச் சென்றது தெரியும்.”என பெருமூச்சுவிட்டுச் சொன்னான் ரிஷி.


“அதன் பிறகு உன்னை குருவின் பிறந்த நாளுக்குச் சென்னை அழைத்துச் செல்ல நினைத்திருந்தேன்.அதற்காக மாலை விரைவில் வந்தால்,மித்ரா தேவி எங்கோ கிளம்பி இருப்பது தெரிந்தது. ‘என்னிடம் சொல்லாமல் ஏன் அனுப்பினாய் ‘ என்று வள்ளியிடமும் கடிந்து கொண்டேன்.அதன் பிறகு முத்து நீ இறங்கிய இடமும்,உன் முகம் சரியில்லை எனவும் சொல்லவும் புரிந்துவிட்டது.வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாயென்று.ஏன் அப்படிச் செய்தாய் மித்ரா” என கோபமாகக் கேட்டான் ரிஷி.


தன் தவற்றுக்குத் தலை குனிந்த மித்ரா, “ நான் என்ன செய்ய ரிஷி.உங்கள் மார்பில் சாய்ந்து அழுதது எனக்கு நினைவிருந்தது.நீங்க என்னை என்ன நினைத்திருப்பீர்கள்.பெண்களையே வெறுக்கும் நீங்கள்,உங்களின் வெறுப்பிற்கான காரணம் தெரிந்த பிறகு,உங்களை கவரத்தான் நான் அவ்வாறு நடந்து கொண்டேன் என்று எண்ணக் கூடுமோ!என்று தோன்றியது.அதனோடு உங்களைப் பார்த்துக் கொண்டு என் காதலைச் சொல்லாமல் இருக்க முடியுமோ என்ற சந்தேகம் வேறு.உங்கள் அருகில் என் மனோதிடம் காற்றாய் கரைகிறதே!!அதன் பிறகுதான் உங்கள் மதிப்பில் என் மீது இருக்கும் அந்த சாதாரண அன்பேனும் மிஞ்சட்டும் என்று வீட்டைவிட்டுப் போக முடிவெடுத்துக் கிளம்பியும் விட்டேன்.”என விழி இடுங்க அன்று ஏன் அவள் வீட்டை விட்டுப் போனாள் என்று விளக்கிச் சொன்னாள் மித்ரா.


“ஆமாம் பெரிய மேதாவியால்தான் யோசித்தாய்.உன்னைக் காணாமல் நான் தவித்த பாடு சொல்லி முடியாது.உன் ஃபோனுக்கு தொடர்பு கொண்டால்,விவரமாக அணைத்து வைத்துவிட்டிருக்கிறாய்.ஒரு வழியாய் ஒரு எண்ணம் தோன்றி அப்பாவிடம் நீ இங்கு வந்தால் எந்த விடுதியில் தங்கவுதாக சொன்னாய் என விசாரித்து அப்பாவிடம் ‘என் officeபெண் ஒருத்தி விவரம் கேட்டாள்’ என அவரிடம் ஒரு விளக்கம் சொல்லி அங்கு வந்து சேர்ந்தேன்.அப்பறம்,அந்த வார்டன் உன் பெயரை நான் சொன்னதும், ‘ நான் அப்போதே நினைத்தேன் தம்பி.வீட்டில் கணவனுடன் சண்டையிட்டு வந்திருப்பாள் என்று’ எனச் சொல்ல ஆரம்பித்து அவர்களே நம்மைப் பற்றியும் நம்மிடையேயான பிரச்சனை பற்றியும் ஒரு பெரிய கற்பனை கதையே உருவாக்கிவிட்டார்கள். உன்னைப் பார்க்காமல் எனக்கிருந்த படபடப்பில் அவர்களை மறுத்து எந்த வார்த்தையும் சொல்லாமல் ‘ம்ம்’ சொல்லிக் கொண்டிருந்தேன்.நீங்க என்னடா என்றால் எதுவுமே நடக்காத போல் அமைதியாய் வந்து நிற்கிறீர்கள்.உன்னைக் கண்ட நேரம் உன்னை ஓடி வந்து அணைக்க எண்ணியது என் உள்ளமும் கால்களும்.ஆனால் சூழ் நிலை தடுத்தது.அதே சமயம் ‘என்னை விட்டு இனி போவாயா?’என காதை திருகவும் கைகள் துருதுருத்தது” என்று சொல்லி,அவள் காதை இப்போது வலிக்காதவாறு திருகினான்.


வலிக்காத போதும், “ஸ்...ஆ...”என போலியாக சிணுங்கினாள்.


“சாரி ரிஷி.நான் அப்படி அன்று செய்திருக்கக் கூடாதுதான்.உங்களது பாரா முகத்தை என்னால் அன்று தாங்கே முடியவில்லை.நல்ல வேளையாக அதிக நேரம் நீடிக்காமல் பேசிவிட்டீர்கள்.இல்லையென்றால் நான் மிகவும் தவித்துப் போயிருப்பேன்.பெரிய முடிவெடுத்து வீட்டைவிட்டு கிளம்பியது என்னமோ உண்மைதான்.ஆனால் அங்குச் சென்று இருந்த சில நிமிடங்களில் உங்கள் வாசமில்லாத எந்த இடமும் பாலைவனம் போல வே தோன்றியது.அன்றே முடிவெடுத்தேன்.உங்கள் வீட்டில் ஓர் ஓரமாய் இருந்து கொண்டு உங்களைக் கண்டு கொண்டே இருந்துவிட வேண்டுமென்று.ஆனால்..”என நிறுத்தினாள் மித்ரா.


“ஆனால் இன்று வீட்டைவிட்டுச் செல்ல முடிவெடுத்து பாட்டியிடமும் சொல்லிவிட்டாய் போல இருக்கு” என்றான் ரிஷி.


ஆச்சரியமாக, “உங்களுக்குப்படி தெரியும்.அதனோடு பாட்டியிடம்,என் தோழி வீட்டுச் செல்வதாக அல்லவா சொல்லியிருந்தேன்.மீண்டும் வர மாட்டேன் என்று சொல்லவே இல்லையே!”என் விழி மூடாமல் கேட்டாள் மித்ரா.


“எல்லாம் ஐயாவுக்குத் தெரியும்.என் மீது உன் கோபமும் எனக்குத் தெரியும்.அதற்கான விளக்கம் தராமல் நீ என்னைப் புரிந்து கொள்வது கடினம் என்றும் தெரியும். எனக்குத்தான் மந்திரமெல்லாம் தெரியுமே” என்று மீண்டும் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான் ரிஷி.


“என்ன பொல்லாத மந்திரம் தெரியும்.அப்படி மந்திரம் தெரிந்தவர்தான் என் மீது அன்று சந்தேகம் கொண்டீர்களா?”என வெடுக்கெனக் கேட்டு முகம் திருப்பிக் கொண்டாள்.


“மது.கோபம் கொள்ளாதே.!நான்தான் அதற்கு ஒரு காரணம் உண்டு என்றேனே!நீ என்னைச் சொல்லவிட்டிருந்தால் காலையிலே சொல்லியிருப்பேன்.ஆனால் அதற்கான அவகாசம் தராமல்,நீங்க தான் பேசி தீர்த்துக் கொண்டிருந்தீர்கள். “ என அவளைப் போலவே முகம் திருப்பிக் கொண்டு நின்றான் ரிஷி.


“ஓ..”என்றாள் மித்ரா. “ஓ..இல்லை..ஆம்...”என்றான் ரிஷி.




“சரி...இப்போது சொல்லுங்கள் அது என்ன காரணம்?”என கேட்டாள் மித்ரா.


“ம்ம்..சொல்கிறேன்.அதற்கு முன்,என்னை மன்னித்துவிடு மித்ரா.என்னதான் இருந்தாலும் உன் மனம் நோகும்படி அன்று நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.”என சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து அவள் இரு கைகளையும் பற்றினான் ரிஷி.ரிஷியின் விழிகள் கலங்கி அவன் வேதனையுறுவதை உணர்த்தியது.அவனது கலங்கிய விழிகளைக் கண்ட மித்ராவும்தான் கலங்கிப் போனாள்.


அவசரமாக “என்ன ரிஷி.?உங்கள் வேதனையைக் காணும் போது,அன்று ஏற்பட்ட அந்த வலியைவிட அதிகமாக வலிக்கிறது” என அவளும் கலங்கினாள்.


“இல்லை..மது நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது.உனக்கு வேறுவிதமாக நான் தைரியம் வருமாறு செய்திருக்க வேண்டும்.நீ என்ன பாடு பட்டாய்..”என அன்று நடந்தவற்றை மனதின் முன் கொணர்ந்தவனாய் கண்கள் வேதனையில் ஓர் இடத்தில் நிலைத்தது. “என்னை மன்னித்துவிடு மது..”என மீண்டும் வேண்டினான்.


அவன் வேதனையைக் கண்டு முன்பே மன்னித்துவிட்ட மித்ரா,அதையே வார்த்தைகளாலும் சொன்னாள்,”ம்ம்..அதையெல்லாம் மறந்துவிடுங்க ரிஷி.நீங்க வேதனையுற்று அந்த காரணத்தையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை.நீங்க இப்படியே.என் கண்ணனாக,என் அருகில் என்றும் இருந்தால் போதும் என்று அவனது ஒரு கையை தன் தோள் மீது போட்டுக் கொண்டு அவன் மார்பின் மீது தன் தலையின் பின்புறத்தைச் சாய்த்துக் கொண்டு அந்த பௌர்ணமியின் அழகை நோக்கினாள்.


அவள் அவன் மீது சாய்ந்ததும் அவனும் நிதானமற்று அமைதியானான்.அவள் நிலையிலே அவனும் நின்று கொண்டு பௌர்ணமியின் அழகை சில நிமிடங்கள் ரசித்தான்.இப்படியே காலம் முழுதும் இருந்துவிட அவர்களின் உள்ளம் ஒருமித்தமாக ஆர்ப்பரித்தது.அங்கு வீசிய இதமான தென்றல் காற்று அவர்களின் மீது மோதி சிலிர்ப்பினை அவர்களின் உடலில் ஏற்படுத்தியது.அந்த மனநிலையைக் கலைக்க மனமில்லாமலும்,அழகாக அமைந்த சூழ்நிலையை ரசித்த வண்ணமும் மித்ராவும் ரிஷியும் மௌனமாக லயித்திருந்தனர்.


“மது... “ என ரிஷி அவளைச் சத்தம் வராமல் விளித்தான். “ம்ம்..”என வார்த்தைகள் இல்லாமல் பதிலளித்தாள் மித்ரா.


“என்னை நிஜமாகவே மன்னித்துவிட்டாய் இல்லையா?”என மெதுவாகக் கேட்டான்.
அவனது கேள்வியில் நிமிர்ந்த மித்ரா,அவனை அனார்ந்து பார்த்தாள்.அவன் கண்களில் பரிதவிப்பு தெரிந்தது.மீண்டும் அவன் மீது சாய்ந்து கொண்டு, “ம்ம்..”என அதற்கும் பதிலளித்தாள்.


“இருந்தும் உன்னிடம் முழுதும் சொன்னால்தான் எனக்கு மனம் லேசாகும் போல் இருக்கிறது.”என சின்ன பிள்ளையாய் சொன்னான் ரிஷி.


எப்போதும் கம்பீரமாகவும்,அசட்டுத்தனமும் நிறைந்து இருக்கும் அவன் குரல் இன்று குழைவதைக் காண மித்ராவிற்குச் சிரிப்பாக வந்தது.ஏன் ஏளனமாகக் கூட அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வந்திருக்கிறது.ஆனால் இப்படி அம்மாவிடம் கெஞ்சும் பிள்ளையைப் போல அவனது குரலில் அவன் தலை கேசத்தைக் கோதி, ‘ உன் விருப்பம் அதுவானால்,சொல்லுடா கண்ணா’ எனச் சொல்ல வேண்டும் போல் தோன்றிற்று.அந்த தோன்றலை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு, “சொல்லுங்க ரிஷி” என்று மீண்டும் பழைய நிலையிலே நின்றாள்.


“ம்ம்..”என்றான் ரிஷி.இன்னும் சில நிமிடங்கள் அமைதியிலே சென்றது.


“மது...இதை நம்புவாயா என்று தெரியவில்லை.ஆனால் உண்மை இதுவே!”என பீடிகையுடன் ஆரம்பித்து, “ நான் உன்னை என்றுமே சந்தேகிக்கவில்லை.”என அழுத்தமாகச் சொன்னான் ரிஷி.


அவனது பதிலில் “ப்ச்..”என விலகி நின்றாள் மித்ரா.அவன் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதாகத் தான் எண்ணி இருந்தாள். ‘ஆனால் அவன் அப்படி ஓர் தவறே செய்யவே இல்லை என்கிறானே!’என வெறித்து விலகினாள்.


அவள் விலகியதும் அவசரமாக “என்ன மது..”என்றான் ரிஷி.


அவனுக்குப் பதில் அளிக்கும் விதமாக முன் மனதில் நினைத்ததை அவனிடமும் கேட்டுவிட்டாள்.


“நினைத்தேன்.நீ நம்ப மாட்டாயென்று.அன்று நான் நடந்துக் கொண்டதும் அப்படிதானே!”என நெற்றி சுருக்கி அவன் தவற்றுக்கு வருந்தினான.


வருந்திய அவன் முகம் கண்டு இளகி எதுவும் பேசவில்லையென்றாலும் எட்டி அவன் கைகளை உயர்த்தி அவன் நெற்றி சுருக்கம் போகாதா?என எண்ணி அவன் நெற்றிப் பொட்டிலிருந்து அவன் இரு புருவங்களாலும் தன் ஆள் காட்டி விரல்களால் நீவி விட்டாள்.அவளது இந்த செய்கையால் அவளது அக்கறை உணர அவளை அப்படியே தழுவிக்கொண்டான்.


“மது...நா...நான் இப்படியே இருந்து கொண்டு அன்று நடந்ததன் காரணத்தைச் சொல்லிவிடுக்கிறேனே!”என திக்கி குழந்தையாய் அவளை அணைத்த கையை விலக்காமல் சொன்னான் ரிஷி.


அவனது இந்த செய்கையாலும்,திக்கிய வார்த்தைகளாலும் அவனும் அன்று அவளை வேதனை படுத்தியதை எண்ணிக் கலங்குவதும் வேதனையுறுவதும் மித்ராவிற்கு தெளிவாகப் புரிந்தது.அதனால் அவனுக்கு ஆதரவு தரும் அன்னையைப் போல அவன் முதுகை வருடி, “ம்ம்..சொல்லுங்க” என்றாள்.


“அன்று நீ வீட்டை விடுத்து அந்த விடுதிக்குச் சென்றாயா?அன்று எனக்கு ஒரு கலக்கம் உண்டானது.ஒரு வேளை நான் உன்னை ஆருதல் படுத்த என்று அதற்கு முதல் நாள் தோளோடு உன்னைச் சாய்த்துக் கொண்டதை நீ தவறாக எண்ணிவிட்டாயோ என்ற பரிதவிப்பு எனக்குள்.அதனையும் மீறி சென்னையில் நீ வளர்ந்தவிதம் முழுமையாக அன்று எனக்குத் தெரியவில்லை.நீ வேறு அடிக்கடி கரண் என்று சொல்வாயா?அதுவும் சிறு வயது முதல் சினேகிதமென்று,அவனை நேசித்து இருப்பாயோ!என்ற கலக்கம்.நான் அப்படி உன்னை அணைத்ததும் என்னைத் தவறாக எண்ணி வெறுத்து ஒதுங்கினாயோ என்று தோன்றிற்று.விரும்பாத பெண்ணை ஆருதல் என்ற பெயரில் மேலும் வேதனை கொள்ளச் செய்துவிட்டேனோ என்ற பரிதவிப்பு.எல்லாம் நீ காணவில்லை என்று தேடிய அந்த ஓரிரு மணி நேரத்தில் என்னுள் உண்டான போராட்டங்கள்.நம் மனம் வேதனையிலிருக்கும் போது மூளையே வேலை செய்ய மறுப்பதை அன்று புரிந்து கொண்டேன்.”என்றான் ரிஷி.


கரணை பற்றி மித்ரா சொன்னதும், “என்ன ரிஷி...கரண் என்னுடனே வளர்ந்தவன்.என் சகோதரனைப் போன்றவன்.விவரம் அறியாத பருவத்தில் முன்பு உண்டான அந்த நட்பு தூய்மான நட்பு.அதெப்படி இடையில் விருப்பமாகவோ அல்லது காதலாகவோ மாறா கூடும்” என நம்பாமல் கேட்டாள் மித்ரா.


“ஓ..பால்ய சினேகமென்றால் நான் பள்ளி நட்பு என்று நினைத்தேன்.ஆனால் நீ சொல்வதைப் பார்த்தால் கை குழந்தையாய் இருந்த போதிருந்து நட்பு என்பாய் போலிருக்கே” என அவளை அணைத்துக் கொண்டிருந்ததால் வந்த தெளிவில் பழைய படி பேசினான் ரிஷி.


“ஆமாம்.நன்றாக நினைத்தீர்கள்.பிறந்ததிலிருந்தே!!!உங்களுக்குத் தெரியாது இல்லை?..அவனும் நானும் ஒரே நாளில் பிறந்தோம்.அருகருகே வீடு.கரண் அம்மாவுக்கு,நான் என்றால் உயிர்.பெண் பிள்ளை அவர்களுக்கு இல்லையென்றே,என் மீது அதிக அன்பு செய்தார்கள்.அவர்களுக்கு நான் பெண் என்றால்,கரண் என் சகோதரன் தானே” என விளக்கம் தந்தாள் மித்ரா.


“ஓ..எனக்கு அன்று இவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் புரிந்து கொள்ளத் தோன்றவில்லை.உன்னிடம் கேட்கவும் தோன்றவில்லை.அந்த யோசனையிலேதான் அன்று அந்த விடுதியிலிருந்து சென்னைக்குக் காரை கிளப்பினேன்.என்னை விரும்பாமல் வெறுத்துத்தான் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டாயோ என்ற கலக்கம்.அதை உன்னிடம் கேட்டு வேதனை கொள்ள எனக்குத் தைரியமில்லை.அதனால் அமைதி காத்தேன்.ஆனால் அன்று காரில்,நீ ‘சாரி ரிஷி’ என்று பரிதவிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னாய் பார்.!!!அப்போது,அந்த நொடி முடிவு கொண்டேன். ‘என்னை முழுமையாக ஆட்கொண்டவள் நீ.உனக்காகவே நான்’ என்று.உன் விழி அசைவில் என்னை அன்று பாடாய்ப் படுத்திவிட்டாய்.என் உணர்வுகளை அன்று கட்டுக்குள் கொள்ள என்னால் சத்தியமாக முடியவில்லை.”என உண்மையை உரைத்தான்.


அவனது இந்த வார்த்தைகளைக் கேட்கும் போது,பேசும் திறன் அற்றவள் போல தன் மனதின் வார்த்தைகளைப் பேசிய ரிஷியை நினைத்தும்,முகம் சிவந்தும் மேலும் ரிஷியின் மார்பிலே புதைந்தாள் மித்ரா.




அதை உணர்ந்தவன் போல ரிஷி, “ஆமாம் அடிக்கடி சிவக்கும் இந்த கன்னங்களை வைத்தே என்னை மயக்கிவிடு” என பொய்யாகக் கோபித்தான் ரிஷி.அதற்கும் அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை.
“இருந்தும் நீ சென்னையைவிட்டு ,கோவை வர வேறு காரணம் இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழுந்தது.சென்னை வந்ததும்,அப்பாவிடம் உன் விவரம் அனைத்தும் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.ரங்கனைப் பற்றியும் உன் அத்தையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.அவர்களைக் கண்டு நீ பயந்து வந்திருக்கக் கூடுமோ !ஆனால் என் மது எதைக் கண்டும் அஞ்சக் கூடாது.எதையும் எதிர்த்துச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.அதனோடு நீ இயல்பிலே துடுக்குடன் அச்சமில்லாமல் இருப்பதும் புரிந்தது.ஆனால் திடீர் திடீரென்று நீ பயப்படுவதும்,மயங்குவதும் ஏன் என்று எனக்குப் புரியவில்லை” என யோசனையாகச் சொன்னான் ரிஷி.


“அ..அது...அந்த அந்த விபத்து..அப்பா..அம்மா...”என அவள் திக்கிய போதே, “ஷ்....விடு மது.அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்றான் ரிஷி.


“ம்ம்ம்.”என சில வினாடிகள் அமைதியாய் இருந்தவள் ,மீண்டும் “ அப்போதுதான் நான் முதல் முறை மயங்கியது.அதன் பிறகு அடிக்கடி நான் அதிர்ந்து பயப்படும் போது மயக்கம் வந்துவிடும்.ஒரு நாள் யாருமில்லா வீட்டில் இருட்டில் பயந்து மயங்கி நடு வீட்டில் விழுந்திருந்திருக்கிறேன்.அப்போது டாக்டரிடம் அங்கிள் அழைத்துச் சென்று கேட்ட போது,இது அந்த விபத்தின் தாக்கம் என்று சொன்னார்” என தன்னிலை விளக்கம் சொன்னாள் மித்ரா.


“ஓ...விரையில் எல்லாம் சரியாகிப் போகும்.”என ஆருடம் சொன்னான் ரிஷி.


“நீங்க அப்பறம் என்ன நடந்தது என்று சொல்லுங்க ரிஷி.”என அவன் விட்டதைத் தொடரச் சொன்னாள் மித்ரா.


“ம்ம்...ரங்கனைக் கண்டு ஓடி வந்தது போல் இல்லாமல்,அவனை எதிர்த்து நீ எந்த வித பயமின்றி பேச வேண்டும் என்று எண்ணினேன்.ஆனால் அவனாக நம் வாழ்வில் தலையிடாத வரை எந்த பிரச்சனையும் உனக்கு நேரப் போவதில்லை என்று எனக்குத் தெரியும்.அவன் நம் வாழ்வில் வரவே இல்லையென்றால் என்றும் நமக்கு பிரட்ச்னையில்லைதான்.எனவே எதுவும் செய்யாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அப்பா சொன்ன வார்த்தைகளின் படி அவன் இங்கும் அங்குத்தாக நம் உன்னைத் தேடி வருவதாகவும் அடிக்கடி அப்பாவைத் தொந்தரவு செய்து வலம் வருவதும்,பின்னாளில் உன்னைக் கட்டாயம் தொந்தரவு செய்யக் கூடுமென்றும் நான் யூகித்தேன். “ என்று நிறுத்தினான் ரிஷி.


“அதற்காக.அவனைப் பற்றி விசாரிக்கவே அன்று குருவின் பிறந்த நாள் அன்று உங்களை வட பழனிக்கு அனுப்பிவிட்டுச் சென்றேன்.


அன்று காலையிலே போன் செய்து Detective Agency –ல் ரங்கனைப் பற்றி விசாரிக்கச் சொன்னதில்,உன் அத்தையிடம் ‘உங்கள் வீட்டுக்கு அரசு உதவி வந்திருக்கிறது.அதற்கான சில விவரம் வேண்டும்’ மென்று மெதுவாக விவரம் சேர்க்க விசாரித்தனர் அந்த Agentநபர்.
உன் அத்தை ,அவர்களைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னார்கள்.அதனோடு விசாரிக்கச் சென்றது பெண்Detectiveஎன்பதால் தன் வேதனையையும் சேர்த்து அந்த Agentடிடம் சொன்னார்கள்.அதனால் அதிக அலைச்சல் இல்லாமல் எல்லா தகவல்களும் கிடைத்துவிட்டதாக அந்த agentல் சொன்னார்கள்.
‘3வாரத்தில் என் மகனின் போக்கு மிகவும் மாறிவிட்டது.என் ஒன்றுவிட்ட அண்ணன் மகளை மணந்து வைப்பதாகவும்,அவளால் மிகவும் பணக்காரனாக வாழலாம் என்றும் ஆசை படுத்தி அழைத்துவந்தது விட்டேன்.ஆனால் இடையில் அவள் எங்கோ காணாமல் போக ,நாங்க மீண்டும் நடுத்தெருவிற்கே வந்துவிட்டோம்.இப்போது அந்த பெண்ணின் மீது கோபங்கள் கொண்டு அவளைப் பலிவாங்க அவளை தேடி சுற்றிக் கொண்டிருக்கிறான்.அந்த பெண்ணிற்கு எதுவும் பிரட்ச்னை செய்து சிறைக்கு அவன் போகும்முன்,நீங்க அந்த அரசாங்க பணத்தை ஏற்பாடு செய்தீர்களானால் நாங்க ஊர்பக்கமே போய் சில நிலனை வாங்கி விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வோம் ‘என மன்றாடலாகச் சொன்னார்கள் உன் அத்தை.
உன் அத்தையின் வார்த்தைகளையே சுற்று வட்டாரமும் சொல்ல அதற்கு நிரந்தர தீர்வுக்கான எண்ணினேன்.உன்னுள்ளும் தைரியம் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.அதற்கான திட்டம் வகுக்க நினைத்தேன்.ஆனால்..”என வார்த்தைகளை இழுத்து நிறுத்தினான் ரிஷி.


“ஆனால்...”என அவனைப் பேச ஊக்கினாள் மித்ரா.


“ஆனால் அதற்குள் ரங்கன் அவன் கை வேலையைக் காட்டுவான் என்று எண்ணவில்லை.வீடு வரை வந்துவிட்டான்.பீச்சில் நீ அவனைக் கண்டு என்னிடம் ஒன்றினாய் பார்.உன் உடலிலும் நடுக்கம்.எப்படி உன்னைத் துன்புறுத்தியிருந்தால் உனக்குள் அந்த நடுக்கம் வந்திருக்க வேண்டும்.இருந்தும்,அப்போது நான் உன்னைக் கண்டுவிட்டதாக எதையும் உன்னிடம் காட்டிக்கொள்ளவில்லை.அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தோம்.”என்றான் ரிஷி.


அவன் வார்த்தைகளின் இடையே, “அது,அந்த நடுக்கம்,,ரிஷி,அவன் ஒரு நாள் என் கையை பற்றி இழுத்து தவறாகப் பேசினான்.அதனால் வந்த நடுக்கம்.அதன்பின் ஓட்டமும் நடையுமாக அங்கிளிடம் சொல்லி கோவை வந்து சேர்ந்தேன்.பீச்சிலும் என்னைக் கண்டு அருகில் வந்து எதாவது உங்கள் முன்னும் தவறாக பேசினாளோ,செய்தாலோ,நீங்க கோபம் கொள்வீர்களோ என்று தோன்றியது.அந்த கோபத்தில் அவனிடம் ஏதேனும் சண்டைக்குப் போய்விடுவீர்களோ,அவன் உங்களை எதாவது செய்துவிடுவானோ என்று பலதும் தோன்றியது.அதனால்தான்.”என தன்னிலை விளக்கம் தந்தாள்.


“ஓ அப்படியா செய்தான்.அவனை அடித்து உதைத்திருக்க வேண்டும்.தவறு பண்ணிவிட்டேன்.”என கைகள் விறைப்புர சொன்னான்.ரிஷி.


“அச்சோ..இதற்குத்தான் உங்களை அப்படி அழைத்து வந்துவிட்டேன். “ என அவசரமாக மறுத்தாள். “அப்படி எதுவேணும் செய்து போலீஸ் வந்துவிட்டாள்” என கலங்கினாள் மித்ரா.


அவள் அறியப் பிள்ளையாய் நின்று கலங்கியதை நினைத்து உடனே சிரித்துவிட்டு,ரிஷி” சரி சரி...அதுதான் செய்யவில்லையே..விடு..”என்றான் ரிஷி.


“ம்ம்”..என்று மேலும் அவனுள் ஒன்றினாள் மித்ரா. “அப்பறம்..”என்றாள்.


“மேலும் உன்னைக் கோவையில் விட்டுவிட்டு வந்து அவனுக்காகத் திட்டம் தீட்ட எண்ணி உன்னையும் கிளம்பச் சொல்லிவிட்டு,உனக்குமுன் நான் தயாராகி,காரை எடுக்க வெளியே சென்ற போதுதான் அது நடந்தது.அவனைத் தெரிந்த போதும்,அவன் என்ன எண்ணி வந்திருக்கிறான் என்று அறியத் தெரியாதவன் போல் குரலிலும் முகத்தோற்றத்தையும் மாற்றி அவனிடம் பேசினேன்” என்று நிறுத்தினான்.இவை அனைத்திற்கும் ‘ம்ம்’ என்றவாறே பேசாமல் இருந்தாள் மித்ரா.


“வந்தவன் என்னிடமே உன்னைப் பற்றின தவறான கருத்துகளை எடுத்து வீசினான்.அவன் பேசிய விதத்தில் அவசரமாக ஒரு திட்டம் தீட்டினேன்.நீ அவனைக் கண்டு என்றுமே பயம் கொள்ளக் கூடாது.அதற்கு உனக்குள்ளான அந்த உள்ளார்ந்த தைரியத்தை வர வைக்க வேண்டும் என்று எண்ணினேன்.ஆனால் அதனால் உன்னை இந்த அளவு நான் வலிக்கச் செய்திருக்கக் கூடாது” என தன் வேதனையால் குரல் கரகரக்கப் பேசியவன் மித்ராவை மேலும் இறுக்கமாக அணைத்தான்.மீண்டும், “என்னை மன்னித்துவிடு மது” என்றான்.


“ப்ச்..போங்க ரிஷி...நீங்க எத்தனை முறைதான் மன்னிப்பு கேட்பீர்களோ!இன்னொரு முறை கேட்டால் நான் உங்களை மன்னிக்கவே மாட்டேன்” என பொய் கோபம் கொண்டாள் மித்ரா.


உடனே சிரித்துவிட்ட ரிஷி, “சரி சரி...கேட்கவில்லை போதுமா?”என அவளை விலக்கி நிறுத்தி மீண்டும் பழைய நிலையிலே அவள் கைப்பற்றி நின்றான்.புன்னகையுடனே “ம்ம்” என அவளும் நின்றாள்.அவன் அமைதியாகவே நிற்கவும் மித்ராவெ பேசினாள்.


“மன்னிப்புதான் கேட்கவேண்டாம் என்றேன்.நீங்கத் தீட்டிய அந்த அவரச திட்டத்தைக் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்” என்றாள் மித்ரா.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top