உனக்காகவே நான் - 25

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 25

Heroin.jpg
இருந்தும் அவனிடம் எதுவும் பேசும் எண்ணமில்லாமல் அவன் என்னதான் சொல்கிறான் எனக் கேட்டாள் மித்ரா.


“நேற்றே உன்னைப் பார்த்ததும் பின் தொடர்ந்து உன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.நீ இங்குச் சந்தோஷமாக இருப்பது தெரிந்தது.என்னையும் என் அம்மாவையும் தவிக்கவிட்டுவிட்டு,நீ இங்குச் சுகமாக இருக்கிறாயா?உன்னை நம்பி என் ஊரில் எல்லாம் விட்டுவிட்டு என் அம்மா இங்கு இழுத்து வந்துவிட்டாங்க.உன்னைத் திருமணம் செய்து கொண்டால் பணம் கிடைக்கும் என நினைத்துக் கொண்டு பார்த்தாள்,நீ என்னடானா என்னை விட்டுவிட்டு,இந்த ரெண்டு புள்ளைங்க,உன்னவிட பணம் அதிகம் இருக்கும் போல இருக்கே!”என அந்த அறையின் வசதியை நோட்டம் விட்டான் ரங்கன்.


பின் தொடர்ந்து “அவங்களோடு சந்தோஷமா இருக்க.என்னமோ பெயர சொன்னானே அந்தச் சேது.. “ என யோசித்து , “ஆங்...ரிஷி குரு ரெண்டு பேரையும் கைல போட்டுட்டு ஆட்டமா ஆடுர.அதான் சேதுவ வச்சு அந்த பையன்கள பத்தி தெரிஞ்சிட்டு உன்னை இன்னிக்கு திட்டமிட்டபடி மாட்டிவிட்டேன்.அந்த மடையன் ரிஷி ஏற்கனவே பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படினு தெரிஞ்சது.அதனால பத்தோட ஒன்னா உன்ன நெனச்சு தொரத்திடுவானு பார்த்தேன்.இன்னிக்கு அனுப்பலனா என்ன!!நாளைக்கு உன்னை தொரத்ததான் போரான்.நான் வெளியிலே காத்திருக்கிறேன் “ எனச் சொல்லி வன்மமாக சிரித்தான் ரங்கன்.


ஒருவருக்குத் தீங்கு செய்ய இவ்வளவு சதி திட்டம் தீட்டி ஒருவர் செயல் படக் கூடுமென்று மித்ரா,கதைகளிலும் நம்பினாள் இல்லை.ஆனால் ரங்கனை காணும் போது இன்று நம்பும்படி ஆனது.பேச வார்த்தையில்லாமல் வெறுப்பாக ரங்கனை ஏறிட்டாள்.இவனாலே ரிஷியின் உள்ளம் புண்ணானது என்று எண்ணி அவள் வெறுப்பு கொழுந்துவிட்டு எறிந்தது.


இதை எதையும் அறியாமல் ,மேலும் தொடர்ந்து, “என்ன சொன்ன ‘ உங்கள பார்த்த மட்டும் அப்பப்போ வந்துவிடுக்கிறதா?வெட்கமா படுற.அதை வைத்தே மடக்கி வேண்டுமென்று அவனைப் பற்றி பேசி உனக்கு வெட்கமுண்டாக்கினேன்.அதை அந்த மடையன் ரிஷியை பார்க்கவும் வைத்தேன்.நான் எதிர்பார்த்தது போலவே அவனும் நம்பிவிட்டான்.”என்று நிறுத்தி “ஆனால் அவன் உன்னை ஏன் இன்னும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பவில்லை.உன்னை கையோடு இழுத்துச் செல்ல எண்ணியே வெளியில் அந்த நடைபாதை விளக்கின் அடியில் அமர்ந்திருந்தேன்” எனப் பெரிய கவலை போல சொன்ன வேகத்தில் மித்ரா கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.


‘என் கண்ணன் இவனது சதி நாடகத்தை நம்பி என்னைப் பற்றி தவறாக நினைக்கவும் முடியாமல்,நம்பவும் முடியாமல் என்ன தவி தவித்தான்.எனக்கானவனின் உள்ளம் புண்ணாக காரணமாக இருந்த ரங்கனை கொல்லவும் செய்யலாம்’ என அவள் உள்ளமும் புத்தியும் ஒருங்கே சொல்லியது.


“ஒழுங்காக வெளியே சென்றுவிடு.இன்னும் சில நிமிடம் இங்கே இங்கிருந்தாயானால் உன் எலும்புகள் எத்தனை என்பதை தனித்தனியாக நீயே சரிபார்க்க நேரிடலாம்.”என எங்கோ வெறித்தபடி ரங்கனை மிரட்டினாள் மித்ரா.அவள் கோபம் கொண்ட விழிகளினாலே ரங்கனை எறித்துவிடும் எண்ணம் போலும்


“ஏய் என்ன,நீயும் அவனைப் போலவே மிரட்டர.”என அவள் அருகில் ஓர் எட்டு வைத்தவன், “இந்த வாட்ச் மேன் வேற வெளியிலிருக்கிறான்.இப்போது உன்னை ஏதேனும் செய்தால் நான் மாட்டிக் கொள்வேன்.இப்போது நீ யாருமில்லாத அனாதை.திரும்பவும் என்னிடம்தான் வரணும். அப்போது உன்ன பார்த்துகிறேன்.அப்போது என் கை பலம் பார்க்கத்தானே போற” என கருவியப்படி வெளியேறினான் ரங்கன்.ரிஷி இந்த நேரத்தில் வந்தால் அவன் திட்டம் பாழாகிவிடுமோ என எண்ணி,அவளை ரிஷியே வெளியேற்ற வேண்டும் நினைத்து அமைதியுடன் சென்றான் ரங்கன்.


மண்டியிட்டு இருந்தவள் ,தன் இருக்கைகளால் முகத்திற்குத் தாங்கியாக்கி அழுக ஆரம்பித்தாள்.பின் எப்போது மயங்கி அவ்விடத்திலே விழுந்து உறங்கினாள் என்று அவளுக்குமே தெரியவில்லை.மெதுவாகக் கண் விழித்த போது மித்ரா காரில் இருப்பதும்,கார் பயணத்தில் இருப்பதும் புரிந்தது.விழி விரித்து முன் இருக்கையில் கார் ஓட்டிக் கொண்டிருந்தவனை பார்த்தாள்.இன்னமும் முக இறுக்கம் குறையாமல் விறைப்புடன் காரை செலுத்திக் கொண்டிருந்தான் ‘என்னவன்’ என எண்ணியிருந்த அவளது ரிஷி.


எப்படி அவள் காரினில் வந்திருக்கக் கூடும் என யூகிக்க முடியாத முட்டாள் இல்லை மித்ரா.ஆனால் ஏன் என்ற கேள்வி மட்டுமே அவளுள் இருந்தது.எதையும் கேட்கவும் நினைக்காமல் எழும் எண்ணமில்லாமல் அப்படியே படுத்திருந்தாள் மித்ரா.பின் அவளே ஒரு காரணம் கண்டுபித்தாள் ஜீவா அங்கிள் ஃபோன் செய்திருக்க வேண்டும்.அதன் விளைவுதான் அவனுடனான இந்த அவளது கடைசி பயணம்.


ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக அவளுக்குப் புரிந்தது.ரிஷி இல்லையென்றாலும் இனி தன் வாழ்வில் வேறெந்த ஆணுக்கும் இடமில்லை என்று.அதற்குள் அவன் என்ன மாயம் செய்தானோ!அவனை ஏற்கவும் முடியாமல் அவனும் தன் மீது காதல் கொண்டிருப்பதால்தான்,அவனது இந்தக் கோபமோ!!’என எண்ணும் போதே மித்ராவின் முகத்தில் கசப்பான புன்னகை வந்தது.


குன்னூர் சென்றதும்,அங்கிளிடமும் பாட்டியிடமும் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு,தன் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு பெங்களூர் சென்றுவிட வேண்டும்.அவனது பராமுகத்தையே தன்னால் தாங்க முடியவில்லை.அவனது கோபம் கனன்ற பார்வையைச் சந்திக்கும் சக்தி தனக்கில்லை.அதனோடு தன்னை பார்த்துக் கொண்டிருப்பதால் அவனுக்கும் சங்கடம் நிம்மதியின்மை ஏற்படும்.பெங்களூர் செல்வதுதான் சரியான முடிவு என்று முடிவெடுத்து அறை மயக்கத்திலே எழும் எண்ணமற்று மேலும் இலகுவாக படுத்துக் கொண்டாள்.


மயங்கிய நிலையில் “ரிஷி...நா..நான் எந்தத் தப்பும் செய்யவில்லை.என்னைத் தவறாக நினைக்காதீர்கள்.நா..தப்பும் செய்யவில்லை.ரிஷி” என அவளையும் அறியாமல் முனங்கிக் கொண்டே இருந்தாள் மித்ரா.


ரிஷி காரை நிறுத்திவிட்டு,அவளது முனங்கலால் அவள் அருகில் சென்று மித்ராவை அழைத்துப் பார்த்தான்.


“மித்ரா...மித்ரா..”என யாரோ கனவில் அழைப்பது போல உணர்ந்தாள் மித்ரா.அழைத்தது ரிஷியின் குரல் என்பது மட்டுமே அவளால் உணர முடிந்தது.எழும் எண்ணமற்றவளுக்கு அவனது குரல் எங்கோ கேட்பது போலத் தோன்றியது.


பிறகு நெற்றியைத் தொட்டு பார்த்தவன் அவளுக்கு மீண்டும் காய்ச்சல் வந்திருப்பது அறிந்து வழியில் தெரிந்த மருத்துவ மனையில் சேர்த்தான்.ஒரு ட்ரிப்ஸ் ஏற்றிய பின் சுய நினைவு கொண்டாள் மித்ரா.இருந்தும் விழித்துப் பார்க்கும் எண்ணமற்று கண்மூடிக்கொண்டாள்.


ஒரே வாரத்தில் இருமுறைக் காய்ச்சல் வந்தது நினைத்து அச்சம் கொண்டு ரிஷி மருத்தவரிடம் மித்ராவின் உடல் நிலை பற்றி ஆலோசனைக் கேட்டான்.


“அதிக மன உளைச்சலும் ,அதிக அழுகையும் தான் இதற்குக் காரணம் ” என்றும் , “அவளுக்குள் என்ன பிரட்சனை என்று தெரியவில்லை.ஆனால் குறைந்தது ஒருவாரமாவது எதையும் யோசிக்காமல் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும்.பயணமும் அதிகம் வேண்டாம்.இப்போது குன்னூர் வரை செல்வதாக சொல்வதால் நான் ஒரு ஊசி போட்டுவிடுக்கிறேன்.காரிலும் உறங்கிக் கொள்ளட்டும்.அதனால் அலுப்பு தெரியாது.அதன் பிறகு இரண்டு நாள் மருந்து எடுத்துக் கொள்ள சொல்லுங்க.எல்லாம் சரியாகிவிடும்.இப்போது நீங்க கிளம்பலாம்” என்றார் அந்த டாக்டர்.


தனது நன்றியைச் சொன்ன ரிஷி , ‘தன்னால்தான் மித்ராவிற்கு இந்த நிலை’ என நினைத்து வருந்தினான்.இருந்த போதும் ரிஷி மித்ராவிடம் எதையும் சொல்லவில்லை.அவள் உடல் நிலை சரியானதன் பிறகு சொல்லி அவளை நிரந்தர சந்தோஷ படுத்த எண்ணினான் ரிஷி.


விடியற் காலை குன்னூரின் குளிரில் மித்ரா நடுங்கிவிடாமல் இருக்க எப்போதும் காரில் இருக்கும் உள்ளன் விரிப்பை அவள் மீது போர்த்திவிட்டு தன் ஸ்வட்டரை எடுத்துக் கொண்டான்.பின் காரை அதிக வேகம் செலுத்தாமல் மெதுவாகச் செலுத்தினான்.


ரிஷியும் மித்ராவும் விடியற்காலை 5மணி அளவில் குன்னூர் இல்லத்தை அடைந்தனர்.அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க துறை தாத்தா மட்டும் மெதுவாக விழித்திருந்து கம்பௌண்ட் கதவைத் திறந்தார்.அதன் பிறகு மித்ராவை அவள் அறையில் தூக்கி சென்று படுக்க வைத்த ரிஷி.தன் அறைக்குச் சென்றான்.ஒரு சின்ன குளியலிட்டு இரண்டு ரொட்டி துண்டுகளை வாயிலிட்டுக் கொண்டு அங்கு ஏற்கனவே படுத்திருந்த குருவுடன் அவனும் அருகில் படுத்துக் கொண்டான்.


அலுப்பின் காரணமாக ரிஷி 12மணியாகியும் கண்கள் விழிக்கவில்லை.மருந்தின் மயக்கத்தால் மித்ராவும் கண்விழிக்கவில்லை.இருவரும் பயண அலுப்பில் இருப்பதால் அதிகம் தொந்தரவு செய்யாமல் வீட்டில் இருந்த அனைவரும் அவர்களை விட்டுவிட்டனர்.


இப்போது வீட்டில் குரு ,பாட்டி,ஜீவானந்தம்,மரகதம்மா,மாணிக்கம்,முத்து,வள்ளி,துறை தாத்தா என எல்லோரும் இருந்தனர்.குரு சொல்லிய சுமித்தாவை பற்றிய செய்தியில் எல்லோரும் மனம் குளிர்ந்தனர்.சுமித்தாவும் இரண்டு நாளில் குன்னூர் வர இருப்பதாக ஃபோன் மூலம் தகவல் கொடுத்திருந்தாள்.அதனால் வீடே கல்யாண கலை கட்டியதுப் போல இருந்தது.


களைப்பிலிருந்து மீண்டது முதலில் ரிஷிதான்.விழித்தெழுந்ததும் மித்ராவை தேடியே முதலில் சென்றான்.அவளை தொட்டு பார்த்து காய்ச்சல் இல்லையென்றதும் பெருமூச்சுவிட்டு அவள் அறையிலிருந்து வெளியில் வந்தான்.அப்போது ஜீவானந்தத்திடம் மாட்டிக் கொண்டான்.


“என்னடா...வரும்போது ப்யணத்திலும் அவளுடந்தான் வந்தாய்.இப்போது எழுந்ததும் அவள் முகம்தான் முதலில் பார்க்க வேண்டுமோ!என்ன” என கேலியாக கேட்டு ரிஷியை அசடு வலிய வைத்தார் ஜீவானந்தம்.


“அது...அது இல்லைபா.இரவு திடீரென்று மித்ராவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது.அதுதான் காய்ச்சல் குறைந்திருக்கிறதா?என்று பார்க்க வந்தேன்” என கலைந்திருந்த சிகையை சரி செய்த வண்ணம் சொன்னான் ரிஷி.


அவனது பதிலில் துடுக்குற்ற ஜீவானந்தம் “என்னடா சொல்ற..காய்ச்சல் என்றால் அங்கே ஓய்வெடுக்க செய்திருக்கலாம் இல்ல.ஏன் இவ்வள்வு தூரம் அவளை பயணிக்க வைத்தாய். ?” என குரலில் கடினமுற்று கேட்டார்.


“இல்லப்பா..அவளுக்கு காய்ச்சல் இருந்ததே,பயணத்தின் நடுவில் கோவை வந்த பிறகுதான் தெரியும்.சரி மேட்டு பாளையம் போகலாம் என்றால் அங்கும் யாருமில்லை.அதுதான் டாக்டரின் அறிவுரைகளின் பெயரில் இங்கு நேராக அழைத்து வந்துவிட்டேன்.ஆனால் டாக்டர் கொஞ்ச நாட்களுக்கு அதிக பயணம் கூடாது.குறைந்தது ஒரு வாரமாவது ஓய்வெடுக்க சொல்லிருக்கிறார்கள்” என தன்னிலை விளக்கம் தந்தான் ரிஷி.


“ஓ சரி... “ என்றவர் மித்ராவை சென்று பார்த்துவிட்டு,வள்ளியிடம் மித்ராவிற்கு தேவையானதை அவள் அறையிலே செய்துக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.அது மித்ராவிற்கு மிகவும் சாதகமாக இருந்தது.அதனால் மித்ரா அன்று முழுதும் அந்த அறையை விட்டு வெளியில் வந்தாள் இல்லை.ரிஷியை பார்க்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.


மித்ரா ரிஷியை பார்த்தாள் வீணாக அவள் மனம்வேதனையுறும் என்பதை அறிந்து ரிஷியும் அவள் அறை சென்றான் இல்லை.அதன் பிறகு மறு நாள் மேட்டுபாளையம் போய்விட்டு இந்த வார இறுதியில் மித்ராவிடம் எல்லாம் சொல்லிவிட வேண்டும் என யோசித்து வைத்திருந்தான்.


குருவும் ரிஷியும் அன்று மாலை மிக அதிக நாட்களுக்கு பிறகு குன்னூரில் இதமான பனி பொலிவில் நடை பயணம் சென்றனர்.அந்த இதமான குளிரில் இருவரின் மனமும் லேசாக இருந்தது.அதிக நாட்களுக்கு பிறகு அந்த மலையழகை குரு அதிக ஆர்வமுடன் ரசித்தான்.அதன் நடுவே குரு மெதுவாக “ரிஷி...உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என ஆரம்பித்தான்.குருவினுள் புதுவித முகபொளிவு உண்டானது.


மலை அழகை ரசித்த வண்ணம் ரிஷியும் வந்தமையால் குருவின் முகத்தை அவன் பார்த்தான் இல்லை. “ம்ம்..சொல்லுடா..”என்றான் ரிஷி.


“சுமி...”என்று ஆரம்பித்தவுடன் அந்த பெயரில் திரும்பி,ரிஷி குருவை ஆராயும் பார்வை பார்த்தான்.ரிஷியின் பார்வையில் வேறேதும் பேசாமல் தயங்கினான் குரு.


பின் ரிஷியே,இலகுதன்மை வர,புன்னகைத்த விதமாக , “ம்ம்..சுமி...”என குருவை ஊக்கினான்.


ரிஷியின் புன்னகையை பார்த்து ,இதுதான் தருணம் என்று ,குரு சென்னையில் நடந்த அனைத்தும்,மித்ரா செய்தவையும் எடுத்து சொன்னான்.அமைதியாக கேட்ட ரிஷி’ “இதை நானும் யோசித்தேன் குரு.நீ தவிப்பதை பார்க்கும் போது எவ்வளாவு வேதனையாக இருந்தது தெரியுமா?” என ஒரு வினாடி அமைதியானான்.பின் “ ஒருவேளை அன்று நான் அப்படி சுமித்தாவிடம் கேட்காமல் இருந்தால் நீங்க இருவரும் இன்று மகிழ்வுடன் இருந்திருக்க கூடுமோ என்று கூட..என்னால்தான் இவை அனைத்தும் நடந்ததாக ஒருவித குற்ற மனப்பான்மை இருந்துக் கொண்டே இருந்தது டா” என உண்மையான வேதனையுடன் சொன்னான் ரிஷி.


“ஆனால் அதன் பிறகு,சுமித்தாவின் மீது தவறு இல்லாமல் இருக்குமோ!என்று.ஒரு வருடத்திற்குமுன் சுமித்தாவை தேடினேன்.ஆனால் அதை தெரிந்துக் கொள்ள சுமித்தாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.எங்கு சென்றாள் என்ற தகவலுமில்லை.அதனால் இதனை உன்னிடம் சொல்லி உன்னை வேதனைக்குள்ளாக்காமல் விட்டுவிட்டேன்.இன்று மித்ராவால் இது ந்டந்தது.மிகவும் மகிழ்ச்சி.எப்போது சுமித்தா இங்கு வர போகிறாள்.நானும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.”என பெருந்தன்மையாக சொல்லி சிரித்தான் ரிஷி.


“நாளை மறு நாள் என்றவன் “ ,ரிஷியின் இந்த பதிலையும் அவனிடம் தெரிந்த மாற்றத்தையும் குரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.குருவின் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தான்.


“ரிஷி...நான் இவ்வாறு நீ பேசக் கூடுமென்று நினைக்கவே இல்லையடா..நீ என்ன சொல்ல போகிறாயோ !!என தவிப்பாகவே இருந்தது.இப்போதுதான்,இதமாக இருக்கிறது.இதை சுமியிடம் முதலில் சொல்ல வேண்டும்.”என சந்தோஷ குரலில் பேசினான் குரு.


இப்படி மித்ரா,ரிஷி இருவரையும் சுற்றி மகிழ்ச்சியான சூழ்னியலையில்,மித்ராவின் உள்ளம் மட்டும் உலைக்கலமாக இருந்தது.நிதானமாக நேற்று இரவு ந்டந்தவைகளை சிந்தித்தாள்.யோசிக்கையில்,’ரிஷி எப்படி அவள் மீது சந்தேகம் கொள்ளலாம்.அவன் தன் மனதின் மணாலனாக இருக்கலாம்.இனி அவனாக வந்து மன்னிப்பு கேட்டாலும்,சந்தேகம் கொண்ட அவனுடன் இனி ஒரு போதும் தன் வாழ்வு இல்லை.பாட்டியிடம் சொல்லிவிட்டு நாளையே இங்கிருந்து கிளம்ப வேண்டும்.அவன் அருகிருக்கும் ஒவ்வொரு தருணம் தான் பல்கீனமாகிறேன்.ஒருவேளை அவனை நேரில் கண்டால் தன் முடிவு மாற்றம் கண்டுவிடுமோ.!!’என அஞ்சி உறுதியாக முடிவெடுத்தாள் மித்ரா.


அதன் அடித்தளமாக இரவு உணவு முடிந்ததும்,பாட்டியிடம் என் தோழியை பார்த்துவிட்டு வர பெங்களூர் போக வேண்டும்.நாளையே கிளம்ப வேண்டும் பாட்டி.ஏதோ முக்கிய வேலை இருப்பதாகச் சொன்னாள்” எனத் திக்கி திணறி சொன்னாள் மித்ரா.மறந்தும் முதியவள் முகத்தைப் பார்த்தாள் இல்லை.பொய் சொல்லி அறியா மித்ராவின் முகம் அவள் நிலை காட்டிக் கொடுக்கும் என்ற நினைவே இல்லாமல் சென்று பேசிவிட்டாள்.


ஆனால் அனுபவம் மிகுந்த பாட்டி மித்ராவினை கண்டுகொண்டார்.இருந்தும் “இப்போது கூடாது மித்ரா.நேற்று மிகவும் உனக்கு மிகவும் காய்ச்சல் வந்துவிட்டது.டாக்டர் உன்னை அதிகம் பயணம் செய்ய வைக்கக் கூடாது என்றிருக்கிறார்கள்.அதனால் ஒரு வாரம் போன பிறகு ரிஷியுடனே நீயும் போய்விட்டு வரலாம்” எனப் பொறுமையாக அவளைக் கண்டும் காணாமல் பேசினார் பாட்டி.


‘என்ன ரிஷியுடனா.ஐயோ.வேண்டாம்.அவனுடன் தனியே எங்கும் போக கூடிய மனநிலை அவளுக்கில்லை.அவனைவிட்டு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்’ என மனதில் நினைத்தவள்,வார்த்தைகளால் அவசரமாக மறுத்து , “இல்லை..இல்லை பாட்டி நா..நானே போய்க் கொள்வேன்.அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” எனப் பெரிய மனுஷியாய் சொன்னாள் மித்ரா.


இந்த ஊரில் எதுவும்தெரியவில்லை என்ற போதும் அவனுடன் செல்ல மித்ரா விரும்பவில்லை.


விஷயம் புரிந்தார் போல் பாட்டி உள்ளூர புன்னகைத்த போதும். ‘ரிஷிக்கும் மித்ராவிற்கும் என்ன ஊடல்?இதைச் சரி செய்தே ஆக வேண்டும்.’என எண்ணி, “சரி மித்ரா.உன் விருப்படியே அவனைத் தொந்தரவு செய்யவில்லை.மாணிக்கம் உன்னை உன்னுடன் வருவார்.சரியா?ஆனால் பத்து நாட்களுக்கு பிறகுதான்” எனக் கேட்டு புன்னகைத்தார் பாட்டி.


‘ஹப்பா..என்ன ஏது என்று கேட்டு துருவாமல் பாடி அனுமதித்தார்களே.அதுவே போதும்.பத்து நாட்கள் தானே.இன்று போல் அறையிலே சோர்வு என்று படுத்துக் கொள்ளலாம்’ என நினைத்து , “சரி பாட்டி.அப்படியே செய்கிறேன்.ஆனால் பத்து நாட்கள் கழித்து நான் நிச்சயம் கிளம்ப வேண்டும்” என உறுதிப்படப் பேசிவிட்டு தன் அறை கிளம்பிவிட்டாள் மித்ரா.


மித்ராவிற்கு அதிகம் சோதனைக் கொடுக்காமல் ரிஷியும் அடுத்த நாளே மேட்டுப்பாளையம் சென்றுவிட்டான்.மித்ராவிற்கு அதுவே இதமாக இருந்தது. ‘ ரிஷியிடமிருந்து ஓடி ஒளிய வேண்டியது இல்லையே!!!வரும் வார இறுதியை மட்டும் அவன் கண்ணில் ப்டமால்,பட்டாலும் பேசாமல் கடக்க வேண்டும்’ என மனதில் ஆருதல் கொண்டாள்.


ஆனால் மித்ராவினுள் ஒன்று உறுத்தியது. ‘வள்ளியும் முத்துவும் ,மேட்டுப் பாளையம் செல்லவில்லை.அப்படியென்றால் ரிஷி அங்குத் தனியாக இருக்கிறானா?அவன் உணவுக்கு என்ன செய்ய கூடும்?சாப்பிடாமல் உடலை கெடுத்துக் கொள்வானோ?’என அவனது உடல் நலத்தை எண்ணி,அச்சம் தோன்றியது.அதை வள்ளியிடம் கேட்டும்விட்டாள் மித்ரா.


உடனே சிரித்த வள்ளி, “நீங்க வேற சின்னம்மா..சின்னய்யா,நல்லா சமைப்பார்.கான்பூரில் மேல் படிப்பு படிக்கும்போது அவரது சமைத்து தானே சாப்பிட்டார்.அதனால் பயமில்லை.கவலைபடாதீங்க.அவரை அவரே பார்த்துக் கொள்வார்.இல்லையென்றாலும் ஆபிஸ்ல சாப்பிட்டுக் கொள்வார் “ என ஆருதலாகச் சொன்னாள்.


இருந்தும் மித்ராவிற்கு கவலையாகவே இருந்தது,தொடர்ந்து, “நீயும் முத்துவும் போயிருக்கலாமே வள்ளி.அவர் அங்கு என்ன கஷ்ட படுக்கிறாரோ” என அவளையும் அறியாமல் தவியாய் தவித்தாள் மித்ரா.


மித்ராவின் ரிஷி மீதான உள்ளார்ந்த அன்பு வள்ளியை வியப்படை செய்தது.வள்ளியினுள் மித்ராவின் மீதான மதிப்பு மேலும் உயர்ந்தது.வள்ளியின் உணர்வை அவள்வெளிபடையாக எதுவும் சொல்லாமல், “சின்னம்மா...நாங்க வருகிறோம் என்றே சொன்னோம்.உங்களுக்கு உடல் நிலை சரியில்லாததால் நான் உங்களுடன் இருந்தால் நன்றாக இருக்குமென்றும்,என் அப்பாவோடு சில நாட்கள் இருந்துவிட்டு வரவேண்டும் என்றும் அவரின் கட்டளை.அதனோடு அவர் குழந்தை இல்லையே” எனச் சொல்லி கேலியாக மித்ராவை பார்த்துப் புன்னகைத்தாள் வள்ளி.


அந்தக் கேலி எதுவும் உணரும் நிலை இல்லாமல் ,“ஓ...”என்ற மித்ராவினுள் ‘என் மீது எதற்கு இந்த அக்கறை.உடல் நிலை சரியில்லாது போனதற்குக் காரணமே நீயாக இருக்கும் போது!’என்று ரிஷியின் கோபமாக வந்தது.


இரு நாட்கள் கழித்து சுமித்தா குன்னூர் வந்து சேர்ந்தாள்.மித்ராவிற்குமே அவளது வருகை மனதிற்கு இதமாக இருந்தது. 3 நாட்கள் எப்படிச் சென்றது என்று தெரியாமல் குரு சுமித்தாவின் கல்யாண பேச்சு ஆரம்பித்தது. 3 மாதத்திற்குள் திருமணம் என்றும்,திருமண நாளும் குறிக்கப்பட்டது.எல்லோர் மனதிலும் சந்தோஷமும்,அதன் வெளிப்பாடாக அவர்களின் முகப் பொலிவும் மித்ராவையும் நிலை மறக்கச் செய்து மகிழ வைத்தது.இருந்தும் அவள் கிளம்ப எண்ணிய நாட்களை கணக்கிடாமல் இல்லை.


தினமும் மித்ராவும் சுமித்தாவும் இரவில் வெகு நேரம் பல கதைகள் பேசினர்.இரவு தாமதமாக தூங்கி காலை விரைவில் எழும் பழக்கம் கொண்டதால் சுமித்தாவிற்கு இது பழகியும் இருந்திருக்கிறது.பழக்கமில்லாத மித்ரா காலையில் விடிந்த பிறகும் துயில் கொண்டாள்.டாக்டர் சொன்னதால்,மித்ராவை வீட்டில் யாரும் எழுப்ப முயலவுமில்லை.இரவு உறங்குமுன் மட்டும் மித்ராவை கட்டாயம் பால் அருந்தச் செய்து உறங்கச் செய்தாள் சுமித்தா.


அன்றும் அப்படியே!அன்று சனிக்கிழமை.ரிஷி வரக் கூடிய நாள் மித்ரா தன் வழக்கமான செயல்களை விடுத்து தன் அறையிலே இருக்க நினைத்த நாள். ‘ரிஷி தன் மீது கொண்ட வெறுப்பால் எப்படியும் தன்னை தேடி அவன் வரமாட்டான்’ என அவள் நினைத்திருந்தாள் மித்ரா.ஆனால் ‘அவள் நினைப்பதெல்லாம் நடந்திடுமா என்ன!!’


சனியன்று காலை வழக்கம் போல் எழுந்தவள் தன் ஃபோனை எடுத்தாள்.ஒரு வாரத்திற்கு முன் போல் இன்றும் ஒரு Messageவந்திருந்தது.இன்றும் குருவிடமிருந்து.


“மித்ரா.எழுந்ததும் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடு.பாட்டி திடீரென்று குல தெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள்.அதுவும் இன்றே செல்ல வேண்டுமென்று.!!வரவிருக்கும் மருமகளுக்காக வேண்டுதலாம்.எல்லாம் சுமிக்குதான். J வீட்டில் எல்லோரும் நம் வீட்டுக் குலதெய்வம் கோவிலுக்குத்தான் சென்று இருக்கிறோம்.எங்களைத் தேடாதே!உன்னையும் அழைத்து செல்லத்தான் நினைத்திருந்தோம்.குல தெய்வம் கோவில் திருநல்வேலி என்பதால் பாட்டிதான் உறுதியாக உன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றும்,உனக்குப் பயணம் இப்போதும் கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள்.அதனால்தான் உன்னை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாகிவிட்டது.மதியம் போல் ரிஷி வந்துவிடுவான்.அதனால் பயமேதும் இல்லை.நாங்க நாளைக் காலைதான் வரமுடியும்.நாங்க ரிஷியிடமும் சொல்லிவிடுக்கிறோம்.எதுவும் தேவையென்றால் ஃபோன் செய்” – குரு


இந்தMessage-ஐ படித்ததும் மித்ரா மீண்டும் சோர்ந்தாள். ‘என்னது?மீண்டும் ஒருமுறை ரிஷியுடன் தனியே இருக்க வேண்டுமா!?? ‘ என கலக்கமுற்றாள். ‘ஐயோ பெருமாளே!!என்னை ஏன் சோதிக்கிறாய்.’எனக் கடவுளை கடிந்தாள்.


‘ரிஷியிடம் சொல்லியிருக்கிறார்கள் என்றால் ,அவன் தன்னை காணக் கண்டிப்பாக நேரிடுமே!இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை.!’என சில வினாடிகள் யோசித்தவள், ‘ போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு மீண்டும் உறங்குவது அல்லது உறங்குவது போல் நடிப்பது’ என முட்டாள்தனமாக முடிவெடுத்தாள் மித்ரா.


அவள் எதிர்பார்த்தற்கும் முன்பாகவே ரிஷி வந்துவிட்டான் போலும்.அவள் சாப்பிட சென்ற போது,ஒரு வாரத்திற்கு நடந்தவையெல்லாம் நடக்கவே இல்லை என்பது போல்,அவன் வெண்ணிற பற்கள் பளிச்சிட, “வா மித்ரா.உனக்காகத்தான் காத்திருந்தேன்.நாளைக்கும் சேர்த்து இன்றே தூங்கிவிட்டாய் போல” எனக் கேட்டு படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு ,மேலும் சிரித்தான்.


ரிஷியின் வரவேற்பைப் பார்த்த மித்ரா விழி விரித்து, ‘இது கனவோ!’என நினைத்தாள்.ஆனால் ரிஷியின் குறும்பு சிரிப்பு இது கனவில்லை என்பதை மித்ராவிற்கு உணர்த்தியது.


‘மதியம்தான் ரிஷி வரப் போகிறான் என குருவின்Message –ல்,காலை உணவின் பின் உறங்குவது போல் வேடமிட நினைத்தோமே!இவன் காலையே வந்திருக்கக் கூடுமென்று ஏன் நினைக்கத் தோன்றவில்லை’ எனத் தன்னையே நிந்தித்துக் கொண்டாள் மித்ரா.மணியைப் பார்த்தாள் 10.30தான் இருந்தது.


ரிஷியின் கேலியான கேள்விக்கு எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாகச் சென்று டைனிங் டேபிளில் இருந்த தட்டை நிமிர்த்தி நாற்காலியில் அமர்ந்தாள்.மித்ராவின் அமைதியைக் கலைக்கும்விதமாக ரிஷியே அவளிடம் பேச்சை கொடுத்தான்.


“என்ன மித்ரா..இப்போது எப்படி இருக்கிறாய்?..வள்ளி தினமும் ஃபோன் செய்து சொன்னாள்.உன்னைப் பற்றி” எனச் சொல்லி கண் சிமிட்டினான்.


‘என்ன வள்ளி ஃபோனில் என்னைப் பற்றி சொன்னாளா!நான்4நாட்களுக்கு முன் அவனைப் பற்றி விசாரித்தையும் சொல்லி இருப்பாளோ’ எனச் சந்தேகம் கொண்டாள்.


இருந்தும் மித்ராவினுள் இப்போது திக்கியும் கூடப் பதில் வர மறுத்தது.ரிஷியின் கேள்விக்கு பதிலாக வார்த்தைகள் வராமல் , “ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.


மித்ராவினுள் மீண்டும் எண்ணங்களின் போராட்டம் ஆரம்பித்தது.அந்தப் போராட்டத்தினூடே சாப்பிட்டு எழுந்தாள் மித்ரா.


‘எந்த ரிஷிதான் உண்மை.அன்று சந்தேகம் கொண்டு என்னை வார்த்தைகளால் வதைத்த ரிஷியா?இல்லை இன்று அக்கறையுடன் பேசும் இந்த ரிஷியா?’என ரிஷியை புரிந்து கொள்ள முடியாமல் வேதனையுற்றாள்.படிகள் ஏற எத்தனித்தாள் மித்ரா.


“மித்ரா.ஊட்டிச் சென்றுவிட்டு வரலாமா?வீட்டில் அனைவரும் வர நாளையாகும்.பொழுது போகாமல் இங்கே இருப்பதற்கு,மலர் தோட்டம் கண்டுவிட்டு வரலாமே!”என ஆசையுடன் அழைத்தான் ரிஷி.


விருட்டென நிமிர்ந்து ரிஷியைப் பார்த்த மித்ரா, ‘இப்படி இவனை விட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போக எண்ணிய என்னை,ஒதுங்கவிடாமல் செய்து,அதற்கும் ஒரு பழிச்சொல் சொல்லிவிட்டு,இப்போது எதுவுமே நடக்காததுப் போல் எப்படி இவனால் இப்படிப் பேச முடிகிறது!!’வியப்புடன் கோபமும் வந்தது.

 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா தேவியுடன் ரிஷி இருக்கிறான்
மித்ரா நல்லபடியா குன்னூர் வந்து
விட்டாள்
படுபாவி ரங்கன் என்ன ஆனான்?
இவனை ரிஷி தண்டித்தானா?
இல்லையா?
மித்ராவை ஒரு வழி பண்ணணும்ன்னு திட்டம் போட்டுத்தான் ரங்கன் இங்கே வந்திருக்கிறான்
ஆனால் அவன் எண்ணம் ஈடேறிய மாதிரி தெரியலையே
மித்ரா ரிஷியுடன் ஊட்டி போவாளா?
ரிஷி மித்ராவிடம் எப்போ எல்லாவற்றையும் சொல்வான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top