உனக்காகவே நான் - 24

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 24

Heroin.jpg

தன் வலதுகையால் ரிஷியை இறுகப் பற்றி ரிஷியின் உடலில் தன் உடலைப் பாதி மறைத்தார் போல ஒரு இடத்தை நோக்கினாள் மித்ரா.


அவளது சில்லிட்ட கைகள் இரண்டும் அவள் பயந்திருப்பதை உணர்த்தியது.சட்டென மித்ராவை திரும்பிப் பார்த்த ரிஷி அவள் முகம் வெளுக்க எங்கோ வெறிப்பதும் ,வெறிக்கும் இடம் கண்டு பயப்படுவதும் தெளிவாக புரிந்தது.அவள் விழிகளைத் தொடர்ந்து ரிஷியும் அவள் நோக்கிய இடத்தைப் பார்த்தான்.அங்கே ஒருவன்.புகைத்துக் கொண்டு கடற்காற்றை மாசுபடுத்திக் கொண்டு எங்கோ பார்த்தபடி சென்று கொண்டிருந்தான்.


ரிஷிக்குள் என்னமோ உறுத்தியது, ‘இப்போது கிளம்பாளாம்’ என மித்ரா சொல்லக் கூடும் என எதிர்பார்த்தான்.அவன் எதிர்பார்ப்பு பொய்க்காமல் மித்ராவும் அதையே சொன்னாள்.அதன் பிறகு ரிஷியும் அதிகம் ஏன் என்னவென்று அவளைக் கேட்டு சங்கடம் செய்யாமல்,கார் நோக்கி நடந்தான்.


கார்வரை சென்ற பிறகும் மித்ரா ரிஷியைப் பிடித்திருந்த பிடியை விட்டாள் இல்லை,இன்னும் அவள் முகம் வெளிறி வியர்த்திருந்தது.ரிஷி தன்னை கண்டுக் கொள்ளக் கூடுமென்ற நினைவே இல்லாதவள் போல அவள் தன்னிலை மறந்து இருக்க ரிஷிதான் அவள் கைகளை விலக்கி காரில் அமரச் செய்து காரை எடுத்தான்.


‘ரிஷி அருகிலிருந்தால் எந்தப் பயமும் இல்லை’.இருந்தும் மித்ராவின் பேதை மனம் ‘என்ன நடக்கக் கூடுமோ?ஒருவேளை ரிஷிக்கு உண்மையைச் சொல்ல நேர்ந்து, அதனால் ரிஷிக்குக் கோபம் ஏற்பட்டு அவனிடம் சண்டையிட சென்றுவிட்டால்.அவன் ரிஷிக்குமே ஏதேனும் செய்துவிட்டாள்.அதன் பிறகு அவளால் எதையுமே தாங்க முடியாது.முதலில் இந்த இடத்தைவிட்டுப் போகவேண்டும்’ என முடிவெடுத்துப் பேசியவையே கிளம்பலாமென்ற அவளது வார்த்தைகள்.


கார் சிறிது தூரம் சென்ற பிறகுதான் மித்ரா சுய நினைவுகொண்டாள்.இப்போது வேறு பயம் அவளை தொற்றிக் கொண்டது.ரிஷி தன்னை கண்டு கொண்டிருப்பானா?’என நினைத்து அவன்புரம் திரும்பியவள் மீண்டும் அவனது முக இறுக்கத்தையை பரிசாகப் பெற நேர்ந்தது.


பேச நினைத்து,பயத்துடன் ‘என்ன கேட்கக்கூடும்.ஏன் அப்படி அவசரமாகப் போகலாம் என்றாய் எனக் கேட்டால் என்ன சொல்வது.?’என நினைத்தவள், ‘உண்மையைத்தான்.இதில் உன் மேல் என்ன தவறு இருக்கிறது’ என அவள் மனமும் புத்தியும் ஒருங்கே சொல்லியது.


ஆனால் வீடு வந்த பிறகும் கூட ரிஷி பீச்சில் நடந்தவை பற்றி எதையும் கேட்கும் எண்ணமில்லாமல், “சரி மித்ரா.உன்னுடைய பொருள்களையும் எடுத்து வைத்துக் கொள்.நாமும் ஊட்டிக் கிளம்பலாம்.நான் உடை மாற்றிவிட்டு வருகிறேன்.நீயும் தயாராக இரு.இன்னும்30நிமிடத்தில்,கிளம்பலாம்” என அவள் பேச வாய்ப்பளிக்காமல் பேசிவிட்டு அவன் அறை சென்றுவிட்டான்.


மித்ராவிடம் ரிஷி எதுவும் கேட்காமல் விட்டது ஒருவித இதமான சுமை என மித்ரா உணர்ந்தாள். ‘அவனிடம் எல்லாவற்றையும் காரில் போகும் போது சொல்லிவிட வேண்டும்.’என உறுதிக் கொண்டாள்.


மித்ராவும் அதிகம் தாமதிக்காமல் உடை மாற்றி தயாராகி 30நிமிடத்திற்கும் முன்பாக வெளி ஷோஃபாவில் ரிஷிக்காக காத்திருந்தவிதாமாக வந்து அமர்ந்திருந்தாள்.


அப்போது அவள் எதிர் பாராமல் அவன் எதிர்பட்டன்.அவன்தான் ரங்கன்.பீச்சில் பார்த்தவனும் அவனே!.அவள் அமர்ந்திருந்த அந்த ஷோஃபாவை நோக்கி அவள் இருந்த அந்த வீட்டிற்கே வந்துவிட்டான்.அவனைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத மித்ரா , ‘மிரட்சியுடன் அவனை ஏறிட்டாள். ‘இவன் எப்படி இங்கு வந்தான்?’வந்தவன் அவளைப் பார்த்தவுடன்,நேச புன்னகையே செய்தான்.


அவனைப் பார்த்து இருந்த இந்த இரண்டு மூன்று மாதங்களில் அவனும் அவன் அம்மாவும் உடன் இருந்த போதும் கூட அவனிடமிருந்து நல்லவிதமான புன்னகையையே மித்ரா கண்டதில்லை.எப்போதும் ஒருவிதமான அசிங்கமான முகபாவனையும்,அதைத் தொடர்ந்த அத்துமீறும் பார்வைகளுமாக இருந்திருக்கிறது.அவனாலே தன் அறையைவிட்டு வெளியில் வராமல் தன் அறையிலே பல நாட்கள் தவமிருந்திருக்கிறாள் மித்ரா.கடைசியாக அவன் அவள் அனுமதியில்லாமல் அவள் கை பற்றி தவறாக பேசிய பிறகே இதற்கு மேலும் பொறுக்க முடியாமல்,அவனை அறைந்துவிட்டு ஜீவா அங்கிளிடம் ஓடி வந்து இந்த இடத்தை விட்டுப் போக வேண்டும் என உறுதியாகச் சொன்னது.இந்த விஷயம் யாருக்கும் சொல்லவில்லை.ஏன் ஜீவா அங்கிளிடமும்தான்.ஆனால் அவனின் இன்றைய தோற்றம் 3வாரத்திற்குமுன் பார்த்தது இல்லை.ரங்கனின் இந்த புதுவித பாவனை மித்ராவிற்கு புரியாத புதிராக இருந்தது.


எனவே மித்ரா பொறுத்தாள். ‘ஏன் இவன் இங்கு வந்தான் என அவனே சொல்லட்டும்?ஏதேனும் தவறாக பேசினாலோ,செய்தாலோ ரிஷிதான் இருக்கிறானே!அதனோடு வெளியில் வாட்ச் மேன் அண்ணா,தோட்டத்துத் தாத்தா,சமையல்கார அம்மா என எல்லாரும் இருக்கிறார்கள்.இங்குப் பயம் கொள்ளத் தேவையில்லை.’எனப் பலவாறு சொல்லிக் கொண்டு ரிஷியின் அறையை நோக்கி விழியைச் செலுத்தி மீட்டாள்.மீண்டும் வந்திருந்த ரங்கனை பார்த்தாள்.


அவள் பார்வையை சந்தித்த ரங்கன், “என்னை மன்னிச்சிடு மித்ரா..என் அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் உன்னிடம் தவறாக பேசிவிட்டேன்.நடந்துக் கொண்டேன்.”என மிகவும் வருந்தும் குரலில் வருத்தமாக கேட்டுக் கொண்டான்.கண்களும் கலங்கி இருந்தது.


அவனது குரலில் மனமிளகிய மித்ரா , “அச்சோ மாமா..என்ன நீங்க?பரவாயில்லை.இப்போதாவது நீங்க புரிந்து கொண்டீர்களே!அது போதும் மாமா.”எனப் பெரிய பாரம் குறைந்தார் போலப் பெரு மூச்செறிந்து புன்னகைத்தாள் மித்ரா.


அவள் புன்னகைக்காகவே காத்திருந்தவன் போல ரங்கன் , “அது யாரு மித்ரா?”என மெதுவாகக் கேட்டான்.


“எது மாமா?”எனப் புரியாதவள் போலக் கேட்டாள் மித்ரா.


“அதுதான் மித்ரா.உன்னைப் பீச்சில் ஒருவருடன் பார்த்தேனே!நீக் கூட அவரது கையை இறுகப் பற்றி இருந்தாயே!”எனக் கேட்டான் ரங்கன்.


ரிஷியைத்தான் சொல்கிறான் என்பதை உணர்ந்து, ஏற்பட்ட வெட்கத்தினால் முகம் சிவந்து, “ அவர்...அவர்தான் மாமா,நான் திருமணம் செய்து கொள்ள போகிறவர்.ஜீவா அங்கிளின் மகன்.என் அப்பா அம்மா எனக்கு மணம் முடிக்கப் பார்க்கப்பட்டவர் என அங்கிள் சொன்னார்” என முக சிவப்பு மறையாமல் சொன்னாள்.சொன்னவள் அவளையும் அறியாமல் ரிஷியின் அறையை இருதரம் பார்த்துவிட்டு சொன்னாள்.


“ம்ம்...சரியான ஜோடி.ஒருவேளை நீ என்னை மணப்பதாகச் சொல்லியிருந்தாலும் நம் ஜோடி நன்றாக இருந்திருக்காது.”எனச் சரியான ஜோடி என்ற வார்த்தைக்கும் நம் ஜோடி என்ற வார்த்தைக்கும் குரல் அதிகம் கொடுத்து சொன்னான் ரங்கன்.


ரங்கனின் குரல் மாற்றத்தை உணராமல் மித்ரா ரிஷியின் நினைவில் இருந்தாள். ‘இப்போது ரிஷி இங்கு வந்தால் அவனுக்கு ரங்கனை அறிமுகம் செய்யலாமே!பிறகு இவனைப் பற்றி சொல்ல இலகுவாக இருக்கு’ மென்று எண்ணி மித்ரா மற்றுமொருமுறை ரிஷியின் அறையைப் பார்த்தாள்.


ரிஷி இன்னும் தன் அறையை விட்டு வரவில்லையென்பதை உணர்ந்து,ரங்கனிடம் திரும்பி, “இங்கு எப்படி வந்தீங்க மாமா?”எனச் சந்தேகமுடன் கேட்டாள் மித்ரா.


“நான் நேற்றே உன்னை வட பழனியில் பார்த்தேன் மித்ரா.நீ வேறு இருவருடன் இருந்தாய்.பேசலாமா வேண்டாமா?என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நீங்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டீர்கள்.பிறகு இன்றும் உன்னைத் தவற விட்டிருப்பேன்.நல்ல வேளை உன்னை உன் வருங்கால கணவர் காரில் அமர வைத்திருக்கும் போதே பார்த்துவிட்டேன்.அதனால்தான் பின்னாலே வந்து உன்னிடம் மன்னிப்பும் கேட்க முடிந்தது.”எனப் பெரிய கடன் கழிந்தது போல மூச்சுவிட்டான் ரங்கன்.


அதன் பிறகு ரங்கன் ஒரு மெக்கானிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும்,அவன் அம்மா ஆனந்தியும் அவனுடன் வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டனர் என்பதையும் சொல்லிவிட்டு,பொதுவாக மேலும் சில பேசிவிட்டு , 10 நிமிடத்தில் ரங்கன் கிளம்பியும் விட்டான்.


ரங்கன் சென்ற பிறகும் அவனது படபடக்கும் பேச்சையும், ரிஷி உன் வருங்கால கணவன் என்று சொல்லிய அவனது பேச்சிலும் மித்ராவின் முகத்தில் புன்னகை மாறாமலே இருந்தாள் மித்ரா.முதலில் இவற்றை ரிஷியிடம்தான் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தாள்.


அப்போது ரிஷி “என்ன ஒரே புன்னகை?”என கேட்டவிதமாக ரிஷி வீட்டின் வாயிற்படியிலிருந்து வந்து கொண்டிருந்தான்.


‘இவன் எப்போது வெளியில் சென்றான்.அவன் அறையில் இவ்வளவு நேரம் இருந்திருக்கவில்லையா?’என ஆச்சரியம் கொண்டு அதையே கேட்டுவிட்டாள்.


“நான் வெளியில் இருக்கக் கூடுமென்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை.இல்லையா?தொந்தரவு செய்துவிட்டேனோ’ என ஏளனமாக அவனது குரல் ஒலித்தது.அவன் முகத்திலும் அதே ஏளன புருவ நெளிப்புதான்.


அவனது குரலில் சுய உணர்வு கொண்ட மித்ரா, “எ..எதிர்பார்க்கவில்லைதான்.. ஆ...ஆனால்..தொந்தரவு செய்யவுமில்லை.ஏ...ஏன் அப்படி கேட்டீங்க?”எனத் திக்கி பயத்துடன் கேட்டாள் மித்ரா.


உடனே ஓரெட்டில் அவள் அருகில் வந்தவன், “ஏன் என்றா கேட்கிறாய். ?” எனக் கோபமுடன் பொறுமி தன் பற்களைக் கடித்தான்.அறையின் சுற்றுமுற்றும் பார்த்தான்.இன்னமும் வேலைக்கு வந்திருந்த சின்னப்பெண் பூச்சாடிகளை துடைத்துக் கொண்டிருந்தாள்.அந்தப் பெண்ணின் முன் எதையும் கேட்டுவிடக் கூடாது என்று,மித்ராவின் கையை பற்றி இழுத்துக் கொண்டு அவன் அறை சென்றான் ரிஷி.


அவனது கை பிடி வழக்கத்திற்கு மாறாக வலியினை கொடுக்கும் படியாக இறுகி இருந்தது.அவளது மணிக்கட்டு எலும்புகள் நொருங்கிவிடுமோ என அஞ்சும் அளவு அவளுக்கு வலியினைக் கொடுத்தது.வலிதாங்க முடியாமல் அவள் கண்கள் கலங்கியது.அதைவிட ஏன் ‘அவன் கோபம் கொள்கிறான்’ எனத் தெரியாமல் அவள் உள்ளம் நொறுங்கி கலங்கியது.


அவனது பராமுகத்தையே தாங்க முடியாமல் தவித்தவள்.இவனது கோபத்தை எப்படி தாங்கக் கூடும்!!


அவன் அறை சென்றதும் அவளது கையை விசிரியடித்து அவளை இழுத்துவிட்டான் ரிஷி.அவனது இந்தச் செயலால் நிலை தடுமாறி சுழன்று நின்றாள் மித்ரா.ரிஷியின் கோபம் கொண்டு சிவந்து கழன்ற கண்களை காணமுடியாமல் மித்ரா நொறுங்கி அவனை நோக்கினாள். ‘தன் மீது ஏன் இந்தக் கோபம்?தான் செய்த தவறுதான் என்ன?’எனத் தெரியாமல் மிரட்சியுடன் கண் கலங்க நின்றாள்.


“ஏன் என்றா கேட்கிறாய்?”என மீண்டும் கத்தியவன் மேலும் சொல்ல முடியாமல் தயங்கி வார்த்தைகளை விழுங்கினான்.மேலும் சில வினாடிகள் மித்ராவை தன் கனன்ற கண்களால் சுட்டெரிக்கும் அளவு வெறுப்புடன் வெறித்தான்.அவனது பார்வையை தொடர்ந்து சந்திக்க முடியாமல் தலை தாழ்த்தி கண்ணீர் சிந்தினாள்.


“உனக்கு பணம்தான் வேண்டுமென்றால் என்னிடம் எப்படியோ கேட்டு வாங்கி இருக்கலாமே!?ஏன் என்னை இப்படி ஏமாற்றினாய்? “ எனக் கேட்டு மித்ராவை அதிர வைத்தான் ரிஷி.


“ரிஷி என்ன பேசிறீங்க?என்ன பணம்?எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?”என அவன் பேசும் மொழி புரியாமல் அவனையே திரும்ப கேட்டாள் மித்ரா.


“புரியவில்லை.நான் பேசுவது புரியவில்லை.ஓ...எப்படிப் புரியும்?என் மொழி புரியுமா இப்போது?முகத்திரை கிழிந்த பிறகு எதற்கு முக்காடு.உன் இயல்பான தோற்றத்துடனே பேசலாமே!”என ஏளனமாகப் பேசி மித்ராவை மேலும் நோகடித்தான். “ஏன் என் மனதோடு விளையாடினாய்.என் அப்பாவே சொன்னது என்றாலும்,உனக்கு வேறேதும் வழி தெரியவில்லையா?”என நொறுங்கி கண்கலங்கி அரற்றினான்.


ரிஷியின் வார்த்தைகளை நம்ப முடியாமல்,மித்ராவும் நொறுங்கி போனாள். ‘அவன் மனதோடு நான் விளையாடினேனா?அவன் மனதை வாய் வார்த்தைகளாக இன்னும் கேட்காத நிலையிலும் அவனைக் கணவனாக ஏற்று வாழ ஆரம்பித்துவிட்ட என்னைப் பார்த்து ரிஷி ஏன் இப்படிக் கேட்கிறான்?’எனக் குழம்பி தவித்தாள் மித்ரா.


‘இல்லை’ எனத் தலையை அசைத்தவள் ,‘என்னமோ தப்பு நடந்திருக்கிறது?என் ரிஷி இப்படிப் பேச கூடியவன் இல்லை.என்னமோ’ என மனதில் யோசித்துக் கொண்டே தலையாட்டியாள் ஜன்னல் வழியே ரங்கன் இரவு விளக்கொளியில் நடந்து போவது தெரிந்தது.அவளையும் அறியாமல் “ரங்கன்..”என முனங்கினாள் மித்ரா.


இதற்காகவே காத்திருந்தவன் போல “ம்ம்ம்....இப்போது புரிந்துவிட்டது போல..உன் காதலன்” எனச் சத்தமிட்டு சொன்னான் ரிஷி..


ரிஷியின் உன் காதலன் என்ற வார்த்தையில் “இல்லை” என வீடே அதிரும்படி கத்திவிட்டாள் மித்ரா.


அவளது இந்த சத்தமிட்ட கதறலில் ரிஷியும் சில வினாடிகள் பேச்சிழ்ந்தான்.ஆனால் ரிஷி ஆழ்மனதில் பதிந்த பெண்களைப் பற்றிய தவறான எண்ணம் நீறுபூத்த நெருப்பாக இருந்திருக்கும் போலும்,ரங்கன் வந்து ஊதிவிட அது அணைக்க முடியாத அளவு கொழுந்துவிட்டு எறிய ஆரம்பித்துவிட்டது.அந்த கனன்ற தீயை மித்ராவின் மீதே பாய்ச்சினான் ரிஷி.
*****
ஆம்.ரிஷி,ஊட்டிச் செல்ல தயாரானதும் காரை செட்டிலிருந்து வெளியே எடுத்து நிறுத்திக் கொண்டு இருக்கும் போது ரங்கன் கம்பௌண்ட் கதவில் நின்று காவலாளியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.அப்போது அவனைப் பீச்சில் பார்த்தது நினைவு வந்து ரங்கனை உள்ள விடும்படி ரிஷி சைகை செய்தான் ரிஷி.உள்ளே வந்த ரங்கன் ரிஷியைக் கண்டு பணிவுடன் வணக்கம் செய்தான்.


ரிஷி அவனை அறியாதவன்போல் “நீங்க யார்?உங்களுக்கு என்ன வேண்டும்?”என வெகு அக்கறையாகக் கேட்டான் ரிஷி.


“ஐயா...உங்கள பார்த்த பெரிய எடுத்து புள்ளணு தெளிவா தெரிது.எனக்கு நிச்சயம் பண்ண பொண்ண உங்களோடு பார்த்தேன்.அவளை என் கூட அனுபிச்சு வச்சிடுங்கய்யா?ஏதோ வயசுபுள்ள வசதியா அவங்க அப்பா அம்மா வளத்துட்டாங்க.அவங்க செத்ததும் கடன் அது இதுனு எல்லா பணமும் போய்டுச்சு.அப்பறம் இந்த புள்ளையால பணமில்லாமல் சொகுசா வாழ முடியல.ஏதோ ஒரு கம்பனிலக் கூட வேல செஞ்சது.அதுவும் கட்டுபடி ஆகல.அதான் சரினு ஒரு பெரியய்யாவோட அனுப்பிச்சு வச்சமுங்க.அந்த ஐயாவோட நிபந்தனப்படி ஒரு மாதத்திற்குள்ள யாரையோ,எப்படியோ மாத்தனுமாம்.அப்படி மாத்தினா, 25 லட்சம் பணம் கொடுப்பதாக சொன்னாருனு கிளம்பிடுச்சு.இன்னிக்கு பாத்தா அது உங்க கூட சுத்திட்டு இருக்கு.என்ன பார்த்ததும் விழுந்தடிச்சுட்டு ஓடி ஒளியுது.என் மேல ரொம்ப பாசமா இருந்தது.இப்போ என்ன ஆச்சுன்னு தெரில.ஒரு ரெண்டு வார்த்த அவகிட்ட பேசிட்டு வந்திடுறேனே!”எனக் கோர்வையாக தான் பேச திட்டமிட்டதைப் பேசி உண்மையான வருத்தமுடன் இருப்பது போல கண்களைச் சோர்வாக்கி நின்றான் ர்ங்கன்.


அவன் பேச்சை நம்பாத ரிஷி ,”என்ன உளறுகிறாய்.?யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய்?ஒழுங்கா இங்கிருந்து வீடு சேரும் வழியைப் பார்” என இறுகிய குரலுடன் சொன்னான்.


இதையே எதிர்பார்த்து வந்தவன் போல ரங்கன்,மேலும் குரலை மெலித்து , “ஐயா..எனக்குத் தெரியும்.மித்ராவின் நடிப்பின் ஆழம்.அவளை யாராலும் சந்தேகிக்க முடியாது.அந்த அளவு அற்புதமாக நடிப்பாள்.நீங்க எனக்கு ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்க.நான் அவளிடம் பேசுவதை எங்களுக்குத் தெரியாமல் நீங்க பாருங்க.அவளது உண்மையான ஸ்வருபம் தெரியும்” என்று ரிஷி நம்பும்படியாக முகத்தை வைத்துக் கொண்டான்.


கூர்ந்து ரங்கனை நோக்கிய ரிஷி, “சரி..போ..ஆனால் நீ சொல்வது தவறென்றானால் உன் எலும்புகள் எத்தனை என்பதை நான் தனித்தனியாக பிரித்து எண்ண நேரிடும்” என எச்சரிக்கை செய்து அனுப்பினான் ரிஷி.


‘ரங்கன் பேசுவதையெல்லாம் மித்ராவின் முன் சொல்லட்டும்.மித்ரா பயந்து நடுங்காமல் மித்ராவே அவனை அறைந்து வெளியில் அனுப்பட்டு’மென்று எண்ணியே ரிஷி ரங்கனை உள்ளே அனுப்பியது.அனுப்பியபின் அவன் பின் சென்று அவர்களது பேச்சையும் கேட்டான் இல்லை.தூரத்தில் நின்று ‘மித்ரா பாதுகாப்பாக இருக்கிறாளா?’என ஓர பார்வையை மட்டுமே செலுத்தினான் ரிஷி.சிறிது இருட்ட ஆரம்பித்து இருந்ததால் ரிஷி நின்று பார்த்துக் கொண்டிருந்தது உள்ளிருந்த மித்ராவிற்கு தெரிந்திருக்க வில்லை.


அப்படி நின்று ரிசி பார்த்துக் கொண்டிருந்த போது ,மித்ராவின் திடீர் கன்ன சிவப்பு தென்பட்டது.


‘உங்களைப் பார்த்தால் மட்டும் அப்பப்போ வருந்துவிடுகிறது.நான் என்ன செய்ய!’என கன்னசிவப்பின் காரணத்திற்கு சிணுங்கிய மித்ராவின் குரல் அவனுள் ஒலித்தது. ‘இப்போது நான் அங்கு இல்லையே!!ஏன் அவள் வெட்கம் கொள்ள வேண்டும்’ என எண்ணி அறையினுள் நுழையக் கால் எடுத்து வைத்தான் ரிஷி.


அப்போது, ‘சரியான ஜோடி..நம் ஜோடி’ என்ற ரங்கனின் வார்த்தைகள் ரிஷி காதில் விழுந்து,அவன் செவிழை செயலிழக்கச் செய்தது.சிலவினாடிகள் அசைவற்று நின்றவனின் புத்தி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.


‘அப்போது ரங்கன் சொன்னது போல என்னை மாற்ற வந்தவளா மித்ரா.?ஏன் அப்பா,இப்படிச் செய்தார்.?என்னை மாற்ற வேறெதுவும் செய்திருக்கலாமே?நான் அவ்வளவு பிடிவாதத்துடனா இருந்தேன்?’என மனதில் இடிவிழுந்த உணர்வோடு அப்படியே நின்றான் ரிஷி.


‘ஏன் மித்ராவை என் வாழ்வில் கொண்டு வந்தார்.இதனால் நான் இன்னும் பெண்களை வெறுக்க நேரிடுமென்று ஏன் அவர் உணரவில்லை.ஏன் இவள் என் வாழ்வில் வந்தாள்?இவளுக்கு பணம் தேவை என்றால்,அதற்கு வேறு வழியே தெரியவில்லையா.?என் மனதில் பெண்கள் மீதான வெறுப்பை மாற்றி,அவர்கள் மீது மதிப்பை உண்டாக்கி,அவள் மீது காதலை உண்டாக்கி,என் காதலை சொல்ல நினைத்திருந்த இந்த நேரத்தில் என் உள்ளத்தைச் சுக்கு நூறாக உடைத்தே விட்டாளே!!’எனக் கண்கள் கலங்கப் போய் மீண்டும் சென்று முன் இருந்தது போல காரில் சாய்ந்து கொண்டு எதுவும் நடக்காதது போல மீண்டும் நின்றிருந்தான் ரிஷி.அதன் பிறகு மறந்தும் மித்ராவை திரும்பி பார்த்தான் இல்லை.


பின் ரங்கன் வந்து , “ரொம்ப நன்றி ஐயா.எப்படியும் உங்களிடம் பக்குவமாக பேசிவிட்டு நாளை அல்லது நாளை மறுநாள் என்னிடம் வருவதாகச் சொல்லிருக்கிறாள்.இப்போதுதான் நிம்மதி” என உண்மையை விடப் பொய் சொல்லவே எளிது என்பது போல் பேசிவிட்டு ரிஷியின் பேயறைந்ததுப் போன்ற முகத்தைப் பார்த்து திருப்தியுற்றவனாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்றான் ரங்கன்.


ரங்கனுக்கு பதிலேதும் சொல்லாமல்,ரிஷி சில வினாடிகள் யோசனையில் நின்றான்.பிறகே உள்ளே சென்றான்.


***


மித்ராவின் ‘இல்லை’ என்ற பதிலில் சில வினாடிகள் தன்னிலை மறந்து நின்ற ரிஷி,மீண்டும் ர்ங்கன் சொன்ன ‘மித்ராவை யாராலும் சந்தேகிக முடியாது’ எனச் சொன்னது ரிஷிக்கு நினைவு வந்து , “என்னடி இல்லை...அதுதான் நானே பார்த்தேனே.சரியான ஜோடி உங்க ஜோடி என்று அவன் உன் காதலன் கூட” என வெறி கொண்ட வேங்கை போல கத்தினான் ரிஷி.


“இல்லை ரிஷி.மாமா அப்படிச் சொல்லவில்லை.நம் இருவர் ஜோடியைத்தான் சரியான ஜோடி” என மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிஷி “ஓ...மாமாவா...நன்றாகவே இருக்கிறது அடை மொழி” எனச் சொல்லி அவளைக் குத்தி கிளறினான்.


‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டென் என்கிறானே’ என எண்ணி , “ரிஷி...நா..நான் சொல்வதை பொறுமையுடன் கேளுங்களேன்.ரங்கன் என் அத்தை மகன்.”என அவள் கண்ணீரும் தவிப்புமாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஓ அத்தை மகன் மீது காதலா?அப்படியே இருவரும் திருமணம் செய்து கொண்டு போக வேண்டியதுதானே!ஏன் என் வாழ்வில் வந்தாய்?”என ஏற்கனவே காயப்பட்ட மித்ராவின் நெஞ்சத்தில் ஊசியாய் குற்றினான் ரிஷி.


ரங்கனுடன் தன்னை இணைத்துப் பேசிய அந்த வினாடி மித்ரா அருவருப்பாக உணர்ந்தாள்.பேச முடியாதபடி நொந்தாள்.ஆனால் ரிஷியின் தவறான யூகத்தைச் சரி செய்துவிட எண்ணி , “இப்படி பேசாதிங்க ரிஷி.நான் உங்களை மட்டும்தான் நேசிக்கிறேன்.என் வாழ்வில் வேறொரு ஆணுக்கு இடமில்லை” என ‘ரிஷி நம்ப வேண்டுமே’ என்ற பரிதவிப்புடன் கெஞ்சினாள் மித்ரா.தன் காதலை இந்த நிலையில் சொல்ல நேர்ந்ததை எண்ணி நொந்து போனாள்.


ரிஷியின் நெஞ்சில் கனன்ற தீ,கொஞ்ச நஞ்ச ஈரத்தையும் ஆவிக்கவிட்டது போலும். “பிரமாதம்...உன் நடிப்பு பிரமாதம்.எப்படி நினைத்தவுடன் கண்ணீர் வருகிறது?”என அவளை வேதனைக் குள்ளாக்கினான்.


இனி ரிஷியிடம் பேசி எதையும் புரிய வைக்க முடியாது என உணர்ந்தாள் மித்ரா.சோர்ந்து கீழே சரியப் போனாள்.ஓரெட்டில் எட்டி அவளைப் பிடித்த ரிஷி,அவளது முழங்கைக்கு மேலிருந்த இருக்கைகளையும் தன் இரு உள்ளங்கையால் இறுகப் பற்றினான்.


மிருதுவாக இருந்த அவன் பிடியில் நிமிர்ந்து ரிஷியைப் பார்த்த மித்ராவின் கண்ணை ரிஷி நோக்கினான். “ ஏன் இப்படி செய்தாய் மித்ரா.ஏன்...ஏன் இப்படிச் செய்தாய்?உன்னை தேவதையாய் போற்றியிருந்தேனே!என் வாழ்வின் வசந்தம் என்றெண்ணினேனே!என் உயிராய் நேசித்தேனே” என வேதனை மிக அவளை உலுக்கினான்.


எப்படியெல்லாமோ எதிர்பார்த்திருந்த அவனது காதலின் வெளிப்பாடு இப்படி ஒரு நிலையில் தெரிய கூடுமென்று மித்ரா நினைத்தாள் இல்லை. ‘நான் அப்படி இல்லை ரிஷி.’என அவனை அணைத்து ஆருதல் சொல்ல அவள் உள்ளம் துடித்தது.ஆனால் அதற்கும் வேறொரு அர்த்தம் சொல்லும் நிலையில் இருந்த ரிஷியைச் சமாளிக்க அவளுக்கு இனி சக்தி இல்லை.பதிலேதும் சொல்லாமல் ‘என்னை நம்புங்கள்.நான் உங்க மது.உள்ளத்தால் என்னைப் பாருங்கள்’ என அவள் விழி அவன் விழி பார்த்து கெஞ்சியது.


ரிஷியின் பிடி மேலும் இறுக அதை விலக்கவும் முடியாமல் ரிஷிக்கு விளக்கம் சொல்ல அதை கேட்கும் நிலையில் அவன் இல்லை என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மித்ராவின் கண்களில் இருந்து தெளிந்த நீர் கோடுகள் அவள் கன்னங்களை கடந்தது.


அவள் கண்ணீரை கண்டு என்ன உணர்ந்தானோ,இல்லை அவள் கண் வழி வார்த்தைகளை புரிந்து கொண்டானோ!ரிஷி,மித்ராவை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.அவள் விலா எலும்புகள் நொறுங்கும் படியாக அவனது அணைப்பு மேலும் இறுகியது.மிரட்சியுடன் நிமிர்ந்து ரிஷியை ஏறிட்டாள்.கூடவே பயமும் தோன்றிவிட அதை கண்ணில் காட்டிவிட்டாள்.மித்ராவின் உள்ளங்கைகள் சில்லிட்டன.


அவளது மிரட்சியையும் சில்லிட்ட கைகளையும் அவளது கண்களிலும் தொடுகையிலும் உணர்ந்த ரிஷி,சட்டென அவளை விட்டு விலகித் திரும்பியும் பாராமல் வெளியில் சென்றுவிட்டான்.அவன் அணைத்த போது உண்டான வலியை விட அவன் விலகி சென்ற போது பல மடங்கு வலியை உணர்ந்தாள் மித்ரா.


இப்போது என்ன நடந்தது என்று புரியாமல் மித்ரா இருந்த இடத்திலே மண்டியிட்டு அமர்ந்தாள்.ரிஷி காரை விரைந்து செலுத்திய சத்தம் அவன் கோபமாக இருப்பதை, உள்ளிருக்கும் அறையென்ற போதும் தெளிவாகக் கேட்டது.


ரிஷி சென்ற சில நிமிடங்களில் “என்ன மித்ரா.உன்னை இன்னுமா வீட்டைவிட்டு அந்தக் கோபக்காரன் தொரத்தவில்லை.?”என ஏளனமாக கேட்டவிதமாக ரிஷியின் அறையினுள்ளே வந்து நின்றான் ரங்கன்.


அவன் குரலில் அவசரமாகக் கண் துடைத்த மித்ரா, “நான் உனக்கு என்ன தவறு செய்தேன். ? அவரிடம் என்ன சொன்னாய்?அவர் ஏன் என் மீது இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?”எனப் பச்சை குழந்தையாய் ரங்கனிடம் கேட்டாள் மித்ரா.


“என்ன செய்தாய்.?என்றா கேட்கிறாய்.கன்னத்தில் அறைந்தாயே!”எனச் சொல்லி இப்போதுதான் அறை விழுந்தார் போல தன் கன்னத்தை தடவினான்.மீண்டும் “ அன்றே முடிவு செய்தேன் உன்னைப் பலிவாங்க வேண்டும் என்று.அது சரி,என்னிடம் இல்லாத என்ன அவனிடம் இருக்கு.?”என இலகுவாக அவன் வீடு போல ரிஷியின் படுக்கையில் அமர்ந்தான்.அவன் சென்று அமர்ந்ததை அறுவறுப்புடன் பார்த்தாள் மித்ரா.இருந்தும் அவனிடம் எதுவும் பேசும் எண்ணமில்லாமல் அவன் என்னதான் சொல்கிறான் எனக் கேட்டாள் மித்ரா.

 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி ரங்கன் இவன் எங்கே இங்கே வந்தான்?
எல்லாவற்றையும் ரிஷியிடம் சொன்ன மித்ரா ரங்கன் and அவன் அம்மாவைப் பற்றி ரிஷியிடம் ஏன் சொல்லவில்லை?
ரிஷிக்கு ரங்கனைத் தெரியலையா?
ஜீவாதான் சொல்லியிருக்கிறாரே
நேற்று கோவிலில் குருவுடன் மித்ராவைப் பார்த்தது இந்த ரங்கன் மூதேவிதானா?
ரிஷின்னு நான் நினைத்தேன்,
யோகா டியர்
நிஜமாவே ரங்கனின் பேச்சை நம்பி ரிஷி வெளியே போய் விட்டானா?
இல்லை போன மாதிரி வெறுமனே கார் கதவை மட்டும் சாத்தினானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top