உனக்காகவே நான் - 20

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 20
பிறகு வள்ளியின் உற்சாக குரலில் மாணிக்க அங்கிளின் பதிலில் அவள் திருப்தியுற்றவளாக தெரிந்தாள் வள்ளி.


தொடர்ந்து, “ வள்ளி.மாணிக்கம் அங்கிளின் மீதான உன் சந்தேகம் தீர்ந்ததா?”எனக் கேட்டாள்.


“ம்ம்...ஆமா சின்னம்மா.என் அப்பாவுக்கு என் மேல் எவ்வளவு பாசம்.!!!!இதெல்லாம் விட்டுவிட்டு இப்படி பத்து வருஷம் வீம்பு பண்ணிட்டு இழந்துட்டேனே!”எனக் கவலையும் தெளிவுமாகப் பேசினாள் வள்ளி.


“ஹப்பா இப்போவாது நீ புரிந்துகொண்டாயே!.இனியேனும் அவரோடு சந்தோஷமா இருந்தா அது போதும் வள்ளி” என மகிழ்ச்சியுடே சொன்னாள் மித்ரா.


“கண்டிப்பா சின்னம்மா.ரொம்ப நன்றி சின்னம்மா.என் அப்பா எனக்குத் திரும்ப கிடைச்சிட்டாரு” என மனதார நன்றி சொன்னாள் வள்ளி.


புன்னகைத்த மித்ரா, ‘ரிஷியிடம் பெண்களின் மீதான வெறுப்பு உருவாக வைத்ததாகச் சொன்ன அந்த முதல் காரணம் என்ன’ என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.ஆனால் எப்படிக் கேட்பது என்று தயங்கி “ம்ம்...அப்பறம் வள்ளி” எனப் பேச்சுக்கு அடித்தளம் போலக் கேட்டாள் மித்ரா.


ஒருவரை பற்றி தெரிந்துதான் ஆகவேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு இதுவரை என்றும் உண்டானது இல்லை.ஆனால் இன்று அந்த ஒருவர் ரிஷியாக இருக்க,ரிஷியைப் பற்றியும் அவனைச் சார்ந்த விஷயங்களையும் அறியத் துடித்தாள்.


மித்ராவை மேலும் தவிக்கவிடாமல் வள்ளியே பேச ஆரம்பித்தாள். “சின்னம்மா...உங்களிடம் சொல்லலையே!அந்தக் கோவை பொண்ண பத்தி” என்றாள்.


அதை தெரிந்து கொள்ள தானே எண்ணி இருக்கிறேன் என்பது போல, “சொல்லு வள்ளி.என்ன செய்தால் அந்தப் பெண்” என்றாள் மித்ரா.


“சின்னம்மா...அந்த பொண்ணு அப்பாக்கு கீழே அந்தக் கோவை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறாள்.அவள் கொஞ்சம் கை சுத்தமில்லாத பொண்ணுப் போல.தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு சில பொருட்களைச் சொந்த வேலைக்காக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.அதை ஓரிருமுறை அப்பா கண்டுபிடித்து எச்சரித்து ‘போனால் போகுகிறது அடுத்த முறை இவ்வாறு செய்யாதே’ என்று விட்டிருக்கிறார்.அன்றே அவள் அப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்தால் அவர் இவளது இஷ்டம் போல இருப்பார் என எண்ணி அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறாள்.அதற்கேற்ப நல்லவள் போல அப்பாவின் முன் நடித்து அவரை விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாள்.அப்பா தனக்கு திருமணமானதையும் சொல்லி மறுத்திருக்கிறார்.ஆனால் அவள் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தான் இறந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு ஒரு மூன்று அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வது போல அனைவர் முன்னிலையிலும் மிரட்டி இருக்கிறாள்.இதை உண்மையென்று நம்பிய என் அப்பா தன் மீதான உண்மையான அன்புதானே அவளை இப்படிச் செய்ய வைத்திருக்கிறது எனத் தவறாக எண்ணி அவளை ஏற்றிருக்கிறார்.ஆனால் அப்பாவுக்கு வேலைப் போனதும் அவளின் உண்மை ரூபத்தை அவளது வாயால் சொல்லிவிட்டு அவரை விட்டுவிட்டுப் போய்விட்டாள்” என ஒருவழியாகச் சொல்லி முடித்துவிட்டாள்.


“ஓ...”என்ற மித்ரா “ஆனால் இதை உன்னிடம் அன்றே சொல்லியிருக்கலாமே.இதைச் சொல்ல கூடாது என்று என்ன இருக்கிறது” எனக் கேட்டாள் மித்ரா.


“எனக்கும் தோன்றியதுதான் அது சின்னம்மா.அதற்கும் அப்பாவே சொன்னார். ‘தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாள் இளகிய மனம் கொண்டவர்களிடம் காரியங்கள் நடக்கும் என்ற எண்ணம் என் மனதில் வளர்ந்துவிடக் கூடாதே!என்ற ஐயம்தான்’ என்றார்.அதற்கு மேல் நானும் எதுவும் பேசவில்லை” என்றாள் வள்ளி.


வேறெதுவும் பேச தோன்றாமல் “ம்ம்... “ என்றாள் மித்ரா.


வள்ளி தொடர்ந்து “பாவம் என் அப்பா..எவ்வளவு கஷ்ட பாட்டிருப்பார்.அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற எண்ணி எடுத்த முடிவில் என்னவெல்லாம் இழந்துவிட்டார்.இனி ஒருநாளும் என் அப்பாவைவிட்டு நான் பிரியவே மாட்டேன்” என தன் தவற்றுக்கு மன்னிப்பு போல சொன்னாள் வள்ளி.


“ம்ம்..இது நல்ல முடிவு.காரணம் முழுமையாக அறியாமல் யாரையும் வெறுக்கக் கூடாது.உன் அப்பா செய்தது சரி என்பதற்கில்லை.ஆனால் அந்தச் சூழ்நிலையில் மனிதாபிமானம் உள்ள மனிதன் என்னதான் செய்யமுடியும்.அவர் மனம் வருந்தி வந்திருக்கும் போது அதை உணர்ந்து மன்னிக்க வேண்டும்” என தன் அப்பா சொல்லிக் கொடுத்திருந்த அறிவுரையை ஒருமுறை வள்ளியிடம் சொன்னாள் மித்ரா.


பிறகு பொதுவாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஃஃபோனை வைத்துவிட்டாள் மித்ரா.ஃபோனை வைத்த பிறகும் வள்ளி மாணிக்கம் அங்கிள் பற்றிச் சொன்னது மித்ராவின் காதில் ஒலித்தது.


‘இதுதான் ரிஷியின் வெறுப்பின் காரணம் என்றால் அவன் சுபலா,சுரேகா,இன்னும் பலரின் பெயரைச் சொன்னானே அவர்கள் மீது நேசமா?அவர்களின்மீது எந்த வெறுப்பும் இல்லையா?வேறு பெண்களிடம்தான் வெறுப்பா?இல்லை வெறுப்பு என்பதற்கு ரிஷியின் அகராதியில் வேறெதாவது பொருளா?ரிஷியின் உண்மையான உருவம்தான் என்ன?’எனப் பலவாறு யோசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.


அப்போது,”மித்ராமா..”என்றவண்ணம் ஜீவானந்தம் அவளது அறைக்கு வந்தார்.


திடீரென்ற அவரது குரலில் , “ஆங்...அங்கிள்.வாங்க” என்றாள் மித்ரா.


அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது அவள் முகபாவனையில் தெரிய ,புன்னகையுடன் வந்த ஜீவானந்தம், “என்ன மித்ராமா?என்ன அப்படியொரு தீவிர யோசனை” என்றார்.


ரிஷியை பற்றித்தான் எனச் சொல்ல தோன்றாமல் ,”அ..அது..”என இழுத்துக் கொண்டிருக்கும் போதே, “என்ன ரிஷியை பற்றியா?”என்று கேட்டு மித்ராவை ஆச்சரியப்படுத்தினார்.


‘நான் ரிஷியை பற்றித்தான் நினைத்திருக்கிறேன் என்று அங்கிளுக்கு எப்படித் தெரியும்’ என வியந்த பார்வையுடன் ஜீவானந்தத்தை பார்த்தாள் மித்ரா.பிறகு, “ஆ..ஆமாம்..அங்கிள்..உ..உங்களுக்கு எப்படித் தெரிந்தது” எனக் கேட்டாள்.


புன்னகைத்த ஜீவானந்தனம் , “ஏதோ தோன்றியது.அதனால்தான் கேட்டேன்.”என்றார்.


எதுவும் பேசவில்லையென்றாலும் ‘கண்டு கொண்டாரே!’என்று எண்ணி ரிஷியின் நினைவில் மித்ராவின் கன்னங்கள் சூடேறியது.


அவளையே பார்த்திருந்த ஜீவானந்தம்,“உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் மித்ராமா...”என மெதுவாகச் சொன்னார்.


“ம்ம்...சொல்லுங்க அங்கிள்.என்னிடம் என்ன பீடிகை” என விளையாட்டு போல சொன்னாள்.இப்படி மெதுவாக ஜீவானந்தம் பேச ஆரம்பித்தால் எதாவது செய்ய சங்கடப் பட விஷயமாகத்தான் அவர் கேட்க கூடும். இது மித்ரா முன்பே அறிந்த விஷயம்.இதனால் ‘என்ன கேட்க போகிறாரோ?’என்ற மித்ராவினுள் பதைபதைப்பு.


அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்போதே “நீ...ரிஷியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”என்றார் ஜீவானந்தம்.


அவரது நேரடி கேள்வியில் நிமிர்ந்து அவரைப் பார்த்த மித்ரா.,அவரின் முகத்தில் எதையும் கண்டு கொள்ளமுடியாமல் அவர் கேள்விக்கு பதில் சொல்லும்விதமாக, “அவர்...அவரை பற்றி..”என்று ஆரம்பித்தவள் ‘என்னதான் சொல்லமுடியும்.என் உயிரோடு கலந்தவன் என்றா?அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றா?’எனப் பலவாறு தன்னுள் சொல்லிக் கொண்டு ,”அவர் மிகவும் நல்லவர்.என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்..”என அவனைப் பற்றி பெருமையாகச் சொன்னாள்.


இறுதியில் “ஆனால்...”என இழுத்தாள் மித்ரா.


அவள் தயக்கம் புரிந்து ,”ஆனால்...என்ன?”என ஊக்கினார் ஜீவானந்தம்.


“ஆனால்.ஒன்று மட்டும் எனக்கு அவரை பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை அங்கிள் ” என்றாள் மித்ரா.


“என்ன?அது மித்ராமா“ என்றார் மேலும் அவர்.


அவள் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் விழித்த வண்ணம் கைகளை பிசைந்திருக்க, “ம்ம்...சொல்...ரிஷியின் பெண்கள் மீதான வெறுப்பை பற்றித்தானே” என அவளைப் பார்த்து பேசவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார் ஜீவானந்தம்


அவரின் பதில் நிறைந்த கேள்வியில் மெதுவாக “ஆமாம் ...”என்று தரையை பார்த்த வண்ணம் சொன்னாள் மித்ரா.


“ம்ம்...அது சரி...”எனப் புன்னகைத்தார் ஜீவானந்தம்.


அவரது புன்னகையின் பொருள் புரியவில்லையென்றாலும் அவர் தன்னை பற்றி தவறாக எண்ணக் கூடுமோ என எண்ணி , “இல்லை அங்கிள்...என்னுடைய கேள்வி என்னவென்றால் அவருக்குப் பெண்கள் மீது வெறுப்பு என்றீர்கள்.ஏன் அவர் வாயாலே நான் கேட்டதும் அதுதான்.ஆனால் அவர் நடக்கும் விதம் நடந்து கொண்டிருக்கும் விதம்தான் எனக்குப் புரியவில்லை.”எனப் பாதி சொல்லியும் சொல்லாமலும் குழம்பிய முகத்துடன் முடித்தாள் மித்ரா.


“ம்ம்..நடந்து கொண்டிருக்கும்விதம் என்றால்” என மேலும் உந்தினார் ஜீவானந்தம்.


“அது...”என இழுத்தவள் ஜீவானந்தத்தை பார்த்தாள்.அவர் ‘ம்ம்..சொல்’ என்பது போல அவளைப் பார்த்தார்.


“அங்கிள்.அவர் அவர் சுரேகா...சு..சுபலா..இன்னும் பல பெண்களுடனும் வெறுப்பாக பழகுவது போல தெரியவில்லையே!”என ஒருவழியாகச் சொல்ல நினைத்ததைச் சொன்னாள் மித்ரா.


“ம்ம்...புரிகிறது.மேலும்...?”எனக் கேட்டார் ஜீவானந்தம்.


“வே..றெதுவுமில்லை அங்கிள்” என யோசித்த வண்ணம்முடித்தாள் மித்ரா.


“மித்ராமா..நீ ஒழுங்காகக் கவனித்திருந்தால் உனக்கு ஒன்றுபுரிந்திருக்கும்.ரிஷி எந்தப் பெண்ணிடமும் அவனாகப் போய் பேசியிருக்க மாட்டான்.முடிந்த அளவு அவர்களிடம் தள்ளி இருக்கவே நினைத்திருப்பான்.முயன்றிருப்பான்.நீயே யோசித்துப்பார்” என மித்ரா யோசிப்பதற்கு நேரம் கொடுத்தார் ஜீவானந்தம்.


ஜீவானந்தத்தின் கேள்வியில் மித்ரா,பின்னோக்கி யோசித்துப் பார்த்தாள். ‘ஆமாம் ரிஷி தானாக சுரேகாவிடம் தொட்டுப் பேசினான் இல்லை.அவள்தான் அவன் அருகில் உரசிக்கொண்டு அமர்ந்தாள் அவனைத் தள்ளியும் அமரவிடாமல் கைப்பற்றியிருந்தது மித்ராவிற்கு நினைவு வந்தது. சுபலாவிடமும் இவனாக எதுவும் செய்யவில்லை.அவளாக வந்து கண்களை பொத்தியதற்கு இவனைக் குறை சொல்லவும் முடியுமா?’என யோசித்தாள்.யோசனையில் “ம்ம்..”என்றாள்.


மீண்டும் தொடர்ந்து “ஆ..னால் அங்கிள்.அவர்களாகவே வந்து பழகியதாக இருக்கட்டுமே.அதற்கு அவர்களிடமொட்டு ஒரசிதான் பேசியாக வேண்டுமென்று என்ன இருக்கு.?விலகியோ விலக்கியோ இருக்கலாமே!”என தன் பொறாமையை வார்த்தைகளாலே உதிர்த்தாள் மித்ரா.அனுபவமிகுந்த அங்கிள் அதை கண்டு கொள்வார் என்பதையும் உணராமல்.


மித்ரா ரிஷியை விரும்புவதை உணர்ந்த ஜீவானந்தம் முகம் விகசிக்க அவளது கேள்விக்கு பதில் சொன்னார் . “அவர்களாக வந்து அவனிடம் நெருங்கிப் பழகினால் அவர்களை விலக்கி தள்ளியாவிட முடியும்.அப்படி அனைவர் மத்தியிலும் செய்தால் நாகரீகமாகத் தோன்ற கூடுமா?நீயே சொல்” என மித்ராவை கேட்டார் ஜீவானந்தம்.


‘ஆமாம் இல்ல.அப்படிச் செய்திருந்தால்தான் ரிஷி தவறானவனாக தோன்றியிருக்கக் கூடும்’ எனத் தெளிந்து “ம்ம்...நீங்க சொல்வதும் சரிதான் அங்கிள்” என்றாள்.


“ஆனால்...”என மீண்டும் ஒரு ஆனால் போட்டாள் மித்ரா.


“ம்ம்...இன்னுமென்ன சந்தேகம்...”எனப் புன்னகையுடனே கேட்டார் ஜீவானந்தம்.


தயக்கத்துடனே, “ஆனால்...அவர்...அவர் என்னிடம் மட்டும் பிரியமாக நடந்து கொள்வது போல் எனக்குத் தோன்றுகிறது.நான் விலகிச் சென்றாலும் என்னைத் தேடிவந்து என்னிடம் ஏன் அன்புகாட்ட வேண்டும்.?எனக்கு அதுதான் புரியவில்லை” என மனதில் உறுத்தியதைக் கேட்டாள் மித்ரா.


சத்தமிட்டுச் சிரித்த ஜீவானந்தம்,மெதுவாக ஆசுவாச படுத்திக் கொண்டார்.


‘என்ன நான் கேட்டுவிட்டேன் என்று அங்கிள் இப்படிச் சிரிக்கிறார்’ என நினைத்து அவரை விசித்திரமாகப் பார்த்தாள் மித்ரா.


நிலையுணர்ந்த ஜீவானந்தம் , “சாரி மித்ராமா...இதை இன்னும் நீ புரிந்து கொள்ளவில்லையா?!!”என ஆச்சரியமாகக் கேட்டார் ஜீவானந்தம்.


“இ..இல்லை” எனத் திக்கியவள்,இதயம் ‘என்னவாக இருக்கும்?’என எண்ணிப் பல மடங்கு வேகமாகத் துடித்தது.


“அவன் உன்னை விரும்புகிறான்” எனச் சொல்லிவிட்டு ‘மித்ரா என்ன நினைக்கிறாள் அவளும் அவனை விரும்பகிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே’ என ஐயம் கொண்டு அவளின் முகத்தையே பார்த்தார் ஜீவானந்தம்.


ஜீவானந்தத்தின் பதிலில் மித்ராவின் உள்ளத்தில் ஆயிரமயிரம் பட்டாம்பூச்சிகள் சுற்றுவது போல உற்சாகமாக உணர்ந்தாள். ‘என்ன?!!!!!ரிஷி என்னை விரும்புகிறானா?!!!அங்கிள் சொல்வது உண்மையா?!!அவன் எனக்கானவனா? !! எனக்கே எனக்கானவனா!!?’எனப் பலவாறு எண்ணி மகிழ்ந்தாள் மித்ரா.அதையே அவள் முகமும் காட்ட ஜீவானந்ததின் உள்ளம் மகிழ்ந்தது.


இருந்தும் “அங்கிள் ...ஆ..ஆனால் அவர் என்னிடம் என்னை விரும்புவதாக எதுவும் சொல்லவில்லையே” எனக் கேட்டவள் உடனே தான் கேட்ட கேள்வியின் உட்கருத்தில் தான் ரிஷியை நேசிப்பதை வெளிக்காட்டியதில் வெட்கம் கொண்டு முகம் சிவந்தாள்.


புன்னகைத்தவர் “சொல்வதற்கான வாய்ப்பை நீ ஏற்படுத்தியிருக்க மாட்டாய்.அல்லது அவன் உன்னிடம் சொல்ல தயங்கி இருக்கலாம்.இல்லையென்றால் உன் உள்ளத்தை ஏற்கனவே உணர்ந்திருக்கலாம்” எனப் பல் காரணங்கள் சொல்லி அவளைத் தெளியவைக்க முயன்றார் ஜீவானந்தம்.


“ஓ...”என்றவளின் முகச் சிவப்பு இன்னும் மறையவில்லை.வார்த்தைகள் வராமல் ‘இது உண்மையா?.’என ரிஷியைப் பற்றி கனவுகள் காண தொடங்கியது அவளது உள்ளம்.


அவளது நிலைக்கண்டு உள்ளம் பூரித்த ஜீவானந்தம் , “உன்னிடம் ஒரு உண்மையை நான் சொல்ல போகிறேன்.”எனப் பல நாட்கள் மனதிபுள் வைத்திருந்ததைச் சொல்ல அடித்தளமிட்டார்.


“சொல்லுங்க அங்கிள்..”என்றவள் இன்னும் முகம் நிமிர்ந்து பேசவில்லை.அதே சமயம் ‘ஒருவேளை ரிஷியைப் பற்றின ஏதேனும் உண்மையா?..ஏதோ இரண்டு மூன்று வருடத்திற்கு முன் நம் குடும்பத்தில் ஏதோ நடந்ததாக?அதனால்தான் ரிஷி பெண்களை வெறுக்கிறான் என்றும் கூட..அதுப் பற்றியா?...இல்லை அந்த சுமித்தா என்ற பெண்...அதுவா?என்ன உண்மை அது’ எனப் பலவாறு எண்ணித் தவித்தாள் மித்ரா.


“ம்ம்..”என்றவர் சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.மித்ரா தன் பதிலுக்காகத் தன்னை நிமிர்ந்து பார்த்திருப்பதை உணர்ந்து மெதுவாகப் பேசினார், “ரிஷியை ஏற்கனவே சாந்தியும் சுந்தரமும் பார்த்திருக்கிறார்கள்” என்றுவிட்டு மித்ரா முகத்தைப் பார்த்தார் ஜீவனந்தம்.


‘என்ன!!?’என்பதுபோல் ஆச்சரியமென்றாலும் இதை இப்போது சொல்ல வேண்டும் என்று என்ன இருக்கிறது’ என ஐயம் கொண்டாள் மித்ரா.


“எ..எப்போது அங்கிள்.?எதற்காக?”எனத் தெளிந்துவிடும் வேகத்தில் கேட்டாள் மித்ரா.


“ஆறு மாதத்திற்கு முன்பே..ரிஷியை உனக்கு மணம் செய்துவைக்க வேண்டுமென்று அப்போதே என்னிடம் உன் அப்பாவும் அம்மாவும் கேட்டார்கள்.நான்தான் ‘இன்னும் ஓரிரு வருடங்கள் மித்ரா வேலை செய்யட்டும்.மெதுவாக நான் ரிஷியிடம் பேசுகிறேன்’ எனச் சொல்லியிருந்தேன் அதற்குள்..”எனத் தொடங்கியவர் மித்ராவின் முக மாறுதலில் பேச்சை நிறுத்தி மீண்டும் தொடர்ந்து “அவர்களின் விருப்பம் மட்டுமில்லை மித்ராமா..என்னுடைய,என் அம்மாவுடைய,எல்லோருடைய விருப்பமும் அதுவே” என அந்தப் பேச்சை முடித்தார்.


மித்ரா எதுவும் பேசாமல் மௌனமாக தன் பெற்றோரின் நினைவில் இருந்தாள்.கண்கள் லேசாகக் கலங்கிய போதும் அழுகாமல் இருக்க முயன்றாள்.


“மித்ராமா..எதற்கும் கலங்க கூடாது...உன் விருப்பம்தான் முக்கியம்.உனக்கு ரிஷியைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம்தானே” எனக் கேள்வியும் பதிலுமாக தவிப்புடன் சொன்னார் ஜீவானந்தம்.


வேறெதுவும் சொல்லாமல் “ம்ம்” என்ற முனங்கினாள்.அவள் உள்ளம் விரும்பியதையே கேட்ட ஜீவானந்ததிடம் வேறேன்ன சொல்வாள்!!


“ஹப்பா.இதை முதலில் அம்மாவிடம் சொல்ல வேண்டுமே”ன்று ஃபோனை எடுத்துக் கொண்டு ஜீவானந்தம் வெளியில் சென்றார். ‘பெற்றோரின் நினைவில் அவளைச் சிறிது தனியாக இருக்க விடுவது நல்லது’ என்ற எண்ணத்திலே அவளை மேலும் சங்கடப்பட்டுத்த கூடாது என்று அவர் வெளியில் வந்து கதவையும் மூடினார்.


ஜீவானந்தம் சென்ற பிறகு ‘தான் பின்னொரு நாளில் விரும்பப் போகும் ஒருவனையே திருமணம் செய்ய அப்போதே ஆருடம் கண்டவர்கள் என் பெற்றோர்கள்’ என்று தன் தாய் தந்தையின் நினைவில் மனம் நெகிழ்ந்தாள் மித்ரா.அவர்களின் இழப்பு இப்போதுதான் நடந்தது போல அதிகமான வலியை உணர்ந்தாள்.அறையில் யாருமில்லை என்பதைப் பார்த்துவிட்டு,வர துடித்துக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்தாமல் அதன் வழியில் விட்டாள்.தேம்பி அழவில்லை என்றாலும் கண்ணீர் அடங்கவில்லை.அம்மா அப்பாவின் புகைப்படத்தைக் கையில் கொண்டு அணைத்த வண்ணம் கட்டிலில் தலையணையை நிமிர்த்தி அதில் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்திருந்தாள்.


அப்போது ரிஷியும் குருவும் அவளது அறைக்குள் வர,யாரோ வரும் அரவம் கேட்டு,அவசரமாக தன் நிலையைச் சரி செய்து கொண்டு ,புகைப்படத்தை அருகில் வைத்துவிட்டு ,இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.நல்ல வேளை அவர்கள் வேறெதுவோ சுவாரசியமாகப் பேசிக்கொண்டு வந்ததில் தன்னை கவனிக்க வில்லை என நிம்மதியுற்று ,அவர்கள் பார்க்கும் போது பார்த்து புன்னகைத்தாள்.


“ஏ...என்ன தேவி....இன்னும் தூக்கம் கலையவில்லையா?”என அவள் வாடிய முகத்தின் காரணம் அதுவென்று கேட்டவிதமாக அவள் அருகில் வந்து நின்றான் குரு.அவனுடனே வந்து அவன் அருகில் நின்ற போது ,ரிஷி எதுவும் பேசவில்லை.


உடனே தன்னிலை மறைத்து , “ம்ம்கும்.அதெல்லாம் இல்லை அண்ணா.நான் எப்போதோ எழுந்து குளித்துவிட்டேன்.உங்களைப் பார்க்கலாம் என்றால் ,நீங்க கதவை தாளிட்டுக் கொண்டு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.என்று நினைக்கிறேன் ” என குருவை குற்றம் போல சொன்னாள்.


“அடடே...அப்படியா என்ன? இருந்தும் இன்று ஒரு நாள் மட்டும் என்னைக் கலாய்க்காதே தாயே!..என் பிறந்தநாள் இல்லையா?வேண்டுமென்றால் உன் வாயாடித்தனத்தை ரிஷியிடம் காட்டு.”எனக் கையை விரித்தான் குரு.


ரிஷி என குரு சொன்னதும் ,ஜீவானந்தம் அங்கிள் சொன்னது நினைவு வர முகம் சிவந்தாள் மித்ரா.பேச்செழவில்லை.


இவள் நிலை உணராத குரு, “என்ன பேச்சே இல்லை!!”என மேலும் கேட்டான்.


“இ...இல்லை ஒன்றுமில்லை” என்றாள்.குருவிடம் பேசியது போல ரிஷியிடம் இயல்பாகப் பேசமுடியவில்லை மித்ராவால்.


“சரி சரி...நாம Shoppingபோய்ட்டு மதியம் வெளியில சாப்படலாம்னு திட்டம்.அப்பாவைக் கூப்பிட்டாள் நீங்க போய்ட்டு வாங்கனு சொல்றாரு.நீயாவது தயாராகு” என வந்த காரணத்தை சொன்னான் குரு.


இப்போது இருக்கும் மனநிலையில் மித்ராவிற்கு வெளியில் செல்ல தோன்றவில்லை.எப்படி இதைச் சொல்வது என்று தெரியாமல் விழித்திருக்க ,அவளையே கூர்விழிகளால் பார்த்திருந்த ரிஷி உதவிக்கு வந்தான்.


“இல்லடா.குரு...அவள் நேற்றைய பயணத்தில் கலைத்திருப்பால் போல தெரிகிறது.பயணப்பட்டு பழக்கமில்லை என்றும் சொன்னதாக நினைவு.அவளை விடு..நாம் போய் வருவோம்” எனச் சொன்னான் ரிஷி.


“ஆமாம் அண்ணா..அதுதான் சொல்ல நினைத்தேன்.வேண்டுமென்றால் மாலை வட பழனி கோவிலுக்கு போகலாம்.இப்போது நீங்க போய்ட்டு வாங்க” என கொஞ்சும் குரலில் கேட்டாள் மித்ரா.


மித்ராவின் பதிலை கேட்ட குரு, வேறெதுவும் பேசாமல் , “சரி...சரி...உன் இஷ்டம்.மாலையும் எதுவும் காரணம் சொல்லாமல் வரப்பார்"என அசட்டையாகப் பதிலளித்தான் குரு.


“ம்ம்..கண்டிப்பா அண்ணா..நீங்க சந்தோஷமா போய்ட்டு வாங்க” என்றவள் ரிஷியின் விழிகளைச் சந்தித்தாள்.அவன் ஏதோ யோசனையாகவே தன்னை பார்ப்பது அவளுக்குப் புரிந்தது.ஆனால் என்ன என்பது தெரியவில்லை.அவனது பார்வையை முடிந்த அளவு ஒதுக்க முயன்றாள். ‘இது என்ன பார்வை’ என்ற கடுப்பு வந்தது மித்ராவிற்கு.

 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பா ரிஷியை லவ் பண்ணுறதை ஒத்துக்கொண்டு ஒரு வழியாக மாமனாரிடமும் மித்ரா சொல்லி விட்டாள்
ஆனால் ரிஷியிடம் எப்போது லவ்வைச் சொல்வது?
தேவி பாவம் ரொம்பவும் சென்சிடிவ்வான மென்மையான பெண்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top