உனக்காகவே நான் - 19

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்-19
Heroin.jpg

அதே போல் இப்போதும் அந்த ஆன்டியின் குரல் மட்டுமே ஒலித்தது.


அவர்கள் பேசியது யாரோ பற்றி எண்ணிய வண்ணம் ஒழுங்காக கவனிக்காமல் உள்ளே நுழைந்தவள்,அங்கு ரிஷியைக் காணவும் விக்கித்து நின்றாள் மித்ரா. ‘இவன் எங்கு இங்கே வந்தான்.எப்படி ஓடி ஒளிந்தாலும் கண்டு பிடித்து என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறான்.’என துடுக்குற்று வெறித்து அவள் புத்தி.ஆனால் அவள் உள்ளம் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது.ஏதோ இனம் புரியாத சந்தோஷம். ‘இனி ரிஷியைப் பிரிந்து போகவே கூடாது.அவனை பார்த்துக் கொண்டே ஒரு ஓரத்தில் அவன் வீட்டில் இருந்தால் கூட போதும்’ என்ற உணர்வு.


இருந்தும் அவனை நேரப் பார்க்க முடியாமல் கோபமாக அவன் விழிகள் அவளை துளைத்தெடுத்தது.அது ஒரு வினாடிதான் இருக்கும்.அதைக்கூடத் தாங்க முடியாமல் மித்ரா தலை தாழ்த்தினாள்.


அவன் கோப பார்வையில் ‘இவன் எதாவது கேட்டாள் என்ன பதில் சொல்வது’ என்று புரியாமல் பயந்தாள்.வீட்டில் இருக்கும் போது வேக வேக மாக இயங்கிய மூளை இப்போது இமியும் இசைவுக் கொடுக்க மறுத்தது.சிந்தனைகளின் நடுவே எப்படி ரிஷியின் அருகில் வந்து நின்றாள் என்று மித்ராவிற்கே தெரியவில்லை.


அவளைப் பார்த்த வாடர்ன் “அ..இதோ வந்துட்டாங்க .என்னம்மா இவரை யாரென்று தெரிகிறதா?”என்று கேட்டார்.


நிமிர்ந்தும் அவனைப் பார்க்காமல் “ம்ம்... “ என்றாள் மித்ரா.அவள் கைகளின் விரல்கள் நடுங்கியது.


அவள் பதிலில் திருப்தியுற்றவராக,அவர்கள் அருகருகே நிற்பதைப் பார்த்து ரசித்து , “பார் என்ன அருமையான பொருத்தம்” எனத் திருஷ்டி எடுத்து நெட்டி முறித்தார்.


அவரின் செய்கையை பார்த்த மித்ரா ‘இது என்னடா எங்குப் போனாலும் இது ஒரு பிரட்ச்சனை.இவனுடன் சேர்த்தே பேசுகிறார்கள்.’எனக் கலங்கினாள் மித்ரா.


“ஏன் நின்றுக் கொண்டிருக்கிறீங்க.உடகாருங்க” என அவரும் அந்தச் சிறிய office room போன்ற இடத்தில் இவர்களின் முன் அமர்ந்தார் வார்டன் ஆன்டி.


“என்னம்மா..இப்படியா வீட்டைவிட்டு வருவது?”என அக்கறையாகக் கேட்டார் வார்டன் ஆன்டி.


“அ..அது இல்லை...ஆன்டி” எனத் தொடங்கிய மித்ராவை பேசவிடாமல்,அந்த ஆன்டி , “ புதுசா கல்யாணம் ஆனது போல இருகீங்க.புருஷன் பொண்டாட்டிக்கு மத்தில சின்ன சின்ன பிரட்சனைகள் வருவது சகஜம்.அதுக்காக இப்படியா வீட்டை விட்டு வருவது” என்றார்.


‘புருஷன்,பொண்டாட்டியா?இது எப்போதிருந்து’ அதிர்ந்து விழித்த மித்ரா ரிஷியை நேர நிமிர்ந்து பார்த்தாள்.அவளைப் போன்ற அதிர்ச்சியை அவனிடமும் எதிர் பார்த்தவள்,எந்தவித சலனமுமின்றி வார்டன் சொல்வதை வெகு கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.அவர் சொல்வதை இல்லை என்று மறுக்கும் எண்ணமற்றவனாக முகத்தில் புன்னகை மறையாத சிலையாய் இருப்பதைப் பார்த்து , ‘ஆமாம் இந்த சிரிப்பில்தானே எல்லோரையும் மயக்கி வைத்திருக்கிறான்.மாயக் கண்ணன். ’ எனப் பொருமியது அவள் நெஞ்சம். ‘இவன் கோபம் எப்போது புன்னகையாக மாறியது’ என வியந்தாள்.


ஆனால் அந்த வார்டன் சொல்வதை மறுக்கும் கடமை மித்ராவிற்கு இருக்கிறதே!.கண நேரத்தில் மறுக்க முயன்ற “ஆ..ஆன்டி..எங்க ரெண்டு பேருக்கும்” என ஆரம்பித்த மித்ராவை , “நீ எதுவும் பேசக் கூடாது.அமைதியாய் ரிஷி தம்பியோட இப்போ கிளம்பிற.அவ்வளவுதான்” என முடித்த வார்டனை பார்க்கும் போது ‘ஐயோ’ ‘ என்று எங்காவது போய் முட்டிக் கொள்ளலாமென்று இருந்தது மித்ரா. ‘பேசவே விடமாட்டேன் என்கிறார்களே’ எனத் தவித்தாள்.


தன் தவிப்பை “இல்ல ஆன்டி..நாங்க கணவன் மனைவியே இல்லை” என்று மேலும் தவித்துச் சொன்னாள்.ஆனால் அவள் பேச்சை யாரும் கேட்டாள் தானே!.அவள் தவிப்பை ஒரு நமட்டு சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த ரிஷி,அவள் தவிப்பை பார்த்து ரசிக்கவும் தவறவில்லை.அதே சமயம் அவளுக்கு உதவும் எண்ணமும் இருப்பவன் போல தெரியவில்லை.


“என்ன தேவி...என்னதான் பிரட்ச்னையென்றாலும் இப்படியா சொல்வது.ஆயிரம்தான் இருந்தாலும் அவர் உன் கணவர்.இப்படியெல்லாம் சொல்ல கூடாது.இந்து முறைப்படியாக இருந்தால் என்ன கிறீஸ்டின் முறைப்படியாக இருந்தால் என்ன ?திருமணம் எல்லாம் ஒன்றுதான்” என்றும் ‘அது இது’ என்று குடும்பத்தை பற்றியும்’ ஒரு பெரிய பாடமெடுத்துவிட்டார்கள் அந்த வார்டன்.


‘இதற்கு மேல் இவர்களிடம் பேசி பயனில்லை’ என்பதை உணர்ந்து சோர்ந்தாள் மித்ரா.தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.


கடைசியாக “தேவியைப் பார்த்தாள் சின்ன பெண் போலத் தெரிகிறது.அவள் பேசுவதை எனக்காக மன்னிச்சிடுங்க ரிஷி தம்பி.இவளைப் பார்த்தால் யாருக்கும் கோபம் கூட வருமா?உங்க கோபம் மறைந்தது கூட ஆச்சரியமே இல்லை” என மித்ராவின் முகத்தையே பார்த்து புன்னகைத்த வண்ணம் சொல்லிக் கொண்டே போனார் அந்த வார்டன்.மித்ராவிற்கும் வேறு வழி தெரியாமல் அவரின் இசைவுக்கு ஏற்ப புன்னகைக்க வேண்டியதாய் போயிற்று.


“கண்டிப்பாக மேடம்.என் தேவியை பற்றி எனக்குத் தெரியாதா?.கொஞ்சம் அவசரமாக முடிவெடுப்பாள்.மற்றபடி அவள் தங்கமே” என மித்ராவை சிலாகித்து சொன்னான் ரிஷி.


ரிஷியின் தேவி என்ற விளிப்பில்,அப்போதுதான் கவனித்தவளாக ‘ஆமாம் நான் தேவி என்ற பெயரையல்லவா விடுதிக்குக் கொடுத்திருந்தேன்.அதை அறிந்தவர் இங்கு யாருமிருக்க வாய்ப்பில்லையே!ஆகத் தான் சந்தேகித்தது சரி.அவனுக்குத் தன்னை தேவியென்று தெரிந்திருக்கிறது.’என தனக்குள் தெளிந்தாள் மித்ரா.பிறகு, ‘என் தேவியாமே?ஆமாம் அதிக உரிமைதான்.எல்லாம் இவன் வேலைதான்.கணவன் மனைவியாமே.சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு எதுவும் அறியாதவன் போல் பேச்சையும்,புன்னகையையும் பார்.கள்ளத்தனம் செய்யும் கண்ணன்.’எனக் கண்டபடி அவனை மனதினுள் பொருமி தீர்த்தாள்.


இவள் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே அந்த வார்டன் , “பாருமா தேவி...எவ்வளவு அருமையான கணவர் உனக்கு.வேறொருவானாக இருந்தால் போனால் போ என்று விட்டுவிட்டிருப்பான்.ஆனால் இவன் உன்னையே தேடி வந்திருக்கிறான்.உனக்காகவே இருப்பது போல” எனப் பெருமையுடன் சொன்னார்.


‘ஆமாம் எல்லாரும் அவன் புகழையே பாடுங்கள்'என எண்ணி ஏற்கவும் முடியாமல் ‘அவன் கணவன் இல்லை’ எனச் சொல்லவும் முடியாமல் ரிஷியை முறைத்த வண்ணம் ,ஆமாம் என்பதுபோல் கஷ்டப்பட்டு புன்னகைத்தாள் மித்ரா. ‘இவனுக்கு எல்லாம் விளையாட்டுதான்’ என மேலும் சினம் அதிகமானது அவளுக்கு.


“சரி...கிளம்பு.உன் பையை எடுத்துக் கொண்டு இப்போவே” என்றார் கண்டிப்புடன் வார்டன்.


‘நல்லHostelவந்தோம்’ என எண்ணிக் கொண்டாள் மித்ரா.


“மிகவும் நன்றி மேடம்” என்றுவிட்டு கை குலுக்கிவிட்டு எழுந்தான் ரிஷி.


“சீக்கிரம் வா தேவி.நேரம் ஆகிறது” என்றவண்ணம் அவளுடன் அறை வாயில் வரை உடன் வந்தான்.பிறகு வேறேதும் பேசாமல் வெளியில் இருந்த காரை திருப்பி நிறுத்தினான்.


பிறகு மித்ரா அவள் உடைமைகளை எடுக்க அவள் அறைச் சென்றாள்.அப்போது,இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த,உடன் வந்த அந்த ஆயா ,”என்னம்மா..அந்தப் புள்ள உன் புருஷனா?. “ எனக் கனிவுடன் கேட்டவிதமாக உடன் வந்தார்.


‘என்னவென்று சொல்வது.ஆமாமென்றா?இல்லையென்றா?’என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஆயா பேச ஆரம்பித்தார்.


“அந்த புள்ள தங்கமான புள்ள கண்ணு.உன் மேல எவ்வளவு பாசமா இருக்கு.என்ன தவியாய் தவிச்சு போய் இங்க வந்துச்சு தெரியுமா?அனேகமா நெறைய எடத்துல தேடிட்டு இங்க வந்திருக்கணும்னு நெனைக்கிறன் கண்ணு.உன் முகத்தைப் பார்த்த பிறகுதான் அது முகத்துல புன்னகையே தெரிஞ்சது.இனிமே இப்படியெல்லாம் அந்த புள்ளயவிட்டுட்டு வந்துடாத கண்ணு.இந்த மாதிரி புள்ள புருஷனா கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்.புரிஞ்சுக்கோ.நீங்க நல்லா இருக்கணும்” என்று மனதார வாழ்த்திவிட்டு ,சில மணி நேரத்திற்கு முன் உண்டான பாசத்தால் பேசினார் அந்த ஆயா.


அந்த ஆயாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் மித்ராவின் நெஞ்சில் பசுமரத்தாணிப் போலப் பதிந்தது. ‘சந்தேகிக்க முடியாத அளவு அன்பு!!.அவனுக்கு.!!! .என் மீது!!.’என மகிழ்ந்த உள்ளம்,அந்த ஆயாவின் புரம் அவளைப் புன்னகைக்க செய்தது.ஆனால் உடனே ‘என் மீது மட்டும்தானா?’என அவள் புத்தி அவளைத் திருப்பி கேட்டது.மீண்டும் சோர்ந்தாள்.


அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக வந்து ஏறி காரில் அமர்ந்து கொண்டாள்.வாசல் வரை வந்த வார்டன் , “நல்லா இருங்க.தேவி இது போல வீட்டை விட்டு வெளியிலெல்லாம் வரக் கூடாது.என்ன? ” பாசமிகுந்த அறிவுரையாக சொல்லி மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தார்.






எதுவும் பேசாமல் சில பல நிமிடங்கள் பயணம் அமைதியாகச் சென்றது.பூட்டிய நாண் போல விறைப்பாக காரின் ஸ்டைரிங்கை பிடித்திருந்த அவனது கைகள் அவன் கோபமாக இருப்பதை உணர்த்தி மித்ராவை எதுவும் பேச விடாமல் தயங்க வைத்தது.அவனாகப் பேசும் வரை காத்திருக்க முடிவெடுத்தாள் மித்ரா.ஆனால் அவன் எதுவும் பேச நினைப்பவன் போல தெரியவில்லை.அவனின் சினமிகுந்த முகத்தைப் பார்க்கும் சக்தியற்றவளாக ஜன்னல் புரம் திரும்பி வழியை வெறித்தாள் மித்ரா.






வழியை வெறித்தவளுக்கு வழியில் தெரியும் எதுவும் நினைவில் பதியவில்லை.ரிஷியின் நினைவே.கண்களை முடி ,அந்த ஆயா ,வார்டன் ஆன்டி என அவர்கள் ரிஷியைப் பற்றி பேசியவையே நினைவில் மீண்டும் மீண்டும் படமாக நினைத்திருந்தாள்.மாலையாக இருந்த மாலைப்பொழுது எப்போது இரவானது என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.


“இறங்கு..”என்ற ரிஷியின் விறைப்புடன் கூடிய அவனது குரலில் நிமிர்ந்தாள்.


அவனது குரலில் நினைவு வந்து நிமிந்தவள்,அவன் இறுகிய முகத்தைப் பார்க்கும் தைரியமற்று ,வேறு வழியில்லாமல் அமைதியாகக் காரை விட்டு இறங்கத் திரும்பினாள். ‘என்ன இரவாகிவிட்டதா?’உடனே நேரத்தைப் பார்த்தவள் மணி7ஐ கடந்து முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. ‘இவ்வளவு நேரமென்றால்,இந்த நேரம் குன்னூரை அடைந்திருப்பார்களே!’என எண்ணி இறங்கினாள்.


குன்னூர் என்றெண்ணியவளுக்கு இறங்கியதுமே தெரிந்தது.இது வேறெதுவோ இடமென்று.அவள் இறங்கியதும் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு வந்தான் ரிஷி.


"வா....”என்றுவிட்டு முன்னே நடந்தான்.


‘எங்கே?’என்பது போல் மித்ரா ரிஷியைப் பார்த்தாள்.ஆனால் ரிஷி மித்ராவின் விழிகளைக் கண்டால்தானே.அவனது செய்கையால் மித்ராவிற்கு அவன் மீது கோபமாக வந்தது.


அவன் அழைத்துச் சென்றது.ஒரு ஓட்டல்.அன்று அங்கிளுடன் வந்த அதே சேலம் ஓட்டல்.உடன் நடந்தவள் ,“‘அப்போ...நாம் நாளை குன்னூர் போகவில்லையா?”என ரிஷியைக் கேட்டாள்.


“இல்லை..குருவைப் பார்க்க போகிறோம்.நாளை அவன் பிறந்தநாள்” என்ற ஒரு வாக்கியத்தில் பதிலளித்துவிட்டு ‘ அவ்வளவுதான்’ என்பது போல் உணவுக்கு ஆர்டர் கொடுத்தான்.


“ஆமாம் இல்ல.குரு அண்ணாவுக்குப் பிறந்த நாள்” என்று எண்ணியதைச் சொல்லி மகிழ்ந்த உள்ளம் ,உடனே, “ஆனால் ரிஷி,வள்ளி அவளது அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று சொன்னாளே!”என்று தன் மனதில் தோன்றியதை சொன்னாள் மித்ரா.


“தெரியும்.காலையே சொன்னாள்.அதற்கு வேறு ஏற்பாடு செய்தாகிவிட்டது” என விறைப்பு குறையாமல் பதில் சொன்னான் ரிஷி.


அவன் பதிலில் ‘எப்படியோ வள்ளி அவள் அப்பாவுடன் பேச போகிறாள் ‘ மகிழ்ந்தவள் , ‘கொஞ்சம் இதை சிரித்துக் கொண்டே சொன்னாள் என்ன முத்தா கொட்டிவிடும்.கடுவன் பூனை போல..முகத்தைப் பார்.கோபமென்றால் திட்டிவிட்டு இயல்பு போல இருப்பதற்கென்ன?’என்று அவன் முக இறுக்கத்தைப் பார்த்தவண்ணம் பொருமினாள்.அவனது பாரா முகம் அவளை வேதனைக்குள்ளாக்கியது.


சட்டென நிமிர்ந்த ரிஷி அவள் முக மாறுதலைக் கண்டுவிட உடனே வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.பிறகு உண்டு முடித்து கார் பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்துவரும் வரை இங்கே இரு என்று பிரதான சாலையில் நின்றிருக்கச் சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றான் ரிஷி.


“ம்ம்” என்றதோடு சரி அவள் நினைவு.பிறகு ‘எதற்கு இந்த அளவு கோபம்.அவன் அங்கு அனைவரிடமும் கணவன் மனைவி என்று சொல்லி வைத்ததிற்கு நான்தான் கோபமாக இருக்க வேண்டும்’ என்று திட்டியபடி குறுக்க நெடுக்க அலைபாய்ந்தாள் மித்ரா.


பிரதான சாலையின் மறுபுறம் காரை எடுத்து நிறுத்திவிட்டு வந்தவன் மித்ராவின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளை அழைத்துச் செல்ல வந்தான்.அவள் உள்ளம் ரிஷியையே நினைத்திருக்கச் சுற்று சூழ்நிலை அறியா குழந்தை போல தவித்துக் கொண்டிருந்தது.அதையே அவள் முகம் காட்டியது.அவளது இந்த நிலை ரிஷிக்குக் கோபத்தை மாற்றி புன்னகையை முகத்தில் அரும்ப வைத்தது.


அப்படியே வந்து கொண்டிருந்தவன்,மித்ரா குறுக்க நெடுக்க நடந்தவள் அவளையும் அறியாமல் சாலையின் விளிம்பிலிருந்து நடுப்பகுதிக்கு வந்துவிட்டிருந்தாள்.ஒரு லாரி ஹாரன் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது.கவ்னியாமல் இருந்த மித்ராவை பார்த்த ரிஷி “மது....மது...”என அலரலுடன் அவளை நோக்கி ஓடினான்.


ரிஷியின் குரலில் நிமிர்ந்தவள் லாரியை காணவும் அதிர்ந்து நிமிர்ந்து பயந்தில் மயங்கிவிழப் போனாள்.கண நேரத்தில் அவளை தாவிப் பிடித்தான் ரிஷி.ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் மித்ராவை சேதமில்லாமல் காப்பாற்றியிருக்க முடிந்திராது.அவளைத் தோளோடு அணைத்துச் சுற்றிய வண்ணம் சாலையின் மறுபுறம் போய் நின்றான்.


பாதுகாப்பாக வந்துவிட்டோம் என்பதை உறுதி செய்வது போல சுற்றும் முற்றும் பார்த்தான்.அந்த இரவு நேரத்தில் யாரும் எதையும் காண நேரவில்லை.


மித்ரா இன்னமும் மயங்கிய நிலையில் ரிஷியின் அணைப்பிலிருந்தாள்.அவள் நிலைக்கண்டு ,”மது...மது..”என்று அவள் கண்ணத்தை தட்டி எழுப்ப முயன்றான் ரிஷி.அவன் முயற்சி வீண் போகாமல் அவளும் விழித்தாள்.


“ரிஷி...”என அறை மயக்கத்தில் பேசினாள்.அவள் விழித்ததில் மகிழ்ந்த ரிஷி அவளை அழகாக இருக்கைகளில் ஏந்தி துக்கிச் சென்று காரின்பின் இருக்கையில் படுக்கவைத்தான்.வண்டியிலிருந்த தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் அறைந்து அவளை விழிக்கச் செய்தான்.


அதனால் எழுந்த மித்ரா பேந்த பேந்த விழித்தாள்.ரிஷியைக் காணவும் நிம்மதியுற்றாள்.


“சா...சாரி ரிஷி” என்றாள்.அந்த நிலையில் அவள் சாரி,ரிஷியைச் சிரிக்க வைத்தது.


ரிஷியின் சிரிப்பைப் பார்த்த மித்ரா, “ஹப்பா...சிரிச்சீட்டீங்களா” எனப் போன சக்தி திரும்பியவளாக அவன் சிரிப்பையே பார்த்தாள். ‘எவ்வளவு அழகான சிரிப்பு.’என நினைத்தாள். ‘அப்படியே அந்த முகவாயைப் பிடித்து செல்லமாய் ஆட்ட வேண்டும்’ போல இருந்தது மித்ராவிற்கு.


“ம்ம்...செய்” என லாகவமாக அவளைத் தள்ளி அமருமாறு சைகை செய்துவிட்டு அவள் அருகில் காரிலே முழுதும் ஏறி அமர்ந்து கொண்டு அவள்புரம் முகத்தைத் திருப்பினான்.


அவனது செய்கையில் புரியாமல் , “எ..என்ன?”என்று கேட்டாள் மித்ரா.


“அதுதான் என் முகவாயைப் பிடித்து ஆட்ட எண்ணினாயே!!அதைத்தான் சொன்னேன்” என இன்னும் அருகில் அவன் முகத்தை கொண்டு சென்றான்.


‘அச்சோ கண்டு கொண்டானே’ என்று எண்ணியவள் முகம் சிவக்க தலை குனிந்தாள் மித்ரா. “மது....”என்று மிருதுவான குரலில் சொன்னான் ரிஷி..






“ம்ம்..”என்றவளின் காது மடல் வரை அனைத்தும் சிவந்தது.


“உன் கன்னச் சிவப்பு உன்னை மேலும் செம்மையுறச் செய்கிறது” என்று அவள் கை பற்றினான் ரிஷி.


மித்ராவால் மூச்சுவிடவும் முடியாமல் போனது.பேசமுடியாமல் தவித்தாள்.அவனது கைகளுக்குள் அவளது கை இதமான குளிருக்குள் அகப் பட்டது.


அவளது முக மாற்றங்களையே கவனித்திருந்த ரிஷி,அவளது முக சிவப்பை இமை கொட்டாமல் பார்த்திருந்தான்.அவனது பார்வை முழுதும் அவள் மீதுதான் என்பதை பாரமலே உணர்ந்த மித்ரா,மறந்தும் ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.


அவள் இதய படபடப்பு வெளியிலும் கேட்குமோ எனும் அளவிற்குச் சத்தமிட்டு துடிப்பதாக மித்ரா எண்ணினாள்.அந்தச் சத்தம் வெளியில் கேட்டுவிடக்கூடாது என்பது போல் அவளது மற்றொரு கையினால் நெஞ்சை அழுந்த பிடித்துக் கொண்டாள்.


அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்களால் வாங்கி மனதினுள் படம் போலப் பதிய வைத்துக் கொண்டான் ரிஷி.அவனையும் அறியாமல் மித்ராவிடம் எதையோ சொல்லிவிட துடித்தது அவன் இதயம்.மித்ராவின் முகவாயை மெதுவாக அவனது இன்னொரு கரத்தால் உயர்த்தியவன் , “மது...உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என மெல்லிய குரலில் கேட்டான் ரிஷி.


அவனது செய்கைகளால் பேச முடியாமல் திணறிய வண்ணம் இருந்த மித்ராவினுள் அவனது குரல் அவளது இதயத்தினுள்ளே ஒலிப்பது போல் இருந்தது.வார்த்தைகள் வராமல் , “ம்ம்...”எனச் சொல்லுங்களேன் என்பது போல் அவளது ஓர விழி பார்வையில் சம்மதம் சொல்லி மீண்டும் தலை தாழ்த்தினாள் மித்ரா.


இது வரை தடுமாற்றமில்லாமல் பேசிப் பழகிய ரிஷிக்குமே அவளது கடைக்கண் பார்வை என்னமோ செய்ய,வார்த்தைகள் வராமல் தடுமாறினான். “நா...நான்... “ என ஆரம்பித்தவன் ,வேறொன்று திடீரென்று தோன்ற ”உனக்கு..”எனச் சரியான வார்த்தைகள் தேடினான்.என்ன வார்த்தைகள் தேடியும் ஏதோ ஒரு ஐயம் எழ வார்த்தைகள் உதிர்க்காமல் ,அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான் ரிஷி.


அவனது இந்த திடீர் செய்கையில் மிரண்ட மித்ரா,செய்வதறியாது அவனை விலக்க எண்ணி அவன் மார்பில் கையை வைத்தவள் அவனது இதயத் துடிப்பை தெளிவாக உணர்ந்தாள்.அவனுக்கும் அவளது நிலை என்பதை அவன் சொல்லாமலே உணர்ந்தாள் மித்ரா.


வெகு அருகில் அவனது இதயத் துடிப்பை கேட்டாள் மித்ரா.அவை ஆயிரம் கதை சொல்வதாக உணர்ந்தாள்.அவன் கைகளுக்குள் அடங்கி இருந்த மித்ராவின் நினைவு அவளிடம் இல்லை.


ஆனால் அவர்களின் இந்த மோன நிலை சில வினாடியில் ஏற்பட்ட மற்றொரு வண்டியின் ஹாரன் ஒலியில் கலைந்தது.நிலை உணர்ந்த மித்ரா ,சட்டென அவனிடமிருந்து விலகி, கையை தன்னகத்தே எடுத்துக் கொண்டு, “ரி..ரிஷி...கா...காரை எடுங்க..போ...போகலாம்.அ..ங்கிள் காத்திருப்பார்” என்று திக்கி திக்கிச் சொல்லி முடித்தாள்.


அவளின் இந்த அன்னிச்சை செயலில்,புன்னகைத்த ரிஷி வேறேதும் பேசி அவளை கஷ்டப்படுத்தாமல் அமைதியாகக் காரை எடுத்தான்.


அதன் பிறகு இதமான ஓரிரு வார்த்தைகளில் அவர்களின் பயணம் தொடர்ந்தது.ஆனால் காந்திபுரம் மகளிர் விடுதிப் பற்றி மட்டும் பேசவில்லை.எங்கே அதைப் பற்றி பேசினால் ரிஷி கோபம் கொள்ளக் கூடுமோ என்று மித்ரா தவிர்த்தாள்.ரிஷியும் ஏதோ காரணத்திற்கு அதை தவிர்ப்பது போல உணர்ந்தாள்.


இரவு மணி 12ஐ கடந்து இருபது நிமிடங்களில் சென்னை வீட்டை அடைந்தனர்.வீட்டின் முற்றத்தில் எறிந்திருந்த விளக்கைத்தவிர மற்றவை அணைக்கப்பற்றிருந்தது.ரிஷி வெளியிலிருந்து அப்பாவுக்கு ஃபோன் செய்து வெளியில் வரச் சொன்னான்.அவரும்Tourchவிளக்குடன் வெளியில் வந்தார்.ஜீவானந்தம் ரிஷி எடுத்து வந்திருந்த கேக்கை சத்தமின்றி எடுத்துச்சென்று குருவின் அறையில் அவன் கட்டிலின் முன் மேஜையை நகர்த்தி வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு குருவை தட்டி எழுப்பினான் ரிஷி.


இவை அனைத்தையும் செய்ய மித்ரா உடன் இருந்து உதவினாள்.இது எதையும் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த குரு,திடீரென்று ரிஷியையும் மித்ராவையும் காணவும் சொல்லொனாத ஆனந்தமடைந்தான். “ஹே...ரிஷி....தேவி....எப்போ வந்தீங்க “ என்ற வியந்த குரலில் கேட்டவன் அவர்களின் பதிலுக்கு முன்பே .அங்கு மெழுவர்த்தியுடன் கேக்கை காணவும் இன்னும் அதிகமாக மகிழ்ந்தான். “என்னடா இதெல்லாம் ரிஷி” என்று கண்கள் கலங்க அவனை ஏறிட்டான்.


“Happy Birthday டா.”என்றான் ரிஷி.உணர்ச்சி பொங்க குரு ரிஷியை இறுக அணைத்துக் கொண்டான்.


மித்ராவும் “இன்று போல் என்றும் நீ மகிழ்வுடன் வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா” என வாழ்த்துக் கூறி மகிழ்ந்தாள்.பிறகு கேக் வெட்டிக் கொண்டாடினர்.


அதன் பிறகு ரிஷியும் பேசிக் கொண்டிருக்க,ஜீவானந்தம் மித்ராவை அழைத்துச் சென்று அவளுக்கென்று ஒதுக்கி வைத்த அறையில் விட்டு , “ஓய்வெடு மித்ராமா.நாளைப் பார்க்கலாம்” என்றார்.


“சரிங்க அங்கிள்” எனப் புன்னகையுடனே சொல்லிவிட்டு உறங்க சென்றுவிட்டாள்.


காலையில் எழுந்ததும் இயல்பாகக் காலையின் வழக்கமான வேலைகளை முடித்தாள்.பிறகு மித்ராவிற்கு வள்ளியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. ‘அவள் மாணிக்கம் அங்கிளிடம் பேசினாளா?என்ன ஆனது.அவள் மனது அவள் அப்பா சொல்லும் காரணத்தை ஏற்றிருக்க வேண்டுமே!’எனப் பலவாறு எண்ணி கலக்கம் கொண்டாள் மித்ரா.உடனே ஃபோனை எடுத்து வள்ளிக்கு தொடர்பு கொண்டாள்.


“ஹலோ..வள்ளி..”என்றாள் மித்ரா.மித்ராவிற்குள் பதைபதைப்பு. ‘ஏன் வீட்டை விட்டு போனீங்க என்று வள்ளி கேட்டாள் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் ஃபோன் வேறு செய்துவிட்டோமே’.என எண்ணினாள்


“ஹாங் சின்னம்மா..குரு ஐயா வூட்டுக்கு போய்ட்டீங்களா?சின்னய்யா உங்கள தோழி வீட்டில இருந்தே கூட்டிட்டு போறேனு சொன்னாரே!”என வெகுளியாய் சொன்னாள் வள்ளி.


வள்ளியின் பதிலிலிருந்து மித்ரா வீட்டை விட்டு விடுதியில் தங்கியது அவளுக்குத் தெரியவில்லை என்பது புரிந்தது. ‘ரிஷி சொல்லி இருக்கவில்லை போலும் ‘ என எண்ணினாள்.அதன் பிறகே அப்பாடா என பெருமூச்சுவிட்டாள்.


வள்ளி தன் பதிலுக்கு காத்திருக்கிப்பது தோன்ற “ம்ம்...வந்துட்டோம் வள்ளி.சாரி சொல்லாமல் வந்துவிட்டேன்” எனப் பதில் சொன்னாள் மித்ரா.


“அட நீங்க வேற சின்னம்மா..எப்படியும் திரும்ப இங்கதானே வர போறீங்க.சின்னய்யா சொல்லிட்டுதான் போனாரு.இதற்கெல்லாம் எதுக்கு சாரி.”எனச் சிரித்தாள் வள்ளி.


“ம்ம்..”என்றவள், “வள்ளி...மாணிக்கம் அங்கிளை பார்க்க போறீங்களா?”என தன் ஃபோன் செய்த காரணத்தைக் கருத்தில் கொண்டு பேசினாள் மித்ரா.


“சின்னம்மா...நாங்க எங்கே போக.அதற்குள் அப்பா விடியக் காலையிலே வீட்டுக்கு வந்துவிட்டார்” என உற்சாக குரலில் பேசினாள் வள்ளி.


‘அவ்வளவும் தன் மகளிடம் விரைவில் பேச வேண்டும் என்ற ஆசையில் விடியகாலையிலே வந்துவிட்டாரா?’என எண்ணிக் கொண்டாள் மித்ரா.பிறகு வள்ளியின் உற்சாக குரலில் மாணிக்க அங்கிளின் பதிலில் அவள் திருப்தியுற்றவளாக தெரிவித்தாள் வள்ளி.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top