உனக்காகவே நான் - 18

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 18

Heroin.jpg
உடனே பளிச்சிட்டு சிரித்த வள்ளி, ”ஐய சின்னம்மா...எனக்குக் குழந்தைகளெல்லாம் இல்ல.எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாலு மாசம்தான் ஆகுது.நீங்க,நான்,அவர்,சின்னய்யா எல்லாரும் போகலாம்” சிரிப்பூனூடே சொன்னாள்.


“ஓ அப்படியா?”என அசடு வழிந்த மித்ரா ,இன்னும் தெளியாதவளாக “ஆனால்...அன்று...முத்தய்யாவிடம் அங்கிள் உன் மனைவி குழந்தைகளேள்ளாம் நலமா என்று தானே கேட்டார். “ என தன் மனதில் உறுத்தியதைக் கேட்டாள் மித்ரா.


இன்னும் சத்தமிட்டு சிரித்த வள்ளி, “பெரியய்யா என் வூட்டுகாரர்ட்ட சொன்னது என்னையும் ஆசிரம குழந்தைகளையும்.எங்க குழந்தைகளை இல்ல.”என்றாள்.


“என்ன?ஆசிரம குழந்தைங்கலையா?அச்சோ மன்னிச்சிடு வள்ளி... ” என வெட்கப்பட்டு புன்னகைத்த மித்ரா மீண்டும் தொடர்ந்து “ அப்போ...அன்று நா வந்தபோது உன்னை நா குழந்தைங்க தனியா இருப்பாங்க போக சொன்னேன்ல?அப்பக்கூட நீயும் ரிஷியும் ஒருவிதமாய் பார்த்தீங்களே?அந்தப் பார்வையின் பொருள் இதுதானா?”எனத் திக்கி யோசித்துப் புன்னகைத்தாள் மித்ரா.


“ஆமாம் சின்னம்மா..அத்தோட அந்தக் குழந்தைகள் மீதான உங்களோட அக்கறைதான் எங்களை வியப்பாக அப்படிப் பார்க்க வச்சது. ” என விளக்கம் தந்தாள் வள்ளி.


“இதில் என்ன இருக்கு ..என் மனதில் தோன்றியதை சொன்னேன் வள்ளி.”எனத் தன்னடக்கத்துடன் சொன்னாள் மித்ரா.


“ அது இல்ல சின்னம்மா..நீங்க எவ்வளவு அக்கறையா குழந்தைங்களுக்காகனு யோசித்துப் போக சொன்னீங்க.ஆனால் அந்த பொண்ணு சு..... “ என ஆரம்பித்தவள் உடனே அந்தப் பேச்சை நிறுத்தி ,”அதைவிடுங்க சின்னம்மா.அன்று,நீங்க வந்தப்போ ஒரு குழந்தைக்கு உரம் விழுந்து,உடம்புக்கு முடியாம வயிற்று போக்காவும்,அழுகையுமாகவும் இருந்ததுனு ஆசரமத்து வீட்டுக்கு வர சொன்னாங்க.குழந்தைங்க விஷயத்துல மாத்திரை மருந்துகளைவிட கை வைத்தியம்தான் நல்லது.எனக்குத்தான் பாட்டி சொல்லி தந்த முறைப்படி மருந்து இல்லாம,உரம் எடுத்துவிடத் தெரியுமே!அதனாலாதான் என்னை வர சொல்லி ஃபோன் போட்டு சொன்னங்க.ஆனா இரவான பிறகுதான் சொன்னாங்க.அதனாலாதான் அங்க போய்ட்டு தங்கி இருந்துவிட்டு,காலைல எல்லாரையும் பார்த்துட்டு வந்தேன்.அதோட எங்களுக்குனு தனி வீடுனு ஒன்னு தேவையா என்ன?நானும் அவரும் இங்கேதான் தங்கிக்குவோம்.அதுதான் எங்க அறை. “ என உள்புரம் இருந்த அறையை எட்டிப் பார்த்து காட்டினாள் வள்ளி.


“ம்ம்...”என்ற மித்ரா அதன் பிறகு அவள் நினைவு அங்கில்லை . ‘அந்த பொண்ணு சு...அப்படினு ஏதோ வள்ளி ஆரம்பித்தாலே!அது யாராக இருக்கும்.சொல்ல வேண்டாம்னு தவிர்த்தது போல தெரிகிறதே!சுபலா வா?சுரேகாவா?இல்ல சுமித்தாவா?’என மித்ராவின் மனம் குழப்பத்தில் கரைந்தது.


மித்ராவின் யோசனை மிகுந்த முகத்தைப் பார்த்து , “என்ன சின்னம்மா?என்னமோ யோசிக்கிறீங்க போல இருக்கு ” என மித்ராவை பார்த்தாள்.


வள்ளியின் கேள்வியில் நிலை உணர்ந்த மித்ரா “இல்லை.அது என்ன வைத்தியமென்று யோசிச்சேன்” என வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.


“அது ஒன்னுமில்ல சின்னம்மா.குழந்தையைப் பருத்தி சேலை தொட்டிலில் போட்டு,அந்தத் தொட்டிலின் இருபுறமும் இருக்கைகளால் பிடித்து குழந்தையின் நிலை பார்த்து இப்படியும் அப்படியுமாக அசைக்க வேண்டும்.இது கழுத்து நிக்காத குழந்தைகளுக்கு.ஆனால் அனுபவம் இருப்பவர்க்ளுக்குதான் அது சரியாக வரும்.அப்படிச் செய்தால் உரம் சரியாகிடும்.கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்குத் தலையின் உச்சந்தலை முடியின் ஒரு சிறிய கொத்தை,பதம் பார்த்து இழுத்துவிட வேண்டும்.உடனே சரியாகிவிடும்” என விளக்கம் தந்தாள் வள்ளி.


வள்ளியின் விளக்கத்தில் வியந்த மித்ரா, “ இப்படிப் பண்ண சரியாகிடுமா?”என்றாள்.


“ம்ம்...கண்டிப்பா” எனப் பெருமையாக சொன்னாள் வள்ளி.


“ம்ம்”...என்ற மித்ரா ,ஆறு மணி ஆகிவிட்டதை வள்ளியிடம் சொல்லி “உள்ளே போகலாம்னு” சொன்னாள்.


போகும் போது “ நீங்க இங்கேதான் தங்கறீங்கலானு தெரியாமல்,நான் சீக்கிரம் தூங்க பேனாதான் நீயும் உன் வீட்டுக்குச் சீக்கிரம் போவனு இரவுல சீக்கிரமா தூங்க போனேனே” என ஏமாந்த உணர்வுடன் பேசினாள்.


சத்தமிட்டுச் சிரித்த வள்ளி , “நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்கனு,உங்கள தொந்தரவு செய்ய வேண்டாம்னு நான் இருந்தேன்” என்றாள்.


“அது சரி..”மித்ராவும் உடன் சேர்ந்து சிரித்தாள்.இருந்தாலும் அவளது உள் மனது அது யார் சுமித்தாவா?என யோசனையிலிருந்தது.


அதன் பிறகு ,இரவு வெகு நேரம் முடிந்தும் ரிஷி வராததால்,வள்ளி மித்ராவை சாப்பிட வைத்து,மாத்திரைக் கொடுத்து,உறங்க அனுப்பிட்டு,அவள் வழக்கத்தைத் தொடர்ந்தாள்.


மித்ராவின் சிந்தனைக்கு உரம் போட்டது போல வள்ளியின் இன்றைய அவளது உரையாடல் அவளை இன்றும் உறங்கவிடாமல் தடுக்க முயன்றது.ஏதோ செய்தது.நிலை கொள்ள முடியாத நிலை.ஆனால் வலுக்கட்டாயமாக அந்தச் சிந்தனையை ஒதுக்கினாள்.மாத்திரையின் தாக்கத்தாலோ இல்லை,சிந்தனைக்கு அணை போட்டதாலோ வள்ளி வந்து சென்ற சில நிமிடங்களிலே உறங்கியும் போனாள்.இருந்தும் முழுமையான உறக்கம் இல்லை.


இரவு வெகு நேரம் கழித்து வந்த ரிஷி.மித்ராவின் அறைக் கதவு லேசாகத் திறந்த நிலையிலிருப்பதைப் பார்த்துவிட்டு,சத்தமின்றி உள்ளே வந்தான்.ஆழ்ந்த உறக்கத்தில் மித்ரா இருப்பதாக ரிஷி எண்ணி அவள் அருகில் சென்று அவளைப் பார்த்தான்.அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் அவள் முன்சுருள் முடி அவள் முகத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தது,அவளை தேவதையாகவே அவனுக்குத் தோன்றவைத்தது.அதை கள்ளத்தனம் செய்யும் பூனைபோல் ரசித்துவிட்டு,அந்த முடியை ஒதுக்கி நெற்றியைத் தொட்டு பார்த்தான்.ஜீரம் இப்போது இல்லை என்பதை எண்ணி நிம்மதியுற்றான்.


ஆனால் முழுமையான உறக்கமில்லாததால் மித்ரா,அவன் தொடுகையில் மெய் சிலிர்க்க மெதுவாக இமைகளை அசைத்து விரித்துப் பார்த்தாள்.விழி விரித்தவள் ரிஷியின் அருகாமையில் விக்கித்து,உடனே எழுந்து படுக்கையில் அமர்ந்து தன் கால்கள் இரண்டையும் குத்திட்டு தன் இருக் கைகளால் கால்களை வளைத்துப் பிடித்து,அதனை அணைத்து அமர்ந்தாள்.


மித்ராவின் இந்த வினாடி நிலை அனிச்சை செயலால் துடுக்குற்ற ரிஷி, “என்ன...என்ன..மித்ரா பயந்துட்டியே” என்றான்.


“ஆ...ஆமா..வி...விளக்கை போடுங்க” என முயன்று குரல் நடுங்க சொன்னாள் மித்ரா.இது கனவோ என சில வினாடிகள் பிரமை பிடித்தவள் போல இருந்தாள்.


“சாரி...மித்ரா...காலையிலிருந்து உன் நினைவே!அதுதான் வந்து பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன்.தூக்கம் கலையாத வண்ணம் போகத்தான் நினைத்தேன்.எப்படியோ கலைத்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடம்மா?”எனக் கெஞ்சும் குரலில் வேதனையுற்று மன்னிப்பு கேட்டவிதமாக விளக்கைப் போட்டான் ரிஷி.


“ம்ம்...பரவாயில்லை” என்றாலும் ,மித்ராவின் உள்ளம் படபடக்க தொடங்கியது. ‘இவன் எப்போது இங்கு வந்தான்.எப்போது இங்கிருந்து கிளம்புவான்’ என இதயம் பல மடங்கு வேகமாகத் துடித்தது.கைகள் பயத்தினால் சில்லிட்டன.


விளக்கை போட்டபின் ரிஷி லாகவமாக ,அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு கட்டிலின் அருகில் அமர்ந்தான்.


அவன் செய்கையை பார்த்த மித்ரா, ‘இப்போது கிளம்பும் எண்ணமில்லாதவன் போல்,இது என்ன வசதியாக அமர்ந்து கொண்டான்.’என எண்ணி வியப்புடன் அவனைப் பார்த்தாள்.


அவளது நிலை உணராதவனாக “எப்படி இருக்க மித்ரா?”என வெகு அக்கறையாகக் கேட்டான்.அவளின் நேற்றைய அழுகையின் காரணம் வீட்டு ஞாபகம் என நினைத்ததால் அவளிடம் ஏன் அழுதாய் எனக் கேட்டு அவளை வேதனைக்குள்ளாகா ரிஷி விரும்பவில்லை.


“ம்ம்...நல்லா இருக்கிறேன்.”என வார்த்தைகள் இயல்பு போல வந்தாலும், ‘இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தான்’ எனக் கோபமுடன் எரிச்சலுற்றது அவள் புத்தி.


அவளது பதிலில் திருப்தியுற்றவனாக, “ உன் கையை கொடு” என அவள் கையை கொடுக்குமுன்னரே,கால்களை ஒன்றாகச் சேர்த்திருந்த கைகளில் ஒன்றைப் பிரித்தெடுத்தான் ரிஷி.


“என்ன மித்ரா உன் கை இப்படிச் சில்லிட்டு இருக்கின்றது.”எனக் கேட்டு சூடு பரப்ப தேய்துவிட்டான்.


எதிர் பாராத அவன் தொடுகையில் முகம் வெளுக்க இருந்த மித்ரா,என்ன செய்வது,என்ன சொல்வது என்று புரியாமல் விழி விரித்து அவன் செய்கைகளை பார்த்தாள்.இது கனவாக இருக்குமோ என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கி இருந்தது.இருந்தும் அவனது சூடான கைகளுக்குள் தன் கை இருப்பது இதமாக இருந்தது.


அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருப்பதைத் தொடர்ந்து, “ஜுரம் வந்தால்,உடலெல்லாம் வலியாய் இருக்குமே” என சொல்லிக் கொண்டே அவள் வெண்டை பிஞ்சு விரல்களை பார்த்தவிதமாக ஒவ்வொன்றாகப் பிடித்து சொடுக்கு எடுத்து விட்டான்.


“என் அம்மாவும் இப்படிதான் செய்வாங்க.எனக்கு ஜீரம் வரும் போது” எனத் தன்னிலை விளக்கமாகச் சொன்னான் ரிஷி.


இயல்பு போல அவன் செய்கைகளை பார்த்திருந்தவள்,அவனது அம்மா என்ற வார்த்தையில் மித்ரா நிலை குலைந்தாள்.ஜீரம் வந்தால் அம்மாவின் நினைவு வருவது இயல்பு.மித்ரா மட்டுமென்ன விதிவிலக்கா என்ன?.அவளுக்கும் அம்மாவின் நினைவு வந்தது.அதை ஓரளவு அடக்கியும் வைத்திருந்ததாகத்தான் அதுவரை நினைத்திருந்தாள்.


ஆனால் அழுகையை அடக்கிப் பழக்க படுத்திக் கொண்டவளின் மனவுறுதி,ஏற்கனவே ஜீரத்தினால் பலவீன பட்ட உடலாலும்,ரிஷியின் நினைவில் பலவீனப்பட்ட உள்ளத்தினாலும் ,இருக்குமிடம் தெரியாமல் ஓடி ஒளிந்தது.


‘இப்படிதான் ஜீரம் வரும் போது ,தன் அம்மாவும் செய்வாங்க.அப்பா கைகால்களை பிடித்துவிடுவார்’ என எண்ணிய அவளது உள்ளம் அழுதது.அவளின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.இதோ அதோ என்று தயங்கிக் கொண்டிருந்த அவள் கண்ணீர் அவள் அனுமதியின்றி கன்னங்களை கடந்தது.


அவள் திடீர் கை நடுக்கத்தை உணர்ந்த ரிஷி,அவளை நிமிர்ந்து பார்த்தான்.உடனே துடுக்குற்று எழுந்து அவள் அருகில் அமர்ந்து ,இப்போதைய அவளது கண்ணீரின் காரணம் புரியாமல் அவள் முகவாயை தன் வலக்கையால் உயர்த்தி , “என்னம்மா?என்ன ஆச்சு?என்ன செய்து? “ எனப் புரியா குழந்தையாகவும்,அவளது அழுகை தாங்காமலும் கண்ணீரைத் துடைத்த வண்ணம் கேட்டான் ரிஷி.


ஆதரவான அவனது குரலிலும் செய்கையிலும்,மித்ராவிற்கு இன்னும் அதிகமாக அழுகை வந்தது.அவளது அழுகை பொறுக்க முடியாமல் அவளை தன் மார்போடு சாய்த்துக் கொண்டு, “என்ன மது?”என்றான்.


மித்ரா உடல் நடுக்கம் அதிகமாகி , “அம்மா..”என வெடித்து அழுதாள்.அவள் உடல் நடுக்கத்தைத் தாங்காத ரிஷி,மென்மையாக அவள் முதுகில் வருடினான்.


“அம்மா...நினைவு வந்துடுச்சா மது ? ” என்றவனின் உள்ளம் வேதனையில் அழுதது.


“எ...எனக்கு அம்மா வேண்டும் ரிஷி..இ..இப்போவே வேண்டும்” என முடியாது என்று தெரிந்தும்,அவன் மார்பில் புதைந்து அழுகையினூடே அரற்றினாள் மித்ரா.


அவளது வார்த்தைகளில் செய்வதறியாது “என்ன மது...நான் இருக்கேன்ல.அழுகக் கூடாது.உனக்காக நான் எதுவும் செய்வேன்.மனச தேற்றிக்கொள்” என்றாலும், ‘அவள் அம்மாவை எப்படி தன்னால் கொண்டவரமுடியும்’ என வேதனையுற்றான்.


அவன் வார்த்தைகள் எதுவும் மித்ராவின் காதில் விழாதவளாய் ,மேலும் குலுங்கி அழுதாள்.அவளது இந்த நிலையை உணர்ந்து செய்வதறியாது ரிஷி அமைதியுடன் அவள் முதுகைத் தடவி விட்டான்.


அவனது அரவணைப்பிலும்,அவன் மார்பில் புதைந்திருந்த போது உணர்ந்த பாதுகாப்பு உணர்விலும்,அவன் முதுகு வருடலால் உண்டான சுகத்திலும் மித்ரா,விக்கல் மிகுந்த அழுகை மெதுவாகக் குறைந்து ,மயங்கிய நிலையில் அவன் மார்பிலே கண் அயர்ந்தாள்.


அவள் உடல் குலுங்கல் நின்ற பிறகு அவள் உறங்கிவிட்டாள் என்பதை உணர்ந்து,அவளை மெதுவாக அவள் கட்டிலில் படுக்க வைக்க எத்தனித்தான்.


ஆனால் ஏற்பட்ட பயத்தினால் மித்ரா அவன் மார்பு சட்டையை பாதுகாப்பாக இறுக பற்றொயிருந்தாள்.அதனை மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் எடுத்தவன் ,பிய்த்து எறியப்பட்ட கொடியாய் வாடியிருக்கும் மித்ராவை பார்க்க முடியாமல் தவித்தான் ரிஷி.


‘எவ்வளவு வேதனைகளுக்குள் இவள் இருக்கிறாள்’ என இரக்கம் பிறந்த உடனே ‘சே சே அவள் மீது பரிதாப படக் கூடாது.மறந்தும் அந்த தவற்றை அவள் முன்னிலையில் வெளிக்காட்டக் கூடாது’ என உறுதிக் கொண்டான் ரிஷி. ’பிறகு போர்வையை அவள் கழுத்துவரை போர்த்திவிட்டு அரை மனதாய் அவள் அறையைவிட்டுச் சென்றான் ரிஷி.


அவள் அம்மா அப்பாவின் புகைப்படத்தை தேடிபார்த்து காணவில்லையென்றதும் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்து கிளம்பினான்.


***


காலையில் வழக்கம் போல் பொழுதுவிடிந்தது.மித்ரா வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிக நேரம் உறங்கிவிட்டாள்.எழுந்தவளுக்கு தன் கையிலிருந்த அம்மா அப்பாவின் புகைப்படம் ஆச்சரியத்தைத் தந்தது. ‘இது..குன்னூரிலே மறந்துவிட்டுவிட்டு வந்ததுதானே!’என நினைத்தவளுக்கு,அப்போதுதான் முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்பது நினைவு வந்தது. ‘ரிஷிதான் இதை எடுத்து வந்திருக்க வேண்டும்.’என எண்ணிக்கொண்டிருக்கும் போதே அந்தப் புகைப்படத்தை மிதமாக வருடி அணைத்துக் கொண்டாள்.


அதன் தொடர்ச்சியாய் ‘அச்சோ..தன்னை பற்றி என்ன நினைத்திருப்பான்.?ப்ச்..இப்படியா அவன் முன் அழுது வைக்க வேண்டும்.எப்படி அதன் பிறகு உறங்கினேன் என்றும் நினைவில்லையே’ என தன் தலையை பிடித்துக் கொண்டு யோசித்தாள் மித்ரா.


எதுவும் நினைவு வருவது போல் இல்லை.யோசித்துக் கஷ்ட பட முடியாமல் விட்டுவிட்டாள்.


‘ஆனால் எது எப்படியோ ரிஷிக்குத் தன்னை பற்றின உண்மை தெரிந்திருக்க வேண்டும்.அங்கிள் சொல்லிருக்க வேண்டும்.இந்தப் புகை படத்தைப் பற்றியும்,அது அருகிலிருந்தால் மனதெம்புடன் இருப்பேன் என்பதையும் அவர்தான் சொல்லிருக்க வேண்டும்.’’என அவன் செய்கைகளுக்கு ஒரு காரணம் கண்டு பிடித்தாள் மித்ரா.


‘இதையெல்லாம் செய்வதென்றால்,ரிஷி தூங்கினானா?’என வியந்தாள். வேதனையுற்றாள்.


சிந்தனையின் தொடர்ச்சியாக ‘ரிஷியின் மார்பில் புதைந்து அழுததை அவன் என்ன நினைத்திருக்கக்கூடுமோ?...’என திடீரென்று நினைவு வந்து நிமிர்ந்து அமர்ந்து யோசித்தாள்.


‘ஒருவேளை அவன் பழகும் பல பெண்களை போலவே தன்னையுமா?’என அதையே திரும்ப திரும்ப எண்ணினாள்.பிறகு ‘இனி அவன் முன்னிலையில் இருக்கக் கூடாது.அவனைக் காணாமலே செல்ல வேண்டும்.’என வீரமாக முடிவெடுத்தாள். ‘ரிஷியை இனி பார்க்க கூட முடியுமா!’என எண்ணி ஏங்கியது அவள் மனது. ‘விரும்பியவனாகவே இருந்தாலும் தன்னால் பலரில் ஒருத்தியாக இருக்க முடியாது’ என அவள் புத்தி அவளை முரண்டியது.


‘அவனைத் தடுப்பார் யாருமில்லை.தன் மனம் தன் வசமில்லை.இப்படியே போனால் தன்னைக் கட்டு படுத்த முடியாது.மற்ற பெண்களிடம் நடந்துக் கொள்வது போல இயல்பாக தன்னிடம் நடந்தாலும்,விரும்பிய தன்மனம் அதற்கொரு ஒரு காரணம் கண்டு அற்பாயுள் கொண்ட மகிழ்ச்சிக் கொள்ளுமே!.ம்ம்கும்..இதற்கொரு வழி இருக்க வேண்டும். ‘ நினைத்தவளின் எண்ண அலையில் மின்னலென ஒரு யோசனைத் தோன்றியது.


‘இதிலிருந்து விடுபட ஒரே வழி இந்த வீட்டை விட்டுப் போவது.அவனைக் காண முடியாத தூரம் செல்வது’ என முடிவெடுத்தாள் மித்ரா.அதன் முதல் கட்ட முயற்சியாகக் கோவை வரும் போது பேசி வைத்திருந்த காந்திபுரம் மகளிர் விடுதிக்கு தொலைப்பேசி செய்து இடம் காலியாக இருப்பது குறித்த தகவல் தெரிந்து கொண்டாள்.தன்னிடம் இருந்த கைப்பையில் இரண்டே செட் உடைகளை எடுத்து வைத்தவள் ‘வள்ளியிடம் உண்மை சொல்லும் துணிவில்லாமல் ,தோழி ஒருத்தியைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்வதென முடிவெடுத்தாள்.ரிஷியிடம் பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடுவான் என உணர்ந்து அவன் Officeபோகும் வரை உறக்கத்திலே இருப்பது,பிறகு இரண்டொரு நாளில் அங்கிளிடம் சொல்லிவிட்டு பெங்களூர் செல்வது என முடிவெடுத்தாள். அவள் திட்டமிட்டது போல் எல்லாம் செயல்படுத்த ஆரம்பித்தாள்.


ஆனால் வள்ளி மித்ராவை தனியே அனுப்ப அனுமதிக்கவில்லை. வீட்டிலிருந்த இன்னொரு காரில் முத்துவையே அழைத்துச் செல்ல சொன்னாள்.வள்ளியின் வற்புரத்தலில் ,வேறு வழியில்லாமல் “சரி வள்ளி.என்னை காந்திபுரத்தில் விட்டுவிட்டு முத்தய்யா வந்திடட்டும்.அதன்பிறகு நான் கிளம்பும் போது ஃபோன் செய்கிறேன் “ எனத் தனியே அனுப்ப மறுத்த வள்ளியை சமாதானம் செய்துவிட்டுக் கிளம்பிவிட்டாள் மித்ரா.


கார் காந்திபுரம் வந்ததை அங்கிருந்த கடைகளின் பெயர் பலகைகளை பார்த்து தெரிந்து கொண்ட மித்ரா,ஒரு இடத்தில் காரை நிறுத்த முத்தாய்யாவிடம் சொல்லி இறங்கிக் கொண்டாள். “ முத்தாயா.நான் கொஞ்சம் ATM-ல் பணம் எடுக்க வேண்டும்.இதோ பக்கத்தில்தான் என் தோழியின் வீடு.நடந்து போகும் தூரம்தான்’ என ஏதோ ஒரு சந்தை காட்டிச் சொன்னாள் மித்ரா.


“நான் ஃபோன் செய்யும் போது இங்கவே திரும்ப வந்திடுங்க முத்தய்யா.”என்றவளின் குரல் அடக்கமுயன்றும் தழுதழுத்தது.


விசித்திரமாக மித்ராவை ஏறிட்ட முத்து வேறேதும் பேசாமல், “சரிங்க சின்னம்மா.பத்திரமா இருங்க” எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.


பிறகுATM-ல் கொஞ்சம் பணம் எடுத்தவள் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ஆட்டோவை பிடித்து அந்த மகளீர் விடுதியின் விலாசத்தை காட்டி,அந்தHostel -ல் போய் இறங்கியும் விட்டாள்.அவளுக்காகத் தரப்பட்ட அறையில் போய் ‘அப்பாடா’ என அமர்ந்தாள் மித்ரா.அப்படி உட்கார்ந்தவளுக்கு நிம்மதியான உணர்விற்குப் பதிலாக அவள் இதயம் பன்மடங்கு கணமானது போன்ற உணர்வு. ‘எது எப்படியானாலும் திரும்ப அந்த வீட்டுக்குப் போக போவதில்லை.’என முடிவெடுத்துவிட்டு, ‘மாலை ஐந்து மணிபோல் வள்ளிக்கு ஃபோன் செய்து மெதுவாக எதையேனும் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.மாணிக்கம் அங்கிளிடம் மறக்காமல் பேச சொல்ல வேண்டும்’ என குறித்துக் கொண்டாள்.


அந்தத் தனி அறையில் என்ன செய்வதென்று புரியாமல் ஜன்னல் வழியே வெறித்த வண்ணம் இருந்தாள் மித்ரா. ‘முடிவெடுத்தபிறகு யோசிப்பது முட்டாள்தனம்.இருந்தும் ரிஷியை இனி பார்க்க முடியாதோ!’என எண்ணிய அவள் உள்ளம் ,’நீ எடுத்த முடிவு சரிதானா?’எனத் திரும்ப திரும்பக் கேட்டது.


எவ்வளவு நேரம் அவள் அப்படி அமர்ந்திருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.அங்கு வேலை செய்யும் வயதான அம்மா வந்து , “தேவிங்கறது..நீயா கண்ணு..உன்ன தேடிட்டு யாரோ வந்திருக்காதா வாடர்ன் அம்மா சொல்லுச்சு போய் பாத்துட்டு வா கண்ணு” என்றாள் அந்த அம்மா.அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாக ,நேரம் பார்த்தவள் வியந்தாள். ‘என்ன மணி நாலா?வந்து4மணி நேரம் ஆகிட்டதா?’என நினைத்தாள்.


கூடவே ‘என்னை தேடியா?இந்த இடத்திற்கா?யாருக்கும் தெரியாமல் வந்திருக்கும் என்னைப் பார்க்க யாராக இருக்கும்.?அதுவும் தேவி என்ற தன் பெயரைத் தெரிந்தவர்?!! “ என்ற திகிலுடன் பதிலுக்காகக் காத்திருந்த அந்த ஆயாவிடம், “ஓ..வருகிறேன் ஆயா” என்ற வண்ணம் அவர் பின்னே நடந்தாள்.


வாடர்ன் அறையை நெருங்கும் போதே அந்த வாடர்ன் ஆன்டியின் குரல் மித்ராவிற்கு நன்கு கேட்டது.


“என்ன தம்பி நீங்க?..குடும்பம்னா ஆயிரம் சண்டைங்க இருக்கத்தான் செய்யும்.வரும் போதே பார்த்தேன்.அந்தப் பெண்ணின் முகமே சரியில்லை.ஏதோ வீட்டில் சண்டை என்பது மட்டும் புரிந்தது.அறிவுரை சொல்லி அனுப்பலாமென்றால் இங்கிருந்து கிளம்பி வேறெங்காவது போய் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது.அதுதான் பிறகு பேசி அனுப்பலாமென்று இருந்தேன். நல்ல வேளை நீங்களே வந்துவிட்டீர்கள்” என சர மாறியாகப் பேசி தீர்த்தார் அந்த வாடர்ன் ஆன்டி.


வரும்போது ‘என்ன இந்த ஆன்டி எதிர்புரம் இருப்பவர்களாய் பேசவிடமாட்டார்களா ‘ மித்ரா நினைத்திருந்தாள்.அதே போல் இப்போதும் அந்த ஆன்டியின் குரல் மட்டுமே ஒலித்தது.

 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
வள்ளிக்கு குழந்தை இருக்குன்னு
நினைத்த மித்ராவுக்கு மட்டுமில்லை
எனக்கும் பல்ப்பு கிடைத்தது
தேவியிடம் ரிஷி அன்பா பேசுறான்
கதையின் தலைப்பு வந்து விட்டது
ஒருவேளை ரிஷிக்கு மித்ராவிடம்
லவ்ஸ் வந்து விட்டதா?
ஹா ஹா ஹா
இவளைத் தேடி ரிஷி வந்துட்டான்
அவனுக்கு தெரியாமல் நீ எதையும்
செய்ய முடியாது, மித்ரா
இவள் லேடிஸ் ஹாஸ்டல் போன விஷயம்
ரிஷிக்கு எப்படி தெரிந்தது?
முத்து சொன்னாரா?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரிஷி வந்துட்டான்
மித்ரா ஏன் குழப்பிக்கிறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top