உனக்காகவே நான் -15

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 15
Heroin.jpg

இறங்கியதும் சுற்றுமுற்றும் பார்த்தாள்.அமைதியான சூழ்நிலை.ஆங்காங்கே சின்ன சின்ன வீடுகள்.மிக மிக அருகில் அமையாமல் சற்று தள்ளித் தள்ளி அமைந்து பார்க்க அழகாக இருந்தது.அவர்கள் வந்த வழியின் பாதையையும் பார்த்தாள்.அங்கு அவர்கள் வந்த வழியை ஒரு காவலாளி பெரிய இரும்பு கதவின் இரு கரங்களை இணைக்க தள்ளிக் கொண்டிருந்தார்.அதனால் உண்டான சத்தம் தவிர அந்த இடமே மனதுக்கு இதம் தரும் அமைதியுடன் இருந்தது.அந்த இரும்பு கதவுகளுக்கு மேல் வானவில் போல் வளைந்த வெள்ளை நிற Boardஇருந்தது.அதன் மேல் ‘யாவரும் கேளீர்’ என்று நீல நிறத்தில் பெரிய எழுத்துக்கள் அதனோடு அந்த இடத்தின் முழு விலாசம் அதில் எழுதப்பட்டிருந்தது.


‘இது என்ன இடம் ‘ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ,உடன் வரும்படி சைகை செய்துவிட்டு,ரிஷி முன்னே நடந்தான்.ஒரு வீட்டினுள் நுழைந்தான்.அது பார்க்க வீடு போல்தான் இருந்தது.


அந்த வீட்டின் வெளி அறையில் வேறு சிலர் எதற்காகவோ காத்திருந்தனர்.பார்த்தால் இது ஒரு Hospitalபோலத் தோன்றியது.ஏதோ உடல் உபாதைகளுக்கு மருந்து வாங்க வந்தவர்கள் போல.ஆனால் ரிஷியைக் கண்டதும் அனைவரின் கண்களிலும் பிரகாசமான ஒளி.அனைவரும் பொதுவான நலன் விசாரிப்புடன் செய்தான்.எல்லோருடைய கண்களும் அவளை அன்புடன் பார்த்தது.மகிழ்வுடன் வாழ்த்தியது.


அதன் பின் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான் ரிஷி.மித்ராவும் உஅனடன் நடந்தாள்.உள்ளே ஒரு அறையில் 50வயதுத்தக்க ஒரு ஆன்டி கண்ணாடிப் போட்டுக் கொண்டு ஏதோ ஒரு file –ஐ தீவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.


“Hi ஆன்டி..”எனச் சொல்லிய வண்ணம் உள்ளே சென்றான் ரிஷி.ரிஷியுடனே மித்ராவும் உள்ளே சென்றாள்.


அவனது குரலில் நிமிர்ந்த அந்த ஆன்டி, “ வாடா...ரிஷி...எப்படி இருக்க?அப்பா,குரு,பாட்டியெல்லாம் நலமா?”எனக் கேட்ட வண்ணம் file –ஐ மூடி வைத்தார்.


‘ஓ குடும்ப நண்பரோ’ என எண்ணினாள். ‘இவர்கள்தான் அந்த முதியவரா?ஆனால் இவரைப் பார்த்தால் அந்த அளவு வயதானவர்கள் போல் தெரியவில்லையே?ஒரு வேளை வெளியில் பார்த்த அந்த ஒரு சிலரில் இருந்தவர்களைத்தான் ரிஷி சொல்லிருப்பானோ!?’என அவளது எண்ண அலை ரிஷியின் வார்த்தைகளால் தடை பட்டது.


“எல்லாரும் நலம் ஆன்டி.நீங்க எப்படி இருக்கீங்க?மத்தவங்கலெல்லாம் எப்படி இருக்காங்க? “ என பொதுவான நலன் விசாரணையுடன் கேட்டான் ரிஷி.


“இங்கும் அனைவரும் நலம் டா.இவள்தான் நீ சொன்னப் பெண்ணா?”என மித்ராவை பார்த்த வண்ணம் கேட்டார் அந்த ஆன்டி.


“ஐயோ மறந்தே போனேனே.ஆமாம் ஆன்டி.”என்றவன்,மித்ராவின் புரம் திரும்பி , “மித்ரா...இவர் சிவகாமி ஆன்டி. ‘யாவரும் கேளீரோட முழுப் பொறுப்பும் இவர்களதுதான்.


“ஓ...”என்றவள், ‘என்ன யாவரும் கேளீர்’ எனப் புரியாமல் ரிஷியை நோக்க அவன் கண்களை எதற்காகவோ சிமிட்ட வேறேதும் கேட்காமல் புன்னகைத்த “வணக்கம் ஆன்டி” என்றாள் மித்ரா.


அவளைப் பார்த்து புன்னகைத்த சிவகாமி, “ சரிடா ரிஷி..நீ இவளை அழைத்துப் போய் எல்லாரிடமும் பேசிவிட்டு வா.எல்லோரும் சந்தோஷ படுவாங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் கிளம்பிடுவாரு.நாம் அப்பறம் பேசலாம்” என அவர்களை அனுப்பி வைத்தார்.


‘என் வருகையால் எல்லோரும் சந்தோஷமா?யாரந்த எல்லோரும்?’என பலவாறு எண்ணி ,அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மித்ராவிற்கு மிகுதியானது.


“சரிங்க ஆன்டி” என ரிஷியும், “வருகிறோம் ஆன்டி” என மித்ராவும் சொல்லிவிட்டு வெளியில் வந்தனர்.


அங்கிருந்த வீடுகளை இணைக்கும்விதமாக பாதைகளும் ,அவற்றின் இருபுறமும் நந்தவனம் போல் அழகாக பராமாறிக்கப் பட்ட ரோஜாச் செடிகளும் இடத்தை மேலும் அழகுபடுத்தியிருந்த்து.


அந்தப் பாதைகளில் நடந்த வண்ணம் ,மித்ராவே தயங்கி , “எ...என்னங்க நடக்குது ?இங்க?யாரிந்த ஆன்டி.?என்ன இடம் இது.? Hospital –அ?என்னை எதற்கு இங்கு அழைத்து வந்தீங்க?”எனத் திக்கி ஆரம்பித்து ,ஒரு வழியாக மனதிலிருந்த கேள்விகளை கேட்டுவிட்டாள்.


அதற்குப் பதிலேதும் சொல்லாமல் அவள்புரம் திரும்பிப் புன்னகைத்தவண்ணம் மீண்டும் நடந்தான் ரிஷி.


“இப்படிச் சிரித்தால் என்ன பொருள்..எனக்குப் பதில் வேண்டும்.ஏற்கனவே நான் மிகவும் குழம்பி போயிருக்கிறேன்.எங்கே இருக்கிறோம்?”என விடாமல் கேட்டவண்ணம் அவனுடன் சிணுங்கிய வண்ணம் நடந்தாள் மித்ரா.


“பொறு..பொறு...எதற்கு இவ்வளவு தவிப்பு.எங்கே செல்கிறோம் என்று நீயும் பார்க்கத்தானே போகிறாய்” என்ற ரிஷியிடம் எதையும் வாய் வார்த்தைகளாகக் கேட்க முடியாது என்பது தெளிவாக புரிந்தது.வேறு வழியில்லாமல் அவனுடன் சேர்ந்து நடந்தாள் மித்ரா.


பிறகு அருகிலிருந்த அடுத்த வீட்டில் நுழைந்தான் ரிஷி. ‘ம்ம்...இங்க இன்னொரு ஆன்டியா?’என எண்ண அலைகளை ஓடவிட்ட வண்ணம் உள்ளே நுழைந்தாள் மித்ரா.ஆனால் வீட்டின் எந்த அறையிலும் நுழையாமல் ,அந்த வீட்டின் பின்புறம் ஒரு கதவு இருந்தது.அதன் வழியாக அழைத்துச் சென்றான்.ஏதோ ஒரு வீட்டின் பின்புற தோட்டம் என்று எண்ணி நுழைந்தவள் அப்படியே விக்கித்துப் போனாள்.


அங்கு ஆறு வீடுகள் அறுங்கோண வடிவில் அமைந்தது போல் இருக்க ,அவற்றின் பின்புற கதவு அனைத்தும் இணைக்கும் விதமாக ,நடுவில் பெரிய காலியான இடம்.அந்த காலி இடத்தில் சில சின்ன சின்ன மரங்களும்,பல நிழற்குடம் போன்ற அமைப்புகளும்,சின்ன குழந்தைகள் விளையாட என விளையாட்டு திடலும் இருந்தது.மரங்களின் நிழலிலும்,அங்கு அமைக்கப் பட்ட நிழற்குடங்களிலும் கல் இருக்கைகள் பல இருந்தது.


அங்கே கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட முதியவர்கள்.அனைவருக்கும் கண்டிப்பாக 60க்கு மேல் இருக்கும்.தாத்தா பாட்டி எனக் கலந்து அமர்ந்து யாருக்கோ காத்திருப்பது போல் இருந்தது.அந்த யாரோ மித்ராதான் என்பது அவள் உள்ளே சென்றதும்,அவர்களது கண்களில் தெரிந்த சந்தோஷமே வெளிப்படுத்தியது.


அவர்களில் ஒரு பாட்டி இவர்களைக் கண்டதும் ஓடி வந்து , “வா மா..வா...உனக்காகத்தான் நாங்க எல்லோரும் இவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருந்தோம்.”என அவளது கைகளை பிடித்து அழைத்துச் சென்றார்.


‘எனக்காகவா’ என எண்ணியவள் ரிஷியிடம் திரும்பி என்ன இதெல்லாம் என்பது போல ரிஷியைப் பார்த்தாள்.அவன் “ம்ம்..”எனப் புன்னகையுடன் செய்கை செய்யவும்,வேறெந்த எண்ணமுமில்லாமல் மகிழ்ச்சியான துள்ளலோடு அவர்களுடன் சென்றாள்.


ரிஷியும் அவர்கள் பின் நடக்க,சில தூரம் சென்றதும் ரிஷி ஒரு இடத்தில் நின்று அங்கிருந்த ஒரு கம்பத்தின் மீது சாய்ந்து கொண்டு அவர்களைப் பார்த்தான்.


மித்ராவை அங்கு இருக்கும் அனைவரிடமும் அழைத்துச் சென்று காட்டினார் அந்தப் பாட்டி.அவர்களின் உள்ள மகிழ்ச்சி அவரின் முக அசைவிலும் அவர்களின் துருதுரு நடையிலும் தெரிந்தது.ஒவ்வொருவரும் ஆசையாக மித்ராவை வருட ,ஒரு சிலர் மித்ராவின் உச்சந்தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதம் பண்ண,ஒரு சிலர் அவளை அவர்களது கன்னத்துடன் அவளது கன்னம் வைத்து செல்லம் கொஞ்ச என அவர்களின் அன்பென்னும் மழையில் அவள் முழுதும் நனைந்தாள்.


அவளது கண்கள் லேசாக ஈரமாவதை அவளால் தடுக்க முடியவில்லை. ‘யாரென்று தெரியாத என் மீது அதற்குள் இப்படி பாசமா? ‘ என ஆனந்தத்தின் உச்சியில் இருந்தாள் மித்ரா.இப்படி ஒரு இடத்திற்கு அழைத்து வந்த ரிஷிக்கு நன்றி சொல்லும் விதமாக அவளது பார்வை அவனை நோக்கியது.இவை அனைத்தையும் முகத்தில் புன்னகையுடன் அதே கம்பத்தின் மீது சாய்ந்து அன்று போல்,அந்த ராதையின் கண்ணனைப் போல் கைகளை கட்டிக் கொண்டு நின்று ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி.


‘எல்லாம் உனக்காக’ என்பது போல் அவனது விழி இமைகள் சில வினாடிகள் மூடித் திறந்து அவளிடம் வார்த்தைகள் இல்லாமல் பேசியது.


அதைப் புரிந்த,ரசித்த மித்ராவின் உள்ளம் , ‘ஆமாம் குறும்புகள் செய்யும் கண்ணன்தான்.என் கண்ணன்’ என பேசி முடிக்குமுன்னரே ‘என்ன என் கண்ணனா?.இது எப்போதிருந்து’ எனச் சட்டென புத்தி எச்சரிக்கும் குரலில் அவளையே கேட்டது.


‘அச்சோ இந்த மனமும் ,புத்தியும் சண்டை போட இப்போது அனுமதித்தாள் அவ்வளவுதான்.இந்த அருமையான தருணத்தை இழக்க நேரிடும்’ என எண்ணி,மனம் சொல்வதை மட்டும் இப்போது கேட்பது என ஒரு முடிவுக்கு வந்தாள்.


ஒரு வழியாக அனைவருக்கும் காட்டியதும் அந்தப் பாட்டி கலைத்துப் போய் ஒரு இடத்தில் அமரவும் மித்ராவும் உடன் அமர்ந்தாள்.யாரும் சொல்லாமலே அவளுக்குத் தெரிந்தது இது ஒரு ஆசிரமம் என்று.மித்ராவின் முகத்தில் அளவிடமுடியாத மகிழ்ச்சி.அது அங்கு இருக்கும் அனைவரின் மனதிலும் முகத்திலும் உண்டான அன்பினால் ,மகிழ்ச்சியினால் உண்டானது.அதனைப் பார்த்து திருப்திக் கொண்டவனாக அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து உடன் அமர்ந்தான் ரிஷி.


அவன் வந்து அமர்ந்ததும் அந்தப் பாட்டி அவனிடம் திரும்பி , “ரிஷி கண்ணா...”என வியம்பினார்.


‘என்ன கண்ணா வா?மனதில் நினைத்தது இவருக்கு எப்படித் தெரிந்தது.?ஒருவேளை வாய்விட்டு இது சொல்லிவிட்டேனோ’ என திடீர் நிமிர்கையுடன் பாட்டியைப் பார்த்தாள்.ஆனால் பாட்டி இயல்பு போல ரிஷியைப் பார்த்து தொடர்ந்து பேச ‘தன்னை யாரும் கவனிக்கவில்லை.’என நினைத்து அவள் மனசு அமையுற்றது.


“உன்னுடைய தேர்வு அற்புதம் டா” என்றார் அந்தப் பாட்டி.


“அப்படியா?சொல்றீங்க அமுதா பாட்டி” எனச் செல்லம் போலப் பேச மித்ராவின் மீது புன்னகைத்து ஓர பார்வையை செலுத்தினான் ரிஷி.


‘என்ன தேர்வு?’எனப் புரியாதவள் போல் இருந்தாலும் மித்ராவின் கன்னம் மெதுவாக கதகதத்தது.


“ஆமாம்டா..பார்க்கும் போதே தெரியவில்லை.எவ்வளவு அருமையான பெண்.அவளது குணம் அவளது கண்களே சொல்கிறதே!எங்க எல்லோரிடமும் முதல் முறை பார்க்கும் போதே எவ்வளவு உண்மையான அன்பு” எனச் சிலாகித்தவர்,சில வினாடிகள் நின்று , “ எங்களுக்கும் பிள்ளைகள் என்று இருக்கிறார்களே!”எனக் கண்கள் கலங்கினார் அமுதா.


“என்ன பாட்டி..நாங்க இருக்கிறோம் இல்ல.இனி இப்படியெல்லாம் கலங்க கூடாது.”என தன் அப்பா அம்மா நினைவு ஏனோ திடீரென தோன்ற மித்ரா அவளையும் அறியாமல் அமுதா பாட்டியின் மடியில் கண்கள் கலங்க உட்கார்ந்தார் போல தலையை சாய்த்துக் கொண்டாள்.


“அட லூசு பெண்ணே!.இதற்கெல்லாம் கண் கலங்குவானேன்.அவர்கள் இல்லையென்றால் என்ன?நாங்க இங்க அதைவிடவும் மகிழ்ச்சிதான்.இன்னும் மாலையில் பார்..இன்னும் இரட்டிப்பு சந்தோஷம்தான்” எனச் செல்லமாக மித்ராவின் தலையை வருடினார் அமுதா.


“ஆஹா...நானும் இங்குதான் இருக்கிறேன்.என்னையும் யாரவது கவ்னிங்க” என ரிஷி தொண்டையை கனைத்துச் சோகம் போல் சொல்லவும் பெரிவள் சின்னவள் என இருவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.சிர்த்த வண்ணம் மித்ரா நிமிர்ந்து அமர்ந்தாள்.


“அது சரி...ரிஷி நீ எழுந்து நில்.”என அமுதா சொல்ல,”ஏன் பாட்டி” என ரிஷி கேட்க, “சொன்னாள் செய்யேன் டா கண்ணா” என அங்காங்கே அமர்ந்திருந்த மற்ற பெரியவர்கள் சேர்ந்து சொல்ல, “சரி சரி...நிற்கிறேன்” என புன்னகைத்தவிதமாக நின்று ‘போதுமா’ என்பதுப் போல் அனைவரையும் பார்த்தான்.


“இருடா..”என ரிஷியை கை அமர்த்தி,மித்ராவிடம் திரும்பி “ மித்ரா..நீ போய் அவனருகில் நில்” என்றார் அமுதா.


‘என்ன இவன் பக்கத்திலா?நானா?’என விக்கித்து ரிஷியை நேராகப் பார்த்தாள்.அவனுக்கும் அதே நிலையோ என்பது போல் அவனும் நின்று அவளை நோக்கினான்.உடனே சமாளித்து திரும்பி “பா...பாட்டி...நா...”என மித்ரா திக்கிக் கொண்டிருக்கும் போதே ,ரிஷி மித்ராவின் கையை பற்றி இழுக்க வேறு வழியில்லாமல் அவன் அருகில் நிற்க வேண்டி இருந்தது அவளுக்கு.


இன்னும் பதட்டமுடன் அவள் இதயம் துடிக்க,வார்த்தைகள் வராமல் ரிஷியின் விழிகளை நோக்கினாள்.அவன் விழிகள் எதையோ சொல்ல வாய்திறவாமல் அமைதியாக நின்றாள்.


“ஆஹா!!!.என்ன அருமை!!அந்தப் பார்வதியும் சிவனும் போல,மெருமாளும் ஆண்டாளும் போல!!என்ன அருமையான பொருத்தம்” என அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சுற்றி நெட்டி முறித்தார் அமுதா.


சிவந்த காதுகளை மறைக்க தன் கால் கட்டைவிரலால் நிலத்தை அழுந்த நின்றவள் ,சமாளித்து “பா...பாட்டி..அது வந்து..நா” எனத் தொடங்கிய மித்ராவின் கைகளை ரிஷி அழுந்தப் பற்றி கண்களால் அங்கே பார் என்பதுப் போல் சொன்னான்.




அப்போது மெதுவாக அவன் பார்வையை தொடர்ந்த மித்ராவின் விழிகள் வியப்பின் உச்சிக்கே சென்றது. அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் அப்படியொரு நிம்மதி.அதைக் குழைக்க வேண்டான் என்றே ரிஷி அவளது கையை அழுந்தப் பற்றியது. ‘இதோ இவன் இன்னும் தன் கையை பற்றிக் கொண்டே இருக்கிறானே’ என எண்ணிச் சட்டென அவனது கைகளிலிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டாள்.எதுவும் பேசாமல் பேசாமடந்தையானால் மித்ரா.
எதுவும் பேசாமல் பேசாமடந்தையானால் மித்ரா.தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவளுக்குப் புரியாமல்தான் இருந்தது.ஆனால் எதையும் யோசித்து இப்போது இருக்கும் இந்தச் சந்தோஷ மனநிலையை குழைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.


அதன் பிறகு ரிஷி “மாலை வருகிறேன்” என்று எங்கோ சென்றுவிட ,மித்ராவிற்கு அந்தப் பெரியவர்களுடன் நல்ல படியாக பொழுதுகழிந்தது.


ஒவ்வொருவரும் ரிஷி கண்ணா..ரிஷி கண்ணா என அவனது செல்ல குறும்புகளையும் செய்கைகளையும் சொல்ல அவளுக்கு அந்த ஒரு நாள் போதவில்லை.என்னமோ அவனைப் பற்றி அதிகம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது.


அதனோடு குருவை பற்றியும் பேசினார்கள். “குரு தம்பி எப்படி இருக்கிறதோ தெரியவில்லை? 2 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.அவனைப் பார்த்து..”என ஒரு தாத்தா சொல்ல, “ஆமாம்..பார்க்கணும்,பேசணும் போல இருக்கு” என அடுத்தொரு பாட்டி சொன்னார்.


உடனே மித்ராவிற்கு யோசனை தோன்ற,தன் கைப்பையிலிருந்து ஃபோனை எடுத்து குருவிற்கு தொடர்பு கொண்டாள்.


“ஹலோ குரு அண்ணா..எப்படி இருகீங்க?”என்றாள்


“ஹே...தேவி....எப்படி இருக்க.?பாட்டி,துரை தாத்தா..மரகதம்மா..மாணிக்கம் எல்லாம் நல்லாருக்காங்களா? “ என அடுக்கிக் கொண்டே போனான் குரு.


“எல்லோரும் சுகம்.பாட்டிக்குத்தான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது..”என வருந்தும் குரலில் சொன்னாள் மித்ரா.


புன்னகைத்துக் கொண்ட குரு ,”ம்ம்...தினமும் ஃபோனில் பேசிக் கொள்கிறோம்.பாட்டி என்னிடம் எதுவும் சொல்ல காணோமே!.”என வியந்தவன், “விடு அடுத்தமுறை நான் ஜீவா மாமாவோடு வருகிறேன்” எனச் சொன்னான்.


“அண்ணா...நான் எங்கே இருக்கிறேன் சொல்லுங்கள்?பார்ப்போம்” என செல்ல உரிமையுடன் கேட்டாள் மித்ரா.


“ம்....”என யோசிப்பது போல் செய்து , “யாவரும் கேளிரில்தானே!”என்றான் குரு.


“ஹே அண்ணா...உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?!!இங்க இருக்கப் பாட்டி தாத்தா எல்லாம் So Sweet அண்ணா.எனக்கு இங்க இருக்க ரொம்ப புடிச்சிருக்கு” எனச் சந்தோஷம் முகத்தில் தெரிய ஆர்வமுடன் பேசினாள்.


“தெரியும் தெரியும்...மாமா சொன்னார்.ஆமாம் ஆமாம் அங்கே எல்லோரும் உண்மையான அன்புடன் பழகுவர்.”எனச் சொன்னவன் கொஞ்சம் நிறுத்தி “ நான் தான் கொஞ்சம் அவர்களைக் கஷ்ட படுத்திட்டேன்” என வருந்தும் குரலில் சொன்னான் குரு.


“நீங்க கஷ்டப்டுத்தீட்டீங்களா?என்ன செஞ்சீங்க அண்ணா?அப்படியொன்றும் தெரியவில்லையே! “ என உரிமையாய் கேட்டாள் மித்ரா.


“அதைவிடு தேவி...அங்கு எல்லாரும் எப்படி இருக்காங்க? “ என அவர்கள் மீது அக்கறைக் கொண்டு கேட்டான் குரு.


“ம்ம்...நல்லாருக்காங்க அண்ணா.இருங்க எல்லோரும் உங்களிடம் பேச வேண்டுமாம்.. loud speaker ல் போடுரேன்” என்றுவிட்டு Loud speaker ஐonசெய்தாள் மித்ரா.


“சரி....தேவி” என்றான் குரு.


உணர்ச்சி ததும்ப ஒவ்வொரு பாட்டிகளிடமும் தாத்தாக்களிடமும் பேசிய குரு...பேசி முடித்த பிறகு “எல்லாரும் என்னுடைய தவற்றுக்கு என்னை மன்னித்துவிடுங்க” என மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.


அதற்கு அங்கிருந்த பெரியவர்கள், “ அதில் உன் தப்பென்னப்பா இருக்கு...விடு...நடந்த வேதனைத் தரும் சம்பவங்களைத் திரும்ப திரும்ப நினைக்கக் கூடாது.நீ உடம்பு தேறி சீக்கிரமா எங்களை வந்து பார்க்கணும் “ எனச் செல்ல கண்டிப்புடன் பேசினர்.


அவர்களின் பாசம் மிகுந்த உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த மித்ராவிற்கு, ‘திடீரென்று ஏன் இந்த மன்னிப்பு கோரும் படலம்..குரு அண்ணா என்ன தவறு செய்தார்’ என்ற எண்ணம் தோன்றியது.ஆனால் யாரிடமும் கேட்டாள் இல்லை.


அதன் பிறகு ஓரிரு வார்த்தைகள் மித்ராவிடம் பேசிய குரு, “ரொம்ப தாங்க்ஸ் தேவி..இப்படி ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு” என்றான்.


“இதில் என்ன இருக்கு அண்ணா..?!இவர்களுக்கும் உங்களிடம் பேச ஏக்கம்.எனக்கு இந்த யோசனை தோன்றியது.உடனே ஃபோன் செய்துவிட்டேன்” எனப் புன்னகைத்தாள் மித்ரா.


“ம்ம்...”என்றதோடு வேறெதுவும் பேசாமல் குரு ஃபோனை வைத்துவிட்டான்.அவன் உள்ளமெல்லாம் நிறைந்தது போல் ஒரு உணர்வு.


அதற்குள் மாலைப் பொழுது வந்துவிட,அங்கே பள்ளி சென்றிருந்த குட்டீஸ்கள் எல்லாம் வந்துவிட ,அவர்களோடு இவளும் ஒரு குழந்தையாக மாறி ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாள்.ஒவ்வொரு குட்டீஸ்களும் அக்கா அக்கா என இவளையே வலம் வந்தன.அவர்களிடம் ஓடி விளையாடினாள்.கிரிக்கெட் விளையாடினாள். Lock and Key , Tomato , current Shock ,Two crow , Hide and seek எனக் குழந்தைகளுக்கு தெரிந்த எல்லா விளையாட்டை ஆசையுடன் விளையாடினாள்.


தங்களுடன் இணைந்து தங்களுள் ஒருத்தியாய் விளையாடிய மித்ராவை எல்லோருக்கும் பிடித்து போய்விட்டது..எல்லாரும் பதினைந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைகள்.


இருட்டிவிட்டது என்பது கூட மறந்து அவள் மெய் மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.ரிஷியும் வந்துவிட்டான்.அவன் வந்துவிட்டதையும் கவனிக்காத மித்ரா விளையாட்டில் ஆர்வமுடன் இருக்க,குழந்தைகள்தான் முதலில் அவனை கண்டு கொண்டு, “ரிஷி அங்கிள்” என ஒரே கூவலுடன் அவனிடம் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டனர்.


‘இவன் எப்போது வந்தான்’ என எண்ணும் போதே,அவனைச் சூழ்ந்திருந்தவர்களில் சின்ன குழந்தையை லாகவமாக தூக்கி தன் தோள்மீது வைத்துக் கொண்டான் ரிஷி.


இப்போது மித்ராவின் விழிகள் மேலும் விரிந்தது. ‘அந்தக் குழந்தையை எவ்வளவு இதமாகத் தூக்கி இருக்கிறான் ,குழந்தையும் ரிஷியுடன் அழகாகப் பொருந்துகிறதே!!’என வியந்தவள், “யாரோ ஒருவரின் பிள்ளையையே இவ்வளவு அழகாக அணைத்திருக்கும் இவன்,இவனது பிள்ளையை!!’என மித்ராவின் கற்பனை குதிரை அவனை ஒரு குடும்பஸ்தனாக எண்ணி எங்கோ பறந்து கொண்டிருந்தது.ஏனோ மித்ராவின் உள்ளம் ஏக்க பெருமூச்சுவிட்டது.


எப்படியோ ரிஷி அருகில் வருமுன் சுய நினைவிற்கு வந்த மித்ரா,ரிஷியைப் பார்த்து நேசமுடன் புன்னகைத்தாள்.


“போகலாமா மித்ரா?”என்றான் ரிஷி.


“ம்ம்...”என்றதோடு வேறதுவும் மித்ரா பேசவில்லை.


அதன்பிறகு மித்ராவும் ரிஷியும் அனைவரிடமும் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top