உனக்காகவே நான் -14

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்-14
Heroin.jpg

அமைதியாகவே இருந்தாள் மித்ரா.முழுதும் சொல்லி முடிக்கட்டும் என நினைத்தாள்.


“தெரியுமா சின்னம்மா.அப்பா கோவை போனதே,அங்கு ஒரு பெண்ணை பார்க்கத்தான்.அங்கே அவருடன்தான் அந்தப் பெண் 6மாதம் வரை இருந்திருக்கிறாள்.இதை முதலில் கண்டு சொன்னது பெரியய்யாதான்.என் அம்மா துளிகூட நம்பவில்லை.பெரியய்யா நேராக என் அப்பாவிடம் கேட்டதற்கு, ‘ஆமாம் அவளுடன்தான் இருக்கிறேன்.கோவைப் போன பிறகே அவள் பழக்கம்.’எனவும் என் அம்மா உடைந்து அழுதார்கள்.அந்த அழுகை இன்னும் என் கண்ணில் இருக்கிறது.என்னவென்று எனக்குப் புரியாத போதும் என் அப்பாவினால்தான் அம்மா அழுகிறார் என்பது மட்டும் அப்போது புரிந்தது.அப்போதே அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.சின்னய்யாவிற்கு என் அம்மாவென்றால் உயிர். ‘மரகதம்மா மரகதம்மா’ என் அம்மாவின் கண்ணீரை துடைக்க அரும்பாடுபட்டார்.பிறகு சின்னய்யாதான் ‘மரகதம்மாவை அழுக வச்ச நீங்க இனி இந்த வீட்டுக்கு வரக் கூடாது’ என்றுவிட்டார்.அதற்கு மறுப்பு கூறும் மனம் உள்ளவர் அப்போது அந்த வீட்டில் யாருமில்லை.அதையே காரணம் போல் எண்ணி என் அப்பா எங்களைவிட்டுவிட்டு கோவைக்கே சென்றுவிட்டார்.அவர் மீதும் அந்தப் பெண் மீதும் சின்னய்யாவிற்கு கடும் கோபம்.இப்போது சொல்லுங்க சின்னம்மா.என் வெறுப்பு சரிதானே’ என குழந்தை போல் கண்ணீரின் நடுவே சொன்னாள் வள்ளி.


செய்வது அறியாமல் விழித்த மித்ரா தொடர்ந்து , “புரிகிறது வள்ளி.அழுகாதே,அழுகையால் எதையும் மாற்ற முடியப் போவதில்லை.முடிந்தது முடிந்ததுதான்.”என ஆறுதலாகத் தோளை மேலும் தடவியவள், “வா..வள்ளி.. கொஞ்ச நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வரலாம்” எனப் பேச்சை மாற்றும் விதமாக அழைத்தாள் மித்ரா.


மித்ராவின் செய்கையை உணர்ந்த வள்ளி,காய்ந்த கண்ணீரின் கரைகள் கன்னத்தில் இருந்த போதும் மென்னகை புரிந்த வண்ணம் தோட்டத்தை நோக்கிச் செல்ல எத்தனித்தாள்.


“சின்னம்மா...எனக்கு இப்போ மனசுக்கு இதமா இருக்கு..உங்களிடம் பேசன பிறகுதான் மனசு லேசான போல இருக்கு” என தோட்டத்தில் நடந்த வண்ணம் சொன்னாள் வள்ளி.


புன்னகைத்த மித்ரா, “ அது சரி...எங்க அதிகமா அழுது என்னையும் அழுக வச்சிடுவியோனு பயந்தேன்.”பொய்யாகப் பயந்தவள் போலப் பாவனை செய்துவிட்டு “இதைப் பற்றி எல்லாம் யாரிடமும் பேசியது இல்லையா...?எவ்வளவு நாள் மனசுக்குள்ளே போட்டு வச்சிட்டு இருக்க” எனச் செல்லமாக கடிந்தாள்.


“இல்லைங்க சின்னம்மா” என அசடு வலிந்த வள்ளி,”அது ஒரு பத்து வருஷம் இருக்கும் சின்னம்மா” என்றாள்.


“ம்ம்...ஆனால் வள்ளி ,எனக்கு ஒன்று புரியவில்லை.அப்பறம் உங்க அப்பா எப்படித் திரும்பி வந்தார்?எப்போ வந்தார்?எப்படி வீட்டில் அனுமதிச்சீங்க?”என நெற்றி பொட்டில் முடிச்சுவிழ கேட்டாள் மித்ரா.


“அதை ஏன் கேட்கீறிங்க சின்னம்மா..எல்லாம் என் அம்மாவால்தான்.என் அப்பா ஒரு பெரிய கதையைச் சொல்லி என் அம்மாவ நம்பவச்சி திரும்பவும் வந்துட்டார்.அப்பாவ அம்மா மன்னீச்சிட்டாங்க.நம்பிட்டாங்க.அம்மாவோட வார்த்தைக்காகத்தான் அவரை அந்த வீட்டில விட்டதே!!”எனச் சொல்லிமுடித்தாள் வள்ளி.


இதைக் கேட்ட மித்ராவிற்கு ‘அது என்ன கதை’ எனக் கேட்கும் எண்ணம் தோன்றி மறைந்தது.


“ம்ம்ம்.....”என்றதோடு வேறெதுவும் மித்ரா பேசவில்லை.


மீண்டும் வள்ளி, “ஆனால் என் அப்பா சொன்னதை சின்னய்யா நம்பினதுதான் எனக்கு ஆச்சரியம்.அப்போதுதான் முதல் முதலா பொண்ணுங்கனா?அவருக்கு வெறுப்பு வந்தது.என் அப்பா அந்தக் கோவை பெண்ணை பற்றி சொன்னவிதம் அப்படி.அந்தச் சம்பவங்கள் பற்றி மெதுவாக மறந்து பெண்களை சகஜமாகப் பார்த்த சமயத்தில்தான் மீண்டும் ஒரு பெண்ணாக அந்த சுமித்தா இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.அவள் செய்த வேலையால் அதன் பிறகு திரும்பவும் பெண்களைக் கண்டால் வெறுப்புதான் சின்னய்யாவுக்கு.”என அவள் போக்கில் சொல்லிக் கொண்டே போனாள் வள்ளி.


‘என்ன?அதுதான் முதல் காரணமா?பிறகு சுமித்தாவா?யாரிந்த சுமித்தா?அன்று மாணிக்கம் அங்கிள் அந்தக் கோவை ஆன்டி பற்றி என்ன சொல்லி இருப்பார்?.அது எப்படி ரிஷி பெண்களை வெறுக்கக் காரணமா இருக்கும்?’எனப் பல கேள்விகள் மித்ராவின் மனதில் எழுந்தது.ஆனால் ரிஷியைப் பற்றி அவளாகவே கேட்க சிறிது தயக்கமாக இருந்தது.


ஆனால் தெரியாதவள் போல் “என்ன சின்னய்யாவிற்கு பெண்கள் மேல் வெறுப்பா?”எனக் கேட்டாள் மித்ரா.


“ஓ...ஆமாம் இல்ல.உங்களுக்குத் தெரிவதற்கில்லை.எனக்குத் தெரிந்து சின்னய்யா வெறுப்பின்றி பேசுவது உங்களிடம் மட்டும்தான்.அதனால் உங்களுக்குத் தெரிவதற்கில்லை” புன்னகைத்தாள் வள்ளி.


முகம் பளிச்சிட புன்னகைத்த மித்ரா,உடனே சோர்ந்து, ‘இல்லை..சுரேகாவுடனும்தான்’ என உள்ளுக்குள் நினைத்தாள்.


அப்போது முத்தய்யா வள்ளியை அழைக்க “இதோ வந்துட்டேன்” எனச் சொல்லிவிட்டு மித்ராவிடம் திரும்பி, “நீங்க கொஞ்ச நேரம் காற்று வாங்கிட்டு வாங்க சின்னம்மா.நா இதோ வரேன்” என முத்துவை நோக்கி ஓடினாள்.ஆனால் மித்ராவினுள் பல எண்ணங்களின் போராட்டம்.


ஆனால் மித்ராவினுள் பல எண்ணங்களின் போராட்டம்.


கிணறு வெட்டப் பூதம் வந்தது போல மாணிக்கம் அங்கிளின் கதையைக் கேட்டு, அவள் உள் இருந்த ரிஷியைப் பற்றி அறியும் ஆர்வம் அவளையும் அறியாமல் அதிகமானது.அவனது நினைவிலே யோசித்துக் கொண்டிருந்த மித்ரா தோட்டத்தின் வேப்பமரத்தின் அடியிலிருந்த கல் இருக்கையில் அமர்ந்து சிந்தனையில் இருந்தாள்.


தோட்டத்தின் இளங்காற்று அவளது முகத்தில் சுருண்டிருந்த முடியுடன் கதை பேச ,அதுவும் இசைவுடன் முகத்தில் இங்கும் அங்கும் அலைந்தோடி மித்ராவின் அழகை மேலும் மெருகேற்றியது.


வானம் மெதுவாக இருளத் தொடங்கியது.ஆனால் மித்ராவின் சிந்தனை கலையவில்லை.சுற்றி என்ன நடக்கிறது என்பதும் நினைவில்லை.ரிஷியின் நினைவே!. ‘சுரேகா ஒருவேளை அவனுடன் ஒன்றாகச் சிறு வயதிலிருந்து இருந்திருக்கலாம்.அதனால் வெறுப்பு வராமல் இருந்திருக்கலாம்.ஆனால் நான்??’என தனுக்க்ள்ளே கேள்வி கனைகளை எழுப்பிக் கொண்டிருந்தாள் மித்ரா. ‘அவன் ஏன் என்னிடம் நேரிடையாக வெறுப்பைக் காட்டவில்லை’.என்ற கேள்வி மித்ராவினுள் எழுந்த போதும் விடையில்லை.


எவ்வளவு நேரம் மித்ரா அந்தச் சிந்தனையிலிருந்தாளோ தெரியவில்லை.,ரிஷியின் “ஹல்லோ” என்ற குரலில்தான் திடுக்கிட்டுத் திரும்பினாள் மித்ரா.இன்று சென்ற வேலை எதிர்பார்த்ததை விட வேகமாக முடிய ரிஷி மாலை ஆறு மணி போலவே கிளம்பிவிட்டான்.வந்தவன் அவளைக் கண்டு காரை செட்டில் விட்டுவிட்டு வந்து அவளை இமைக்க மறந்து சில நிமிடங்கள் பார்த்திருப்பதையும் அவள் அறிந்தாள் இல்லை.


திடீர் அழைப்பில் தான் இருக்கும் இடம் அறிந்த மித்ரா,சில வினாடிகள் ஆனது இயல்புக்கு வர. “என்ன மாகா ராணிக்கு அப்படியோர் யோசனை” எனக் கேட்டான் ரிஷி விடாது.


“ஆ..அது... “ என அவள் இழுக்கும் போதே, “தலைவலி என்று மட்டும் சொல்லிவிடாதே.ஒரே பொய்யை எத்தனை முறைதான் சொல்வது!’என்று அவளது குறையை சொல்லி முறைத்தான் ரிஷி.


‘தன்னை கண்டு கொண்டானே’ என்று எண்ணும் போதே மித்ராவிற்கு வெட்கமாகப் போனது.அவன் இன்னும் தன் பதிலுக்காகக் காத்திருப்பது புரிய,உடனே வாய்க்கு வந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் மித்ரா, “இல்லை.ஒன்றுமில்லை” எனச் சொன்னாள் மித்ரா.


“இல்லை..ஒன்றுமில்லை என்றால்,இங்கு ஏன் முடிச்சு விழ வேண்டும்.”என அவளது புருவங்களின் மத்தியை தொட்டுக் காட்டினான் ரிஷி.அவன் விரல் அவளது நெற்றியைத் தொட்டதும் உடலெல்லாம் சிலிர்க்க சட்டென விலகி “இல்லை நாளை எங்கு அழைத்துச் செல்ல போறீங்கனு யோசிச்சுட்டு இருந்தேன் “ என விரைந்து சொன்னவள் அவனது பதிலுக்கும் காத்திராமல்., “நான் உள்ளே போக வேண்டும் வள்ளி தேடுவாள்” எனத் திக்கி சொல்லிவிட்டு ஓட்டமாய் ஓடி வீட்டினுள் மறைந்தாள்.


அவளது அசைந்தாடிய கூந்தலை பார்த்த வண்ணம் யோசித்தான் ரிஷி.அவளது ஒவ்வொரு செய்கைகளையும் பார்க்கும் போது,ரிஷியினுள் ஏதோ ஒரு தாக்கம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதியவிதமான உணர்வு.அவள் தன்னுடன் இயல்பாகப் பேசினால் எவ்வளவு நல்லா இருக்கும் என நினைத்தான்.நாளைக்குப் பிறகு அவளை எப்படியும் இயல்பாகப் பேச வைத்து விடுவேன் என தன்னுள் உறுதியுடன் இருந்தான்.


நாளைப் பொழுது விடிந்தது.வள்ளியிடம் ரிஷி பேசிக் கொண்டிருந்தான்.அப்போதுதான் குளித்துவிட்டு வந்த மித்ராவிற்கு ஹாலில் இவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்க வெளியே வந்தாள்.


”வள்ளி நீயும் எங்களுடன் வருகிறாயா?”என்றான் ரிஷி.


“இல்ல..சின்னய்யா..அவருக்கு காலைல இருந்து காச்சல் நா இங்க இருந்தாதான் ஒழுங்கா சாப்பிடுவாரு நீங்க போய்ட்டு வாங்க” என்றாள் வள்ளி.வள்ளியின் முகத்தில் கவலையின் ரேகை வெளிப்படையாகத் தெரிந்தது.


மித்ராவே கேட்க நினைத்ததை ரிஷி கேட்டதில் மகிழ்ச்சி ஆனால் வள்ளி வர முடியாமல் போனது அவளுக்கு வருத்தம். ‘அதனோடு இவனுடன் தனியே வேறு போக வேண்டுமா?’படபடத்தாள்.


பிறகு “முத்தய்யாவுக்கு ஏன் திடீர்னு காச்சல் வந்தது வள்ளி” என்று,தன் ஈரத் தலையை டவலில் துடைத்த வண்ணம் கேட்டுக் கொண்டே வந்தாள் மித்ரா.மித்ராவின் பார்வை வள்ளியின் மீதே இருந்தது.ரிஷியின் பார்வை மித்ராவின் மீதே இருந்தது.


அவள் அணிந்திருந்த அடர் பச்சை நிற சல்வார் அவளை இன்னும் எடுப்பாகக் காட்டியது.அதனோடு விரிந்த நிலையில் அவள் நீண்ட கூந்தல் மழையின் போது இறக்கை விரித்தாடும் மயிலின் அழகைப் போல் மித்ராவின் அழகைப் பன்மடங்காக்கியது.மித்ராவை இப்போது பார்க்கும் போது ரிஷியின் உள் உணர்வில் எதையோ சொல்லியது.


“நேற்று சாப்பிட்ட அன்னாசிப்பழம்.அவருக்கு அலர்ஜி ஆகிவிட்டது சின்னம்மா.அதனால்தான்.”எனச் சோர்ந்தவள்,மித்ராவின் அழகில் சில வினாடிகள் மெய் மறந்துதான் போனாள்.


பிறகு “நீங்க போய்ட்டு வாங்கச் சின்னம்மா..அங்க நல்லா இருக்கும்.இப்போ நா அவருடன் Hospitalக்கு போய்ட்டு வந்திடுரன்.நாம இரவு பேசலாம்” எனக் கவலையுடன் சொன்னாள்.


“சரி வள்ளி...முத்தய்யாவை பத்திரமாக பார்த்துக்கோ” என அக்கறையுடன் சொன்னாள் மித்ரா.


‘இப்போது இவனுடன் தனியாக போக வேண்டுமா?எங்கே என்றும் தெரியவில்லை’ என நினைத்து ரிஷியின்புரம் திரும்பியவள் ரிஷி தன்னையே பார்த்திருப்பதைப் பார்த்து விக்கித்து நின்றாள்.அவனது கண்களின் இமைகள் செயல்பட மறந்தனவோ என்றே மித்ராவிற்கு தோன்றியது.அவளது காது மடல் சிவந்தது.கன்னங்கள் கதகதத்தது.மூச்சுவிடக் கூட சிரமம் போல் இருந்தது.


அவனது பார்வையிலிருந்து தப்பிவிடும் எண்ணத்தில் “தலையைக் காய வைத்துவிட்டு வருகிறேன்.நீ சீக்கிரமா Hospitalக்கு போய்ட்டு வா?”என சொல்லிக் கொண்டே வள்ளியின் “ம்ம்...”என்ற பதிலில், வேகமும் நடையுமாக வெளியில் தோட்டம் பக்கம் சென்றாள்.அவள் பின்னோடு ரிஷி வருவான் என்று நினைத்தாள் இல்லை.


வெளியில் வந்ததும் அவளது மனசு சிறிது இயல்புக்கு வந்தது.அவளது வாய்த் தானாக ஒரு பாட்டினை முனங்க ஆரம்பித்தது.


அப்போது “மித்ரா..”என்றது ஒரு ஆண் குரல்.
வேறு யார்?ரிஷிதான். ‘அவனிடமிருந்து தப்பி தப்பி ஓடி வந்தாலும் பின்னோடு வந்துவிடுக்கிறானே.!பெண்களிடம் வெறுப்பு.நானும் பெண்தானே!என் மீதும் வெறுப்புடனே இருந்திருக்கலாமே!இது என்ன இம்சை’ என அவளது புத்தி அவனைத்திட்டியது.ஆனால் மனம் அவன் வருகையை எதிர்பார்த்தது.


திரும்பியவள்,இல்லாத தைரியத்தை கஷ்டப் பட்டு வரவழைத்துக் கொண்டு, “ம்ம்..?”என்று ஒற்றைச் சொல்லாக கேட்டாள் மித்ரா.


“என்னுடன் வா..”என அவளது பதிலுக்கும் காத்திராமல் கையை பற்றி இழுத்துச் சென்றான் ரிஷி.


“எங்கே?”,எனக் கேட்ட மித்ரா ‘அய்யோ பெருமாளே.இவன் என்ன செய்கிறான்.எதற்கு என் கையை பிடித்துப் இப்படி இழுத்துச் செல்கிறான்.’என அவனுடன் ஓட்டமாக நடந்த வண்ணம் யோசித்தாள் , ‘இவனிடமிருந்து விலகியிருக்க நினைக்கும் எனக்கு ஏன் இப்படி சோதனைச் செய்கிறாய்.’என அந்தக் கடவுளை நிந்தித்தாள் மித்ரா.


‘ஏற்கனவே பெண்கள் மீது வெறுப்பு..நான் எதையாவது இவனுக்குப் பிடிக்காததை செய்து வள்ளி சொன்னது போல் திரும்பவும் இவனுக்குப் பெண்கள் மீது வெறுப்பு வந்துவிடப் போகிறது’ என அஞ்சினாள். ‘அந்தப் பெண் சுமித்தா,என்ன செய்தாள் என்று தெரிந்தாலாவது அதற்கேற்ப நடந்து கொள்ளலாம்.ஒன்றும் புரியாமல் இது என்ன சோதனை’ என வருந்தினாள்.


“எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்” எனக் கேட்ட வண்ணம் உடன் நடந்தாள் மித்ரா.அவளது கேள்வி ,அவன் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.ஆனால் அவன் அழைத்துச் சென்றது, அவள தங்கியிருந்த அறைக்குத்தான்.சென்றவன் அவளை அமரும்படி செய்கை செய்துவிட்டு ,அங்கிருந்த பீரோவிலிருந்து எதையோ எடுத்தான்.


அது ஒரு புடவை.அது அரக்கு நிறத்திலிருந்தது.ஆடம்பரமில்லாத எளிமையான காட்டன் புடவை.அதற்கான செட் அனைத்தையும் எடுத்து அவளிடம் நீட்டினான் ரிஷி.


அவற்றைப் பார்த்தவள்,புரியாத பாவனையோடு ‘என்ன?’என்பது போல் ரிஷியை ஏறிட்டாள் மித்ரா.


அதை உணர்ந்தவனாய் ரிஷியே சொன்னான், “இன்று வெளியில் செல்ல இதை உடுத்திக் கொள்.நாம் பார்க்கப் போவது வயதில் முதிர்ந்தவர்களையும்.அவர்கள் உன்னைப் புடவையில் பார்த்தால் சந்தோஷ படுவாங்க” எனக் கோர்வையாக அவளிடம் சொல்லி முடித்தான் ரிஷி.


இன்னும் புரியாதவளாய்., ‘யாரந்த முதியவர்கள்.அவர்கள் ஏன் தன்னை சேலையில் பார்க்க மகிழ வேண்டும்’ என்று குழம்பினாள் மித்ரா. ‘பெருமாளே!.இவனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் எனக்குப் புதிருக்குள் மாட்டிக் கொண்டது போல்,குழப்பமாகவே இருக்கு’ என மனதுள் புலம்பினாள்.ஆனால் வெளியில் “ எனக்குச் சேலையெல்லாம் கட்டத் தெரியாது.சல்வார்தான் எனக்கு வசதியாக இருக்கும்.”எனப் புடவையை வாங்காமல் சொன்னாள் மித்ரா.


அவன் முகம் சோர்வுறுவதை கண்ட மித்ரா,அதைத் தாங்காமல் ,வேறு காரணமும் சொன்னாள் , “அதனோடு,ரவிக்கைக்கு எங்கே போவது.இருப்பது சரியாக இருக்கமா?என்று தெரியாது” .


இரண்டாவது வாக்கியத்தில் எதையோ கண்ட ரிஷி ,“அப்போ...ரவிக்கை சரியாக இருந்தா,சேலை கட்டிக் கொள்வாயா?”ஆர்வம் மிகைப்பட கேட்டான்.


அவனது கேள்வியில்,அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “சரி..அப்படியே வைத்துக் கொள்வோம்.கட்டத் தெரியாதே!.வள்ளியும்,முத்தய்யாவுடன்Hospitalக்கு சென்றுவிட்டாள்.அதனால் இதெல்லாம் வேண்டாம்ங்க” என்றாள் கெஞ்சும் தோணியில் மித்ரா.


“ப்பூ...இவ்வளவுதானே.நீ ரவிக்கை சரியாக இருக்கா என்று மட்டும் பார்.மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றுவிட்டு அவளுக்கு அருகில் புடவை செட்டை வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான் ரிஷி.


‘இவன் என்ன பார்க்க போகிறான்.!’இவனது செய்கையை பார்க்கும் போது சத்தமிட்டுக் கத்த வேண்டும் போல் இருந்தது மித்ராவிற்கு.அவனது செய்கையின் பொருள் எதுவும் அவளுக்கு விளங்கவில்லை.இருந்த போதும் அவன் சொன்னதை செய்யாமல் இல்லை.என்ன ஆச்சரியம் என்றால் அந்த ரவிக்கை அவளுக்கென்று அளவெடுத்து தைய்த்ததுப் போல் இருந்தது.


ரவிக்கை உடுத்திச் சரி பார்த்து பிறகு அவள் கதவை திறந்தாள்.திறந்ததும், ‘அவள் சரியாக இருக்கிறது’ என்றுதான் சொல்ல போகிறாள் என்று தயாராக அவள் பதிலுக்கும் காத்திராமல் ரிஷி அவள் அறையினுள்ளே சென்று மேஜை மீது தன் கையிலிருந்த லேப்டாப்பை வைத்து datacard –ஐ அதில் insertசெய்துyoutube-ல் சேலை கட்டுவது எப்படி என்று அந்த வீடியோவை ஓடவிட்டான்.


இவற்றை இமை கொட்டாமல் பார்த்திருந்த மித்ரா, ‘இதற்குள் இவ்வளவு யோசிப்பார்களா என்ன?அப்படி நான் சேலைதான் கட்ட வேண்டுமென்று என்னதான் இருக்கிறது’ என தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதியானது மித்ராவிற்கு.கூடவே வியப்பும். ‘இவனா?என்னை வீட்டில் விடக் கூடாது என்ற ரிஷி!!’


“சீக்கிரம் வந்துவிடு.நானும் தயாராக வேண்டும்” என சொல்லிக் கொண்டே சென்றுவிட்டான்.அவன் சொல்லாமலே மித்ராவிற்கு புரிந்தது, youtube – ஐ பார்த்துத் தான் சேலைக் கட்ட வேண்டுமென்று.


அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ‘இப்போது சேலை கட்டிதான் ஆக வேண்டும்.நல்ல வேளை ஏதோ கொஞ்சம் அம்மா college conference – க்கு கட்டிவிடும் போது பார்த்திருந்தோம்.இப்போது அது கொஞ்சம் வேலையை எளிமையாக்கியது.’என நினைத்து புடவை கட்டி தயாரானவுடன் வெளியில் வந்து sofa – ல் அமர்ந்து செய்தித்தாள் படித்த வண்ணம் ரிஷிக்காகக் காத்திருந்தாள்.


செய்தித்தாள் படித்த வண்ணம் ரிஷிக்காகக் காத்திருந்தாள் மித்ரா.


“கிளம்பிட்டியா?..”என்று கேட்டுவிட்டு படிகளைப் பார்த்த வண்ணம் கம்பீரமாக உதட்டில் புன்னகையுடன் இரண்டு இரண்டு படிகளாக தாண்டி வந்து கொண்டிருந்தான் ரிஷி.


அவனது குரலில் நிமிர்ந்த மித்ரா,வெள்ளை நிற குருத்தாவும் ,நீல நிற ஜீன்ஸ்ம் அணிந்து கொண்டு அவன் தாவி வரும் அழகை எழுந்து நின்று இமைக்க மறந்து ரசித்தாள்.அவள் இருக்கும் நிலை மறந்து மித்ராவிற்கு அவனை இந்திர லோக மன்னனோ என எண்ண வைத்தது. ‘இந்த உடையில் எவ்வளவு அழகாக இருக்கிறான்.’என எண்ணி அவனை உச்சி முதல் பாதம் வரை மித்ராவின் கண்கள் அளவெடுத்தது.


கலைத்துவிடப் பட்ட கரு நிற சிகையும்,அவன் தாவி வரும் போது அவன் உடல் இசைவுக்கு ஏற்றாற் போல அவை அசைந்தாடிய அழகும் ,அவனின் வில் போன்ற இரு அழகியபுருவங்களும்,கலைப்பற்ற விழிகளும் ,அவற்றிலிருந்து வரும் அம்புகள் போல நேர் கொண்ட பார்வையும் ,கூர்மையான மூக்கும்,சீராக வெட்டப் பட்ட மீசையும் ,உடற்பயிறிசியால் தோள்களில் ஏற்பட்டிருந்த தசை கோலங்கக்ளும் ,அதிகம் தடித்துவிடாமல் பராமரித்த அவன் கம்பீரமான உடல் அழகும்,மித்ராவை மெய் மறக்க வைத்தது.இவளுடைய நிலை இதுவென்றால் ரிஷியின் நிலை இன்னும் மோசம்.


தாவிகுதித்து வந்தவன் அவள் நின்று இருந்த நிலை கண்டு சொக்கிதான் போனானோ? ‘தேவதை என்று ஒன்று இருப்பது உண்மை என்றால் அது இவளை போல்தான் இருக்குமோ?’என எண்ணினான்.அவளுக்கென்று எடுத்தது போல் அமைந்த அந்தச் சேலை எப்படி கச்சிதமாக அவளுக்குப் பொருந்தியது.இவளைப் பார்க்காமலே எப்படி அம்மா அப்படி ஒரு சேலையை தேர்ந்தெடுந்தார்கள் என தன் அம்மாவை எண்ணி மெச்சித்தான்.அதை அவள் கட்டிருந்தவிதம் பார்ப்பவர் எல்லோரையும் மதிக்கவைக்கும் பெண்மையின் அழகு என நினைத்தான்.முன்புரம் என்று அவள் எடுத்துவிட்டிருந்த அவளது நீண்ட நெடிய கூந்தல் அவளது பெண்மையை மேலும் உயர்த்தியது.அவளது செவ்விதழ் எதையோ முணுமுணுப்பது போல் இருக்க அதையே பார்த்தவன் பின் அதனைத் தொடர்ந்து மேல் நோக்கி பார்வையை நிமிர்த்தினான்.மித்ராவின் விழியைச் சந்தித்தான்.இரு விழிகளின் பார்வை மறுபடி மோதியது.அன்று போல் இன்றும் பார்வையெனும் மேகங்களின் சங்கமம்.இந்த மோன நிலை சில வினாடிகளே நீடித்தது.அதற்குள் ரிஷியின் ஃபோன் ஒலிக்க இருவரும் தன்னிலை உணர்ந்தார்கள்.


உடனே தலையை தாழ்த்திக் கொண்டாள் மித்ரா.மூச்சுவிட முடியாமல் அவளுக்குச் சிரமம் உண்டானது.மித்ரா பெரிய பெரிய மூச்செடுத்து விட வேண்டிய நிலை ஏற்பட்டது.கைகள் சில்லிட்டன.ரிஷி ஃபோனை எடுத்துப் பேச,மித்ராவிற்கு இன்னும் இயல்புக்கு வர சில பல வினாடிகள் கிடைத்தது எனலாம்.


ஃபோனில் பேசினாலும் ரிஷியின் பார்வை மித்ராவை பார்த்த வண்ணம் இருந்தது.அவளுக்கு அவகாசம் கொடுப்பவன் போல் மேலும் சில நிமிடங்கள் பேசிய பிறகு,அவளிடம் திரும்பி “போகலாமா?மித்ரா நீ சேலையில் அழகாக இருக்க” என்று அவளது முகத்தில் மேலும் செந்நிறம் பூசச் செய்தான்.மேலும் மேலும் அவளைத் தவிக்க விடாமல், “வா...கிளம்பலாம்” என்று முன்னே நடந்தான்.


படப்படத்த இதயத்தை தன் கைகளால் தடவியவள், ‘இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ’ என்று எண்ணி அவனுடன் நடந்தாள். ‘பேசாமல் போகாமல் இருக்கலாம் என்றால்,இவன்தான் எதற்கெடுத்தாலும் கையை வேறு பிடித்து இழுத்துச் செல்கிறானே’ என அவன் மீது கோபமாக வந்தது மித்ராவிற்கு.


கார் மெதுவாகக் கிளம்பியது.மித்ரா எதுவும் பேசாமல் சிலை போல ஏறி காரின் முன் இருக்கையில் ஏறி சீட் பெல்டை அணிவித்துக் கொண்டு ஜன்னல்புரம் திரும்பிப் பார்த்த வண்ணம் இருந்தாள்.விழிகள் வெளியிலிருந்தாலும், நினைவுகள் ரிஷியைப் பற்றினதாகவே இருந்தது.


‘இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது.இவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.இவன் முன்பு எப்படி இருந்தான்.இல்லை பெண்கள் மீது மதிப்பு இல்லாததால் அவன் பார்த்த பல பெண்களில் ஒருத்தியைப்போல் என்னையும் எண்ணி என்னிடம் பழகி அவர்களுக்காகச் சேர்த்து என்னைப் பழிவாங்க ஏதாவது திட்டம் போடுகிறானா?இவன் அருகிலிருந்தால் வேலை செய்ய சண்டித்தனம் செய்யும் என் புத்திக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும்’ என தனக்குள் சூளுரைத்தாள் மித்ரா.


‘இதற்கெல்லாத்துக்கும் ஒரே வழி வீட்டுக்குப் போனதும் முதலில் வள்ளிடம் மாணிக்கம் அங்கிளின் கதையையும்,அந்தப் பெண் சுமித்தா கதையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவனது உண்மையான தோற்றம்தான் என்ன?என்னைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.வள்ளி சொன்னது போல் என் மீது மட்டும் வெறுப்பு இல்லையா?இல்லை என்னை வீட்டை விட்டு வெளியில் துரத்த எதாவது திட்டம் போட்டுத்தான் என்னிடம் சாதாரணமாக பேசுகிறானா?’என்று மித்ராவினுள் தீவிர சிந்தனைகளின் ஓட்டம்.


உடனே, ‘செ செ..ரிஷி அப்படியெல்லாம் செய்ய மாட்டான்’ அவளே அவனுக்கு certificateகொடுத்தாள். ‘அச்சோ..மனம் ஒரு குரங்கு என்பது போல் என் மனம் ஏன் இப்படி நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது’ எனத் தன்னையே நிந்தித்தாள் மித்ரா.


எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ தெரியவில்லை,ரிஷி அவளது நெற்றி சுருக்கத்தை கவனித்து ,எங்கே போகிறோம் என்பதைத்தான் தீவிரமாக யோசிக்கிறாள் என எண்ணிப் புன்னகைத்த வண்ணம் காரை நிறுத்தி , “இறங்கு.வந்துவிட்டோம்” என்றபோதே நினைவு வந்து நிமிர்ந்தாள்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top