உனக்காகவே நான் - 12

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 12
Heroin.jpg

ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியாமல் நகர்ந்தது.அடுத்த சனிக்கிழமையும் வந்து.ரிஷியும் வந்தான்.


ரிஷியின் வருகையை யூகித்திருந்த மித்ரா,சனிக் கிழமை காலை விரைவிலே குளித்துவிட்டு,காலை உணவெடுத்துக் கொண்டாள்.


மரகதத்திடம், “ஆன்டி நான் ஒரு examக்கு படிக்கணும்.அதற்கு பின்னாடியிருக்கும் தோட்டத்தில் உட்கார்ந்துப் படிக்கப் போரேன்.என்னை யாரும் தேட வேண்டாம்.எனக்கு மதிய உணவும் ஒரு box-ல தந்திடுங்க.நானே மாலை வந்துடுவேன்.”என அடுக்கிக் கொண்டே போனாள் மித்ரா.


சில வினாடிகள் மித்ராவை ஆராயும் பார்வைப் பார்த்த மரகதம் ,பிறகு, “சரி மித்ரா.பாட்டிகிட்ட சொல்லிட்டு போ” என்றார்.


‘அச்சோ ஆன்டி வேற நேரம் ஆவது புரியாமல் பாட்டியிடம் வேற சொல்ல சொல்ராங்கலே.ரிஷி வந்துவிடுவானா?’என்று உள்ளுக்குள் பதபதைத்த வண்ணம், “நீங்களே சொல்லிடுங்க ஆன்டி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பார்வதி பாட்டி வந்துவிட்டாங்க.


“என்ன?என்னாச்சு மித்ரா?கையில் என்ன புத்தகம்?”என முகத்தில் படபடப்பு தெரிய நின்று இருந்த மித்ராவைப் பார்த்து கேட்டார் பார்வதி.


“ஆ..அது பாட்டி,நான் படிக்க வேண்டும். Disturb இல்லாத இடமா உட்கார்ந்து படிக்கலாம் என்று,பின்புரம் தெரிகிற தோட்டத்தில் உட்கார்ந்து படிக்கிறேன் என்று” என திக்கி திக்கி மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போது , “என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா” என முடித்தார் மரகதம்.


“ஓ...இங்க உன்னுடைய அறையிலே படிக்கலாமே மித்ரா?!”கேள்வியும் யோசனையுமாக கேட்டார் பார்வதி.


பதிலேதும் சொல்லாமல் மித்ராவின் பார்வை மாடியிலிருக்கும் ரிஷியின் அறை மீது விழுந்து மீண்டது.


அவளது பார்வையைத் தொடர்ந்த பார்வதியின் பார்வை எதையோ கண்டுக் கொள்ள “சரி...நீ துரை ஐயாவையும் உடன் அழைத்துச் செல்.பனியிலிருக்காதே...படிக்க தானே போகிறாய்.?இங்க இருந்து 1கிலோ மீட்டர் தூரத்தில நமக்கு ஒரு தோட்டத்து வீடு இருக்கு. உனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு அங்கே போய் படி.சரியா?”என அக்கறையும் உத்தரவுமாக சொன்னார் பார்வதி.


“ஐ...சரி பாட்டி” என மகிழ்ச்சியும் குதுகலமாக சொன்னாள் மித்ரா.


மித்ராவின் சட்டென மலர்ந்த முகத்தின் அழகை ரசித்த பார்வதியும் ,மரகதமும் புன்னகைத்தனர்.


துரையிடம் மித்ராவை அழைத்துச் செல்ல பார்வதி சொல்லிவிட்டு ,அவரிடம் இன்னும் சில விஷயங்களும் அவரிடம் சொன்னார்.


“சரிங்க அக்கா” என்ற துரை அதன் பிறகு மித்ராவை அழைத்துக் கொண்டு செல்லலானார்.


‘ஹப்பா..எப்படியோ ரிஷியை பார்க்குமுன் வெளியில் வந்துவிட்டோம்’ என நினைத்த மித்ராவின் மனதுள் இதமான உணர்விற்குப் பதிலாக எதையோ இழந்த உணர்வே அதிகமிருந்தது.ஏன் என்று புரியாத போதும் அந்த மாற்றத்தை அவள் உள்ளம் ரசிக்கவில்லை என்பதை மட்டும் அவள் உணர்ந்தாள்.


வீடு வந்ததும் துரை தாத்தா, “பத்திரமா இரு மா.கதவை தாளிட்டுக் கொள்.தெரிந்த குரலாய் இருந்தால் மட்டும் கதவைத் திற.நான்4மணி போல வரேன்.தூக்கம் வந்தா தூங்கு.உள்ளேTvகூடப் பார்க்கலாம்.”எனப் புன்னகைத்த விதமாகச் சொன்னவர்,அவளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.


ஒற்றை அறையுடன் இருந்த அந்த ஓட்டுவீட்டினுள் நுழைந்த மித்ரா , ‘பெரியதாகப் படிப்பதற்கென்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.ஆனால் அந்த நேரத்திற்குத் தப்பிப்பதற்காக சொன்னவைதானே’ என நினைத்தவள்,கதை புத்தகத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டே வந்திருந்தாள் மித்ரா.


மித்ராவின் புத்தி ‘பொய் சொல்லிவிட்டாயா?’எனக் கேட்க, ‘சே சே..நான்தான் முன்பே மன்னிப்பு கேட்கும் விதமாக என் ஆள்காட்டிவிரலை,நடுவிரலால் அழுத்திய வண்ணம்தானே பாட்டியிடமும்,ஆன்டியியமும் சொன்னேன்.அதனால் இது பொய் தப்பில்லை’ என மனம் வாதாட மித்ரா எடுத்து வந்த புத்தகத்தை விரித்துப் படிகளானாள்.


அங்குப் பார்வதி பாட்டியிடம் “மித்ரா எங்கே பாட்டி?”என்று கேட்ட ரிஷி,பாட்டியின் பதிலில் நெற்றிபுருவம் சுருங்க சில வினாடிகள் யோசித்துவிட்டு, “சரி பாட்டி.நான் பாலய்யா அங்கிள் வீடு வரை சென்றுவிட்டு வருகிறேன்” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.


இங்கு மீண்டும் வீடு சென்றால் ‘ரிஷியைப் பார்க்க நேரிடுமே.பார்த்தால் பேச வேண்டுமே!’என மித்ராவின் உள்ளம் படபடத்தது.இருந்தும் ‘எதுக் கேட்டாலும்...ம்ம்..ஆம்...இல்லை...என ஒற்றை வரியில் பதில் சொல்லிக் கொள்ளலாம்.அதன் பின் வற்புறுத்தி பேசமாட்டான் தானே!!’என அதற்கும் ஒரு வழி கண்டவளாக மாலை துரை தாத்தாவுடன் வீடு அடைந்தாள் மித்ரா.


அவர்கள் வீடு அடைந்த போது ரிஷி அங்கே இல்லை.பெருமூச்சுவிட்டாள் மித்ரா. ‘சுரேகாவை பார்க்கத்தான் சென்று இருப்பானோ’ என ஏனோ எண்ணி அவள் மனம் சோர்வுற்றது.பிறகு கொஞ்ச நேரம் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தாள் மித்ரா.


இரவு ஆரம்பிக்கும் போது ரிஷி வீடு வந்து சேர்ந்தான்.அவன் வருவதைப் பார்த்ததும்,அவனிடமிருந்து தப்பிக்கும் விதமாக ,மித்ரா வெளியிலிருந்த துரை தாத்தாவின் அறையை நோக்கிச் சென்று மறைந்தாள்.அவளை ரிஷியின் பார்வை தொடர்ந்ததை அவனை திரும்பி பார்க்காமலே மித்ராவிற்கு தெரிந்தது.ஆனால் அவனைக் கடந்து வந்த சில வினாடிகள் அவள் இதயம் ‘அவன் எதுவும் கேட்டுவிடுவானோ’ என எண்ணி வேகமாக அடித்தது.


அதனை ரிஷி கண்டு கொண்டானோ என்னமோ,அவளை எதுவும் கேட்டு சங்கடப்படுத்தாமல், sofa –ல் அமர்ந்திருந்த பாட்டியிடம் சலுகையாகப் போய் அமர்ந்தக் கொண்டான்.


பிறகு, “பாட்டி..ஒன்று கேட்கணும்” என கேட்டவிதமாக பாட்டியின் மடியிலிருந்த பூக்களை இரண்டிரண்டாக பிடித்துக் கட்டுவதற்கு வசதியாகப் பாட்டியிடம் கொடுத்தான்.


“என்ன டா..என்ன விஷயம்” என அவனிடமிருந்து பூவை வாங்கி நூலில் தொடுத்த வண்ணம் கேட்டார் பார்வதி பாட்டி.


“நான் மித்ராவை இந்த வாரம் மேட்டுப் பாளையம் அழைத்துச் செல்லவா?”என மெதுவாகக் கேட்டான்.


ஆச்சரியமாக சில வினாடிகள் பூ தொடுப்பதை நிறுத்திவிட்டு ரிஷியின் முகத்தைப் பார்த்தார் பாட்டி.மீண்டும் பூ தொடுத்தவிதமாக “ம்ம்...எதற்கு..?”என ஒற்றை கேள்வியாகக் கேட்டார்.


“இல்லை பாட்டி ஒன்றுமில்லை.வள்ளிதான் அழைத்து வரச் சொன்னாள்.”என்றான் எதையோ மறைத்தவிதமாக ரிஷி.


அனுபவமிகுந்த பாட்டி அதை கண்டு கொள்ள, “எதையோ மறைப்பது போல் இருக்கு ?”என அவனை நிமிர்ந்தும் பாராமல் தன் வேலையிலே கண்வைத்து கேட்டார் பாட்டி.


‘கண்டுகொண்டார்களே.’என நினைத்த ரிஷி , “ அது..பாட்டி.நீங்க மித்ராவிடம் சொல்லிவிடுவீர்களோ!என எண்ணித்தான்” என இழுத்தான் ரிஷி.


“அது சரி..விஷயத்தைச் சொல்.”என்றார் பார்வதி.


“இல்லை பாட்டி.அவளை ‘யாவரும் கேளீர்’க்கு அழைத்துச் செல்லலாமென்று........அப்பாவும் சொன்னார் அங்கே போனா அவள் இன்னும் சந்தோஷமாக இருப்பாள் என்று.......அதான்.....ஒருsurprise –அ கூட்டிட்டுப் போகலாமென்று கேட்டேன்.போன வாரமே நினைத்தேன்.அதற்குள் அவசரமா blood donate பண்ணனும்னு கிளம்ப வேண்டியதா போச்சு” எனக் கோர்வையாக சொன்னான் ரிஷி.


“ஓ...சரி சரி...நானும் அதைச் சொல்ல நினைத்தேன்..அழைத்துப் போ..அவளிடம் ஒரு வார்த்தை மேட்டுப்பாளையம் போவதைப் பற்றி முன்பே கேட்டுவிடு.”என தன் சம்மதத்தைச் சொன்னார் பார்வதி.


“கண்டிப்பா..பாட்டி” எனச் சந்தோஷமாக சொன்னான் ரிஷி.


“சரி...எப்போ கூட்டுட்டு போகப் போர.?எப்போ திரும்பவும் அழைத்து வருவ?”எனப் பெரியவராய் கேட்டார் பார்வதி.


“திங்கள்கிழமை கிளம்பிட்டு,அடுத்தவராம் சனிக்கிழமை வந்துடரோம்” என்றான் ரிஷி.


“என்ன ஒருவாரமா?!”வியந்து ரிஷியை நோக்கினார் பார்வதி.


“யாவரும் கேளிர்க்கு ஒரு நாள்தான் பாட்டி.மற்ற நாட்கள் வள்ளியுடன் இருந்து கொள்ளட்டும்.அடுத்த வாரம் வரும்போது அழைத்து வந்திடுவேன்.வள்ளிக்கும் அவள் வயதில் ஒருவளோடு பேச வாய்ப்பிருக்குமே.வரும் போதும் கூட மித்ராவை கேட்டாள்.அழைத்து வரச் சொன்னாள்” என காரணத்துடன் ரிஷி சொன்னான்.


“ம்ம்...சரி...ஆனால் மித்ரா இங்கே வர விரும்பினால்,என்றானாலும் இங்கே அழைத்து வந்துவிட வேண்டும்.புரிகிறதா?”என உறுதியாக நிபந்தனையிட்டார் பார்வதி.


“சரி பாட்டி.அவள் விருப்பம்தானே முக்கியம்” என எதையோ நினைத்துச் சொன்னான் ரிஷி.


இதை எதையும் அறியாத மித்ரா துரைத்தாத்தாவிடம் அரட்டை அடித்துவிட்டுச் சாப்பிடும் நேரம் வந்தாள்.பிறகு அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு அவள் அறை சென்றுவிட்டாள்.அவள் மறந்தும் ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.ஆனால் அவனது பார்வை தன்னைத் தீண்டுவதை உண்ராமலுமில்லை.


அடுத்த நாளும் இப்படியே சென்றது.நத்தை தன் கூட்டில் ஒளிந்துக் கொள்வது போல அவன் அருகிலிருப்பதைத் தவிர்க்க முடிந்த அளவு முயன்றாள் மித்ரா.அவளது ஒதுக்கத்தை ரிஷியும் கண்டு கொண்டானோ என்னமோ அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.


ஆனால் அவள் நினைப்பதெல்லாம் நடக்குமா என்ன?ஞாயிறன்று இரவு உணவு முடிந்ததும் ,பார்வதி பாட்டி மித்ராவை அழைத்தார்.ரிஷியும் உடன் இருந்தான்.


“என்ன பாட்டி” எனக் கேட்ட வண்ணம் பாட்டியின் அருகில் வந்து நின்றாள் மித்ரா.


“வள்ளி உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாள் போல ..நீ மேட்டுப்பாளையம் போகிறாயா?”எனக் கேட்டார்.


சட்டென மித்ராவின் பார்வை ரிஷியின் மீது விழுந்தது.அவன் அவனது வசிகரிக்கும் புன்னகையை அவள் மீது வீசிக்கொண்டிருந்தான்.


உடனே தலை குனிந்த மித்ரா அவசரமாக படப்படத்த இதயத்தை அடக்கி, “இல்ல பாட்டி...நான் இங்கயே..”என இழுத்தவள் “ஏன்...”என்ற அதிர்ந்த ரிஷியின் குரலில் நிமிர்ந்தாள்.வசிகரித்தவிதமாக இருந்த முகம் ,இப்போது கோபத்தினால் இறுக்கமடைந்திருந்தது.பதிலேதும் சொல்லாமல் மித்ரா மிரட்சியாய் விழித்தாள்.


“ஏய்...என்னடா ரிஷி..சத்தமாக பேசுவது.நான் பேசிக் கொண்டிருக்கிறேன் இல்லை” என ரிஷியிடம் பாட்டி கடிந்து கொண்டார்.


“சாரி பாட்டி” என தன் தவற்றுக்கு மனிப்புக் கேட்டுவிட்டு “நீங்களே பேசிவிட்டு சொல்லுங்க பாட்டி.எனக்கு இப்போ ஒரு முக்கியமான ஃபோன் வரும்” என்றுவிட்டு,பாகெட்டில் இருந்த ஃபோனைப் எடுத்துப் பார்த்த வண்ணம் அவன் அறைச் சென்றுவிட்டான் ரிஷி.


அவன் கோபமாக செல்வதை மித்ராவினால் தாங்க முடியவில்லை.அதே சமயம் , ‘இவன் இருக்கும் இடத்தில் எப்படி இருப்பது.அதுவும் அது ஒரு நாளாகவே இருந்தாலும்.ம்ம்கும் கூடாது.போகக் கூடாது’ என இரண்டு மனமாக அவள் சோர்வுற்றாள்.ஆனால் பார்வதிப் பாட்டி வேறு சொன்னார்கள்.


அவன் போவதை பார்த்திருந்த மித்ராவை பார்த்து “மித்ரா.ஏன் அங்கே போக விருப்பமில்லையா?இல்லை இங்கிருந்து போக விருப்பமில்லையா?”எனக் கேட்டார் பார்வதி.


பார்வதியின் குரலில் தன் நிலைக்கு வந்தவள் “எனக்கு இங்கே இருக்கவே பிடிக்குது..அதான்..அப்படிச் சொல்லவந்தேன்” எனத் திக்கி சொன்னாள் மித்ரா.


“வேறெதுவுமில்லையே” என அக்கறையாகக் கேட்டார் பார்வதி.


“இல்லை.இல்லை.வேறேதுமில்லை பாட்டி” என அவசரமாக மறுத்தாள் மித்ரா.


புன்னகைத்த பாட்டி, “ ம்ம்...மித்ரா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.”எனச் சொன்னார் பார்வதி.


“சொல்லுங்க பாட்டி.என்ன விஷயம்” என ஆர்வப்பட்டாள் மித்ரா.


“இங்கே வேண்டாம்.வா..என் அறைக்குப் போகலாம்” என முன்னே நடந்தார் பார்வதி.


‘பாட்டி என்ன சொல்ல போகிறாரோ!’என்ற திகிலுடன் அவர் பின்னே நடந்தாள் மித்ரா.உள்ளே சென்றதும்,பாட்டி பேச தொடங்கினார்.சில நிமிடங்களில் பாட்டியின் பேச்சைக் கேட்க கேட்க மித்ரா,பாட்டி சொல்வதும் சரியே எனப் பட்டது.அவளும் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்தவள்தானே!.


“சரி பாட்டி.நான் மேட்டுப்பாளையம் போகிறேன்.ஆனால் ஒரு வாரம்தான்.அதற்குள் எல்லாம் நல்ல படியாக முடிந்தாள் சரி.இல்லை என்றாலும் நான் வந்துவிடுவேன்” என மித்ரா உறுதியான முடிவாகச் சொன்னாள்.


அவளது கோர்வையான பதிலைக் கேட்ட பார்வதி, “சரி மித்ரா.ஆமாம் முழுதும் கேட்காமல் அதென்ன போகவில்லை எனப் பதில் சொல்வது” எனச் செல்லமாக மித்ராவின் காதைப் பிடித்தார் பாட்டி.


“ஆ...”என வலிப்பது போல் பொய்யாகக் கத்திவிட்டு “எனக்கென்ன பாட்டி தெரியும்?நான் அங்குப் போவதால் இருக்கும் இந்த நன்மை” எனச் செல்லமாக கோபப்பட்டால் மித்ரா.


“அது சரி...போ...போய் உன்னுடைய பொட்டியைத் தயார் செய்.நான் ரிஷியிடம் சொல்லிவிட்டு வருகிறேன்.”எனப் பார்வதியும் அவளுடன் நடந்தார்.


ரிஷி என்ற வார்த்தையில் சோர்வுற்ற மித்ரா, ‘சே...அவனை நினைத்து,எவ்வளவு நல்ல சூழ்நிலையை தவறவிட்டிருப்போம்.நல்ல வேளைப் பாட்டி எடுத்துச் சொன்னார்கள்.நினைத்தது நல்லப் படியாக நடக்கணும் பெருமாளே!’என மனதார வேண்டினாள்.


ஆனால் அவளது உள்மனது ரிஷியை எண்ணி கலங்கிக் கொண்டுதான் இருந்தது.இருந்தும்,’ஓரிரு வார்த்தை பதிலால் அவனை அலட்சியம் செய்தால் அவனாக வந்து பேசவா போகிறான்’ என தனக்குள் தைரியம் சொல்லிக் கொண்டாள் மித்ரா.


அடுத்த நாள் பாட்டியின் எண்ணப்படி மித்ராவும் தயாராக இருந்தாள்.மாடியிலிருந்து வந்த ரிஷி , “என்ன பாட்டி மகாராணியாருக்குக் கோவை வரச் சம்மதமா?”என ஏளனமாகக் கேட்ட வண்ணம் மித்ராவை பார்த்தான் ரிஷி.எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் மித்ரா.


“என்னடா காலையிலே அவளை சீண்டர.அவள் நேற்றே தயார் என்றேனே.நீங்க கிளம்ப வேண்டியதுதான் மீதம்.வந்து சாப்பிட்டுவிட்டு கிளம்புங்க” என அக்கறையாகச் சொன்னார் பார்வதி.


புன்னகைத்த ரிஷி.”சரி பாட்டி...”என்றுவிட்டுச் சாப்பிட்டபின் காரை கிளம்ப எடுத்து நிறுத்தினான்.


மித்ராவும் தன் பெட்டியுடன் வந்து சேர,பின் கதவை திறந்து உள்ளே உட்கார முயன்றாள்.அப்போது, “இங்கே...முன் இருக்கையில் வந்து உட்கார்” என அதிகாரமாகச் சொன்னான் ரிஷி.

 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷியைத் தவிர்க்கணும்ன்னு நினைக்கிற மித்ராதேவியின் திட்டம் தவிடுபொடியாயிடுச்சா?
ஹா ஹா ஹா
அடேய் ரிஷி ஏற்கனவே பயந்த மித்ராப் புள்ளையை ஏண்டா எப்போப் பாரு மிரட்டிக்கிட்டே இருக்கிறே?
"யாவரும் கேளீர்" முதியோர் இல்லம்
மாதிரி ஏதாவது ஆசிரமமா?
மித்ராவை ரிஷி மேட்டுப்பாளையம்
கூட்டிச் செல்ல இன்னும் வேற ஏதோ
காரணம் இருக்கும் போல தோணுதே,
யோகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top