உனக்காகவே நான் - 1

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
Heroin.jpg

அத்தியாயம்- 1


சிறு சிறு துளிகள் அவள் முகத்தில் சிதறிய வண்ணம் மழை பொழிந்து கொண்டு இருந்தது.ஒவ்வொரு துளிகளும் தாய் மடியை விட்டு இறங்க அடம்பிடிக்கும் குழந்தையைப் போல மரஞ்செடி கொடிகளின் இலைகளை விட்டு இறங்க மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போதுதான் குளித்தது போல ஒரு புதுவித புத்துணர்வோடு ,மரக்கிளைகள் காற்றோடு புரியாத மொழியில் கதை பேசிக் கொண்டிருந்தது.




கார் கதவின் கண்ணாடியை மேலும் திறந்து மழையின் அழகில் மனதைச் செலுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள் மித்ரா.எவ்வளவு முயற்சி செய்தும் கடிவாளம் அற்ற குதிரைப் போல அவள் மனம் மீண்டும் பழைய நினைவிலே வந்து நின்றது.அந்த நினைவில் அவளையும் அறியாமல் இரு கண்ணீர் துளிகள் அவளது கன்னங்களை கடந்தது.




இதை கவனியாதது போல் கவனித்த ஜீவானந்தம் ,அவள் எண்ண அலைகளை மாற்றும் விதமாக,காரை ஓட்டிய வண்ணம் ” மித்ராமா உனக்குப் பிடித்த சுசிலா பாடிய பாடல்கள் இந்த CDயில் இருக்கிறது.அந்தmusic player – ல் போட்டு விடேன்மா ” என்றார்.




அவருடைய குரலில் நினைவு வந்தவளாக ,அவசரமாய் கண்களை துடைத்து விட்டு “அங்..அங்கிள்..என்ன சொன்னீர்கள் ” என்று தடுமாறி கேட்டாள் மித்ரா.




அவள் முகத்தைக் கவனித்து ,பாவம் பிள்ளை மிகவும் சோர்ந்து போய்ருகிருக்கிறாள் என்று எண்ணி ,எண்ணியதை வெளிக் காட்டாமல், CD யை மித்ராவிடம் நீட்டிவிட்டு ” ஒன்றுமில்லை மித்ராமா இந்தCDயை அந்த Player – ல் போட்டு விடமா.இதில் உனக்குப் பிடித்த சுசிலாவின் பாடல் இருக்கிறது” என்றார் ஜீவானந்தம்.




ஜீவா அங்கிள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து ,கடினப் பட்டு வராத புன்னகையை வரவைத்துக் கொண்டு ,எங்கே இந்த CDயை போடுவது என்று காரின் முன்பகுதியைக் கண்களால் ஆராய்ந்தபடி ” எங்கே அங்கிள் போடுவது..”என்று சொல்லிவிட்டு “எங்கள் வீட்டு காரில் என்றால்…” என்று துவங்கிய குரல் பேச முடியாமல் சட்டென நின்று விம்ம ஆரம்பித்தது.கண்கள் கலங்க ஆரம்பிக்க ,முயன்று தடுத்து,திரும்பினாள் மித்ரா.




காரை உடனே நிறுத்திவிட்டு அவள்புரமாக திரும்பி அவளது தலையை பாசத்துடன் தடவி கொடுத்தார் ஜீவானந்தம்.ஆறுதலாக அவர் கரம் அவளது தலையில் பட்டதும் மடைத்திறந்த அணை போல , CD கையில் இருந்து விழுவதும் தெரியாமல் இருக் கைகளையும் முகத்தில் பொருத்தி சத்தமிட்டு உடைந்து அழுதாள் மித்ரா.முழு வேதனையும் கரைந்ததோ இல்லையோ,சட்டெனச் சமாளித்து அமைதியுற்றாள்.




அவள் அழுகை நிற்கும் வரை இருந்துவிட்டு “முதலில் இந்தத் தண்ணீரை குடிமா” என்று தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினார் கனிவுடன்.அவள் தண்ணீர் குடிக்கும் வரை பொறுமையாக இருந்துவிட்டுCDயை எடுப்பதற்க்காக கீழே குனிந்தார்.




மித்ரா நினைவு வந்தவளாக “அங்கிள்..நானே எடுத்துத் தருகிறேன்.. ” என்று கீழே விழுந்த CDயை எடுத்து ஜீவானந்தமிடம் கொடுத்தாள்.அவளையே கவனித்திருந்த அவர் இந்தப் பெண் எவ்வளவு உறுதியுடன் தன்னிலை உணர்ந்து செயல்படுகிறாள் என்று எண்ணியவாறே அவளது கையில் இருந்து CDயை வாங்கி Player -ல் போட்டு விட்டார்.




“சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு..தென்றலே….”என்று சுசிலாவின் குரலில் Playerபாடத் துவங்கியது.




மௌனமாய் அந்தப் பாட்டின் வரிகளை கேட்டவாறே கண்களை மூடி கார் சீட்டை சிறிது தளர்த்தி சாய்ந்து படுத்தாள் மித்ரா.




மனம் சோர்ந்து படுத்திருந்த மித்ராவை பார்த்து விட்டு யோசித்த வண்ணம் காரை விரைந்து செலுத்தலானார் ஜீவானந்தம்.




கார் விரைந்துச் சென்று கொண்டிருந்தது.இனிய மெல்லிசைப் பாடல்கள் மித்ராவை சிறிது அமைதிப் படுத்தி,அவளை உறங்க வைத்தது.சுமார்4மணி நேரப் பயணம் எந்த விதப் பேச்சுமின்றி சென்றது.




மதிய உணவு நேரம் வந்ததுடன் ,ஜீவானந்தம் வழக்கமாக உணவுண்னும் ஓட்டலும் வந்தது.மதிய உணவை இங்கே முடித்து விட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும் என்று எண்ணி ஓட்டல் அருகே காரை நிறுத்தினார்.நிறுத்திவிட்டு மித்ராவைப் பார்த்தார்.




இன்னும் கவலை ரேகைகள் முகத்தில் தெரிய மித்ரா படுத்திருந்த விதம் அவரை மேலும் வேதனைக்குள்ளாக்கியது.கலங்கியக் கண்களைத் துடைத்து விட்டு ‘சப்பாட்டைப் பார்சல் வாங்கிக்கொள்ளலாம்.பாவம் தூங்கும் பிள்ளையை எழுப்புவானேன்’ என்று எண்ணி கார்க் கதவைச் சத்தமின்றி திறக்க எத்தனித்தார்.




அதற்குள் ஓடிக்கொண்டிருந்தக் கார் அசைவின்றி நின்றிருப்பதை உணர்ந்த மித்ரா மெதுவாகக் கண்களை திறந்து பார்த்தாள்.ஜீவா அங்கிள் காரை விட்டு இறங்குவதைப் அறிந்து, “என்ன அங்கிள் அதுக்குள்ளே கோவை வந்து விட்டதா” என்று கண்களைக் கசக்கிய வாரே கார் சீட்டை நிமிர்த்திக் கொண்டு கேட்டாள்.




கார்க் கதவில் கையை வைத்துக் கொண்டிருந்த ஜீவானந்தம் ,மித்ராவின் குரலில் நின்று அவள் பக்கம் திரும்பி “அங்…ம்..விழித்துவிட்டாயா மித்ரா மா?நல்லதா போச்சு..இனி சாப்பாடு பார்சல் வாங்க வேண்டி இருக்காது..இன்னும் கோவை வரவில்லையம்மா..”என்று புன்னகைச் செய்தார்..




மித்ராவும் மென்மையாகப் புன்னகை செய்துவிட்டு,குரலில் பழையபடியான எந்தவித ஸ்ருதியுமின்றி, “ ஓ..இப்போ எங்க இருக்கோம் அங்கிள் ..என்ன மணி ஆகிரது. “ என்றாள்.




அவளுக்குப் பதில் சொல்லும் விதமாக,“சேலம்தான் வந்துருக்கோம் மித்ரா மா..மணி2ஆகிவிட்டது..அந்தப் பக்கம் போனால் ஓட்டல் எதுவும் அவ்வளவாக நன்றாக இருக்காது.கோவைச் செல்ல குறைந்தது இன்னும் 3மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டி இருக்கும்..அதனால் இங்கேயே எதுவும் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம்..நீயும் என்னுடன் இறங்கி வா..இங்கே மதிய உணவு மிகவும் அருமையாக இருக்கும்..மித்ரா மா ..”என்றார் ஜீவானந்தம்..




எதையோ யோசித்தவாறு இருந்த மித்ராவின் நெற்றி சுருக்கம் அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதை அவள் வாய் விட்டு சொல்லுமுன்பே ஜீவானந்ததிற்கு உணர்த்தியது.அவளைப் பேசவிடாமல் ,ஜீவனந்தமே மேலும் தொடர்ந்தார் . “பசிக்கவில்லை என்று சொல்லி இந்த வயதான அங்கிளையும் பசியில் வாட விட்டு விடாதே மித்ரா மா” என்று கண்களை சிமிட்டினார்.




அவளும் புன்னகைத்தவரே “அங்கிள் அது..வந்து.. , நிஜமாகவே பசிக்கவில்லை அங்கிள் “ என்றாள் மித்ரா.




‘அவள் காலையும் சரியாகச் சாப்பிடவில்லை.இப்பொழுதும் சாப்பிடாவிட்டால்..என்னாவது..நான் அருகில் இருக்கும் போதே உணவில் அக்கறை இல்லை.இவளை இவள் விருப்பத்திற்கு விட்டால் ஆள் இன்னும் பாதி ஆகிவிடுவாள்..அவள் திட்டத்திற்கு சம்மதிப்பது..தெரிந்தே செய்ய கூடிய முட்டாள்தனம்.இது சரிப் பட்டு வராது..அவளிடம் தன் முடிவைச் சொல்லி எப்படியேனும் சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்று யோசிக்கலானார் ஜீவானந்தம்.




அவர் யோசிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா “அங்கிள் எதையும் யோசிக்காமல் நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வாங்க அங்கிள்.நான் இங்கே..காரிலே..இருக்கிறேன் “ என்றாள்.




அவர் விடுவதாக இல்லை.மித்ராவிடம் மிரட்டி உண்ண வைக்க அவள் குழந்தையுமில்லை. ‘நீ சாப்பிட்டாதான் நானும் சாப்பிடுவேன்’ என்று *ப்லாக்மைல் செய்வது அவளுக்குச் சிறிதும் பிடிக்காத ஒன்று .கண நேரத்தில் யோசித்து “இந்த வயதானவனுக்கு companyதரவாவது வரலாம் இல்லையா?தனியாக சாப்பிட என்றால் எனக்கு சாப்பிடவே தோன்றாது” என்று கவலையை காட்டும் புன்னகையுடன் கேட்டார் ஜீவானந்தம்.




‘ஆமாம் அவர் தனியாக எப்படி சாப்பிடுவார் என்பதை உணராமல் பேசி விட்டாளே.அவளுக்கும் தனியே சாப்பிடுவது என்றால்,உணவே இறங்காது.’என்று யோசித்தவாரே “ அச்சொ அங்கிள்..ஏன் இப்படி கெஞ்ச கேட்கிறீர்கள்.வா மித்ரா மா என்றால் வர மாட்டேனா.?வாங்க அங்கிள் சாப்பிட போகலாம் “ என்றாள் சற்றே அழுத்ததுடன்.




மித்ரா காரை விட்டு இறங்கியதைப் பார்க்கவும், ‘எப்படியும் தான் யோசித்த முடிவுக்கு அவளை சம்மதிக்க வைக்க முடியும்’ என்ற நம்பிக்கை வந்தவராய், ‘எப்படி பேசினால் அவள் சம்மதிக்க வாய்ப்பிருக்கு.எப்படி ஆரம்பிப்பது’ என்று யோசித்தவாரே அவளுடன் இணைந்து ஓட்டலை நோக்கி நடக்கலானார் ஜீவானந்தம்.




மித்ராவின் வீட்டு வழக்கப்படி உணவு உண்ணும் போது பேசுவதில்லை.அவளது அப்பா,ஜீவானந்ததின் பால்ய சினேகிதர்,சுந்தரம் அவர்களுக்கு,சாப்பிடும் போது பேசுவது அரவே பிடிக்காது.உணவிற்கு மரியாதை அளிக்கும் விதமாக,சிறிய வயதிலிருந்தே மித்ராவிற்கும் அதையே வழக்கப்படுத்தி வைத்திருந்தார் சுந்தரம்.அது தெரிந்ததால் ,ஜீவானந்தம் பேசாமல் அமைதியுடன் சாப்பிட ஆரம்பித்தார்.




மதிய உணவிற்குப் பிறகு,திரும்பவும் கார் engineஉயிர் பெற்று கோயம்பத்தூர் நோக்கி விரைந்தது.ஈரோடு கடந்து சென்ற காரை ,வழக்கமாகச் செல்லும் high way வழியில் செல்லாமல்,கிராமப்புறக் குறுகிய பாதை வழியில் திருப்பிச் செலுத்தினார் ஜீவானந்தம்.வழியெங்கும் தெரிந்த பசுமை,மனதிற்கு இதம் அளித்தது.




மித்ரா முன்பைவிட கொஞ்சம் புத்துணர்வு வந்தவளாகத் தெரிந்தாள்.உணவு கொடுத்த சக்தியா?இல்லை வழியில் தெரிந்த பசுமை அளித்த சக்தியா?என்பதுபோல் அவள் கண்கள் பளிச்சிட அவள் காரில் கண்ணாடி இறக்கி அமர்ந்திருந்த விதம் எண்ண வைத்தது.அவளைப் பார்த்துவிட்டு,எதிர் பார்த்தது நடந்ததில் திருப்தியுற்றவராக,போகும் வழியில் ஒரு சிறு ஓடை அருகே காரை நிறுத்தினார்.




கவனம் சிதறவிடாமல் ஆர்வமாக கார்டுன் பார்க்கும் குழந்தையைப் போல கார் நின்றதும் தெரியாமல் மித்ரா வெளில் பார்த்திருந்த விதம்,ஜீவானந்ததிற்கு மனதிற்கு இதமான ஒரு புன்னகை தந்தது.மெதுவாக “மித்ராமா…” என்று அழைத்தார் ஜீவானந்தம்.




அவர் அழைப்பை மித்ராவின் செவிகள் கவனித்தாலும் கண்கள் அவர்புரம் திரும்ப மறுத்தது.வெளியில் பார்த்த வண்ணம் “ம்ம்..சொல்லுங்கள் அங்கிள் ..”என்றாள் மித்ரா.




ஜீவானந்தம் சிரித்தவாறே “ என்னமா இடம் ரொம்பப் பிடிச்சிடுச்சா? “ என்று கேட்டார்.




மித்ராவும் உற்சாக புன்னகையுடன் திரும்பி “ஆமாம் அங்கிள்..மிகவும் அழகாக இருக்கு..இந்த இடம்..”என்று சொன்னவளின் புன்னகை ஜீவானந்ததின் கண்களை கண்ட கண நேரத்தில் நின்றது.




‘ஏன் இந்தப் பெண் நடந்ததையே அடிக்கடி நினைத்துக் கொள்கிறாள்.அதுவும் என்னைப் பார்த்ததும் அவள் புன்னகை மறைந்ததே!இதனால்தான் சில நாட்கள் முன்பு,தெரிந்தவர் யாரும் இல்லாத இடத்தில் தனக்கொரு வேலை பார்த்துத் தர முடியுமா அங்கிள் என்று கேட்டாளோ?இதோ,இப்போது அதற்கான பயணமும் ஆரம்பித்தே!ஒரு வேளை நான் அவளை பரிதாமாக பார்த்துவிட்டேனோ.?’என்று எண்ணி அவசரமாக அவர் பார்வையைத் திருப்பினார் ஜீவானந்தம்.




இருந்தும் அவர் மனம் அவளைத் தனியே ஏதோ ஒரு company –ல் விட்டுவிட்டுச் செல்ல அனுமதிப்பதாக இல்லை.அவள் மாறுதலையும் தடுமாற்றாதையும் கவனிக்காதவராக “ மித்ராமா..வா அந்த ஓடையில் கால் நனைத்துவிட்டு வரலாம்” என்றார்.




“போலாம் அங்கிள்.”என்று எந்த உணர்வும் இல்லாமல் மித்ரா காரைவிட்டு இறங்கி அவருடன் வருவதைப் பார்க்க ஜீவானந்ததின் மனம் வலித்தது.




தண்ணீர் என்றால் மித்ராவுக்கு மிகவும் பிடிக்கும்.தண்ணீரில் விளையாடுவதென்றால் அலாதி இன்பம் அவளுக்கு.தண்ணீரைக் கண்டால் அவளையும் அறியாமல் குழந்தையாய் மாறிவிடும் அவள் மனம் இன்று அவளது அப்பாவை நினைத்துக் கொண்டது.




ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று மறக்காமல் பீச் அழைத்துச் செல்வார் சுந்தரம்.அம்மா சாந்தியும் திட்டுவதுபோல “22வயதாகிறது இன்னமும் சின்னப் பிள்ளையைப் போல பாருங்களேன்” என்று சுந்தரத்திடம் முறையிடுவார்.இருந்தும் உள்ளுக்குள் மித்ராவை பார்த்து ரசித்துச் சிரித்த மித்ராவின் அம்மாவின் முகம் அவள் நினைவில் வர அவள் கண்கள் அவள் அனுமதியின்றி நனைந்தது.




ஓடையில் கால்களை நனைத்தவாறே அவள் எண்ண அலைகள் சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது.




மித்ராவின் கண்களை கண்ட ஜீவானந்தம் , ‘இதற்குமேலும் பேசாமல் இருப்பது சரி வராது’ என்று எண்ணிப் பேசலானார். “மித்ராமா இன்னும் எத்தனை நாட்கள் இப்படி நடந்ததை எண்ணி உன்னையே வருத்தி கொள்ளப் போகிறாய்” என்றார் சற்று வருத்தம் கலந்த கோபத்துடன்.




மித்ராவின் கண்களின் கண்ணீர் கோடுகள் கன்னத்தைக் கடந்தது. “ எப்படி அங்கிள் மறக்க?என்னால்தானே இப்படி நடந்தது.எப்படி மறக்க?”என்று மேலும் பேச எத்தனித்தவளை ஜீவானந்ததின் குரல் தடுத்தது.




“போதும் மித்ராமா…"

இப்படிச் சத்தமிட்டு அவர் பேசியதை அறியாத மித்ரா அதிர்ந்து ஜீவானந்ததை ஏறிட்டாள் .இன்னமும் கோபம் மறையாமல் அவளையே ஜீவானந்தம் நோக்கியவிதம் அவளை மேலும் வேதனைப் படுத்தியது.வார்த்தை வராமல் தடுமாறி “சொ..சொல்லுங்க அங்கிள்..”என்றாள் மித்ரா.




மித்ராவின் முகத்தில் அழுகை மறைந்து மிரட்சியைப் பார்த்த ஜீவானந்தம் சற்றே குரலைத் தளர்த்தி “என்னை மன்னித்துவிடு மித்ராமா..ஏதோ..ஏதோ ஒரு வேகத்தில் பேசிவிட்டேன்” வேதனையுற்றுப் பேசினார்.




மித்ரா முகத்தில் மட்டும் புன்னகைத் தெரிய “பரவாயில்லை அங்கிள்..நீங்க சொல்லுங்க..ஏதோ சொல்லவந்தீங்க..”என்று ஓடை நீரைக் காலால் வருடியவாறே கேட்டாள்.




“அது ஒன்றுமில்லை மித்ராமா..நான் உன்னிடம் ஒன்று கேட்பேன்.மறுக்காமல் செய்ய வேண்டும்.செய்வாயா மித்ராமா?”என்று தளர்ந்தக் குரலில் கேட்டார் ஜீவானந்தம்.




புன்னகை மாறாமல் “என்ன அங்கிள் பெரிய புதிராகவே இருக்கு.?என்னவென்று சொலுங்க அங்கிள்.உங்கள் வார்த்தையைக் கேட்காமல் வேறு யாருடைய வார்த்தையை இனி நான் கேட்க” என்றாள் மித்ரா.




அவள் வார்த்தைகளின் உள்ளர்த்தம் தெரிவித்த உண்மை வலித்தாலும்,ஜீவானந்தம் தொடர்ந்து பேசலானார். “மித்ராமா எனக்கு யாரோ ஒருத்தருடையcompany-ல் நீ வேலைக்குப் போவதில் விருப்பம் இல்லை.நீ வேலைக்குப் போக விருப்பம் என்றால் நம்முடைய companyவர்மா இன்ஃபோ டெக்-ல் இந்த branch-ல் சேர்ந்துக்கொள்ளம்மா.”என்றார் ஜீவானந்தம்.




“அங்கிள்,உங்களது பயம் எனக்குத் தெரிகிறது.நீங்கள் உங்களுடைய கோயம்பத்துர்branch-ஐ தானே சொல்கிறீர்கள்.?”என்று கேட்டாள்.




‘என்ன இவள் எதாவது காரணம் சொல்லி தன்னுடைய முடிவை மாற்றிவிடுவாளோ’ என்று அஞ்சி,அவசரமாக “ஆமாமா ..எனக்கு உன்னைத் தனியாக விட..”என்று பேச்சை ஜீவானந்தம் முடிப்பதற்குள் மித்ரா பேச ஆரம்பித்தாள். “ஏதாவது செய்துகொள்வேன் என்று பயமாக இருக்கிறதா அங்கிள் “ என்று கேட்டாள்.




‘கண்டுகொண்டாளே!’என்று ஜீவானந்தம் நினைக்கையிலே,அவள் தொடர்ந்து பேசலானாள்.




“பாருங்கள் அங்கிள்.நான் கோழையல்ல.பயப்படாதீர்கள்.நான் என்னைப் பார்த்துக்கொள்வேன்.அதோடு என்னைக் கோவை branch-ல் இருப்பவர்களுக்கும் தெரியும்.தெரிந்தவர் யாரையும் பார்த்துக்கொண்டே,அவர்களின் பரிதாப பார்வையின் நடுவே எனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை.அதனால்தானே நான் இந்த முடிவெடுத்தது.நீங்கள் வற்புறுத்தியதால்தான் கோவையில் வேலைக்கு விண்ணப்பித்தேன்.இல்லை என்றால் நான் பெங்களூர் செல்வதாகவே இருந்தேன்.நீங்கள்தான் மாதம் ஒருமுறை கோவை வருவீர்கள் இல்லையா?அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று மித்ரா சொல்லும்போதே ‘தனியே இருந்ததில்லையே ?எப்படி இருக்கப் போகிறோம்?’என்ற பயம் அவள் உள்ளத்தில் சத்தமிட்டு சிரித்தது.




“பெங்களூர் செல்வதைப் பற்றியெல்லாம் பேசாதே மித்ராமா.உன்னைக் கோவையில் விட்டுச் செல்லவே தெரிந்த இடம் என்ற போதும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது.அதை விடு .அது எப்படி கோவை branch-ல் இருப்பவர்களுக்கு உன்னைத் தெரியும்?சென்னைbranch-ல் நீ வேலைக்குச் சேரும் போது தேவி என்கிற பெயரில் தானே சேர்ந்தாய்.அதே பெயர்தானே officeபதிவேட்டிலும் இருக்கிறது.தேவி என்றுதானே இந்தக் கோவை branch-ல் இருக்கிறவர்களுக்குத் தெரியும்.நான் உன்னை மித்ரா என்ற பெயரில் வேலைக்குச் சேர்த்துவிடுக்கிறேன்.சான்றிதழ்களை என் மகன் கேட்டால் நான் சமாளித்துக்கொள்வேன்.இங்கே இருக்கும் யாரும் உன்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லையே? ” என்று யோசனையாய் கேட்டார் ஜீவானந்தம். ‘தேவி என்கிற பெயர்தான் பெரிய முட்டுக்கட்டை என்பதைப் போல.’




மித்ரா சென்னையில் வர்மா இன்ஃபோ டெக் –ல் வேலை செய்துகொண்டிருந்தாள்.அப்போதுதான்,அந்தச் சமயம்தான் எதிர்பாராத இந்தத் திருப்பங்கள் ,வேதனைகள் எல்லாம் உண்டானது.




மித்ராB.Techமுடித்திருந்தாள்.முதல் வகுப்பில் மதிப்பெண் பெற்று கல்லூரியின் சிறந்த மாணவி என்ற பரிசும் பெற்றிருந்தாள்.வீட்டில்தான் அவள் பெயர் மித்ரா.சிறு வயதிலிருந்தே யாரையும் எளிதில் புன்னகைத்து சினேகமாக்கிவிடும் தன் மகளைப் பார்த்து பூரித்த அவளது அம்மா சாந்தி , ‘சினேகிதி’ என்ற பொருள் கொண்ட ‘மித்ரா’ என்ற பெயரை ஆசையுடன் வைத்தார்கள்.




ஆனால் அவளது கல்லூரியிலும் ,அவளது சான்றிதழ்களிலும் அவள் பெயர் பொருத்தப்படி தேவி என்றே இருக்கும்.ஜீவானந்தம் மித்ராவின் தந்தை சுந்தரத்தின் நெருங்கிய நண்பர்.நெருங்கிய நண்பர் என்று இருந்தபோதும் குடும்ப நண்பர்களாக இருந்திருக்கவில்லை.




வர்மா இன்ஃபோ டெக் ,ஜீவானந்ததின் மகன் ரிஷி 5வருடத்திற்கு முன்பு ஆரம்பித்த சிறிய IT company.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உனக்காகவே
நான்"-ங்கிற அருமையான
அழகான லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
யோகேஷ்வரி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே சூப்பரா இருக்கு
மித்ராவின் பெற்றோருக்கு என்ன ஆச்சு?
மித்ராவால் விபத்து ஏதாவது நடந்து சுந்தரமும் சாந்தியும் இறந்து விட்டார்களா?
ஜீவானந்தத்தின் மகன் ரிஷி வர்மன் மித்ராதேவியை நேரில் பார்த்ததில்லையா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மித்ராக்கு என்னாச்சு???
பையனுக்குக்கு மித்ராவை தெரியாதா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top