இருளில் ஒரு ஒளியாய் -8

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -8


"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க லதா" கார் நெரிசல்கள் கடந்து சற்றே ஊருக்கு ஒதுக்குபுறமாக செல்ல தொடங்கவும் தேஜு என்னிடம் சொல்ல, "தேங்க்ஸ் " என்றேன் முணுமுணுப்பாக.

நான் பார்த்து வியந்து பொறாமை பட்ட பெண், என்னை அழகி என்றதை உணரும் நிலையில் அப்போது நான் இல்லை.

என் மனம் எல்லாம், 'இவர்கள் எனக்கு யார்? ' என்ற கேள்வியில் தான் உழன்று கொண்டிருந்தது.

சற்று நேரம் அமைதியாகவே கழிய, ஒரு பெரிய ஆலமரத்தடியில் காரை நிறுத்தி இறங்கினான் தீனு.

நானும் தேஜூவும் இறங்கினோம்.

அவன் ஏதோ கண்ஜாடையில் அவளிடம் சொல்ல, என்னை பார்த்து முறுவலித்தவள், காரினுள் ஏறி கொண்டு கிளம்பினாள்.

என் கைபிடித்து தீனா என்னை அழைத்து சென்றது அந்த மரத்தின் கீழே போட பட்டிருந்த சிறு பெஞ்சிற்கு.

"ஒக்காரு வாழக்கா "

"என்ன வாழக்கானு கூப்பிடாத ஒனிடா "

"எனக்கு அப்டி கூப்பிட தான் புடிச்சிருக்கு "

"பட், எனக்கு பிடிக்கல.. "

"பிடிக்கும்.. பொறுத்திருந்து பார் "

"ச்சா.. மொதல்ல நீங்க யாரு தீனா? உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்? எதுக்கு என்ன.. என்ன சுத்தி ஏதோ வலை பின்னரீங்க? "

"கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா? "

"ஆமா "

"நீ கேட்டியே மாமனா மச்சானானு "

"நீங்க.. இந்தர் மாமா பையனா? "

"உனக்கு அறிவு கொஞ்சம் ஜாஸ்தி தான்.. ஒத்துக்கறேன் வாழக்கா "

"என்னால நம்ப முடியல "

"என்னலையும் தான்.. இத்தன வருஷமா ஒட்டுறவே வேண்டாம்னு இருந்த குடும்பத்தோட நான் பேசிட்டு இருப்பேன்னு நானும் நினைக்கல.. "

"எப்படி? எப்படி இதுலாம்? அப்பா நான் சின்ன பொண்ணா இருக்கப்போ ஒரே தடவ அவங்க தங்கச்சி பத்தி சொல்லிருக்காங்க.. அப்பாக்கு அப்பறம் அம்மா ஒருதடவை.. சமீபத்துல உன் அத்தையும் மாமாவும் இறந்துட்டாங்கனு மட்டும் சொன்னாங்க.. ஆனா உங்கள பத்தி ஒரு நாள் கூட அம்மா சொன்னது இல்ல.. "
அதிர்ச்சி குறையாமல் நான் கேட்க

"தேவை இல்லைனு நெனச்சுருப்பாங்க வாழக்கா.எனக்கும் உங்க பேமிலி பத்தி அதிகமா தெரியாது. அப்பா அம்மா உனக்கே தெரியும். நாலு வருஷத்துக்கு முன்ன இறந்தது. அன்னிக்கு எங்க அம்மா உங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தான் கெளம்புனாங்க. ஆனா விதி.. அவங்கள கொண்டு போயிருச்சு. இது எனக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் தெரிய வந்தது. உங்க அட்ரஸ் கண்டுபிடிச்சு போற வழியில தான் உன்ன சந்திச்சேன். அப்போ நீ தான் அத்தை பொண்ணுன்னு தெரியாது. உங்க வீட்டுக்கு போன அப்பறம் தான் சின்ன வயசுலயே உங்க அப்பா தவறியது தெரிஞ்சுது. அங்க தான் உன் போட்டோ பாத்தேன்.. பாத்ததுமே முடிவு பண்ணிட்டேன்.உங்க அம்மாட்ட பேசி கன்வின்ஸ் பண்றப்போ தான் அவங்களுக்கு அட்டாக் வந்துச்சு. அவசரமா உங்க அம்மா போன்ல இருந்து மிஸ்டர். அகிலன்க்கு கால் பண்ணி சொன்னேன். அதே நேரம் தேஜுக்கும் கொஞ்சம் அடி. தேஜு.. தேஜு அப்பாவோட இரண்டாம் தாரத்தோட பொண்ணு தான் லதா.." அவன் விளக்க விளக்க, புதிர்கள் அவிழ்ந்து மகிழ்ச்சி என்னுள் குத்தாட்டம் போட்டது.

"காதல் வந்துருச்சு.. ஆசையில் ஓடி வந்தேன் "கல்யாண ராமன் கமல் டோனில் பாட வேண்டும் என்ற ஆசை என்னுள் வந்ததுமே எனக்கு பகீர் என்றது.

'காதல் வந்துச்ச்சா? சொல்லாம கொள்ளாமயா வரும்.? எந்த மலையாளத்து அம்மே ! இந்த குட்டிக்கு கொறச்சு புத்தி குடு..' மைண்ட் வாய்ஸ் என்னை சுழட்டி அடிக்க,

"விளக்கம் எல்லாம் போதுமா வாழக்கா? " என்றான் தீனா, புன்சிரிப்புடன்.

"இதன் மூலம் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்னவோ? " மூக்கை சுருக்கி நான் வினவ,

என் மூக்கை இருவிரல்களில் பிடித்தவன், "வாழக்காக்கு வாழ்க்கை தரலாம் என்பதே அடியேனின் ஆசை "என்க..

"அப்படியா? வாழைக்காவின் விருப்பம் அறியாமல் அடியேன் அடிவைத்தால் அடி கிடைக்கும் " அவன் போலவே நானும் பதில் சொல்ல,

அழகாக சிரித்து மீண்டும் என்னை மயக்கினான் மாயக்கண்ணன்.

நான் அவனில் லயிப்பதை கண்டுகொண்டவன், ஒருவிரல் நீட்டி பத்திரம் காட்ட, "ஒனிடா " என்று தெளிவாக முணுமுணுத்தேன்.

"ஜோக்ஸ் அபார்ட் பேபி..உன் முடிவு என்ன? "

"என்ன முடிவு? எனக்கு என் அம்மா முக்கியம் ஒனிடா.. அவங்க நிம்மதிக்காக சந்தோஷத்துக்காக என்ன செய்யவும் நான் தயார்.. கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்லைடு "

"என்ன கண்டிஷன்ஸ்? "

"மொத கண்டிஷன் அம்மா கூட தான் நான் எப்போவும் இருப்பேன்.. டே அண்ட் நைட் அவங்கள பிரியாம பாத்துக்கணும்..

செகண்ட் நான் காலேஜ் போற டைம் அம்மாக்கு துணையா ஒருத்தவங்க வீட்ல இருக்கனும்..

அடுத்தது.. நீ என்ன வாழக்கானு கூப்பிட கூடாது..

அப்பறம் நான் உன்ன ஒனிடானு மட்டும் தான் கூப்பிடுவேன்..

அப்றம்.. நான் என் இஷ்டப்படி இருப்பேன்.. பைனலா எனக்கு தோணறப்போலாம் பாடுவேன்.. நீ கேலி பண்ண கூடாது.. டீல்லா நோ டீல்லா "

"டீல் " என்றான் சீரியஸ் குரலில் தீனு.

"ரெக்கை கட்டி பறக்குதையா லது பேபி சைக்கிள்.. " மனதிற்குள் உண்மையில் றெக்கை கட்டி பறந்துகொண்டிருந்தேன்.

குறுநகையோடு ஆண்மகன் இந்த ஆயிழையை ஆள(ழ ) பார்க்கிறான் என்று அறியாமல்.

அன்று நாங்கள் திரும்பி சென்று மகிழ்ச்சியான இந்த விஷயம் பற்றி சொன்னதும் அம்மாவிற்கு அத்தனை ஆனந்தம்.

ஆனால் பாவம் அகி குடும்பத்தின் முகம் வாடியது என்னை வாட்டியது.

அம்மாவின் அண்ணன் குடும்பம் அவர்கள். அகிக்கு நான் என்று பேசிவிட்டு தீடிரென அம்மா, அப்பாவின் தங்கை மகனுக்கு என்னை திருமணம் செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது புரிந்தது.

ஆனால் அப்பா வழி சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க அம்மா எடுத்த இம்முடிவு சரியா என்று கேட்டால் என்னிடமும் பதில் இல்லை.

ஆனால் ஆசை கொண்ட மனம் இந்த திருமணத்தை விரும்புவதை என்னால் உணரமுடிந்தது.

மனமும் மூளையும் வெவ்வேறாக பிரிந்து நின்று போர் புரிய, பாழாய் போன கண்கள் மட்டும் அவனின் மாய புன்னகையில் மடி சாய்ந்து மதுரமாய் கொட்டமடித்தது.

ஒரே நேரத்தில் மாங்காவையும் பாகற்காயையும் தின்ற நிலை எனக்கு.

ஜோவிற்கு ஒரே கொண்டாட்டம். "அடி கள்ளி " என்று என்னை கலாய்க்க தொடங்கினான்.

மனம் தீடிரென பாட்டை விட்டு கவிதையில் குதித்து நீந்தியது.

"பாலைவனத்து கள்ளி நான். என்னை அள்ளி செல்லும் கள்வன் நீ.. அடடே ஆச்சரிய குறி.. " என் கவிதையில் நானே தொலைந்தேன்.

'பரவால லது பேபி.. சுமாரா இல்லாட்டியும் சூப்பரா இருக்கு உன் கவிதை.. '

வழக்கம் போல எனக்குள் டாம் அண்ட் ஜெர்ரி அரங்கேரியது.

ஆராய்ச்சி கண்ணோடு தீனுவை அளவெடுத்தேன்.

மொட்டை தலை.. 'மொட்டை தலையில் முட்டை போட்டால்.. முற்றி போகுமா காதல்.. ! ' கூடவே கவிதை வர்ணனைகளாக..

காந்த கண்கள் 'ஈயம் பூசிய கண் குளத்தில் ஓட்டை விழுந்த கருவிழிகள் !' லது நீ ஒரு சகலகலா வள்ளி.. என்னை நானே பாராட்டிக்கொண்டேன்.

அடுத்து கூர் நாசி ' வழுக்கு பாறை குகைக்கு வாய்த்தது இரு துவாரம்.. அதுவே அவன் அழகின் ஆரம் '

மாய புன்னகை பூசிய உதடுகள், ' சாயம் பூசா ஆரஞ்சு சுளைகள், மாயம் காட்டும் மந்திர இலைகள் '
யாரோ என் கவித்துவத்தை கலைத்தனர், என் முன் சொடக்கிட்டு.

நிமிர்ந்து பார்த்தேன்.

புதிய அறிமுகம்.. ஆனால் பழைய பழகிய முகம். என் முன் நின்றவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் 'ராகவன் ' என்று.

எனக்கு தூக்கி வாரி போட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top