இருளில் ஒரு ஒளியாய் -1

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -1

ஸ்கூட்டியைத் தள்ளிக்கொண்டே கதவை திறந்து சாலையை அடைந்தபோது, மழை லேசாக தூறல் போடத் தொடங்கியிருந்தது.

மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தைப் பார்த்தேன்.

மணி ஒன்பது.

ஏற்கனவே பத்து நிமிடம் தாமதமாக கிளம்பி இருந்தேன். இப்போது மழை வேறு.

மழை பெரிதாக வரும்முன் அலுவலகத்தை அடைந்து விடும் நோக்கத்தோடு, வண்டியை வேகமாக கிளப்பினேன்.

சிக்னல் என்னை சோதித்தது.

பின்னே என்னைப்போலவே அவசரகதியில் இன்னும் சிலபேர்.

என்முன்னே நின்ற ஸ்விப்ட்டில் 'எல் ' போர்டு ஒட்டியிருந்தது.

நான் ட்ராபிக்கில் நீந்தியபடி அந்த வண்டியை முந்திக்கொண்டு முன்சென்று நிற்க, பச்சை சிக்னல் விழுந்தது.

நான் வண்டியை கிளப்பி பத்தடி கூட செல்லவில்லை, பின்நின்ற அந்த 'எல்' போர்டு என் வண்டியில் மோத, சுதாரிக்க அவகாசம் இல்லாமல் கீழே சரிந்தேன் நான்.

அவசரமாக நான் எழுந்து நிற்பதற்குள், அந்த வண்டி பறந்துவிட்டது.

வண்டி எண்ணை நினைவில் பதித்துக் கொண்டேன்.

அன்று முழுவதுமே நாள் ரொம்பவும் மோசமாக அமைந்தது.

என் கோபம் எல்லாம் அந்த எல் போர்டு மீது பாய்ந்தது.

சரியாக ஏழு நாட்கள் கடந்திருக்கும்.

கொஞ்சம் கோபம் தணிந்து நான் பழையபடி அமைதியாகி இருந்தேன்.

எட்டாம் நாள் காலை.

அதே சிக்னல்.

என் முன்னே அதே எல் போர்டு வண்டி.

கோபம் மீண்டும் துளிர்விட தொடங்கியது..

இருந்தும் அலுவலகத்திற்குச் செல்ல நேரமாகிவிட்டதால், அதை ஒதுக்கி செல்ல தொடங்கினேன்.

ஸ்கூட்டியின் ரியர் வியூ கண்ணாடியில் அந்த கார் என்னைப் பின்தொடர்வது தெரிந்தது.

முகசுளிப்புடன், வண்டியை கொஞ்சம் வேகமாக விரட்டினேன்.

என்னை முந்திக்கொண்டு சென்றது கார்.

ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

ஆனால் ஆள் நடமாட்டம் சற்றே குறைவான அந்த திருப்பத்தில், அந்த கார் நின்றிருந்தது.

அதன் காரோட்டியோ என்னை மறித்து நிறுத்த முயற்சிக்க,

நிற்காமல் வேகமாக சென்றுவிட்டேன் நான்.

அலுவலகம் சென்றபின்பும் படபடப்புக் குறையவில்லை. எதற்காக அந்த வண்டி என்னை மறிக்கவேண்டும் என்ற கேள்வியே விஸ்வரூபமாக என்னுள்.

ஒருவேளை அன்று விழத்தட்டியதற்கு மன்னிப்புக் கோர நின்று இருப்பார்களோ?

என்ன ஏது என்று அறியாமல் பயந்து கோழைப் போல ஓடி வந்துவிட்டேன்?

அப்படி என்ன பயம்?

கண்களை இறுக மூடிக்கொண்டேன். நெஞ்சு படபடப்புக் கொஞ்சம் குறைவதுபோல தோன்றியது.

ஆசுகாசப்படுத்திக்கொண்டு வேலையில் இறங்கினேன்.

மனதிற்குப் பிடித்து செய்யும் வேலை, இந்த பேஷன் டிசைனிங் என்பதாலோ என்னவோ, கொஞ்ச நேரத்தில் எல்லாம், மனம் அதில் லயிக்க தொடங்கியது.

அதுவும் அன்று ஒரு பிரைடல் டிரஸ் டிசைனிங்.

சென்னையில் புகழ் பெற்ற ஒரு பொட்டிக்கில் தான் நான் டிசைனராக வேலை செய்வது.

நான் வேலை செய்வதாலோ என்னவோ அடிக்கடி என்னைப் பார்க்கவே அங்கே கொஞ்சம் கூட்டம் கூடும்.

சமீபத்தில் நான் வென்ற மிஸ். சென்னை அதற்கு ஒரு காரணம்.

அடுத்தது எனது கணவர்.

பிரபல இசை அமைப்பாளர்.

அவரது இசையில் நனைந்து உருகி என்னையே அவருக்குப் பரிசாக தந்தவள் நான்.

எத்தனையோ பேரும் புகழும் இருந்தாலும், என்னை என் கனவுகளை நேசிப்பவர் என்பதாலேயே இப்பொழுது இந்த கடையில் வேலை செய்கிறேன்.

பெரும்பாலும் ஸ்கார்ப்பை அணிந்து ஹெல்மெட் போடுவதால் என்னை பொதுவெளியில் சுலபமாக அடையாளம் காண முடியாது.

என் சுதந்திரத்திற்காக என்னவர் எனக்கு சொல்லிய வழி.

இன்று நான் வடிமைத்துக்கொண்டிருக்கும் ஆடையும் ஒரு பிரபலத்திற்காகவே.

எனவே இன்னும் கவனம் கூட்டி நான் அதில் ஈடுபட்டிருக்கும் போது, " எக்ஸ்கியூஸ் மீ லதா " என்ற அழைப்பு என்னை திகைக்க வைத்தது.

இது ராகவனின் குரல் அல்லவா?

என் கணவரின் பால்ய நண்பர்.
ஆனால் அவர் இறந்து ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்டதே.

அதிர்ச்சியோடு என்னை சாமாதானப்படுத்திக்கொண்டு நான் நிமிர்ந்து பார்க்க, சாட்சாத் ராகவன் தான்.

அவர் அருகில், அந்த எல் போர்டு காரோட்டி.

வீல் என்று கத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தேன்...

"எரும.. காலைலயும் என்ன கனவா? " என்று என் அம்மா என்னைக் காச்ச,

கண்ணைக் கசக்கிவிட்டுக்கொண்டேன்.

"அடச்சீ... கனவா...? நெசம் போலவே இருக்கே... ஆனாலும் லது பேபி... உனக்கு இம்புட்டு ஆச கூடாது.. இன்னும் படிப்பே முடியல... அதுக்குள்ள என்ன அலட்டலு.... எல்லாம் நைட் அந்த மியூசிக் டைரக்டர் தினா பாட்ட கேட்டது நால வந்தது... அவன் உனக்கு புருஷனா ...! நல்லா வருதுயா கனவு... அவன் தான் அந்த அக்ட்ரேஸ் தேஜு கூட சுத்தறானு பேப்பர்ல போடறானே... ஹம்ம்ம்ம்ம்.... "

பெருமூச்சு விட்டபடி நான் எழ, "அசமஞ்சம்... சீக்கிரம் கிளம்பிடி...வானம் வேற இருட்டிட்டு இருக்கு... " என்று துரத்தியது என் அம்மா ராதாவின் குரல்.

"அம்மோவ்.... பகல் கனவு பலிக்கும்ல... "என்று ப்ருஷை கையில் எடுத்துக்கொண்டே நான் வினவ...

"ஏது காலம்பற எட்டுமணிக்கு காணரதா...? போடி போ... உருபடற வழிய பாரு..."
கரண்டியோடு வந்து அம்மா அட்வைஸ் செய்ய தொடங்க,

சிட்டாக பறந்துவிட்டேன் நான்.

ஒருவாறாக கிளம்பி, நான் கேட் தாண்டி வண்டியை நகர்த்த, லேசாக தூறல் போட தொடங்கியது.

" அடியாத்தாடி.... மனம் ரெக்கை கட்டி பறக்குது சரிதானா... " பாடலை முணுமுணுத்துக்கொண்டே, நான் வண்டியில் பறக்க, என் வேகத்திற்குத் தடா போட்டது சிக்னல்.

என் முன்னே ஒரு எல் போர்டு ஒட்டிய ஸ்விப்ட் நின்றுக்கொண்டிருந்தது.

"அடிசக்கை... லதுக்குட்டி... உன் கனவுல வந்தமாறியே நடக்கே... இன்னிக்கு உனக்கு ஜமாய் தான் போ... "

மனதில் நினைத்துக்கொண்டே அந்த வண்டியின் ஜன்னல் உள்ளே பார்த்த நான் , திகைத்து விட்டேன்

ஓட்டுநர் இருக்கையில் இருந்தது தீனா... எனப்படும் தீனதயாளன்.

"ஆத்தாடி மனசு தான் ரெக்கை கட்டி பறக்குதே... " என்னை மீறி என் உதடுகள் முணுமுணுக்க...

"ஓய்... ஸ்கூட்டி பியூட்டி பாப்பா.. மான்நேர்ஸ் இல்லாம இப்படி தான் எட்டி பாப்பியா... "

நக்கலாக ஜன்னலை இறக்கியபடி கேட்டான் தீனா..

மன பரபரப்பில் "அய்ய்ய்.... தீனு சார்.. நீங்க மியூசிக் காம்போசர்னு நெனச்சேன்... பட் பேச்சுலையே எதுகை மோனை துள்ளி விளையாடுதே கவிஞரே... "

"அட... தமிழ் ஆசிரியை.. கண்டுபுடுச்சுட்டாங்க... போமா சிக்னல பாத்து... " தீனு சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

சிலர் அடையாளம் கண்டு அவன் வண்டியை சூழ, "பச்...இடியட் இட்ஸ் பிகாஸ் ஆப் யூ " என்றபடி ஜன்னலை மூடிவிட்டு, காரைக் கிளப்பினான் அந்த தீனா.

"ஆ....நான் இடியட்டா... நீ தான்.. ஸ்டுபிட் ஆப் தி நான்சென்ஸ் ஆப் தி இடியட் ஆப் தி இஞ்சி தின்ன கொரங்கு... "

வண்டியை நகர்த்தி கொண்டே சென்றவனுக்கு, என் உதட்டசைவு, நான் திட்டுவதை உணர்த்த..

கொஞ்சமே கொஞ்சம் கண்ணாடியை இறக்கியவன்..

"போடி வாயாடி வாழக்கா " என்றுவிட்டு பறந்தான்..

"யூ யூ... போடியா... நான் வாழக்காவா.. போடா ஓசி போன ஒனிடா தலையா...." தனியே வண்டியை நிறுத்திக்கொண்டு சிக்னல் விழுந்ததை கவனிக்காமல் காட்டுக்கத்தலாக நான் கத்த,

என் ஸ்கூட்டியை ஓரம் கட்டினார் டிராபிக் போலீஸ்..

முணுமுணுத்துக்கொண்டே ஐநூறு ருபாய் பைன் கட்டிவிட்டு, உள்ளே தீனாவிற்கு தீ அபிஷேகம் நடத்தினேன்.

காலேஜ் உள்ளே நான் சென்ற போது, மேலும் கடுப்பேற்றுவது போல, என் முன் வந்து நின்றான், ஜோசப்.

"என்னடா ஜோ ... ஏன் குறுக்க நிக்க? "

"போடி லது பேயே... நீ எப்போவும் லேட்டா வா... உன் பேட்சியா இருக்கற பாவத்துக்கு நானும் வெளிய நிக்கறேன்... "

"அப்படியா...? யாரா உன்ன அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட் ஆக்குனது? சொல்லு ஒருகை பாத்தரேன்...? "

"வேற யாரு..? நம்ம கோஹினூர் கிங் தான்.."

"அடேய்.. அடேய்... வைரராஜா கேட்டானா... வயிறு எரிவான் டா... "

"அத விடு லது... எப்படியும் இன்னிக்கு கிளாஸ் கட்., வாயேன் வெளிய போவோம்..."

"போடா... இந்த ஊர சுத்தி சுத்தி ஒரே போர்... வா பைக் ரெய்டு போலாம்... "

"ஹ்ம்ம்... லது... இன்னிக்கு ஏன்டி இவ்ளோ டென்ஷன்.? " வண்டியில் ஏறி கொண்டே ஜோ கேட்க,

"அத ஏன் டா கேக்க...? " என்று ஆரம்பித்துக் காலை கனவு முதல் சிக்னல் வரை நடந்தவை அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தேன்.

"தீனு... அடிப்பாவி, தீனு சார் கிட்டயா வம்பிழுத்த... பக்கி பக்கி... ஒரு ஆட்டோக்ராவ்ஹ் வாங்கறத விட்டுட்டு வாய்ப்பாத்துட்டு வந்து நிக்கிறியே...? "

"போடா போடா... தீனு னா என்ன பெரிய கொம்பா...? " என்றபடி நான் ஓட்டிக்கொண்டிருந்த வண்டியில் இருந்து ஒருகையைக் கொம்புபோல் வைத்து பாவ்லா காட்ட..

முன்னே வந்த காரில் மோதி விழுந்தோம் இருவரும்.

சடன் பிரேக்கிட்டு நின்ற காரில் இருந்து இறங்கினான் தீனு.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "இருளில்
ஒரு ஒளியாய்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சந்திரிகா கிருஷ்ணன் டியர்
 
Last edited:

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

வாழ்த்துக்கள் சந்திரிகா......

கனவு பலிக்க போகுது போலவே......
திரும்ப திரும்ப கிராஸ் பண்ணுறாங்க.......
பலிதா நல்லாவே இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top