இரட்டுறமொழிதல் :: அத்தியாயம் 2

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் 2

பிள்ளைகள் இருவரும் மலர்ந்த சிரிப்புடன், அலுவலகம் மற்றும் மருத்துவனை செல்ல தயாராக வீட்டினுள் செல்ல, சரண்யுசாயா, கணவனிடம் கேட்டாள் "என்னவோ சொல்ல வந்தீங்க, காலைல ஃபிரீயா-ன்னு கூட கேட்டிங்க? என்ன விஷயம் நரேன்?"

சின்னதாய் ஒரு பெருமூச்சுடன், "அதுவா, நம்ம தியா-க்கு ஒரு வரன் வந்தது., ஜாதகம் பத்துக்கு ஏழு பொருந்தி இருக்கு... பாக்கலாமா-ன்னு கேட்கத்தான் ..."

"ஓஹ்.., பையன் நல்ல டைப்பா?, படிச்சிருக்கானா?, பேமிலி எந்த மாதிரி?, இவ வேற படிப்பு படிப்புன்னு இருக்கா?, ஒரு வேலையும் தெரியாது...?".. என்று கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்த மனைவியை குறுக்கிட்டு...

"ஷ் ...ஷப்பா...., நிறுத்து....நீ பேசறது, எனக்..க்கு மூச்சு முட்டுதுடீ.... கொஞ்சம் என்னை பேசவிடு ..,அவங்க சைட்-ல, கல்யாணத்துக்கு அப்பறம் மேல படிக்கறது கூட ஓகே யாம், தியா-கிட்ட கேட்டேன்.. இப்போ வேண்டாம், நான் இன்னும் மென்டலா ப்ரிபேர் ஆகலை -னு சொல்றா..., ஒரு ஆறு மாசம் விட்டு பிடிக்கலாம்னு தோணுது.".

"ஏங்க ... எதாவது காதல்.. கீதல்..?", கொஞ்சம் பயத்தோடே இழுத்தாள் ...

"அப்பிடி ஏதாவது இருந்தா, முன்னாடியே சொல்லி இருப்பாளே?, இல்ல.. ஏதோ ஒரு சின்ன வயசு இன்ஃபாச்சுவேஷன் இருக்கு-ன்னா.., ஆனா பேசுனதே இல்லையாம் .இது லவ்வாப்பா -ன்னு என்னையே கேக்கறா.., என்ன சொல்ல?"

"ஆமா, உங்க பொண்ணுக்கு நீங்கதான் உசத்தி... என்கிட்டே எதையானும் சொல்றாளா?, கட்டிபுடிச்சி லவ் யூ மா தான்.. மத்தபடி டிஸ்கஷன்-ன்லாம் உங்களோடதான்..."

"ஏய்.. இது ஒரு பிரச்சனையா? நான் உன்கிட்ட எதையாவது ஒளிச்சு மறச்சிருக்கேனா? என்னோட சின்ன வயசுல, நான் சைட் அடிச்ச பொண்ணுலேர்ந்து இப்போ ஜொள்ளு விடற பிகர் வரைக்கும் எல்லாம்தானே சொல்றேன்?", பேச்சை திசை திருப்பினான் SNP.

" யாரு... உங்க ஊரு ஷார்ட் ஹாண்ட் கிளாஸ் பாட்டி[அந்த பெண் இவனைவிட இரண்டு வயது பெரியவள்..], அப்பறம் உங்க சோடா புட்டி செகரட்டரி [பவர் கிளாஸ் போட்டிருக்கா, சோ சோடா புட்டி...!!!], இவங்கதானே... போதும் உங்க புராணம்.. பொண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்கன்னா .. கிழவனுக்கு மலரும் நினைவுகள் வருது.... போங்க.... போய் வேலைய பாருங்க...", நொடித்தாள் சரண்...

என்ன பேசினால், சாயா வின் மூட் மாறும் என்பதை தெரியாதவனா நரேன் ? சிரித்துக்கொண்டே.. அவள் சொன்னதை செய்ய சென்றான்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அனைவரும் காலை சிற்றுண்டி முடித்து அவரவர் வேலைகளுக்கு செல்ல... சரண்யுசாயா, அவள் ஜூனியர் கல்பலதிகாவை அழைத்தாள். "ஹலோ மேம், வெரி குட் மார்னிங்..", வழக்கமான உற்சாகம் அவள் குரலில்... இதுதான் இந்த பெண்ணிடம் பிடித்த ஒரு விஷயம்.... சிரிக்க சிரிக்க பேசுவது ஒரு கலை என்றால், அகமும் முகமும் மலர, ஊக்கத்தை வார்த்தைகளில் தோய்த்தெடுத்து பேசுவதும் ஒரு கலைதானே?

இவளை மருமகளாக்கி கொள்ள சிறியதாய் ஒரு நப்பாசையுடன் நினைத்துக் கொண்டிருக்கிறாள் சரண்யு.. எங்கே? பெரியவளுக்கு முடித்தல்லவா சின்னவனான மகனுக்கு பார்க்க முடியும்? அதுவரை இப்பெண் காத்திருக்குமோ என்னவோ? யாருக்கு தெரியும்?. இத்தனையும் மனதுக்குள் நினைத்தபடி, "இன்னிக்கு கேஸ் ஹியரிங் இருக்கா கல்பா?"

"இல்ல மேம்.., நாளைக்கு ஒரு லேடி டிவோர்ஸ் கேஸ் ஃபைல் பண்ண வர்றேன்-ன்னு சொல்லி இருக்காங்க, டீடைல்ஸ் மெயில்-ல்ல வந்தது, வாங்கி வச்சிருக்கேன். அப்பறம் மன்டே ஒன்னு இருக்கு.."

"ஓகே அப்போ நீயே பாத்துப்ப இல்லையா? எதுக்கும் ஈவினிங் பையன் அந்த வழியா வரும்போது, அங்க அனுப்பறேன், அவன்கிட்ட அந்த லேடி டீடைல்ஸ் & மன்டே கேஸ் பைலை கொடுத்து அனுப்பிடு ".. என்று முடித்தாள் .. இதுதான் சரண்யு.. அவள் பார்வையில் எதுவும் தப்பாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

நகரின் பிரபல குழந்தைகள் மருத்துவ மனை... நியோ-நேட்டல் பிரிவு.. தியா, பிறந்து இரு நாட்களே ஆன ஒரு சிசுவை பரிசோதித்துக் கொண்டு இருந்தாள். அருகில் இருந்த செவிலியிடம்,

"வைட்டல்ஸ் நார்மல்தானே?", என்று கேட்க,

நர்ஸ், "எஸ் மேம்",

"பீடிங்?"

"நார்மல்"

அந்த சிசுவின் தோலை சிறிது அமுக்கி பார்த்துவிட்டு," ஜான்டீஸ் செக் பண்ணிடுங்க.. ப்ரீ -மெச்சூர் பேபி இல்லையா?, ஒன் ஆர் டூ டஸ் இன்குபேட்டர்-ல irukka பண்ண வேண்டி இருக்கும்.. நான் சீஃப் கிட்ட பேசிட்டு சொல்றேன்... "

"எஸ் டாக்டர் "

"போர்செப்ஸ் இஞ்சுரிஸ்? “ [ரெண்டு ஸ்பூன்களை சேர்த்து இடுக்கி மாதிரி இருக்கும் , அதான் போர்செப்ஸ், டெலிவரியின் போது குழந்தை தலை தெரிஞ்சும் வெளியே வர கஷ்டப்பட்டா, இதை உபயோகிச்சு குழந்தை தலையை கொஞ்சமா பிரஷர் கொடுத்து பிடிச்சிக்கிட்டு வெளிய எடுக்க / அதுவா நர்மலா வெளில வர டாக்டர்ஸ் உதவுவாங்க..]

"நோ டாக்டர்"

மெதுவாய் அக்குழந்தையின் தலையை வருடிவிட்டு,
"எல்லாம் நார்மலா இருக்கும்மா, உங்க பேபிக்கு... ஒரு ரெண்டு, மூணு நாள் இங்க இருந்து கம்ப்ளீட் செக்கப் முடிச்சிட்டு போங்க.. சரியா?", என்றவளை பார்த்து தலையசைத்து ஸ்நேகமாய் சிரித்தாள், அந்த குழந்தையின் தாய்...

அங்கிருந்த மருத்துவரின் அறையில் தொலைபேசி அலற, [அங்கு மருத்துவர்கள் நோயாளியை பார்க்கும்போது அலைபேசி வைத்திருக்க அனுமதி இல்லை], நர்ஸை பார்த்து விழி & தலையசைத்தாள், "யாரென்று கேள், விபரம் தெரிந்து கொள்" என்பதாய் . மண்டையை உருட்டி புரிந்தாய் காண்பித்து, உள்ளே சென்றார் அந்த செவிலி...

இவள் தொடர்ந்து அக்குழந்தையின் தாயிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"எக்ஸ்கியூஸ் மீ, மேம்.., சீஃப் லைன்-ல இருக்கார், அர்ஜென்ட்", என நர்ஸ் உரைக்க்க .

அப்படி என்ன விஷயமா இருக்கும்? யோசித்துக்கொண்டே உள்ளே சென்று ரிஸீவரை காதுக்கு பொருத்தினாள். "எஸ் டாக்டர்?",

"அதிதி, கொஞ்சம் என்னோட கன்சல்டிங் ரூம்-க்கு வாங்க, ஸ்டாட் [ stat - உடனே ]", என்று அழைப்பை துண்டித்தார்...

விஷயத்தை அங்கிருந்த ஹெட்-நர்ஸிடம் கூறி, பீடியாட்ரிசியன் மருத்துவர் ஒருவரை இங்கிருக்குமாய் பணித்து, அந்த ஹாஸ்பிடலின் தலைமை மருத்துவரை காண விரைந்தாள்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாஸ்கர் ஆதித்யா தீவிர தேடலில் இருந்தான். ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையின் வெளி சுற்று சுவர், மற்றும் உள் வடிவமைப்பிற்கென பிரத்யேகமாக இவர்கள் டிசைன் செய்த தடுப்புக்கம்பிகள் வேண்டும் என வேண்டியிருந்ததால்... அவர்களின் லோகோ-வான பூவிதழ்கள் விரிவதைபோல் வடிவமைத்தான்.. ஒரு இதழுக்கும் அடுத்த இதழுக்குமான இடைவெளியை, கோல்டன் ரேஷியோ கொண்டு நிரப்ப எண்ணி இருந்தான். அந்நொடி வரை அவன் நினைவில் இருந்த படைப்பின் ஃபார்முலா, கடவுளின் கோல்டன் ரேஷியோ, மாய எண்ணான, PHI [ PI எனப்படும் 22/7 'ப்பை' அல்ல.. இது ஃபி Phi ] 1.61 வரை நினைவில் இருந்தது... அதன் பிறகு 8 அல்லது 9 என்பதில் பெருத்த சந்தேகம்.. எதற்கு இருக்கிறது கூகுள்?, phi டைப் செய்து முடிப்பதுற்குள்ளாக 1.6180, விடையை கக்கி இருந்தது.

"ய்யா .. உடனே அவனது த்ரீ டைமென்ஷன் அனிமேட்டரில் அதை ஏற்றி, அவனது டிசைனை பூர்த்தி செய்ய கணினியின் மென்பொருளை பணித்தான்

செல் அழைக்க... "ஸ்வீட்-டீ", திரையில் தெரிந்தது. "ஹாய் ஸ்வீட்டீ..சொல்லு...”

“டேய், வாய் நிறைய அம்மா-ன்னு கூப்பிடேன்டா?”, வழக்கம் போல அலுத்துக் கொண்டாள், மறுமுனையில் இருந்த அம்மா சரண்யுசாயா. .. [ஏண்டா - அம்மாவுக்கா ஸ்வீட்-டீ-னு நிக் நேம்? அப்பா நரேன் கேட்டதுக்கு, “மாம் ச்சோ ஸ்வீட், அவங்க சாயா, சோ ஸ்வீட்-டீ” , என்று விளக்க உரை படிக்க... நரேன் தலையில் அடித்துக்கொண்டது கிளை கதை...]

”மாம், என்ன என்னால ஏதாவது வேலையாகணுமா, இல்லன்னா போன் பண்ண மாட்டியே?", சரியாய் பாயிண்டை பிடித்தான்..

"சமத்து டா, நீ.. வர்ற வழில, நம்ம ஆஃபீஸ் போய், ஒரு பைலை வாங்கிட்டு வந்துட்றியா?, வேற ஜூனியர் யாரும் இல்லடா... எல்லாருக்கும் வேலைய கொடுத்து கோர்ட் கேஸுன்னு அனுப்பிட்டேன்... “

" மீ.. பொய் சொல்ல கூடாது.. ஊர் ஊரா எவன்லாம் தப்பு பண்றான், எந்த அரசியல்வாதி எதுல ஊழல் பண்றான்-ன்னு தேடி தேடி கேஸ் போட்டு, ஜூனியர்ஸ்-ஸை சுத்த வைக்கறீங்க..."

"டேய்... சரி சரி.. மொக்கை போடாத...கல்பா ஆறு மணி வரை இருப்பா... போய் வாங்கிட்டு வந்துடுறா”

"மாதாஜீ .. எனக்கு அந்த பொண்ணு ...." நம்பரை அனுப்புங்க என்று முடிப்பதற்குள், சாயா குறுக்கிட்டு...

"டேய் நேத்துக்கூட ஒரு நியூஸ் ல வந்தாளேடா? மூணாவது வரிசைல ஏழாவதா உக்கார்ந்து இருந்தா... " என்று கூற,

கடுப்பானவன்..."ஆத்தா.. சாயா ஆத்தா..., காண்டாக்ட் நம்பரை ஷேர் பண்ணி வுடு... அது யாரு கல்பா வா பீப்பாவா?, அவ கால்-ல வுழுந்தாவது அந்த இத்துப்போன பைலை வாங்கி வர்றேன்.. இப்போ என் தொழிலை கவனிக்க வுடு ஆத்தா...", கணினியை பார்த்தான்... அது வேலை ஆரம்பமாகிவிட்டது என்பதை குறிக்கும் , "ரெண்டெரிங் ஸ்டார்ட்டட் ", என மொழிந்து இவனை குளிர்வித்தது...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

SNP – அலுவலகம்

“இப்ப அந்த ஃபாக்டரி நமக்கு தேவையா?”, கிண்டி கிளையின், எக்சிக்யூடிவ் டைரக்டரிடம் யோசனையுடன் இந்த கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தார்

“சார், அந்த ஃபாக்டரி நமக்கு வேண்டாம்., ஆனா அந்த இடம், SIPCOT – ல மெயினான இடத்துல இருக்கு., ட்ரான்ஸ்போர்டிங்க் ஈசி”, பதிலுரைத்தார் E.D., பொறுப்பான மனிதர். அவரை நம்பி எது வேண்டுமானாலும் செய்யலாம்.

“எல்லாம் சரி, அந்த ஓனர், அவர் கம்பெனி எம்ப்ளாயீஸ் யாரையும் குறைஞ்சது ஒரு வருஷமாவது வொர்க் விட்டு தூக்ககூடாது-ன்னு சொல்றார். அதுவரைக்கும் என்ன மேன் பண்றது?”

“இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்காங்களோ, அதையே பண்ணட்டும். யாருக்கெல்லாம், நம்ம யூனிட்-ல, வேலை அப்படி இல்லன்னா ட்ரைனிங்க் கொடுக்க முடியுமோ, அதை செய்வோம். இருக்கிற மெட்டீரியலும் காலியாகும்.. ஏற்கனவே இந்த பார்ட்டி எடுத்திருக்கற ஆர்டர்களும் முடிச்சா மாதிரி இருக்கும்.”

“வெல்.. தெரியாத ஃபீல்ட்-ல அடி எடுத்து வைக்கிறது, சரியா படலை.. இடம் வொர்த்-னு சொல்றதால ஓகே, ப்ரொசீட்.”, முடித்து, வேறு அலுவலக விஷயங்கள் பேச ஆரம்பித்தனர்

மொழிவோம்...


பின் குறிப்பு. : இந்த அத்தியாயத்துல வர்ற, கடவுளின் கோல்டன் ரேஷியோ பற்றி அறிந்து கொள்ள..Golden ratio - Wikipedia, என பதிவிட்டு.... அமுக்கவும்.
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹலோ மக்களே,

முதல் அத்தியாயத்துக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கும், கமெண்ட்ஸ்-க்கும் நன்றிகள் ... தொடர்ந்து உங்க ஆதரவை எதிர்நோக்கி, அடுத்த பதிவு...

படிச்சா - லைக் , பிடிச்சா - கமெண்ட்..

ஈவினிங் பாக்கலாம்...
 

Suvitha

Well-Known Member
எந்த ஒரு பதவியில் இருந்தாலும் தன்னோட பொண்ணுக்கு love affair இருக்குமோ என்று எண்ணும் போது கொஞ்சம் பதட்டம் வரத்தான் செய்கிறது அம்மாக்களுக்கு..
அதற்கு சாயாவும் விதிவிலக்கல்ல..

office ல் தன்னோட ஜூனியரை யே வீட்டுக்கு தன்னோட assistant ஆக கொண்டுவர நல்லா தில்லாலங்கடி ஐடியா போடுறா சாயா..

Nice going Aathima...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top