இரக்கம் காட்டினால் ஏமாற்றுவார்களா

Advertisement

I R Caroline

Well-Known Member
என் தோழி சொன்னது,

கொரானா நேரத்தில் நான்கு மாதங்கள் கழித்து, ஜூன் மாதம் கடை திறந்திருக்கிறாள், அப்போது மாலை நேரம் பெண்மணி ஒருவர் கடைக்கு வர, அவர் தோழியைப் பார்த்ததும் மறைந்து கொள்ள, அவள் கணவர் அவரைப் பார்த்ததும் பணம் கொடுத்திருக்கார்.

தோழி அவரை திரும்ப பார்க்க, அவளைப் பார்த்ததும் திரும்பவும் மறைந்து கொள்ள, அவளுக்கு அவரை அடிக்கடி பார்த்த ஞாபகம், ரொம்ப நேரம் யோசித்தும், அவரை அவளுக்கு ஞாபகம் வரலை, ஏன் என்னைப் பார்த்ததும் ஒளிந்து கொண்டார் என நாள் முழுக்க யோசித்திருக்கா,

அவள் யோசித்தது வீண் போகாம, காலை பால் காய்க்கும் போது, அவர் பால் விற்பவர் என்று ஞாபகம் வந்துவிட்டது, பால் விக்கிறார் பிள்ளைக இருக்காங்க, இவர் ஏன் பிச்சை எடுக்கார் என திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டா,

அவ கணவகிட்ட எத்தனை நாளா வரார் என கேட்க, கடை திறந்ததிலிருந்து வரார்னு சொல்ல , கொரானா நேரம் அதனால் பிரச்சினை இருக்கும் என்று நினைத்திருக்கா,

அன்று மாலை அவர் திரும்ப வர, அவரிடம் ஏன் இப்படி வரீங்க, உங்க பால் வியாபாரம் என்ன ஆச்சு, பிள்ளைக எங்கனு விசாரிச்சிருக்கா, மாடுகள் இப்ப இல்லை, பொண்ணக் கட்டிக் கொடுத்தாச்சு, பையன் இங்கதான் இருக்கான், ஆனா வீட்ல சேர்க்கலைனு சொல்ல,

உங்களை சின்ன வயசுலருந்து பார்க்கேன், நீங்க இப்படி கடை கடையா வரது பார்க்க கஷ்டமா இருக்கு, ஏதாவது வேலை செய்ங்கன்னு சொல்லியிருக்கா, அவரும் சரி என்று சொல்லிச் செல்ல, ஆனாலும் அவளுக்கு சந்தேகம், இவர் சொல்வது உண்மையானு... அவர் தினமும் வர, தோழியும் ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்திருக்கா.

ஒரு நாள் கடைக்கு வந்தப்ப, அவரை புகைப்படம் எடுத்துட்டு, அதை இன்னொரு தோழிக்கு அனுப்பி, இவர் உனக்கு தெரிந்தவரானு கேட்க, அவர் சொன்னதெல்லாம் உண்மையானு கேட்டிருக்கா,

ஐயோ அவங்க சொல்றது எல்லாம் பொய், பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க நல்லா கவனிக்காங்க, இவங்க சொந்தமெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் வேலை பார்க்காங்க, இவங்க வேலை செய்ய சோம்பறிதனம் பட்டு, இந்த மாதிரி செய்றாங்க,

அவங்க தம்பி பொஞ்சாதி காய்கறி கடைல வேலை பார்க்காங்க, தங்கச்சி வீட்டு வேலை பார்க்காங்க, அவங்க அண்ணி உன் அக்கா பிள்ளைகளை பார்த்துகிறாங்க என்றதும் அவளுக்கு ஷாக்.

தோழி அக்கா பிள்ளைகளை பார்த்துக்கற, அந்த அக்காவிடம் கேட்க, "அவர் இப்படி போகாத, வேலை செஞ்சு சாப்பிடுனு சொல்லியும் கேட்கலை, நாங்க பல இடத்தில் வேலை வாங்கி கொடுத்தாலும், எங்கயும் வேலைக்கு போக மாட்டேங்குறா, அவ தம்பி, அண்ணன், பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சா என்ன செய்வாங்கனு சொல்லவும் பயமா இருக்குனு" சொல்ல,

மறுநாள் கடைக்கு அவர் வந்தது, அவங்க உறவுகள் பெயரைச் சொல்லி, யார் இவங்கெல்லாம் ஏன் இப்படி பொய் சொல்றீங்கனு தோழி கேட்க, எனக்கு இவங்க யாரையும் தெரியாதுனு சொல்லியிருக்காங்க பார்க்கலாம், அவளுக்கு கோபம் வந்தாலும் திட்டாமல், நாமதான் இரக்கம் காட்டி ஏமாந்துட்டோம்னு அமைதியாகிட்டேன் என்றாள்.

இரக்கம், உதவினு செய்தா ஏமாத்துறாங்க...
 

Joher

Well-Known Member
நிறைய பேர் இருக்காங்க கரோ......
வயசானவங்க வேலைக்கு போகமுடியாதவங்க ஓகே........
மற்றபடி நாம தான் பார்த்து கவனமா இருந்துக்கணும்.......
 

I R Caroline

Well-Known Member
நிறைய பேர் இருக்காங்க கரோ......
வயசானவங்க வேலைக்கு போகமுடியாதவங்க ஓகே........
மற்றபடி நாம தான் பார்த்து கவனமா இருந்துக்கணும்.......

அப்படித்தான் போல ஜோ... நாமதான் கவனமா இருக்க வேண்டி இருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top