இதழ் திறவாய்!! - குட்டி டீசர்

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
Intro.png

என்ன டா இது! ரெண்டு ஹீரோ ஒரு ஹீரோயின் னு யோசிக்கிறீங்களா!! அப்படியெல்லாம் இல்லை பா.. இதோ டீசர் படிங்க புரியும்..ப்ரனிஷா, “இன்னும் கொஞ்ச நேரத்தில் அபி செல்லம் தூங்க போறாளாம்”

மறுப்பாக தலை அசைத்த குழந்தை அபிசாரா, “அபி விளாடுவா(விளையாடுவாள்)

“அபி செல்லம் அம்மாவோட தங்க பாப்பா தானே! அம்மா சொன்னால் கேட்பாளே”

“ம்”

“அப்போ தூங்கலாமா?”

“தூங்கி வேணா”

“சமத்து பாப்பா தானே நீ.. அங்க பாரு ட்ரேனில் எல்லோரும் தூங்கிட்டு இருக்காங்க.. அம்மாவுக்கும் தூக்கம் தூக்கமா வருது.. அம்மா தூங்கி பாட்டு பாடுவேனாம் அபி குட்டிமா சமத்தா தூங்குவாளாம்.. தூங்கி எழும்போது நாம எங்க இருப்போம்?”

“தின்னவேலி(திருநெல்வேலி)

“ஹ்ம்ம்.. கரெக்ட்.. இப்போ அம்மா தூங்கி பாட்டு பாடட்டுமா?”

“ம்”

அடுத்த நாள் காலையில் அனைவரும் இறங்கிய பின் நிதானமாக உறங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கியவள் தோளில் ஒரு பையும் கையில் பெரிய பெட்டியுமாக இறங்கினாள். முதல் முறையாக வந்திருக்கும் ஊரில் தெரியாத முகங்களின் நடுவே நின்ற போது ஒரு நொடி அவளது மனம் கலக்கம் கொண்டது ஆனால் அடுத்த நொடியே கலக்கத்தை விரட்டி நிமிர்ந்து நின்றாள். இது தான் ப்ரனிஷா, இன்னல்கள் பல சந்தித்தாலும் துவண்டு போகாமல் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிவும் நம்பிக்கையும் அவளிடம் நிறைந்திருந்தது.

--------------------------------------------------------------------------------------------------------

“அம்மா உன்னிடம் பேசினாங்களா?”

சில நொடிகள் மௌனத்தில் கழிய பெருமூச்சொன்றை வெளியிட்ட ப்ரனேஷ், “அம் மரீட் டு மை ப்ரோஃபஷன்”

சர்வேஷ், “மருத்துவர்கள் கல்யாணம் செய்து கொள்வது இல்லையா? உன் அப்பாவே ஒரு மருத்துவர் தானே”

“நீ பதில் கேட்ட, நான் சொல்லிட்டேன்.. இப்பொழுது உன் முறை”

இதற்கு மேல் அவனிடமிருந்து பதில் வராது என்பதை அறிந்த சர்வேஷ் பெருமூச்சொன்றை வெளியிட்டபடி, “என் மனம் கவர்ந்த எந்த பெண்ணையும் இதுவரை சந்திக்கவில்லை டா”

“உன்னிடம் யாரும் காதல் சொல்லவில்லையா?”

“காதல் என்று யாரும் சொன்னதில்லை ஆனால் ஒரு சிலர் என்னை கவர முயற்சி செய்தனர்”

“செய்தனரா? செய்கின்றனரா?”

“அப்படியும் சொல்லலாம்”

ப்ரனேஷ் புன்னகையுடன், “நீ என்ன செய்வாய்?”

“ஒரு சில பேச்சோடு நிறுத்திக் கொண்டால் கண்டுக்காமல் விட்டுவிடுவேன்.. அவர்களும் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டு விடுவார்கள்.. பேச்சோடு நிற்கவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன்”

“சூப்பர்”

“பின்ன பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியரிடமே ஒழுக்கம் இல்லை என்றால்!”

“நீ எப்போ டா இவ்வளவு நல்லவனாகினாய்?”

“விடு விடு.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா”லண்டனில் தன் வீட்டு மெத்தையில் படுத்த ப்ரனேஷ், ‘எப்படி என்னை விட்டு செல்ல மனம் வந்ததடி?’ என்றபடி கண்களை மூடினான். மூடிய விழிகளுக்குள் அவன் மனம் கவர்ந்த நங்கை புன்னகையுடன் அழகு தேவதையாக வந்து நின்றாள்.

--------------------------------------------------------------------------------------------------------


தனி மனிஷியாக சுமுதாயத்துடன் போராடி வாழ்வில் நிமிர்ந்து நிற்கும் இளம் தாயான ப்ரனிஷா பற்றியும் ஏழு ஆண்டுகள் கழித்து காதலியை தேடும் ப்ரனேஷின் காதலை பற்றியும் கூறும் கதை தான் ‘இதழ் திறவாய்’

இனி தன் வாழ்வில் ஒரு ஆணிற்கு இடமில்லை என்று உறுதியுடன் இருக்கும் ப்ரனிஷா சர்வேஷின் பள்ளியில் நேர்முக தேர்விற்கு செல்கிறாள். சரியான சான்றிதழ்கள் இன்றி வந்தவள் மீது சர்வேஷ் அவநம்பிக்கை கொள்ள, அவன் தான் சர்வேஷ் என்று தெரியாமல் இவளும் எகுற.. என்று இருவரின் முதல் சந்திப்பே மோதல் தான்.. அதன் பின் இருவரின் உறவும் எப்படி செல்கிறது????

மனம் ஒன்றி காதலை சொல்லிக்கொள்ளும் முன் விதியின் சதியால் நண்பனின் திருமணத்தில் மணப்பெண்ணாக தன் காதலியை பார்த்து மனம் உடைந்து நாட்டை விட்டே செல்கிற பிரனேஷ் ஏழு ஆண்டுகள் கழித்து தனது காதலிக்கு நண்பனுடன் திருமணம் நடக்கவில்லை என்பதை அறிந்து காதலியை தேடி தாயகம் திரும்புகிறான். தாய் நாட்டிற்கு வந்தவன் காதலியை கண்டு பிடித்தானா? கண்டு பிடிக்கும் பட்சத்தில் அவள் அவனது காதலியாகவே இருப்பாளா அல்லது திருமணமானவளாக இருப்பாளா? அவனது ஏழு ஆண்டு தவத்திற்கு வரம் கிடைக்குமா??????????
இப்போ புரியுதா! ஏன் இன்னொரு ஹீரோயின் போட்டோ போடலை னு.. ப்ரனேஷின் காதலி யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
#4
:D :p :D
உங்களுடைய "இதழ்
திறவாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கோமதிஅருண் டியர்
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#9
:D :p :D
உங்களுடைய "இதழ்
திறவாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கோமதிஅருண் டியர்
மிக்க நன்றி சிஸ் :)
-கோம்ஸ்.
 
Advertisement

New Episodes