இதயம் இடம் மாறியதே - 5

Advertisement

Indira75

Active Member
சென்னை. புறநகர் பகுதியில் இருந்த கலை மற்றும் பொறியியல் கல்லூரி. நல்ல infrastructure உடன் சுற்றிலும் மரங்களுடன் தூய்மையாக பராமரிக்கபட்டு ப்ரம்மாண்டமாக காட்சி அளித்தது. சிட்டுக்குருவி களாய் வண்ண வண்ண உடைகளில் மாணவ மாணவிகள் சலசலத்துக் கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகம் உற்சாகம் மட்டுமே.
இளமை சாரல் அங்கு வீசிக்கொண்டிருந்தது.

கல்லூரியின் ஹாஸ்டல். மாணவிகள் கல்லூரிக்கு செல்ல பரபரப்பாய் தயாராய்க்
கொண்டு இருந்தனர்.
ஏய் மொழி சீக்கிரம் வாடி, போயி சாப்பிட்டு கிளம்பனும். கிளாஸ் க்கு time ஆச்சு என்றவள் தாமரை.
நம்ம ஹீரோயின் தேன்மொழி ன் அத்தை பூங்கொடியின் மகள். இருவரும் பள்ளி படிப்பை முடித்ததும் ஒன்றாகவே கல்லாரியில் சேர்ந்திருந்தனர்.பொறியியல் மூன்றாம் ஆண்டில் இருந்தனர்.
ஏய் இருடி, என்றவாறு தன் சுடிதார் ன் துப்பட்டா வை சரி செய்தவாறு திரும்பியவள்
மஞ்சளும் சந்தனமும் கலந்த நிற த்தில் அளவான உயரத்தில் அதற்கேற்ற உடலமைப்பில் அமைதியான அழகோடு இருந்தாள்.அவள் முகத்தில் இருந்த அந்த கண்கள் தான் அந்த முகத்திற்கே அழகு என்பது போல இருந்தது. அந்த கண்களை மூடிய இமைகள் குடை போல கவிழ்ந்தது. நீண்டு நெடிய இடையை தாண்டி அருவியாய் விழுந்த கூந்தலை அழகான பின்னலாக மாற்றியிருந்தாள். கல்லூரியில் அவள் கூந்தலுக்கென்றே fans இருக்கிறார்கள்.
இவ்வளவு அழகையும் அவள் உணர்ந்திருந்தாளா என்று கேட்டாள் தெரியாது. அதை என்றுமே அவள் வெளிப்படுத்தியதே இல்லை. யாரேனும் ஏதாவது புகழ்ந்தால் ஒரு சிரிப்போடு கடந்து விடுவாள்.
ஆனால் மொழிக்கு தன் நீண்ட கூந்தலை பராமரிக்க சிரமமாக இருப்பதால் அதை இடை வரை வெட்டிக் கொள்ள ஆசை தான். ஆனால் அதை செய்தால் அவளின் தாயாரிடம் தப்பிக்க முடியாது என்ற காரணத்தால் மட்டுமே அதை அப்படியே விட்டிருந்தாள்.
சென்னை கல்லூரியில் தான் சேருவேன் என்று மொழி அடம் பிடித்து சீட் வாங்கியபோது
அனுப்புவதற்கு முன் தமிழரசி போட்ட கண்டிஷன்களில் சில முடியை வெட்டக்கூடாது, வாரம் ஒருமுறை எண்ணெய் வைத்து
தலை குளிக்க வேண்டும். கண்ணியமான உடைகளை தவிர மற்ற உடைகளை அணியக்கூடாது, வெளியில் ஊர் சுற்ற கூடாது என.
அதில் சிலவற்றை காற்றில் பறக்கவிட்டிருந்த்தாளும் இதில் மட்டும் அன்னையின் பேச்சை
மீறவில்லை. லாவெண்டர் நிற காட்டன் சுடிதார் அணிந்து அழகு
சிலை போல வந்தவள் லோட்டஸ் போலாமா? என்று
கூலாக கேட்டவளை
ஏன் மொழி காலைல சீக்கிரம் எந்திரிச்சா தான் என்ன? என்றாள்.
நான் நைட் படுக்கும்போது காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும் னு தான் நினைக்கிறேன். ஆனால் காலைல முடிவு மாறிடுததுடி, என்றாள்.
இது தினமும் கேட்கப்படும், சொல்லப்படும் கேள்வி, பதில் தான். மொழி எப்போதும் எதுக்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள். எல்லாவற்றையும் ஈசி யாகவே எடுத்துக்கொள்வாள். விளையாட்டாகவே எடுத்து கொள்வாள். இந்த குணத்தை நினைத்து எப்போதும் போல் சிறு கவலையுடன் பார்த்தபடி கிளம்பினாள் தாமரை.
ஹாஸ்டல் மெஸ் க்கு சென்று பார்த்தபோது உப்புமா மட்டுமே இருந்தது.
தாமரை எனக்கு உப்புமா வேண்டாண்டி என்று முகத்தை கலவரமாக வைத்துக் கொண்டு
சொன்னாள் மொழி.
வேற என்ன பண்ணுறது? என்று அவளை முறைத்தாள் தாமரை.
காலேஜ் புட் கோர்ட் போயி ஏதாவது சாப்பிடலாம்
என்றவளை
ஏய் இனி புட் கோர்ட் போயிட்டு கிளாஸ் க்கு போனால் லேட் ஆயிடும்டி, கிளாஸ் ஆரம்பிச்சுரும்டி என்றாள் தாமரை.
இல்ல செல்லம் இன்னிக்கு பர்ஸ்ட் அவர் நம்ம சிவா சர் கிளாஸ் டி, அவர் தான் லீவ் ல இருக்காரே?
அட்டெண்டன்ஸ்க்கு நம்ம ரெப்க்கு ஒரு msg போட்டுட்டு, போயிட்டு சீக்கிரம் வந்துடலாம்டி
என்றாள் மொழி.
வேறு வழியின்றி அவளுடன் சேர்ந்து நடந்து கொண்டே மொழியை பாரத்தவள்
இருடி நான் மட்டும் உனக்கு அண்ணியா வந்ததுக்கு அப்புறம் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்ன பழி வாங்கறேன் என்றவளை,
செல்லக்குட்டி அங்கதான் நீ தப்பு பண்ணுற என்றாள்.
ஏன்? என்றவளை பார்த்து
எங்க அண்ணன் கார்த்தி இன்னும் foreign ல இருந்து வர ரெண்டு வருஷம் இருக்கு?
ஆமாம் இப்ப அதுக்கு என்ன என்றவளை பார்த்த மொழி
என்ன அண்ணியாரே எங்க அண்ணவோட கண்டிஷன் மறந்துடுச்சா?
எங்க அண்ணன் மொழி க்கு பண்ணிட்டு தான் நான் பண்ணிக்குவேன் அப்படி ன்னு சொல்லிருக்கு இல்ல?
ஸோ டம்போ எனக்கு கல்யாணம் ஆகி நான் புகுந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் உனக்கு கல்யாணம். உன்னோட ஆசை கண்டிப்பா
நிறைவேறாது என்று சொல்லியபடி அவள் தோளில் கை போட்டுக்கொண்டு புட் கோர்ட் ஐ நோக்கி சென்றனர்.
அத்தை மகள் மாமன் மகள் என்பதை தாண்டி சிறுவயதில் இருந்தே இருவருக்கும் நல்ல
புரிதல் இருந்தது. இருவரும் ஒன்றாகவே இது வரை பயணிக்கின்றனர்.
புட் கோர்ட் ஐ அடைந்தவர்கள் counter க்கு சென்று டோக்கன் வாங்கி உணவை பெற்றுக்கொள்ள வந்தவளிடம் counterல் இருந்தவர் மொழி கண்ணு இன்னைக்கு மதியம் மெனு ஐதராபாத் சிக்கன் பிரியாணி யும் கோங்குரா சிக்கனும் என்றவரை பார்த்து
அப்படியா மணி அண்ணா, டாண்னு ஒரு மணிக்கு ஆஜராயிடுவேன் என்றவாறு உணவை பெற்றுக் கொண்டு வந்தவளை பார்த்து முறைத்தாள் தாமரை.
அவளை பார்த்து சிரித்துக்கொண்டே சோறு மிக முக்கியம் அமைச்சரே, அதுக்கு அப்புறம் தான் எல்லாம் என்று வடிவேலு மாதிரி பேசியவளை பார்த்து சிரித்துக்கொண்டே தாமரை, சாப்பிடுடி போலாம் என்றாள்.
உணவை உண்டு சூடாக ஒரு கப் காபி ஐ ம் குடித்து அவள் வேலையய் திவ்யமாக முடித்துக்கொண்டே கிளம்பினாள் மொழி.
தாமரை இன்னும் அரை மணி நேரம் இருக்குடி, அங்கு இருந்த மரத்தடி பெஞ்சு ஐ காட்டி கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு போலாம்டி என்றவளை கொலை வெறியுடன் பார்த்தாள் தாமரை.
மொழி மரியாதையா வந்துடு,
இல்லேன்னா இப்பவே அத்தைக்கு போன் போடுறேன், உன்னோட அலப்பறைக்கு அளவே இல்லாமல் போச்சு. என்று டென்ஷன் ஆனாள் தாமரை.
கூல் கூல் இப்போ என்ன உனக்கு உடனே கிளாஸ் போகணும் அவ்ளோதானே, போலாம் என்று அவளுடன் சேர்ந்து நடந்தாள் மொழி.
வகுப்பறை க்கு சென்று சேர்ந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வகுப்பில் ஒரு பேராசிரியர் வகுப்பை நடத்திக் கொண்டு இருந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மொழி எருமை மாடே, பாரு புது பாகல்டி வந்துருக்கார் போல, முதல் நாளே மானம் போச்சு என்று சன்னமான குரலில் கடித்து குதறினாள்.
அதற்க்கெல்லாம் அசருபவளா நம் மொழி.
எக்ஸ்கியூஸ் மீ சர் என்றாள்.
பாடம் எடுத்து கொண்டிருந்தவன் திரும்பியதும் மொழி க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தன் கையில் இருந்த வாட்ச் ஐ பார்த்தபடி இருவரையும் பார்த்து முறைத்தான்.
ஆம் புது faculty இவர்களுக்கு
பேராசிரியர் போல இல்லாமல் சீனியர் மாணவன் போல் தோற்றமளித்தான். சிவந்த நிறமும், அசர வைத்த உயரமும்,
மரியாதையான பார்மல்ஸில் ரிம்லெஸ் கண்ணாடியுடன் கம்பீரமாக இருந்தார்.
ஆனால் முகத்தில்
மருந்துக்கும் சிரிப்பில்லை.
கடினமான முகத்துடன் அவர்களை நோக்கியவன்
இது தான் கிளாஸ் க்கு வர time ஆஹ்? என்று நிதானமாக கேட்டான்.
மொழி ஏதோ சொல்ல முயல நோ மோர் எஸ்பிளானஷன் , நான் சொல்றதை மட்டும் கேளுங்க?
இது என் first டே ங்கறதால உங்களுக்கு எக்ஸ்க்யூஸ் கொடுக்கிறேன், இது தான் first அண்ட் லாஸ்ட் வார்னிங், இனி கிளாஸ் க்கு time கு வரலை ன்னா அப்படியே போயிடுங்க.
இருக்கிறவங்களையும் தொந்தரவு பண்ண வேண்டாம் . என்றான்.
இருவரும் sorry சர் என்றவாறு தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்த னர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top