இதயம் இடம் மாறியதே - 3

Advertisement

Indira75

Active Member
பூம்பொழில் கிராமம். பசுமையான வயல்கள், கன்னிப்பெண்களின் நெற்றிவகிடு போல வயலை பிரித்து சென்ற வரப்புகள், பசுமையான நாற்றங்கால்களில் ஒற்றை காலில் மீனுக்காய் தவமிருக்கும் கொக்கு கூட்டம், நாற்று நடும் களைப்பு தெரியாமல் இருக்க தெம்மாங்கு பாடி வேலை செய்யும் கிராமத்து பெண்கள் என கிராமத்துக்குரிய அத்தனை லட்சணங்களுடன் கூடிய மிகவும்
அழகான கிராமம்.

கூப்பிடு தூரத்தில் ஓடிய பண்ணையாறு, நல்ல நீர்ப்பாசன வசதியுடன் கூடிய அந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தையே
சார்ந்து இருந்தனர்.
இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக உழைப்பை நம்பியே வாழும் மக்கள். தமக்காக இல்லாமல் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகள். உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது. ஆனாலும்அவர்கள் சோர்வடைவதில்லை. அடுத்த அறுவடையில் பார்த்துக்கலாம் என்று அடுத்த பருவத்திற்கு தயாராகும் விவசாயிகள்.
மிக சிலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில் செய்யும் பொருட்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தனர்.
அகன்ற தார் சாலையின் இருபுறமும் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டிருந்தது. ஒட்டு வீடு, மச்சு வீடு , ஓலை வேயப்பட்ட வீடு என அனைத்து மாதிரியான வீடுகளும் இருந்தது. எல்லா வீட்டு வாசல்களிலும் சாணம் தெளித்து கோலம் போடப்பட்டிருந்தது.

அதை தாண்டி சென்றால் நாம் செல்ல வேண்டிய வீடு தென்பட்டது. தென்னந் தோப்பு தாண்டி உள்ளே சென்றால் காம்பௌண்ட் உடன் கூடிய பழமையான கிராமத்து வீடு, இரு புறமும் அகண்ட திண்ணைகள், காம்பௌண்ட் க்கும் வீட்டிற்கும் இடையில் மிகப் பெரிய களம். அதில் தேங்காய் மூடிகள் எண்ணெய் ஆட்டுவதற்காக காயவைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் தேக்கு மர தூண்களுடன் நீண்ட ஹால் மற்றும் பூஜையறை, சமயலறை, பின் கட்டு என நீண்டு கொண்டே சென்றது. ஹால் ன் ஓரத்தில் இருந்த மரப்படி மேலே மச்சு க்கு சென்றது. பழமையான வீடு நவீன வசதிகளுடன் பழமை மாறாமல் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

உள்ளிருந்து வெளியே வந்த வடிவாம்பாள் டேய் முருகா என சத்தமிட
சொல்லுங்க ஆத்தா என்றபடி வந்து நின்றான் முருகன்.
ஏண்டா தேங்காய் போட்டு முடிச்சாச்சா? என்றார்
இன்னும் போட்டுக்கிட்டு இருக்குதுங்க. உச்சிக்குள்ள முடிஞ்சு ருமுங்க? என்றான்
சரி சரி காய போட்டு கரீக்ட் டா எண்ணி என்கிட்ட வந்து சொல்லனும். பராக்கு பார்த்துட்டு எண்ணிக்கை இல கோட்டை விட்டுப்புடாத, ஆமாம் சொல்லிபுட்டேன். என்றார்
சரிங்க என்றான் முருகன்
ஆமா நீ சாப்டியா? என கேட்க
இல்லைங்க இப்பதான் காப்பி தண்ணி குடிச்சனுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறனுங்க, என்று சொல்லியவாறு தன் வேலையை பார்க்க சென்றான்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு நெற்றியின் மேல் கை வைத்து பார்த்தவர், யாரது கந்தசாமி யா? என்றார்.
ஆமாமுங்க ஆத்தா.
கூட யாரு நம்ம செல்வராசா? என ஆமாமுங்க என்றார்

வாங்க வாங்க என்றவர், ஏன் கந்த சாமி பைய்யன் வேலைக்கு போய் சம்பளம் எல்லாம் ஒழுங்கா அனுப்பரானா? என்றார்
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லையிங்க. என்றார்
ஏன் செல்வராசு வியாபாரம் எல்லாம் எப்படி இருக்குது? என்றார்
அதெல்லாம் பரவாயில்ல யிங்க என்றார்.
செல்வராசு இடம் வாங்கி விற்கும் தரகு தொழில் செய்து வந்தார்.
ஐயா வை பார்க்க வந்தமுங்க என்றவர்களை
உள்ற தான் இருக்கிறான் போய் பாருங்க என்றவர் அவர்களுடனே உள்ளே சென்றார்.
அந்த கிராமத்தின் பெரிய வீடு என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் ராஜலிங்கம்- வடிவாம்பாள் தம்பதியினர் தன் மகன்கள் உலகநாதன், விஸ்வநாதன் ஆகியோருடன் வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஒரே பெண் பூங்கொடியய்
பக்கத்து ஊரில் மணம் முடித்து கொடுத்திருந்தனர்.
மூத்த மகன் உலகநாதன், அவரது மனைவி தமிழரசி. வடிவாம்பாள் பெண் எடுக்கும் போது தங்களை விட வசதி குறைந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை, வரும் மூத்த மருமகள் நல்ல குணவதியாக இருக்க வேண்டும். வருகிற மூத்த மருமகள் சரியாக இருந்தால் தான் அந்த குடும்பம் எந்த பிரச்சனையும் இன்றி இருக்கும் என்று தமிழரசி ஐ உலகநாதனுக்கு கட்டி வைத்தார்.
அவரது எதிர்பார்ப்பு வீண்போகவி
ல்லை. தமிழரசி நல்ல குணவதி தான். மாமனார், மாமியாருக்கு கொடுக்கும் மரியாதையில் இருந்து, கணவனின் முகமறிந்து நடப்பதில் இருந்து, வீட்டில் உள்ள அனைவரையம் அரவணைத்து சத்தமில்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்.
உலகநாதன்- தமிழரசி தம்பதிக்கு கந்தவேல், கார்த்திக், தேன்மொழி என மூன்று வாரிசுகள்.
மூத்தவன் கந்தவேலுக்கு திருமணமாகி அவன் மனைவி சித்ரா இப்போது ஐந்து மாதம் முழுகாமல் இருந்தாள்.கந்தவேல் தந்தைக்கு உதவியாக விவசாயம், ரைஸ்மில் ஆகியவற்றை கவனித்துக் கொண்டிருந்தான்.
இரண்டாமவன் கார்த்திக் Mca படித்து முடித்து பெங்களூரில் ஐடீ கம்பெனி இல் வேலை செய்கிறான்.
மூன்றாவது மகள் தேன்மொழி.
அந்த வீட்டின் இளவரசி. தற்போது கல்லூரியில் ஹாஸ்டல் இல் தங்கி படித்து வருகிறாள்.
உலகநாதன் தம்பி விஸ்வநாதன் அவரது அத்தை மகளான சித்ராவை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். சரவணன், சதீஸ் இருவரும் 10ம் வகுப்பும், 8ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
ராஜலிங்கத்திற்கு உடல் நலம் சற்று குன்றியதால் அவர் அவருடைய பொறுப்புகளை தன் மகன்களிடம் விட்டுவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.
சத்தம் கேட்டு படித்துக்கொண்டிருந்த செய்திதாளை கீழே இறக்கி பார்த்தார் உலகநாதன். உள்ளே வந்தவர்களை பார்த்து, அடடே கந்தசாமி , ராசு வாங்க வாங்க என அழைத்து உட்கார வைத்தார்.
வீட்ல எல்லாம் எப்புடி இருக்காங்க? என்று நலம் விசாரித்தார்.
தமிழு காபி கொண்டுவாத்தா என்று வடிவாம்பாள் சத்தம் குடுக்க
சொல்லுங்க என்றபடி அவர்களை பார்த்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து தயங்கினர்.
சொல்லுங்க? என்ன தயக்கம். என்றார் உலகநாதன்.
அய்யா அது வந்துங்க தப்பா நெனைக்கலைன்னா ஒரு விஷயம் கேக்கலமுங்களா? என்றார் ராசு.
கேளுங்க, வந்ததுக்கு அப்பொறம் என்ன தயக்கம்?
அது வந்துங்க அய்யா ஊருக்கு வெளியே நம்முது ஒரு 50 ஏக்கர் தரிசு நிலம் இருக்குதுல்ல ங்க?
ஆமாம் சொல்லுங்க? என்று கூர்ந்து அவரை கவனித்தார் உலகநாதன்.
சென்னை ல இருந்து பெரிய கம்பெனி காரங்க அந்த இடத்தை விலைக்கு கேட்டு வந்திருக்காங்க? நீங்களும் அதை சும்மா போட்டு வச்சுருக்கீங்க? அதான் உங்க அபிப்ராயம் என்ன னு தெரிஞ்சுட்டு போலாம்னு வந்தமுங்க. என்றார்.
ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது. காபி யுடன் வந்த தமிழரசி அவர்களுக்கு கொடுக்க எடுத்துக்குங்க என்ற உலகநாதன் அவரும் ஒரு டம்ளரை எடுத்து கொண்டார்.
அய்யா நாங்க தப்பா கேட்டுட்டமா என்றார் கந்தசாமி
அப்படி இல்ல, அது உங்க தொழில், ஆனா எங்க கேக்கணுமனு ஓரு வரைமுறை இருக்குதுல்ல. எங்க குடும்பத்திலேயே நாங்க பரம்பரை பரம்பரையா விவசாயம் பண்ணிட்டு வந்த நிலம் எதையும் வித்ததில்லை. நிலத்தை சாமியா நெனைக்கிரவங்க நாங்க, அதுவும் நீங்க கேட்ட அந்த நிலம் என் பொண்ணு தேன்மொழி க்கு மாப்பிள்ளையா வரவருக்கு சீதனமா குடுக்க வச்சிருக்குரது. அது எத்தனை கோடிக்கு கேட்டாலும் அதுக்கு இணையில்ல.

அதனால் இனிமேல் இது மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாம். சொந்தக்காரங்களா இந்த வீட்டுக்கு எப்போவேணாலும் வரலாம். வியாபாரியா வர்றது இதுவே கடைடிசியா இருக்கட்டும் என்றார்.
வந்தவர்கள் மன்னிச்சுடுங்க என்றவாறு எழுந்து சென்றனர்.
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வராசு இடம் கேட்டது கௌதம்முக்காகவா?
அப்போ தேன்மொழியை கௌதம் கல்யாணம் செஞ்சு அந்த 50 ஏக்கர் நிலத்தை தேன்மொழியின் சீதனமாக வாங்குவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top