இதயத்தில் காதல் பூத்தது உன்னால் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

இந்த கதையை ஒரு ஜாலியான கதையா எழுதலாம்னு பார்த்தேன். ஆனா... கொஞ்சம் எமோஷன்ஸ் சேர்க்கலாம்னு main ஜோடியா வாராகி {வாராக மஞ்சரி} அண்ட் அதீசன் வருவாங்க:):):)

download (1).jpg

பாடசாலை கேட்டோ இரண்டு பக்கமாக திறக்கக் கூடிய சாதாரண இரும்பு கேட். உயரம் மாணவர்களின் கழுத்துவரையில்தான் இருந்தது. பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்களை தடுப்பதற்காகத்தான் கேட்டை பூட்டு வைப்பது இல்லையென்றால் அந்த நேரத்தில் கேட் பூட்டப்பட்ட மாட்டாது. பூட்டினாலும் சில மாணவர்கள் எகிறி குதித்து வர கேட்டோடு விழுந்திருந்தனர்.



இரண்டு துண்டாக விழுந்த கேட்டை சுவரோடு இணைத்து கயிறு வைத்து கட்டியிருக்க, ஒரு பக்கத்தை பூட்டி வைத்து மறு பக்கத்தை காவலாளி திறந்து வைத்துக்கொண்டு மாணவர்கள் உள்ளே செல்லும்வரை பிடித்துக்கொண்டு இருப்பார். இல்லையாயின் "சர்ர்..." என்ற சத்தத்துடன் எதிர் திசைக்கு பயணமாகி உள்ளே வந்துகொண்டு இருப்பவர்களின் மேல் மோதி விடும்.



வாகனம் ஏதாவது உள்ளே வர வேண்டுமானால், இரண்டு கேட்டையும் திறந்துதானே! ஆகா வேண்டும். திறந்தால் இருவர் இருபக்கமாக இருந்து கேட்டை பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும். அரசு வண்டியைக் கண்ட முதல்வர் தன்னிலை மறந்து தானே! கேட்டை பிடிக்க, சீ… திறக்க ஓடியிருந்தார்.



அவர் சென்று கேட்டை கைப்பற்றும் வேளையில் இரு மாணவர் வந்து கேட்டை பிடித்துக்கொள்ள, அப்பொழுதுதான் பின்னால் ஓடிவந்ததிருந்த மஞ்சரியை கவனித்திருந்தார் அவர்.





அரச வண்டியை பார்த்ததும் மஞ்சரி இரண்டு மாணவர்களை கேட்டை பிடிக்க அனுப்பி விட்டு பூங்கொத்தோடு வந்தவர்களை வரவேற்க ஓடி வந்திருந்தாள்.





அரசவண்டியிலிருந்து அரச அதிகாரிகள் சிலர் இறங்க, பின்னாடி வந்த காரிலிருந்து இறங்கினான் அதீசன் வர்மா.

******************************************************************************************

"மஞ்சரி..." என்று முதல்வர் அழைத்து விவரம் கேட்டதில் அவளின் பெயரை தெரிந்துக்கொண்ட சந்தோசத்தில் அதீசனின் உதடுகள் கோடாக விரிந்து உடனே! நிர்மலானது. மனதோ! மஞ்சரி... பெயருக்கு ஏற்றது போல பூங்கொத்தோடதான் எப்பயும் தரிசனம் கொடுக்குறா... ஆமா.. அவ பெயர் மஞ்சரி மட்டும்தானா?" என்று கேட்டிருக்க பதில்தான் தெரியவில்லை.



"அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, கவனிச்சியா? நெத்தில குங்குமம் இல்ல, கழுத்துல மஞ்சள்கயிறு இல்ல. உனக்கு இன்னும் சான்ஸ் இருக்கு" அதீசனின் மனம் குத்தாட்டம் போட "நிச்சயம் ஆகி இருந்தா?" என்று கேட்டுக்கொண்டு கண்கள் அவள் கையை நோக்க எந்த மோதிரத்தையும் காணாது நிம்மதி அடைந்தான்.


download (2).jpg


"மஞ்சு... என்ன தாயி... இங்க வந்து நிக்குதிய? அங்கன உன்னோட அப்பத்தா... சாமியாடிகிட்டு இருக்கு... தெரியாதா... வெரசா வா... புள்ள... வந்து புடவைய கட்டிக்கோ" அன்னை பொன்னுத்தாயி சமையலறை வாசலிருந்தவாறே அழைக்க மஞ்சரி அசையவில்லை.



செய்யும் வேலையையும் விட்டு விட்டு மகளிடம் ஓடி வந்த பொன்னுத்தாயி "என்ன புள்ள... மாமனை கண்ணாலம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?" அதிர்ச்சியாக நெஞ்சில் கைவைத்தவாறு கேக்க,



பின்னாடி துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்தவாறு வானை வெறித்துக்கொண்டிருந்தவளோ! "ப்ச்... இப்போவே! கல்யாணம் பண்ணி வைக்க இம்புட்டு பெரிய படிப்பெல்லாம் எதுக்கு படிக்க வச்சராம் உன் புருஷன்" விரக்தியாக கேட்டாள் மஞ்சரி.



"ஏய் என்ன புள்ள அப்பனையே! இப்படி பேசுத்திக?" மாமியாரின் காதில் விழுந்தால் அவ்வளவுதான் என்று சுற்றும்முற்றும் பார்த்தவாறு பொன்னுத்தாயி பேச



"நான் செம கோபத்துல இருக்கேன் ம்மா..." மஞ்சரி கண்களை உருட்டி அன்னையை முறைத்தாள்.



"யேன் பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்குனு யேன் புருஷன் நாலு பேர்கிட்ட சொல்லிக்க உன்ன படிக்க வச்சாக பாரு, அவர சொல்லணும் டி..." பொன்னுத்தாயி கோபமாக பேசியவள் உடனே "தாயி சொன்னா கேளு புள்ள... உன்ற அப்பா ஆசப்பட்டு கேட்டது இது ஒண்ணுதானே! தாயி... என்னக்கி இருந்தாலும் கண்ணாலம் பண்ணித்தானே! ஆகணும் புள்ள. உன்ற மாமன தானே! கட்டிக்க போற? அயித்த உன்ன ராசாத்தி மாதிரி பாத்துகுவாக. அவங்களுக்கு என்ன பொண்ணா இருக்கு" கெஞ்சியவள் மகளை கொஞ்ச ஆரம்பித்தாள்.



அன்னையின் அப்பாவியான முகம் பார்த்து மனம் இளகியவள் "சரி வரேன். அழுவாத. அப்பத்தா உன்னைத்தான் வையும். மூஞ்ச துடச்சிக்க" என்றவள் அறைக்குள் நுழைந்திருந்தாள்.



திடுக்கிட்டு விழித்தவள் தினமும் காணும் கெட்ட கனவுடனையே! அன்றும் விழிக்க, கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டவள் கட்டிலை விட்டு இறங்கி போர்வையை மடித்து விட்டு சமயலறைக்குள் செல்ல, அன்னை சமையலில் ஈடுபட்டிருந்தாள்.


******************************************************************************************

மஞ்சரியின் வாழ்க்கையில் எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது போல்தான் நடந்தேறி விட்டது. கல்யாணம் முதல் விவாகரத்துவரை. மின்னல் பட்டது போல் அவள் வாழ்க்கையும் கருகிதான் விட்டது


இந்த கதைல எத்தனை ஜோடி இருக்காங்கனு எனக்கே! இன்னும் தெரியல வந்துகிட்டே இருக்காங்க...:ROFLMAO::ROFLMAO::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமை மிலா:love::love::love:.மஞ்சரிக்கு கல்யாணம் ஆகலைன்னு அதீசன் சந்தோஷப்பட:D:D. கல்யாணம் முதல் விவாகரத்து வரை மின்னல் வேகத்தில் நடந்ததா சொல்றீங்களே:unsure::unsure::unsure:.
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
எப்பி என்னைக்கு வரும் டியர்.....3 டீஸர் வந்திடுச்சு....கதை வரதுக்கு முன்னாடி நான் டீஸர் படிக்கிறதே இல்ல...ஸோ ஐ ஆம் வெயிட்டிங் டு எப்பிஸ்
 

Gomathianand

Well-Known Member
எத்தனை ஜோடி வந்தாலும் அசராமல் படிப்போம்;)
கல்யாணம் ஆகலைன்னு சந்தோசப்படரானே விவாகரத்து ஆனது தெரிஞ்சா:unsure:
மஞ்சரிக்கு அனுஷ்கா சூப்பர் (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top