இணை தேடும் இதயங்கள் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
“ப்பா அப்பா கோண்டு இவ்வளவு நேரம் எப்படி கெஞ்சினேன்.. ஊலுஊலுன்னு அழுதுட்டு இப்ப விளையாடுறத பாரு..?” படபட பட்டாசாய் பொறிந்து கொண்டிருக்க,

மலருக்கு சிரிப்பு தாங்கவில்லை.. “விடுங்கக்கா... பாப்பா பாவம் காது வலிக்கும் தானே அதான் அவங்க அப்பாக்கிட்ட சலுகை சொல்லுறா..?”

சக்தி மகளை வைத்துக் கொண்டே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டிருக்க ஒருவழியாக எல்லாரும் கிளம்பியிருந்தனர் வீட்டு ஆட்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்க வெற்றியும் சக்தியும் தன் மனைவிகளை அழைக்க வர மகன்கள் மூவரும் மலரின் மடியில் படுத்திருந்தார்கள்.. ரமலி ஏதோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்..
“டேய் எழுந்திருங்க உங்கம்மா சாப்பிடட்டும் பாட்டி என்னமோ கதை சொல்றாங்களாம் உங்கள வரச் சொன்னாங்க..?”


மலரின் மடியில் படுத்திருந்த மூவரும் டக்கென எழுந்து,” ப்பா எம்ஜிஆர் கதையா..?”

“ஆமாண்டா .. ஓடுங்க..” அவர்களை விரட்டிவிட காலை நீட்டியே வைத்திருந்ததால் மலருக்கு கால் ஏதோ போலிருக்க தடுமாறியவளை தாங்கிப்பிடித்தவன் பிடித்த கையை விடாமல் சாப்பிட அழைத்துச் சென்றான்..

அப்பத்தா சற்று தளர்ந்திருந்தாலும் தன் பேரன்களின் பிள்ளைகளிடம் லயித்துத்தான் போய்கிடந்தார்.. அவர்களின் சேட்டைகள், குறும்புகள் அதைவிட பிள்ளைகளும் பாட்டி பாட்டி என அவர் பின்னாலேயே அவருக்கு வெற்றிலை இடித்துக் கொடுப்பது , கடைக்கு சென்றால் அவருக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கிவந்து கொடுப்பது , சீப்பை எடுத்து தலைவாறி விடுவது என மற்றொரு சக்தியாக மாறியிருந்தார்கள்.. ரேணுகா அப்படியேதான் அதே பொறுமை, எளிமை அவருக்கு ரமலி, மலர் இருவருமே ஒன்றுதான் அன்று போலவே இன்றும் இருந்தார்.. சின்ன மாப்பிள்ளை, பெரிய மாப்பிள்ளை என அதே பாசம்..

சக்தி ரமலியை பார்த்தவன்,” நீயேண்டி காலையிலயிருந்து சாப்பிடாம இருக்க..?”
சக்தியை முறைத்தவள்,” எங்க உங்க பொண்ணு..?”


சிறுபிள்ளைப்போல தன்னை முறைத்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும் இப்ப சிரிச்சா காண்டாயிருவா.. அந்த பட்டுச் சேலையையும் அவள் அலங்காரமும் முன்பை விட இப்போது சற்று மெலிந்திருந்தாள்.. அவளையும் ரசித்தவன் லேசாக திரும்பியிருந்த நெக்லஸை திருப்பிவிட்டு ..” வா அத்தைக்கிட்ட தூங்குறா..”

“போங்க.. அவ என் பேச்ச கேட்கவே மாட்டேங்கிறா.. ரொம்ப பண்றா..?”
“ஹாஹாஹா சிரித்தவன் மூனுவயசு பொண்ணுக்கு என்ன தெரியும்.. அவ கூட சண்டைப்போடுற...? இத்தனை தொழிலை நிர்வாகம் செய்யுற.. சின்னப்புள்ள மாதிரி இது என்ன கோபம்..?” அவளை தன்புறம் இழுத்தவன், அவள் இடுப்பில் கைகொடுத்து அழுத்தி அவளை பார்த்து கண்சிமிட்டி ஒரு பறக்கும் முத்தத்தை விட,


சட்டென கோபமுகம் மாறி அவளுக்கு வெட்கம் வந்தது, “போடா பிராடு.. இப்படியே ஏதாச்சும் செஞ்சு எல்லாரையும் உன்பக்கம் இழுத்திரு..?” அவன் கையை கோர்த்தவள் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்..

அங்கு சமையலறையில் கரண்டிகளில் சத்தம கேட்க அதை பார்த்த அனைவருக்கும் அவ்வளவு சிரிப்பு.. வெற்றி சக்தி மகன்கள் மூவரும்தான் ராஜாவை போல தங்கள் முதுகுக்கு பின்னால் துண்டை விரித்து கட்டி தோசைக்கரண்டி, அரிகரண்டிகளை வைத்து வாள் சண்டைபோல சண்டைப்போட்டுக் கொண்டிருந்தனர்..

இடையிடையே நிறுத்தி நிறுத்தி தங்கள் பாட்டியிடம் ,”பாட்டி இது ரைட்டா எம்ஜிஆர் இப்படித்தான் சண்டைபோடுவாரா..?” என சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள,
“ஆமாப்பு ஆமாப்பு இப்படித்தான்..” அந்த நேரம் பார்த்து சக்தியின் மகளும் தன் பங்குக்கு ஒரு ஸ்பூனோடு வர அந்த இடமே கலகலத்தது..


ரமலியின் மாமன் மகன்களுக்கு பதினைந்து வருட ஜெயில்தண்டனை கிடைத்திருக்க திருமணம் முடியாமல் இளமை காலம் அனைத்தும் ஜெயில்வாசம்தான்.. இப்போதுதான் அவர்களின் பெற்றோர்களுக்கு தங்கள் தவறு புரிந்தது இங்கு பேராசை பெரு நஷ்டமாகியிருந்தது..

காது குத்து முடிந்தும் அங்கேதான் சக்தி குடும்பம் இருந்தார்கள் தாயாரின் நினைவு நாள் இரண்டு நாளில் வர இருந்து சாமி கும்பிட்டு போகலாம் என முடிவு செய்து அங்கேயே தங்கியிருந்தார்கள்.. பிள்ளைகளுக்கு ஒரே ஆட்டம்தான்..

மாலையானால் ராமலிங்கம் தன் பேத்தியோடு வெளியில் கிளம்பிவிடுவார்.. அவரோடு பேரன்களும் ஆளுக்கொரு சைக்கிளில் ரவுண்டடிக்க அவருக்கு தன் பேத்தியின் மேல் தனி ப்ரியம்.. தன் மனைவியே குழந்தையையாய் உருவெடுத்திருப்பாளோ என்று.. அதற்கேற்றார்போல குழந்தைக்கும் தாத்தாவின் மேல் அப்படி ஒரு பாசம்.. தன் பேரன் பேத்திகளோடு கதை பேசியபடி ஊரை வலம்வருவது அவருக்கு மிகவும் பிடித்த விசயம்.. அவர்களோடு ஒரு குழந்தையாய் மாறி தனி உலகத்திற்கு சென்றுவிடுவார்.. அதைவிட குழந்தைகளின் ஆரோக்கியம் விசயத்தில் ரொம்பவும் கண்டிப்பு.. வசந்தாவை நினைத்தே அவர்களுக்கு சத்துள்ள பழங்கள், ஜூஸ்கள் என கொடுத்துக் கொண்டே இருப்பார்

ரமலி கம்பெனிக்கு சென்றுவிடுவதால் குழந்தை ரேணுகாவிடமும் அப்பத்தாவிடமும்தான் பாதி நேரம் இருக்கும்.. இரவில்தான் தாயிடம்.. வாரம் ஒருமுறை வெற்றி குடும்பம் மதுரைக்கு வருவார்கள் வரமுடியவில்லையென்றால் சக்தி கிளம்பிவிடுவான்..

எல்லாவற்றையும் எளிதாக எடுக்கும் சக்தி தாயார் நினைவுநாள் அன்று மட்டும் யாராலும் நெருங்க முடியாமல் அப்படியே இறுகிபோய் விடுவான்.. அதிலிருந்து மட்டும் அவனால் வெளியில் வரமுடியவில்லை.. காலையிலிருந்து சாப்பிடவும் மாட்டான்.. எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கேட்கவும மாட்டான்.. ரமலியும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தாலும் அவனை அன்று மட்டும் எதையும் செய்ய வைக்க முடியாது.. .ராமலிங்கம் கூட காலப்போக்கில் தன் பேரன் பேத்திகளை கண்டு தன் மனைவியை சற்று மறந்திருந்தார்.. சக்திக்கு அது ஒரு உறுத்தலாகவே மாறியிருந்தது.. காலம் ஒரு சிறந்த மருந்து அதை மாற்றி காட்டும் என நினைத்திருந்தார்கள்..

மலர் தன்னுடைய இரண்டாவது டிகிரியை இந்த வருடம் முடித்திருக்க வெற்றி பெரிய ஓட்டல் அதிபராகியிருந்தான்.. ரமலிக்கு தொட்டதெல்லாம் பொன்தான் தன் கணவனின் துணையோடு எல்லாத்தொழிலும் ஏறுமுகமாக இருந்தது.. சக்தி நடத்திய பள்ளிக்கு இந்த வருடம் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்திருக்க, அதே போல் ஒரு பள்ளியை தங்கள் பகுதியிலும் துவக்கும் முனைப்பில் இருந்தான்.. ராமலிங்கம் இப்போது சக்திக்கு அதில் உதவியாக இருந்தார்..

ரேணுகாவிற்கும் அப்பத்தாவிற்கும் எங்கு ப்ரியமோ அங்கு இருந்து கொள்வார்கள்.. சக்தியின் மகளும் அம்மாவை தேடாமல் இவர்களுடனேயே இருந்து கொள்வாள்.. ஆனால் அப்பா கண்டிப்பாக வேண்டும்..

அன்று ஹோட்டல் வேலைமுடித்து வந்த வெற்றி வீட்டுக்கு வர மணி பத்துக்கு மேலாகியிருந்தது.. குழந்தைகளின் அறையில் மலர் நடுவில் படுத்திருக்க இருபுறமும் மகன்கள் தாயின் மேல் காலைப் போட்டபடி இறுக்கி அணைத்திருந்தார்கள்.. தான் சிறுவயதில் தன் தாயை இப்படி அணைத்து படுக்க ஆசைப்பட்டு அழுத காலங்களை நினைத்து பார்த்தவனுக்கு தன் தாயின் நினைவில் கண்கலங்கியது.. சத்தம் கேட்ட கண்விழித்த மலர்,
“ வந்துட்டிங்களாத்தான்..” மெதுவாக கட்டிலை விட்டு இறங்கியவள் மகன்களுக்கு போர்வையை சரிபடுத்தி வெளியில் வர,


வெற்றி அவர்கள் அறையில் இருந்தான்..” சாப்பாடு வைக்கவாத்தான்..?”
“ சாப்பிட்டேன் அம்மு...” வேறு உடைக்கு மாறியவன் கட்டிலில் படுக்க அவனுக்கு பாலை கொண்டு வந்தவள் அவனுக்கு கொடுத்தபடி தானும் படுக்க தயாரானாள்.. பாலை குடித்து அவள் மடியில் தலைவைத்து படுக்க காலையில் இருந்து வேலைப்பார்த்த டென்சனெல்லாம் மறையத் துவங்க தன் தலையை கோதிக் கொண்டிருந்த கையில் முத்தமிட்டவன்,


“அம்மு நீ இல்லனா என்னோட வாழ்க்கையை நினைச்சே பார்க்க முடியலைடி.. சின்னப்புள்ளையில இருந்து என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து அப்பத்திலயிருந்தே என்னை ஏமாத்தி கைக்குள்ள போட்டுக்கிட்டதானே..?”

அவன் கேலிமுகத்தை பார்த்தவள் வெட்கத்துடன் “போங்கத்தான் சின்னப்புள்ளையில ஏதோ தெரியாம செஞ்சத இப்ப சொல்றிங்க..?” கைகளால் தன் முகத்தை மூடிக் கொள்ள,

“ஹாஹாஹாஹா உன் வெட்கம் அவ்வளவு அழகுடி செல்லம்..” அவள் கையை எடுத்தவன் அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்திருந்தான்..

அங்கு சக்தி வீட்டில் சக்தியின் மகளும் மகனும் டைனிங் டேபிளில் ஏறிநின்று ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க இருவருக்கும் போட்டி யார் அப்பாவுக்கு ஊட்டுவதென இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டிருக்க சக்தி அந்த இன்பத்தை அனுஅனுவாக ரசித்து கொண்டிருந்தான்.. அப்பத்தாவும் ரேணுகாவும் அதை கண்டு கொள்ளாமல் படுக்க சென்றிருக்க இரவு இவர்களின் ராஜ்ஜியம்தான்.. ரமலி அப்போதுதான் வந்திருந்தவள் குளித்து உடைமாற்றி வர ரமலிக்கும் ஊட்டும் படலம் ஆரம்பமானது..

ரமலியோ,” டேய் ஊட்டுறதுதான் ஊட்டுறிங்க சட்னி சாம்பார தொட்டு ஊட்டுங்கடா வெறும் இட்லிய சாப்பிடமுடியல.. ரொம்ப பசிக்கிது..?”நால்வரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டி எப்போதும் இந்த நேரத்தை இவர்கள் மிகவும் விரும்புவர்.. பிள்ளைகள் இருவரின் உடலெங்கும் உணவாய் இருக்க இருவரையும் குளிப்பாட்டி வேறு உடைமாற்றியவன் அவர்களோடு படுக்கைக்கு வர அவன் மகளோ,
“ அப்பா நான் கதை சொல்லவா..?”
“சொல்லுடாத்தா..”


அவர்கள் பாட்டி சொன்ன கதைகளை தன் மழலையில் மொழியில் தந்தைக்கு சொல்லி அவன் நெஞ்சை தட்டிக் கொடுத்து தூங்கச் சொல்ல மகளின் பாசத்தில் அப்படியே தன் தாயை உணர்ந்தான்.. இயற்கையிலே பெண் குழந்தைகளுக்கு தந்தையின் மீது தனிப்பாசம் இருப்பதை உணர்ந்தவன் தன் மகளும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் இருக்க அவன் நெஞ்சில் தலைவைத்து படுக்க அவன் மனைவிக்கும் மகளுக்கும் போட்டியே நடக்கும்.. தன் நெஞ்சில் படுத்திருந்த மகள் தகப்பனை தட்டிக் கொடுத்தபடி தூங்கியிருக்க குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன் கண்ணை மூடி அந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவித்தான்..

ரமலி கட்டிலுக்கு வந்தவள் அவன் கைவளைவுக்குள் வர மகளை மகனோடு கட்டிலில் சுவர் ஓரமாக படுக்க வைக்கவும் இப்போது மகளுக்கு போட்டியாக அவன் நெஞ்சில் மனைவி தலைவைக்க அவளை வருடிவிட்டவன்..
“ ஏய் ரொம்ப டென்சன ஏத்திக்காதடி.. வரவர ரொம்ப களைச்சுப்போய் வர்ற.. பணம் ஒரு போதை அதை சம்பாரிக்க ஆரம்பிச்சா நிறுத்த மனசு வராது.. பணம்தான் நம்ம பின்னாடி வரணும் நாம அதுக்கூட ஓடக்கூடாது..”


அவனை இன்னும் நெருங்கி படுத்தவள்,” நானும் போதும்னுதான் நினைக்கிறேன் மாமா என்னால முடியல..”

“சரி விடு இனி நான் வந்து பார்த்து எத செய்ய சொல்றனோ அத மட்டும் செய் புரியுதா.. இனி பசங்களோட நேரத்தை செலவு செய்டி.. இப்பத்தான் உன் பாசம் அவங்களுக்கு தேவை.. நீ மட்டும் கொஞ்ச நேரம் அத்தை இல்லாம இருக்கியா.. அம்மா அம்மான்னு தான் இருக்க.. அதே மாதிரிதான் நம்ம பசங்களும் உன்னை ரொம்ப எதிர் பார்க்கிறாங்க.. இப்ப பசங்கள கண்டுக்காம விட்டுட்டின்னா நீ நினைக்கிறப்போ அவங்க நம்ம கைமீறி போயிருவாங்க..அதோட முக்கியம் நீ ரொம்ப வேலைப்பார்த்துட்டு வந்து இந்த மாமாவையும் கண்டுக்கவே மாட்டேங்கிறயா அதான் கொஞ்சம் பீலிங்கா இருக்கு..”

“அம்மாடி எவ்வளவு பெரிய பொய்.. நீங்கக்கூட நான் இல்லாம படுத்துருவிங்க.. ஆனா எனக்குதான் நீங்க பக்கத்தில இல்லைன்னா தூக்கமே வராது.. இதுல உங்களுக்கு பீலிங்கா..??” அவனை முறைக்க,

“ஏய் ரௌடி மலையேறாத..?” அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் இதழை நோக்கி குனிய இங்கு இரு இதயங்களும் தங்கள் இணைகளை தேடி இணைந்தது..

முற்றும் -



ஸாரி ப்ரண்ட்ஸ் இந்த பதிவோட கடைசி லிங்க காணல.. அதான் இங்கே போட்டிருக்கேன்.. நிறைய ப்ரண்ட்ஸ் கேட்டிருந்திங்க... நன்றிப்பா...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Epilogue la Surya Karthi picture enga
இது எபிலாக் இல்ல சிஸ் ஏற்கனவே போட்டிருந்த பதிவுதான்.. என்னாச்சுன்னு தெரியல லிங்க ஓப்பன் ஆகல.... நிறைய ப்ரண்ட்ஸ் கதையோட முடிவ கேட்டுட்டே இருந்தாங்க... அதான் அத இப்போ தேடி எடுத்து போட்டேன்.. அவசரத்தில பிக்சர போட மறந்திட்டேன்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த ஸ்டோரி லிங்க் சரி
சரண்யாவின் சூர்யா எப்போ வருவான், மகேஷ் டியர்?
@maheswariravi
ஸாரி டியர் வீட்ல கொஞ்சம் வேலை அதிகம் டைப் பண்ணிட்டே இருக்கேன்... நாளைக்கு கண்டிப்பா சூர்யா, சரண்யா மணியோட வந்திருறேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஸாரி டியர் வீட்ல கொஞ்சம் வேலை அதிகம் டைப் பண்ணிட்டே இருக்கேன்... நாளைக்கு கண்டிப்பா சூர்யா, சரண்யா மணியோட வந்திருறேன்...
ஓகே பொறுமையா வாங்க, மகேஷ் டியர்
இங்கேயும் அதே கதைதான்
என்னமோ வேலையே தீர மாட்டேங்குதுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top