இஞ்சி பச்சடி / Ginger pachadi

Advertisement

Bhuvana

Well-Known Member
இஞ்சி பச்சடி / Ginger pachadi :

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 20 கிராம்
தேங்காய் - 1/2 கப் { துருவியது }
காய்ந்த மிளகாய் - 7
ஜீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
புளி - 1/2 எலுமிச்சை அளவு
வெல்லம், உப்பு - சுவைக்கு ஏற்ப

இஞ்சியை நல்ல பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு கடாயில் மிளகாய் வற்றலை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சியை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். மிக்ஸியில் இஞ்சி, ஜீரகம், மிளகாய் வற்றல், துருவிய தேங்காய் ஆகியவற்றை கொஞ்சம் நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும், பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும்.

அதன் பிறகு அரைத்த விழுதை சேர்த்து புளிக்கரைசல் விட்டு கொஞ்சம் மஞ்சள் தூள், வெல்லம் பொடித்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். பச்சை வாசனை போடும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

இந்த இஞ்சி பச்சடி, சொதி குழம்பு, உருளைக்கிழங்கு சிப்ஸுடன் சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Ingredients:

Ginger - 20 gram
Grated coconut - 1/2 cup
Red chilly - 7
Cumin/Jeera seeds - 1 spn.
Onion - 1
Tomato - 2
Tamarind - 1/2 lemon size
Jaggery, Salt - as per your taste.

In a kadai, add little oil & fry the red chilly, then add the finely chopped ginger & saute until the raw smell goes off. Grind the ginger, red chilly, cumin seeds & grated coconut into a fine paste & keep aside.

Heat the kadai, add little oil, temper with mustard seeds, urad dhal & curry leaves. Add the chopped onion, saute it for 2 min. then add the chopped tomatoes saute it for 2 min. Then add the grounded paste to it, followed by turmeric powder, tamarind juice, powdered jaggery & salt. Cook until the raw smell goes off.

This ginger pachadi, with sothi kuzhambu & potato chips is the best combo for white rice.

15492566_968081179964494_3413876368607795470_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top