ஆருயிரே... என் ஓருயிரே...! intro

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

புதிய கதையின் அறிமுகத்தோடு வந்துவிட்டேன்... படிச்சுட்டு சொல்லுங்க... எப்பவும் போல உங்கள் அன்பையும் உற்சாகத்தையும் எதிர்பார்க்கிறேன்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

“என்னப்பா சொல்லறீங்க... போயும் போயும்... இவன், எனக்கு மாப்பிள்ளையா... ஆளைப் பார்த்தாலே பல்லியைக் காய வச்சு கருவாடாக்கின போல இருக்கான்... இவனைப் போயி மாப்பிள்ளைன்னு சொல்லறீங்க...” சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவந்திருக்க முகத்தை அஷ்டகோணலாய் சுளித்துக் கொண்டு கையிலிருந்த போட்டோவை மேசையின் மீது விட்டெறிந்தாள் ஐஸ்வர்யா.

“அச்சோ, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது மா... இந்த பந்தம் இப்ப முடிவானது இல்ல, நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசா இருக்கும்போதே நாங்க முடிவு பண்ணது...”

“என்னப்பா சொல்லறீங்க... சின்னக் குழந்தைல எனக்குப் பிடிச்ச பொம்மையை வாங்கிக் கொடுக்கலாம்... டிரஸ் வாங்கிக் கொடுக்கலாம்... இன்னும் என்னென்னமோ வாங்கி கொடுக்கலாம்... அதெல்லாம் விட்டு நீங்க ஒரு நோஞ்சான் மாப்பிள்ளையை எனக்கு பார்த்து வச்சிருக்கீங்க... எனக்கு இவன் வேண்டாம்...” உறுதியான குரலில் கூறினாள் மகள்.
“அப்படிலாம் சொல்லாத மா... புருசு எவ்ளோ நல்லவன் தெரியுமா... நம்ம குடும்பத்துக்காக அவன் எவ்ளோ நல்லது பண்ணிருக்கான்... நாம அவனுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிட்டிருக்கோம்... உன்னை அவன் பையனுக்கு தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன்... அப்பா வாக்கு பொய்க்கலாமா...” ஏறக் குறைய கெஞ்சுவது போலக் கேட்ட தந்தையை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தாள் மகள்.

“வேண்டாம்பா, அப்பான்னு கூடப் பார்க்க மாட்டேன்... எதாச்சும் சொல்லிடப் போறேன்... ஒருத்தன் நல்லவனா இருந்தா அவார்டு கொடுங்க... நல்லது பண்ணினா திருப்பி நீங்களும் நல்லது பண்ணுங்க... அதைவிட்டு பொண்ணைக் கொடுக்கறேன்... பன்னைக் கொடுக்கறேன்னு எதுக்கு வாக்கு கொடுக்கறீங்க... உங்க நன்றிக் கடனைத் தீர்க்க நான் தான் கிடைச்சேனா...” கோபமாய் கேட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்ட மகளுக்கு எப்படி புரிய வைப்பது என்று திகைத்தார் கோபிநாத்.
அமைதியாய் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மனைவி உஷாவிடம், “உஷு... நீயாச்சும் கொஞ்சம் இவளுக்கு சொல்லிப் புரிய வையேன்...” என்றார்.

“நீங்க சொன்னாலே கேக்க மாட்டா... நான் சொல்லியா கேக்கப்போறா... பேசாம உங்கம்மாவப் பேசச் சொல்லிடுங்க... அவங்கதான் இவளை சரியா சமாளிப்பாங்க...” என்றார்.

“ம்ம்... அதும் நல்ல ஐடியாதான்...” என்றவர் அன்னையின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டு இயர் போனில் வழிந்த மேற்கத்திய இசைக்குத் தகுந்தாற்போல தலையாட்டிக் கொண்டிருந்தார் அவரது அன்னை கோமளவல்லி. காதில் அணிந்திருந்த வளையங்கள் அவரது தலையாட்டலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தது. அணிந்திருந்த சுரிதாரும், கிராப் முடியும் அவரது 70 வயதை குறைத்துக் காட்டிக் கொண்டிருந்தன. மகன் கதவு திறந்தது கூடத் தெரியாமல் பாட்டில் லயித்திருந்தார் கோமளவல்லி.

“அம்மா...” அவர் அருகில் சென்று அழைத்தும் அன்னை கண் திறக்காததால் கையில் தொட்டு அழைத்தார்.

“அம்மா எவ்ளோ நேரமா கூப்பிடறேன்...” என்று தொடங்கியவரை கை காட்டித் தடுத்தவர், “ஐ சே லாட் ஆப் டைம்ஸ் மை சன்... கால் மீ மம்மி, ஓக்கே...” என்றவரைக் கண்டு இஞ்சி தின்ற குரங்கைப் போல் முகம் மாறிய கணவனைப் பரிதாபமாய் பார்த்தார் உஷா.

“அச்சோ சாமி, எப்ப தான் இவங்க ஆங்கில மோகம் தீருமோ எங்களை இப்படிப் படாத பாடு படுத்தறியே கடவுளே...” என மனதுக்குள் கடவுளுக்கு அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தார் உஷா. அமைதியாய் நின்ற கணவனிடம், “என்னங்க, என்ன விஷயம்னு சொல்லுங்க...” என்றார் உஷா.

“அம்மா… சாரி, மம்மி... எனக்கு இம்மீடியட்டா உங்க ஹெல்ப் வேணும்... நம்ம புருஷு பையன் போட்டோவை ஐஷுகிட்டே காட்டினோம்... அவ பையனைப் பிடிக்கலைன்னு ஈஸியா சொல்லிட்டுப் போயிட்டா...”
“ஓ ஐ சீ... ஓக்கே, வாட் கான் ஐ டூ பார் யூ...” அன்னையின் ஆங்கிலத்தைக் கேட்டு மனைவியைப் பரிதாபமாய் பார்த்தார் கோபிநாத்.

“அத்தை, உங்களுக்கே தெரியும்... நாம புருஷோத்தம அண்ணன் மகன் ரகுவரனுக்கு ஐஷுவைக் கொடுப்போம்னு அவங்க சின்ன வயசுலயே வாக்கு கொடுத்தது... படாதபாடுபட்டு அவங்க இப்ப இருக்கிற அட்ரஸ் கண்டுபிடிச்சு இவர் போயி பார்த்துப் பேசிட்டு வந்திருக்கார்... அவங்களும் நம்ம வாக்கை இன்னும் மறக்கலை... இப்ப இவ முடியாதுன்னு சொன்னா எப்படி அத்தை... நீங்கதான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்...” உஷா ஒருவழியாய் விஷயத்தை சொல்லி முடிக்க, “எஸ் மம்மி... உங்களை தான் நம்பிருக்கேன்...” என்றார் கோபிநாத்.

“ம்ம்... ஐ அண்டர்ஸ்டான்ட் யுவர் சிச்சுவேஷன்... ஓகே, ஐ வில் டிரை... வேர் ஈஸ் மை கிரான்ட் டாட்டர்...” கேட்ட அத்தையிடம், “அத்தை ஒரு ரிக்வஸ்ட்... அவகிட்ட இங்கிலீஷ்ல பேசாம கொஞ்சம் தமிழ்ல பேசினீங்கன்னா நல்லாருக்கும்...” என்றார் கெஞ்சலாக.

“வ்வாட்... டாமில்... நோ வே... ஐ கான் வாக் இங்க்லீஷ்... டாக் இங்க்லீஷ்... ஈட் இங்க்லீஷ்...” சொல்லிக் கொண்டே சுரிதார் துப்பட்டாவை ரஜினி ஸ்டைலில் சுழற்றி தோளில் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறிய கோமளவல்லியை இருவரும் திகிலோடு நோக்கி நின்றனர்.

வாழ்க்கைல பிடிச்சது
கிடைக்கறதில்ல...
கிடைக்கறது பிடிக்கறதில்ல...
இந்தா வாழ்ந்துக்கோன்னு
விதி நம்மகிட்ட வச்சு
நீட்டும்போது கம்முனு
வாங்கிக்கணும்...
அப்பத்தான் வாழ்க்கை
ஜம்முனு போகும்...

danush-at-heritage-car-rally-stills09.jpg
 
#3
:D :p :D
உங்களுடைய "ஆருயிரே
என் ஓருயிரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 
Last edited:
#10
இண்ட்ரோவே அமர்க்களமா இருக்கே,
லதா டியர்
கோமளவள்ளி பாட்டியின் ஆங்கில அலப்பறை தாங்கலையே
ஹா ஹா ஹா
என்ன மிஸ்டர் கோபிநாத்
பொண்ணுக்கும் பயப்படுறீங்க
அம்மாவுக்கும் பயப்படுறீங்க
வெரி பேடு வெரி பேடு
ரகுவரன்தான் ஹீரோவா?
புருஷ்ஷோட பையனை பார்த்தவுடன் பிடிக்காது பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்ங்கிறதுக்காக தனுஷ்ஷின் போட்டோ போட்டிருக்கீங்களா,
லதா டியர்?
ஹா ஹா ஹா
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement