அவளே என் தோழனின் வசந்தம்-6

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம்-6



இடம்-மும்பை

2019



அது ஓரு மில் அந்த மில்லின் அலுவலக அறையில் ரிஷி மிகவும் கோபமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் அவனுக்கு புரியவில்லை எவ்வாறு தீ விபத்து நடந்தது என்று இத்தனைக்கும் அவன் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் எப்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக தான் செய்திருப்பான் ஏனென்றால் ஒரு உயிரின் விலை அவனுக்கு நன்றாக தெரியும் அவனுக்கு இதெல்லாம் விட பெரியது தன் மேல் உள்ள பழி வெறியில் தன்னுடைய வேலையாட்கள் பாதிக்க பட்டால் அதற்கு காரணமானவர்களை ஒரு போதும் அவனால் மன்னிக்க இயலாது காரணம் அவன் தந்தை ரகுராம்வர்மா அவர் அத்தனை பெரிய சம்ராஜ்ஜியத்தை நடத்தினாலும் அவ்வளவு பெரிய பணக்காரராய் இருந்தும் தொழிளாலிகள் தான் உண்மையான மனிதர்கள் அவர்கள் அவர்களின் கையால் உழைத்து சாப்பிடுகிறார்கள் ஆனால் நாமோ சொந்தமாக தொழில் செய்கிறோம் என்று அவர்களின் உழைப்பில் கிடைத்த வேகுமதியில் கால்பங்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு மூக்கால்பங்கை நாம் எடுத்துக்கொண்டு அவர்களையும் மதிப்பது இல்லை அவர்கள் உயிரையும் தான் என்று கூறுவார் கூறுவதோடு அல்லாமல் அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் அதனால் தானோ என்னவோ அவர் இறந்த போதும் ரிஷி சிறியவனாய் இருந்தபோதும் அவர்கள் வேலையை விட்டுச் செல்லாமலும் வேலையில் எந்த தவறும் செய்யாமலும் விசுவாசமாகவும் உண்மையாகவும் ஒத்துழைப்போடும் இருந்தனரோ?.அதோடு எதிரி அவன் முதுகில் குத்த பார்ப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவனின் கோபம் கண்டு ராம் நடுங்கிக் கொண்டும் சித்திற்க்கு மனதில் அர்ச்சனை செய்து கொண்டும் இருந்தான் பின் அர்ச்சனை செய்யாமல் என்ன செய்வான் இப்போது வந்துவிடுகிறேன் என்று சொல்லிக் சென்ற சித் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை என்றால் அவனுக்கு கோபம் வரத்தானே செய்யும் அதோடு அங்கு அவன் மட்டும் இல்லை அவனோடு மற்ற மேல்நிலைப் பணியாளர்களும் இருந்தனர் அவர்களும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தனர் அப்போது திடீரென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு எல்லோரும் நிமிர்ந்து பார்த்தனர் அங்கு ரிஷி ருத்ர மூர்த்தியாக டேபிள் கண்ணாடியை உடைத்துவிட்டு கையில் இரத்தம் வடியகண்களில் கனலோடும் நின்று கொண்டிருந்தான் அவனால் எவ்வளவு முயன்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை சிறிது நேரம் கழித்து ரிஷி ராமை அழைத்தான் ராம் அவன் அருகில் சென்றான்

ராம் இன்று என்னை கேள்வி கேட்ட அந்த பத்திரிகையாளர்களின் முழு தகவலும் எனக்கு இன்னும் அரைமணி நேரத்தில் என்னுடைய டேபிளில் இருக்க வேண்டும்–ரிஷி

பாஸ் பாதி தகவல் கிடைச்சுடுது இன்னும் கொஞ்சம் தான் கிடைத்தவுடன் உங்கள் டேபிள் மேல் இருக்கும்- ராம்

ராம் இவ்வாறு கூறியவுடன் ரிஷிக்கு ஹரிஷின் ஞாபகம் வந்தது அவன் இங்கு இருந்திருந்தால் ராமை விட வேகமாக அவன் அதாவது ராம் ஆவது ரிஷி கேட்கும்போது தன் பாதி தகவலை திரட்டியிருந்தான் ஆனால் ஹரிஷ் இருந்தால் இதற்குள் அதாவது ரிஷி கேட்பதற்கு முன் அவன் முன்னால் அந்த தகவல் இருந்திருக்கும் அதேபோல இந்நேரம் இப்பிரச்சனையை முடிக்க ஏதாவது ஒரு வழியை கண்டு பிடித்திருப்பான் என்பதும் அவன் நினைவில் ஆடி அவனை கலங்கச் செய்தது

சிறிது நேரத்தில் தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்வது என்று யோசிக்க ஆரம்பித்தான் அவனுக்கு பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நஷ்டம் ஆனதைப்பற்றிய கவலை அவனுக்கில்லை அவனுக்கு இருந்ததெல்லாம் விபத்தில் இறந்தவர்களைப் பற்றிய கவலையும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களை பற்றிய கவலையும் தான்

இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன செய்வது என்றும் காயம் பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் என்ன செய்வது என்றும் யோசிக்க ஆரம்பித்தான்

அப்போது சரியாக சித் உள்ளே நுழைந்தான்

இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட ஆக்சிடன்ட் யாரோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவற்றை குறிப்பாக அகற்றியுள்ளனர் சார்ட் சர்க்கூயூட் போல காட்ட முயற்சித்துள்ளனர் சிசிடிவி கேமராவை இன்னும் பார்க்கவில்லை அதைப் பார்த்தால் அதில் ஏதாவது தெரியலாம் ரிஷி- சித்

பாஸ் சிசிடிவி புட்டேஜ்செக் பண்ணிட்டேன் ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை – ராம்

ரிஷி சிறிது நேரம் அமைதியாக இருந்தான்

ரிஷி மனதில் நம்மை சுற்றியுள்ளவர் எவரோ தான் நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றார் என்று உணர்ந்தான்

ராம் காயம்பட்ட வேலையாட்களுக்கும் இறந்த வேலையாட்களுக்கும். அவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுத்து விடு அதோடு அவர்கள் வீட்டில் உள்ள வேலை செய்யும் வயதில் உள்ள யாருக்காவது அவர்கள் தகுதிக்குத் தகுந்த வேலையை நம் அலுவலகத்திலேயே கொடு அவர்களுக்கு அவர்கள் வேலைக்கு இருமடங்காக சம்பளம் கொடுத்துவிடு

காயம்பட்டவர்கள் வேலைக்கு வரும் வரை தான் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை என்று இல்லை அதன் பிறகும் அவர்கள் விரும்பினால் வேலை பார்க்கலாம் ஆனால் சம்பளம் அவர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம்தான் என்பதை அவர்களிடம் கூறிவிடு மாலை பத்திரிகை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடு - ரிஷி

சரி பாஸ்-ராம்

ரிஷி ராமை முறைத்தான் அவன் முறைப்பதை கண்டு ராம் திடுக்கிட்டு விழித்தான்

ராம் உன்னிடம் எத்தனை முறை கூறியுள்ளேன் என்னை பாஸ் என்றழைக்காத அண்ணா என்று அழை என்று கூறி உள்ளேன் தானே

பாஸ்……….

முறைக்காதீங்க பாஸ்

பின்ன முறைக்காமஉன்னை கொஞ்சனுமா பாஸ் பாஸ் என்று கொள்ளைக் கூட்டத் தலைவன் கூப்பிடுவது போல் ஏன் கூப்பிடுகிறாய் சகிக்கவில்லை

என்ன பண்ணப் பாஸ் அப்படியே கூப்பிட்ட பழகிவிட்டது

அப்போ அண்ணா என்றழைத்தது

அது அப்போது நான் உங்களிடம் வேலை செய்யவில்லை

இவர்களின் இந்த பேச்சில் சித் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு தலையைபிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது

ரிஷி இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது நீ இவ்வளவு சாதாரணமாக இவனிடம் முறை வைத்துக் கூப்பிட கெஞ்சிக் – சித்

சித் இவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த அறையின் கதவை திறந்து கொண்டு பரபரப்பாக ஒரு மனிதர் ஓடி வந்து ரிஷியின் கால்களில் விழுந்தார் அவர் ரவிதாஸ்

ரவி தாஸ் அவர் ரிஷிக்கு நிகரானவர் தான் குணத்தில் இல்லை பணத்தில் மட்டும்

அவருக்கு முதலில் ரகுராம்வர்மா பெரும் தலைவலியாக இருந்தார் அவர் போனபின் தான் முன்னேறலாம் என்று நினைத்தால் இப்போது ரிஷி பெரிய தலைவலியாக இருந்தான் அதனால் அவன் பெயரை கெடுக்க அவர் நிறைய தில்லுமுல்லுகளை செய்தார் அதில் ஒன்றுதான் இந்த தீ விபத்து அவராவது அவனின் ஒரு டெக்ஸ்டைலை எரிக்க உதவி தான் செய்தார் ஆனால் ரிஷி அவரின் அடிமடியிலேயே கை வைத்து விட்டான்

அதாவது அவரின் தொழில்களில் 90 சதவீத பங்குகளை ரிஷி அவருக்குத் தெரியாமல் வாங்கியதோடு அவர் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தவர்களிடம் அவர்களைத் தூண்டிவிட்டு நோட்டீஸ் அனுப்ப. வைத்தான். அதனால் இப்போது அவர் நடுத்தெருவில் தான் அதோடு அவரின் குடும்பத்தை தூக்கி விட்டான்

ரிஷி நான் தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடு என் குடும்பத்தை விட்டுவிடு ரிஷியின் காலில் விழுந்து ரவி தாஸ் கதறினார்

ரிஷி அமைதியாக சென்று தன் சுழல் நாற்காலியை இழுத்து வந்து அவர் முன்னால் போட்டு அதில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவரைப் பார்த்தான் அதோடு மற்ற மேல்நிலைப் பணியாளர்களை சைகையால் வெளியேற சொன்னான் இப்போது அந்த. அறையில் ரிஷி ராம் சித் இவர்கள் தான் இருந்தனர்

அவர் கண்களில் பயத்துடனும் நடுக்கத்துடனும் ரிஷியை கண்டு கைகூப்பினார்

ரிஷி அவரை தன் ஆள்காட்டி விரலால் எழுந்திருக்குமாறு சைகை செய்தான் பின் அவரிடம் அனு எங்கே என்று கேட்டான் அவர் திகைப்புடனும் அதிர்ச்சியுடனும் அவனைப் பார்த்தார் தன் எச்சிலை விழுங்கி கொண்டார்

ரிஷி மறுபடியும் அவரைப் பார்த்து அழுத்தமாக அனு எங்கே என்றான்

ரிஷி. அனு காணாமல் சென்று 3 வருடம் ஆகிறது இப்போது இவரிடம் சென்று விசாரிக்கிறாய் இவருக்கும் அனுவிற்கும் என்ன சம்பந்தம்– சித்

சித் அப்படி கேட்டவுடன் ரிஷி கோபமாக எழுந்து சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்தான் அதில் சித்தார்த்தே ஒரு நிமிடம் நடுங்கி விட்டான்

ரிஷி திரும்பி மூன்றாவது முறை போன முறையை விட அழுத்தமாகவும் ஆனால் அதே சமயம் அமைதியாகவும் ரவிதாஸின். முகத்தை தீனமாக பார்த்துக்கொண்டும் அனு எங்கே என்று கேட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top