அவளே என் தோழனின் வசந்தம்-5

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம்-5



2019ஆம்ஆண்டு



இடம் --- கன்னியாகுமரி



அநு தன்னுடைய கடந்த காலத்தில் நடந்தவற்றை நியாபகபடுத்த முயன்று பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு இரண்டு காட்சிகள் தெளிவு இல்லாமல் மங்கலாக தெரிந்தன



ஒன்று ஒரு நடுத்தர வீட்டில் உள்ள ஒரு படிக்க வேண்டும் படுக்கை அறையில் ஒரு நடுத்தர வயது பெண்மணி தன்னை தூக்கத்திலிருந்து எழுப்ப முயற்சிப்பது போல தோன்றியது



மற்றொன்று ஒரு பெரிய பங்களாவில் தன்னை துரத்திக்கொண்டு இருவரும் ஓடி வருவது போலவும் தான் அவர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக ஓடுவது போலவும் பின் மறைந்திருந்து அவர்கள் மேல் நீரை கொட்டுவது போலவும் என ஒர் வடிவம் இல்லாத இரண்டு மூன்று காட்சிகள் அவள் கண்முன் மாறி மாறி வந்தன அது அவளுக்கு பெரும் தலைவலியை கொடுத்ததோடு பயத்தையும் கொடுத்தது



இந்த பயத்தால் தன் காதுகளில் கைகளை வைத்துக் கொண்டு சுருண்டு அமர்ந்திருந்த அவளை ஒரு பிஞ்சு கைகளின் ஸ்பரிசம் அவள் நினைவுகளில் இருந்து மீட்டு எடுத்தது



அங்கு அவள் மகன் மது அவளின் முகத்தை பாவமாக பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவனை கண்டவுடன் அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு

மது கண்ணா ஐயம் சாரிடா என்ன மன்னிச்சிடு இந்த அம்மாவ மன்னிச்சிடு மது சாரி கண்ணா என்று அழுதாள்

அதற்கு அவள் மகன் அநுவின் கண்ணீரை துடைத்துக் கொண்டே அம்மா நீ அழாத நான் இனி ஒழுங்கா இருக்கேன் இனிமேல் யார்கிட்டயும் சண்டைக்கு போக மாட்டேன் என்று மழலையில் கூறினான்



இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு மும்பையில் அனு மும்முரமாக எல்லா இடங்களிலும் தேடப்பட்டு கொண்டிருந்தாள்

----------------------------------------------------------------------------------------------------------------------------



2019ஆம்ஆண்டு



இடம்----மும்பை



ரிஷியின் இல்லம்



அந்த பெரிய சோஃபாவில் அமர்ந்து ரிஷி அலுவலக கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான்



அப்போது தன் பக்கத்தில் ஏதோ நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அங்கு சித்தார்த்தும் அவன் மனைவி சாராவும் நின்று கொண்டிருந்தனர்



சித்தார்த் இவன் மும்பையின் டெபுடி கமிஷனர் ஆக சிறுவயதிலேயே பணியமர்த்தப்பட்டவன் அதற்குக் காரணம் இவனின் திறமை என்று கூறினாள் மிகையாகாது இவனும் ரிஷியின் நெருக்கத்துக்கு உரியவனே

சாரா இவள் மகப்பேறு மருத்துவராக வர்மா ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது



ஏன் ரிஷி இப்படி இருக்க நிஜமான ரிஷிகயாவே மாறிட்டாயா-சாரா

சாரா இப்படி கேட்பதற்கு காரணம் இருக்கிறது அதாவது கம்பீரமாக எப்பவும் சிரிப்புடனும் அதனால் கன்னத்தில் ஏற்படும்குழி யுடனும் இருக்கும் ரிஷி இன்றுகண்களில் ஜீவன் இன்றியும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டோம் கன்னங்களில் தாடியுடனும் இருந்தால் என்ன செய்வது அவன் இவ்வாறு இருப்பதற்கு காரணம் அனு தொலைந்த்தால் என்று அனைவரும் நினைத்திருந்தனர் ஆனால் அதற்கு காரணம் அவன் அனு மேலே அவன் வைத்திருந்த காதலை உணர்ந்த்தால் தன்னையே வெறுக்கிறான் என்று தெரிந்தால்



ரிஷி அனு எங்க இருக்கா அப்படின்னு கண்டுபுடிச்சிடலாம் ஆனா நீ கொஞ்சம் உன்ன மாத்திக்கணும்

அனுவுக்கும் ஹரிஷுக்கும் எப்படி ஆக்சிடன்ட் ஆச்சு அப்படின்னு விசாரித்துக் கொண்டு தான் இருக்கேன் அது முன்னாடியே பிளான் பண்ணப்பட்ட ஆக்சிடென்ட் தான் அப்படின்னு நிறுபனம் ஆயிடுச்சு ஆனால் எதுக்காக அப்படிங்கறது தான் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை அதையும் சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம்-சித்

அதே மாதிரி அணுவையும் கண்டுபிடித்து விடலாம் நீ அதுக்காக இப்படி உன்னையே வருத்திக்காதே-சித்

ரிஷியின் நிலையைக் கண்டு இவர்கள் வருடிக்கொண்டிருக்க இவர்களின் வருத்தத்தையும் ரிஷியின் நிலையையும் நினைத்து வேறு ஒரு இடத்தில் இருந்த நான்கு ஜோடி கண்களில் ஆனந்தம் குடி புகுந்தது என்றால் ஒரு ஜோடி கண்கள் மட்டும் இது போதாது இன்னும் அனுபவிக்க வேண்டியது உள்ளது என்று குறிப்பு காட்டியது



அதோடு ரிஷியை இன்னும் ஒன்றுமில்லாமல் வீழ்த்துவதற்கு அடுத்த சதித் திட்டத்தையும் உருவாக்கியது

அதன் எதிரொலி ராமின் தொலைபேசியாக ஒலித்தது



அதாவது மும்பையில் உள்ள வர்மா டெக்ஸ்டைல் ஷோரூம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது அதில் இருபத்திஐந்து பேர் அவ்விடத்திலேயே இறந்துவிட்டனர் என்றும் கிட்டத்தட்ட ஆறுபத்திஇரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர் என்றும் அவற்றில். பதினைந்து பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராமின் தொலைபேசி வாயிலாக தகவல் வந்து சேர்ந்தது இதை கேட்ட ராம் உடனே டிவியை ஆன் செய்து விட்டான் அதில் வந்த ஸ்க்ரோலை கண்டவுடன் ரிஷி ராம் சித் மூவரும் அந்த ஷோரூமை நோக்கி விரைந்தனர்



அங்கு அவர்கள் சென்றவுடன் அவ்வளவு நேரம் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள அந்த ஷோரூம். மனேஜரை உளுக்கிக். கொண்டிருந்த பத்திரிக்கைகள். ரிஷியை கண்டவுடன் அவனை சூழ்ந்து கொண்டு சகட்டு மேனிக்கு கேள்விகளை கேட்க தொடங்கியது



ரிஷியிடம் சார் இந்த தீ விபத்து நீங்க ஸேக்யூரிட்டி மேஷர்ஸ் சரிய பின்பற்றாததுனால தான் அப்படின்னு சொல்லராங்களே அப்படியா என்று ஒரு நிருபர் கேட்டு முடிக்கவில்லை அதற்குள் மற்றொருவர் சார் போன வருஷம் சென்னை சில்ஸ்ல நடந்த மாதிரி பணத்துக்காக தான் இந்த தீ விபத்து அப்படின்னும் இதை நீங்க தான் பண்ணினீங்க. அப்படின்னும் பேசிக்கறாங்க நீங்க என்ன சொல்றீங்க சார்

அதற்கு ரிஷி கேள்வி கேட்ட அந்த இரண்டு நீருபர்களையும் ஒரு நிமிடம் நிமிர்ந்து அவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் ரிஷி தங்களை நிமிர்ந்து பாத்த உடனேயே தங்கள் தலையை குனிந்து கொண்டனர்



பின் ரிஷி யாருடைய கேள்விக்கும் எந்தவித பதிலும் சொல்லாமல் அங்கிருந்து அகன்றான்





இதிலிருந்து ரிஷி எப்படி மீள்கிறான் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்









வசந்தம்பூக்கும்…………………………………
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top