அவளே என் தோழனின் வசந்தம்-4-ஆ

Advertisement

surthi

Well-Known Member
மதர் லூயிஸ் அங்குள்ள சர்சில் பாதிரியாராக மட்டுமின்றி அந்தசர்ச் டிரஸ்ட்டின் மூலியமாக நடத்தப்படும் அனாதை இல்லத்தை பொறுப்பேற்று நடத்துபவர்(மேரி வளர்ந்த அனாதை இல்லமும் அதுவே ஆகும்).



ஆன் இன்னொரு முக்கிய ஒருவரைப் பற்றி சொல்ல மறந்துட்டேன் அது ஜோசப் மேரியின் மகன் கிறிஸ்டோபர் ராஜ் ரகுவுக்கு அதாவது மாதவ் கிருஷ்ணாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பன் பார்ப்பதற்கு அமைதியானவன் ஆக தெரியும் ஆனால் இவன் தந்தையைப் போல் தான் ஆனால் மாதவ் அளவிற்கு குறும்புக்காரன் இல்லை அதே நேரத்தில் மாதவ் செய்யும் குறும்புத்தனங்கள் கூட இருந்து ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் சொல்வதை அச்சுப் பிசகாமல் செய்பவனும் இவன் தான் இத்தனைக்கும் இவன் மாதவைவிட இரண்டு வயது பெரியவன் அதாவது மாதவிற்க மூன்றரை வயது தான் ஆனால் கிறிஸ்டோபர்ற்கு ஐந்து வயது ஆகிறதுஅதோடு மாதவை தன் குழந்தையாக பாவித்து அவனை தன் சிறகுக்குள் அடை காப்பது போல் மற்றவரிடமிருந்து காப்பாற்றுபவன் அண்ணன் நண்பன் ஸ்கூலில் ஒரு சில சமயம் மாதாவிற்கு தாயாக கூட நடந்து கொள்பவன்.

சரி இனி அநாமிகா என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா



அநாமிகா அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து மிக வேகமாகவும் பரபரப்பாகவும் கிளம்பிக்கொண்டிருந்தாள் பின் பரபரப்பாக கிளம்பாமல் என்ன செய்வாள் அவள் மகனை பள்ளியில் கொண்டுவிட்டுவந்துமுழுதாக இரண்டு மணி நேரம் கூட ஆகவில்லை அவள் மகன் செய்து வைத்திருக்கும் காரியத்தால் அவள் வேலையில் இருந்த போது அவள் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது அதாவது அவளுடைய மகன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று அவன் பள்ளியில் இருந்து அழைத்திருந்தார்கள்.



ஆனால் அவளுக்கு தெரியும் அவள் மகன் விழுந்திருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது ஆனால் வேறு யாருக்காவது அவனால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று சரியாக கணித்து விட்டாள் ஏனென்றால் அவர் மகன் தான் பெரிய குறும்புக்காரன் ஆயிற்றே அவன் செய்யும் குரங்கு வித்தைகளும் கோமாளித்தனங்களும் மற்றவர்கள் தங்களை மறந்து ரசிக்கும்படி இருந்தாலும் அது கண்டிப்பாக யாராவது ஒருவருக்கு பிரச்சனை கொடுப்பதாகவே முடியும் அதுவும் அப்படி ஒருவருக்கு அது பிரச்சினை கொடுத்தது என்றால் அந்நபர் இவர்களுக்கு அதாவது தாய்க்கோ அல்லது மகனுக்கோ ஏதாவது தொந்தரவு கண்டிப்பாக கொடுத்திருப்பர் அதற்கு பதிலடி தான் அவள் மகன் செய்யும் காரியம்.



அவள் வந்த வேகத்திற்கு பள்ளியை வந்து அடைந்திருந்தாள் தங்கள் பள்ளியின் வந்து அடைந்ததும் அவன் கண்டது அவள் மகனை பிடிக்க அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரும் அவனின் எல்லா பக்கமாகும் ஓடிக்கொண்டிருக்க அவனும் நான் யார் கைகளுக்கும் பிடி பட மாட்டேன் என்று வளைந்து நெளிந்து அப்படியே பிடிபட்டாலும் மெதுவாக நழுவியோ இல்லை அவர்களைப் பார்த்து சிரித்தோ இல்லை அவர்களிடம் மயக்கும்படியாக பேசியோ யாரிடமும் சிக்காமல் தலையில் கட்டுடன் ஓடிக்கொண்டிருந்தான் மாதவ் கிருஷ்ண ரகு------- அவனைப் பிடிக்க வந்தவர்களில் சிலருக்கு கைகளிலும் கால்களிலும் கட்டு இருந்தது..



இதைக் கண்டு திகைத்து நின்றிருந்தால் அநாமிகா

அவள்திகைத்து நின்றதற்கான காரணம் மாதவின் தலையில் இருந்த கட்டோ இல்லை மற்றவர்கள் அவனைத் துரத்தியதோ இல்லை அவள் திகைத்து நின்றதற்கான காரணம் கிறிஸ்டோபரின் தலையிலும் கையிலும் இருந்த கட்டு தான் அப்போது தான் கிறிஸ்டோபருக்கும்(இனி ராஜ்) அடிபட்டது தெரிந்து வந்திருந்த மரியம் அநாமிகாவை பார்த்து விட்டு அவளிடம் வந்து அவள் தோளைத் தொட்டார் யாரோ தன் தோளைத் தொடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்அங்கு மரியம் நிற்பதைக் கண்டு ஒன்றும் கூறாமல் திரும்பி மாதாவின் முன் சென்ற நின்றாள் தன் முன்னே தன் தாயை கண்டவுடன் அதுவரை ஓடிக்கொண்டிருந்த மாதம் அவளைக் கண்டவுடன் திருட்டு முழி முழித்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவன் முழிப்பதை கண்டு மற்றவர் எல்லோரும் அவனின் அந்த கண் உருட்டலில் ஒரு நிமிடம் மயங்கி நின்றனர் என்று கூறினால் மிகையாகாது.





சிறிது நேரம் கழித்து எல்லா நடைமுறையையும் முடித்துக் கொண்டு எல்லோரும் வீட்டுக்கு வந்தனர் வீட்டிற்கு வந்தவுடன் மரியம் ராஜை தூக்கிக்கொண்டு பொய் படுக்கையில் விடச் சென்றார் அந்த நேரத்தில் அனாமிகா மாதவை போட்டு அடி பின்னி எடுத்து விட்டாள் ஆனால் மாதவோ அவள் அடித்த அந்த அடிக்கு எந்த ஒரு எதிர்ப்போ சத்தமுமின்றி அமைதியாக அமர்ந்திருந்தான்.



அப்போது தான் தங்கள் மகனுக்கும் அடிபட்டிருப்பது தெரிந்து வந்திருந்த மேரி-ஜோசப் தம்பதி அநாமிகா மாதவை போட்டு அடிப்பதை பார்த்து விட்டு இருவரும் ஒடி வந்து ஜோசப் அநாவிடம் இருந்து மாதவை பிரிக்க மேரி அநாவின் கைகளை பிடித்து அவளை தள்ளி இழுத்து சென்றாள்



பின் மேரி அநாவை அமர வைத்து தண்ணீர் பருக வைத்துவிட்டு



என்ன அநா ஏன் இப்படி பண்ற எதுக்காக கிருஷ் போட்டு இந்த அடி அடிக்கிறே



பின்ன என்ன மேரி அக்கா அவன் செய்து வைத்திருக்கும் வேலையால் ராஜ்ற்க்கு எப்படி அடி பட்டிருக்கு தெரியும்மா அதுமட்டுமல்லாமல் இவனோட குறும்புத்தனமும் சேட்டையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கு இன்னிக்கு எதுக்காக இப்படி செய்தான் கேளுங்க அக்கா





அநிமா இன்னிக்கு நடந்ததில் கிருஷ்ணா மேலே எந்த தப்பும் இல்லை அந்த கிரண் அம்மா இல்ல அவங்க தான் கிருஷ் கிட்ட கிருஷ்க்கு அவனோட அப்பா இல்லாததுனால அவன் கூட சேரக்கூடாதுனும் உங்கள பத்தி நீங்க தப்பா ஆனவங்க அப்படின்னும் கிரணோட அம்மா ஒரு மாதிரி நேத்து பேசினாங்க அத பாத்து மத்த பசங்க எல்லாம் எப்படி சிரிச்சாங்க தெரியுமா இத அவன் என்கிட்ட சொன்னவுடனே நான் தான் இன்னைக்கு அவங்கள ஏதாவது பண்ணனும் அப்படின்னு ஸ்கூலுக்கு போனவுடனே ஒரு மரத்து மேலே ஏறி அதிலிருந்து கிரண் அம்மா வரும் போது வரும்போது அவங்க மேல பெரிய கல்லு எறிய சொன்னேன் அவனும் எறிஞ்சான் அப்படி எரியும் போது அவன் கால் தடுக்கி கீழே விழப்போனான் அவன் கீழே விழுந்தத பார்த்து நான் பிடிக்கப் போகும் போது எனக்கும் அடிபட்டிச்சு இதில்ல கிருஷ்ணா மேலே என்ன தப்பு அவங்கப்பா இல்லாதது அவன் பண்ண தப்பா சொல்லுங்க அநிமா கிரணோட அம்மா நேத்திக்கு எவ்வளவு தப்பா எவ்வளவு கடுமையா பேசினாங்க தெரியுமா-ராஜ்



இதைக் கேட்டவுடன் மேரியும் ஜோசப்பும் மரியமும் அநாமிகாவை கேள்வியாகவும் குற்றம் சாட்டும் பார்வையுடனும் பரிதாபத்துடனும் பார்த்தனர்



அவர்களின் பார்வையை தாங்கிக்கொள்ள முடியாத அனாமிகா ஓடிச்சென்று ஒரு ரூமினுள் அடைந்து கொண்டாள்



ரூமினுள் இருந்த அநாமிகாவிற்க்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை அவளால் தன் மகனின் தந்தையைப் பற்றி ஒன்றும் கூற இயலாது ஏனென்றால் இப்படி ஒரு மகன் உருவானதே அவன் தந்தைக்கு தெரியாது அதாவது மாதவ் அவன் தந்தை சுய நினைவோடு இருக்கும் போது உருவானவன் அல்ல இதை எப்படி மாதவிடம் அவளால் கூறமுடியும் அதோடு அவளுக்கு தான் யார் என்றே இன்னும் தெரியாத புரியாத நிலையில்தான் எப்படிப்பட்ட நிலையில் இந்த ஊருக்கு வந்தோம் இப்போது என் நிலையில் இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது அவளால் கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை

------------------------------------------------------------------------------------





இதே நேரத்தில் மும்பையில் ரிஷி ஒரு பக்கம் அனுவைத் தேடிக் கொண்டிருக்க மறுபக்கம் வில்லன்களும் அனு தங்கள் கைக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று மும்மரமாக அவளை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருந்தனர்.











வசந்தம் பூக்கும்................................................................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top