அவளே என் தோழனின் வசந்தம் -1

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம்-1


2016 ஆம் ஆண்டு - ஜனவரி மாதம்


நிலா மகள் தன் வேலை நேரம் இன்னும் சில மணித்தியாலங்களில் முடிவதோடு தான் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தாள். அதற்கு அந்நிலா மகள் ஆயத்தம் செய்யும் போது கதிரவன் தன் மேல்லேழுப்பினான். அந்நேரத்தில் மும்பை நகரத்தில் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் ###### அந்த பகுதியில் ஓர்பெரிய அரண்மனையின் மேல் தளத்தில் உள்ள அறையில் ( அது ஒரு படுக்கை அறை என்று சொன்னால் நடுத்தர மக்கள் என்னை அடிக்க வந்து விடுவார்கள் ) அந்த அளவிற்கு மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு முழு வீட்டையே உள்ளடக்கியிருந்த இருந்த அறையில் இரண்டு ஆர்6 ரக ஆடி காரையே நிறுத்தும் அளவிற்குள்ள இடத்தையே முழுவதும் அடக்கி இருக்கும் அந்த பெரிய கட்டிலின் மெத்தையில் ஒரு ஓரத்தில் ரிஷி உறக்கத்தில் இருந்தான் . அவன் தூங்குகிறான் என்று பெயர் ஆனால் தூக்கத்தில் கூட தன் உள்ளுணர்வுகளையும் மூளையையும் விழிப்புடன் வைத்திருப்பவன் அவன் பக்கத்தில் அவனின் அன்புக்குரிய. (இம்சைக்குரிய)மனைவி நோநோநோ தோழி அதாவது அவனுக்கு தான் தோழி ஆனால் அவளுக்கு? அவள் அனுரிதா . ரிஷிக்கும் அவன் குடும்பத்தார்க்கும் தான் அவள் அனுரிதா அவளை பொறுத்தவரை ? . சிறிது நேரத்தில் ரிஷி கண் விழித்தான் அப்போது தன் அருகில் நிர்மாலமான முகத்துடன் அவள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனுவை பார்த்து பெருமூச்சுடன் தன் காலை கடன்களை முடிக்கச் சென்றான் .


(இந்நேரத்தில் அவனைப் பற்றி முழுமையாக பார்த்து விடுவோம்)
ரிஷி அவனின் முழு பெயர் ரிஷிதேவ்யாதவ்வர்மா 29 வயது இளைஞன் . இவனின் தாய் தந்தைரிஷி பத்து வயது சிறுவனாக இருக்கும் போது எதிர்பாரா விபத்தில். சிக்கி உயிர் இழந்து விட்டனர் அதன் பின் இவனை வளர்த்தது இவன் தாய் ஜானகியின் தங்கையாகிய காயத்ரி தான் . ஜானகி விபத்தில் இறக்கும் போது காயத்ரிக்கு வயது 21 அப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது அத்திருமணம் ரிஷியின் மனநிலையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றுணர்ந்த காயத்ரி அத்திருமணத்தை நிறுத்தியதுடன் வேறுறொரு திருமணமும் செய்துக் கொள்ளவில்லை .


இப்போது ரிஷி வர்மா இன்டஸ்டீரிஸின் ஒரே வாரிசு . வர்மா இன்டஸ்டீரிஸ் என்பது (1.varma jewellery showrooms,2.textile showrooms 3.textile industries,4.construction industries,5.varma financial services 6.varma hospitals,7.varma pharmaceuticals). அதோடு அவன் தந்தை தென் இந்தியாவில் ஆரம்பித்த தேவ் குருப்ஸ் ஆஃப் ஸ்கூல்ஸ் ஆண்ட் காலேஜஸ்ஸின் எம்.டி இவன் ( 1.dev boarding schools ,2.dev CBSE schools,3.dev Matric schools,4.dev medical colleges ,5.dev arts and science colleges,6.dev’s fashion technology 7.dev engineering colleges ) PLUS VARMA’S AND DEV’S CHARITABLE TRUSTS .இவன் தந்தையும் இவன் பாட்டனார்களும் சேர்த்து வைத்ததுபோதாது என்று ரிஷியும் தனியே ஜெ.ஆர் (J.R ) செயின்ஸ் ஆஃப் ஹோட்டல்ஸ் அண்ட் ரேஸ்டாரண்டை நிறுவி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறான்.


ரிஷி/யது என்று நெருங்கிய நண்பர்களாலும்

தேவ்/ரிஷிகண்ணா என்று பெற்றோர்களாலும்

தயா/ஷிவ் என்று அவன் மனம் கவர்ந்தவளாலும்

ஆர்.வி என தொழில் வட்டத்தாராலும் அழைக்கப்படும் அவன் ஆறு அடி உயரம் தினமும் உடற்பயிற்சி மற்றும் கட்டுக்கோப்பான உடல் கம்பீரமான நடை மும்பை இந்தியர்களுக்கே உண்டான வெள்ளை நிறமும் அது மட்டுமின்றி அவனின் நீலக் கண்களும் கன்னத்தில் விழும் குழியும் அவனை பார்ப்பவரை சுண்டி இருப்பதோடு அல்லாமல் அவனின் முக்த்தில் உள்ள தேஜஸ் எல்லாம் ரிஷியை முதல் முறை பார்ப்பவரை திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும் .


(இனி ரிஷி என்ன செய்கிறான் என்று பார்ப்போம்)
ரிஷிகாலை கடன்களை முடித்து விட்டு ஜாக்கிச் செல்ல தயாரானான் அப்போது காலை மணி ஆறு தன் அறையை விட்டு வெளிவந்து மாடியில் இருந்து கீழிறங்கினான் அப்போது தான் ஓர் இருவர் எழத் தொடங்கி இருந்தனர் ரிஷி யாரையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய ஒட்டத்தை தோட்டம் சுற்றி ஓட ஆரம்பித்தான் .


(ரிஷி ஓடிக் கொண்டிருக்கும் போது நாம் ரிஷியின் அரண்மனையை பற்றி பாப்போம் வாங்க)
ரிஷியின் வீடு மூன்று தளங்களை கொண்ட வீடாகும் அந்த வீட்டை சுற்றி விண்ணளவு மதில்களும் பத்து/பன்னண்டு அடி உயர பெரிய வாசற்கதவுகளும் அந்த கதவின் பக்கத்தில் ஆறு/ஏழு பாதுகாவலர்கள் சுற்றி கொண்டிருந்தனர் அந்த வாசற் கதவை தொடர்ந்து ஒன்றை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நீள் கார் ஓடும் பாதை அந்த பாதையின் இருமருங்கிலும் கண்ணைப் பறிக்கும் மலர்களும் செடிகளும் மலர்கள் பூத்தும் செடிகளில் காய் கனிகள் காய்த்தும் பழுத்தும் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தது அதை தொடர்ந்து இடது பக்கம் ஒரு பெரிய போர்டிக்கோவும் அதில் பத்து /பண்ணண்டு கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன வலது பக்கம் வீட்டின் முக்கிய நுழைவாயில் இருந்தது வீட்டின் நுழைவாயிலுக்கு அடுத்து பெரிய வரவேற்பு அறையும் அதை தொடர்ந்து பெரிய ஹாலும் இருந்தன ஹாலின் இடப்பக்கத்தில் விஸாலமான சாமி அறையும் வலப்பக்கத்தில் நான்கு கெஸ்ட் ரூம்களும் இருந்தன ஹாலை தொடர்ந்து இருபது முப்பது நபர்கள் சாப்பிடும் அளவிற்கு பெரிய சாப்பாட்டறையும் அதனுள்ளே பெரியபெரிய ஹோட்டல் ஓனர்களே வியக்க தக்க வகையில் அளவில் பெரிதாகவும் மிக மார்டனாகவும் இருந்தது சமயலறை .சாப்பாட்டு அறைக்கு வெளியே இடதுப் பக்கத்தில் வளைந்த மாடிப்படிகளும் மாடிபடிகளுக்குகீழே வரும் போது வரும் இடதப்பக்கத்தில் கொஞ்சம் விஸ்தாரமாக இரண்டு லிஃப்ட் இருந்தது மாடியின் முதல் தளத்தில் எட்டறைகளும் அதற்கு மேல் தளத்தில் நான்கு அறைகளும் எனமொத்தம் அந்த வீட்டில் பதினைந்து அறைகள் இருந்தன அதில் இரண்டில் ஒன்று உடற்பயிற்சி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது இன்னொன்று அலுவலக பயன்பாட்டிற்கென்றே உருவாக்கப்பட்டது.

(இவ்வளவு போதும்னு நினைக்கிறேன் இனி ரிஷி என்ன செய்யறான்னு பாப்போமா)

அந்த காலை நேரத் தை மாதத்து பனியை அனுபவித்த படி ரிஷி ஓர் அரை மணி நேரம் ஓடியிருப்பான் அவன் கால்கள் தான் ஓடியதே தவிர அவன் மனம் முன் இரவு நிகழ்ந்ததை பற்றி அசைப்போட்டுக் கொண்டிருந்தது . அப்போது அவன் பக்கத்தில் பெண்ணின் குரல் ஒன்று கதறிக் கொண்டே அலறுவது போல் கேட்டது உடனே அவன் தன் ஒட்டத்தை நிறுத்திவிட்டு சுற்றி முற்றி பார்த்தான் அங்கு அவனை சுற்றியோ அவன் கண்களுக்கு எட்டிய தூரம் வரையிலோ எவரும் இல்லை என்றவுடன் அது தன் மனபிரமை என நினைத்து தன் தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினான் . சிறிது. நேரத்தில் அவன் வீட்டின் ஹாலில் நுழைந்த போது அவன் கண்களில் பட்டது அங்கு நடுநாயகமாக மாலையிடப்பட்டு மாட்டப்பட்டிருந்த இறைவனடி சேர்ந்து விட்ட அவனின் தாய் தந்தை படத்தின் பக்கத்தில் அவன் கை பட வரைந்த அவனின் மனம் கவர்ந்தவளின் ஓவியத்தை தான் அதைப் பார்த்ததும் அவன் கண்களில் உண்டான கோபத்தை காண்பவரின் இதயம் அந்நிமிடமே தன்துடிப்பை நிறுத்திக் கொள்ளும் என்பது சர்வ நிச்சயம். .

அடுத்த சில நிமிடத்தில் அந்த இருந்த பொருட்கள் கீழே விழுந்து நொருங்கும் சத்தத்தில் அவ்வீட்டின் வேலை ஆள் முதற்கொண்டு அவ்வளவு நேரம் தூக்கத்தில் இருந்தவர்களும் தத்தம் அவர்வர் வேலைகளை செய்து கொண்டிருந்தவர்களும் அடித்து பிடித்தும் பதறித் கொண்டும் நடுங்கிக் கொண்டும் அங்கு வந்தனர் இருவரைத் தவிர ‌‌ஒருவர் காயத்ரி (இனி அம்மு) அந்நேரம் கோவிலுக்கு சென்றிருந்தார் மற்றொருவர்?

அந்த ஹாலில் இருந்த எல்லோரும் கோபத்தில் உடல் விரைத்து முகம் இறுகி கண்கள் சிவக்க நின்றிருந்தரிஷியை நெருங்கவும் நடுங்கி அங்கேயே நிற்கவும் அங்கிருந்து அகலவும் பயந்துக் கிடந்தனர்

‍இவர்கள் இங்கு நடுங்கி கொண்டிருக்க இந்த பிரச்சினைக்கு முழு காரணமானவளோ அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழும் குழந்தை இரண்டு கண்களையும் எப்படி கசக்கிக் கொண்டே வருமோ அப்படி கசக்கிக்கொண்டு சிறிதும் பயமின்றி ஆறஅமர நடந்து வந்ததோடு அல்லாமல் ஹாலில் இருந்த நிலையை எள்ளளவு கூட கண்ணிலோ கருத்திலோ எடுத்துக் கொள்ளாமல் நேராக ரிஷியிடமே சென்று தன் தூக்கத்தை கெடுப்பது போல் இடைஞ்சல் செய்தவரை வேலையை விட்டு நீக்குமாறு அதிகாரமாக உத்தரவிட்டு விட்டு அதோடு தன் வேலை முடிந்தது என்பது போல நேராக அங்கிருந்த பெரிய சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள் அனுரிதா(அனு)

அவள் நடவடிக்கையை பார்த்த அந்த ஹாலில் இருந்த எல்லோரும் ஒரொரொர் மனநிலையில் இருந்தனர் சிலர் ஆச்சரியமாகவும் சிலர் பயத்துடனும் சிலர் சந்தோஷமாகவும் பார்த்தனர் இருவரைத் தவிர அவ்விருவரில் ஒருவனின் கண்களில் மென்மையும் ஆனந்தமும் குடி கொண்டது என்றால் இன்னொருவனின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது

இனி அனுவின் நிலை


வசந்தம் பூக்குமா?,…,…………
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top