அவல் போண்டா

Advertisement

Sahi

Well-Known Member
IMG_20181201_175231.jpg
தேவையானபொருட்கள்:
அவல்: 1 கப்
உருளை கிழங்கு: 1
கடலை மாவு: 3
வேர்க்கடலை வறுத்து பொடித்தது: 2
மிளகாய் தூள்: 1/4
வெங்காயம்: 1/2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி: 1/2 inch (பொடியாக நறுக்கியது)
உப்பு: ருசிக்கேற்ப
கறிவேப்பிலை: 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
மல்லி இலை: சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - பொறிக்க தேவையானளவு

செய்முறை:
அவலை தண்ணீர் விட்டு கழுவி நீரை வடித்து 10-12 நிமிடம் வைக்கவும்.
உருளை கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், மசித்த உருளை கிழங்கு, கடலை மாவு, வேர்க்கடலை மாவு, வெங்காயம், இஞ்சி, மிளகாய் தூள், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நன்றாக காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால் ருசியான அவல் போண்டா தயார்.
குறிப்பு: அவலை தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. அதேபோல் கலவையை பிசைந்தவுடன் பொரித்து எடுக்கவேண்டும். அவலுக்கு பதில் வடித்த சாதமும் பயன்படுத்தலாம். கூடுதல் ருசிக்கு சாட் மசாலா சேர்க்கலாம்.
நன்றி.
 

Joher

Well-Known Member
உருளை கிழங்கு இல்லாமல் பண்ணியிருக்கிறேன்........

அவல் வாங்கினது அப்படியே இருக்கு......... ஓகே.... இதை try பண்ணிடுவோம்........
 

Sahi

Well-Known Member
உருளை கிழங்கு இல்லாமல் பண்ணியிருக்கிறேன்........

அவல் வாங்கினது அப்படியே இருக்கு......... ஓகே.... இதை try பண்ணிடுவோம்........
Thank u sis:)
 

Seetha

Well-Known Member
I've tried it with sweet potato, it came out really well and pudhina chutney was a good combo too.
Thanks, sis :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top