அழைத்தது யாரோ! {the inside game} special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends பொதுவா எல்லா கதைக்கும் special epi போடுவேன். நானறியேன் உன்னைக்கு போட முடியல. காரணம் என் பையன் exam இருந்ததுதான். கடைசி அத்தியாயங்களை ஒழுங்கா எழுதினேனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. இன்னும் நானே திரும்ப படிக்கல. rewrite பண்ணி rerun பண்ணிடலாம்.:D;)

ஓகே அழைத்து யாரோ! முதல்ல வேற பெயர்தான் வச்சிருந்தேன். கோதை ரொம்ப பேசுறதால எதிர்மறையான பேரா வைக்கலாம்னு வச்சேன். ஆனா அந்த பேர்ல ஏற்கனவே கதை வந்திருக்கு என்று மல்லி mam சொன்னதும் ரொம்ப யோசிக்காம இந்த பேர செலெக்ட் பண்ணிட்டேன்.

ஆனாலும் இந்த பேர் செட் ஆகுமா? ஆகாதா? ஒரே குழப்பம். எல்லா கதைக்கும் பெயர் வைக்க ரொம்ப யோசிச்சது இல்ல. இந்த கதையோட பெயர் குட்டியூண்டு இருக்கேன்னுதான் மனசு உறுத்திக்கிட்டு இருந்தது. :rolleyes:

பெயருக்கு ஏத்தது போல கத கொண்டு போக வேணும். ஒரு வழியா அப்படித்தான் போய் கிட்டு இருக்கு. க்ரிஷ்ணாவை அழைத்தது யாராக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க? :unsure::unsure:

இது என் 14 வது கதை. பதினான்கு கதைகள் நான் எழுதுறேன் என்றால் உங்க ஆதரவுதான் முழுக்க முழுக்க காரணம். எங்க வீட்டுலையும் சரி, சொந்தத்துலையும் சரி யாரும் என் கதைகளை படிக்கிறதில்லை. ஒரு காரணம் பாதி பேருக்கு தமிழ் தெரியாது. மீதி பேருக்கு வாசிக்கிறதுல interest இல்ல.

என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் படிக்கிறாங்க ரெண்டு பேருமே என் bset friends. complete பண்ண பிறகு அனுப்பி வைக்கணும். linkல போய் படிக்க கஷ்டம் என்று சொன்னதால் இந்த வேல பார்க்க வேண்டிய நிலை.

யாருமே நெகடிவ் கமாண்ட்ஸ் சொல்லுறதில்ல நீங்களாச்சும் சொல்லுங்கன்னு சொன்னா... நல்லா இருக்குனு வடிவேல் மாதிரியே சொல்லுவாளுங்க.

உண்மையிலயே 15 வருஷமா தமிழ் எழுதாம இருந்துட்டு எழுதும் பொழுது நான் படுற அவஸ்த்தை சொல்ல முடியாதது. என்னுடைய தமிழ் பிழைகளை சகித்துக்கொண்டு ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

அழைத்தது யாரோ! {the inside game} என்று பேர் போடலாம் அப்பாகும் பசங்களுக்கும் நடுவில் நடக்கும் யுத்தம்.

ரொம்ப பெரிய கதை. க்ரிஷ்ணாவை சுத்தி யோசிச்ச கதை. தனிக் கதையா கொடுக்காம இதயத்தில் காதல் பூத்தது உன்னால் என்று அங்க வேற நிறைய பேர அறிமுகப்படுத்தி இருந்தேன்.

இப்போ யோசிச்சா... அர்ஜுன், மாலினி க்ரிஷ் அண்ட் கோதையை ஒரு கதையிலும், மத்தவங்க வேற கதையிலும் கொண்டு வந்து இருக்கலாமோ என்று தோணுது?

எதையும் plan பண்ணி பண்ண ஓகே. நமக்குத்தான் அந்த பழக்கம் இல்லையே. {கதை எழுதுரதுல மட்டும்}


இன்னும் நிறைய சொல்லணும். once again thanks a lot

அன்புடன் மிலா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top