அனல் மேலே பனிதுளியானாய் 5

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hiii...frds&sis.... 5 the epi pottachi....padichitu reply pannunga....happy reading....:):)




அத்தியாயம் – 5

உன் பார்வை......
என் பார்வையின் வழியே......
உள்ளே நுழைந்து......
இதயம் முழுவதும் நிறைந்துள்ளது.......
இது தான் காதலா......
அதை உணர காத்திருக்கிறேன்........


ஆதியும், விஷ்வாவும் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்... இருவரும் ஏதோ ஏதோப் பேசிக்கொண்டே சமையலை முடித்து சாப்பிட்டு... விஷ்வா தனக்கு தலைவலி என்று சொல்லிவிட்டு படுக்கையில் விழுந்தான்.... ஆதி தன் அம்மாவிடமும், தங்கையிடமும் பேசிவிட்டு வந்தான்....

படுக்கையில் விழுந்தவனுக்கு ஏனோ தூக்கமே வரவில்லை.... இன்று காலையில் ஹாஸ்பிட்டலில் பார்த்தவளின் முகம் தான் தோன்றியது..... “ம்ம்ம்... டாக்டர் போல.... அன்னிக்கு அவ்ளோ பேசுனா.... இன்னைக்கு என்னப் பார்த்தவுடனே அவ்ளோ பயம்... அவளோடக் கண்ணு என்னமா பெருசா விரியுது.... முட்டக்கண்ணி..... இதுல லாலீபாப் வேற.... நிஜமாவே வளர்ந்த பேபி தான்....” என அவளின் நினைவினிலேத் தூங்கிப்போனான்....

விஷ்வாவும் அதே நிலையில் தான் இருந்தான்.... இதுவரை தூரத்திலிருந்தேப் பார்த்தவன் இன்று தான் அவளை இவ்வளவு அருகில் பார்க்கிறான்.... “நல்ல அழகாதான் இருக்கா.... ஏன் என் பின்னாடி சுத்துறா.... ஒரு வேலை என்ன லவ் பண்றாளோ.... ம்ம்ம்.... பார்ப்போம்... மறுபடியும் நம்மள ஃபாலோப் பண்ணட்டும்.... அப்புறம் இருக்கு அவளுக்கு....” என்று அவனும் தூங்கிப்போனான்....

இவர்கள் இருவரும் இங்கே நிம்மதியாகத் தூங்க... அங்கே இரு ஜீவன்கள் இவர்களைப் பற்றி தான்..... நினைத்துக் கொண்டு இருந்தனர்....

இளா.... தனது டெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டுப் படுக்கையில் படுத்து இருந்தாலேத் தவிர.... அவளின் நினைவுகள் அவனின் கண்ணைப்பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தது.... “அவன் நம்மள கோவமாப் பார்த்தான.... இல்ல... லூசுன்னு நினைச்சிப் பார்த்தான.... ஆனா எனக்கு அவனோடப் பார்வை என்னை ரசனையாப் பார்த்த மாதிரி தான் தோணுது.... அய்யோ கடவுளே.... அவனோடக் கண்ணு என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதே....” என்று டெட்டியை இறுக்கக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கிப்போனாள்.....

வைஷாலி...... தனது அறையில் அழுத, சிவந்த முகத்துடன் அமர்ந்து இருந்தாள்.... அவள் லேட்டாக வந்ததற்கு அவளின் சித்தி ராஜீ கேட்கக்கூடாத கேள்வியெல்லாம் கேட்க.... அவரின் வார்த்தையில் கோபம் கொண்டவள் எதிர்த்துப் பேசப்போக.... அவளின் கன்னத்திலே அடித்துவிட்டார்.....

ஆம்... அவளின் சிறுவயதிலே தாய் இறந்துவிட, அவளின் அப்பா சேகர் இரண்டாவதுத் திருமணம் செய்துக்கொண்டார்..... வந்தப் புதிசுல் நன்றாகப் பார்த்துக் கொண்ட ராஜீ... கொஞ்ச நாட்களிலேயே ஒதுக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.... அவருக்கென்று ஒருப்பெண் குழந்தைப் பிறந்தவுடன் முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார்.... அவளும் தனது பத்து வயதில் எல்லாவற்றையும் புரிந்துக்கொண்டு..... தன் வேலைகள் அனைத்தையும் அவளேப் பார்த்துக் கொளேவாள்..... இது எதையும் அறியாத சேகர்... வேலைக்கு சென்றவிடுவார்....

ஒரு நாள் அவர் வேலை முடித்து வீட்டுக்கு வர..... அப்பா என்று கத்திக்கொண்டே ஓடி வந்த சின்ன மகள் ரோஷினியைத் தூக்கிக்கொண்டவர்... அக்கா எங்கடா குட்டிமா என்று கேட்டுக்கொண்டே சோபாவில் அமர்ந்தார்..... ஏனென்றால் எப்போதும் தன் மூத்த மகள் தான் முதலில் வந்துக் கட்டிக்கொள்வாள்....

ரோஷினி பதில் சொல்வதற்கு முன்.... ஏன் இவ வந்தக் கொஞ்சமாட்டீஙகளா..... அவளுக்கு படிக்க நிறைய இருக்குன்னு ரூம்லேயே இருக்கா.... என்று சொல்லிவிட்டு சென்றார்.... சேகரும் அமைதியாகிவிட்டார்....

பின் வந்த நாட்களிளும் இதுத்தொடரவே..... அவருக்கு பயம் பிடித்துக்கொண்டது.... தன் மகள் தன்னைவிட்டு தூரம் சென்றுவிட்டாளோ.... என்று... அவருக்குத் தெரியவில்லை அவள் எப்போதோ தனிமைக்கு பழகிவிட்டாள்.... என்று.....

சேகர் இந்த விஷயத்தைப் பற்றி ராஜீயிடம் பேச.... அவர் “அவளை எதாவது ஆசிரமத்தில் சேர்த்துவிடுஙகள்....” என்று சொல்ல பளாறென்று அறைந்துவிட்டார்..... “என் பொண்ணு என்கூடத்தான் இருப்பாள்......” என்று சொல்லிவிட்டு சென்றார்.... அதன் பிறகு சேகர் அதைப்பற்றிப் பேசவில்லை.... எங்கே தன் மகளும், மனைவியும் பிரிந்துவிடுவார்களோ என்று..... வைஷாலியிடம் அவர் பேசினாலும்.... அவள் ஒதுங்கியே நின்றாள்.... இன்று வரைக்கும் அதுவே தொடர்கிறது.....

தனது டைரியின் நடுப்பக்கத்தில் வரைந்து வைத்திருந்த விஷ்வாவின் உருவத்தைப்பார்த்து.... “விஷு... நான் எப்ப உங்கிட்ட வருவேன்... சீக்கிரம் இந்த நரகத்திலிருந்து என்னக் கூட்டிட்டுப் போயிடு....” என்று அவனின் உருவத்திற்கு ஒரு முத்தம் வைத்து... தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.... அவளின் நினைவுகள் முதல் முதலாக தன்னவனைக் கண்ட இனிய நாளை நினைத்தது......

அது ஒரு ஆசிரமம், தன் முதல் மாத சம்பளத்தில் பாதியை நன்கொடையாக வழங்கிவிட்டு வெளியே வந்தவள்..... அங்கே கண்டக் காட்சி அவளை ஈர்த்த்து.... அங்கே விஷ்வாவை சற்றிப் பத்து பதினைந்துக் குழந்தைகள்... அவர்களுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தான்.... சின்னக் குழந்தைகளுக்கு எதை எதையோக் காட்டி அழகாக ஊட்டினான்..... அன்று அவள் நெஞ்சில்க் குடியேறியவன் தான்... இன்று வரைப் பின் தொடர்கிறாள்... ஆனால் இதுவரைக்கும் அவனிடம் பேசும் தைரியம் தான் வரவில்லை....

இன்று காலை அலுவலகத்திற்கு செல்ல வண்டியை ஸ்டார்ட் செய்தவள் முன்பு அவன் வந்து நின்றதும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.... அதைவிட சந்தோஷம் அவனும் தன்னைப் பார்த்திருக்கிறான்.... என்பது தான்.... “இனி அவனிடம் பேச வேண்டியது தான்....” என முடிவெடுத்தாள்....

கண்மூடி லயித்திருந்தவள், தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதுப் போல் தோன்ற கண்ணைத் திறந்தவள்.... அங்கே யாரும் இல்லை என்றதும்... எழுந்து சென்று பால்கனி கதவை லாக் செய்து, ஸ்கீரினை இழுத்து மூடியவள்... சுகமாகத் தூங்கிப்போனாள்.....

ஆனால் அவளை உற்றுப் பார்த்த அந்த கண்களின் உருவம்.... பால்கனி கதவின் பின் நின்று... “ச்ச... இன்னிக்கும் இவ தப்பிச்சுட்டாளே.....” என்று கண்கள் சிவக்க... காலை தரையில் ஒங்கி மிதித்துவிட்டு..... யாரும் பார்க்கும் முன்.... சரசரவென்று வந்த வழியே திரும்பிச் சென்றது......

அடுத்த நாள் காலையில் ஆதி “விஷ்வா.... நான் ஹாஸ்பிட்டல்.... போறேன்டா....” என்று சொல்ல... “ம்ம்ம்.... நானும் ரிப்போர்ட் வாங்கிட்டு..... நேரா ஹெட் ஆபீஸ்க்கு வந்தறேன்...... நீயும் இன்வெஸ்டிகேஷன் முடிச்சிட்டு அங்க வந்துடு..... ஒகே.....” என்று இருவரும் கிளம்பினர்.....

ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்த ஆதி.... அங்கே ஹரிஷும், இளாவும் ஒரு பேஷண்ட் பற்றிப் பேசிக் கொண்டிருக்க.... அதைப் பார்த்தவனுக்கு ஏனென்றே தெரியாமல் கோபமாக வந்தது..... அவர்களையேப் பார்த்துக்கொண்டு வர.....

பேசிக்கொண்டே திரும்பிய இளா..... அங்கே அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டுப் பதற்றமானாள்..... “அய்யோ மறபடியும் எங்க வர்றான்..... இவனால தான் நைட் ஃபுல்லா தூக்கமே வரல..... அய்யோ கிட்ட வந்துட்டானே.....” என்று நினைத்து கீழே குனிந்துக்கொண்டாள்.......

வந்தவன் நேராக “ஹாய் ஹரிஷ்....” என்று சொல்ல..... பதிலுக்கு அவனும் “ஹலோ சார்.....” என்று சொல்ல....

“அந்த அம்மா கண் முழிச்சிட்டாங்களா.....” என்று கேட்க....

“ம்ம்ம்.... முழிச்சிட்டாங்க சார்.... வாங்கப் போகலாம்.....” என்று இளாவைப் பார்த்து..... “இளா... நான் அந்த பேஷண்ட் பற்றி அஃப்டர்நூன் சொல்றேன்.....” என்று சொல்லிவிட்டு இருவரும் செல்ல....

இளா, அவர்கள் இருவரும் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்..... திடீரென்று ஆதி அவளைத் திரும்பி ஒருப் பார்வைப் பார்த்துவிட்டுப் போனான்.....

“இவன் என்ன அப்பஅப்போ ஒரு லுக் விடுறான்..... ஆனாலும் அவனோட லுக் ஸ்மார்ட்டா.... அழகா இருக்கு..... கடவுளே.... நான் ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறேன்.....” என தன் தலையிலேயேத் தட்டிக் கொண்டு வேலையைப் பார்க்க சென்றாள்....

ஆதி மனதில்..... “நான் ஏன் இப்படிக் கோவம் கொள்கிறேன்..... அவள் யார்கூடப் பேசுனா.... எனக்கு என்ன.... பார்த்தக் கொஞ்ச நாள் தானே ஆகுது..... ஒரு வேலை...” என்று நினைத்து முடிப்பதற்குள்.... அறை வந்துவிட..... இப்போதைக்கு அந்த நினைவைக் கைவிட்டான்.....

அறையில் நுழைந்ததும்.... உலகத்தில் உள்ள மொத்த சோகத்தையும் சுமந்த நிலையில் அமர்ந்து இருந்தார்.... சுந்நரிப் பாட்டி.....

ஹரிஷ் “பாட்டி.... உங்களப் பார்க்கப் போலீஸ்.... வந்திருக்காங்க” என்று சொல்ல....

அவர் நிமிர்ந்து.... ஹரிஷின் பின்னால் நின்றிருந்த ஆதியைக் கண்டவர்.... “வாங்க தம்பி.... இப்போ உங்களுக்கு என்ன வேணும்..... என் பேத்தி எப்படி செத்தான்னு தெரியணும் அவ்ளோதான.... தற்கொலைப் பண்ணிகிட்டாப் போதுமா..... எப்படியா இருந்தாலும் கடைசியிலே.... இப்படி தான கேஸ்ஸ க்ளொஸ் பண்ணுவீஙக.....” என்று ஆதங்கமாய் சொல்ல.....

“அம்மா.... நீங்களும் ஒரு மிலிட்ரி ஆபீசரோட வைப் அண்ட் நேர்மையான போலீஸ் ஆபீசரோட அம்மா என்பதை மறந்துடாதிங்க.....” என்று ஆதி சொல்ல....

அவனை நிமிர்ந்துப் பார்த்தவர்..... என்ன தோன்றியதோ... “சொல்லுங்கத் தம்பி.... நான் இப்போ என்ன சொல்லனும்....” என்று நிதானமாக கேட்டார்......

-தொடரும்
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top