அத்தியாயம் 19 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-19

ஆயிற்று.. மது தன் வீட்டில் இருக்க
ஆரம்பித்து முழுதாக ஆறு நாட்கள்
ஆயிற்று.. கிட்டத்தட்ட பித்துப்
பிடித்தவள் போல வலம் வந்து
கொண்டு இருந்தாள்.
குடும்பத்தினரிடம் மட்டும் எதையும்
காட்டாமல் இன்முகத்துடன் இருக்க முயற்சித்தாள். ஆனால் அதிலும்
முடியாமல் தனித்து இருக்க...
சாப்பிடுவதற்கு மட்டுமே கீழே வர
ஆரம்பித்தாள். சித்தப்பாவுடன்
ஹாஸ்பிடல் சென்று வந்து கொண்டு
இருந்தவளுக்கு கொஞ்சம் கூட
கணவனின் நினைப்புக்
குறையவில்லை.

கார்த்திக்கும் மதுவும் போன் போட்டுக்
கூடப் பேசிக் கொள்ளவில்லை.
பார்க்கவும் வரவில்லை "ஏன்மா
மாப்பிள்ளை வரவே இல்லை" என்று
ராதா கேட்க "அவர் ஒரு கவர்ன்மெண்ட்
ப்ராஜெக்ட்டில் பிசியாக இருக்கிறார்
சித்தி... வேலை ரொம்பவே ஜாஸ்தி..
நான் தான் வரவேண்டாம்-ன்னு
சொல்லிட்டேன்.. இப்போது தான்
பேசினேன்" என்று மது சொல்ல,
தாத்தாவின் படத்திற்கு விளக்கு
ஏற்றிக் கொண்டு இருந்தப் பாட்டி
மதுவைத் திரும்பி 'அப்படியா' என்பது
போல முறைப்பும் நக்கலுமாக ஒரு
பார்வைப் பார்க்க அவரைப்
பார்க்காமல் கண்களைச்
சுழலவிட்டாள் மது.

"மது இங்கே பாரேன் பக்கத்து வீட்டு
பத்மா ஆன்ட்டி உனக்கு பிடிக்கும்
என்று அவர்கள் தோட்டத்தில்
விளைந்த பப்பாளி பழம் தந்து
இருக்கிறார்கள்' என்று சொல்லிக்
கொண்டே உமா கையில் ஒரு
பப்பாளியுடன் உள்ளே வந்தார்.
மதுவிற்கு ஒரு நிமிடம் கை கால்
எல்லாம் ஆடிவிட்டது. இதைச்
சாப்பிட்டால்... என்று நினைத்தவளால்
அதற்கு மேல் எதையும் நினைக்க
முடியவில்லை.

"இல்லை அம்மா.. எனக்கு வேண்டாம்..
இதைச் சாப்பிட்டால் எனக்கு வயிறு
சரியில்லாமல் போய்விடுகிறது" என்று
மது அடித்துவிட "என்னது..." என்று
மகளை விசித்தரமாகப் பார்த்தார் உமா.

"ஏன்டி பப்பாளி சாப்பிட்டால்
செரிமானத்திற்கு நல்லது..
ஸ்கின்னிற்கு நல்லது என்று
யாருக்கும் வைக்காமல் சாப்பிடுவாய்..
இப்போது என்னவென்றால்
வேண்டாம் என்கிறாய்" என்று அந்தப்
பப்பாளியை வலது கையை மடக்கி
உள்ளங்கையில் வைத்தவாரு
பேசினார் உமா.

மதுவோ "இப்போது என்ன ஆயிற்று..
இதோ உன் அருமை நெட்டக்கொக்கு
வந்து விட்டது பார்.. அதற்கே தா.."
என்று உள்ளே வந்த வருணை
வம்பிழுத்தபடி பேசி பேச்சையும்
மாற்றிவிட்டாள் மது.

"ஏய் குட்டக் கத்திரிக்காய்.. நீ
குட்டையாக இருந்து கொண்டு
என்னைச் சொல்கிறாயா.. உன்
ரிஷப்சன் அன்று மாமா பக்கத்தில்
ஹை ஹீல்ஸ் அணிந்து நீ நின்றது
எல்லோருக்கும் தெரியும் சரியா"
என்று ஷோபாவின் விளிம்பில்
அமர்ந்தவன் தனது தமக்கைக்
கழுத்தைத் தன் இரு கரத்தால் சுற்றி,
அவளைப் பிடித்து அப்படியே
சுற்றினான். "டேய் எருமை.. தலை
சுத்துகிறது விடுடா" என்று மது
தம்பியின் கையை பிடித்துக் கடிக்கச்
சென்றாள். கையை சட்டென்று எடுத்து
அவள் பற்களிடம் இருந்து
தப்பித்தவன் "ஏய்.. நீ மாமியார்
வீட்டிற்குச் சென்று அமைதியாகி
விட்டாய் என்று பார்த்தால்... நீ
இன்னும் அதைவிட அதிகமாக வம்பு
செய்ய ஆரம்பித்து விட்டாய்" என்று
வருண் மதுவைக் கேலி செய்தான்..

சட்டென்று "வரவர உன் சேட்டை
அதிகமாகி விட்டது டி" என்று ஒருநாள்
கார்த்திக்கை வேலை செய்யவிடாமல்
இம்சித்து அவன் அதற்கு
பனிஷ்மென்டாய் தந்த முத்தமும்
மொத்தமுமாக நினைவு வந்தது
மதுவிற்கு. தலையைச் சிலுப்பி
நிகழ்காலத்திற்கு வந்தவள் சாப்பிட
உட்கார்ந்தாள்.

சாப்பிட்டு விட்டுத் தன் அறைக்கு
வந்தவள் தன் அறையில் இருந்த
பழனி முருகன் படம் முன்பு நின்றாள்.
சில நிமிடங்கள் கடவுளை
உணர்ச்சியற்று நோக்கியவள் கந்த
சஷ்டி கவசத்தை உச்சரிக்க
ஆரம்பித்தாள். ஏனோ அதைச்
சொன்னால் ஒரு தைரியம் நம்பிக்கை
வருவது போல இருக்கும் மதுவிற்கு.
லண்டன் சென்ற பிறகு கூட மது
பழசை நினைத்து மற்றும்
கார்த்திக்கின் நினைவுகளில்
வருந்தநேரிடும் போது எல்லாம், கந்த
சஷ்டி கவசத்தை எடுத்து உட்கார்ந்து
விடுவாள்.

கார்த்திக்கைப் பார்க்க வேண்டும்
என்பது போல இருந்தது. பேசாமல்
நாளை அங்கு சென்று விடலாமா
என்று யோசித்தால் மது. ஜானகியும்
மாலை போன் பண்ணிப் பேசியது
நினைவு வந்தது மதுவிற்கு.. எப்போது
வருகிறாய் என்று கேட்காவிட்டாலும்,
அவர் குரலே கேட்காமல் கேட்டது
'வருகிறேன்' என்று சொல்ல மாட்டாயா
என்று.

அவன் கூப்பிடுவான் என்று
எதிர்பாரப்பது முட்டாள்தனம் என்று
நினைத்தாள். "சரி நாளை
கிளம்பலாம்.. ரொம்ப நாள் இங்கே
இருந்தால் நன்றாக இருக்காது.."
என்று நினைத்தவள் "அதுவும்
இல்லாமல் எப்போது போனாலும்
அதே மாதிரி தான் அவன்
இருக்கப்போகிறான்.. நம் மேல்
கொஞ்சம் ஆவது அக்கறை
இருந்திருந்தால் இந்த ஆறு நாட்களில்
ஒரு முறையாவது வந்து
பார்த்திருப்பான்". முதலில் நடந்த
சண்டையில் இருந்து நியாபகம் வந்து
மதுவின் மனம் கோபத்திலும்
விரக்தியிலும் சோர்ந்தது.

ஆ.. ஆனால் குழந்தை விஷயம் என்று
ரொம்ப நேரம் யோசித்த மது "சரி
நாளை இரவு அங்கே சாப்பிட்டு
முடித்து எல்லோரும் ஹாலில் அமரும்
போது பொதுவாக சொல்லிக்
கொள்ளலாம்" என்று மது நினைக்க..
மதுவின் ஆழ்மனம் "குழந்தைப்
பிறக்கப் போவதை ஏதோ புதியாய்
உடை வாங்கிய மாதிரி சொல்லப்
போகிறாயா?" என்று கேட்டது.. "ஆமாம்
என் விதி அப்படி" என்று விரக்தியுடன்
வந்து படுத்தாள்.

அடுத்த நாள் மதியம் கார்த்திக் அந்த
கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் விஷயமாக
ஏதோ தனது பி.ஏ வான மூர்த்தி
சாரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
கார்த்திக் இந்த ஆறு நாட்கள்
ரொம்பவுமே பிஸியாக இருந்தான்.
வீட்டிற்கே தாமதமாகப் பத்து
பதினொன்று மணிக்குத் தான்
வந்தான் வேலை எல்லாம் முடித்து..
ஆனால் அவன் தாமதமாக வந்ததிற்கு
இன்னொரு காரணமும் இருந்தது.

வீட்டிற்கு வந்தால் மதுவின் நியாபகம்
ஆக்கிரமித்தது கார்த்திக்கிற்கு. ஏதோ
தனிமையாக உணர்ந்தான்..
அறைக்குள் நுழைந்து படுத்தாலும்
அவளது தலையணையில் இருந்து
வந்த அவளின் கூந்தலின் வாசமும்
அவனைத் தூங்க விடாமல் செய்தது.
கோபமும் வந்தது.. "எப்போதுடி
வருவாய்?" என்று அவன் மனம்
கேட்டது. அவளிற்கு போன் செய்யவும்
அவனது ஈகோ தடுத்தது. எதையும்
வெளிக்காட்டாமல் ஆபிஸ் சென்று
வந்து கொண்டு இருந்தான்.

தனது இன்டர்காம் அழைக்க
எடுத்தவன் "ஹலோ" என்றான்.

"ஸார் உங்களைப் பார்க்க மிதுனா
என்கின்ற பெண்ணும் அவருடைய
கணவரும் வந்து இருக்கிறார்கள்"
என்றாள் எதிரில் பேசிய அந்தப் பெண்.

ஏற்கனவே ப்ராஜெக்ட் வொர்க் மற்றும்
மதுவின் சிந்தனையில்
இருந்தவனுக்கு மிதுனா என்றதும்
கோபம் தலைக்கு ஏறியது.. "இவளால்
தானே எல்லாம்.. சிவாவின் குடும்பம்
அழுததும்.. மதுவிடன் தனக்கு
பிரச்சினை உண்டானதும்" என்று
நினைத்தவனுக்கு ஆத்திரம் தான்
மிஞ்சியது.

"எனக்கு இப்போது பார்க்க
நேரமில்லை.. கிளம்பச் சொல்லுங்கள்..
ஆனால் மறுபடியும் வர வேண்டாம்
என்று சொல்லிவிடுங்கள்" என்று
பட்டென்று இன்டர்காமில் பதில்
அளித்து வைத்துவிட்டான். ஆனால்
இன்டர்காமில் கார்த்திக்கிடம் பேசியப்
பெண் மிதுனாவின் முகத்தைப்
பார்க்க.. அவளோ பாவமாக
நின்றிருந்தாள்.

"ஸாரி மேம்.. சார் ரொம்ப பிஸி..
அவருக்கு இப்போது நேரிமில்லை.. "
என்று அவள் மிதுனாவிற்கு சொல்லும்
போதே "இல்ல எவ்வளவு நேரம்
ஆனாலும் நாங்கள் வெய்ட் பண்றோம்..
ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் மிதுனா.

மறுபடியும் இன்டர்காம் அழைக்க
எரிச்சலுற்றவன்.. ஆன் செய்து காதில்
வைக்க "ஸார்.." என்று அந்தப் பெண்
இழுத்தாள். "என்ன சொல்லுங்க"
என்றான் அதே எரிச்சலோடு. மிதுனா
சொன்னதை அந்தப் பெண்
கார்த்திக்கிடம் சொல்ல தனது
தாடையைத் தடவியவன் "என்ன
விஷயம்" என்றான் புருவ முடிச்சுடன்.

"ஏதோ பெர்சனல் மேட்டர்
என்கிறார்கள் சார்" என்றாள் அந்த
அறிவிப்புப் பெண் மிதுனாவிடம்
கேட்டு.

"சரி என் தனி அறையில் காத்திருக்கச்
சொல்லுங்க" என்று இன்டர்காமை
அணைத்து விட்டான்.

தன் ப்ராஜெக்ட் பற்றிய விஷயத்தை
ஆலோசித்து விட்டே அவர்கள்
உட்கார்ந்திருந்த அறைக்குச்
சென்றான். கார்த்திக் வருவதைக்
கண்டு இருவரும் எழ, உட்காருங்கள்
என்று விட்டு அவர்களின் எதிரில்
கண்களால் இருவரையும் அளவிட்ட
படியே வந்து அமர்ந்தான்.
மிதுனாவைப் பார்க்கும் போதே
நன்றாகத்தான் இருக்கிறாள் என்று
புரிந்தது.. அந்தப் பையனும்
நல்லவனாகவேத் தெரிந்தான்.
ஆனால் கோபம் குறையாமல் தான்
இருந்தது கார்த்திக்கிற்கு.

"ஏன் மிதுனா இப்படி பண்ணுன?"
என்று நேராக குற்றம் சாட்டும்
பார்வையில் கேட்டான்.

"சாரி அண்ணா" என்றாள் தலையை
குனிந்த படியே.

"சாரி சொன்னால்.. எல்லாம்
சரியாகிவிடுமா மிதுனா? உன்
குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது
தெரியுமா? சிவா... அவனை நான்
இதுநாள் வரை அப்படிச் சோர்ந்து
பார்த்ததே இல்லை மிதுனா.. அப்படி
காதல் என்றால் வீட்டுல
சொல்லலாம்ல.. ஏன்
அவசரப்பட்டீர்கள் இருவரும்?"
என்றான் சற்று கோபமாக.

"இல்லை அண்ணா. அப்பாவிற்கு
தெரிந்துவிட்டது. என்னை தனியாகக்
கூப்பிட்டு எச்சரித்த போது நானும்
எதிர்த்து விட்டேன். அந்த நேரம்
பார்த்து ஒரு பணக்கார வரன் என்று
தரகர் கொடுக்க, அப்பா நாளை
உன்னை பெண் பார்க்க
வருகிறார்கள்.. அவன் தான்
மாப்பிள்ளை என்றுவிட்டார் அண்ணா..
ஜாதி, கவுரவம் பார்த்து என்னை ஒரு
குடிகாரன்.. பொம்பளைப் பொறிக்கித்
தலையில் கட்டி வைக்கப் பார்த்தார்
அந்த மனுஷன்.." என்றவள்
கார்த்திக்கை நேராகப் பார்த்து "நான் அப்போது கூட முடியாது என்று மறுத்த
போது.. இவரை ஏதாவது
பண்ணிவிடுவேன் என்று மிரட்டினார்..
சிவா அண்ணாவிடம் சொல்லலாம்
என்று நினைத்தால்.. அண்ணனை
என் கண்ணில் படதாபடி வேலை அது
இது என்று அலையவிட்டுக் கொண்டு
இருந்தார்.. வீட்டில் இருந்தாலும்
என்னை கண்கானித்துக் கொண்டே
இருந்தார்.. அதான் அவர் வெளியே
சென்ற சமயம் பார்த்து வெளியே
வந்து விட்டேன் அண்ணா" என்று
எல்லாத்தையும் சொல்லி
முடித்தவளின் கண்களில் இருந்து
இரண்டு சொட்டுக் கண்ணீர்
வழிந்தோடியது.

"சார் அதுவும் இல்லாமல் இவள் அப்பா
கவுரவக் கொலை என்றெல்லாம்
இவளை ரொம்பவுமே பயப்படுத்தி
வைத்திருந்தார். அதுதான் கொஞ்ச
நாள் தகவலே சொல்லாமல்.. யார்
கண்ணிலும் படாமல் இருந்தோம்"
என்றவன் "இப்போ கூட மிதுனா அவ
அண்ணனையும் அம்மாவையும்
பார்க்க வேண்டும் என்றாள். அதான்
கூட்டி வந்தேன். நீங்க தான் உங்க
ப்ரண்ட் கிட்ட பேசி ஏற்பாடு
செய்யனும்" என்றான் மிதுனாவின்
கணவன் அவளின் கைகளை
ஆறுதலாகப் பற்றியபடி.

ஒரு நிமிடம் யோசித்த கார்த்திக்
சிவாவிற்கு போன் போட்டான்.
போனை சிவா எடுக்க "சிவா எங்கே
இருக்க?" எனக் கேட்டான்.

சிவா வீட்டிலோ அல்லது அவன்
தந்தையுடன் இருந்தால் சொல்லுவது
ஸேஃப் இல்லை என்று எண்ணினான்
கார்த்திக்.

"நான் ஒரு சின்ன வேலையாக
கோயம்பத்தூர் வந்து கொண்டு
இருக்கிறேன்டா.. ஏன்டா?" என்று
கேட்டான் சிவா.

"அங்கிளுமா?" என்று கார்த்திக் கேட்க
"அவர் வெளியூர் சென்று இருக்கிறார்
டா.. அவர் வேலை ஒன்றைப் பார்க்கத்
தான் நான் கோவை வருவதே..."
என்றவனிடம் "சிவா என் ஆபிஸ் வரை
வர முடியுமா? ஒரு முக்கியமான
விஷயம்" என்று எதிரில் அமர்ந்திருந்த
மிதுனாவையும் மிதுனா கணவரையும்
பார்த்தபடியே நண்பனிடம் கேட்டான்.

"சரிடா பக்கத்தில் வந்து விட்டேன்..
இன்னும் ஒரு இருபது நிமிடங்களில்
வந்து விடுவேன்" என்று போனை
வைத்துவிட்டான் சிவா.

போனை வைத்த கார்த்திக் மூர்த்தி
சாருக்கு போன் செய்து "சார் இரண்டு
ஜூஸை ஆபிஸ் பையனை எடுத்து
வரச்சொல்லுங்க" என்று
சொல்லிவிட்டுப் போனை
வைத்தவனிடம் "ரொம்ப தாங்க்ஸ்
அண்ணா" என்று மிதுனா கரகரத்த
குரலுடன் சொல்ல "எதற்கு
ஜூஸிற்கா" என்று கார்த்திக்
வேண்டுமென்றே கேட்க மிதுனா
சிரித்துவிட்டாள்.

"தேங்க்ஸ் ஸார்... அழுதே இருந்தாள்..
நான் தான் வா, பார்த்து வரலாம்
என்று அழைத்து வந்தேன்" என்று
நன்றி கூறினான் மிதுனாவின்
கணவன். ஜூஸைக் கொண்டு வந்தப்
பையன் உள்ளே வைத்துவிட்டு
சென்றுவிட்டான்.

"ஆமாம் உங்கள் பெயர் என்ன? என்ன
வேலை? என்று கார்த்திக் கேட்க
"என் பெயர் கோகுல்.. நான்
சென்னையில் சாப்ட்வேர்
இன்ஜினியராக இருக்கிறேன்" என்று
சொல்ல... பின் இருவரும் ஏதோ
பேசிக் கொண்டு இருக்க மிதுனா
ஜூஸைக் குடித்தபடியே அவர்களது
பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தாள்.
 

Yaazhini madhumitha

Well-Known Member
இருபது நிமிடம் கழித்துத் கதவு
திறக்கும் சத்தம் கேட்க மூவரின்
கண்ணும் கதவின் பக்கம் சென்றது..
ஆமாம் சிவாதான் வந்திருந்தான்..
அண்ணனைப் பார்த்த மிதுனா
"அண்ணா..." என்று சிவாவிடம் ஓடிச்
சென்று அவன் தோளில் சாய்ந்து
ஓஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.
ஒரு நிமிடம் சிவாவிற்கு எதுவுமே
புரியவில்லை. தன் நண்பனையும் கூட
இருந்த ஒரு இளைஞனையும்
பார்த்தவனுக்கு ஐந்து சதவீதம் ஏதோ
புரிந்தது..

சிவாவின் அருகில் வந்த கார்த்திக்
நடந்த எல்லாவற்றையும் கூற
சிவாவிற்கு ஆத்திரம் வந்தது.. "அந்த
மனுஷன் அப்படி எதுவும் பேசாமல்
ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்த
போதே நான் சந்தேகப்பட்டேன் டா...
என்னடா இப்படி அமைதியாக
உட்கார்ந்திருக்கிறார் என்று.. நான்
கூட இந்த சம்பவத்தில் இப்படி
ஆகிவிட்டார் என்று வருதப்பட்டேன்..
ஆனால்.." என்று பல்லைக் கடித்தவன்
தன் தங்கையை கவனித்தான்.
அவளை சமாதானம் செய்வதற்குள்
எல்லோருக்கும் போதும் போது என்று
ஆகிவிட்டது.

பிறகு எல்லோரையும் சமாதானம்
செய்து நான்கு பேரும் உட்கார்ந்து பேச
ஆரம்பித்து விட்டனர்.

சிறிது நேரம் கழித்து "மது எப்படி
அண்ணா இருக்கா?" என்று மிதுனா
கேட்க கார்த்திக்கின் முகம்
இறுகிவிட்டது.

"ஏன் உன்னை பத்திரமாக அனுப்பி
வைத்தவளிடம் பேசுவது கூட
இல்லையா?" என்று நக்கலாகக்
கேட்டான். சிவா என்ன புதுசாகச்
சொல்கிறான் என்று எண்ணிக்
கார்த்திக்கைப் பார்த்தான்.

"புரியவில்லை அண்ணா?" என்றாள்
மிதுனா. கோகுலிற்கும் எங்களை
எப்போது இவரின் மனைவி அனுப்பி
வைத்தார் என்று புரியாமல்
கார்த்திக்கைப் பார்த்தான்.

"மது தானே நீங்கள் இருவரும் ஊரை
விட்டுச் செல்ல உதவி செய்தது.
நீங்கள் செல்ல உதவி செய்தவளிடம்
போனில் பேசுவாய் தானே.. அப்படி
இருக்க என்னிடம் எப்படி இருக்கிறாள்
என்று கேட்கிறாயே மிதுனா" என்று
டேபில் மேல் இருந்த ஒரு பேப்பர்
வெய்டைப் பார்த்தபடியே கேட்டான்
கார்த்திக்.

"அய்யோ அண்ணா. அவளுக்கு
எங்கள் காதல் விவரமே தெரியாது"
என்றாள் மிதுனா அவசரமாக.

"பொய் மிதுனா.. அப்புறம் ஏன் போன்
பண்ணினாய் மதுவிற்கு?" என்று
அன்று நடந்ததை சொல்லிக் கேட்டான்.

சிவாவிற்கு இப்போது புரிந்துவிட்டது
என்ன நடந்தது என்று. "இந்தப் பத்து
நாட்களுக்கு முன்னாடி கூட ஒரு
தடவை போன் பண்ணினாயே?" என்று
விடாமல் கேட்டான்.

"அண்ணா... இல்லை... அன்று
நடந்ததே வேற... எங்களுக்கு உதவி
செய்தது மதுதான்.. ஆனால் நம்
மதுமிதா அல்ல.. எங்களுடைய
காலேஜ் மேட் மதுமதி.. அன்றைய
பதட்டத்தில் மாற்றி மதுவிற்கு
கூப்பிட்டு விட்டேன் என்று
நினைக்கிறேன். பேசப்பேசக் கட் கூட
ஆயிடுச்சு.. அதற்குள் என் ஃபோனும்
சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப்
ஆகிவிட்டது.. அந்த நம்பரை
அப்பாவிற்கு பயந்து ரொம்ப நாள்
யூஸ் செய்யவே இல்லை.. கொஞ்ச
நாள் கழித்து ஆன் செய்த போது தான்
மது எனக்கு கால் செய்தது..
வெளியில் இருந்ததால் கட் செய்து
விட்டு வீட்டிற்கு வந்து கூப்பிட்டேன்..
அப்போது தான் நீங்கள் எடுத்தீர்கள்..
நீங்கள் எடுத்ததால் பயத்தில் கட்
செய்து சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டேன்
அண்ணா" என்று அவசர அவசரமாக
கார்த்திக்கைப் பார்த்து நடந்ததை
எல்லாம் சொல்ல, கார்த்திக் அப்படியே
ஆணி அடித்தார் போல அசையாமல்
உட்கார்ந்திருந்தான்.

சிவா தோளைப் பிடித்து நடப்பிற்கு
இழுத்த போது தான் கார்த்திக் தன்
சிந்தனைகளில் இருந்து வெளியே
வந்து தன் நண்பனைப் பார்த்தான்.
தன் நண்பனைப் பற்றி நன்கு
அறிந்திருந்த சிவா "டேய் என்னடா..
என்ன பண்ணி வைத்தாய்?" என்று
கார்த்திக்கிற்கு மட்டும் கேட்குமாறு
வினவினான்.

மிதுனாவும் "அண்ணா நீங்கள்
மதுவை ஏதாவது தவறாக புரிந்து
கொண்டு இருக்கறீர்களா?" என்று
பதட்டத்துடன் கேட்டாள்.

சட்டென்று எழுந்தவன் "எனக்கு ஒரு
முக்கிய வேலை இருக்கு மிதுனா..
உடனே கிளம்ப வேண்டும்..
தப்பா எடுத்துக்காதிங்க" என்று
அவர்களின் பதிலுக்குக் கூட
காத்திராமல் வெளியே சென்று
விட்டான். கால்கள் தானாக கார்
பார்க்கிங்கை நோக்கி நடந்தது..
இல்லை ஓடினான் என்றே சொல்ல
வேண்டும்.

காரை வந்து எடுத்தவன் மதுவைப்
பார்க்க ஹாஸ்பிடல் புறப்பட்டான்..
அவளின் சிரிப்பும், முகமும்,
துறுதுறுப்பும், சிணுங்கல்களும்
மனதில் வந்து நின்றது. மணியைப்
பார்த்தவன் "மணி 3 தான்.. எப்படியம்
நாம் போவதற்குள் ட்யூட்டி முடிந்து
இருக்கும்.." என்று நினைத்தவன்
திருமுருகனிற்கு போன் செய்து
'இன்று தானே மதுவை
கூட்டிவருகிறேன்' என்று
வைத்துவிட்டான்.

"ச்ச என்ன தவறு செய்து விட்டேன்.
முயல் குட்டி போல தன்னையே சுற்றி
சுற்றி வந்தவளை நோகடித்து
விட்டேனே என்று நினைத்து
மருகினான். அவள் அழுததைக் கூடச்
சில சமயம் கண்டும் அதையெல்லாம்
கண்டு கொள்ளாமல் இருந்தேனே.
கை நீட்டி அடித்த போது கோபப்படாமல்
தன் நியாயத்தை எடுத்துச் சொல்ல
வந்தவளைப் பேசக் கூட
விடவில்லையே. மது சாரி டி.. சாரி.."
என்று மனம் துடித்தது அவனுக்கு.

ஹாஸ்பிடலை அடைந்து உள்ளே
சென்றவன் எதிரில் வந்த ரம்யாவைக்
கூட கவனிக்கவில்லை. ரம்யா தான்
"ஹலோ கார்த்திக் சார்.. நீங்க எங்க
இங்கே?" எனக் கேட்க கார்த்திக்
திரும்பிப் பார்த்தான்.

ரம்யாவைத் தனது திருமணத்தில்
கண்ட நியாபகம் அவனுக்கு. "ஹலோ
டாக்டர்.ரம்யா.. நான் மதுவைப் பார்க்க
வந்தேன்" என்றவன் "மது எங்கே
இருக்கிறாள்?" என்று வினவினான்.

"மதுமிதா அப்போதே இரண்டு
மணிக்கே கிளம்பிவிட்டாளே"
என்றவள் "உங்களிடம் தகவல்
சொல்லவில்லையா?" எனக் கேட்டாள்.

"இல்லை" என்றவன் "சரி நான்
கிளம்பறேன்" என்று யோசனையுடனே
கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.
இரண்டு மணிக்கே எங்கே
கிளம்பினாள்... அவள் சித்தப்பாவைப்
பார்க்கச் சென்றிருந்தால் அவர் நான்
போன் போட்டப் போது சொல்லி
இருப்பாரே என்று நினைத்தபடியே
நடந்தவன் கார் பார்க்கிங்கை
அடைந்து காரை நோக்கி நட்நதான்.

நடந்து வரவர மதுவின் போனிற்கு
ட்ரை செய்து கொண்டே வந்தான்.
மதுவின் ரிங்டோன் கேட்க அங்கேயே
நின்று சுற்றி முற்றிப் பார்த்தான்.
ஆனால் மதுவை எங்கும்
காணவில்லை.. செல் அடிக்கும்
திசையை நோக்கி நடந்தவன், அங்கு
மதுவின் ஹேண்ட்பாக்கினுள் இருந்த
போன் சத்தமாக ஒலி எழுப்ப, மதுவின்
ஹேண்ட்பாக் கீழே விழுந்து கிடந்தது..
அதைப் பார்த்தவனுக்கு இதயம் நின்று
நின்று துடித்தது. தனது போனை
அணைத்துவிட்டு நடுங்கிய விரலுடன்
அதை எடுத்தான் கார்த்திக்.

முதன்முதலாக தன் இதயம்
நடுங்குவதை உணர்ந்தான் கார்த்திக் ..
ஆம் அது மதுவின் ஹேண்ட்பாக் தான்.
மது எங்கே என ஆயிரம் கேள்விகள்
அவன் மனதிற்குள். கார்த்திக்கிற்கு
யோசிக்க யோசிக்க கலக்கம்
உண்டானது. அங்கேயே பித்துப்
பிடித்தவன் போல சில நிமிடம்
நின்றவன் "இது சரிப்பட்டு வராது
அரவிந்தைப் போய்ப் பார்க்கலாம்"
என்று முடிவு செய்து காரில் வந்து
அமர்ந்தான்.

கார்த்திக்கிற்கு போன் வர இந்த
நேரத்தில் இது வேறையா என்று கட்
செய்து விட்டான். மீண்டும் வர
எரிச்சலுடன் "ஹலோ" என்றான்.

"என்ன கார்த்திக்.. பொண்டாட்டியைக்
தேடுகிறாயா?" என்றான் ஒருவன்
எக்காலமாக.

"ஏய்ய் யாருடா நீ" என்று ஸ்டியரிங்கை
இறுக்கியபடி போனில் இருந்தவனிடம்
பாய்ந்தான் கார்த்திக்.

"சவுண்ட கம்மி பண்ணு.. உன்
பொண்டாட்டி உயிரோடு வரவேண்டும்
என்றால் கொஞ்சம் அடக்கிவாசி.. "
என்று சிரித்தான் அவன்.

"உன்ன எப்படி நம்பறது" என்று
கார்த்திக் கேட்க "சரியான
கேள்விதான்.. உன் போனிற்கு ஒரு
போட்டோ வரும் பாரு.. பாத்துட்டு
நம்பறையா இல்லையானு சொல்லு"
என்று போனை வைத்து விட்டான்.

மதுவின் கைகளை மட்டும் கட்டிப்போட்டுள்ள போட்டோவைப்
பார்த்த கார்த்திக்கிற்கு மேலும்
கலக்கம் உண்டு ஆயிற்று.
அழுதிருப்பாள் பயந்திருப்பாள் என்று
நினைத்தக் கார்த்திக்கிற்கு, முகம்
இறுகி வெறுப்பும் விரக்தியுமாக
அமர்ந்திருந்த மதுவைப் பார்க்கையில்
கார்த்திக்கிற்கு மனம் பிசைந்தது.
உடனே அவனிற்கு போனைப்
போட்டவன் "உனக்கு எவ்வளவு பணம்
வேண்டும்" என்று நேரடியாக கார்த்திக்
அவனிடம் கேட்டான்.

"பரவாயில்லை விஷயத்திற்கு வந்து
விட்டாய்.. ஆனால் பணம் எல்லாம்
வேண்டாம். அந்த கவர்ண்மென்ட்
ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிவிடு"
என்றான்.

"சரி" என்று யோசிக்காமல் பதில்
வந்தது கார்த்திக்கிடம்.

"நீ வர வேண்டிய இடம் டைம் எல்லாம்
சிறிது நேரம் கழித்து போன் போட்டுச்
சொல்லுகிறேன். வரும்போது
ப்ராஜெக்ட் இல் இருந்து
விலகிவிட்டதாய் ஒரு பத்திரம் எடுத்து
வா" என்றான் எதிரில் இருந்தவன்.

"சரி" என்ற கார்த்திக்கிடம் "ஏதாவது
புத்திசாலித்தனமாகச் செய்கிறேன்
என்று செய்துவிடாதே.. அப்புறம்
நடக்கப் போவதற்கு நான் பொறுப்புக்
கிடையாது" மிரட்டும் தொனியில்
பேசினான்.

கார்த்திக்கிற்கு யார் இதைச் செய்தது
என்று புரியாமல் இல்லை. அன்று
மதுவை மாலிற்கு அழைத்துச் சென்று
ஃபுட் கோர்ட்டில் உட்காரச்
செய்துவிட்டுச் சென்றது நினைவு
வந்தது. மதுவை அந்தக்
காலிப்பையன்களிடம் பேச்சு
வார்த்தை நடத்தும் போது கூட்டிச்
சென்றது எவ்வளவு தவறு ஆகிவிட்டது
பார் என்று தன்னைத்தானே
திட்டினான். மூர்த்தி அங்கிள்
ப்ராஜெக்ட் கிடைச்சப்பவே அலெர்ட்
பண்ணாறே.. ச்ச நம்பாம கேர்லெஸா
இருந்துட்டனே..

ஒரு யோசனை வந்தவனாக மதுவின்
போனை எடுக்க பையைத் திறக்க...
ஒரு ஃபைல் கிப்ட் ரிப்பனால் கட்டி
இருந்தது... என்ன இது என்று அதை
எடுத்துப் பார்த்தவன் ஆடிப் போனான்.
ம..மது கருவுற்றிருக்கிறாளா? என்று
ஒரு நொடி சந்தோஷப்பட்டவன்
மறுநொடியே இது எப்போது வந்த
ரிப்போர்ட் இது எனப் பார்த்தவன்,
அப்படியே நெற்றியின் மேல் கை
வைத்தபடி தலையைச் சீட்டில்
சாய்த்தான்.

அவன் சென்னையில் இருந்து வந்த
டேட் அந்த ரிப்போர்டில் இருந்தது.
இந்த விஷயத்தைச் சொல்ல
வந்தவளையா கை நீட்டி அடித்தேன்.
தலையை அழுந்தக் கோதியவன்
அப்படியே இரண்டு நிமிடம் உட்கார்ந்து
விட்டான். கண்களில் முதல்முதலாக
கார்த்திக்கிற்கு கண்ணீர் எட்டிப்
பார்த்தது. யாருக்காகவும்
கலங்காதவன் இன்று தன்
மணையாளிற்காக மனமுடைந்து
கலங்கினான்.

சிறிது நேரம் கழித்து தன் ஆபிஸிற்குப்
போனைப் போட்டவன் தனது பி.ஏ
மூர்த்தி அங்கிளிடம் விஷயத்தைச்
சொல்லி ப்ராஜெக்ட்டில் இருந்து
விலகிவிட்டதாக ஒரு பத்திரத்தை
டைப் பண்ணி வைக்கச் சொன்னான்.

பின்பு நிலாவின் கணவனும் கோவை
மாநகரின் கமீஷ்னருமான
அரவிந்திற்கு, மதுவின் போனில்
இருந்து போன் பண்ணி ஒரு
ப்ளானைக் கூறினான். "அரவிந்த்
நான் ஏன் சொல்கிறேன் என்றால்
அவனிடம் நான் இப்போது விட்டுக்
கொடுத்தால் இந்த மாதிரிதான்
அடுத்தவரிடமும் மிரட்டி வாங்குவான்.
அவனை விடக்கூடாது" என்று
ஆத்திரத்துடன் அழுத்தமாகக்
கூறியவன் "அரவிந்த் எனக்கு மது
முக்கியம். ஏனென்றால் இப்போது
அவள் ஒரு உயிர் அல்ல.. எனக்கு
அவளும் முக்கியம்.. எங்கள்
குழந்தையும் முக்கியம்" என்றவனின்
குரல் கரகரத்தது. "இந்த விஷயம்
நமக்குல்லையே இருக்கட்டும்
அரவிந்த்" என்று வைத்துவிட்டான்.

பின் போனை வைத்தவன் "எப்போது
அவன் போன் செய்வான் வரச்
சொல்லுவான்" என்று காத்திருந்தான்
கார்த்திக்.

ஆனால் தன்னவளின் மனநிலை
அவன் அறியவில்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழினி மதுமிதா டியர்

இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம், கூமுட்டை கார்த்திக்?
மிதுனா வந்து சொல்லாவிட்டால் இப்பவும் மதுவை நம்பியிருக்க மாட்டான்
 
Last edited:

padhusbi

Well-Known Member
Karthik budhi eppovume thappu thappadhan yosikkudhu
Pregnant therinjuduthu sonna varthaigalai eppadi thirumba pera poran
Pavam madhu ivanai love panninadhai thavira vere edhuvum pannalai
 

Srd. Rathi

Well-Known Member
Nice,இப்போவாவது உண்மையை புரிஞ்சுக்கிட்டயே கார்த்திக், பாவம் மது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top