அஞ்சனா தேவியின் அருமந்த புத்திரன் ஸ்ரீ ஆஞ்சநேயர்

#1
மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர்.
அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர் அனுமன்.

மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு.

ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை கண்டு வந்து ராமருக்கு ஆறுதல் அளித்தார்.
அசோக வனத்தில் இருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர் அனுமன்.
ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்திய அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனை காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார்.
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வர தாமதமானதால், தீக்குளிக்கச் சென்ற பரதனை காற்றை விட வேகமாக சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.

ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தது.
அப்போது நடந்த குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின் மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக் கொண்டிருந்தவர் அனுமன்.

இப்படி பல பெருமைகளை கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார்.
அதனால் இவரை மகா விஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர்.

அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது.
அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement