ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சனித் திசையும், ஏழரைச் சனியும் வந்து விட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்களும்
வந்து விடும் என்பது பொதுவான கருத்து.

ஆனால் இராமா இராமா என்று சொன்னால் சனீஸ்வரன் இறங்கி வந்து துன்பங்களைக் குறைத்து விடுவான் என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று இராமாயணத்தில் நடந்தது.

ஸ்ரீ இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த சமயம் இலட்சுமணன் மயங்கி விட்டான்.
அப்போது லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற தேவையான மூலிகை சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் கூறினார்.
அங்கிருந்த அனுமன் ஸ்ரீ இராமனிடம் ”நான் சென்று மூலிகைகளைக் கொண்டு வருகிறேன்” என்று கூறினான்.
ஸ்ரீ இராமனும் அனுமனை வாழ்த்தி ”வெற்றி உண்டாகட்டும்.. கடும் இக்கட்டான சூழலில் என்னை நினைவில் வைத்துக் கொள்” என்றார்.
அனுமனும் மகிழ்ச்சியாக விடைபெற்று சஞ்சீவி மலையை நோக்கி பயணப்பட்டான்.

அப்போது இராவணன் தனது தவ வலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான்.
இலட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை அனுமன் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது.
அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உரியது.
அவற்றிலும் நவக்கிரகங்களில் பெரியவனான சனி பகவான்தான் அதைச் செய்ய முடியும் என்று இராவணனுக்கு அறிவுறுத்தினார்கள்.
இராவணன் சனி பகவானை அழைத்து மூலிகையை எடுத்துச் செல்லாமல் அனுமனைத் தடுத்து நிறுத்துவது உன்னுடைய பொறுப்பு என்று கட்டளையிட்டான்.

தர்மத்தை மீறிய செயல் இது என்று தெரிந்திருந்தும் சனி பகவான் இராவணனின் கட்டளையை ஏற்று அனுமனை நாடிச் சென்றார்.
அனுமன் சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக் கொண்டிருந்தார்.
நெடுநேரம் ஆகியும் மூலிகையைக் கண்டறிய இயலாததால் அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்தார்.
சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் ஒற்றை விரலில் நிறுத்தி லட்சுமணனைக் காப்பாற்ற விரைந்து சென்ற அனுமனை வழியில் தடுத்தார் சனி பகவான்.

”வீண் விவாதம் செய்யவோ உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை எனக்கு அதிக வேலையிருக்கிறது” என்று அனுமன் சனி பகவானை எச்சரிக்கை செய்தார்.
ஆனால் அனுமன் என்ன சொல்லியும் கேளாமல் சனி பகவான் அனுமனைத் தடுக்கவே சனியை கீழே தள்ளி தன் பலம் அனைத்தையும் கொண்டு சனி பகவானை நசுக்கினார் அனுமன்.
தாங்க முடியாத வலியால் சனி பகவான் கதறினார்.
தம்மை விட்டு விடும்படி அனுமனிடம் கெஞ்சினார்.

அனுமன்தான் ஸ்ரீ இராம பக்தனாயிற்றே.
அதனால் சனி பகவான் “இராமா.. இராமா” என்று அழைத்தார்.
அனுமனின் பிடி சிறிது சிறிதாக இறங்கிற்று...
ஸ்ரீ இராமன் நாமத்தால் தப்பி பிழைத்தாய்.
உன்னால் பீடிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தும் போது ஸ்ரீ இராமனின் திருநாமத்தைச் சொல்பவர்களைத் தொல்லை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்து சனி பகவானின் சம்மதம் பெற்றபிறகே சனி பகவானை விடுவித்தார்.

ஆஞ்சநேயன் சனி பகவானை காலால் அழுத்தும் திருக்கோலத்தை கொண்டிருக்கிறது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்திருக்கும் பெரிய ஆஞ்சநேயர் கோவில்.
சனி திசை நடப்பவர்களும், சனி தோஷம் உள்ளவர்களும், ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்களும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால் சனி பகவானின் தொல்லையிலிருந்து மீளலாம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

டிசம்பர் 27 அன்று சனி பெயர்ச்சி.

பரிகாரம் செய்ய வேண்டியுள்ளவர்கள், ஸ்ரீ ராம ஆஞ்சநேயரை த்யானிக்கலாம். சனி பகவான் தொல்லைகள் அகலும்.

சரிதானா பானுமா?
 
banumathi jayaraman

Well-Known Member
டிசம்பர் 27 அன்று சனி பெயர்ச்சி.

பரிகாரம் செய்ய வேண்டியுள்ளவர்கள், ஸ்ரீ ராம ஆஞ்சநேயரை த்யானிக்கலாம். சனி பகவான் தொல்லைகள் அகலும்.

சரிதானா பானுமா?
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதாக சொல்லுறாங்க, ஆதி டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top