மாலை சூடும் வேளை-21

Advertisement

laxmidevi

Active Member
மாலை-21
பாடல் வரிகள்
நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு
விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு
கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு.
நிச்சயதார்த்த விழாவிற்கு நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் .கார்த்திக் பாதுகாப்பிற்காக பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.
நிச்சயதார்த்தம் இனிதாக மங்கையின் இல்லத்தில் ஆரம்பமாகியது. அதற்காக பெண்ணும் மாப்பிள்ளையும் கூடத்தில் தனித் தனியாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.
வானின் நீலத்தில் டிசைனர் சேலை அணிந்து இருந்தாள் மங்கை அது அவளுக்கு அழகாக பொருந்தி இருந்தது.விக்ரம் கிட்டத்தட்ட அதே நிறத்தில் கேஷுவல் சர்ட் அணிந்து இருந்தான். இருவரும் ஒருவர் மற்றொருவர் அறியாமல் ஒரு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் .
இருவீட்டு தாய்மாமன் களின் சம்மதத்தோடு நிச்சயம் நடைபெற்றது.மங்கையின் அன்னை மகாலட்சுமிக்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லாததால் பத்மாவின் கணவர் கஜபதி தாய்மாமன் முறைகள் அனைத்தையும் செய்தார். விக்ரமின் தங்கை மணிமேகலை நிச்சயபட்டினை கஜபதி இடம் கொடுத்து மங்கையிடம் தந்தனர். மங்கை விக்ரமன் வீட்டில் எடுத்திருந்த மெருன் நிற புடவையில் அழகாக தயாராகி வந்தாள்.
விக்ரமும் வெள்ளை நிறகோட் சூட்டில் ஆணழகனாக சபைக்கு வந்தான் இருவரும் அருகருகே நிற்க வைத்து போது அவர்களின் ஜோடி பொருத்தம் அழகாக இருந்தது.

பின்னர் அங்கு பரிசம் போடப்பட்டது. அதாவது மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் எடுத்திருந்த கல்யாண புடவை கட்டி அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் நலுங்கு வைத்து மாப்பிள்ளை வீட்டுக்கோ அல்லது மண்டபத்திற்கோ அழைத்து சென்ற விடுவர். இதுதான் பரிசம் போடுதல் நிகழ்வாகும் . இன்னும் கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.

அத்துடன் அந்தப் பெண்ணிற்கும் அவள் வீட்டிற்கும் ஆன தொடர்பு முடிந்துவிட்டது.

ஆம் அப்படித்தான் திருமணத்திற்குப் பின் தன் வீட்டிற்கு இல்லை இல்லை தன் அம்மா வீட்டிற்கு வருவதற்கு கூட கணவனின் அனுமதி பெற்று தான் வரமுடியும் . நம்மை பெற்று கண்ணுக்கு கண்ணாக வளர்த்த தாய் தந்தையரை போய் பார்ப்பதற்கு கூட திருமணத்திற்குப் பின் இன்னொருவரின் அனுமதி தேவை இருக்கும் போது, நாம் பெண் உரிமைகளைப் பற்றி பேசி என்ன பயன்?

இதெல்லாம் இன்னும் சில இல்லை பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நலங்கு முடிந்தது மங்கையை அழைத்துச் செல்லும்போது அவளின் அன்னை கண் கலங்கி விட்டார் .

கல்யாண வயது வந்தாலும் தங்கள் பிள்ளைகள் அன்னைக்கு சிறுபிள்ளைத்தானே. மங்கைக்கு அழுகை வந்தாலும் யாருக்கும் தெரியாமல் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.ராமநாதன் தன் மகளின் தலையில் தடவிக் கொடுத்ததும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மடை திறந்திருந்த வெள்ளமென மங்கையின் கண்களில் இருந்து வழிந்து ஓடியது . ராமநாதன் கண்கள் கூட கண்ணீரை சிந்தியது.

எவ்வளவுதான் கோபமாய் கண்டிப்பான தந்தையாய் காட்டிக்கொண்டாலும் பிள்ளைகளின் மீது அவருக்கு பாசம் அதிகமே.

அப்பா அடிப்பார் என்று கூறியே

எல்லா பாசத்தையும் மொத்தமாக அன்னைரே எடுத்துக் கொண்டு விடுகின்றனர். ஆனால் நம்மை அன்னை கருவில் தாங்கினார் என்றால் அவரையும் சேர்த்து தன் நெஞ்சத்தில் தாங்குபவர் தான் தந்தை.

பெரும்பாலான வீடுகளில் தாய் மகளின் உறவு மாமியார் மருமகள் போல் இருக்கும். ஆனால் தந்தை மகளுக்கும் இடையேயான பந்தம் தாய் ,மகன் போலத்தான் இருக்கும். தந்தைகள் தங்கள் மகளை அம்மா என்றறோ பாப்பா என்று தான் அழைப்பார்கள். அந்த அழைப்பே சொல்லிவிடும் அவர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பை. இதற்கு ராமநாதன் மட்டும் விதிவிலக்கா.

அப்போது சுந்தர் தான் என்ன மங்கை இப்படி அழுகிறாய் .மேக்கப் கலைந்துவிடும் . பின் யார் இந்த அழு மூஞ்சி பெண் என்று விக்ரம் கேட்டு விட போகிறார் என்று கேலி செய்து இருவரையும் தன்னியல்பாகவே முயன்றான்.

சூழ்நிலையை உணர்ந்து தந்தையும் மகளும் தங்கள் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டனர் .

என்ன தம்பி எங்க இருக்க கோயமுத்தூர்ல பெண்ணை கட்டி கொடுக்கப் போகிறாய் .பிளைட்டிலே வந்த முக்கால் மணி நேரத்தில் வீடு வந்து விடலாம். இதற்கு போய் கண்கலங்கமா ?நீ கண் கலங்கினால் பிள்ளை முகம் வாடிவிடும். சிரித்த முகமாக அனுப்பி வைப்பா இல்லை என்றால் பிள்ளை வருத்தப்படும் என்று சமாதானம் கூறினார் அம்பிகா.

அவர் கூறியதில் இருவரும் சற்று தெளிவாகவும் விக்ரம் வீட்டினர் மங்கையை அழைத்துக்கொண்டு ராகவனின் பூர்வீக இல்லம் சென்றனர். அங்கு இளைய தலைமுறையினரின் குரல் மகிழ்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தது .மங்கை தன் திருமணத்திற்காக தன் தோழிகள் கவியையும் மதியையும் அழைத்திருந்தாள்.அங்கு வந்திருந்த அவர்கள் அவளை கேலி செய்துகொண்டிருந்தனர் .மங்கை இது அரேஞ்ச் மேரேஜா? லவ் மேரேஜா? எனக்கு இது லவ் மேரேஜோனு சந்தேகமாக இருக்கு என்றாள் கவி.

கண்டிப்பா இது லவ் மேரேஜ் தான் .ஏசிபி சார் பார்த்த பார்வையிலேயே தெரியல. சுற்றி இருந்த யாருமே அவர் கண்ணுக்கு தெரியவில்லை, மங்கைக்கோ இது பூலோகமா என்று சந்தேகமே வந்துவிட்டது என்று கலாய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மலரும் மணிமேகலையும் வந்தனர் .

மங்கை மாமாவை பார்த்துவிட்டு வரியா மொட்டை மாடியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு என்றாள் மலர்.

வேணாம்கா யாராவது பார்த்தால் ஏதாவது சொல்லப் போறாங்க அதனால் வேண்டாம் என்று மறுத்தால் மங்கை.

இதனால்லாம் வாழ்க்கையில ஒரு தடவை தான் கிடைக்கும் மிஸ் பண்ணாதீங்க அண்ணி போய்ட்டு வாங்க. நாங்க பார்த்துக்கிறோம் என்று கூறினாள் மணி.

ஐயோ அண்ணி நான் எப்படியும் உங்கள விட வயசுல சின்னவளா தான் இருப்பேன் சும்மா பெயர் சொல்லியே கூப்பிடுங்க. அண்ணி எல்லாம் கூப்பிட வேண்டாம் ப்ளீஸ் என்று கூறினால் மங்கை மணியிடம்
இல்லம்மா உனக்கு என் அப்பாவை பற்றி தெரியாது .அவர் அண்ணன் மனைவிக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று கிளாஸ் எடுப்பார் என்று கூறினாள் மணி.
இல்ல அண்ணி.நான் மாமாவிடம் பேசுகிறேன். நீங்க என்னை மங்கைனு கூப்பிடுவது தான் எனக்கு பிடிக்கும் என்று மணி மீது சலுகையாக சாய்ந்து கொண்டாள் மங்கை.

நீ மங்கையிடம் ஏதாவது பேசவேண்டும் என்று நினைத்தால் மொட்டை மாடியில் போய் பேசிட்டு வா , கலை மங்கையை அங்கு வரச் சொல்லியிருக்கிறாள் என்று கூறினான் கார்த்திக்.

பெரியவர்கள் பார்த்தால் ஏதாவது சொல்ல போறாங்க வேண்டாம் என்றான் விக்ரம்.

பரவா இல்ல இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் மங்கையை உன்னுடைய காதலியாக பார்க்க முடியும் . இப்போது தான் ஒரு சில விஷயங்களை மனம் விட்டுப் பேச முடியும். இதை மிஸ் பண்ண வேண்டாம் .மங்கைக்கும் உன்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்று நினைக்கலாம் அல்லவா ?நான் மாமாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன் . தயக்கம் வேண்டாம். பேசுவதற்கு மட்டும் தான் அனுமதி தரப்பட்டது என்று கேலியாக கூறி கண்ணடித்தான் கார்த்திக்.

சரி டா என்று சிரித்தவாறு மொட்டை மாடிக்கு சென்றான்.மொட்டை மாடியில் விக்ரம் மங்கையின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

பட்டுப்புடவையில் மிதமான ஒப்பனையில் இரவின் ஒளியில் தேவதையென தன் கண்ணில் விழுந்தவளை கண்களாலேயே களவாடிக் கொண்டிருந்தான் அந்த காவலன்.

தன்னவனின் பார்வையில் இருந்த கண்ணியம் மாறி காதலையும் தாபத்தையும் பார்த்தவளுக்கு எதுவும் தோன்றவில்லை அவனைத்தவிர.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கரண்ட் கட் ஆகியது வீட்டில் யுபிஎஸ் இருந்தும் ஆன் ஆகவில்லை .இரு மங்கை நான் என்னவென்று பார்த்து வருகிறேன் என்று கிளம்பினான் . நான்கு எட்டு தான் எடுத்து வைத்திருப்பான். எதற்கு இருட்டில் தனியாக நின்று கொண்டு அவளையும் அழைத்து செல்லலாம் என்று திரும்பினான். அங்கே மங்கையும் எதற்காக தனியாக இருக்க அவர் உடனே செல்லலாம் என்று இரண்டு எட்டுகள் வைத்தால் இருவரும் இருட்டில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர் .

மோதியதில் தடுமாறியவளை விக்ரம் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் . பெண்மையின் மென்மையில் தன்னைத் தொலைத்தவன் அவளை விடுவிக்க எண்ணமில்லாமல் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள் .

அவளும் விலக முயலாமல் அவன் அணைப்பில் இருந்தாள். கரண்ட் வந்துவிட்டது .
மாமா நான் வருகிறேன் என்று குரல் கொடுத்துவாறே வந்தாள் மலர்.
என்ன மாமா லிப்லாக் எல்லாம் முடிஞ்சிடுச்சா?
வாலு எல்லாம் உன்னோட வேலை தானா என்று மலரின் காதை திருகினான் விக்ரம்.
மாமா வலிக்குது விடுங்க. நியாயமாக பார்த்தால் நீங்க நன்றி என்றுதான் சொல்லணும். உங்களுடைய லவ்வர் கிட்ட யாருக்கும் தெரியாம பேச வச்சு இருக்கேன் . நீங்க அடிக்கறீங்க பரவால்ல .
நான் கூட என் மாமா காகிசட்ட கூட தான் குடும்பம் நடத்துவார்னு நினைச்சேன் பரவால்ல உங்களுக்குள்ளும் ஒரு காதல் மன்னன் இருந்திருக்கிறான் . நான் கூட மாமா ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொன்னத நம்பலை. மங்கையை பார்த்த அப்புறம் தான் எனக்கு நம்பிக்கை வந்துச்சு .
உன்னை இப்படி பழைய மலராக பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா என்றான் விக்ரம் .
மலர் விஜய்யிடம் காதலை மறுத்ததில் இருந்து நன்றாக பேசி சிரித்தாலும் அதன் உள்ளே வலியும் விரக்தியும் மறைந்து இருக்கும்.
இது யாருக்கு தெரிந்ததோ இல்லையோ விக்ரமுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் அப்படி கூறினான்.இப்போது சாதாரணமாக கூறிய வார்த்தைகள் பின்னாளில் அவன் வாழ்கையில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்த போவதை விக்ரம் அறியவில்லை.

சரி

சரி நேரமாச்சு வாங்க போலாம் காலையில சீக்கிரம் எந்திரிக்கணும் என்று இருவரையும் அழைத்துச் சென்றாள் மலர்.

விக்ரமை மாடிக்கு அனுப்பி விட்டு தன் அறைக்கு வந்த கார்த்திக் தன் மனையாளை தேடினான். குழந்தைகள் இருவரும் தாத்தா பாட்டியுடன் தூங்கிவிட மணி மட்டும் தனியாக ஒரு சாய்த்து படுத்திருந்தாள் பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்டு அவள் என்னடி அண்ணா கல்யாணத்துல ஓவரா பிசியா இருக்கியா ?என்னை கண்டுக்கவே மாட்டேங்கற கலை என்றான் ஏக்கத்துடன்.

நான் பிஸியா இருக்கேனா? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல எப்ப பாத்தாலும் மாமானு அப்பாவையும், மச்சான்னு அண்ணனையும் வால் பிடித்து திரிஞ்சிட்டு இப்ப என்னை குறை சொல்றீங்களா என்று கேட்டாள் மணி . இன்னைக்கு பங்க்ஷன்ல நான் என்ன கலர் சாரி கட்டி இருந்தேன் சொல்லுங்க பார்ப்போம். அதைக் கூட நீங்க கவனிக்கல என்றாள் மணி.

கலைக்குட்டிக்கு நான் கவனிக்கல தான் கோபமா.சரி நல்லா கவனிச்சிட்டா போகிறது என்றான் அர்த்தத்துடன்.

கணவனின் பார்வையில் முகம் சிவந்த மணிமேகலை.நீங்க கவனிச்சதெல்லாம் போதும் தூங்குங்க காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும்.

சரிடா கலை .மாமாக்கும் டையர்டா இருக்கு தூங்கலாம் என்று அவனின் கலையின் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்தவாறே உறங்கிக் போனான் கார்த்திக்.

விக்ரம் மங்கையின் திருமணத்தில் சந்திப்போம்.

மாலை தொடுக்கப்படும்...

வணக்கம் நண்பர்களே,

கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

கருத்துக்களை பதிவு செய்ய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

என்றும் அன்புடன்

உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top