நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 54

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
எதற்கடி
வலி தந்தாய்
உன் விழிவழி
அசைவினினால்


இரு வாரம் கடந்திருந்த வேளையில் அன்றுகாலை எழுந்தமர்ந்த ஶ்ரீயிற்கு எப்போதும் போல் மசக்கையின் தாக்கம் அதிகமாயிருக்க தலை கிறுகிறுவென்று சுற்று அமர திராணியில்லாது மறுபடியும் கட்டிலில் சுருண்டு கொண்டாள்.. ஆபிஸ் செல்ல தயாராகிக்கொண்டிருந்த ரிஷி கண்ணாடிவழியே அவள் மீண்டும் படுக்கையில் சுருண்டதை பார்த்தவனுக்கு கண்கள் கலங்க வேதனையில் முகம் கசங்கியது..... எனினும் தன் மனையாளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு தனக்குள்ளதை நினைவில் கொண்டுவந்தவன் கீழே சென்று தன் அன்னையிடம் கேட்டு ஶ்ரீயிற்கு குடிப்பதற்கு பாலும் பிஸ்கட்டும் எலுமிச்சம்பழமொன்றும் எடுத்து வந்தான்...
அறைக்கு வந்தவன் ஶ்ரீயை ஆதரவாக அணைத்தபடி எழுப்பி கட்டிலில் சாய்ந்தவாறு அமரச்செய்தவன் அவளது கையில் எலுமிச்சம் பழத்தை கையில் கொடுத்தவன் மெதுவாக பிஸ்கட்டையும் பாலையும் புகட்டத்தொடங்கினான்...அவன் புகட்டிய உணவை உண்டுமுடித்தவள் வாந்தி வராமல் இருக்க எலுமிச்சம் பழத்தை முகர்ந்தபடியிருந்தாள்.
சற்று நேரத்தில் தெம்பானவள் ரிஷியை பார்க்க அவனது முகம் கவலையில் கசங்கியிருந்ததை பார்த்தவளுக்கும் அதன் பிரதிபலிப்பு தோன்ற அதை கணட ரிஷி அவளை இறுக அணைத்துக்கொண்டான்...
“வேணாம்... அம்லு... நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம்... நமக்கு இந்த பாப்பா வேணாம்மா... நீ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியலை...” என்றவனது குரலில் இருந்த வேதனையும் கரிசனமும் புரிந்த போதிலும் எங்கே தான் அவன் சொல்லுக்கு செவி சாய்ப்பது தெரிந்தால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பான் என்று உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலகி அமர்ந்தவள் முகத்தை திருப்பிக்கொண்டவள்
“அத்தான்... நான் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.... என்னோட முடிவில எந்த மாற்றமும் இல்லை... எனக்கு நம்ம பாப்பா வேணும்... டாக்டர் சொன்ன மாதிரி நம்ம பாப்பாவை உங்க கையில நல்லபடி பெத்து கொடுப்பேன்...” என்று சொன்னவளுக்கு அவளது முடிவில் எந்த மாற்றுக்கருத்துமில்லை....
ரிஷியும் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லையென்று வேலைக்கு செல்ல தயாரானான்... அப்போது ஶ்ரீ
“அத்தான் இன்னைக்கு ஒருநாள் லீவ் போடுறீங்களா???”
“சரி அம்லு... இப்போ நீ போயிட்டு ப்ரெஸ் ஆகிட்டு வா.... நான் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்...”
“இல்லை அத்தான்.. கொஞ்சம் லேட் ஆகட்டும்.. நீ இப்படி வந்து என் பக்கத்துல கொஞ்சம் உட்காருங்க...” என்று ஶ்ரீ அழைக்க ரிஷியும் அருகில் வந்து அமர்ந்துகொண்டான்...
அவன் மடியில் தலைவைத்து படுத்தவள் அவனது கையை எடுத்து தன் தலையில் வைக்க அவளது செயலுக்கான அர்த்தம் புரிந்தவன் அவளது தலையை கோதி அது தந்த சுகத்திலேயே கண்ணயர்ந்தாள் ஶ்ரீ...
தாய்மடி தேடும் குழந்தையாய் உறங்குபவளை கண்டவனுக்கு ஒரு வாரத்திற்கு முன் நடந்த நிகழ்வு நினைவில் வந்தது...
ஶ்ரீயை ஆஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த நாளிற்கு மறுநாள் ரிஷியிற்கு ஶ்ரீயை பரிசோதித்த டாக்டரிடமிருந்து அழைப்பு வந்தது...
அவரை சந்திக்க சென்றவனுக்கு டாக்டர் கூறியதாவது
“ரிஷி உங்க வைய்ப்போட ஹார்ட் பீட் ரெகுலர் பர்சனுக்கு இருப்பதுபோல் இருக்கவில்லை.... அதனால அவங்களுக்கு சில டெஸ்ட் எடுக்கச்சொல்லியிருந்தேன்... அப்போ தான் உங்க வைய்ப்புக்கு ஹார்ட்ல சில பிராப்ளம் இருக்குனு தெரியவந்தது...”
“என்ன டாக்டர் சொல்லுறீங்க??”
“ஆமா ரிஷி... அவங்களுக்கு மைட்ரல் வால்வ் ப்ரோலெப்ஸ் (Mitral valve prolapse) ஹார்ட் டிசீஸ் இருக்கு...”
“ஆனா டாக்டர் இதுவரைக்கும் அவளுக்கு இப்படியிருக்குனு என்கிட்ட சொன்னதில்லையே..”
“இந்த நோய் சிலபேருக்கு எந்த சிம்டம்சும் காட்டாது.. இப்போ கூட இவங்க ப்ரெக்ணன்டா இருப்பதால தான் சிம்டம்ஸ் காட்டியிருக்கு....”
“டாக்டர்.. அப்போ...”
“ரிஷி.. இவங்க இப்போ ஸ்டார்டிங் ஸ்டேஜில தான் இருக்காங்க.. இந்த ஹார்ட் டிசோடர் இதய வால்வுகளில் உள்ள டிசுக்கள் பலவீனமாக இருப்பதால தான் ஏற்படுது...இதோட எக்ரீம் லெவஸ் பிளட் லீக்கேஜ் தான்... ஆனா உங்க வைய்ப்புக்கு அந்த லெவலுக்கு போகலை.. அதனால பயப்படுறதுக்கு ஒன்றும் இல்லை.... ஆனா பிரக்னென்சி பீரியட்டுல ரொம்ப கவனமாக பார்த்துக்கனும்.... மற்றைய கர்பிணிகளை விட இவங்க ரொம்ப சோர்வா இருப்பாங்க.. அடிக்கடி இவங்க ஹார்ட் பீட்டை செக் பண்ணிக்கனும்... அடிக்கடி மயக்கம், களைப்பு இதெல்லாம் இருக்கும்...”
“டாக்டர் இதுக்கு ட்ரீட்மண்ட எதுவும் இல்லையா???”
“இருக்கு.. ஆனா இந்த டைமில் அதை ப்ரசீட் பண்ணமுடியாது.. அது தாய் குழந்தை இரண்டு பேருக்குமே நல்லதல்ல...”
“டாக்டர்... டெலிவரிக்கு பிறகு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறதுல எதாவது கம்ப்ளிகேஷன்ஸ் இருக்கிறதா டாக்டர்???”
“இல்லைனு சொல்ல முடியாது... ஆனா ட்ரீட்மண்டோட பைனல் ரிசல்ட் பாசிட்டிவ்வா வரும்னு நம்புவோம்.... இவங்க ப்ரெக்ணன்ட் ஆகுறதுக்கு முன்னாடியே இதை பற்றி தெரிஞ்சிருந்தா எந்த காம்ப்ளீகேஷனும் இல்லாமல் ட்ரீட்மண்டை முடிச்சிருக்கலாம்.. பரவாயில்லை.... அவங்களை டெலிவரி டைம் வரைக்கும் ரொம்ப கவனமாக பார்த்துக்கோங்க..” என்ற டாக்டரின் வார்த்தைகளை கேட்டவனுக்கு என்னசெய்வதென்று புரியவில்லை.....
வீட்டிற்கு வந்தவன் களைப்பு மிகுதியால் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவளை கண்டதும் டாக்டரின் வார்த்தைகளே நினைவில் வந்தது...
அடுத்த நொடி அவன் மனதில் உதித்த எண்ணம் தற்போதைக்கு குழந்தை வேண்டாம்... இதயம் தொடர்பான நோய் என்று அறிந்த பின் அதற்கான வைத்தியத்தை பிற்போடுவது ஶ்ரீயின் ஆரோக்கியத்தை பாதித்துவிடுமோ என்று பயந்தவன் எப்படியாவது ஶ்ரீயிடம் பேசி இதற்கு சம்மதிக்க வைக்கவேண்டுமென முடிவெடுத்தான்...
இரண்டு நாட்களாக எவ்வாறு ஶ்ரீயிடம் பேசி சம்மதிக்க வைப்பது என்ற யோசனையில் உழன்றவன் ஶ்ரீயிடமும் ஒதுக்கத்தை காட்ட ஶ்ரீயோ ரிஷியின் திடீர் மாற்றத்தினால் குழம்பித்தவித்தாள்.... மசக்கை ஒரு புறம் படுத்த ரிஷியின் விலகல் மறுபுறம் ஆத்திரமூட்ட இன்று இதற்கொரு முடிவு கட்டவெண்ணி ரிஷியிற்காக காத்திருந்தாள்.
இரண்டு நாட்களாக தன்னிடம் சரியாக முகம் கொடுத்து பேசாத ரிஷியிடம் இன்று எவ்வாறேனும் பேசிட வேண்டுமென முடிவெடுத்து அவனுக்காக தங்களறையில் காத்திருந்தாள் ஶ்ரீ...
கடந்த இரு நாட்கள் போல் இன்றும் தாமதாக வந்த ரிஷி அறையில் விழித்திருந்த ஶ்ரீயை கண்டவனது முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி தோன்றி அது தோன்றிய கணமே மறைந்துவிட அதை கண்டுகொண்ட ஶ்ரீ அவன் உடைமாற்றிவிட்டு வெளியே வரும்வரை காத்திருந்தவள் அவனை சாப்பிட அழைக்க அவனோ சாப்பிட்டுவிட்டு வந்ததாக கூறிவிட்டு படுக்கையில் விழ ஶ்ரீயோ
"அத்தான் உங்ககூட பேசனும்..." என்றுகூற ரிஷியோ
"டயர்டா இருக்கு ஶ்ரீ... நாளைக்கு பேசலாம்.."
"இல்லை.. இப்போவே பேசனும்..."
"சொன்னா புரிஞ்சிக்கோ ஶ்ரீ..."
"நீங்க தான் என்னை புரிஞ்சிக்கமாட்டேங்கிறீங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை...?? எதுனால என்கிட்ட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிறீங்க...?? எதுனால நான் தூங்குனதும் என் கையை பிடிச்சிக்கிட்டு கண்கலங்குறீங்க?? பதில் சொல்லுங்க அத்தான்..." என்று ஶ்ரீ கேட்க ரிஷியிற்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.... கடந்த சிலநாட்களாகவே அவளிடம் எப்படி அந்த விஷயத்தை சொல்வது என்று தன்னுள்ளே கலங்கியபடியிருந்தவன் அவளிடம் நேரடியாக சொல்ல மனதிடம் இல்லாததாலேயே அவளிடம் ஒதுக்கம் காண்பித்தான்..... ஆனால் இன்று அவளே கேட்க அவனால் இனிமேல் அவளிடம் மறைக்கமுடியுமென்று தோன்றவில்லை.. அதோடு தான் தெரிவிக்கப்போகும் செய்தியை எப்போதுமே ஏற்கமாட்டாள் என்று நிச்சயமாக தெரிந்தும் கூட அதை தவிர வேறு மாற்றுவழி தெரியாததால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த செய்தியை ஶ்ரீயிடம் சொன்னான் ரிஷி....
"ஶ்ரீ நமக்கு இந்த குழந்தை வேண்டாம்...." என்று கூற ஶ்ரீ
"நீங்க சொல்லுறது எனக்கு புரியலை அத்தான்..."
"நமக்கு இப்போ குழந்தை வேண்டாம்... நீ... நீ.. அபார்ஷன் பண்ணிடு.." என்று ரிஷி கூறிய மறுநொடி அவனை அறைந்துவிட்டாள் ஶ்ரீ.
இதை எதிர்பார்த்திருந்தவன் போல் எந்தவித சலனமுமின்றி இருந்தவனது கண்களில் அத்தனை வேதனை..
கோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுத்த ஶ்ரீ அவனது கண்களை பார்த்ததும் ஏதோவொன்று சரியில்லை என்று உணர்ந்துகொண்டவள் எதுவும் சொல்லாது மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்..
ரிஷியிற்கு ஶ்ரீயின் மனநிலை தெரிந்த போதிலும் அவளது இந்த அமைதிக்கான காரணம் புரியவில்லை....
காதலோ மோதலோ எதையும் முகத்திற்கு நேராக காட்டிவிடும் ஶ்ரீ இன்று அமைதியாயிருப்பது ஒருவித கவலையை உண்டாக்க அவளை தன்புறம் திருப்பிய ரிஷி
“அம்லு.. எதுக்கு அமைதியா இருக்க அம்லு?? ஏதாவது பேசுமா.. அத்தானை வேணும்னா நல்லா திட்டு... இப்படி அமைதியா இருக்காத.. ப்ளீஸ்...” என்று ரிஷி கெஞ்ச அவனது கையை உதறியவள் மீண்டும் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்....
அடுத்து வந்த இரு நாட்களும் ரிஷியிடம் ஶ்ரீ பாராமுகம் காட்ட ரிஷிதான் திண்டாடிப்போனான்... அவன் வீட்டில் இருக்கும் நேரம் ஶ்ரீ ஹேமாவுடனோ அல்லது தன் அத்தையுடனோ பொழிதை போக்கினாள்... இரவிலும் அவர்களது அறையிலிருந்த இன்னொரு அறையில் படுத்துக்கொண்டாள்... ரிஷி எவ்வளவோ கெஞ்சியும் ஶ்ரீ அதற்கு செவி சாய்க்கவில்லை... மூன்றாம் நாள் மாலை ரிஷியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்த ஶ்ரீ அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்க ரிஷியோ ஶ்ரீ தன்னோடு பேசிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் தன் வேலைகளை புறந்தள்ளிவிட்டு வீட்டிற்கு வந்தவன் தன் மனையாளை தேடி தங்களறைக்கு சென்றான்....
அங்கு ஶ்ரீயோ சில கோப்புகளை பார்த்துக்கொண்டிருக்க ரிஷியோ
“அம்லு...” என்றழைக்க ஶ்ரீயோ
“இதனால தான் பாப்பா வேணாம்னு சொன்னீங்களா???”என்று கேட்டு அவன் முன் அந்த கோப்பினை நீட்ட அதிலிருந்த பெயரை பார்த்தவனுக்கு என்ன நடந்திருக்குமென்று புரிந்தது....
“அம்லு...”
“அத்தான்... இதை நீங்க நேரடியாகவே என்கிட்ட சொல்லியிருக்கலாமே... எதுக்கு பாப்பா வேணாம்னு சொன்னீங்க....”
“ட்ரீட்மண்ட் லேட்டாகுனா உனக்கு ஏதாவது பிராப்ளம் வந்திடுமோனு தான்... அதோடு ப்ரெக்னன்சி டைமிலும் ரொம்ப சபர் பண்ணுவனு சொன்னாங்க... நீ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது அம்லு.. அதனால தான் பாப்பா வேணாம்னு சொன்னேன் அம்லு...”
“அத்தான் நான் டாக்டர்கிட்ட பேசினேன்... அவங்க சிசேரியன் பண்ணி பேபியை எடுத்தா எந்த ப்ராப்ளமும் இல்லைனு சொன்னாங்க... அதோடு டெலிவரிக்கு பிறகு ட்ரீட்மண்ட் ஆரம்பிக்கிறதுல சின்ன காம்ப்ளிகேஷன் தான் இருக்கு... அது பெரிய இஷ்யூ இல்லைனு சொன்னாங்க... அதனால இனிமே பாப்பா வேணாம்னு சொல்லாதீங்க... மறுபடியும் அந்த பேச்சை எடுத்தீங்கனா நான் அம்மா வீட்டுக்கு போயிடுவேன்..”
“அம்லு... இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்கு இந்த பாப்பா வேணுமா?? நமக்கு என்ன வயசா ஆச்சு?? உன்னோட ட்ரீட்மண்ட்ட முடிச்சிட்டு நாம ஆறுதலா பெத்துக்கலாம்...”
“அத்தான் நீ புரிஞ்சு தான் பேசுறீங்களா?? எத்தனை பேர் நமக்கு இந்த கொடுப்பனை கிடைக்காதானு தவம் கிடக்குறாங்க தெரியுமா??? அதோடு இது ஒரு உயிர் அத்தான்... அதை கொல்லுற உரிமை நம்மகிட்ட இல்லை.... புரிஞ்சிக்கோங்க... எனக்கு நம்ம பாப்பா வேணும்... உங்க முடிவுல மாற்றம் இல்லைனா சொல்லுங்க நான் அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்..” என்றவள் எழுந்து கபோர்டினை திறந்து அவளது சூட்கேஷினை வெளியே எடுத்தவள் கபோர்டில் இருந்த தனது உடைகளை அள்ளிப்போட அவளை தடுத்த ரிஷி
“ஓகே... இனிமே இதை பற்றி நான் பேசமாட்டேன் ஓகேவா.... ஆனா நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணித்தரனும்....”
“அதுக்கு முதல்ல இந்த விஷயத்தை வீட்டுல யாருக்கும் சொல்லமாட்டேன்னு நீங்க ப்ராமிஸ் பண்ணுங்க...”
“அம்லு....”
“பண்ணுங்க அத்தான்....”
“ப்ராமிஸ்.... ஆனா நான் வீட்டுல இல்லாத நேரத்துல நீ கவனமாக இருப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணித்தா...”
“ப்ராமிஸ்...” என்று ஶ்ரீ உறுதியளித்தபோதும் ரிஷி தன் அன்னையிடம் ஶ்ரீயிற்கிருந்த நோயை கூறாது அவள் மிக பலவீனமாக இருப்பதாய் கூறியவன் அவளை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி கூறினான்....
இவ்வாறு மூன்று மாதங்கள் கடந்திருந்த வேளை அடுத்த சோதனை ஆரம்பமானது...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Devi keyan

Active Member
Ennappa ipdi posukkunu srikku heart problem Apdinutinga.very sad.but pondattikku onnuno kolandai venanu sonna paru rishi super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top