சகடாசூரனும் பூதனையும்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓம் ஸகடாஸுர பஞ்சநாய நம:

கிருஷ்ண பரமாத்மா பாலனாகித் தொட்டிலில் தவழ்ந்து கொண்டு இருந்த போது கம்ஸனால் ஏவப்பட்ட ஸகடமாக வந்த அசுரனை கொன்ற பரப் பிரம்ம சிசுவே! நமஸ்காரம்.

அன்னை யசோதை குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு சில சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தாள்.
அப்போது ஸ்தூல உடல் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த சகடாசுரன் என்னும் அசுரன் தனது சூட்சும உடலின் மூலமாக தொட்டிலுக்குள் புகுந்து கொண்டான்.

அப்போது குழந்தை கிருஷ்ணர், தன் மாந்தளிர் காலால் தொட்டிலை சற்று உதைத்த போது, தொட்டில் உடைந்து சகடாசுரன் இறந்து போனான்.

சகடாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் சோம்பேறித்தனத்திற்கும் பக்தி வினோத தாகூர் ஒப்பிடுகிறார்.

கிருஷ்ணர் தொட்டிலை உதைத்தபோது, அதன் இரண்டு சக்கரங்களும் கழண்டு கொண்டன.

அதே போன்று நாம் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரித்தால், பிறப்பு, இறப்பு என்னும் ஸம்ஸார சக்கரமும் கழண்டு விடும் என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓம் பூதநா ஜீவித ஹராய நம:

கம்ஸனாலே ஏவப்பட்டு வந்த பேயாகிய பூதநையின் உயிரை கவரும் பொருட்டு அவளது முலைப்பால் உண்ட கிருஷ்ணமூர்த்தியே!
நமஸ்காரம்.
இதனை 'கிம்புன ஸ்ரத்தயா பக்தயா க்ருஷ்ணாய பரமாத்மனே, யஸ்சநப்ரியதாம் கிந்துரக்தா ஸ்தானதைநமாத' என்ற வரிகளால் அறிக.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனின் கட்டளையை ஏற்ற பூதனை என்னும் அரக்கி தனது மார்பில் விஷத்தைத் தடவிக் கொண்டு தன்னை அழகிய பெண்ணாக உருமாற்றிக் கொண்டாள்.

கிருஷ்ணரின் அறைக்குச் சென்ற பூதனை அவரை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
குழந்தை கிருஷ்ணர் பாலை உறிஞ்சும் போது அவளது உயிரையும் உறிய ஆரம்பித்தார்.
அந்த வலியைத் தாங்கவியலாத பூதனை தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி பதினாறு மைல் நீளம் கொண்ட உடலாக வெளிப்படுத்தி மாண்டு போனாள்.
அதன் பிறகு பூதனையின் நெஞ்சில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணரை விருந்தாவனவாசிகள் தூக்கிச் சென்றனர்.

கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்தி வினோத தாகூர், பூதனையை இதயத்தில் குடி கொண்டிருக்கும் பொய்யான ஆன்மீக குருவிற்கு ஒப்பிடுகிறார்.
மற்றவரின் பார்வைக்கு பூதனை கிருஷ்ணரின் ஆரோக்கியத்திற்காக அவருக்கு பாலூட்ட முனைந்ததாக தோன்றலாம்
ஆனால் அவளது நோக்கம் கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்பதே.

அது போலவே போலி குருமார்கள் கிருஷ்ணரின் மீதான ஆரோக்கியமான தூய அன்பை வளர்ப்பதற்கு உதவுவது போல காணப்பட்டாலும் பிறரை புலனுகர்ச்சி விஷயங்களில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பூதனையுடன் ஒப்பிடப்படுகின்றனர்.

*பூதனை தவறான நோக்கத்தில் கிருஷ்ணரை அணுகினாலும் அவள் தாய் போன்ற ஒரு சேவையைச் செய்ததால் அதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட கிருஷ்ணர், உடனடியாக பூதனைக்கு ஆன்மீக உலகில் தாய்க்கு சமமான ஸ்தானத்தை அருளினார்*
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top