yogi's novel

Advertisement

  1. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 38

    “என்ன. என் அம்மா அப்பா.. இங்கு தான் இருக்கிறார்களா!. சுனாமியில் இறந்ததாக அல்லவா அண்ணன் சொன்னார்” என்றாள் வியப்பின் உச்சத்தில் ஆதிரை. ‘என்னைப் பெற்றவர்களை நான் பார்க்க போகிறேனா!’ என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் ரிதிகா “இருக்கிறார்கள் இல்லை. இருந்தார்கள். Sorry ஆதி. தேவையில்லாமல் உன்ன...
  2. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 37

    “ஆதிரை.. வசதியாக இருக்கா!” என்று அவள்புறமாக முகத்தினை திருப்பிக் கேட்டான் அர்ஜூன். “ஆன்….” என்று மூடியிருந்த அவளது கண்களை திறந்து அவன் முகத்தினை பார்க்க முயன்றாள். அவள் முகத்திற்கு மிக அருகில் வந்த அவனது முகம் அவளைத் திக்கு வாயாக்கியது. அவனது விழிகளைச் சந்தித்த அவளது விழிகள் சில வினாடிகள்...
  3. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 36

    அந்தக் குரல் ஆதிரையை அழைக்கவில்லை. யாரோ ருத்வி என்ற பெண்ணா! இல்லை ஆணையோ அழைத்தது. அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அந்த அறையிலிருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. “ஆதிரை யாரோ பெண் அதுவும் நிறைமாத கர்ப்பிணி பெண் போல தெரிகிறது...
  4. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 35

    “நீ என்னை மணந்து கொள்கிறாயா!.” என்றான் அர்ஜூன். இதனைக் கேட்டதும் தேனாறு பாய்ந்தது போல தோன்ற இருந்த ஆதிரை மதி மயங்கி அர்ஜூனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவன் மார்பில் அவள் சாய்ந்ததையே அவள் சம்மதமாக எண்ணி உல்லாச புன்னகை செய்து அவளை அவனும் அரவணைத்துக் கொண்டான். சில்லிட்டிருந்த இருவரின் ஆடைகளும்...
  5. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 34

    மனத்திரையில் ஆதிரை கண்ட அர்ஜூனை தவிர வேறு யாரையும் அவள் பார்த்ததில்லை. ஆதிரையைப் போல இருந்த அந்தப் பெண்ணையும் அந்த விளக்கொளியையும் முன்பும் கண்டது போல உணர்ந்த ஆதிரை. சில நொடிகள் அந்தத் திரையில் நடப்பதில் அவள் கவனம் திரும்பும் விதமாக அந்த மாலுமி சத்தமிட்டு அரற்றினான். அவன் மீது சாமி வந்தாடியது...
  6. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 33

    சத்தம் செய்யாமல் ஆடையை மாற்றிய ஆதிரை மெதுவாக அந்த மரவீட்டினை விட்டு வெளியில் சென்று கீழே பார்த்தாள். அந்தக் கரடி இப்போது அங்கு இல்லை. எங்குச் சென்று இருக்குமென்று அவள் நின்றிருந்த மரக்கிளையினை சுற்றி அங்கும் இங்கும் பார்த்தாள். அந்தக் கரடி அவர்கள் தர்பூசணி பறித்து வந்த இடத்தை நோக்கிச் சென்று...
  7. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 32

    கீழே இருந்து பார்த்தபோது ஏதோ ஒரு மரவீடு என்றுதான் எண்ணினாள் ஆதிரை. உள்ளே சென்று பார்த்த போது மிகவும் வியய்ப்புற்றாள். மூக்கில்களினால் ஆன வீடு அது. மூக்கில் தண்டுகளை இரண்டாக கீற்றிட்டு அவற்றை ஒவ்வொன்றாக இணைத்து ஏதோ நார் போல தெரிகிறது அதனைக் கொண்டு கட்டி இந்த வீட்டினை அமைத்திருக்கிறார்கள்...
  8. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 31

    அவளை விசித்திரமாகப் பார்த்த அர்ஜூன் ,” சரி சரி.. உன் விருப்பம்.” என்றான். சில நிமிடங்கள் அவர்கள் மௌனமாக அந்த மலையினை நோக்கி நடந்தனர். அதிசயமாக அந்த அணில் ஆதிரைக்கு அழகாக தன் குட்டி கையினைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டே வந்தது. அதனையே ஆதிரையும் அர்ஜூனும் தொடர்ந்து வந்தனர். அவர்கள் நடந்து வந்த...
  9. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 30

    படகிலிருந்த சாக்கு பையினையும் இன்னும் சில உபயோகமுள்ள பொருட்களையும் ஒன்றாக சேர்த்துக் கட்டிக்கொண்டு இருவரும் படகிலிருந்து எடுத்துக் கொண்டு அந்தக் கடற்கரையிலிருந்த 1 கிலோ மீட்டருக்கு தூரத்திலிருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்தனர். “ஆதிரை.. ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று தேடி பார்ப்போம்...
  10. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 29

    சில நிமிடங்கள் தொடர்ந்த ஆதிரையின் அழுகை, மெதுவாகக் குறைந்தது. யார் முன்னிலையிலும் அழுது பழக்கமற்ற ஆதிரைக்கு வசதியாக அந்த மரம் அவளுக்கு மறைவிடம் தந்தது. என்னதான் மறைந்திருந்தாலும் அவளது கேவல் மரத்தினை தாண்டி அர்ஜூனை அடையாமல் இல்லை. இருந்தபோதும் ‘அவளைச் சமாதானம் செய்யவென்று அருகில் சென்று அவள்...
  11. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 28

    அவன் அருகில் வருவதைத் தடுக்க முயலும் முயற்சியாக ஆதிரை, “அர்…. அர்ஜூன்… சா.. சார்… நீ… நீங்க……” என்று பேச முடியாமலும் பேச முயன்றும் முதல் முறையாகத் தவித்தாள். அவள் குரல் அவனை அடையுமுன் காற்றிலே கரைந்தது. மீண்டும் சற்று குரல் உயர்த்தி, “சார்.. நீங்க அங்கே இருங்க கூந்தல் உலர்ந்ததும் நானே படகு...
  12. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 27

    கிராமத்தில் தனியே தம்பி கந்தனுடன் இருந்த இந்த ஓரிரு வருடத்தில் ஆதிரை தெரிந்து கற்றுக் கொண்ட இவை இந்த இக்கட்டான சூழலில் உதவக் கூடுமென்று ஆதிரை அப்போது எண்ணவில்லை. ஏனோ அர்ஜூனிற்காக தேங்காயினை வெட்டும் போது ஆதிரையின் முகத்தில் ஒருவித புன்னகையும் மகிழ்ச்சியும் உண்டானது. இளநீரினைக் கொண்டு சென்று...
  13. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 26

    7 நாட்களுக்கு முன். ஆதிரையும் அர்ஜூனும் கடலடி தீவில் மாட்டிக் கொண்ட இரவு………. அர்ஜூனும் ஆதிரையின் அருகில் படுத்துக் கொண்டு அவனது ஒருகையைத் தலையணையாக்கி படகின் மேற் கூரையை பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட சூழலில் அர்ஜூனின் மனநிலை எப்படியோ! ஆனால் ஆதிரையின் மனம் படபடப்பதை...
  14. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 25

    phone – ஐ எடுத்த சேகர், “என்ன ஆதிமா. எப்படி இருக்க. இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் என் நினைவு வந்ததா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ஆனால் களங்கிய மனமும், உணர முடியாத பயமுமாக ஆதிரை “அங்கிள்.. “ என்று வராத குரலை கொண்டு சேகரை அழைத்தாள். அவளது குரலில் பயந்த சேகர், “ என்னாச்சு ஆதிரை. குரல்...
  15. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 24

    திருமணமாகி சுமார் ஒரு வருடத்திற்குப்பின் தன் தம்பியிடமிருந்துphone வந்ததால் ரிதிகா மிகவும் பூரித்து போனாள். ரிதிகா 'என் தம்பி, என் தம்பி' என்றே அர்ஜூனை பற்றி பேசுவாள். அதனாலோ என்னமோ அர்ஜூனை உண்மையில் சந்தித்த போது ஆதிரைக்கு அர்ஜூன் ரிதிகாவின் தம்பியாக இருக்க கூடுமென்று எந்தவித சந்தேகமும்...
  16. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 23

    "ராஜா, நம் அம்முவின் மகன் காதம். ஆதிரை, அம்முவின் கணவன் அரவிந்தின் தங்கை. ஆதிரைதான் இனி கஜாவின் குடும்பத்தில் யாருக்கும் ராஜாவைப் பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு காரணமும் உண்டு" என்றார் சேகர். “எனக்கு எல்லாம் குழப்பமாகிவிட்டது சேகர். அப்போது இந்திரபிரதேஷில் இருக்கும்...
  17. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 22

    ஒரு நாள் இரண்டு நாள் என்று மறைந்து, ஒரு வாரம் முழுதுமாக கடந்தது. ராஜா காதம்பரன் மற்றும் சேகருடன் நங்கு பழகிவிட்டான். அவனை பார்த்துக் கொள்ளவென்று காலை முதல் இரவு வரை ஒரு பணி பெண் வேலைக்கு அமர்த்தியிருந்தனர். கந்தனுக்கு ஆதிரை வர சில நாட்கள் ஆகக் கூடுமென்று சேகர் phone செய்து சொல்லி வைத்திருந்தார்...
  18. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 21

    ஆதிரையும், அர்ஜூனும் சாப்பிட்டப் பின் , படகினை நிறுத்திவிட்டு , torch light – ஐ எடுத்துக் கொண்டனர். அப்போது மீண்டும் ஒரு சப்தம் கேட்டது. அந்தச் சப்தத்தில் ‘ஒரு வேளை இந்தத் தீவு மீண்டும் கடலின் மேற்பரப்பை அடைந்துவிட்டதோ!‘ என்று எதிர்பார்ப்பில் படகினைவிட்டு ஆதிரையும் அர்ஜூனும் அவசரமாக வெளியில்...
  19. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 20

    வியப்பினால் உயர்ந்த அவர்களின் புருவம் இன்னும் இறங்கவில்லை. சிறிது நேரத்தில் அந்தத் தீவு நீரினுள் நகர்வது நின்றது. அவர்கள் இன்னும் கடலின் மேற்பரப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். நிலவின் ஒளி நீரில் மூழ்கிய நிலையிலும் மங்கவில்லை. அவ்வளவு பெரிய தீவே நீரில் மூழ்கியிருக்கிறது. இருந்த போதும் அதற்கான எந்த...
  20. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 19

    சில நிமிடங்கள் கடற்கரையில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஓசையுடன் கூடிய கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். மீட்பவர்கள் எந்த நேரமும் வரக் கூடும் என்பதால் இருவரும் அவர்களின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர். இருவரின் எதிர் பார்ப்பும் ஒன்றாக இருந்த போதும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top