kani

Advertisement

  1. SHANMUGALKSHMI

    தோல்வியில் ஒரு துவக்கம்

    "இன்பமும் துன்பமும் சமமாய் செல்கையில் சறுக்கல் ஒன்று சட்டென வாழ்க்கையில் வந்திட சூழ்ந்திருந்த சொந்தங்கள் எல்லாம் சடுதியில் சற்றுத்தொலைவில் சுத்தமாய் புரியவில்லை சுற்றி நடப்பது என்னவென்று" "அறியாத குழந்தையாய் என் அகத்திடம் நான் கேட்க அதுவும் அமைதி காத்தது விடை தெரியாமல்" "அகிலம் அதற்கு...
  2. SHANMUGALKSHMI

    பெயர் சூட்டு விழா

    "மண்ணில் வந்த மகிழ்ச்சி குவியலுக்கு மணிமகுடம் வைத்திடத்தான் பெயர்சூட்டு விழா" "பிள்ளை கனியமுதை கையில் ஏந்தி ஆசை பெயர் ஆயிரம் சொல்லி கொஞ்சிட்டபோதும் அடையாள பெயர் வேண்டும் ஆயுள் முழுமைக்கும் பெயர் சூட்டும் பெருவிழா பெருமையாக அறிவிக்கும் அதை" "சின்னஞ்சிறு கண்கொண்டு சிங்கார தொட்டிலில் சோம்பல்...
  3. SHANMUGALKSHMI

    மஞ்சள் பூவோ

    "மஞ்சள் பூசிய மங்கையிவள் முகம் காண்கையிலே மாயக்காரியிவளிடம் மதிமயங்கினேன்” “மஞ்சள் நிற பூ ஒன்று மாமன் என்னை மயக்கிடத்தான் மாலையில் வந்ததோ?" "மாசற்ற மங்கையிவள் அழகுக்கு அணியாய் அமைந்ததோ மஞ்சள் முகம்" "உன் மஞ்சள் முகத்தில் கொஞ்சமாய் தொலைந்தேன் நான்" "மிஞ்சும் உயிரை மீட்டெடுக்க மஞ்சள் பூ...
  4. SHANMUGALKSHMI

    காதல் கவி

    "உன் மதிமுகம் கண்டேன் மது உண்ட வண்டானேன்" "உன் கொலுசொலியில் கொள்ளை போனேன்" "உன் புன்சிரிப்பில் மென்மை கொண்டேன்" "உன் இதழ் மலர்ந்து வரும் வார்த்தையதில் வசந்த காலத்தின் வாசல் கண்டேன்" "உன் மீன் விழி காண்கையில் மொத்தமாய் பித்தனானேன்" "உன் வளையோசை கேட்கையில் என் வசம் இழந்தேன்" "உன்...
  5. SHANMUGALKSHMI

    காத்திருக்கிறேன்

    “ஞாயிறு மாலை அழகிய மழைவேளை வெகு நாட்களுக்குப்பின் நன்றாக ஒரு மழைக்குளியல் என் அன்னையோடு” “மணித்துளியெல்லாம் நொடிப்பொழுதாய் ஆனது மழை தந்த மகிழ்ச்சியில்” “நனைந்த உடல் நன்றாக குளிரெடுக்க துவங்க அதட்டி அழைத்தாள் அன்னை” “காய்ச்சல் வந்துவிடக்கூடாது என்ற கரிசனத்தில்” “தட்டச்சு...
  6. SHANMUGALKSHMI

    கவியின் கனவில்

    "கவிதை எழுதிட கடலோரம் அமர்ந்தேன்" "கரம் பிடித்தாய் என்னை கண்களில் மின்னிடும் காதலோடு" "என் கொலுசொலிதான் கடல் அலையோடு கொஞ்சி விளையாட வஞ்சி இவளை வாகாய் பொருத்தினாய் உன் நெஞ்சோடு" "நீல வானம் அதில் நிறைந்திருக்கும் மேகக்கூட்டம் அடுக்கடுக்காய் அலைகள் தொலைதூர வானில் தூரிகையாடும் விடிவெள்ளி வெட்கம்...
  7. SHANMUGALKSHMI

    விவாகரத்து

    "விதவிதமான மலர்களுக்கு நடுவே திருவிழாவாய் ஓர் திருமணம்" "உறவுகளால் ஒன்றான உள்ளங்கள் ஒற்றுமையாய் உல்லாச உலகிலே" "காலம் கடந்தது குழந்தை தரித்திட குற்றம் கண்டான் கண்வன் கட்டிய மனைவி மேலே" "மகிழ்ச்சி பொழுதுகள் மறைந்தன காதல் பொழுதுகள் கரைந்தன" "ஆறுதல் கூற வேண்டியவனோ உன் அன்னையிடம் செல்...
  8. SHANMUGALKSHMI

    உடன் பிறப்பே

    "உற்ற துணை ஒன்று எனக்கு உலகிலே உண்டெனில் என் உடன்பிறந்தவனே நீ மட்டும் தானே" "அன்பாய் சிலநேரம் என் ஆசை நிறைவேற்றினாய் உன்னுடன் நான் இடும் சண்டைகூட சந்தோஷம் தானே தருகிறது உன் சமாதானங்களினால்" "இன்பத்திலும் இமையோரம் ஈரம் கசிகிறது கணவன் கைபிடித்து உன் கரம்விலகி செல்லும் கவலை நினைத்து"...
  9. SHANMUGALKSHMI

    எழுந்து வா இளைஞனே

    "பட்டம் பெற்ற நீ படுத்திருக்கலாகுமோ?" "வேலையில்லை என வீதிமுனையில் வீற்றிருப்பாயோ?" "வீறுகொண்டு எழு என்னுடைய பூமியிலே என் மொழி கற்றவன் ஒதுங்கி நிற்க வேறொருவன் வந்து வீற்றிருக்கலாகுமோ வேலையிலே என" "வெட்டிக்களையெடு வேண்டாதவரையெல்லாம் வெற்றி தான் பெறு விடாமுயற்சினால்" "ஏசியின் குளுமையில் இடம்...
  10. SHANMUGALKSHMI

    நெஞ்சோரமாய்

    "நெஞ்சோரமாய் நெருஞ்சி முள் பாய்ந்ததோ நினைவில் நீங்காத இடம் பிடித்த நீ தான் யாரோ போல் என்னை கடந்து சென்றபோது" "நிம்மதி நீயே என்னைக்கண்டு நீ யார் எனக்கேட்டபோது கண்ணாடியாய் நான் நொறுங்குகையில் நெஞ்சோரமாய் நெருஞ்சி முள் நெருக்கமாய் தைத்தது" "வலி தந்த உறவே நீ மறுமுறை வாசல் வந்த போதும் நூறுமுறை...
  11. SHANMUGALKSHMI

    அசைந்தாடும் தேரே

    "காற்றில் அசைந்தாடும் உன் கருநிற கூந்தல் அதை கண்டவுடன் அறிவில் உதித்தது பெண்ணே அசைந்தாடும் தேரே என" "தெருவில் நீ நடந்திடத் தான் தென்றல் தீண்டும் போது திசையின்றி பறக்கிறது உன் கரு நிறக்கூந்தல் காற்றில் அது கவிபடைக்க கண்டேனடி அசைந்தாடும் தேரே உன் கருநிறகூந்தலதை"
  12. SHANMUGALKSHMI

    குளிர் நிலவே

    "குளிர் நிலவே குறையற்ற உன் அழகில் குற்றவாளியாய் மாறிடத்தான் ஆசை வந்தடி உன் கொள்ளை அழகை கொள்ளை கொண்டிட" "சிரித்திடும் உன் இதழில் சில்லென்ற பனிதான் சித்திரையிலும் பொழியுதடி" "பிறை நெற்றியின் நடுவில் இருக்கும் சந்தன பொட்டு அது நானாக இருந்திடத்தான் சாமியிடம் வேண்டினேனடி" "சந்நியாசி என்னையும்...
  13. SHANMUGALKSHMI

    எனது உயிரே

    "ஊர் முன் உன்னோடு ஊர்வலம் செல்கையில் காண்பவர் கண்ணெல்லாம் காந்தம் போல நம் மீது" "நெரிசல் நிறைந்த சாலையில் கூட உன்னோடு செல்வது நிறைவான பயணம் எனக்கு" "காலம் முழுதும் உன் கரம் கோர்த்து காற்று வீசும் சாலையிலும் மழை வீசும் மாலையிலும் மண் வாசம் அதனோடு இளந்தென்றல் தீண்ட தேர் மேல் பவனியாய் ஊர்வலம்...
  14. SHANMUGALKSHMI

    மைவிழியில் மயக்கம்

    "மான் போல் மருண்ட பார்வை மகிழ்வான திருமண பொழுததில் மறைந்திருந்து கண்டேன்" "மருளும் விழியதில் மாயம் கண்டேன் அவள் மைவிழியில் மயக்கம் கொண்டேன்" "மைவிழியின் மயக்கத்தில் மறந்தேன் மற்றதை" "மைவிழியே என்ன மந்திரம் போட்டாயோ மன்னன் நான் மயங்கிடத் தான் மைவிழியில் மயங்கினேன் நானடி"
  15. SHANMUGALKSHMI

    தனிமை

    "என் வாழ்வின் இரகசிய பள்ளத்தாக்கு" "புதைக்கப்பட்ட ஆசைகள் ஆயிரம் சிந்திட்ட கண்ணீர் துளிகள் தான் பெரு வெள்ளம்" "தனிமையும் இனிமை தான் நினைவுகளில் நீங்காத காட்சியினை நினைத்து மகிழும் போது" "தனிமையும் வறுமை தான் அன்பின் ஏழ்மையில் நான் இருக்கும் போது"
  16. SHANMUGALKSHMI

    தொலைக்காட்சி

    "தொலைக்காட்சியே நீ தொல்லைக்காட்சியாய் மாறியது ஏனோ" "ஒலியும் ஒளியுமாய் இருந்த உன்னைக்கண்டு இன்று ஒளியும் நிலை வந்துவிட்டது உன்னை ஒழிக்கும் நிலையும் வந்துவிட்டது" "உன் தொடர்கதைகளில் தொலைத்தனர் பலர் தங்கள் குடும்பத்தின் மகிழ்வான பொழுதுகளை" "உன் விளம்பரங்களை விட்டு விலகாமல் இருக்கின்றனர் விவரம்...
  17. SHANMUGALKSHMI

    கருமை நிறம்

    "உலகம் எல்லாம் சுற்றினேன் ஓராயிரம் நிறம் கண்டேன்" "ஒன்றைவிட ஒன்று அழகாய்த் தான் நின்றது மனதில்" "ஓரிடத்தில் ஓட்டம் நின்றது அங்கே கருவறையில் இறைவன் வீற்றிருக்க கண்களை கவ்வி கொண்டது அக்காட்சி வெறுமை எல்லாம் விலகியது விழியதில் விழுந்த கருமை நிற கற்சிலையில் கருமையாய் இருப்பதால் தானே கடவுளும்...
  18. SHANMUGALKSHMI

    மழலையின் சிரிப்பில்

    "மயங்கினேன் என்னை மறந்தேன் மாய உலகில் சிறகின்றி பறந்தேன் சிறு மழலையின் சிரிப்பில்" "பொக்கை வாய் சிரிப்பதனில் பொசுங்கியது என் நெஞ்சம்" "இதழ்கடையோரம் உதிர்க்கும் சிரிப்பிற்கு உலகை கூட தந்திட தான் உள்ளம் எண்ணுகிறது" "மழலையின் சிரிப்பதில் மாற்றங்கள் கொண்டது என் உள்ளம்" "உலை கலனாய் கொதிக்கும்...
  19. SHANMUGALKSHMI

    இரவின் மடியில்

    "பௌர்ணமி முழு நிலவு மொட்டைமாடியில் தென்றல் வரவு இனிமையான இசையில் இரம்மியமான பொழுது" "சலசலக்கும் மரங்களின் சத்தம் அது சங்கீதம் மேனி தழுவிடும் தென்றல் அது பரம சந்தோஷம்" "இறக்கை கட்டி பறந்த பகல் பொழுதின் நினைவுகளோடு படுத்திருந்தேன் மொட்டை மாடியில் இரவின் மடியில்" "எல்லையற்ற நிம்மதி என்னுள்...
  20. SHANMUGALKSHMI

    புத்தக புதுமையே

    "உலகிற்கு உறுதுணையாய் வார்த்தையில் வடித்த சிற்பமாய் நீ வந்திட வாசிக்கும் வரம் கொண்டேன் உன்னை" "கதையாய் நீ வந்தாய் கற்பனை பொழுதிலே கவிதையாய் நீ வந்தாய் காதல் பொழுதிலே" "உன்னால் உறக்கம் கொள்கிறேன் சிலநேரம் உள்ளம் மயங்குகிறேன் பல நேரம்" "பகுத்தறிவு நீ சொல்ல உன் பரிணாமங்களில் சிக்கி...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top