தேவ மஞ்சரி --11 part 1

Advertisement

Gangashok

Member
ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.

இது கொஞ்சம் பெரிய எபிசோட் அதனால பார்ட் பார்ட்டா போடுறேன் கோவிச்சுக்காதீங்க.

அடுத்த எபிசோடை படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுக்கள்.
ruthraa 3.jpgwait lifting.jpg

யாகமும் ருத்ராவும்

வெற்றிகரமாய் ருத்ராவும் குழுவும் வீட்டுக்குள் நுழைந்தே விட்டனர். இவர்கள் நுழையும் நேரம் வேதாந்த் மாடியில் இருந்து அழகிய ஜீன்ஸ் மற்றும் இருக்க பற்றிய டிஷர்ட் சகிதம் ஸ்டைலாக இறங்கிக்கொண்டிருதான்.

பார்த்த ருத்ரா " என்னா அழகா இருக்கான் பாருடா என் ஹீரோ, இழுத்து வச்சு ஒரு எல் டு எல் அடிக்கனும்போல இருக்குடா" லிட்டர் லிடெர்ராய் ஜொள் ஊற்றியவாறு சைட் அடித்து கொண்டிருக்க பக்கத்தில் ஏழுமலை வேதாந்த்தை பார்த்து பார்த்து வெட்ட்கப்பட்டுக்கொண்டிருந்தான்.

அவனின் செய்கையில் குழம்பிப்போன மலையப்பன் "நீ ஏன்டா வெட்கப்படற?"

"அது ஒன்னும் இல்ல மச்சி சுட்டு போட்டாலும் இவளுக்கு வெட்கப்பட வராது இந்த சீன்ல யாராவது வெட்கப்படணும்ல அதான் நா அவளுக்கு பதிலா வெட்கப்படறேன்" சொல்லிவிட்டு மேலும் கால்களால் கோலம் வரைந்தான்.

தந் தலையில் அடித்துக்கொண்டு "ஹில்சு வேண்டாண்டா அழுத்துடுவேன் அவ ஊத்தற ஜொள்ளே தாங்க முடியாம தத்தளிச்சுக்கிட்டிருக்கேன் இதுல வெட்கமுனு நீ வேற படுத்தாத சொல்லிட்டேன்"



மறுநாள் காலையிலேயே யாகம் தொடங்க ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டன. பச்சை தாவணியில் ஒரு பச்சை கிளியை போல் கைகளில் பூக்கள் நிறைந்த தட்டை ஏந்திக்கொண்டு நடைபழகிக்கொண்டிருந்த ருத்ராவை கண்ட வேதாந்த் சில நொடிகளோ நிமிடங்களோ என்று எதுவும் தெரியாது பிரமித்து நின்றான். தன் கவிதையே கால் முளைத்து வந்தது போல் இருந்தது அவனுக்கு. அவள் செல்லும் இடமெல்லாம் அவன் அனுமதி இன்றியே அவன் கண்கள் பயணித்தது.

" ஏ பொன்னே எதுக்கு அந்த பூத்தட்ட வச்சிகிட்டு நடு வீட்டை அளந்துக்கிட்டு இருக்கிற நீ? கொண்டு பொய் யாகம் நடக்கற இடத்துல வை " அரங்கநாயகியின் குரல் உரக்க விழவே கனவில் இருந்து விழித்து போல் அங்கிருந்து நகர்ந்தான் வேதாந்த்.

இதை எல்லாம் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருந்த நண்பர்கள் குழு தங்களுக்குள் கைகளை தட்டிக்கொண்டு தமக்கு தாமே பாராட்டு விழா கொண்டாடி கொண்டனர். வெற்றிகரமாக ருத்ராவை முதல் சந்திப்பிலேயே வேதாந்த்தின் மனதில் பதிய வைத்தாகிற்றே.

மறுநாள் விடியற் காலையிலேயே வீடு அமர்க்கள பட ஆரம்பித்து விட்டது. இங்கே நண்பர்களின் திண்டாட்டமும் தான், என்றுமே உதைபட்டுதான் ருத்ராவை எழுப்ப வேண்டும் அதுவும் இன்றோ சூர்யோதத்தின் முன்பல்லவா எழுப்பவேண்டும். நால்வரும் மாறி மாறி உதைபட்டு மிதி பட்டு ஒரு வழியாய் ருத்ராவை எழுப்பி குளியல் அறைக்குள் தள்ளி விட்டு எவரும் காணும் முன் அர்ச்சகரின் மகளின் உதவியுடன் வாசலில் அழகான கோலமீட்டு முடிக்கவும் ருத்ரா உடை மாற்றி வரவும் சரியாய் இருந்தது.

ஈரத்தலையில் கட்டிய துண்டுடன் அழகிய சிவப்பு வண்ண தாவணியில் கோலமிட்டபடி அமர்ந்திருந்தாள் ருத்ரா (சந்தேகமே வேண்டாம் எல்லாம் செட்டப் தான்). வேதாந்த் தன் காலை ஓட்டத்துக்காக வர ஞாயிறு கதிர்கள் முகத்தில் விழ திங்களை போல் அமர்ந்திருத்தவளின் பாந்தமான அழகு நெஞ்சை அள்ள இதழ்களில் தோன்றிய புன்னகையுடன் கால்கள் தானாய் அவளை நோக்கி நகர்ந்தது. தன் முன் நிழலாடுவதை அப்போதுதான் பார்த்தைதை போல் வண்ண பொடியை பிடித்திருந்த கையால் தன் முடியை ஒதுக்கிவிட்டபடி எழுந்து நின்றாள் அவள் கைகளில் இருந்த வண்ணம் நெற்றியிலும் கன்னங்களிலும் ஒட்டிக்கொண்டது.

"அச்சோ பாருங்க உங்க முகத்தில கலர் ஒட்டிக்கிச்சு தொடைங்க?" வேதாந்த்

"இம்ம்" ருத்ரா மெல்ல துடைப்பது போல் அங்கேயும் இங்கேயும் மேலும் அப்பிக்கொள்ள

வேதாந்த்தின் முகத்தின் புன்னகை மேலும் விரிந்தது "அடடே நெறய ஆகுதுங்க இருங்க"

கூறியவாறே தன கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்து விட்டான், இருவரின் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டதாலும் தனக்கென வேதாந்த் முகத்தில் அரும்பிய புன்னகையாலும் ருத்ராவின் கால் தானாய் ஆட்டம் போட ஆரம்பித்தது (ஓவர் குஷி வந்துட்டா குத்தாட்டம் போட்டே ஆகனுக நம்ம ருத்ராவுக்கு வேறே ஒன்னும் இல்ல பயம் வெட்ட்கம் இப்படி தப்பாலாம் நினைக்க கூடாது). ஆட்கள் வரும் அரவம் கேட்கவும் தன் நிலை அறிந்து பதறியவனாய் வேக வேக மாக இடத்தை விட்டு நகர்ந்தான் வேதாந்த்.

வேதாந்த் நகர்ந்தது தான் தாமதம் தன் கையில் இருந்த கோலமாவை வீசி விட்டு அடக்கமாட்டாமல் குத்தாட்டம் போட்டாள் ருத்ரா. தலையிலும் முகத்திலும் வண்ண மாவு விரவிக்கிடக்க பரிதாபமாய் நின்றிருந்தனர் ருத்ராவின் நண்பர்களும் அர்ச்சகரின் மகளும்.

தன்னுடைய காலை ஓட்டம் முடிந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் வேதாந்த். அவனுக்கு பயிற்சி அளித்திடும் பயிற்சியாளர் யாரோ அழைத்திட வெளியே சென்றிருந்தார். எப்போதும் செய்யும் பயிற்சி தான் ஆகையால் வேதாந்த் பெரிதாய் அதை கண்டுகொள்ளவில்லை. சில பல பயிற்சிகளை முடித்த வேதாந்த் பளு தூக்கும் பயிற்சிக்காக சென்று அதன் படுக்கையில் படுத்த வண்ணம் பளுவை தூக்க எப்போதும் இருப்பதை விட இன்று பளு அதிகமாய் இருப்பது போல் தோன்றியது. மூன்று முறை எழுப்பியவன் நான்காம் முறை எழுப்பும் போது உயர்த்திய கை கீழே இறங்கும் முன் கண்கள் இருட்டி கொண்டு வந்தது. அவன் விழித்து பார்க்கையில் தன் அறையில் படுக்கையில் இருந்தான். மயங்கும் முன் கண்களின் முன்னாள் தெரிந்த மங்கலான பெண்ணின் முகம் கனவோ நினைவோ எதுவும் புரியவில்லை அவனுக்கு.

தன் அறையில் ஒரு புலியின் சீற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான் தேவ்ராஜ் "எத்தனை அழகான திட்டம், ஓடி களைத்து வந்த வேதாந்த்தின் சத்து பணத்தில் லேசான மயக்கமருந்து கலந்து குடிக்க வைத்து, அவன் பளு தூக்கும் நேரத்திற்கு சிறிது நேரம் முன்னாள் அவன் பயிற்சியாளரை வெளியேற்றி அனைத்தும் என் திட்டபடிதான் நடந்துச்சு, எங்கேயிருந்து தான் கடைசியா வந்து தொலைச்சாளோ எல்லாத்தையும் கெடுத்துட்டா ச்சை" அவன் மனம் பொருமிக்கொண்டிருந்தது.

ஆம் வேதாந்த்துக்காக தண்ணீரும், துண்டும் எடுத்து கொண்டு ருத்ரா செல்கையில் அவள் கண்ணில் பட்டது, கையில் உயர்த்தி பிடித்த பளுவுடன் மயங்கி சரிந்துகொண்டிருந்த வேதாந்த். அவள் இருதயம் ஒரு நொடியேனும் நின்று துடித்திருக்கும். இரண்டே எட்டில் வேதாந்த்தை அடைந்தாள் இயற்கையிலேயே இருந்த பலத்தோடு காதலனை காக்கும் துடிப்பும் சேர்ந்துகொள்ளவே அந்த பளுவை தாங்கியவள் அதன் இருக்கையில் பொருத்தினாள், உடன் சென்று பயிற்சயாளரையும் அழைத்து வரவே வேதாந்த்தின் உயிரும் தப்பியது.
எதனை காலம் தப்பிக்க முடியும் விதி ஆடும் ஆட்டம் பார்க்கலாம்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top