மை டியர் டே(டெ)டி - 9

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
டுத்த நாள் காலை, மாறனுக்கு எழும்ப மனமில்லை எனினும், தன் கடமையைச் செவ்வனே செய்ய வந்துவிட்டது ஆதவன்.

மாறன் கைக்குள் நிலா உறங்கிக்கொண்டிருக்க, திரைசீலை ஊடே கதிர்களை அனுப்பி கதிரவன் எட்டிப் பார்க்க, அந்த ஒளிப்பட்டு நெளிந்த தன் மகளை, நெளியமுடியாத வண்ணம் தன் மார்பில் ஒட்டிக்கொண்டான் மாறன்.

விடிந்தும் எழும்பாமல் உறங்கும் அவர்களை எழுப்பமுடியாமல் ஒளி தவிக்க, 'நான் எழுப்புகிறேன் பார்!' என்று அவர்களை எழுப்பக் களத்தில் இறங்கியது ஒலி.

தினமும் ஆறு மணிக்கு ஒலிக்கும் அலாரம் இன்றும் ஒலிக்க, என்றும் முதலில் எழும்பும் மாறன் இன்று எழும்ப விரும்பாமல் படுத்திருந்தான். என்றும் எழும்பால் மெத்தையில் உழலும் அவன் நகலோ, "இளா... எழுத்துரு. மணி 6 .30" என்று அவனை உலுக்கிக்கொண்டிருந்தாள்.

இரவு முழுதும் மனைவியின் நினைவில் உழன்று, விடியற்காலையில் தான் உறங்கியவனால் நேரமானது தெரிந்தும் கண் விழிக்க முடியவில்லை.

இரண்டு மூன்று முறை எழுப்பிப் பார்த்த நிலா, அவன் எழும்பாமல் உறங்கவும், அவளாகவே குளித்துவிட குளியலறைக்குள் நுழைத்தாள்.

அவள் குளித்துவிட்டு வரும் வேலை தான் மெல்ல கண் திறந்தவன், "ஏய் குட்டி. குளிச்சிட்டியா? அச்சோ யூனிபார்ம் இன்னும் அயர்ன் பண்ணவே இல்லையே!" என்று வலித்த தலையைப் பிடித்துக்கொண்டே எழுந்தான் அவன்.


"ம்க்கூம். ரொம்ப தான் பொறுப்பு. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. PET டீ-ஷர்ட் போட்டுட்டு போகணும். அயர்ன் பண்ண தேவையில்லை" என்று நிலா சொல்ல, சமாளிப்பாய் சிரித்துவைத்தான் மாறன்.

"போ. போயி குளிச்சிட்டு வா போ" என்று அவன் உடைகளையும், துவட்ட ஒரு துண்டையும் அவன் கையில் திணித்து, அவன் கால்களைப் பின்னால் இருந்து தள்ளினாள் அவள்.

"சரி சரி. போறேன். தள்ளாத டி குட்டி சாத்தான்" என்று சொல்லிவிட்டு அவன் இரண்டடி எடுத்து வைக்க, இடையில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்துக்கொண்டு நின்றாள் அவள்.

முறைத்துக்கொண்டு நின்றவளிடம் அவன் மீண்டும் வர, அவன் செய்ய விழைவது என்னவென்று அறிந்தவள், "ஏய். இளா. நான் ஏற்கனவே குளிச்சிட்டேன்" என்று கத்திக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி அவனிடமிருந்து தப்பிக்க முயன்றாள்.

"அப்படி எல்லாம் விட முடியாது. நான் தான் குளிப்பாட்டுவேன். நீ எதுக்கு முன்னாடியே குளிச்ச?" என்று மாறன் அவன் பின்னால் துரத்திக்கொண்டே கேட்க, "நீ தான் எழுந்திருக்கவே இல்லை. கொர்... கொர்ர்..'ன்னு தூங்கிட்டே இருந்த" என்று சிரித்துக்கொண்டே அவனுக்குப் போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

இந்த முறை பதிலேதும் அளிக்கவில்லை அவன். ஒரே எட்டில் அவளைப் பிடித்துவிட்டு, அவன் கைக்குள் அடக்கிக்கொண்டான்.

அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டே அவன் குளியறைக்குள் நுழைய, அவன் பிடியிலிருந்து தப்பிக்க ஏதேதோ முயற்சி செய்தும் முடியவில்லை அவளால்.

குளியலறைக்குள் அவளைத் தூக்கி சென்றவன், தண்ணீர் இருந்த டப் ஒன்றில் அவளைப் போட மொத்தமாய் நனைத்தாள் அவள். "யோவ் இளா. இப்போ தான் நான் குளிச்சிட்டு கஷ்டப்பட்டு தொடச்சேன். மறுபடி மொத்தமா நெனச்சிட்டே" என்று அவள் சினுங்க, "பரவால்ல மறுபடி தொடச்சிக்கலாம்" என்று ஈரமாய் அவளைக் கட்டிக்கொண்டான்.

"விடு என்னை" என்று அவனிடமிருந்து தன்னை பிரித்தவள், "நகரு. நான் போகுறேன்" என்று அந்த டப்பிலிருந்து வெளிவரப் பார்க்க, "ஒரு நிமிஷம். ஒரு நிமிஷம்" என்றான் மாறன்.

"என்னவாம்" என்று நிலா கேட்க, "பாப்பா குட்டி தொப்பை பெருசாகிடுச்சே கொஞ்சம்" என்று அவள் தொப்பையை பிடித்துக் கொஞ்சம் விளையாட, "ஏய். தொப்பையில பாம் பாம் செய்யாத. அப்புறம் இன்னும் தொப்பை பெருசாகிடும்" என்றாள் நிலா.

அவன் கூற்றில் சிரித்தவன், "அப்போ பாம் பாம் தொப்பையில பண்ணல. கன்னத்துல பண்ணுறேன்" என்று கன்னத்தைக் கிள்ளினான் அவன். "கன்னத்துலயும் வேண்டாம்" என்று அவள் சினுங்க, "ஏனாம்?" என்றான் மாறன்.

"கன்னத்துல பாம் பாம் பண்ணா கன்னம் பெருசாகிடும் ல. இப்போவே எல்லாரும் சும்மா சும்மா கன்னத்தைக் கிள்ளிக்கிட்டே இருக்காங்க. இன்னும் பெருசாச்சுன்னா, நெறையா கிள்ளுவாங்க அப்புறம். நானே குட்டி பாப்பா தான. வலிக்கும் தான" என்று அவள் மழலையில் கதைக்க, "ஆமாம் ஆமாம். வலிக்கும் தான். சரி சரி. நான் இனிமே பாப்பாவை யாருக்கும் தராம புடிச்சி வச்சிக்கறேன். யாரையும் கிள்ள விடமாட்டேன்" என்றான் மாறன்.

"ஆன் ஆன். இப்போ விடு. இப்டி ஈரமா நின்னுட்டே இருந்தா எனக்குச் சளி புடிக்கும். அப்புறம் நீ ஐஸ்-க்ரீம் வாங்கி தரமாட்டேன் சொல்லுவ" என்று அந்த டப்பிலிருந்து வெளியே வந்தவள், குளியலறையையும் விட்டு வெளியேறி, மீண்டும் துவட்டிக்கொண்டு அன்றைக்கான சீருடைக்குள் நுழைந்தாள்.

மாறன், அவள் வெளியே வந்தபின் தான் குளிக்கத் துவங்க, அந்த நேரம் அவள் மணியைப் பார்க்க, மணி 7.30 என்று காட்டியது.

"அட கடவுளே. இந்நேரம் ஸ்கூல் பஸ் போயிருக்குமே" என்று எண்ணியவள், குளியலறை கதைவை தட்டி, "இளா. மணி ஏழரை" என்று சொல்ல, "பரவால்ல. நான் கூட்டிட்டு போயி விடறேன்" என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தான் அவன். அவனே அழித்துச்செல்வதாய் இருந்தாலும் 8 மணிக்குள் சென்றுவிட வேண்டுமே. அது இல்லாமல் தன்னை அழைத்துச்சென்றால், அவன் ஆஃபீஸுக்கு செல்லவும் தாமதம் ஆகும் என்று யோசித்தவள், "நம்ப சமையல் திறனைக் காட்ட நேரம் வந்திருச்சு" என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்.

பத்து நிமிடங்களில் மாறன் கிளம்பி ஹாலுக்கு வரும் நேரம், நிலாவோ கிட்சேனுக்குள் இருந்து வெளியே வந்தாள். "இளா. இன்னைக்கு நானே பிரேக்-பாஸ்ட் பண்ணிட்டேன்" என்று அவள் சொல்லத் தலையே சுத்துவது போல் இருந்தது. "அய்யயோ. கிட்சேன் என்ன கோலத்துல இருக்குன்னு தெரியலையே" என்று அவன் பதறிப்போய் பார்க்க, அவன் பயப்படும் படியாய் ஏதும் நடந்துவிடவில்லை. "ஹப்பாடா" என்று அவன் திரும்ப, "நான் கிட்சேன் அலங்கோலம் பண்ணுவேன்'ன்னு நெனச்சியா இளா! நான் எவ்வளவு நல்ல பிள்ளையா உனக்கு பிரேக்-பாஸ்ட் செஞ்சி வச்சேன். ஸ்டவ் எட்டவே இல்லை. சேர் மேல ஏறி நின்னு பண்ணேன் தெரியுமா. நீ என்னைப் பார்த்து என்ன சொல்லிட்ட" என்று அவள் பொய்யாய் கண்ணைக் கசக்க, "ஆமாம் ஆமாம். நல்ல பிள்ளை என் பாப்பா" என்று அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.

"ஐஸ் வைக்காத போ" என்று என்று அவன் முத்தம் வைத்த இடத்தை அவள் துடைத்துக்கொள்ள, "நான் ஐஸ் எங்க வச்சேன். முத்தம் தான வச்சேன்" என்று அவளுக்கு இணையாகச் சிணுங்கினான் இவனும். "ஹ்ம்ம்" என்று முகத்தைத் திருப்பினாள் அவளும்.

"சரி சரி டைம் ஆச்சு. அப்புறம் ஜெர்ஸி கவ் லேட்டா போனா கத்தும்" என்று நிலா சொல்ல, இருவரும் காலை உணவு உண்ண தொடங்கினர். பிரட் டோஸ்ட் தான் செய்து வைத்திருந்தாள் அவள். ஆனால், அதுவும் இன்று வழக்கத்தைவிட அதிகமாய் ருசித்தது மாறனுக்கு.

"இளா நான் உனக்காக லெமன் ஜுஸ் போட்டுருக்கேன். ஆபீஸ் போயி குடி" என்று அவள் ஒரு பாட்டிலை நீட்ட, பூரிப்பாய் அதை வாங்கிக்கொண்டான் மாறன்.

"என் செல்லக்குட்டி" என்று அவளைக் கொஞ்சிவிட்டு, அவள் அளித்த ஜூஸ் பாட்டிலை பார்க்க, ஒரே நுரை நுரையாக இருந்தது.

அதை பார்த்துச் சந்தேகித்தவன், "அடியேய்! நம்ப வீட்டுல தான் லெமன் இல்லையே. அப்பறம் எப்படி நீ லெமன் ஜூஸ் போட்ட?" என்று மாறன் கேட்க, "லெமன் இருந்தா கூட ஒரே ஒரு லெமன் வச்சி தான் ஜூஸ் போட்டிருக்க முடியும். ஆனா, நான் லெமன் இல்லாமலே ஐநூறு எலுமிச்சையும் ஷக்தி கொண்ட ஜூஸ் போட்டிருக்கேன்" என்று நிலா சொல்ல, "ஆஹா.. இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயே" என்று புரிந்துவிட்டது மாறனுக்கு.

"உஷார் ஆகிக்கோ டா மாறா. என்னதான் இருந்தாலும் உன் பொண்ணும் ஒரு டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை மறந்துவிடாதே" என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, "அது எப்படி பண்ணீங்க?" என்று நிலாவிடம் வினவ, கிட்சேனுக்குள் ஓடினாள் நிலா.

"இங்க பாரு இளா. தோ. இது இருக்குல்ல. இதுல இருக்க ஒவ்வொரு சொட்டுலையும் நூறு எலும்பிச்சையின் ஷக்தி இருக்கு. உனக்குத் தெரியாதா?" என்று பாத்திரம் கழுவ வைத்திருந்த விம் லிக்விட் பாட்டிலை எடுத்து வந்து காட்டினாள் அவனிடம்.

"அதுக்கு?" என்று மாறன் அதிர்ச்சியாய் கேட்க, "அதுனால தான், ஒரு பாட்டில் தண்ணி எடுத்து, அதுல இந்த விம் லிக்விட் அஞ்சு சொட்டு போட்டு, குலுக் குலுக் பண்ணிட்டேன். அப்புறமா கொஞ்சம் சக்கரை கூடப் போட்டிருக்கேன். இதோ சுவையான ஐநூறு எலுமிச்சைகளின் ஷக்தி கொண்ட லெமன் ஜுஸ் ரெடி" என்றாள் நிலா.

"ஆத்தாடி. நல்ல வேலை இந்த டவுட் நமக்குக் குடிக்கறதுக்கு முன்னாடியே வந்துச்சு. லெமன் ஜூஸ்க்கு விம் பாட்டில் தூக்கிட்டாளே.

இந்தச் சின்ன வெங்காயம், முட்டை எல்லாம் போட்ட ஷாம்பு டப்பாவா ஒளித்துவைக்கணும் இவ கிட்ட இருந்து" என்று நினைத்துக்கொண்டான் மாறன்.

அடுத்த பத்து நிமிடங்களில் நிலாவின் பள்ளியை அடைந்தார்கள். அவள் வகுப்பறைவரை சென்று அவளை விட்டுவிட்டு வந்தான் மாறன். தன் இடத்தில் அமர்ந்துகொண்டு, இவன் செல்லும் வழியே பார்த்திருக்க, கண்ணை விட்டு மறையும் வரை பறக்கும் முத்தங்களை அவளை நோக்கிப் பறக்கவிட்டுக்கொண்டே வந்தான் மாறன்.

பள்ளியிலிருந்து நேராக ஆபிஸ் வந்தவன், அவன் இருக்கையில் அமர, "ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... சார் இங்க பாருங்க" என்று மெல்லமாய் மாறனை அழைத்துக்கொண்டிருந்தான் நிஷாந்த். "என்ன மேன்? ஏதோ இச்சி குடுக்க கூப்பிடுற காதலி மாதிரி இஸ்க்... இஸ்க்..'ன்னு கூப்புட்ற? நான் அந்த மாதிரி ஆள் கிடையாது பாத்துக்க" என்று மாறன் சொல்ல, தலையில் அடித்துக்கொண்டு, "காலைல வந்ததும் ரைனோ உங்கள தான் தேடிட்டு இருந்தாரு" என்று நிஷாந்த் சொல்ல, "அய்யோயோ. எல்லாம் நம்ப பெத்தது கூட்டுன ஏழரையா தான் இருக்கும்" என்று மனதில் நினைத்துக்கொண்டாலும், "எதுக்கா இருக்கும்?" என்று நிஷாந்திடம் கேட்டான்.

"யாருக்கு தெரியும். இச்சி கொடுக்கவா கூட இருக்கலாம்" என்று நிஷாந்த் சொல்ல, "ச்சை. ஆண்களே ஆசைப்படும் ஆணழகனா பொறந்தது என் தப்பா" என்று மாறன் பதிலளிக்க, சத்தமாய் சிரித்துவிட்டான் நிஷாந்த். "அடேய். நீ சிரிக்கிறது காலகேயன் காதுல விழுந்து கிஸ் அடிக்க வந்துட போறான் மேன். அடக்கி வாசி மேன்" என்று மாறன் சொல்ல, இன்னும் சத்தமாய் சிரித்துவிட்டான் நிஷாந்த்.

அவன் சிரிப்பு காலகேயனுக்கு கேட்டதோ இல்லையோ, அந்த அலுவலகத்தின் காண்டாமிருகத்திற்கு கேட்டுவிட்டது. இந்த அலுவலகத்தில் சிரிப்புச் சத்தம் கேட்கும் இடத்தில் மாறன் இருப்பான் என்று அறிந்தவர் அங்கு விரைந்து சென்று, "வாங்க மிஸ்டர்.மாறன். உங்களுக்காகத் தான் இவ்வளவு நேரம் காத்துகிட்டு இருந்தன்" என்று ரைனோசர் சொல்ல, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதையா" என்று மாறனுக்கு மட்டும் கேட்குமாறு ராகம் இழுத்தான் நிஷாந்த். மாறன் ரைனோசரிடம் "எதுக்கு சார்?" என்று மாறன் கேட்டுக்கொண்டே நிஷாந்த் காலை மிதித்து வாயை மூடச் சொன்னான்.

"எதுக்கா? நேத்து நான் போன் பண்ணப்போ வாய்ஸ் மாத்தி கலாய்சீங்கல்ல. அதுக்கு தான்" என்று ரைனோசார் சொல்ல, "என்னது நானா? உங்களையா? கலாய்ச்சனா? அதுவும் போன்லையா?" என்று ஒன்றும் அறியாதது போல் நடித்தான் மாறன்.

"ஆமாம். அதுவும் கொழந்தை மாதிரி வாய்ஸ் மாத்தி. என்னைக் கோழி முட்டை தலையா'ன்னு வேற சொன்னீங்களே!" என்று சொல்லி, சொட்டை மண்டையில் துளித்திருந்த ஓரிரண்டு வேர்வைத்துளிகளை துடைத்துத்துக்கொண்டு மீண்டும், "என் மண்டை என்ன கோழி முட்டை மாதிரியா இருக்கு?" என்று மாறனை பார்த்துக் கேட்டார்.

அவர் மண்டையை தடவி பார்த்தவன், "கண்ணாடி மாதிரி பளபளன்னு இருக்க இந்த மண்டையவா சார் கோழி முட்டைன்னு சொல்லிடுச்சு. சரியான கூறுகெட்ட பேய்யா இருக்கும் போலயே அது!" என்று உச்சுக்கொட்டினான் மாறன். "என்னது? பேய்யா?" என்று ரைனோசார் கேட்க, "ஆமா சார். நேத்து ஈவ்னிங் எங்க அப்பார்ட்மெண்ட்ல கரண்ட் ஆஃப் ஆனா நேரம் ஒரு குட்டி சாத்தான் உலாவுச்சாம். எல்லாரும் பேசிக்கிட்டாங்க. நீங்க வேற கொழந்தை வாய்ஸ்ல பேசுச்சுன்னு சொல்றீங்க. அப்போ அந்தக் குட்டி சாத்தானா தான் இருக்கும்ன்னு நினைக்கறேன் சார்" என்று மாறன் பேய் கதை கூறும் டோனில் சொல்ல, "அப்படியா?" என்று அவனையே பார்த்தார் ரைனோசர்.

"மிஸ்டர் மாறன். என்னை ஏமாத்த பார்க்காதீங்க" என்று ரைனோசர் சொல்ல, "நான் ஏன் சார் உங்க கிட்ட பொய் சொல்லப்போறேன். உங்க சொந்தகார பொண்ணு ஒன்னு எங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்குன்னு சொன்னீங்கல்ல. அவங்க கிட்ட வேணா கேட்டுப் பாருங்க. நேத்து நெஜமாவே அப்பார்ட்மெண்ட்ல குட்டி சாத்தான் உலாவல் தான்" என்று மாறன் சொல்லவும், அவன் சொன்னது போலவே மாறன் இருக்கும் அப்பார்ட்மென்டில் இருக்கும் அவரின் சொந்தத்திருக்கு அழைத்தார் ரைனோசர்.

அவரும் "ஆமாம் ஆமாம். நேத்து ஈவினிங் இங்க நெறையா பேர் அந்தக் குட்டி சாத்தானை பாத்திருக்காங்க. எங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்க நெறையா குட்டி பசங்களுக்கு பயத்துல ஜுரமே வந்திடுச்சாம். அந்தக் குட்டி சாத்தான் பார்க்க அவ்வளவு பயங்கரமா இருந்துச்சாம்" எண்டு சொல்ல, பயம் தொத்திக்கொண்டது ரைனோசர்க்கு. நிலா பற்றி அவருக்குத் தெரியாததால், நிலா செய்திருப்பாள் என்று யோசிக்க கூட இல்லை. "நெஜமாவே குட்டி சாத்தான் தான் நம்ப கிட்ட பேசியிருக்குமோ?" என்று யோசித்திருந்தார் அவர்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர், "சரி சரி. அது இருக்கட்டும். இன்னைக்கு ரீஜினல் ஹெட் வராரு. உன்னைத் தான் பார்க்கணும்ன்னு சொன்னாரு. வந்ததும் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு செல்ல, "ஆனாலும், உங்கள போயி கோழிமுட்டை தலையா'ன்னு சொல்லிட்டாங்களே...." என்று மாறன் வாய்மீது கை வைக்க, "இது கொஞ்சம் ஓவரா இருக்கே!" என்ற மைண்ட்வாய்ஸ் உடன் சென்றார் ரைனோசார்.

அவர் சென்றதும் "எப்புடி!" என்று மாறன் காலர் தூக்கி கேட்க, "உலகமாக நடிப்பு டா சாமி" என்றான் நிஷாந்த்.

"அது எப்படி சார். திடுதிப்புன்னு ஒரு கதை யோசிச்சிடீங்க?" என்று நிஷாந்த் கேட்க, "எது மேன் கதை? இது தான் நிஜம்" என்றான் மாறன்.

"அப்போ நெஜமாவே உங்க அப்பார்ட்மெண்ட்க்கு குட்டி சாத்தான் வந்துதா?" என்று நிஷாந்த் கேட்க, "குட்டி சாத்தான் அங்கேயே தான் வாழுது" என்றான் மாறன்.

"அப்போ அது தான் ரைனோ கிட்ட பேசுனதா?" என்று நிஷாந்த் புருவம் உயர்த்தி கேட்க, "ஆமாம். நான் பெத்த குட்டி சாத்தான் தான் பேசுனது" என்று மாறன் சொல்லவும் தான் நிஷாந்துக்கு புரிந்தது பேசியது நிலா என்று.

"அப்போ எல்லாரையும் பயம்புடுத்துனது?" என்று நிஷாந்த் கேட்க, "அதுவும் அதே குட்டி சாத்தான் தான்" என்றான் மாறன்.

ரைனோசொல்லிவிட்டு சென்றது போலவே ரீஜினல் ஹெட் வந்துவிட, மாறனும் அவர் கேபினுக்கு சென்றான்.

"மே ஐ கம் இன்" என்று மாறன் கேட்க, "கம் ஆன் யங் மேன்!" என்றார் அவரும்.

மித்ரன். மாறன் பணிபுரியும் கம்பெனியின் ரீஜினல் ஹெட். நாற்பதுகளின் மத்தியில் இருப்பவர். மற்ற ஊழியர்களைவிட மாறன் என்றாள் அதிக பிரியம் அவருக்கு. அவனின் கலகலப்பு ஒரு காரணமாய் இருப்பினும், தாயை இழந்த தன் மகளுக்குத் தாயுமான தந்தையாய் இருந்து தனியாய் வளர்த்துவருவது தான் முக்கிய காரணம்.

அதனாலே இந்தப் பிரேன்ச்க்கு வருகை புரியும்போதெல்லாம் குறைந்தது அரைமணி நேரமாவது மாறனிடம் உரையாடிவிட்டு தான் செல்வார். வயதுவித்தியாசம் பார்க்காமல் அவனுடன் சக வயதுடையவர் போலவே நட்பு பாராட்டுவார் அவர். ரைனோசர் மாறனை பார்க்கும்போதெல்லாம் புகைவதற்கும் இது தான் காரணம்.

நிலாவை பார்த்ததில்லை என்றாலும், அவளைப் பற்றி மாறன் கூறும் கதையெல்லாம் கேட்டே அவள்மீதும் ஆசை ஒட்டிக்கொண்டது.

இவன் வரும்போதெல்லாம் "கம் ஆன் எங்மேன்" என்று உற்சாகமாய் அழைப்பவர் குரலில் தான். ஆனால், இன்று அழைக்கையில் அந்த உற்சாகம் இரட்டிப்பாய் இருந்தது.

"உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் வச்சிருக்கேன்" என்று மித்ரன் சொல்ல, "என்ன மித்ரன்?" என்று ஆவலாய் கேட்டான் மாறன்.

"இந்த வருஷம் உனக்கு ப்ரோமோஷன், இன்க்ரீமெண்ட் எல்லாம் கிடைக்கப்போகுது" என்று அவர் சொல்ல, "ரொம்ப சந்தோஷம் மித்ரன்" என்றான் மாறன்.

"அதுக்குள்ள சந்தோச பாட்டுக்காத பா. அதுல ஒரு சிக்கல் இருக்கு" என்று அவர் சொல்ல, "என்ன?" என்றான் மாறன்.

"நீ ஒரு பத்து நாள் நியூ யார்க்ல தங்கி இந்த ப்ராஜெக்ட் முடிகிற மாதிரி இருக்கும்" என்று அவர் சொல்ல, "நியூ யார்கா?" என்று மாறன் யோசிக்கவுமே, "என்ன மாறா? பாப்பாவை கூப்பிட்டு போக முடியுமான்னு யோசிக்கற. அதான?" என்று அவன் யோசனையைச் சரியாக அறிந்துகொண்டார் அவர்.

"மாறா. அந்தப் பத்து நாளுமே உனக்கு வேலை அதிகமா இருக்கும். சாப்பிடவும் தூங்கவுமே நேரம் கெடைக்காது. இதுல குழந்தையைக் கூட்டிட்டு போயி என்ன பண்ணுவ? அவளை எப்படி பாத்துக்க முடியும். நாள் முழுக்க அவள ஹோட்டல் ரூம்ல தனியா விட்டுட்டு போவியா? அதுக்கு பதிலா இங்கயே யார் வீட்டுலையாவது பத்திரமா விட்டுட்டு போ" என்று அவரே அந்த யோசனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

"இங்க விட்டுட்டு போகவா? அவ பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட அவளை விட்டுத் தனியா இருந்ததே இல்லையே. எனக்கு அது பழக்கம் இல்லையே. அவளுக்கும் தான். அதுவும் இல்லாம யார் வீட்ல நம்பிக்கையா விட்டுட்டு போக முடியும்?" என்று மாறன் குழம்ப, "யோசி மாறா. உன் கரியர்க்கு இது ரொம்ப முக்கியம்" என்று அவர் சொல்ல, "யோசிக்கறேன் மித்ரன்" என்று அந்த அறையை விட்டு வெளியேற எத்தனைதான் மாறன்.

அந்த அறையின் நுழைவு வரை சென்றவனை, "மாறா. ஒரு நிமிஷம்" என்ற மித்ரனின் குரல் நிறுத்தி, திரும்பிப் பார்க்க வைத்தது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி அய்யப்பா டியர்
அச்சோ மாறனுக்கு இப்படி ஒரு சோதனையா?
இப்போ நியூயார்க் போகுமுன்னே அன்பு மகளை மாறன் எங்கே விடுவான்?
இல்லை நியூயார்க் போகாமல் விட்டுவிடுவானா?
அப்புறம் அடுப்பு கூட எட்டாமல் அந்த குட்டிப் பொண்ணு எப்படி பிரட் டோஸ்ட்டெல்லாம் செய்தாள்?ன்னு எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்குப்பா
 
Last edited:

Kamali Ayappa

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி அய்யப்பா டியர்
அச்சோ மாறனுக்கு இப்படி ஒரு சோதனையா?
இப்போ நியூயார்க் போகுமுன்னே அன்பு மகளை மாறன் எங்கே விடுவான்?
இல்லை நியூயார்க் போகாமல் விட்டுவிடுவானா?
அப்புறம் அடுப்பு கூட எட்டாமல் அந்த குட்டிப் பொண்ணு எப்படி பிரட் டோஸ்ட்டெல்லாம் செய்தாள்?ன்னு எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்குப்பா


maaran enna seivaan nu next epi la solren.. adhaan nilaa sonaale.. adupu ettalai nu chair potu, adhu mela yeri ninnu seidhaalaam...

mikka nandri banu maa
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஆனா கதைல கூட சின்ன புள்ள
அடுப்பு பத்த வச்சு வேல பாத்தத
ஏத்துக்க முடியல
 

Kamali Ayappa

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஆனா கதைல கூட சின்ன புள்ள
அடுப்பு பத்த வச்சு வேல பாத்தத
ஏத்துக்க முடியல

Thanks a lot sis... Bread toast kae vaa?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top